அத்தியாயம் – 10
மருத மரங்களின் சாப விமோசனம்
பதம் 10.10.1 : பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: சக்திவாய்ந்த மாமுனிவரே! நளகூவேரனும், மணிகிரீவனும் நாரத முனிவரால் சபிக்கப்பட்டதன் காரணமென்ன? மாமுனிவரான நாரதரே கோப்படும் வகையில் அவர்கள் செய்த வெறுக்கத்தக்க செயல் என்ன? தயவுகூர்ந்து இதை எனக்கு விளக்கியருளுங்கள்.
பதங்கள் 10.10.2 – 10.10.3 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: குபேரனின் இரு மகன்கள் சிவபெருமானின் சகவாசத்திற்கு உயர்த்தப்பட்டு. மந்தரகினி நதிக்கரையிலுள்ள கைலாச மலையுடன் சேர்ந்த ஒரு தோட்டத்தில் சஞ்சரிக்க அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் மிகவும் கர்வம் அடைந்தனர். இந்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அவர்கள், வாருணி என்ற ஒருவகை மதுபானத்தை அருந்துவது வழக்கம். அவர்களைப் பின் தொடர்ந்து பாடிய பெண்களுடன் கண்கள் எப்பொழுதும் போதையில் சுழன்றபடி, அப்பூந்தோட்டத்தில் அவர்கள் சஞ்சரித்து வருந்தினர்.
பதம் 10.10.4 : இரு ஆண் யானைகள், பெண் யானைகளுடன் நீரில் இன்பம் அனுபவிப்பதுபோல், குபேரரின் இரு மகன்களும் தாமரை மலர்கள் அடர்ந்த மந்தரகினி நதிக்குள், இளம் மங்கைகளுடன் இன்பம் அனுபவித்து வந்தனர்.
பதம் 10.10.5 : பரீட்சித்து மகாராஜனே, இவ்விரு தேவ குமாரன்களின் ஏதோ ஒரு நல்ல அதிர்ஷ்டத்தினால், மாமுனிவரான தேவரிஷி நாரதர் தற்செயலாக ஒருமுறை அங்கு தோன்றினார். அவர்கள் கண்கள் சுழல, மது மயக்கத்தில் இருந்ததைக் கண்டு அவர்களுடைய நிலையை அவர் புரிந்து கொண்டார்.
பதம் 10.10.6 : நிர்வாணமாக இருந்த தேவ மங்கைகள் நாரதரைக் கண்டதும் மிகவும் வெட்கப்பட்டு, தங்களை அவர் சபித்து விடுவாரோ என்றஞ்சி, உடைகளால் தங்கள் தேகங்களை அவர்கள் மறைத்துக் கொண்டனர். ஆனால் குபேரனின் இரு மகன்களும் நாரதரைப் பற்றிக் கவலைப் படாமல் நிர்வாணமாகவே இருந்தனர்.
பதம் 10.10.7 : இரு தேவ குமாரர்களும் நிர்வாணமாக இருப்பதையும், செல்வத்தாலும், பொய்க் கெளரவத்தாலும் போதை தலைக்கேறி இருப்பதையும் கண்ட தேவரிஷி நாரதர், அவர்களுக்கு விசேஷ கருணையைக் காட்டுவதற்காக ஒரு விசேஷ சாபத்தைக் கொடுக்க விரும்பி, பின்வருமாறு பேசலானார்.
பதம் 10.10.8 : நாரத முனி கூறினார்: அழகிய தேக அம்சங்களைப் பெற்றிருத்தல், செல்வந்தர் குடும்பத்தில் பிறத்தல், மற்றும் கல்வி கற்றவராக இருத்தல் முதலான எல்லா பௌதிக சுகபோகங்களையும்விட செல்வ வளத்தின் கவர்ச்சியானது ஒருவனது புத்தியை மிகவும் பேதலிக்கச் செய்யக் கூடியதாகும். கல்வியறிவு இல்லாதவன் செல்வத்தினால் பொய்யாகப் பெருமிதம் கொள்ளும் பொழுது, அவன் தன் செல்வத்தை மது, மாது மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை அனுபவிப்பதில் ஈடுபடுத்துகிறான்.
