அத்தியாயம் – 11
ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள்
பதம் 10.11.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, மருத மரங்கள் கீழே விழுந்தபொழுது, இடி விழுந்ததைப் போன்ற பயங்கர ஓசையைக் கேட்ட சுற்றுப்புறத்து இடையர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்தார்கள்.
பதம் 10.11.2 : அங்கு, மருத மரங்கள் தரைமேல் விழுந்து கிடப்பதைக் கண்ட அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில், மரங்கள் விழுந்து கிடப்பதை நேரடியாக அவர்களால் காண முடிந்தது என்றாலும், அதன் காரணத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பதம் 10.11.3 : உரலுடன் கயிற்றால் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், அதை இழுத்துச் சென்றார். ஆனால் அவரால் எப்படி மரங்களை இழுத்துத் தள்ளியிருக்க முடியும்? உண்மையில் அதைச் செய்தது யார்? இச்சம்பவத்திற்குக் காரணம் என்ன? ஆச்சரியத்திற்குரிய இவ்விஷயங்களை எல்லாம் கருத்திற்கொண்ட இடையர்கள் சந்தேகத்திற்கும், குழப்பத்திற்கும் உள்ளாயினர்.
பதம் 10.11.4 : பிறகு இடைச் சிறுவர்கள் எல்லோரும் கூறினர்: கிருஷ்ணன்தான் இதைச் செய்தான். அவன் இரு மரங்களுக்கு நடுவில் சென்றபொழுது உரல் குறுக்கே விழுந்தது. கிருஷ்ணன் உரலை இழுக்க, இரு மரங்களும் கீழே விழுந்தன. அதன்பிறகு, இரு அழகிய நபர்கள் இம்மரங்களிலிருந்து வெளியே வந்தனர். இதை எங்கள் சொந்தக் கண்களால் நாங்கள் கண்டோம்.
பதம் 10.11.5 : ஆழ்ந்த பெற்றோர் பாசத்தின் காரணத்தால், நந்தரை தலைமையாகக் கொண்ட இடையர்களால், இவ்வளவு அற்புதமாக கிருஷ்ணரால் இம்மரங்களை வேருடன் பிடுங்கியிருக்கக் கூடுமா என்பதை நம்பமுடியவில்லை. எனவே சிறுவர்களின் பேச்சில் அவர்களால் நம்பிக்கை வைக்க முடியவில்லை. எனினும், அவர்களில் சிலர் சந்தேகப்பட்டனர். “கிருஷ்ணர் நாராயணருக்குச் சமமானவர் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இதை இவன் செய்திருக்கக் கூடும்” என்று அவர்கள் எண்ணினர்.
பதம் 10.11.6 : தன் சொந்த மகன் கயிறுகளால் உரலுடன் கட்டப்பட்டு, அதை இழுத்துச் செல்வதைக் கண்ட நந்த மகாராஜன் புன்னகை செய்து, கிருஷ்ணரைக் கட்டிலிருந்து விடுவித்தார்.
பதம் 10.11.7 : “எனதன்பு கிருஷ்ணா, நீ ஆடினால் ஒரு மிட்டாயில் பாதியைக் கொடுப்பேன்” என்று கோபியர்கள் கூறுவார்கள். இப்படிக் கூறியும், கரங்களைத் தட்டியும், கோபியர்கள் அனைவரும் கிருஷ்ணரை வெவ்வேறு வழிகளில் உற்சாகப்படுத்தினர். அவர் பரம சக்தி படைத்த முழு கோபியர்களின் கைகளிலுள்ள ஒரு மரப் பொம்மைபோல், அவர்களது விருப்பத்திற்கேற்ப புன்னகை செய்து, நடனமாடுவார். சிலசமயம் அவர்களது உத்தரவுப்படி அவர் உரக்கப் பாடுவார். இவ்வாறாக கிருஷ்ணர் முழுமையாக கோபியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்.
