அத்தியாயம் – 15
தேனுகாசுரனை அழித்தல்
பதம் 10.15.1
ஸ்ரீ-ஸுக உவாச
ததஸ் ச பௌகண்ட-வய:-ஸ்ரிதௌ வ்ரஜே
பபூவதுஸ் தெள பஸு-பால-ஸம்மதௌ
காஸ் சாரயந்தெள ஸகிபி: ஸமம் பதைர்
வ்ருந்தாவனம் புண்யம் அதீவ சக்ரது:
ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தத—பிறகு; ச—மற்றும்; பெளகண்ட-வய:—பெளகண்ட வயதில் (ஆறிலிருந்து பத்துவயதிற்குள்); ஸ்ரிதௌ—அடைந்தனர்; வ்ரஜே—பிருந்தாவனத்தில்; பபூவது:—அவர்கள் (பலராமரும், கிருஷ்ணரும்); தெள—இருவரும்; பஸு-பால—பசுக்களை மேய்ப்பவர்கள்; ஸம்மதெள—நியமிக்கப்பட்டனர்; கா:—பசுக்கள்; சாரயந்தெள—மேய்த்தல்; ஸகிபி: ஸமம்—அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து; பாதை:—தமது காலடித் தடத்தினால்; வ்ருந்தாவனம்—ஸ்ரீ பிருந்தாவனம்; புண்யம்—புண்ணியம்; அதீவ—அதீதம்; சக்ரது:—அவர்கள் செய்தனர்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பகவான் பலராமரும், பகவான் கிருஷ்ணரும் தமது பௌகண்ட வயதினை (ஆறிலிருந்து பத்து வயது வரை உள்ள பருவம்) அடைந்த பொழுது, விருந்தாவனத்தில் உள்ள ஆயர்குலப் பெரியோர்கள், இவர்கள் இருவரையும், பசுக்களை மேய்ப்பதற்கு அனுமதியளித்தனர். இவ்வாறு தமது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பலராமரும், கிருஷ்ணரும் தமது திருவடித் தாமரைகளின் தடங்களை விருந்தாவனமெங்கும் பதியச் செய்து அதனைப் புனிதப் படுத்தினர்.
பதம் 10.15.2
தன் மாதவோ வேணும் உதீரயன் வ்ருதோ
கோபைர் க்ருணதிபி: ஸ்வ-யஸோ பலான்வித:
பஸுன் புரஸ்க்ருத்ய பஸவ்யம் ஆவிஸத்
விஹர்து-காம: குஸுமாகரம் வனம்
தத்—இவ்வாறு; மாதவ:—பகவான் ஸ்ரீ மாதவன்; வேணும்—புல்லாங்குழல்; உதீரயன்—ஒலி எழுப்பி; வ்ருத:—சூழப்பட்டு; கோபை:—ஆயர்குலச் சிறுவர்களால்; க்ருணதிபி:—பாடிக் கொண்டிருந்தனர்; ஸ்வ-யஸ:—அவரது கீர்த்திகளை; பல-அன்வித:—பகவான் பலராமருடன்; பஸுன்—பசுக்கள்; புரஸ்க்ருதய—தனக்கு முன்னால் விட்டு; பஸவ்யம்—பசுக்களுக்கு, முழு சக்தியளிக்கும்; ஆவிஸத்—அவர் சென்றார்; விஹர்து-காம:—விளையாடும் விருப்பத்தினால்; குஸுமா-அகரம்—மலர்கள் நிறைந்த; வனம்—வனத்திற்கு.
இவ்வாறு தனது லீலைகளை அனுபவித்து மகிழ விரும்பிய பகவான் மாதவன், தனது கையிலுள்ள புல்லாங்குழலை இசைத்துக் கொண்டு, பலராமர் உடன் வர, ஆயர்குலச் சிறுவர்கள் அவரைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டு அவரது கீர்த்திகளைப் பாடிக் கொண்டுவர, பசுக்களை ஓட்டிக்கொண்டு நறுமணமிக்க மலர்களையும், பசுக்களுக்கு வேண்டிய சத்து மிக்கத் தாவரங்களையுடைய விருந்தாவனக் காட்டிற்குச் சென்றார்.
பதம் 10.15.3
தன் மஞ்ஜு-கோஷாளி-ம்ருக-த்விஜாகுலம்
மஹன்-மன:-ப்ரக்ய-பய:- ஸரஸ்வதா
வாதேன ஜுஷ்டம் ஸத-பத்ர-கந்தினா
நிரீக்ஷ்ய ரந்தும் பகவான் மனோ ததே
தத்—அந்தக் காட்டில்; மஞ்ஜு—மனதினை மயக்கும்; கோஷ—ஓசைகள்; அளி—தும்பிகள்; ம்ருக—விலங்குகள்; த்விஜ—பறவைகள்; ஆகுலம்—நிறைந்து; மஹத்—மகாத்மாக்களின்; மன:—மனங்கள்; ப்ரக்ய—ஒத்திருத்தல்; பய:—தண்ணீர்; ஸரஸ்வதா—ஒரு குளம்; வாதேன—காற்றினால்; ஜுஷ்டம்—நிறைந்த; ஸத-பத்ர—நூறு இதழ்களையுடைய தாமரை மலர்கள்; கந்தினா—நறுமணத்துடன்; நிரீக்ஷ்ய—கண்டு; ரந்தும்—இன்பம் அனுபவிக்க; பகவான்—முழுமுதற் கடவுள்; மன:—மனம்; ததே—மாறியது.
முழுமுதற் கடவுளின் திருவிழிகள் அக்காட்டினை ஒருமுறை சுற்றிப் பார்த்தன. அக்காடெங்கிலும், தும்பிகளின் ரீங்கார ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீச்சோலிகள், மற்றும் விலங்குகளின் பல்வேறு விதமான ஒலிகள் நிறைந்திருந்தன. அக்காட்டிற்கு மேலும் எழிலூட்டுவது போல் ஓர் அழகிய குளம் ஒன்று அங்கிருந்தது. அக்குளத்தில் உள்ள நீர், மகாத்மாக்களின் மனங்களைப் போல் தூய்மையாகவும், தெளிவாகவும் இருந்தது. இனிய தென்றல் காற்று அக்குளத்தில் உள்ள நூறு இதழ்களையுடைய தாமரை மலர்களிலிருந்து மனதினை மயக்கும் நறுமணத்தினைச் சுமந்து வந்தது. இவற்றையெல்லாம் கண்ணுற்ற பகவான் கிருஷ்ணர் அம்மங்களகரமானச் சூழ்நிலையினை அனுபவித்து மகிழ வேண்டுமென்று தீர்மானித்தார்.
பதம் 10.15.4
ஸ தத்ர தத்ராருண-பல்லவ-ஸ்ரியா
பல-ப்ரஸுனோரு-பரேண பாதயோ:
ஸ்ப்ருஸச் ஸிகான் வீக்ஷ்ய வனஸ்பதீன் முதா
ஸ்மயன்ன் இவாஹாக்ர-ஜம் ஆதி-பூருஷ:
ஸ:—அவர்; தத்ர தத்ர—எங்கும்; அருண—சிவந்த; பல்லவ—மலர்மொட்டுக்கள்; ஸ்ரியா—எழிலுடன்; பல—கனிகளுடன்; ப்ரஸுன—மலர்கள்; உரு-பரேண—கனத்த சுமையுடன்; பாதயோ:—அவரது இரு பாதங்களில்; ஸ்ப்ருஸத்—தொட்டன; ஸிகான்—அவற்றின் கிளைகளினால்; வீக்ஷ்ய—கண்டு; வனஸ்பதீன்—மரங்கள்; முதா—மகிழ்ச்சியுடன்; ஸ்மயன்—நகைத்து; இவ—போன்று; ஆஹ—கூறினார்; அக்ர ஜம்—தனது அண்ணன் பகவான் பலராமரிடம்; ஆதி-பூருஷ:—ஆதிபுருஷர்.
அங்குள்ள மரங்கள் சிவந்த நிற மொட்டுக்களும், இன்சுவைக் கனிகளும் நிறைந்து. அவற்றின் பாரம் தாங்காது வளைந்து தமது கிளைகளினால் பகவானது இரு பாதங்களையும் தொடுவதை ஆதிபுருஷ பகவான் கண்டார். அவர் புன்னகை புரிந்தவாறே தனது அண்ணன் பலராமரிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 10.15.5
ஸ்ரீ பகவான் உவாச
அஹோ அமீ தேவ-வராமரார்சிதம்
பாதாம்புஜம் தே ஸுமன:-பலார்ஹணம்
நமந்தி உபாதாய ஸிகாபிர் ஆத்மனஸ்
தமோ- ‘பஹத்யை தரு-ஜன்ம யத்-க்ருதம்
ஸ்ரீ பகவான் உவாச—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்; அஹோ—ஓ; அமீ—இவை; தேவவர—ஓ, தேவர்களிற் சிறந்தோரே (ஸ்ரீ பலராமர்); அமர—அழிவில்லாத தேவர்களால்; அர்சிதம்—வழிபடுதல்; பாத-அம்புஜம்—தாமரைத் திருவடிகளுக்கு; தே—உமது; ஸுமன:—மலர்களின்; பல—பழங்கள்; அர்ஹணம்—அர்ப்பணிக்கின்றன; நமந்தி—அவை தலைவணங்கி; உபாதாய—வழங்குதல்; ஸிகாபி:—அவர்களின் தலைகளுடன்; ஆத்மன:—தமது; தம:—அறியாமை இருளின்; அபஹத்யை—நீக்கும் நோக்கத்துடன்; தரு-ஜன்ம—தாம் மரங்களாகப் பிறந்ததை; யத்—அவ்வறியாமையினால்; க்ருதம்—செய்தன.