பதம் 10.10.9 : தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்த முடியாத அயோக்கியர்கள், தங்களுடைய செல்வத்தில், அதாவது செல்வந்தர் குடும்பங்களில் தாங்கள் பெற்றுள்ள பிறப்பில் பொய்யாக பெருமை கொண்டுள்ளனர், மிகக் கொடூரமானவர்களான இவர்கள், எவற்றை ஒரு போதும் முதுமையடையாதென்றும், மரணமடையாதென்றும் நினைக்கிறார்களோ, அந்த அழியக்கூடிய உடல்களைப் பராமரிப்பதற்காக, நிராதரவான மிருகங்களை இரக்கமின்றிக் கொலை செய்கின்றனர். சிலசமயங்களில் வெறும் பொழுது போக்கிற்காக மிருகங்களை அவர்கள் கொல்கின்றனர்.
பதம் 10.10.10 : வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவன் தன்னை ஒரு பெரிய மனிதன் என்றோ, மந்திரி என்றோ, ஜனாதிபதி என்றோ அல்லது தேவனென்றோ எண்ணி, தன்னுடலில் செருக்குக் கொண்டவனாக இருக்கக் கூடும். ஆனால் ஒருவன் என்னவாக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இவ்வுடல் புழுக்களாகவோ, மலமாகவோ அல்லது சாம்பலாகவோ மாறிவிடும். இவ்வுடலின் தற்காலிகமான விருப்பங்களைத் திருப்திப்படுத்துவதற்காக நிராதரவான மிருகங்களைக் கொல்பவன், தன்னுடைய அடுத்த பிறவியில் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை அறியவில்லை. இத்தகைய ஒரு பாவி நரகத்திற்குச் சென்று தன் வினைப்பயன்களை அனுபவிப்பான்.
பதம் 10.10.11 : உயிருடனிருக்கும் பொழுது, இவ்வுடல் அதன் எஜமானுக்குச் சொந்தமா, தனக்கே சொந்தமா, தந்தைக்குச் சொந்தமா, தாய்க்குச் சொந்தமா, அல்லது தாயின் தந்தைக்குச் சொந்தமா? பலாத்காரமாக இவ்வுடலை எடுத்துச் செல்பவனுக்கு இது சொந்தமா? அல்லது இதை அடிமையாக விலைக்கு வாங்குபவனுக்குச் சொந்தமா? அல்லது இதைத் தீயில் தகனம் செய்யும் மகன்களுக்குச் சொந்தமா? அல்லது தகனம் செய்யப்படாவிட்டால், இதைத் தின்னும் நாய்களுக்கு இது சொந்தமா? இவ்வாறு பலவிதமாக உரிமை பாராட்டுபவர்களுக்கு இடையில், நியாயமான உரிமையாளன் யார்? இதை ஆராய்ந்து அறிவதற்குப் பதிலாக, பாவச் செயல்களால் உடலைப் பராமரிப்பது நல்லதல்ல.
பதம் 10.10.12 : இவ்வுடல் தோன்றாத இயற்கையால் உற்பத்தி செய்யப்பட்டு, பிறகு மீண்டும் அழிக்கப்பட்டு, கடைசியில் இயற்கையின் மூலப் பொருட்களுடன் கலந்துவிடுகிறது. எனவே, இது அனைவருக்கும் உரிய பொதுச் சொத்தாகும். இந்நிலையில் இவ்வுடலைத் தன்னுடையதென்று உரிமை பாராட்டி, அதைப் பராமரிக்கும் வேளையில், தன் விருப்பங்களைத் திருப்திப்படுத்துவதற்காக மிருகவதை போன்ற இத்தகைய பாவச் செயல்களைச் செய்பவன் ஒரு கயவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? ஒருவன் ஒரு கயவனாக இருந்தாலொழிய, அவனால் இத்தகைய பாவங்களைச் செய்ய முடியாது.
பதம் 10.10.13 : செல்வச் செருக்குடைய நாஸ்திக மூடர்களும், அயோக்கியர்களும், விஷயங்களை உள்ளபடி காணத் தவறிவிடுகின்றனர். எனவே, அவர்களை வறுமை நிலைக்குத் திருப்பி அனுப்புவதே, விஷயங்களை உள்ளபடி காண்பதற்கு, அவர்களது கண்களுக்கு அளிக்கப்படும் தகுந்த மருந்தாகும். ஏழ்மையில் உழலும் ஒருவனால் தான் ஏழ்மை எவ்வளவு துன்பகரமானது என்பதை உணர முடியும். எனவே தன்னைப்போல் மற்றவர்களும் துன்பப்படுவதை அவன் விரும்பமாட்டான்.