பதம் 10.11.8 : சில சமயங்களில் தாய் யசோதையும், அவளது தோழிகளான கோபியர்களும் கிருஷ்ணரிடம். “இந்த பொருளைக் கொண்டுவா” அல்லது “அந்தப் பொருளைக் கொண்டு வா” என்று கூறுவார்கள். சிலசமயங்களில் ஒரு மரப் பலகையையோ, மரச் செருப்புகளையோ அல்லது ஒரு மரப் படியையோ எடுத்து வரும்படி அவருக்கு அவர்கள் உத்தரவிடுவார்கள். இவ்வாறு தாய்களால் உத்தரவிடப்பட்டதும் கிருஷ்ணர் அவற்றை எடுத்துவர முயல்வார். ஆனால் சிலசமயங்களில், தமக்குப் போதுமான பலம் இருப்பதாகக் காட்டி, தம் உறவினர்களை மகிழ்விப்பதற்காக, தமது உடலைத் தம் கரங்களால் அடிப்பார்.
பதம் 10.11.9 : பகவானின் செயல்களைப் புரிந்துகொள்ளக் கூடிய உலக முழுவதிலுமுள்ள தூய பக்தர்களுக்கு, பக்தர்களால் தம்மை எந்த அளவிற்குக் கட்டுப்படுத்த முடியும் என்பதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுத்தினார். இவ்வாறு தமது குழந்தைப் பருவத்துச் செயல்களால் அவர் விரஜவாசிகளின் ஆனந்தத்தை அதிகரித்தார்.
பதம் 10.11.10 : ஒரு சமயம் பழ வியாபாரி ஒருத்தி, “விரஜவாசிகளே! நீங்கள் பழங்கள் வாங்க விரும்பினால் இங்கு வாருங்கள்!” என்று கூவியழைத்தாள். இதைக் கேட்ட கிருஷ்ணர், தமக்குச் சில பழங்கள் தேவைப்பட்டது போல், உடனே கொஞ்சம் தானியங்களை எடுத்துக் கொண்டு பண்டமாற்று செய்து கொள்ளச் சென்றார்.
பதம் 10.11.11 : கிருஷ்ணர் பழக்காரியை நோக்கி விரைந்து செல்லும் பொழுது, அவர் பிடித்திருந்த தானியங்களில் பெரும் பகுதி கொட்டிவிட்டது. இருப்பினும், பழக்காரி கிருஷ்ணரின் கரங்களைப் பழங்களால் நிரப்பினாள். உடனே அவளது பழக்கூடை ஆபரணங்களாலும், தங்கத்தாலும் நிரம்பியது.
பதம் 10.11.12 : ஒருசமயம், மருத மரங்களை வீழ்த்திய சம்பவத்திற்குப் பிறகு, ஆற்றங்கரைக்குச் சென்று, மற்ற சிறுவர்களுடன் ஆழ்ந்த கவனத்துடன் விளையாடிக் கொணடிருந்த பலராமரையும், கிருஷ்ணரையும் அழைத்து வருவதற்காக ரோகிணி தேவி அங்கு சென்றாள்.
பதம் 10.11.13 : மற்ற சிறுவர்களுடன் விளையாடுவதில் அதிக நாட்டம் கொண்டிருந்ததால், ரோகிணி அழைத்தபொழுது கிருஷ்ணரும், பலராமரும் திரும்பிச் செல்லவில்லை, எனவே, அவர்களிடம் தாய் யசோதை அதிக பாசம் கொண்டிருந்ததால், அவர்களை அழைத்துவர ரோகிணி தாய் யசோதையையே அனுப்பினாள்.
பதம் 10.11.14 : கிருஷ்ணரும், பலராமரும் விளையாட்டில் ஈடுபாடு கொண்டிருந்ததால், அதிக நேரமாகியும் மற்ற சிறுவர்களுடன் அவர்கள் விளையாடிக் கொண்டே இருந்தனர். எனவே தாய் யசோதை அவர்களை நண்பகல் உணவுக்கு வரும்படி அழைத்தாள். கிருஷ்ண, பலராமரிடமிருந்த அவளது ஆழ்ந்த அன்பினாலும், பாசத்தாலும் அவளது முலைகளிலிருந்து பால் சுரந்தது.
