அத்தியாயம் – 15
தேனுகாசுரனை அழித்தல்
பதம் 10.15.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பகவான் பலராமரும், பகவான் கிருஷ்ணரும் தமது பௌகண்ட வயதினை (ஆறிலிருந்து பத்து வயது வரை உள்ள பருவம்) அடைந்த பொழுது, விருந்தாவனத்தில் உள்ள ஆயர்குலப் பெரியோர்கள், இவர்கள் இருவரையும், பசுக்களை மேய்ப்பதற்கு அனுமதியளித்தனர். இவ்வாறு தமது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பலராமரும், கிருஷ்ணரும் தமது திருவடித் தாமரைகளின் தடங்களை விருந்தாவனமெங்கும் பதியச் செய்து அதனைப் புனிதப் படுத்தினர்.
பதம் 10.15.2 : இவ்வாறு தனது லீலைகளை அனுபவித்து மகிழ விரும்பிய பகவான் மாதவன், தனது கையிலுள்ள புல்லாங்குழலை இசைத்துக் கொண்டு, பலராமர் உடன் வர, ஆயர்குலச் சிறுவர்கள் அவரைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டு அவரது கீர்த்திகளைப் பாடிக் கொண்டுவர, பசுக்களை ஓட்டிக்கொண்டு நறுமணமிக்க மலர்களையும், பசுக்களுக்கு வேண்டிய சத்து மிக்கத் தாவரங்களையுடைய விருந்தாவனக் காட்டிற்குச் சென்றார்.
பதம் 10.15.3 : முழுமுதற் கடவுளின் திருவிழிகள் அக்காட்டினை ஒருமுறை சுற்றிப் பார்த்தன. அக்காடெங்கிலும், தும்பிகளின் ரீங்கார ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீச்சோலிகள், மற்றும் விலங்குகளின் பல்வேறு விதமான ஒலிகள் நிறைந்திருந்தன. அக்காட்டிற்கு மேலும் எழிலூட்டுவது போல் ஓர் அழகிய குளம் ஒன்று அங்கிருந்தது. அக்குளத்தில் உள்ள நீர், மகாத்மாக்களின் மனங்களைப் போல் தூய்மையாகவும், தெளிவாகவும் இருந்தது. இனிய தென்றல் காற்று அக்குளத்தில் உள்ள நூறு இதழ்களையுடைய தாமரை மலர்களிலிருந்து மனதினை மயக்கும் நறுமணத்தினைச் சுமந்து வந்தது. இவற்றையெல்லாம் கண்ணுற்ற பகவான் கிருஷ்ணர் அம்மங்களகரமானச் சூழ்நிலையினை அனுபவித்து மகிழ வேண்டுமென்று தீர்மானித்தார்.
பதம் 10.15.4 : அங்குள்ள மரங்கள் சிவந்த நிற மொட்டுக்களும், இன்சுவைக் கனிகளும் நிறைந்து. அவற்றின் பாரம் தாங்காது வளைந்து தமது கிளைகளினால் பகவானது இரு பாதங்களையும் தொடுவதை ஆதிபுருஷ பகவான் கண்டார். அவர் புன்னகை புரிந்தவாறே தனது அண்ணன் பலராமரிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 10.15.5 : முழுமுதற் கடவுள் கூறினார்: “ஓ, தேவர்களிற் சிறந்தவரே, தேவர்களால் வணங்கப்படும் உமது தாமரைத் திருவடிகளை இம் மரங்கள் தமது தலைகளைக் குனிந்து எவ்வாறு வணங்குகின்றன என்பதைச் சற்றுப் பார்ப்பீராக. தாம் மரங்களாகப் பிறப்பதற்குக் காரணமான தமது அறியாமையினை நீக்கிக் கொள்வதற்காக இம் மரங்கள் தம்மிடமுள்ள கனிகளையும், மலர்களையும் உமக்கு அர்ப்பணிக்கின்றன.”