பதம் 10.10.14 : யாருடைய உடல் ஊசியால் குத்தப்பட்டதோ, அவனால் ஊசிகளால் குத்தப்படும் மற்றவர்களுடைய முகங்களைப் பார்த்தே அவர்களது வலியைப் புரிந்துகொள்ள முடியும். இந்த வலி அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை உணர்ந்துள்ள அவன், மற்றவர்கள் இப்படித் துன்புறுவதைக் காண விரும்புவதில்லை. ஆனால் இதுவரை ஊசிகளால் குத்தப்படாத ஒருவனால் இந்த வலியைப் புரிந்துகொள்ள முடியாது.
பதம் 10.10.15 : ஏழ்மையில் உள்ள ஒருவன், எதையேனும் அடைவதற்குத் தேவையான செல்வத்தைப் பெற்றிராத காரணத்தால், தானாகவே தவ, விரதங்களை அவன் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறாக அவனது பொய்க் கௌரவம் நசுக்கப்படுகிறது. உணவு, வசிப்பிடம், உடை ஆகியவை எப்பொழுதும் தேவையாக இருப்பதால், இறையருளால் அடையப்படுவதைக் கொண்டு அவன் திருப்தியடைய வேண்டும். இத்தகைய கட்டாயமான தவங்களை மேற்கொள்வது அவனுக்கு நல்லதுதான். ஏனெனில், இது அவனைத் தூய்மைப்படுத்தி, பொய் அகங்காரத்திலிருந்து முழுமையாக அவனை விடுவிக்கிறது.
பதம் 10.10.16 : போதுமான உணவைப் பெற பேரவா கொள்ளும் தரித்திரன் ஒருவன், எப்பொழுதும் பசியுடன் இருப்பதால், படிப்படியாக பலவீனமடைகிறான். உடலில் அதிகப்படியான பலம் இல்லாததால் அவனது புலன்கள் தானாகவே சாந்தமடைகின்றன. எனவே ஏழ்மையில் வாடுபவனால் தீங்கிழைக்கும் பொறாமைச் செயல்களைச் செய்ய முடியாது. அதாவது, இத்தகைய ஒரு மனிதன், சாதுக்களால் தன்னிச்சையாக ஏற்றுக் கொள்ளப்படும் தவ, விரதங்களின் பலன்களைத் தானாகவே அடைகிறான்.
பதம் 10.10.17 : சாதுக்கள், ஏழைகளுடன் தடையின்றி உறவாடலாம். ஆனால் பணக்காரர்களுடன் அப்படிச் செய்யக்கூடாது. ஏழ்மையானவன், சாதுக்களுடன் சகவாசம் கொள்வதன் மூலம், மிக விரைவில் பௌதிக ஆசைகளில் விருப்பற்றவனாகிறான். அவனது இதயத்திலுள்ள அழுக்குகளும் சுத்தப்படுத்தப்படுகின்றன.
பதம் 10.10.18 : சாதுக்கள் இருபத்துநான்கு மணி நேரமும் கிருஷ்ணரை நினைக்கின்றனர். அவர்களுக்கு வேறெந்த விருப்பமும் இல்லை. மக்கள் ஏன் இத்தகைய உயர்ந்த ஆன்மீகிகளை அலட்சியப்படுத்தி, செல்வச் செருக்குடைய பக்தரல்லாதவர்களின் புகலிடத்தை ஏற்று, பௌதிகவாதிகளுடன் சகவாசம் கொள்ள முயல்கின்றனர்?
பதம் 10.10.19 : எனவே, வாருணீ, அல்லது மாத்வீ எனப்படும் மதுவை அருந்தியதால், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்த இயலாத இவ்விருவரும், சுவர்க்கலோக செல்வச் செருக்கினால் குருடாக்கப்பட்டு, பெண்களிடம் பற்றுக் கொண்டவர்களானதால், பொய்க் கெளரவத்திலிருந்து அவர்களை நான் விடுவிக்கப் போகிறேன்.