முழுமுதற் கடவுள் கூறினார்: “ஓ, தேவர்களிற் சிறந்தவரே, தேவர்களால் வணங்கப்படும் உமது தாமரைத் திருவடிகளை இம் மரங்கள் தமது தலைகளைக் குனிந்து எவ்வாறு வணங்குகின்றன என்பதைச் சற்றுப் பார்ப்பீராக. தாம் மரங்களாகப் பிறப்பதற்குக் காரணமான தமது அறியாமையினை நீக்கிக் கொள்வதற்காக இம் மரங்கள் தம்மிடமுள்ள கனிகளையும், மலர்களையும் உமக்கு அர்ப்பணிக்கின்றன.”
பதம் 10.15.6
ஏதோ ‘ளினஸ் தவ யஸோ ‘கில-லோக-தீர்த்தம்
காயந்த ஆதி-புருஷானுபதம் பஜந்தே
ப்ராயோ அமீ முனி-கணா பவதீய-முக்யா
கூடம் வனே ‘பி ந ஜஹதி அநகாத்ம-தைவம்
ஏதோ—இவை; அளின:—தும்பிகள்; தவ—உமது; யஸ:—பெருமைகள்; அகில-லோக—அகில உலகிலும்; தீர்த்தம்—புண்ணிய க்ஷேத்திரமாகும்; காயந்த:—ஓதுகின்றனர்; ஆதி-புருஷ—ஓ, ஆதிபுருஷ பகவானே; அனுபதம்—வழி எங்கும் உம்மைப் பின்தொடர்ந்து; பஜந்தே—அவர்கள் வழிபடுவதில் ஈடுபடுகின்றனர்; ப்ராய:—பெரும் பகுதி; அமீ—இவர்கள்; முனி-கணா:—மாமுனிவர்கள்; பவதீய—உமது பக்தர்கள் மத்தியில்; முக்யா—மிகவும் நெருக்கமானவர்கள்; கூடம்—மறைந்துகொண்டு; வனே—வனத்தில்; அபி—இருந்தபோதிலும்; ந ஜஹதி—அவர்கள் உம்மைப் புறக்கணிக்கவில்லை; அநக—ஓ, குற்றமற்றவரே; ஆத்ம-தைவம்—தமது வழிபடும் தெய்வமாக.
ஓ, ஆதிபுருஷ பகவானே! இத்தும்பிகள் எல்லாம் மகாமுனிவர்களாகவும், உமது சிறந்த பக்தர்களாகவும் இருத்தல் வேண்டும். இவர்கள் வழி எங்கும் உம்மைப் பின்தொடர்ந்து வந்து, அகில உலகிற்கும் புண்ணிய க்ஷேத்திரமாக விளங்கும் உமது பெருமையினை ஓதிக் கொண்டிருக்கின்றனர். நீர் உம்மை இக்காட்டினுள் மறைத்துக் கொண்ட போதிலும், குற்றமற்றவரே, இவர்கள் தமது வழிபடும் தெய்வமான உம்மைப் புறக்கணிக்கவில்லை.
பதம் 10.15.7
ந்ருத்யந்தி அமீ ஸிகின ஈட்யமுதா ஹரிண்ய:
குர்வந்தி கோப்ய இவ தே ப்ரியம் ஈக்ஷணேன
ஸுக்தைஸ் ச கோகில-கணா க்ருஹம் ஆகதாய
தன்யா வனௌகஸ இயான் ஹி ஸதாம் நிஸர்க:
ந்ருத்யந்தி—ஆடுகின்றன; அமீ—இலை; ஸிகின:—மயில்கள்; ஈட்ய—ஓ போற்றுதற்குரிய பகவானே; முதா—மகிழ்ச்சியுடன்; ஹரிண்ய:—பெண்மான்; குர்வந்தி—செய்கின்றன; கோப்ய:—கோபியர்கள்; இவ—போன்று; தே—உமக்கு; ப்ரியம்—மகிழ்விக்க; ஈக்ஷணேன—தமது பார்வையினால்; ஸுக்தை:—வேத மந்திரங்களால்; ச—மற்றும்; கோகில-கணா:—கோகிலங்கள் (குயில்கள்); க்ருஹம்—தமது வசிப்பிடத்திற்கு; ஆகதாய—வந்தடைந்த; தன்யா:—அதிர்ஷ்டமுடையன; வன-ஓகஸ:—வனத்திலுள்ளவை; இயான்—இவை போன்ற; ஹி—உண்மையில்; ஸதாம்—முனிவர்கள்; நிஸர்க:—இயற்கை.
ஓ, வணக்கத்திற்குரியவரே, அழகிய மயில்கள் தமது தோகையினை விரித்து உமது முன்னே மகிழ்ச்சியுடன் ஆடுகின்றன. இப்பெண்மான்கள் கோபியர்களைப் போல் மிகுந்த பாசத்துடன் உம்மைப் பார்க்கின்றன. குயில்கள் தமது இனிய குரலினால் வேத மந்திரங்களை ஓதி உம்மைப் பெருமைப்படுத்துகின்றன. வனத்திலுள்ள இவையெல்லாம் மிகவும் பாக்கியம் செய்தவையாகும். உம்மிடம் அவை நடந்துகொள்ளும் முறையானது மகாத்மாக்கள் தமது இல்லத்திற்கு வரும் மற்றொரு மகாத்மாவை வரவேற்பது போன்றிருக்கிறது.
பதம் 10.15.8
தன்யேயம் அத்ய தரணீ த்ருண-வீருதஸ் த்வத்-
பாத-ஸ்ப்ருஸோ த்ரும-வதா: கரஜா பிம்ருஷ்டா:
நத்யோ ‘த்ரய: கக-ம்ருகா: ஸதயாவலோகைர்
கோப்யோ ‘ந்தரேண புஜயோர் அபி யத்-ஸ்ப்ருஹா ஸ்ரீ:
தன்யா—பாக்கியசாலிகள்; இயம்—இந்த; அத்ய—இப்பொழுது; தரணீ—பூமி; த்ருண—புற்கள்; வீருத:—புதர்கள்; த்வத்—உமது; பாத—பாதங்கள்; ஸ்ப்ருஸ:—தம்மீது படுவதினால்; த்ரும—மரங்கள்; வதா:—கொடிகள்; கர-ஜ—உமது விரல் நகங்களினால்; அபிம்ருஷ்டா:—தொடுதல்; நத்ய:—நதிகள்; அத்ரய:—மற்றும் மலைகள்; கக—பறவைகள்; ம்ருகா:—மிருகங்கள்; ஸதய—கருணைமிக்க; அவலோகை:—உமது பார்வை; கோப்ய:—கோபியர்கள்; அந்தரேண—இடையில்; புஜயோ:—உமது இருகரங்கள்; அபி—உண்மையில்; யத்—அதற்கு; ஸ்ப்ருஹா—விரும்பப்படுவது; ஸ்ரீ:—அதிர்ஷ்ட தேவதை.
இப்பூமி இப்போது மிகுந்த பாக்கியம் செய்திருக்கிறது. ஏனென்றால் அதன் புற்களிலும், புதர்களிலும் உமது பாதங்கள் படுகின்றன. மேலும் அதன் நதிகள், மலைகள், பறவைகள், விலங்குகள் போன்ற எல்லாவற்றின் மீதும் உமது கருணைமிகு பார்வை படுகின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக உமது இரு கரங்களால் நீர் ஆயர்குல கன்னிப்பெண்களைத் தழுவிக் கொள்கின்றீர். உமது திருக்கரங்களின் அணைப்பினை வேண்டி அதிர்ஷ்டதேவதையே நாளும் தவம் செய்கின்றாள்.
பதம் 10.15.9
ஸ்ரீ-ஸுக உவாச
ஏவம் வ்ருந்தாவனம் ஸ்ரீமத் க்ருஷ்ண: ப்ரீத-மனா: பஸுன்
ரேமே ஸஞ்சாரயன்ன் அத்ரே: ஸரித்-ரோத: ஸு ஸானுக:
ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; வ்ருந்தாவனம்—விருந்தாவனக் காட்டில், அதில் வசிப்பவர்களுடன்; ஸ்ரீமத்—அழகிய; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; ப்ரீத-மனா:—தனது மனதில் திருப்தியற்றவராக: பஸுன்—விலங்குகள்; ரேமே—அவர் மகிழ்ச்சியடைந்தார்; ஸஞ்சாரயன்—அவற்றைப் புல் மேயச் செய்து; அத்ரே:—மலையின் அருகாமையில்; ஸரித்—நதியின்; ரோத: ஸு—கரையில்; ஸ-அனுக:—தனது நண்பர்களுடன்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு அழகிய விருந்தாவனக் காடு மற்றும் அதில் வசிப்போரிடம் மிகுந்த திருப்தியுற்றவராக பகவான் கிருஷ்ணர், தனது நண்பர்களுடன் சேர்ந்து, கோவர்தன மலையின் அருகில், யமுனை நதிக்கரையில் ஆநிரை மேய்ப்பதில் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.