பதம் 10.15.6 : ஓ, ஆதிபுருஷ பகவானே! இத்தும்பிகள் எல்லாம் மகாமுனிவர்களாகவும், உமது சிறந்த பக்தர்களாகவும் இருத்தல் வேண்டும். இவர்கள் வழி எங்கும் உம்மைப் பின்தொடர்ந்து வந்து, அகில உலகிற்கும் புண்ணிய க்ஷேத்திரமாக விளங்கும் உமது பெருமையினை ஓதிக் கொண்டிருக்கின்றனர். நீர் உம்மை இக்காட்டினுள் மறைத்துக் கொண்ட போதிலும், குற்றமற்றவரே, இவர்கள் தமது வழிபடும் தெய்வமான உம்மைப் புறக்கணிக்கவில்லை.
பதம் 10.15.7 : ஓ, வணக்கத்திற்குரியவரே, அழகிய மயில்கள் தமது தோகையினை விரித்து உமது முன்னே மகிழ்ச்சியுடன் ஆடுகின்றன. இப்பெண்மான்கள் கோபியர்களைப் போல் மிகுந்த பாசத்துடன் உம்மைப் பார்க்கின்றன. குயில்கள் தமது இனிய குரலினால் வேத மந்திரங்களை ஓதி உம்மைப் பெருமைப்படுத்துகின்றன. வனத்திலுள்ள இவையெல்லாம் மிகவும் பாக்கியம் செய்தவையாகும். உம்மிடம் அவை நடந்துகொள்ளும் முறையானது மகாத்மாக்கள் தமது இல்லத்திற்கு வரும் மற்றொரு மகாத்மாவை வரவேற்பது போன்றிருக்கிறது.
பதம் 10.15.8 : இப்பூமி இப்போது மிகுந்த பாக்கியம் செய்திருக்கிறது. ஏனென்றால் அதன் புற்களிலும், புதர்களிலும் உமது பாதங்கள் படுகின்றன. மேலும் அதன் நதிகள், மலைகள், பறவைகள், விலங்குகள் போன்ற எல்லாவற்றின் மீதும் உமது கருணைமிகு பார்வை படுகின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக உமது இரு கரங்களால் நீர் ஆயர்குல கன்னிப்பெண்களைத் தழுவிக் கொள்கின்றீர். உமது திருக்கரங்களின் அணைப்பினை வேண்டி அதிர்ஷ்டதேவதையே நாளும் தவம் செய்கின்றாள்.
பதம் 10.15.9 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு அழகிய விருந்தாவனக் காடு மற்றும் அதில் வசிப்போரிடம் மிகுந்த திருப்தியுற்றவராக பகவான் கிருஷ்ணர், தனது நண்பர்களுடன் சேர்ந்து, கோவர்தன மலையின் அருகில், யமுனை நதிக்கரையில் ஆநிரை மேய்ப்பதில் மிக்க மகிழ்ச்சியடைந்தார்.
பதங்கள் 10.15.10 – 10.15.12 : சில நேரம் பிருந்தாவனத்திலுள்ள தும்பிகள் மது மயக்கத்தில் தமது கண்களை மூடிக் கொண்டு பாடத் துவங்கும். பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பகவான் கிருஷ்ணர், அத்தும்பிகளுக்குப் பதில் கூறுவது போல் அவை போன்றே ஒலி செய்வார். அப்போது அவரது நண்பர்கள் அவரது லீலைகளைப் போற்றிப் பாடுவார். சிலநேரம் பகவான் கிருஷ்ணர் கிளியினைப் போல் மழலை மொழியில் கொஞ்சுவார், சிலநேரம் குயிலைப் போல் இனிமையாகக் கூவுவார். சிலநேரம் அன்னப் பறவைகளைப் போல் ஒலி செய்வார். சில நேரம் தனது ஆயர்குல நண்பர்கள் சிரித்து மகிழும் வண்ணம் அவர் ஒரு மயிலைப் போல் பாவனை செய்து ஆடுவார். சில நேரம் மேகங்களின் இடியோசை போன்ற குரலில் அவர் மிகுந்த பாசத்துடன் வெகு தொலைவிலுள்ள மிருகங்களைப் பெயர் சொல்லி அழைப்பார். இவ்வாறு அவர் பசுக்களையும், ஆயர்குலச் சிறுவர்களையும் மகிழச் செய்வார்.