பதம் 10.11.15 : என் மகனே, தாமரைக் கண்ணா, கிருஷ்ணா, இங்கு வந்து என் முலைப்பாலைப் பருகு. என் அன்புச் செல்வமே, நீண்ட நேரம் நீ விளையாடியதால், தாகத்தாலும், சோர்வாலும் நீ மிகவும் களைப்படைந்திருப்பாய், தொடர்ந்து விளையாடுவதற்கு அவசியமில்லை.
பதம் 10.11.16 : எனதன்பு பலதேவா, நம் குலப் பெருமையே, தயவு செய்து உன் தம்பி கிருஷ்ணனுடன் உடனே வா. காலையில் நீங்களிருவரும் சாப்பிட்டீர்கள். இப்பொழுது மேலும் எதையேனும் நீங்கள் சாப்பிட வேண்டும்.
பதம் 10.11.17 : விரஜ மன்னரான நந்த மகாராஜன் இப்பொழுது உணவருந்தக் காத்துக் கொண்டிருக்கிறார். எனதன்பு மகனே பலராமா, உங்களுக்காக அவர் காத்திருக்கிறார். ஆகவே, எங்களை மகிழ்விக்க வாருங்கள். உன்னுடனும் கிருஷ்ணனுடனும் விளையாடிக் கொண்டிருக்கும் எல்லாச் சிறுவர்களும் இப்பொழுது அவரவர் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.
பதம் 10.11.18 : தாய் யசோதை மேலும் கிருஷ்ணரிடம் கூறினாள்: எனதன்புப் புதல்வனே, நாள் முழுவதும் விளையாடியதால், உன்னுடைய உடல் மண்ணாலும், புழுதியாலும் மூடப்பட்டுள்ளது. ஆகவே திரும்பி வந்து, குளித்து, உன்னைச் சுத்தம் செய்துகொள். இன்று உன்னுடைய மங்களகரமான ஜன்ம நட்சத்திர நாளாகும். எனவே, தூய்மை செய்து கொண்டு, பிராமணர்களுக்குப் பசுக்களைத் தானம் கொடு.
பதம் 10.11.19 : உன் வயதுள்ள உன் நண்பர்கள் எல்லோரும் எப்படி அவர்களுடைய தாய்களால் குளிப்பாட்டி, அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பார். நீயும் குளித்துவிட்டு, உன் நண்பகல் உணவை முடித்துக்கொண்டு, ஆபரணங்களால் உன்னை அலங்கரித்துக் கொண்டபின், உன் நண்பர்களுடன் மீண்டும் விளையாடலாம்.
பதம் 10.11.20 : அன்பிற்குரிய பரீட்சித்து மகாராஜனே! ஆழ்ந்த அன்பினாலும், பாசத்தாலும் கிருஷ்ணரின் தாயான யசோதை, சகல ஐசுவரியங்களுக்கும் சிகரமாக விளங்கிய கிருஷ்ணரைத் தன் சொந்த மகனாகக் கருதினாள். இவ்வாறு கிருஷ்ண, பலராமரின் கைகளைப் பற்றியபடி அவர்களை அவள் வீட்டிற்கு அழைத்து வந்தாள். அங்கு அவர்களை நன்கு குளிப்பாட்டி, ஆடை அணிவித்து, பின் போஜனம் செய்வித்துத் தன் கடமைகளை நிறைவேற்றினாள்.
பதம் 10.11.21 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பிறகு ஒரு சமயம், பிருஹத்வனத்தில் பெருந் தொல்லைகளைக் கண்ட நந்தரின் தலைமையிலான வயது முதிர்ந்த இடையர்கள் அனைவரும் ஒன்றுகூடி, விரஜையில் தொடர்ந்து நிகழும் தொல்லைகளைத் தடுக்க என்ன செய்வதென்று ஆலோசிக்கத் துவங்கினார்.