பதங்கள் 10.10.20 – 10.10.22 : நளகூவரன் மற்றும் மணிகிரீவன் ஆகிய இவ்விரு வாலிபர்களும், அதிர்ஷ்டவசத்தால் சிறந்த தேவரான குபேரனின் மகன்களாக இருந்தனர். ஆனால் மது அருந்தியதால் உண்டான பொய்க் கௌரவம் மற்றும் மதி மயக்கம் ஆகியவற்றின் காரணத்தால், மிகவும் இழிவடைந்த நிலையிலிருந்த அவர்கள் நிர்வாணமாக இருந்தும், அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, (உணர்வின்றி நிர்வாணமாக நிற்கும்) மரங்களைப் போல் அவர்கள் வாழ்ந்ததால், இவ்வாலிபர்கள் மரங்களின் உடல்களைப் பெறவேண்டும், இதுதான் சரியான தண்டனை. எனினும், அவர்கள் மரங்களாகி விடுதலை பெறும் காலம்வரை, என் கருணையால், தங்களது கடந்தகால பாவச் செயல்களின் நினைவு அவர்களுக்கு இருக்கும். மேலும், தேவர்களின் கணக்குப்படி நூறு ஆண்டுகள் கழிந்ததும், என்னுடைய விசேஷ அனுக்கிரகத்தினால், பரமபுருஷரான வாசுதேவரை அவர்களால் நேருக்கு நேராகக் காண முடியும். இவ்வாறாக பக்தர்களெனும் தங்களது உண்மையான நிலையை அவர்கள் மீண்டும் பெறுவார்கள்.
பதம் 10.10.23 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; இவ்வாறு பேசிய மாமுனிவரான தேவரிஷி நாரதர், நாராயண—ஆசிரமம் என்ற தமது ஆசிரமத்திற்குச் திரும்பினார். உடனே நளகூவரனும், மணிகிரீவனும் இரட்டை மருத மரங்களாயினர்.
பதம் 10.10.24 : பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர், பரம பக்தரான நாரதரின் வார்த்தைகளிலுள்ள உண்மையை நிறைவேற்றுவதற்காக, இரட்டை மருத மரங்கள் நின்றுகொண்டிருந்த அந்த இடத்திற்கு மெதுவாகச் சென்றார்.
பதம் 10.10.25 : “இவ்விரு இளைஞர்களும் பெரும் செல்வந்தரான குபேரனின் மகன்களாவர். இவர்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. என்றாலும், தேவரிஷி நாரதர் எனது மிகப்பிரியமான, பாசமுள்ள பக்தராவார். நான் இந்த இளைஞர்கள் முன் நேருக்குநேராக வர வேண்டும் என்று அவர் விரும்புவதால், இவர்களுடைய முக்திக்காக நான் அவ்வாறு செய்யத்தான் வேண்டும்.”
பதம் 10.10.26 : இவ்வாறு பேசிய பிறகு, கிருஷ்ணர் உடனே அவ்விரு மருத மரங்களுக்கிடையில் புகுந்தார். இவ்வாறாக எதனுடன் அவர் கட்டப்பட்டிருந்தவரோ, அப்பெரிய உரல் குறுக்காகத் திரும்பி, அம்மரங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டது.
பதம் 10.10.27 : சிறுவனான கிருஷ்ணர் தம் வயிற்றுடன் கட்டப்பட்டிருந்த மர உரலைத் தம் பின்னால் இழுத்துச் சென்று, இரு மரங்களையும் வேருடன் பிடுங்கித் தள்ளினார். பரமபுருஷரின் பராக்கிரமத்தினால், அவ்விரு மரங்களும் அவற்றின் அடிமரங்கள், இலைகள் மற்றும் கிளைகள் ஆகியவற்றுடன், பெரும் சலசலப்புடன் தரையில் விழுந்து நொறுங்கின.