பதம் 10.15.13 : சிலசமயம் அவர் சகோரம், கிரௌஞ்சம், சக்ரவாஹம், பாரத்வாஜம் போன்ற பறவைகளைப் போலும் மயில்களைப் போலும் பாவனை செய்து அவைபோன்றே ஒலியெழுப்புவார். சிங்கங்களுக்கும், புலிகளுக்கும் அஞ்சுவது போன்று, சிறு பிராணிகளுடன் சேர்த்து ஓடுவார்.
பதம் 10.15.14 : அவரது மூத்த சகோதரர், விளையாண்ட களைப்பினால், ஓர் ஆயர்குலச் சிறுவனின் மடிமீது தலை வைத்துப் படுத்திருக்கும் பொழுது பகவான் கிருஷ்ணர் தானே அவரது பாதங்களைத் தடவிக் கொடுத்து அவருக்குத் தேவையான பிற சேவைகளையும் செய்வார்.
பதம் 10.15.15 : சிலசமயம் ஆயர்குலச் சிறுவர்கள் ஆடுவர், பாடுவர், ஓடுவர். ஒருவரோடொருவர் சண்டை செய்வர். இதனை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணரும், பலராமரும் அவர்களது செயல்களைக் கண்டு நகைத்து, அவர்களைப் பாராட்டுவர்.
பதம் 10.15.16 : சிலசமயம் பகவான் கிருஷ்ணர் சண்டை செய்த களைப்பினால் ஒரு மரத்தின் அடியில் இளந்தளிர்களாலும், மலர் மொட்டுக்களினாலும் ஆன படுக்கையில் ஓர் ஆயர்குலச் சிறுவனின் மடியைத் தலையணையாகப் பயன்படுத்திப் படுத்திருப்பார்.
பதம் 10.15.17 : மகாத்மாக்களான சில ஆயர்குலச் சிறுவர்கள் அவரது தாமரைத் திருவடிகளைத் தடவிக் கொடுப்பர். எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்ற வேறு சிலர், பரமபுருஷ பகவானுக்கு விசிறி கொண்டு நன்கு வீசுவர்.
பதம் 10.15.18 : அன்பிற்குரிய அரசனே! பிற சிறுவர்கள், சூழ்நிலைக்கு ஏற்றாற் போன்ற பாடல்களை இனிமையாகப் பாடுவார். பகவானின்மீது கொண்ட அன்பினால் அவர்களது இதயம் கசிந்து உருகும்.
பதம் 10.15.19 : இவ்வாறு மகாலட்சுமியால் சேவை செய்யப்படும் மென்மையான தாமரைத் திருவடிகளுக்குச் சொந்தக்காரரான முழுமுதற் கடவுள் தனது அகச்சக்தியால் தனது உன்னத வளங்களை மறைத்து ஆயர் குலத்தைச் சேர்ந்த ஒருவரின் மைந்தனாக நடந்துகொண்டார். அவர் கிராமத்திலுள்ளவர்களுடன் சேர்ந்து ஒரு கிராமத்துச் சிறுவனாக நடந்து கொண்ட போதிலும் அவர் கடவுளுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய அற்புதச் செயல்களை அடிக்கடி செய்து காட்டினார்.
பதம் 10.15.20 : ஒரு சமயம், கிருஷ்ணர் மற்றும் பலராமரின் நெருங்கிய நண்பனான ஸ்ரீ தாமன், கபலன், ஸ்தோககிருஷ்ணன் போன்ற ஆயர்குலச் சிறுவர்கள் அன்புடன் பின்வருமாறு கூறினர்.