பதம் 10.11.22 : கோகுல வாசிகளின் இக்கூட்டத்தில், வயதிலும், அறிவிலும் மிகவும் முதிர்ந்தவரும், காலம் இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப மிகவும் அனுபவமுள்ளவருமான உபானந்தர் என்ற ஓரிடையர், கிருஷ்ண பலராமரின் நன்மைக்காக பின்வரும் யோசனையைக் கூறினார்.
பதம் 10.11.23 : அவர் கூறினார்: என்தன்புத் தோழர்களான இடையர்களே, இந்த கோகுலத்தின் நன்மைக்காக நாம் இந்த இடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டும். ஏனெனில், கிருஷ்ண பலராமரைக் கொல்லும் நோக்கத்திற்காக, எப்பொழுதும் இங்கு பல தொல்லைகள் நிகழ்ந்து வருகின்றன.
பதம் 10.11.24 : பூதனை அரக்கி குழந்தை கிருஷ்ணனைக் கொன்றுவிட உறுதி கொண்டிருந்தாள். ஆனால் பரமபுருஷரின் கருணையால், அவளது பிடியிலிருந்து குழந்தை எப்படியோ காப்பாற்றப்பட்டான். பிறகு மீண்டும் பகவானின் கருணையால், குழந்தையின் மேல் விழ இருந்த தள்ளுவண்டி, சிறிது தள்ளி விழுந்தது.
பதம் 10.11.25 : பிறகு மீண்டும் ஒரு சுழற்காற்று வடிவில் வந்த திருணாவர்த அரக்கன், கிருஷ்ணனைக் கொல்ல எண்ணி, அவனை ஆகாயத்தில் தூக்கிச் சென்றான். ஆனால் அந்த அரக்கன் ஒரு பாறையின் மேல் விழுந்தான். அச்சம்பவத்தில்கூட, பகவான் விஷ்ணு அல்லது அவரது சகாக்களின் கருணையால் குழந்தை காப்பாற்றப்பட்டான்.
பதம் 10.11.26 : மற்றொரு நாள்கூட, இரு மரங்கள் விழுந்ததில் கிருஷ்ணனோ, அவனது நண்பர்களோ மரணமடையவில்லை. இக்குழந்தைகள் அம் மரங்களுக்கு நடுவிலும், அருகிலும் இருந்த போதும் காப்பாற்றப்பட்டனர். இதையும் பரமபுருஷரின் கருணையாகவே கருத வேண்டும்.
பதம் 10.11.27 : இச்சம்பவங்கள் அனைத்தும் நமக்குத் தெரியாத யாரோ ஓரசுரனால் தான் செய்யப்படுகின்றன. அவன் இங்கு வந்து மற்றொரு தொல்லையை விளைவிக்கும் முன்பாக, நாம் இங்கிருந்து சென்று விடுவோம். இத் தொல்லைகள் ஓயும்வரை, சிறுவர்களுடன் வேறெங்காவது சென்றுவிடுவது நம் கடமையாகும்.
பதம் 10.11.28 : நந்தேசுவரத்திற்கும், மஹாவனத்திற்கும் இடையில் பிருந்தாவனம் என்ற பெயருடைய ஓரிடம் உள்ளது. அந்த இடம் பசுக்களுக்கும், மற்ற மிருகங்களுக்கும் தேவையான வளம்மிக்க புல், தாவரங்கள் மற்றும் செடி கொடிகள் ஆகியவற்றுடன் செழிப்புற்று விளங்குவதால், அது மிகவும் பொருத்தமான ஓரிடமாகும். அதில் நல்ல தோட்டங்களும், உயர்ந்த மலைகளும் உள்ளன. மேலும் அது கோபர்களுக்கும், கோபியர்களுக்கும். நம் மிருகங்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதற்குரிய எல்லா வசதிகளையும் கொண்டுள்ளது.
