அத்தியாயம் – 9
தாய் யசோதை ஸ்ரீ கிருஷ்ணரைக் கட்டுதல்
பதங்கள் 10.9.1 – 10.9.2
ஸ்ரீ-சுக உவாச
ஏகதா க்ருஹ-தாஸீஷு யசோதா நந்த-கேஹினீ
கர்மாந்தர-நியுக்தாஸு நிர்மமந்த ஸ்வயம் ததி
யானி யானீஹ கீதானி தத்-பால-சரிதானி ச
ததி-நிர்மந்தனே காலே ஸ்மரந்தீ தானி அகாயத
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏகதா—ஒரு நாள்; க்ருஹ-தாஸீஷு—வீட்டுப்பணிப்பெண்கள் எல்லோரும் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தபொழுது; யசோதா—தாய் யசோதை; நந்த-கேஹினீ—நந்த மகாராஜனின் ராணியான; கர்ம-அந்தர—வேறு வீட்டு வேலைகளில்; நியுக்தாஸு—ஈடுபட்டிருந்ததால்; நிர்மமந்த—கடைந்தாள்; ஸ்வயம்—தானே; ததி—தயிரை; யானி—இத்தகைய எல்லா; யானி—போன்ற; இஹ—இது சம்பந்தமான; கீதானி—பாடல்கள்; தத்-பால-சரிதானி—இதில் தன் சொந்தச் குழந்தையின் செயல்களால் இயற்றப்பட்டன; ச—மேலும்; ததி-நிர்மந்தனே—தயிரைக் கடையும் பொழுது; காலே—அப்பொழுது; ஸ்மரந்தீ—நினைவுகூர்ந்து; தானி—அவற்றையெல்லாம் (பாடல்களின் வடிவில்); அகாயத—பாடினாள்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ஒரு நாள் எல்லாப் பணிப்பெண்களும், வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்ட தாய் யசோதை, தயிரைத் தானே கடையத் துவங்கினாள். இவ்வாறு கடையும்பொழுது, கிருஷ்ணரின் குழந்தைத்தனமான செயல்களை நினைவுகூர்ந்த அவள், தனக்கே உரிய முறையில் அவற்றைப் பாடல்களாகத் தொகுத்து, தனக்குள் அச்செயல்களைப் பற்றி பாடி மகிழ்ந்தாள்.
பதம் 10.9.3
க்ஷெளமம் வாஸ: ப்ருது-கடி-தடே பிப்ரதீ ஸூத்ர-நத்தம்
புத்ர-ஸ்னேஹ-ஸ்னுத-குச-யுகம் ஜாத-கம்பம் ச ஸுப்ரூ:
ரஜ்வ்-ஆகர்ஷ-ஸ்ரம-புஜ-சலத்-கங்கணெள குண்டலே ச
ஸ்வின்னம் வக்த்ரம் கபர-விகலன்-மாலதீ நிர்மமந்த
க்ஷெளமம்—குங்குமம், மஞ்சள் ஆகிய நிறங்கள் கலந்த; வாஸ:—ஒரு சேலையை தாய் யசோதை அணிந்திருந்தாள்; ப்ருது-கடி-தடே—அவளது பெரிய இடையைச் சுற்றி; பிப்ரதீ—குலுங்க; ஸூத்ர-நத்தம்—ஒரு கச்சையால் கட்டப்பட்டு; புத்ர-ஸ்னேஹ-ஸ்னுத—குழந்தையிடமுள்ள தீவிர அன்பின் காரணத்தால், பாலால் நனைந்தன; குச-யுகம்—அவளது முலைக் காம்புகள்; ஜாத-கம்பம்-ச—அவை இனிமையாக அசைந்தாட; ஸுப்ரூ:—மிகவும் அழகிய புருவங்களைப் பெற்றிருந்த அவள்; ரஜ்ஜு-அகர்ஷ—வெண்ணெய் கடையும் கயிற்றை இழுத்துக் கடைந்ததால்; ஸ்ரம—ஏற்பட்ட உழைப்பினால்; புஜ—யாருடைய கைகளிலிருந்த; சலத்-கங்கணௌ—இரு கங்கணங்களும் அசைந்தன; குண்டலே—இரு காதணிகள்; ச—கூட; ஸ்வின்னம்—அவளது கூந்தல் ஒரு மேகத்தைப்போல் கருமை நிறமாக இருந்தது, எனவே வியர்வைத் துளிகள் மழைபோல் கொட்டின; வக்த்ரம்—அவளது முகம் முழுவதிலும்; கபர-விகலத்—மாலதீ—மேலும் மல்லிகைப் பூக்கள் அவளது கூந்தலிலிருந்து விழுந்தன; நிர்மமந்த—இவ்வாறு தாய் யசோதை வெண்ணெய் கடைந்து கொண்டிருந்தாள்.