பதம் 10.15.21 : (ஆயர்குலச் சிறுவர்கள் கூறினர்:) ஓ, ராம, ராம, வலிமை மிக்கக் கரங்களை உடையவனே! ஓ, கிருஷ்ண துஷ்டர்களை அழிப்பவனே! இங்கிருந்து சிறிது தூரத்தில் பனை மரங்கள் நிறைந்த பெருங்காடு ஒன்று இருக்கிறது.
பதம் 10.15.22 : தாள வனத்திலுள்ள மரங்களிலிருந்து ஏராளமான கனிகள் ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கின்றன, வீழ்ந்து கொண்டும் இருக்கின்றன. எனினும் அக்கனிகள் எல்லாம் தேனுகன் என்னும் கொடிய அசுரனால் பாதுகாக்கப்படுகின்றன.
பதம் 10.15.23 : ஓ, ராமா, ஓ கிருஷ்ணா! தேனுகன் ஓர் ஆற்றல்மிக்க அசுரனாவான். அவன் ஒரு கழுதையின் வடிவில் இருக்கின்றான். அவனது நண்பர்களும் அவனைப் போன்றே கழுதை வடிவம் மேற்கொண்டு அவனுக்கு இணையான பலமுடையவர்களாக இருக்கின்றனர்.
பதம் 10.15.24 : தேனுகாசுரன் மனிதர்களை உயிருடன் பிடித்துத் தின்பவனாவான், அதனால் தாளவனத்திற்கு மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் கூடச் செல்வதற்கு அஞ்சுகின்றன. ஓ, பகைவரைச் சுடுவோனே, அங்கே பறவைகள் கூடப் பறப்பதற்கு அஞ்சுகின்றன.
பதம் 10.15.25 : அத்தாளவனத்தில் இனிய மணமுடைய இன்சுவைக் கனிகள் ஏராளம் இருக்கின்றன. எனினும் அவற்றை இதுவரை எவரும் சுவைத்ததில்லை. ஏன், இப்போது அங்கிருந்து வரும் அக்கனிகளின் இனிய நறுமணத்தினை இப்போது நம்மால் இங்கேயே நுகர முடிகிறதே.
பதம் 10.15.26 : ஒ, கிருஷ்ணா! அக்கனிகளை எங்களுக்குப் பெற்றுத்தரமாட்டாயா. அவற்றின் இனிய மணத்தினால் எங்கள் மனம் ஈர்க்கப்படுகின்றது. அன்பிற்குரிய பலராமனே, அக்கனிகளை அடைய வேண்டும் என்னும் எங்களது அவா வளர்ந்து கொண்டே போகிறது. இது நல்ல யோசனை என்று நீங்கள் இருவரும் கருதினால், நாம் தாள வனத்திற்கு உடனே போகலாம்.
பதம் 10.15.27 : தமது இனிய நண்பர்களின் வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகை புரிந்த கிருஷ்ணரும், பலராமரும் அவர்களை மகிழ்விக்க விரும்பி, ஆயர்குல நண்பர்கள் சூல தாளவனத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
பதம் 10.15.28 : பகவான் பலராமர் முதலில் தாள வனத்திற்குள் புகுந்தார். பிறகு அவர் ஒரு மத யானையைப் போல் மிகுந்த பலத்துடன் தனது இருகரங்களால் அங்கிருந்த மரங்களைப் பிடித்து உலுக்கி அவற்றின் கனிகளை உதிர்த்தார்.
பதம் 10.15.29 : பழங்கள் உதிர்வதினால் எழுந்த ஒலியினைக் கேட்டுக் கழுதை வடிவிலிருந்த தேனுகாசுரன் நிலமும், மரங்களும் நடுங்கும் வண்ணம், தாக்குவதற்கு ஓடி வந்தான்.