பதங்கள் 10.15.10 – 10.15.12
க்வசித் காயதி காயத்ஸு மதாந்தாளிஷ்வ் அனுவ்ரதை:
உபகீயமான-சரித: பதி ஸங்கர்ஷணான்வித:
அனுஜல்பதி ஜல்பந்தம் கல-வாக்யை: ஸுகம் க்வசித்
க்வசித் ஸ-வல்கு குஜந்தம் அனுகூஜதி கோகிலம்
க்வசித் ச கல-ஹம்ஸானாம் அனுகூஜதி கூஜிதம்
அபின்ருத்யதி ந்ருத்யந்தம் பர்ஹிணம் ஹாஸயன் க்வசித்
மேக-கம்பீரயா வாசா நாமபிர் தூர-கான் பஸூந்
க்வசித் ஆஹ்வயதி ப்ரீத்யா கோ-கோபால-மனோஜ்ஞயா
க்வசித்—சில நேரம்; காயதி—அவர் பாடுகிறார்; காயத்ஸு—அவர்கள் பாடும்பொழுது; மத-அந்த—மதுவினால் மயக்கமுற்று; அளிஷு—தும்பிகள்; அனுவ்ரதை:—அவரது துணைவர்களுடன்; உபகீயமான—ஓதப்படுகிறது; சரித:—லீலைகள்; பதி—பாதையில்; ஸங்கர்ஷண-அன்விதா:—பகவான் பலதேவரும் துணைவர; அனுஜல்பதி—அவரும் பதிலுக்கு ஒலி எழுப்புகிறார்; ஜல்பந்தம்—ஒலியின்; கவ-வாக்யை:—உடைந்த வார்த்தையுடன்; ஸுகம்—கிளி; க்வசித்—சிலநேரம்; க்வசித்—சிலநேரம்; ஸ—உடன்; வல்கு—மனம் கவரும்; கூஜந்தம்—குயிலோசை; அனுகூஜதி—அவரும் அதுபோல் கூவுவார்; கோகிலம்—குயிலின்; க்வசித்—சில நேரம்; ச—மேலும்; கல-ஹம்ஸானாம்—அன்னப் பறவைகளின்; அனுகூஜதி கூஜிதம்—அது எழுப்பும் ஒலி போன்று ஒலி செய்வார்; அபின்ருத்யதி—அவரும் முன்பாக ஆடுவார்; ந்ருத்யந்தம்—ஆடுகின்ற; பர்ஹிணம்—ஒரு மயில்; ஹாஸயன்—நகைப்பூட்டுவார்; க்வசித்—சிலநேரம்; மேக—மேகத்தைப் போன்று; கம்பீரயா—கம்பீரமாக; வாசா—அவரது குரலுடன்; நாமபி:—பெயர்களால்; தூர-கான்—தூரத்தில் இருக்கும்; பஸூன்—மிருகங்கள்; க்வசித்—சிலநேரம்; ஆஹ்வயதி—அவர் அழைப்பார்; ப்ரீத்யா—பிரியமாக; கோ—பசுக்களை; கோபால—ஆயர்குலச் சிறுவர்கள்; மன:-ஜ்ஞயா—அது (அவ்வோசை) மனதினை மயக்கும்.
சில நேரம் பிருந்தாவனத்திலுள்ள தும்பிகள் மது மயக்கத்தில் தமது கண்களை மூடிக் கொண்டு பாடத் துவங்கும். பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பகவான் கிருஷ்ணர், அத்தும்பிகளுக்குப் பதில் கூறுவது போல் அவை போன்றே ஒலி செய்வார். அப்போது அவரது நண்பர்கள் அவரது லீலைகளைப் போற்றிப் பாடுவார். சிலநேரம் பகவான் கிருஷ்ணர் கிளியினைப் போல் மழலை மொழியில் கொஞ்சுவார், சிலநேரம் குயிலைப் போல் இனிமையாகக் கூவுவார். சிலநேரம் அன்னப் பறவைகளைப் போல் ஒலி செய்வார். சில நேரம் தனது ஆயர்குல நண்பர்கள் சிரித்து மகிழும் வண்ணம் அவர் ஒரு மயிலைப் போல் பாவனை செய்து ஆடுவார். சில நேரம் மேகங்களின் இடியோசை போன்ற குரலில் அவர் மிகுந்த பாசத்துடன் வெகு தொலைவிலுள்ள மிருகங்களைப் பெயர் சொல்லி அழைப்பார். இவ்வாறு அவர் பசுக்களையும், ஆயர்குலச் சிறுவர்களையும் மகிழச் செய்வார்.
பதம் 10.15.13
சகோர-க்ரௌஞ்ச-சக்ராஹ்வ-பாரத்வாஜாம்ஸ் ச பர்ஹிண:
அனுரௌதி ஸ்ம ஸத்த்வானாம பீத-வத் வ்யாக்ர-ஸிம்ஹயோ:
சகோர-க்ரௌஞ்ச-சக்ராஹ்வ-பாரத்வாஜான்-ச—சகோரம், கிரெளஞ்சம், சக்ரவாஹம், பாரத்வாஜம் போன்ற பறவைகள்; பர்ஹிண:—மயில்கள்; அனுரெளதி ஸ்ம—அவரும் அவை போல் பாவனை செய்வார்; ஸத்த்வானாம்—பிற சிறு பிராணிகளுடன்; பீத-வத்—அஞ்சுவதுபோல் நடித்து; வ்யாக்ர-ஸிம்ஹயோ:—புலிகள் மற்றும் சிங்கங்களின்.
சிலசமயம் அவர் சகோரம், கிரௌஞ்சம், சக்ரவாஹம், பாரத்வாஜம் போன்ற பறவைகளைப் போலும் மயில்களைப் போலும் பாவனை செய்து அவைபோன்றே ஒலியெழுப்புவார். சிங்கங்களுக்கும், புலிகளுக்கும் அஞ்சுவது போன்று, சிறு பிராணிகளுடன் சேர்த்து ஓடுவார்.
பதம் 10.15.14
க்வசித் க்ரீடா-பரீஸ்ராந்தம் கோபோத்ஸங்கோபபார்ஹணம்
ஸ்வயம் விஸ்ரமயதி ஆர்யம் பாத-ஸம் வாஹனாதிபி:
க்வசித்—சிலநேரம்; க்ரீடா—விளையாடுவதினால்; பரிஸ்ராந்தம்—களைப்புற்று; கோப—ஓர் ஆயர்குலச் சிறுவனின்; உத்ஸங்க—மடியில்; உபபர்ஹணம்—அவரது தலையணையாகப் பயன்படுத்தி; ஸ்வயம்—சுயமாக; விஸ்ரமயதி—அவரது களைப்பினைப் போக்குவார்; ஆர்யம்—அவரது அண்ணனின்; பாத-ஸம்வாஹன-ஆதிபி:—அவரது பாதங்களைத் தடவிக் கொடுப்பதினாலும், பிற சேவைகளினாலும்.
அவரது மூத்த சகோதரர், விளையாண்ட களைப்பினால், ஓர் ஆயர்குலச் சிறுவனின் மடிமீது தலை வைத்துப் படுத்திருக்கும் பொழுது பகவான் கிருஷ்ணர் தானே அவரது பாதங்களைத் தடவிக் கொடுத்து அவருக்குத் தேவையான பிற சேவைகளையும் செய்வார்.
பதம் 10.15.15
ந்ருத்யதோ காயத: க்வாபி வல்கதோ யுத்யதோ மித:
க்ருஹீத-ஹஸ்தௌ கோபாவான் ஹஸந்தௌ ப்ரஸஸம்ஸது:
ந்ருத்யத:—ஆடுதல்; காயத:—பாடுதல்; க்வ அபி—சிலசமயம்; வல்கதா:—ஓடுதல்; யுத்யத:—சண்டை போடுதல்; மித:—ஒருவரோடொருவர்; க்ருஹீத-ஹஸ்தெள—அவர்களது கரங்களை ஒன்றாகச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு; கோபாவான்—கோபாலர்கள்; ஹஸந்தௌ—சிரித்து; ப்ரஸஸம்ஸது:—அவர்கள் பாராட்டும்.
சிலசமயம் ஆயர்குலச் சிறுவர்கள் ஆடுவர், பாடுவர், ஓடுவர். ஒருவரோடொருவர் சண்டை செய்வர். இதனை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணரும், பலராமரும் அவர்களது செயல்களைக் கண்டு நகைத்து, அவர்களைப் பாராட்டுவர்.
பதம் 10.15.16
க்வசித் பல்லவ-தல்பேஷு நியுத்த-ஸ்ரம-கர்ஸித:
வ்ருக்ஷ-மூலாஸ்ரய: ஸேதே கோபோத் ஸங்கோபபர்ஹண:
க்வசித்—சிலநேரம்; பல்லவ—தளிர்கள் மற்றும் மொட்டுக்களினாலான; தல்பேஷு—படுக்கை மீது; நியுத்த—சண்டையிட்டதிலிருந்து; ஸ்ரம—களைப்பினால்; கர்ஸித:—சோர்வுற்று; வ்ருக்ஷ—ஒரு மரத்தின்; மூல—அடியில்; ஆஸ்ரய:—தஞ்சம் புகுந்து; ஸேதே—அவர் படுத்திருப்பார்; கோப-உத்ஸங்க—ஓர் ஆயர்குலச் சிறுவனின் மடியில்; உபபர்ஹண:—தலையணையாக.
சிலசமயம் பகவான் கிருஷ்ணர் சண்டை செய்த களைப்பினால் ஒரு மரத்தின் அடியில் இளந்தளிர்களாலும், மலர் மொட்டுக்களினாலும் ஆன படுக்கையில் ஓர் ஆயர்குலச் சிறுவனின் மடியைத் தலையணையாகப் பயன்படுத்திப் படுத்திருப்பார்.
பதம் 10.15.17
பாத-ஸம்வாஹனம் சக்ரு: கேசித் தஸ்ய மஹாத்மன:
அபரே ஹத-பாபமானோ வ்யஜனை: ஸமவீஜயன்
பாத-ஸம்வாஹனம்—பாதங்களைத் தடவிக்கொடுத்து; சக்ரு:—செய்தனர்; கேசித்—சிலர்; தஸ்ய—அவரது; மஹா-ஆத்மன:—மகாத்மாக்கள்; அபரே—பிறர்; ஹத-பாபமான:—எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைபெற்றோர்; வ்யஜனை:—விசிறிகளுடன்; ஸமவீஜயன்—நன்கு வீசுவர்.