பதம் 10.10.28 : அதன்பிறகு, இரு மருத மரங்களும் விழுந்த அதே இடத்தில், அக்கினிதேவன் போல் காணப்பட்ட இரு சித்த புருஷர்கள், அவ்விரு மரங்களிலிருந்து வெளியே வந்தனர். அவர்களுடைய அழகின் தேஜஸ் எல்லாத் திசைகளையும் ஒளிமயமாக, சிரம் தாழ்த்தி கிருஷ்ணரை வணங்கிய அவர்கள், கூப்பிய கரங்களுடன் பின்வரும் வார்த்தைகளைப் பேசலாயினர்.
பதம் 10.10.29 : ஓ கிருஷ்ண, ஓ கிருஷ்ண, உமது யோக ஐசுவரியம் நினைத்தற்கரியதாகும். தாங்கள் பரமபுருஷரும், மூல முதல்வரும், உடனடியானதும் பழமையானதுமான எல்லாக் காரணங்களுக்கும் மூலகாரணமும் ஆவீர். மேலும் தாங்கள் இந்த பௌதிக சிருஷ்டிக்கு மேற்பட்டவராவீர். தாங்களே அனைத்தும் என்பதையும், ஸ்தூல மற்றும் சூட்சும அம்சங்களுடன் கூடிய இப்பிரபஞ்ச தோற்றமானது உமது உருவம் என்பதையும் (ஸர்வம் கல்வ இதம் ப்ரஹம என்ற வேத வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு), கற்றறிந்த பிராமணர்கள் அறிந்துள்ளனர்.
பதங்கள் 10.10.30 – 10.10.31 : நீங்கள் அனைத்தையும் ஆளும் பரமபுருஷராவீர். நீங்களே அனைத்து ஜீவராசிகளின் உடலாகவும், உயிராகவும், அகங்காரமாகவும் மற்றும் புலன்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் பரமபுருஷரும், அழிவற்ற ஈசுவரருமாகிய விஷ்ணுவாவீர். நீங்களே காலமும், உடனடியான காரணமும், சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களைக் கொண்ட ஜட இயற்கையுமாவீர். இந்த ஜடத் தோற்றத்தின் மூல காரணமும் நீங்களே. நீங்கள் பரமாத்மா என்பதால், ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திலுமுள்ள அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்.
பதம் 10.10.32 : பகவானே, தாங்கள் சிருஷ்டிக்கு முன்பே இருக்கிறீர்கள். எனவே, இந்த ஜட உலகில், பௌதிகக் குணங்களைக் கொண்ட ஒருடலில் சிறைப்பட்டுள்ள யாரால் உம்மைப் புரிந்து கொள்ள முடியும்?
பதம் 10.10.33 : பகவானே, உமது மகிமைகளை உமது சொந்த சக்தியாலேயே மறைத்துக் கொண்டுள்ள நீங்கள் பரமபுருஷராவீர். படைப்பின் மூலமான சங்கர்ஷணரும் நீரே, சதுர்—வ்யூஹத்தின் மூலமாகிய வாசுதேவரும் நீரே, அனைத்துமாக இருப்பதால் தாங்கள் பரப்பிரம்மனாவீர். எனவே உமக்கு எங்களது பணிவான வணக்கங்கள்.
பதங்கள் 10.10.34 – 10.10.35 : சாதாரண ஒரு மீன், ஆமை, பன்றி போன்ற உடல்களில் தோன்றும் நீங்கள், இத்தகைய ஜீவன்களால் செய்ய முடியாத அசாதாரணமான, ஒப்பற்ற, உன்னத செயல்களை வெளிப்படுத்துகிறீர்கள். இச்செயல்கள் எல்லையற்ற பலமும், சக்தியும் உடையவையாகும். எனவே உங்களுடைய இவ்வுடல்கள் பௌதிக மூலப் பொருட்களால் ஆனவையல்ல. இவை பரமபுருஷராகிய உமது அவதாரங்களாகும். நீங்கள் இந்த ஜட உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக, முழு சக்தியுடன் இப்பொழுது தோன்றியுள்ள அதே பரமபுருஷராவீர்.
பதம் 10.10.36 : பரம கல்யாணமூர்த்தியே, பரம மங்கள வடிவினராகிய உங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள், பெரும் புகழுக்குரிய யது குலத்தோன்றலே, யது குலத் தலைவரே, வசுதேவரின் புதல்வரே சாந்த சொரூபியே, உமது தாமரைப் பாதங்களில் எங்களது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறோம்.