பதம் 10.15.30 : ஆற்றல்மிக்க அசுரன் பகவான் பலராமரை நோக்கி விரைந்து ஓடித் தனது பின்னங்களால்களின் குளம்புகளினால் பகவானது மார்பின் மீது ஓங்கி உதைத்தான். பிறகு தேனுகன் கூக்குரலிட்டுக் கனைத்தபடியே ஓடத் துவங்கினான்.
பதம் 10.15.31 : ஓ, பரீக்ஷித்து மன்னனே, சீற்றங்கொண்ட அக்கழுதை மீண்டும் பகவான் பலராமரை நோக்கிப் பின்புறமாக ஓடிவந்தான். பிறகு ஒலமிட்டபடியே அவ்வசுரன் தனது பின்னங்கால்களைப் பகவான் பலராமரை நோக்கி வீசினான்.
பதம் 10.15.32 : பகவான் பலராமர் தேனுகனின் பின்னங்கால்களைத் தனது ஒரே கையினால் பற்றித் தூக்கிச் சுழற்றி வேகமாக பனை மரத்தின் உச்சியில் வீசினார். வேகமாகச் சுழற்றப்பட்டதினால் அவ்வசுரன் உயிர் துறந்தான்.
பதம் 10.15.33 : பகவான் பலராமர் தேனுகாசுரனின் இறந்த உடலினை அக்காட்டிலிருந்து மிக உயரமான ஈச்ச மரத்தின் உச்சியில் தூக்கி எறிந்தார். இறந்து போன அவ்வசுரனின் உடல் மரத்தின் உச்சியில் சென்று விழுந்ததும், அந்த மரம் பயங்கரமாக அசைந்தது. அப்பெரிய பனை மரம், அருகிலிருந்த மரத்தையும் அசையச் செய்து, அசுரனின் பாரம் தாளாது முறிந்து வீழ்ந்தது. அருகிலிருந்த மரம், தனது அருகிலிருந்த மற்றொரு மரத்தினை அசையச் செய்தது. அது பிறிதொரு மரத்தினை அசையச் செய்தது. இவ்வாறாக அக்காட்டிலிருந்த பல மரங்கள் பயங்கரமாக ஆடி அசைந்து முறிந்து வீழ்ந்தன.
பதம் 10.15.34 : பகவான் பலராமர், இறந்துபோன அசுரனின் உடலினை மிக உயரமான பனை மரத்தின் உச்சியில் இருந்து தூக்கி எறிந்த லீலையின் காரணமாக அங்கிருந்த மரங்கள் எல்லாம் சூறைக்காற்றின் வேகத்தில் சிக்குண்டு சுழல்வது போல் பயங்கரமாக ஆடி ஒன்றோடொன்று மோதின.
பதம் 10.15.35 : அன்பார்ந்த பரீக்ஷித்து மன்னனே, எல்லையற்ற முழுமுதற் கடவுளாகவும், இப்பிரபஞ்சத்தின் நெறியாளராகவும் பலராமர் இருக்கின்றார் என்பதைக் கருத்தில் கொண்டால், அவர் தேனுகாசுரனைக் கொன்றது வியப்பிற்குரிய ஒன்றல்ல. உண்மையில் நெய்த துணியானது கிடையாகவும், செங்குத்தாகவும் ஓடும் நூலிழைகளின் மீது இருப்பது போல், இப்பிரபஞ்சம் முழுவதும் அவர் மீது படிந்து இருக்கின்றது.
பதம் 10.15.36 : தேனுகாசுரனின் நெருங்கிய நண்பர்களான கழுதை அசுரர்கள் தமது நண்பனின் மரணம் கண்டு மிகுந்த சீற்றம் கொண்டனர். அதனால் அவர்கள் விரைந்து கிருஷ்ணரையும், பலராமரையும் தாக்குவதற்கு ஓடி வந்தனர்.