மகாத்மாக்களான சில ஆயர்குலச் சிறுவர்கள் அவரது தாமரைத் திருவடிகளைத் தடவிக் கொடுப்பர். எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்ற வேறு சிலர், பரமபுருஷ பகவானுக்கு விசிறி கொண்டு நன்கு வீசுவர்.
பதம் 10.15.18
அன்யே தத்-அனுரூபாணி மனோஜ்ஞானி மஹாத்மன:
காயந்தி ஸ்ம மஹா-ராஜ ஸ்நேஹ-க்லின்ன-திய: ஸனை:
அன்யே—பிறர்; தத்-அனுரூபாணி—சூழ்நிலைக்குப் பொருந்துகின்ற; மன: ஜ்ஞானி—மனதினைக் கவர்வதற்கு; மஹா-ஆத்மன:—சிறந்த மகானின் (பகவான் கிருஷ்ணர்); காயந்தி ஸ்ம—அவர்கள் பாடுவர்; மஹா-ராஜா—ஓ, பரீக்ஷித்து மன்னனே; ஸ்நேஹ—அன்பினால்; க்லின்ன—உருகி; திய:—அவர்களது இதயங்கள்; ஸனை:—மெதுவாக.
அன்பிற்குரிய அரசனே! பிற சிறுவர்கள், சூழ்நிலைக்கு ஏற்றாற் போன்ற பாடல்களை இனிமையாகப் பாடுவார். பகவானின்மீது கொண்ட அன்பினால் அவர்களது இதயம் கசிந்து உருகும்.
பதம் 10.15.19
ஏவம் நிகூடாத்ம-கதி: ஸ்வ-மாயயா
கோபாத்மஜத்வம் சரிதைர் விடம்பயன்
ரேமே ரமா-லாவித-பாத-பல்லவோ
க்ராம்யை: ஸமம் க்ராம்ய-வத்-ஈஸ-சேஷ்டித:
ஏவம்—இவ்வாறு; நிகூட—மறைத்துக்கொண்டு; ஆத்ம-கதி:—அவரது தனிப்பட்ட வளம்; ஸ்வ-மாயயா—அவரது மாயா சக்தியால்; கோப-ஆத்மஜத்வம்—ஆயர்குலத்தைச் சேர்ந்த ஒருவரின் மைந்தனாக; சரிதை:—அவரது செயல்களால்; விடம்பயன்—ஏமாற்றுதல்; ரேமே—அவர் மகிழ்ந்தார்; ரமா—அதிர்ஷ்ட தேவதையால்; லாவித—பணி செய்யப்படுவது; பாத-பல்லவ—மலர் மொட்டுக்களைப் போன்ற மென்மையான அவரது பாதங்கள்; க்ராம்யை: ஸமம்—கிராமத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து; க்ராம்ய-வத்—ஒரு கிராமத்துச் சிறுவனைப் போல்; ஈஸ-சேஷ்டித:—பரமபுருஷ பகவானுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய செயல்களைச் செய்தபோதிலும்.
இவ்வாறு மகாலட்சுமியால் சேவை செய்யப்படும் மென்மையான தாமரைத் திருவடிகளுக்குச் சொந்தக்காரரான முழுமுதற் கடவுள் தனது அகச்சக்தியால் தனது உன்னத வளங்களை மறைத்து ஆயர் குலத்தைச் சேர்ந்த ஒருவரின் மைந்தனாக நடந்துகொண்டார். அவர் கிராமத்திலுள்ளவர்களுடன் சேர்ந்து ஒரு கிராமத்துச் சிறுவனாக நடந்து கொண்ட போதிலும் அவர் கடவுளுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய அற்புதச் செயல்களை அடிக்கடி செய்து காட்டினார்.
பதம் 10.15.20
ஸ்ரீ தாமா நாம கோபாலோ ராம-கேஸவயோ: ஸகா
ஸுபல-ஸ்தோகக்ருஷ்ணாத்யா கோபா: ப்ரேம்ணேதம் அப்ருவன்
ஸ்ரீ தாமா நாம—ஸ்ரீ தாம்; கோபால:—ஆயர்குலச் சிறுவன்; ராம-கேஸவயோ:—பகவான் பலராமர் மற்றும் பகவான் கிருஷ்ணர்; ஸகா—நண்பன்; ஸுபல-ஸ்தோகக்ருஷ்ண-ஆத்யா:—சுபலன், ஸ்தோக-கிருஷ்ணன் மற்றும் பலர்; கோபா:—ஆயர்குலச் சிறுவர்கள்; ப்ரேம்ணா—அன்புடன்; இதம்—இந்த; அப்ருவன்—கூறினார்.
ஒரு சமயம், கிருஷ்ணர் மற்றும் பலராமரின் நெருங்கிய நண்பனான ஸ்ரீ தாமன், கபலன், ஸ்தோககிருஷ்ணன் போன்ற ஆயர்குலச் சிறுவர்கள் அன்புடன் பின்வருமாறு கூறினர்.
பதம் 10.15.21
ராம ராம மஹா-பாஹோ க்ருஷ்ண துஷ்ட-நிபர்ஹண
இதோ ‘விதூரே ஸு-மஹத் வனம் தாளாலி-ஸங்குலம்
ராமராம—ஓ, ராம; மஹா-பாஹோ—ஓ, வலிமை மிக்கக் கரங்களை உடையவனே; க்ருஷ்ண—ஓ, கிருஷ்ணனே; துஷ்ட-நிபர்ஹண—ஓ, துஷ்டர்களை அழிப்பவனே; இத:—இங்கிருந்து; அவி தூரே—சிறிது தூரத்தில்; ஸு-மஹத்—பரந்து விரிந்த; வனம்—காடு; தாள அலி—பனைமரங்கள்; ஸங்குலம்—நிறைந்தது.
(ஆயர்குலச் சிறுவர்கள் கூறினர்:) ஓ, ராம, ராம, வலிமை மிக்கக் கரங்களை உடையவனே! ஓ, கிருஷ்ண துஷ்டர்களை அழிப்பவனே! இங்கிருந்து சிறிது தூரத்தில் பனை மரங்கள் நிறைந்த பெருங்காடு ஒன்று இருக்கிறது.
பதம் 10.15.22
பலானி தத்ர பூரீணி பதந்தி பதிதானி ச
ஸந்தி கிந்த்வ் அவருத்தானி தேனுகேன துராத்மனா
பலானி—பழங்கள்; தத்ர—அங்கே; பூரீணி—ஏராளம்; பதந்தி—வீழ்கின்றன; பதிதானி—ஏற்கெனவே விழுந்திருக்கின்றன; ச—மேலும்; ஸந்தி—இருக்கின்றன; கிந்து—எனினும்; அவருத்தானி—பாதுகாக்கப்படுகிறது; தேனுகேன—தேனுகனால்; துராத்மனா—கொடியவனால்.
தாள வனத்திலுள்ள மரங்களிலிருந்து ஏராளமான கனிகள் ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கின்றன, வீழ்ந்து கொண்டும் இருக்கின்றன. எனினும் அக்கனிகள் எல்லாம் தேனுகன் என்னும் கொடிய அசுரனால் பாதுகாக்கப்படுகின்றன.
பதம் 10.15.23
ஸோ ‘தி-வீர்யோ ‘ஸுரோ ராம ஹே க்ருஷ்ண கர-ரூப-த்ருக்
ஆத்ம-துல்ய-பலைர் அன்யைர் ஜ்ஞாதிபிர் பஹுபிர் வ்ருத:
ஸ:—அவன்; அதி-வீர்ய:—மிகவும் ஆற்றல் மிக்க; அஸுர:—ஓர் அசுரன்; ராம—ஓ, ராமா; ஹே க்ருஷ்ண—ஓ, கிருஷ்ணா; கர-ரூப—ஒரு கழுதையின் வடிவம்; த்ருக்—மேற்கொண்டு; ஆத்ம-துல்ய—அவனுக்கு இணையாக; பலை:—பலமுடையவர்கள்; அன்யை:—பிற; ஜ்ஞாதிபி:—துணைவர்கள்; பஹுபி:—பலர்; வ்ருத:—சூழ்ந்திருக்கின்றனர்.
ஓ, ராமா, ஓ கிருஷ்ணா! தேனுகன் ஓர் ஆற்றல்மிக்க அசுரனாவான். அவன் ஒரு கழுதையின் வடிவில் இருக்கின்றான். அவனது நண்பர்களும் அவனைப் போன்றே கழுதை வடிவம் மேற்கொண்டு அவனுக்கு இணையான பலமுடையவர்களாக இருக்கின்றனர்.
பதம் 10.15.24
தஸ்மாத் க்ருத-நராஹாராத் பீதைர் ந்ருபிர் அமித்ர-ஹன்
ந ஸேவ்யதே பஸு-கணை: பக்ஷி-ஸங்கைர் விவர்ஜிதம்
தஸ்மாத்—அவனுக்கு; க்ருத-நர-ஆஹாராத்—அவன் நர மாமிசம் தின்பதால்; பீதை:—பீதியுற்று; ந்ருபி:—மனிதர்களால்; அமித்ர-ஹன்—ஓ, பகைவரைச் சுடுவோயே; ந ஸேவ்யதே—செல்வதில்லை; பஸு-கணை:—பல்வேறு விலங்குகள்; பக்ஷி-ஸங்கை:—பறவைக் கூட்டங்கள்; விவர்ஜிதம்—புறக்கணித்தல்.
தேனுகாசுரன் மனிதர்களை உயிருடன் பிடித்துத் தின்பவனாவான், அதனால் தாளவனத்திற்கு மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் கூடச் செல்வதற்கு அஞ்சுகின்றன. ஓ, பகைவரைச் சுடுவோனே, அங்கே பறவைகள் கூடப் பறப்பதற்கு அஞ்சுகின்றன.