பதம் 10.10.37 : பரம சொரூபியே, நாங்கள் எப்பொழுதும் உமது தொண்டர்களுக்குத் தொண்டர்களாவோம், குறிப்பாக நாரத முனிவரின் தொண்டர்களாவோம். இப்பொழுது வீடு திரும்ப எங்களுக்கு அனுமதி தாருங்கள். நாரத முனிவரின் கருணையாலும், அருளாலும்தான் உங்களை எங்களால் நேருக்கு நேராகத் தரிசிக்க முடிந்தது.
பதம் 10.10.38 : இனிமேல், எங்களுடைய வார்த்தைகள் உமது லீலைகளை மட்டுமே விவரிக்கட்டும். எங்கள் காதுகள் உமது பெருமைகளைக் கேட்பதில் ஈடுபடட்டும். எங்கள் கைகால்களும், மற்ற புலன்களும் உங்களை மகிழ்விக்கும் செயல்களில் ஈடுபடட்டும். எங்கள் மனங்கள் உமது தாமரைப் பாதங்களையே எப்பொழுதும் நினைக்கட்டும். இவ்வுலகிலுள்ள அனைத்தும் உமது வெவ்வேறு வடிவங்கள் என்பதால், எங்கள் தலைகள் உம்மை வணங்கட்டும். மேலும் எங்களுடைய கண்கள், உங்களிலிருந்து வேறுபடாத வைஷ்ணவர்களைக் காணட்டும்.
பதம் 10.10.39 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இரு இளம் தேவர்களும் பரமபுருஷரிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தனர். பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் நிச்சயமாக அனைவருக்கும் ஈசுவராகவும், கோகுலத்தின் தலைவரான கோகுலேஸ்வராகவும் இருந்தபோதிலும். அவர் கோபியர்களின் கயிறுகளால் மர உரலுடன் கட்டப்பட்டார். எனவே அவர் புன்னகையுடன் குபேரனின் மகன்களிடம் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்.
பதம் 10.10.40 : பரமபுருஷர் கூறினார்: மாமுனிவரான நாரதர் கருணை மிக்கவர். அவரது சாபத்தின் மூலமாக, பௌதிக ஐசுவாரியத்தில் தீவிர பற்றுக் கொண்டு குருடர்களாகிவிட்ட உங்களிருவருக்கும் அவர் மிகச்சிறந்த உபகாரம் செய்துள்ளார். நீங்கள் உயர்கிரகமான சுவர்க்க லோகத்திலிருந்து விழுந்து மரங்களாகப் பிறந்தீர்கள் என்றாலும், அவரது பேரருளுக்குப் பாத்திரமானீர்கள். துவக்கத்திலிருந்தே இச்சம்பவங்களைப் பற்றிய அனைத்தையும் நானறிவேன்.
பதம் 10.10.41 : ஒருவன் சூரியனுடைய முன்னிலையில் இருக்கும்பொழுது, அவனுடைய கண்களுக்கு இருள் என்பதில்லை, அதுபோலவே, முழு உறுதியுடன் பகவானிடம் பூரணமாகச் சரணடைந்துள்ள ஒரு பக்தருடன் நேருக்கு நேராக ஒருவன் வரும்பொழுது, அவன் இனி பௌதிக பந்தத்திற்கு உட்பட்டிருக்க மாட்டான்.
பதம் 10.10.42 : நளகூவரனே, மணிகிரீவனே, நீங்களிருவரும் இப்பொழுது வீடு திரும்பலாம். எப்பொழுதும் என் பக்தித் தொண்டில் ஆழ்ந்திருக்க நீங்கள் விரும்புவதால், என்னிடம் அன்பையும், பாசத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று உங்களுடைய விருப்பம் நிறைவேற்றப்படும். இப்பொழுது அந்நிலையிலிருந்து நீங்கள் ஒருபோதும் விழமாட்டீர்கள்.
பதம் 10.10.43 : சுகதேவ கோஸ்வாமி கூறினார் பரமபுருஷர் இரு தேவர்களிடமும் இவ்வாறு பேசியபின், அவர்கள் மர உடலுடன் கட்டப்பட்டிருந்த பகவானை வலம் வந்து வணங்கினர். பிறகு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அனுமதி பெற்றபின் அவர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினார்.