பதம் 10.11.29 : எனவே, உடனடியாக இன்றே நாம் செல்வோம் இனிமேலும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. என் திட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், மாட்டு வண்டிகளை எல்லாம் தயார்செய்து, பசுக்கள் நம்முன் செல்ல, நாம் அங்கு செல்வோம்.
பதம் 10.11.30 : உபானந்தரின் இந்த அறிவுரையைக் கேட்ட இடையர்கள் அனைவரும் “மிக்க நன்று, மிக்க நன்று ” என்று கூறி ஏகமனதுடன் சம்மதித்தனர். இவ்விதமாக வீட்டுச் சாமான்களை ஒழுங்குபடுத்திய அவர்கள் தங்கள் துணிமணிகளையும், மற்ற பொருட்களையும் வண்டிகளில் ஏற்றிக்கொண்டு, உடனே பிருந்தாவனத்தை நோக்கிப் புறப்பட்டனர்.
பதங்கள் 10.11.31 – 10.11.32 : முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பிற பொருட்கள் ஆகிய அனைத்தையும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டபின், எல்லாப் பசுக்களையும் வண்டிகளுக்கு முன் நிறுத்திய இடையர்கள், தங்கள் வில்லம்புகளை மிகவும் கவனமாகக் கையிலெடுத்துக்கொண்டு ஊது கொம்புகளை முழங்கினர். பரீட்சித்து மகாராஜனே, இவ்விதமாக சுற்றிலும் கொம்புகள் முழங்க, தங்கள் புரோகிதர்கள் புடைசூழ இடையர்கள் தங்கள் பயணத்தைத் துவங்கினர்.
பதம் 10.11.33 : மாட்டு வண்டிகளில் ஏறிச்சென்ற இடைப் பெண்கள் மிகச்சிறந்த ஆடை அணிகலன்களால் மிகவும் நன்றாக உடுத்திக் கொணடிருந்தனர். அவர்களது உடல்கள். குறிப்பாக அவர்களது மார்பகங்கள் புத்தம் புதிய குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. பிராயணம் துவங்கிய போது அவர்கள் கிருஷ்ணரின் லீலைகளை மிகவும் ஆனந்தத்துடன் பாடத் துவங்கினர்.
பதம் 10.11.34 : இவ்வாறு கிருஷ்ண, பலராமரின் லீலைகளைப் பற்றிப் பெரு மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த தாய் யசோதையும், ரோகிணி தேவியும், அவர்களிடமிருந்து ஒரு கணமும் பிரிந்திருக்க விரும்பாமல் அவர்களுடன் ஒரே மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டனர். இச் சூழ்நிலையில் அவர்களனைவரும் மிகவும் அழகாகச் காணப்பட்டனர்.
பதம் 10.11.35 : இவ்விதமாக எப்பொழுதும், எல்லாப் பருவ காலங்களிலும் மகிழ்ச்சியுடன் வாழக்கடிய பிருந்தாவனத்தினுள் அவர்கள் பிரவேசித்தனர். அவர்கள் அரைச் சந்திரனின் வடிவில் தங்கள் மாட்டு வண்டிகளை நிறுத்தி, தற்காலிகமான ஒரு வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
பதம் 10.11.36 : பரீட்சித்து மகாராஜனே, பிருந்தாவனம், கோவர்தனம் மற்றும் யமுனை நதிக்கரைகள் ஆகியவற்றைக் கண்டு கிருஷ்ணரும், பலராமரும். பேரானந்தம் அடைந்தனர்.
பதம் 10.11.37 : இவ்விதமாக, சிறுவர்கள்போல் செயற்பட்டு, மழலை மொழியில் பேசிய கிருஷ்ணரும், பலராமரும், விரஜவாசிகள் அனைவருக்கும் உன்னத ஆனந்தத்தை அளித்தனர். காலப்போக்கில், கன்றுகளைப் பேணிக்காக்கும் வயதை அவர்கள் அடைந்தனர்.