பதம் 10.15.25
வித்யந்தே ‘புக்த-பூர்வாணி பலானி ஸுரபீணி ச
ஏஷ வை ஸுரபிர் கந்தோ விஷூசீனோ ‘வக்ருஹ்யதே
வித்யந்தே—இருக்கின்ற; அபுக்த-பூர்வாணி—இதற்கு முன்பு சுவைக்கப்பட்டதில்லை; பலானி—பழங்கள்; ஸூரபீணி—இனிய மணமுடைய; ச—மேலும்; ஏஷா:—இது; வை—உண்மையில்; ஸுரபீ—இனிய மணம்; கந்த:—நறுமணம்; விஷூசீன:—எங்கும் பரவி இருக்கின்றது; அவக்ருஹ்யதே—உணரப்படுகிறது.
அத்தாளவனத்தில் இனிய மணமுடைய இன்சுவைக் கனிகள் ஏராளம் இருக்கின்றன. எனினும் அவற்றை இதுவரை எவரும் சுவைத்ததில்லை. ஏன், இப்போது அங்கிருந்து வரும் அக்கனிகளின் இனிய நறுமணத்தினை இப்போது நம்மால் இங்கேயே நுகர முடிகிறதே.
பதம் 10.15.26
ப்ரயச்ச தானி ந: க்ருஷ்ண கந்த-லோபித-சேதஸாம்
வாஞ்சாஸ்தி மஹதீ ராம கம்யதாம் யதி ரோசதே
ப்ரயச்ச—அளிப்பாயாக; தானி—அவற்றை; ந:—எமக்கு; க்ருஷ்ண—ஓ, கிருஷ்ணா; கந்த—நறுமணத்தினால்; லோபித—ஆசையை அதிகரிக்கின்றது; சேதஸாம்—அவர்களது மனங்கள்; வாஞ்சா—வாஞ்சை; அஸ்தி—இருக்கிறது; மஹதீ—பெரியது; ராம—ஓ, ராமா; கம்யதாம்—நாம் செல்வோம்; யதி—எனில்; ரோசதே—இது நல்ல யோசனையாகத் தோன்றினால்.
ஒ, கிருஷ்ணா! அக்கனிகளை எங்களுக்குப் பெற்றுத்தரமாட்டாயா. அவற்றின் இனிய மணத்தினால் எங்கள் மனம் ஈர்க்கப்படுகின்றது. அன்பிற்குரிய பலராமனே, அக்கனிகளை அடைய வேண்டும் என்னும் எங்களது அவா வளர்ந்து கொண்டே போகிறது. இது நல்ல யோசனை என்று நீங்கள் இருவரும் கருதினால், நாம் தாள வனத்திற்கு உடனே போகலாம்.
பதம் 10.15.27
ஏவம் ஸுஹ்ருத்-வச: ஸ்ருத்வா ஸுஹ்ருத்-ப்ரிய-சிகீர்ஷயா
ப்ரஹஸ்ய ஸக்மதுர் கோபைர் வ்ருதௌ தாளவனம் ப்ரபூ
ஏவம்—இவ்வாறு; ஸுஹ்ருத்—தமது நண்பர்களின்; வச:—வார்த்தைகள்; ஸ்ருத்வா—கேட்டு; ஸூஹ்ருத்—தமது நண்பர்களுக்கு; ப்ரிய—மகிழ்ச்சி; சிகீர்ஷயா—அளிக்க விரும்பி; ப்ரஹஸ்ய—சிரித்தபடி; ஜக்மது:—அவர்களிருவரும் சென்றனர்; கோபை:—ஆயர்குலச் சிறுவர்களுடன்; வ்ருதெள—சூழப்பட்டு; தாள-வனம்—தாளவனத்திற்கு; ப்ரபூ—பகவான்கள் இருவரும்.
தமது இனிய நண்பர்களின் வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகை புரிந்த கிருஷ்ணரும், பலராமரும் அவர்களை மகிழ்விக்க விரும்பி, ஆயர்குல நண்பர்கள் சூல தாளவனத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
பதம் 10.15.28
பல: ப்ரவிஸ்ய பாஹூப்யாம் தாளான் ஸம்பரிகம்பயன்
பலானி பாதயாம் ஆஸ மதன்-கஜ இவௌ ஜஸா
பல:—பலராமர்; ப்ரவிஸ்ய—புகுந்து; பாஹுப்யாம்—அவரது இருகரங்களினால்; தாளான்—தாள மரங்கள்; ஸம்பரிகம்பயன்—எங்கும் விழும்படி உலுக்கினார்; பலானி—பழங்கள்; பாதயாம் ஆஸ—அவர் விழச் செய்தார்; மதம்-கஜ:—ஒரு மத யானை; இவ—போன்று; ஓஜஸா—அவரது பலத்தால்.
பகவான் பலராமர் முதலில் தாள வனத்திற்குள் புகுந்தார். பிறகு அவர் ஒரு மத யானையைப் போல் மிகுந்த பலத்துடன் தனது இருகரங்களால் அங்கிருந்த மரங்களைப் பிடித்து உலுக்கி அவற்றின் கனிகளை உதிர்த்தார்.
பதம் 10.15.29
பலானாம் பததாம் ஸப்தம் நிஸம்யாஸுர-ராஸப:
அப்யதாவத் க்ஷிதி-தளம் ஸ-நகம் பரிகம்பயன்
பலானாம்—பழங்களின்; பததாம்—உதிர்ந்த; ஸப்தம்—ஓசை; நிஸம்ய—கேட்டு; அஸுர-ராஸப:—கழுதை வடிவிலிருந்து அசுரன்; அப்யதாவத்—ஓடி வந்தான்; க்ஷிதி-தளம்—நிலத்தின் மீது; ஸ-நகம்—மரங்களுடன் இணைந்து; பரிகம்பயன்—நடுங்கச் செய்து.
பழங்கள் உதிர்வதினால் எழுந்த ஒலியினைக் கேட்டுக் கழுதை வடிவிலிருந்த தேனுகாசுரன் நிலமும், மரங்களும் நடுங்கும் வண்ணம், தாக்குவதற்கு ஓடி வந்தான்.
பதம் 10.15.30
ஸமேத்ய தரஸா ப்ரத்யக் த்வாப்யாம் பப்யாம் பலம் பலீ
நிஹத்யோரஸி கா-ஸப்தம் முஞ்சன் பர்யஸரத் கல:
ஸமேத்ய—அவரைக் கண்டு; தரஸா—வேகமாக; ப்ரத்யக்—பின்புறமுள்ள; த்வாப்யாம்—இரண்டு; பப்யாம்—கால்கள்; பலம்—பகவான் பலராமர்; பலீ—ஆற்றல்மிக்க அசுரன்; நிஹத்ய—தாக்கினான்; உரஸி—மார்பின் மீது; கா-ஸப்தம்—அருவருக்கத்தக்கக் கனைப்பு ஒலி; முஞ்சன்—எழுப்பி; பர்யஸரத்—எங்கும் ஓடி; கல:—கழுதை.
ஆற்றல்மிக்க அசுரன் பகவான் பலராமரை நோக்கி விரைந்து ஓடித் தனது பின்னங்களால்களின் குளம்புகளினால் பகவானது மார்பின் மீது ஓங்கி உதைத்தான். பிறகு தேனுகன் கூக்குரலிட்டுக் கனைத்தபடியே ஓடத் துவங்கினான்.
பதம் 10.15.31
புனர் அஸாத்ய ஸம்ரப்த உபக்ரோஷ்டா பராக் ஸ்தித:
சரணாவ் அபரௌ ராஜன் பலாய ப்ராக்ஷிபத் ருஷா
புன:—மீண்டும்; ஆஸாத்ய—அவரை அணுகினான்; ஸம்ரப்த:—சீற்றமுடன்; உபக்ரோஷ்டா—கழுதை; பராக்—தனது பின்புறத்தினைப் பகவானுக்கு எதிராக வைத்தபடி; ஸ்தித:—நின்றுகொண்டு; சரணௌ—இருகால்கள்; அபரௌ—பின்புறம்; ராஜன்—ஓ, பரீக்ஷித்து மன்னனே; பலாய—பகவான் பலராமரிடத்தில்; ப்ராக்ஷிபத்—அவன் வீசினான்; ருஷா—ஆத்திரத்துடன்
ஓ, பரீக்ஷித்து மன்னனே, சீற்றங்கொண்ட அக்கழுதை மீண்டும் பகவான் பலராமரை நோக்கிப் பின்புறமாக ஓடிவந்தான். பிறகு ஒலமிட்டபடியே அவ்வசுரன் தனது பின்னங்கால்களைப் பகவான் பலராமரை நோக்கி வீசினான்.
பதம் 10.15.32
ஸ தம் க்ருஹீத்வா ப்ரபதோர் ப்ராமயித்வைக-பாணினா
சிஷேப த்ருண-ராஜாக்ரே ப்ராமண-த்யக்த-ஜீவிதம்
ஸ:—அவர்; தம்—அவனை; க்ருஹீத்வா—பிடித்து; ப்ரபதோ:—குளம்புகளினால்; ப்ராமயித்வா—சுழற்றி; ஏக-பாணினா—ஒரே கரத்தினால்; சிஷேப—அவர் வீசினார்; த்ருண-ராஜ-அக்ரே—ஈச்ச மரத்தின் உச்சியில்; ப்ராமண—சுழற்சியால்; த்யகத்—துறந்தான்; ஜீவிதம்—அவனது உயிரை.