பதம் 10.15.37 : ஓ, மன்னனே, கழுதை வடிவம் கொண்ட அசுரர்கள் கிருஷ்ணரையும், பலராமரையும் தாக்கியபோது, அவர்கள் இருவரும் மிகவும் எளிதாக அவற்றின் பின்னங்கால்களைப் பிடித்துத் தூக்கிச் சுழற்றி அனைத்துக் கழுதைகளையும் பனை மரங்களின் உச்சியின் மீது எறிந்தனர்.
பதம் 10.15.38 : பிறகு பூமியானது, பழக்குலைகள், மற்றும் முறிந்து போன ஈச்ச மரங்களின் உச்சியில் சிக்கிக் கொண்டிருந்த உயிரற்ற அசுரர்களின் உடல்கள் மூடியதினால் எழில்மிக்கதாகத் தோன்றியது. உண்மையில் பூமியானது, மேகங்களினால் அழகு செய்யப்பட்ட வானம் போல் ஒளி செய்தது.
பதம் 10.15.39 : இரு சகோதரர்களின் செயற்கரிய செயலைக் கேள்விப்பட்ட தேவர்களும் மகான்களும் மலர்மாரி பொழிந்தனர், இசைக்கருவிகள் முழங்கினர், புகழ்ந்து பிரார்த்தித்தனர்.
பதம் 10.15.40 : தேனுகாசுரன் கொல்லப்பட்ட பிறகு மக்கள் அனைவரும் அக் காட்டிற்கு எந்தவித அச்சமுமின்றி வந்தனர். மேலும் அவர்கள் அச்சமின்றி அங்குள்ள பனம் பழங்களை உண்டனர். இப்போது பசுக்கள் கூட அங்குள்ள புற்களை அச்சமின்றி மேயத் தலைப்பட்டன.
பதம் 10.15.41 : கேட்பதற்கும், ஓதுவதற்கும் மிக்க புண்ணியமுடைய கீர்த்திக்குச் சொந்தக்காரரும், செந்தாமரை இதழைப் போன்று சிவந்த விழிகளை உடையவருமான பகவான் கிருஷ்ணர் தனது அண்ணல் பலராமருடன் சேர்ந்து விரஜத்திற்குத் திரும்பி வந்தார். வழியெங்கணும் அவரது நம்பிக்கைக்குரிய அடியவர்களான ஆயர்குலச் சிறுவர்கள் அவரது பெருமைகளை ஓதிக்கொண்டே வந்தனர்.
பதம் 10.15.42 : பசுக்களினால் எழுப்பப்பட்ட தூசு படிந்திருக்கும் பகவான் கிருஷ்ணரது கருங்குழலை மயிலிறகும், காட்டு மலர்களும் அழகு செய்தன. அவரது பெருமைகளை அவரது துணைவர்கள் ஓதிக் கொண்டிருக்கும்பொழுது பகவான் கவர்ச்சிமிகு பார்வையுடன் எழில் புன்னகை சிந்தி தனது புல்லாங்குழலிலிருந்து இனிய நாதமழை பொழிவார். கோபிகாஸ்திரீகள் அவரைக் காண்பதற்குப் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவர். அவர்களது விழிகளோ அவரைக் காண்பதற்கு மிக்க ஆவலுடையனவாக இருக்கும்.
பதம் 10.15.43 : விருந்தாவனத்தைச் சேர்ந்த பெண்கள், தமது கருவண்டுக் கண்களினால் பகவான் முகுந்தனது எழில் முகத்தேனை அள்ளி உண்டனர். இதனால் ஒரு நாள் முழுவதும் அவரைப் பிரிந்ததினால் உண்டான விரக தாபத்தை அவர்கள் தீர்த்துக் கொண்டனர். தமது நாணம், புன்னகை, விநயம் நிறைந்த பார்வையினை விருந்தாவனப் பெண்கள் பகவான் மீது வைத்தனர். ஸ்ரீ கிருஷ்ணரும் இப்பார்வையினை உரிய மரியாதையாக ஏற்றுக்கொண்டு, ஆயர்பாடியுள் புகுந்தார்.