பதம் 10.11.38 : கிருஷ்ணரும், பலராமரும் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் மற்ற இடைச் சிறுவர்களுடன் பலவித விளையாட்டுப் பொருட்களை வைத்து. விளையாடிக்கொண்டே இளம்கன்றுகளை மேய்க்கத்துவங்கினர்
பதங்கள் 10.11.39 – 10.11.40 : சிலசமயங்களில் கிருஷ்ணரும், பலராமரும் தங்கள் புல்லாங்குழல்களை வாசிப்பார்கள். சிலசமயங்களில் மரங்களிலிருந்து பழங்களைப் பறிப்பதற்காக அவர்கள் கயிற்றுடன் கற்களைக் கட்டி எறிவார்கள். சில சமயங்களில் கற்களை மட்டும் அவர்கள் எறிவார்கள். சிலசமயங்களில் தங்கள் சலங்கைகள் ஒலிக்க, வில்வம், நெல்லி போன்ற பழங்களுடன் அவர்கள் காற்பந்து விளையாடுவார்கள். சிலசமயங்களில் அவர்கள் தங்கள் மேல்போர்வைகளைப் போர்த்திக்கொண்டு, பசுக்களையும், எருதுகளையும் போல் பாவனை செய்தும், உரக்க கர்ஜித்தும், ஒருவரோடொருவர் சண்டையிடுவார்கள். வேறு சிலசமயங்களில் அவர்கள் மிருகங்களைப் போல் ஓசைகளை எழுப்புவார்கள். இவ்விதமாக சாதாரண இரு மனிதக் குழந்தைகள் போல் அவர்கள் விளையாடி மகிழ்வார்கள்.
பதம் 10.11.41 : ஒருநாள் பலராமரும், கிருஷ்ணரும் யமுனை நதிக்கரையில், தங்கள் விளையாட்டு நண்பர்களுடன் கன்றுகளை மேய்த்துக்கொண்டு இருக்கும் பொழுது அவ்விருவரையும் கொல்லும் விருப்பத்துடன் மற்றொரு அசுரன் அங்கு வந்து சேர்ந்தான்.
பதம் 10.11.42 : அந்த அசுரன் ஒரு கன்றின் வடிவை ஏற்று, மற்ற கன்றுகளின் கூட்டத்தில் புகுந்தான். அதைக் கண்ட பரமபுருஷர், “இதோ மற்றொரு அசுரன்” என்று பலதேவரிடம் அவனைச் சுட்டிக் காட்டினார். பிறகு அவர் அசுரனின் நோக்கங்களை அறியாதவர்போல், மிகவும் மெதுவாக அவனை நெருங்கினார்.
பதம் 10.11.43 : அதன்பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் அசுரனின் பின்னங்கால்களையும் வாலையும் பற்றி, அவன் உயிரை விடும்வரை அவனது முழு உடலையும் மிகவும் வேகமாகச் சுழற்றி, ஒரு விளா மரத்தின் மேல் எறிந்தார். பிறகு அந்த மரத்துடன் கீழே விழுந்த அசுரனின் உடல் பிரும்மாண்டமான ஒரு ரூபத்தை ஏற்றது.
பதம் 10.11.44 : அசுரனின் உயிரற்ற உடலைக் கண்ட இடைச்சிறுவர்கள் அனைவரும், “மிக நன்று, மிக நன்று! சபாஷ் கிருஷ்ண! மிக்க நன்றி” என்று கிருஷ்ணரைக் கொண்டாடினார்கள், விண்ணுலக தேவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்து, பரமபுருஷரின் மேல் மலர்மாரி பொழிந்தனர்.
பதம் 10.11.45 : அந்த அசுரன் கொல்லப்பட்டபின், கிருஷ்ணரும், பலராமரும் காலையில் தங்கள் சிற்றுண்டியை முடித்துக் கொண்டனர். பிறகு கன்றுகளைத் தொடர்ந்து கவனித்தபடி, அவர்கள் இங்குமங்கும் சஞ்சரித்தனர். முழு சிருஷ்டியையும் காக்கும் பரம புருஷர்களான கிருஷ்ணரும், பலராமரும் இடைச் சிறுவர்கள்போல், இப்பொழுது கன்றுகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றனர்.