பகவான் பலராமர் தேனுகனின் பின்னங்கால்களைத் தனது ஒரே கையினால் பற்றித் தூக்கிச் சுழற்றி வேகமாக பனை மரத்தின் உச்சியில் வீசினார். வேகமாகச் சுழற்றப்பட்டதினால் அவ்வசுரன் உயிர் துறந்தான்.
பதம் 10.15.33
தேனாஸதோ மஹா-தானோ வேபமானோ ப்ருஹச்-சிரா:
பார்ஸ்வ-ஸ்தம் கம்பயன் பக்ன: ஸ சான்யம் ஸோ ‘பி சாபரம்
தேன—அதனால் (இறந்துபோன தேனுகாசுரனின் உடலினால்); ஆஹத:—தாக்கப்பட்டு; மஹா-தாள:—பெரிய ஈச்சமரம்; வேபமான:—நடுங்கியது; ப்ருஹத்-ஸிரா:—அதன் அகன்ற உச்சியில்; பார்ஸ்வ-ஸ்தம்—அதன் அருகிலுள்ள மற்றொரு மரத்தினை; கம்பயன்—நடுங்கச் செய்தது; பக்ன:—முறிந்தது; ஸ:—அது; ச—மேலும்; அன்யம்—மற்றொரு; ஸ:—அது; அபி—கூட; ச—மேலும்; அபரம்—மற்றொரு.
பகவான் பலராமர் தேனுகாசுரனின் இறந்த உடலினை அக்காட்டிலிருந்து மிக உயரமான ஈச்ச மரத்தின் உச்சியில் தூக்கி எறிந்தார். இறந்து போன அவ்வசுரனின் உடல் மரத்தின் உச்சியில் சென்று விழுந்ததும், அந்த மரம் பயங்கரமாக அசைந்தது. அப்பெரிய பனை மரம், அருகிலிருந்த மரத்தையும் அசையச் செய்து, அசுரனின் பாரம் தாளாது முறிந்து வீழ்ந்தது. அருகிலிருந்த மரம், தனது அருகிலிருந்த மற்றொரு மரத்தினை அசையச் செய்தது. அது பிறிதொரு மரத்தினை அசையச் செய்தது. இவ்வாறாக அக்காட்டிலிருந்த பல மரங்கள் பயங்கரமாக ஆடி அசைந்து முறிந்து வீழ்ந்தன.
பதம் 10.15.34
பலஸ்ய லீலயோத்ஸ்ருஷ்ட-கர-தேஹ-ஹதா-ஹதா:
தாளாஸ் சகம்பிரே ஸர்வே மஹா-வாதேரிதா இவ
பலஸ்ய—பகவான் பலராமர்; லீலயா—லீலையாக; உத்-ஸ்ருஷ்ட—உயரே தூக்கி எறிதல்; கர-தேஹ—கழுதையின் உடலினால்; ஹத-ஆஹதா:—ஒன்று மற்றொன்றினைத் தாக்கி; தாளா:—பனை மரங்கள்; சகம்பிரே—ஆடின; ஸர்வே—எல்லாம்; மஹா-வாத—சூறாவளிக் காற்றினால்; ஈரிதா:—வீசுதல்; இவ—போன்று.
பகவான் பலராமர், இறந்துபோன அசுரனின் உடலினை மிக உயரமான பனை மரத்தின் உச்சியில் இருந்து தூக்கி எறிந்த லீலையின் காரணமாக அங்கிருந்த மரங்கள் எல்லாம் சூறைக்காற்றின் வேகத்தில் சிக்குண்டு சுழல்வது போல் பயங்கரமாக ஆடி ஒன்றோடொன்று மோதின.
பதம் 10.15.35
நைதச் சித்ரம் பகவதி ஹி அனந்தே ஜகத்-ஈஸ்வரே
ஓத ப்ரோதம் இதம் யஸ்மிம்ஸ் தந்துஷ்வ் அங்க யதா பட:
ந—இல்லை; ஏதத்—இது; சித்ரம்—ஆச்சரியம்; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; ஹி—உண்மையில்; அனந்தே—அளவற்றவர்; ஜகத்-ஈஸ்வரே—ஜகதீஸ்வர்; ஓத-ப்ரோதம்—கிடையாகவும், செங்குத்தாகவும்; இதம்—இப்பிரபஞ்சம்; யஸ்மின்—யார் மீது; தந்துஷு—அதன் நூல் இழைகளின் மீது; அங்க—அன்பிற்குரிய பரீக்ஷித்து மன்னனே; யதா—போன்று; பட:—ஒரு நெய்த துணி.
அன்பார்ந்த பரீக்ஷித்து மன்னனே, எல்லையற்ற முழுமுதற் கடவுளாகவும், இப்பிரபஞ்சத்தின் நெறியாளராகவும் பலராமர் இருக்கின்றார் என்பதைக் கருத்தில் கொண்டால், அவர் தேனுகாசுரனைக் கொன்றது வியப்பிற்குரிய ஒன்றல்ல. உண்மையில் நெய்த துணியானது கிடையாகவும், செங்குத்தாகவும் ஓடும் நூலிழைகளின் மீது இருப்பது போல், இப்பிரபஞ்சம் முழுவதும் அவர் மீது படிந்து இருக்கின்றது.
பதம் 10.15.36
தத: க்ருஷ்ணம் ச ராமம் ச ஜ்ஞாதயோ தேனுகஸ்ய யே
க்ரோஷ்டாரோ ‘ப்யத்ரவன் ஸ்ர்வே ஸம்ரப்தா ஹத-பாந்தலா:
தத:—பிறகு; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; ச—மற்றும்; ராமம்—பகவான் பலராமர்; ச—மற்றும்; ஸ்ஞாதய:—நெருங்கிய துணைவர்கள்; தேனுகஸ்ய—தேனுகாவின்; யே—யார்; க்ரோஷ்டார:—கழுதைகள்; அப்யத்ரவன்—தாக்கினர்; ஸர்வே—அனைவரும்; ஸம்ரப்தா:—சீற்றங்கொண்டு; ஹத-பாந்தவா:—தமது நண்பன் கொல்லப்பட்டது கண்டு.
தேனுகாசுரனின் நெருங்கிய நண்பர்களான கழுதை அசுரர்கள் தமது நண்பனின் மரணம் கண்டு மிகுந்த சீற்றம் கொண்டனர். அதனால் அவர்கள் விரைந்து கிருஷ்ணரையும், பலராமரையும் தாக்குவதற்கு ஓடி வந்தனர்.
பதம் 10.15.37
தாம்ஸ் தான் ஆபதத: க்ருஷ்ணோ ராமஸ் ச ந்ருப லீலயா
க்ருஹீத-பஸ்சாச்-சரணான் ப்ராஹிணோத் த்ருண-ராஜஸு
தாம்ஸ் தான் — அவர்கள் அனைவரும், ஒவ்வொருவராக; ஆபதத:—தாக்கினர்; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; ராம:—பகவான் பலராமர்; ச—மற்றும்; ந்ருப—ஒ, மன்னனே; லீலயா—எளிதாக; க்ருஹீத—பிடித்து; பஸ்சாத்—சரணான் அவற்றின் பின்னங்கால்கள்; ப்ராஹிணோத்—எறிந்தனர்; த்ருணராஜஸு—ஈச்ச மரங்களின் மீது.
ஓ, மன்னனே, கழுதை வடிவம் கொண்ட அசுரர்கள் கிருஷ்ணரையும், பலராமரையும் தாக்கியபோது, அவர்கள் இருவரும் மிகவும் எளிதாக அவற்றின் பின்னங்கால்களைப் பிடித்துத் தூக்கிச் சுழற்றி அனைத்துக் கழுதைகளையும் பனை மரங்களின் உச்சியின் மீது எறிந்தனர்.
பதம் 10.15.38
பல-ப்ரகர-ஸங்கீர்ணம் தைத்ய-தேஹைர் கதாஸுபி:
ரராஜ பூ: ஸ-தாளாக்ரைர் கனைர் இவ நபஸ்-தலம்
பல-ப்ரகர—பழக்குலைகள்; ஸங்கீர்ணம்—மறைத்து; தைத்ய-தேஹை:—அசுரர்களின் உடல்களுடன்; கத-அஸுபி:—அவை உயிரற்றவை; ரராஜ—ஒளி செய்தன; பூ:—பூமி; ஸ-தாள-அக்ரை:—பனை மரங்களின் உச்சியில்; கனை:—மேகங்களுடன்; இவ—போன்று; நப:-தலம்—வானம்.
பிறகு பூமியானது, பழக்குலைகள், மற்றும் முறிந்து போன ஈச்ச மரங்களின் உச்சியில் சிக்கிக் கொண்டிருந்த உயிரற்ற அசுரர்களின் உடல்கள் மூடியதினால் எழில்மிக்கதாகத் தோன்றியது. உண்மையில் பூமியானது, மேகங்களினால் அழகு செய்யப்பட்ட வானம் போல் ஒளி செய்தது.
பதம் 10.15.39
தயோஸ் தத் ஸு-மஹத் கர்ம நிஸம்ய விபுதாதய:
முமுக: புஷ்ப-வர்ஷாணி சக்ருர் வாத்யானி துஷ்டுவு:
தயோ:—இருசகோதரர்களின்; தத்—அது; ஸு-மஹத்—மிகச்சிறந்த; கர்ம—செயல்; நிஸம்ய—கேட்டு; விபுத-ஆதய:—தேவர்களும், உயர்ந்தவர்களும்; முமுக:—அவர்கள் பொழிந்தனர்; புஷ்ப-வர்ஷாணி—மலர்மாரி; சக்ரு:—அவர்கள் செய்தனர்; வாத்யானி—வாத்தியங்கள் முழங்கினர்; துஷ்டுவு:—பிரார்த்தனை செய்தனர்.