பதம் 10.15.44 : அன்னை யசோதாவும், அன்னை ரோகிணியும் தமது இரு புத்திரர்களிடத்தும் மிகுந்த வாஞ்சையுடையோர் ஆவர். அவர்கள் தமது புதல்வர்கள் விரும்புகின்ற எல்லாவற்றையும், உரிய காலங்களில் அவர்களுக்கு அளிப்பர்.
பதம் 10.15.45 : பகவான் இருவரையும் உடல் தேய்த்து நீராட்டியதினால் அவர்கள் காட்டில் நடந்து வந்த களைப்பு நீங்கப் பெற்றனர். பிறகு அவர்களுக்குப் பட்டு பீதாம்பரங்கள் அணிவிக்கப்பட்டும், கண்ணைக் கவரும் நறுமணமிக்க மலர்களினாலான மாலைகள் அணிவிக்கப்பட்டும் அழகு செய்யப்பட்டது.
பதம் 10.15.46 : அவர்தம் அன்னையர் இருவராலும் அளிக்கப்பட்ட அறுசுவை உணவு உண்டும், அவர்களால் பல்வேறு வகைகளில் கொஞ்சப்பட்டும், சகோதரர்கள் இருவரும் தமது நேர்த்திமிகு பஞ்சணைகளில் சுகமாகப் பள்ளி கொண்டனர் விரஜஸ என்னும் நகரில்.
பதம் 10.15.47 : ஓ, மன்னனே, முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர் இவ்வாறு விருந்தாவனத்தில் சுற்றித் திரிந்து தமது லீலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு முறை அவர் பலராமர் இன்றித் தமது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு யமுனை ஆற்றுக்குச் சென்றார்.
பதம் 10.15.48 : அப்போது சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மை தாளாது பசுக்களும் ஆயர்குலச் சிறுவர்களும் மிகவும் வருந்தினர். தாகத்தினால் பீடிக்கப்பட்ட அவர்கள் யமுனை ஆற்றின் நீரை ஆவலுடன் பருகினர். அந்தோ! அந்நீரில் கொடிய விஷம் கலந்திருந்தது.
பதங்கள் 10.15.49 – 10.15.50 : விஷம் கலந்த நீரைத் தொட்டவுடன் பசுக்களும், சிறுவர்களும் உணர்விழந்து உயிரற்று நதியின் கரை ஓரத்தில் வீழ்ந்தனர். அவர்கள் அனைவரும் இவ்வாறு வீழ்ந்ததைக் கண்ட யோகேஸ்வரர்களின் ஈஸ்வரரான பகவான் கிருஷ்ணர், அவர்கள் தன்னைத் தவிர வேறு எவரையும் கடவுளாக ஏற்றுக் கொண்டதில்லை என்பதால் அப்பக்தர்கள் மீது அளவற்ற கருணை உடையவரானார். அதனால் அவர் தமது பார்வை என்னும் அமிர்த மழையினை அவர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு மீண்டும் உயிரளித்தார்.
பதம் 10.15.51 : முழுஉணர்வும் திரும்பப் பெற்றவுடன் பசுக்களும், சிறுவர்களும் கரையினின்று எழுந்து நின்று ஒருவரையொருவர் மிகுந்த வியப்புடன் பார்த்துக் கொண்டனர்.
பதம் 10.15.52 : ஓ, மன்னனே! ஆயர்குலச் சிறுவர்கள், தாம் விஷம் கலந்த நீரைப் பருகி உண்மையில் இறந்து போன போதிலும் கோவிந்தனின் கருணைமிகு பார்வையினால் மீண்டும் உயிர்பெற்றுத் தமது வலிமையினால் எழுந்து விட்டோம் என்று கருதினர்.