காவி-மஞ்சள் நிற சேலையையும், இடையைச்சுற்றி ஒருகச்சையையும் அணிந்திருந்த தாய் யசோதை, கயிற்றை இழுத்து வெண்ணெயைக் கடைந்து கொண்டிருந்தாள். இவ்வாறு அதிக வேலையில் ஈடுபட்டிருந்த அவளது வளையல்களும், காதணிகளும் அசைந்தாடி ஓசையெழுப்பின. அவளது தேகம் முழுவதும் குலுங்கியது. தன் குழந்தையிடமுள்ள ஆழ்ந்த அன்பின் காரணத்தால் அவளது மார்பகங்கள் பாலால் நனைந்தன. மிகவும் அழகான புருவங்களைக் கொண்டிருந்த அவளது முகம் வியர்வையால் நனைந்திருந்தது. மல்லிகைப் பூக்கள் அவளது கூந்தலிலிருந்து சிதறி விழுந்தன.
பதம் 10.9.4
தாம் ஸ்தன்ய-காம ஆஸாத்ய மத்னந்தீம் ஜனனீம் ஹரி:
க்ருஹீத்வா ததி-மந்தானம் ன்யஷேதத் ப்ரீதிம் ஆவஹன்
தாம்—தாய் யசோதையிடம்; ஸ்தன்ய-காம:—அவளது முலைப் பாலைக் குடிக்க விரும்பிய கிருஷ்ணர்; அஸாத்ய—அவள் முன்தோன்றி; மத்னந்தீம்—அவள் வெண்ணெய் கடைந்து கொண்டிருக்கும் பொழுது; ஜனனீம்—தாயிடம்; ஹரி:—கிருஷ்ணர்; க்ருஹீத்வா—பற்றி; ததி-மந்தானம்—மத்தை; ன்யஷேதத்—தடுத்தார்; ப்ரீதம் ஆவஹன்—அன்பும், பாசமும் நிறைந்த ஒரு சூழ்நிலையை உருவாக்கி.
தாய் யசோதை வெண்ணெய் கடைந்து கொண்டிருக்கும்பொழுது, அவளது முலைப்பாலைக் குடிக்க விரும்பிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவள் முன் வந்தார். மேலும் அவளது உன்னத ஆனந்தத்தை அதிகரிக்கும் பொருட்டு, அவர் மத்தைக் கையால் பிடித்துக்கொண்டு, அவள் வெண்ணெய் கடைவதைத் தடுத்து நிறுத்தத் துவங்கினார்.