பதம் 10.11.46 : ஒருநாள், கிருஷ்ணரும் பலராமரும் உட்பட எல்லாச் சிறுவர்களும் அவரவர் கன்றுக் கூட்டங்களை அழைத்துக் கொண்டு ஒரு நீர் நிலைக்குச் சென்று தங்கள் கன்றுகளை நீர் பருகச் செய்து தாங்களும் அதே நீரைப் பருகினர்.
பதம் 10.11.47 : அந்த நீர்த் தேக்கத்திற்கு அருகில், மின்னலால் தகர்க்கப்பட்ட ஒரு மலைச் சிகரத்தை ஒத்த பிரம்மாண்டமான ஒருடல் இருப்பதைச் சிறுவர்கள் கண்டனர். இவ்வளவு பெரிய ஜீவராசியைக் காணவே அவர்களுக்குப் பயமாக இருந்தது.
பதம் 10.11.48 : மிகப்பெரிய உடலையுடைய அந்த அசுரன் பகாசுரனாவான். அவன் மிகவும் கூரிய அலகுடைய ஒரு கொக்கின் உருவத்தை ஏற்றிருந்தான். அங்கு வந்த அவன் உடனே கிருஷ்ணரை விழுங்கிவிட்டான்.
பதம் 10.11.49 : கிருஷ்ணர் அப்பெரிய கொக்கினால் விழுங்கப்பட்டதைக் கண்ட பலராமரும், மற்ற சிறுவர்களும் கிட்டத்தட்ட உயிரற்ற புலன்களைப் போல், உணர்விழந்தவர்கள் ஆயினர்.
பதம் 10.11.50 : பிரம்மதேவரின் தந்தையாக இருந்தும், ஓர் இடைச் சிறுவன் போல் செயற்பட்ட கிருஷ்ணர், அசுரனின் தொண்டைக் குழியில் நெருப்பு போல் எரிந்ததால், பகாசுரன் உடனே அவரைத் தன் தொண்டையிலிருந்து கக்கி விட்டான். விழுங்கப்பட்ட கிருஷ்ணர் தீங்கின்றி வெளிவந்ததைக் கண்ட அசுரன், உடனே கிருஷ்ணரைத் தன் கூரிய அலகால் மீண்டும் தாக்கினான்.
பதம் 10.11.51 : கம்சனின் நண்பனான பகாசுரன் கிருஷ்ணரைத் தாக்க முயன்றான். அதைக் கண்ட வைஷ்ணவர்களின் பிரபுவான கிருஷ்ணர். அந்த அசுரனுடைய அலகின் இரு பாதிகளையும் தம் கைகளால் பற்றினார். பிறகு இடைச்சிறுவர்கள் முன்பாக, ஒரு குழந்தை ஒரு வீரண புல்லை இரண்டாகக் கிழிப்பதுபோல், அசுரனின் அலகை இரு கூறாக அவர் மிகச்சுலபமாகக் கிழித்தார். அசுரனை இவ்வாறு கொன்று, கிருஷ்ணர் சுவர்க்க வாசிகளை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தினார்.
பதம் 10.11.52 : அச்சமயம் உயர் கிரக அமைப்பைச் சேர்ந்த சுவர்க்க வாசிகள், நந்தன-கானகத்தில் பயிராகும் மல்லிகை மலர்களை, பகாசுரனின் பகைவரான கிருஷ்ணரின் மேல் பொழிந்தனர். மேலும் சுவர்க்கலோக முரசுகளைக் கொட்டியும், சங்குகளை ஊதியும், பிரார்த்தனைகளைச் செய்து கிருஷ்ணரை வாழ்த்தினர். இதைக் கண்ட இடைச்சிறுவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
பதம் 10.11.53 : உணர்வும், உயிரும் திரும்பும்பொழுது புலன்கள் அமைதியடைகின்றன. அதுபோலவே, கிருஷ்ணர் இந்த அபாயத்திலிருந்து விடுபட்டபொழுது, பலராமர் உட்பட எல்லாச் சிறுவர்களும், தங்கள் உயிரைக் திரும்பப் பெற்றது போல் உணர்ந்தனர். நல்ல உணர்வுடன் கிருஷ்ணரைத் தழுவிக்கொண்ட அவர்கள், தங்களது சொந்தக் கன்றுகளைத்திரட்டி, விரஜபூமிக்குத் திரும்பியதும், நடந்த சம்பவத்தைப் பற்றி உரக்க அறிவித்தனர்.