இரு சகோதரர்களின் செயற்கரிய செயலைக் கேள்விப்பட்ட தேவர்களும் மகான்களும் மலர்மாரி பொழிந்தனர், இசைக்கருவிகள் முழங்கினர், புகழ்ந்து பிரார்த்தித்தனர்.
பதம் 10.15.40
அத தாள-பலானி ஆதன் மனுஷ்யா கத-ஸாத்வஸா:
த்ருணம் ச பஸவஸ் சேருர் ஹத-தேனுக-கானனே
அத—அதன் பிறகு; தாள—ஈச்ச மரங்களின்; பலானி—பழங்கள்; ஆதன்—உண்டனர்; மனுஷ்யா:—மனிதர்கள்; கத-ஸாத்வஸா:—தங்கள் அச்சம் ஒழிந்தனர்; த்ருணம்—புற்களை; ச—மற்றும்; பஸவ:—விலங்குகள்; சேரு:—மேய்ந்தன; ஹத—செய்யப்பட்டது; தேனுக—தேனுகாசுரன்; கானனே—காட்டில்.
தேனுகாசுரன் கொல்லப்பட்ட பிறகு மக்கள் அனைவரும் அக் காட்டிற்கு எந்தவித அச்சமுமின்றி வந்தனர். மேலும் அவர்கள் அச்சமின்றி அங்குள்ள பனம் பழங்களை உண்டனர். இப்போது பசுக்கள் கூட அங்குள்ள புற்களை அச்சமின்றி மேயத் தலைப்பட்டன.
பதம் 10.15.41
க்ருஷ்ண: கமல-பத்ராக்ஷ: புண்ய-ஸ்ரவண-கீர்தன:
ஸ்தூயமானோ ‘னுகைர் கோபை: ஸாக்ரஜோ வ்ரஜம் ஆவ்ரஜத்
க்ருஷ்ணா:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; கமல-பத்ர-அக்ஷ:—அவரது விழிகள் செந்தாமரை இதழ்களைப் போன்றன; புண்ய-ஸ்ரவண-கீர்தன:—அவரது புண்ணியச் செயலைக் கேட்டுக்கொண்டும், ஓதிக் கொண்டும்; ஸ்தூயமான:—புகழ்ந்தபடி; அனுகை:—அவரது அடியார்களால்; கோபை:—ஆயர்குலச் சிறுவர்கள்; ஸ-அக்ர-ஜ:—தனது அண்ணன் பலராமருடன்; வ்ரஜம்—விரஜத்திற்கு; ஆவ்ரஜத்—அவர் திரும்பி வந்தார்.
கேட்பதற்கும், ஓதுவதற்கும் மிக்க புண்ணியமுடைய கீர்த்திக்குச் சொந்தக்காரரும், செந்தாமரை இதழைப் போன்று சிவந்த விழிகளை உடையவருமான பகவான் கிருஷ்ணர் தனது அண்ணல் பலராமருடன் சேர்ந்து விரஜத்திற்குத் திரும்பி வந்தார். வழியெங்கணும் அவரது நம்பிக்கைக்குரிய அடியவர்களான ஆயர்குலச் சிறுவர்கள் அவரது பெருமைகளை ஓதிக்கொண்டே வந்தனர்.
பதம் 10.15.42
தம்கோ ரஜஸ்-சுரித-குந்தள-பத்த-பர்ஹ-
வன்ய-ப்ரஸூன-ருசிரேக்ஷண-சாரு-ஹாஸம்
வேணும் க்வணந்தம் அனுகைர் உபகீத-கீர்திம்
கோப்யோ தித்ருக்ஷித-த்ருஸோ ‘ப்யகமன் ஸமேதா:
தம்—அவரை; கோ-ரஜ:—பசுக்களினால் எழுப்பப்பட்ட தூசு; சுரித—பூசப்பட்டு; குந்தள—அவரது அடர்ந்த கூந்தலில்; பத்த—இடப்பட்டு; பர்ஹ—மயிலிறகு; வன்ய-ப்ரஸூன—காட்டு மலர்கள்; ருசிர-ஈக்ஷண—கவர்ச்சிமிகு கண்கள்; சாரு-ஹாஸம்—எழில் புன்னகை; வேணும்—அவரது புல்லாங்குழல்; க்வணந்தம்—ஒலிக்கும்; அனுகை:—அவரது துணைவர்களால்; உபகீத—ஓதப்படுகிறது; கீர்திம்—அவரது கீர்த்திகள்; கோப்ய:—கோபியர்கள்; தித்ருக்ஷித—காண்பதற்கு ஆவல் கொண்டு; த்ருஸ:—அவர்களது விழிகள்; அப்யகமன்—முன்வந்தனர்; ஸமேதா:—ஓர் உடலில்.
பசுக்களினால் எழுப்பப்பட்ட தூசு படிந்திருக்கும் பகவான் கிருஷ்ணரது கருங்குழலை மயிலிறகும், காட்டு மலர்களும் அழகு செய்தன. அவரது பெருமைகளை அவரது துணைவர்கள் ஓதிக் கொண்டிருக்கும்பொழுது பகவான் கவர்ச்சிமிகு பார்வையுடன் எழில் புன்னகை சிந்தி தனது புல்லாங்குழலிலிருந்து இனிய நாதமழை பொழிவார். கோபிகாஸ்திரீகள் அவரைக் காண்பதற்குப் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவர். அவர்களது விழிகளோ அவரைக் காண்பதற்கு மிக்க ஆவலுடையனவாக இருக்கும்.
பதம் 10.15.43
பீத்வா முகுந்த-முக-ஸாரகம் அக்ஷி-ப்ருங்கைஸ்
தாபம் ஜஹூர் விரஹ-ஜம் வ்ரஜ-யோஷிதோ ‘ஹ்னி
தத் ஸத்-க்ருதிம் ஸமதிகம்ய விவேஸ கோஷ்டம்
ஸவ்ரீட-ஹாஸ-விநயம் யத் அபாங்க-மோக்ஷம்
பீத்வா—பருகினர்; முகுந்த-முக—பகவான் முகுந்தனின் திருமுகத்தின்; ஸாரகம்—தேன்; அக்ஷி-ப்ருங்கை:—கருவண்டு போன்ற விழிகளால்; தாபம்—தாபம்; ஜஹு:—துறந்தனர்; விரஹ-ஜம்—பிரிவின் காரணமாக; வ்ரஜ-யோஷித:—விருந்தாவனப் பெண்கள்; அஹ்னி—நாள் முழுவதும்; தத்—அது; ஸத்-க்ருதிம்—மரியாதையினை அர்ப்பணித்தல்; ஸமதிகம்ய—முழுவதிலும் ஏற்றுக்கொண்டு; விவேஸ—அவர் புகுந்தார்; கோஷ்டம்—ஆயர் பாடியினுள்; ஸ-வ்ரீட—நாணத்துடன்; ஹாஸ—புன்னகைத்து; விநயம்—பணிவுடன்; யத்—இது; அபாங்க—அவர்களது கடைவிழிப் பார்வைகள்; மோக்ஷம்—விடுதலை.
விருந்தாவனத்தைச் சேர்ந்த பெண்கள், தமது கருவண்டுக் கண்களினால் பகவான் முகுந்தனது எழில் முகத்தேனை அள்ளி உண்டனர். இதனால் ஒரு நாள் முழுவதும் அவரைப் பிரிந்ததினால் உண்டான விரக தாபத்தை அவர்கள் தீர்த்துக் கொண்டனர். தமது நாணம், புன்னகை, விநயம் நிறைந்த பார்வையினை விருந்தாவனப் பெண்கள் பகவான் மீது வைத்தனர். ஸ்ரீ கிருஷ்ணரும் இப்பார்வையினை உரிய மரியாதையாக ஏற்றுக்கொண்டு, ஆயர்பாடியுள் புகுந்தார்.
பதம் 10.15.44
தயோர் யஸோதா-ரோஹிண்யெள புத்ரயோ: புத்ர-வத்ஸலே
யதா-காமம் யதா-காலம் வ்யதத்தாம் பரமாஸிஷ:
தயோ:—இருவருக்கும்; யஸோதா-ரோஹிண்ணௌ—யசோதை மற்றும் ரோகிணி (கிருஷ்ணர் மற்றும் பலராமரின் அன்னையர்); புத்ரயோ:—அவர்களது புதல்வர்களுக்கு; புத்ர-வத்ஸலே—தமது புதல்வர்களிடம் மிகுந்த பாசமுடையோர்; யதா-காமம்—அவர்கள் எதை விரும்பினாலும்; யதா-காலம்—எக்காலத்திலும்; வ்யதத்தாம்—அளிப்பர்; பரம-ஆஸிஷ:—மகிழ்ச்சிக்குரிய சிறந்தவற்றை அளிப்பர்.
அன்னை யசோதாவும், அன்னை ரோகிணியும் தமது இரு புத்திரர்களிடத்தும் மிகுந்த வாஞ்சையுடையோர் ஆவர். அவர்கள் தமது புதல்வர்கள் விரும்புகின்ற எல்லாவற்றையும், உரிய காலங்களில் அவர்களுக்கு அளிப்பர்.
பதம் 10.15.45
கதாத்வான-ஸ்ரமௌ தத்ர மஜ்ஜனோன்மர்தனாதிபி:
நீவீம் வஸித்வா ருசிராம் திவ்ய-ஸ்ரக்-கந்த-மண்டிதௌ
கத—சென்ற; அத்வான-ஸ்ரமௌ—காடுகளில் அலைந்து திரிந்ததினால் ஏற்பட்ட சோர்வு; தத்ர—அங்கே (அவர்களது இல்லத்தில்); மஜ்ஜன—நீராடுவதால்; உன்மர்தன—உடலைப் பிடித்துவிடுதல்; ஆதிபி:—போன்றவற்றினால்; நீவீம்—ஆடைகள்; வஸித்வா—அணிவித்து; ருசிராம்—கண்ணைக் கவரும்; திவ்ய—உன்னதமான; ஸ்ரக்—மாலைகளுடன்; கந்த—நறுமணம்; மண்டிதெள—அலங்கரிக்கப்பட்டனர்.