பதம் 10.11.54 : காட்டில் பகாசுரன் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டு இடையர்களும் இடைப்பெண்களும், மிகவும் ஆச்சரியமடைந்தனர். கிருஷ்ணரையும் பார்த்து, கதையையும் கேட்ட அவர்கள், கிருஷ்ணரும் மற்ற சிறுவர்களும் மரணத்தின் வாயிலிருந்து திரும்பி வந்திருப்பதாக எண்ணி, கிருஷ்ணரை மிகவும் ஆவலுடன் வரவேற்றனர். இவ்வாறு கிருஷ்ணரும், மற்ற சிறுவர்களும் இப்பொழுது பாதுகாப்பாக இருப்பதைக் கண்டதும் அவர்கள் மேலுள்ள தங்கள் கண்களைத் திருப்பவிரும்பாமல், மௌனக்கண்களுடன் அச்சிறுவர்களையே அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர்
பதம் 10.11.55 : நந்த மகாராஜன் முதலான இடையர்கள் பின்வருமாறு யோசிக்கத் துவங்கினர்: இச்சிறுவன் கிருஷ்ணன் மரணமடைவதற்குப் பல சமயங்களில் பல்வேறு காரணங்கள் இருந்தன. இருப்பினும், அவன் கொல்லப்படுவதற்குப் பதிலாக, பரமபுருஷரின் கருணையால், அச்சத்திற்குக் காரணமான தீய சக்திகள் கொல்லப்பட்டது மிகவும் ஆச்சரியம்தான்.
பதம் 10.11.56 : மரணத்திற்குக் காரணங்களாக இருந்த அசுரர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்றபோதிலும், அவர்களால் இச்சிறுவனான கிருஷ்ணனைக் கொல்ல முடியவில்லை. மாறாக, குற்றமற்ற சிறுவர்களை அவர்கள் கொல்ல வந்ததால், நெருப்பைத் தாக்கவரும் விட்டில் பூச்சிகளைப் போல் சிறுவர்களை நெருங்கியதும் தானாகவே அவர்கள் கொல்லப்பட்டனர்.
பதம் 10.11.57 : பிரம்மத்தைப் பூரணமாக அறிந்துள்ளவர்களின் வார்த்தைகள் பொய்ப்பதே இல்லை. கர்கமுனி கூறியதையெல்லாம் இப்பொழுது நாம் அனுபவத்தில் காண்பது உண்மையில் மிகவும் ஆச்சரியம்தான்.
பதம் 10.11.58 : இவ்வாறு, நந்த மகாராஜன் முதலான இடையர்கள் அனைவரும் கிருஷ்ண, பலராமரின் லீலைகளைப் பற்றிய வர்ணனைகளை உன்னத ஆனந்தத்தை அனுபவித்ததுடன், பெளதிகத் துன்பங்களை அவர்களால் காணவும் இயலாதிருந்தது.
பதம் 10.11.59 : இவ்வாறு கிருஷ்ணரும், பலராமரும், ஓடி ஒளிந்து விளையாடுதல் போன்ற குழந்தைத்தனமான செயல்களில் ஈடுபட்டும், சமுத்திரத்தில் கரை கட்டியும், குரங்குகளைப் போல் இங்குமங்கும் தாவியும், தங்களது குழந்தைப் பருவத்தை விரஜபூமியில் கழித்தனர்.