பகவான் இருவரையும் உடல் தேய்த்து நீராட்டியதினால் அவர்கள் காட்டில் நடந்து வந்த களைப்பு நீங்கப் பெற்றனர். பிறகு அவர்களுக்குப் பட்டு பீதாம்பரங்கள் அணிவிக்கப்பட்டும், கண்ணைக் கவரும் நறுமணமிக்க மலர்களினாலான மாலைகள் அணிவிக்கப்பட்டும் அழகு செய்யப்பட்டது.
பதம் 10.15.46
ஜனனி-உபஹ்ருதம் ப்ராஸ்ய ஸ்வாத் அன்னம் உபலாலிதௌ
ஸம்விஸ்ய வர-ஸய்யாயாம் ஸூகம் ஸுஷுபதுர் வ்ரஜே
ஜனனீ—அவர்களது அன்னையர்களால்; உபஹ்ருதம்—அளிக்கப்பட்ட; ப்ராஸ்ய—முழுவதும் உண்டு; ஸ்வாது—சுவைமிக்க; அன்னம்—உணவு; உபலாலிதெள—கொஞ்சப்பட்டு; ஸம்விஸ்ய—சென்றனர்; வர—நேர்த்திமிகு; ஸய்யாயாம்—படுக்கை மீது; ஸுகம்—சுகமாக; ஸுஷுபது:—அவர்களிருவரும் நித்திரை கொண்டனர்; வ்ரஜே—விரஜத்தில்.
அவர்தம் அன்னையர் இருவராலும் அளிக்கப்பட்ட அறுசுவை உணவு உண்டும், அவர்களால் பல்வேறு வகைகளில் கொஞ்சப்பட்டும், சகோதரர்கள் இருவரும் தமது நேர்த்திமிகு பஞ்சணைகளில் சுகமாகப் பள்ளி கொண்டனர் விரஜஸ என்னும் நகரில்.
பதம் 10.15.47
ஏவம் ஸ பகவான் க்ருஷ்ணோ வ்ருந்தாவன-சர: க்வசித்
யயௌ ராமம் ருதே ராஜன் காளிந்தீம் ஸகிபிர் வ்ருத:
ஏவம்—இவ்வாறு; ஸ:—அவர்; பகவான்—முழுமுதற் கடவுள்; க்ருஷ்ண:—கிருஷ்ணர்; வ்ருந்தாவன-சர:—விருந்தாவனத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்; க்வசித்—ஒரு முறை; யயௌ—சென்றார்; ராமம் ருதே—பகவான் பலராமர் இன்றி; ராஜன்—ஓ, பரீக்ஷித்து மன்னனே; காளிந்தீம்—யமுனை நதிக்கு; ஸகிபி:—தமது நண்பர்களால்; வ்ருத:—சூழப்பட்டு.
ஓ, மன்னனே, முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர் இவ்வாறு விருந்தாவனத்தில் சுற்றித் திரிந்து தமது லீலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு முறை அவர் பலராமர் இன்றித் தமது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு யமுனை ஆற்றுக்குச் சென்றார்.
பதம் 10.15.48
அத காவஸ் ச கோபாஸ் ச நிதாகாதப-பீடிதா:
துஷ்டம் ஜலம் பபுஸ் தஸ்யாஸ் த்ருஷ்ணார்தா விஷ-தூஷிதம்
அத—அதன்பிறகு; காவ—பசுக்கள்; ச—மற்றும்; கோபா:—ஆயர்குலச் சிறுவர்கள்; ச—மற்றும்; நிதாக—கோடை வெம்மை; ஆதப—ஒளிமிகு சூரியனால்; பீடிதா:—வருந்தி; துஷ்டம்—கலந்திருந்த; ஜலம்—நீர்; பபு:—அவர்கள் பருகினர்; தஸ்யா:—நதியின்; த்ருஷ-ஆர்தா:—தாகத்தினால் வருந்தி; விஷ—விஷத்தினால்; தூஷிதம்—கெட்டுப்போன.
அப்போது சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மை தாளாது பசுக்களும் ஆயர்குலச் சிறுவர்களும் மிகவும் வருந்தினர். தாகத்தினால் பீடிக்கப்பட்ட அவர்கள் யமுனை ஆற்றின் நீரை ஆவலுடன் பருகினர். அந்தோ! அந்நீரில் கொடிய விஷம் கலந்திருந்தது.
பதங்கள் 10.15.49 – 10.15.50
விஷாம்பஸ் தத் உபஸ்ப்ருஸ்ய தைவோபஹத-சேதஸ:
நிபேதுர் வ்யஸவ: ஸர்வே ஸலீலாந்தே குரூத்வஹ
வீக்ஷ்ய தான் வை ததா-பூதான் க்ருஷ்ணோ யோகேஸ்வரரேஸ்வர:
ஈக்ஷ்யாம்ருத-வர்ஷிண்யா ஸ்வ-நாதான் ஸம்ஜீவயத்
விஷ-அம்ப:—விஷ நீர்; தத்—அது; உபஸ்ப்ருஷ்ய—தொட்டதினாலேயே; தைவ—முழுமுதற் கடவுளின் மாயா சக்தியால்; உபஹத—இழந்தனர்; சேதஸ:—தமது உணர்வினை; நிபேது:—அவர்கள் நிலைகுலைந்து வீழ்ந்தனர்; வ்யஸவ:—உயிரற்று; ஸர்வே—அனைவரும்; ஸலில—அந்தே நதியின் கரை ஓரத்தில்; குரு-உத்வஹ—ஓ, குருகுல நாயகனே; வீக்ஷ்ய—கண்டு; தான்—அவர்கள்; வை—உண்மையில்; ததா-பூதான்—அதுபோன்ற நிலையில்; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; யோக-ஈஷ்வர-ஈஸ்வர:—யோகேஸ்வரர்களின் ஈஸ்வர்; ஈக்ஷ்யா—தமது பார்வையினால்; அம்ருத வர்ஷிண்யா—அமிர்த மழையான; ஸ்வநாதான்—அவர்கள் அவர் ஒருவரை மட்டுமே தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்; ஸமஜீவயத்—மீண்டும் உயிர் பெறச் செய்தார்.
விஷம் கலந்த நீரைத் தொட்டவுடன் பசுக்களும், சிறுவர்களும் உணர்விழந்து உயிரற்று நதியின் கரை ஓரத்தில் வீழ்ந்தனர். அவர்கள் அனைவரும் இவ்வாறு வீழ்ந்ததைக் கண்ட யோகேஸ்வரர்களின் ஈஸ்வரரான பகவான் கிருஷ்ணர், அவர்கள் தன்னைத் தவிர வேறு எவரையும் கடவுளாக ஏற்றுக் கொண்டதில்லை என்பதால் அப்பக்தர்கள் மீது அளவற்ற கருணை உடையவரானார். அதனால் அவர் தமது பார்வை என்னும் அமிர்த மழையினை அவர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு மீண்டும் உயிரளித்தார்.
பதம் 10.15.51
தே ஸம்ப்ரதீத-ஸ்ம்ருதய: ஸமுத்தாய ஜலாந்திகாத்
ஆஸன் ஸு-விஸ்மிதா: ஸர்வே வீக்ஷமானா: பரஸ்பரம்
தே—அவர்கள்; ஸம்ப்ரதீத—மீண்டும் முழுவதும்; ஸ்ம்ருதய:—தமது நினைவு; ஸமுத்தாய—எழுந்தனர்; ஜல-அந்திகாத்—நீரிலிருந்து வெளியே; ஆஸன்—அவர்கள் அடைந்தனர்; ஸு-விஸ்மிதா:—மிகுந்த வியப்பெய்தினர்; ஸர்வே—அனைவரும்; வீக்ஷமாணா:—பார்த்தனர்; பரஸ்பரம்—ஒருவரையொருவர்.
முழுஉணர்வும் திரும்பப் பெற்றவுடன் பசுக்களும், சிறுவர்களும் கரையினின்று எழுந்து நின்று ஒருவரையொருவர் மிகுந்த வியப்புடன் பார்த்துக் கொண்டனர்.
பதம் 10.15.52
அன்வமம்ஸத தத் ராஜன் கோவிந்தானுக்ரஹேக்ஷிதம்
பீத்வா விஷம் பரேதஸ்ய புனர் உத்தானம் ஆத்மன:
அன்வமம்ஸத—அவர்கள் உடனே நினைத்தனர்; தத்—அது; ராஜன்—ஓ, பரீக்ஷித்து மன்னனே; கோவிந்த—பகவான் கோவிந்தன்; அனுக்ரஹ-ஈக்ஷிதம்—அருள் மிகு பார்வையின் காரணமாக; பீத்வா—பருகப்பட்ட; விஷம்—விஷம்; பரேதஸ்ய—உயிர் இழந்தவர்கள்; புன:—மீண்டும்; உத்தானம்—எழுந்து நின்றனர்; ஆத்மன:—தாமாகவே.
ஓ, மன்னனே! ஆயர்குலச் சிறுவர்கள், தாம் விஷம் கலந்த நீரைப் பருகி உண்மையில் இறந்து போன போதிலும் கோவிந்தனின் கருணைமிகு பார்வையினால் மீண்டும் உயிர்பெற்றுத் தமது வலிமையினால் எழுந்து விட்டோம் என்று கருதினர்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “தேனுகாசுரனை அழித்தல்” எனும் தலைப்பை கொண்ட பதினைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.