பதம் 10.9.5
தம் அங்கம் ஆருடம் அபாயயத் ஸ்தனம்
ஸ்னேஹ-ஸ்னுதம் ஸ-ஸ்மிதம் ஈக்ஷதீ முகம்
அத்ருப்தம் உத்ஸ்ருஜ்ய ஜவேன ஸா யயாவ்
உத்ஸிச்யமானே பயஸி த்வ் அதிஸ்ரிதே
தம்—கிருஷ்ணரை; அங்கம் ஆரூடம்—மிகவும் பாசத்துடன் அவரைத் தன் மடியில் அமரச் செய்து; அபாயயத் ஸ்தனம்—தன் முலைப்பாலைக் குடிக்கச் செய்தாள்; ஸ்னேஹ-ஸ்னுதம்—ஆழ்ந்த பாசத்தின் காரணத்தால் அதிலிருந்து சுரந்த பாலை; ஸ-ஸ்மிதம் ஈக்ஷதீ முகம்—தாய் யசோதை புன்னகையுடன், கிருஷ்ணரின் புன்னகை பூத்த முகத்தை நோக்கினாள்; அத்ருப்தம்—பாலைத் திருப்திகரமாக இன்னும் குடித்து முடிக்காத கிருஷ்ணரை; உத்ஸ்ருஜ்ய—அவரை ஒருபுறம் வைத்துவிட்டு; ஜவேன—மிகவும் அவசரமாக; ஸா—தாய் யசோதை; யயௌ—அந்த இடத்தைவிட்டு அகன்றாள்; உத்ஸிச்யமானே பயஸி—பால் பொங்கி வழிவதைக் கண்டதால்; து—ஆனால்; அதிஸ்ரிதே—அடுப்பிலிருந்த பால் பாத்திரத்தில்.
பிறகு கிருஷ்ணரை அணைத்துக்கொண்ட தாய் யசோதை, அவரைத் தன் மடியில் அமரச் செய்து, பேரன்புடனும், பாசத்துடனும், அவரது முகத்தை நோக்கினாள். ஆழ்ந்த பாசத்தின் காரணத்தால் அவளது ஸ்தனங்களிலிருந்து பால் சுரந்தது. ஆனால் அடுப்பிலிருந்த பால் பொங்கி வழிவதைக் கண்ட அவள், குழந்தை தன் தாய்ப்பாலைக் குடித்து இன்னும் முழு திருப்தி அடையவில்லை என்றபோதிலும், அவரை உடனே ஒருபுறம் வைத்துவிட்டு, பொங்கி வழியும் பாலைக் கவனிக்கச் சென்று விட்டாள்.
பதம் 10.9.6
ஸஞ்ஜாத-கோப: ஸ்ஃபுரிதாருணாதரம்
ஸந்தஸ்ய தத்பிர் ததி-மந்த-பாஜனம்
பித்வா ம்ருஷாஸ்ருர் த்ருஷத்-அஸ்மனா ரஹோ
ஜகாஸ ஹையங்கவம் அந்தரம் கத:
ஸஞ்ஜாத-கோப:—இவ்விதமாக மிகவும் கோபமடைந்த கிருஷ்ணர்; ஸ்ஃபுரித-அருண-அதரம்—உப்பிச் சிவந்த உதடுகளை; ஸந்தஸ்ய—கடித்துக்கொண்டு; தத்பி:—தம் பற்களால்; ததி-மந்த-பாஜனம்—தயிர்ப்பானையை; பித்வா—உடைத்து; ம்ருஷா-அஸ்ரு:—கண்களில் பொய்க் கண்ணீருடன்; த்ருஷத்-அஸ்மனா—ஒரு கல்லால்; ரஹ:—தனிமையான ஓரிடத்தில்; ஜகாஸ—உண்ணத் துவங்கினார்; ஹையங்கவம்—புதிதாகக் கடைந்தெடுத்த வெண்ணெயை; அந்தரம்—அறைக்கும்; கத:—சென்று.
மிகவும் கோபமடைந்து, பற்களால் தம் சிவந்த உதட்டைக் கடித்துக் கொண்ட கிருஷ்ணர். பொய்க் கண்ணீருடன், தயிர்ப் பானையை ஒரு கல்லால் உடைத்தார். பிறகு ஓர் அறைக்குள் புகுந்த அவர், ஒரு தனிமையான இடத்தில் புதிதாகக் கடைந்தெடுத்த வெண்ணெயை உண்ணத் துவங்கினார்.
பதம் 10.9.7
உத்தார்ய கோபீ ஸுஸ்ருதம் பய: புன:
ப்ரவிஸ்ய ஸந்ருஸ்ய ச ததி-அமத்ரகம்
பக்னம் விலோக்ய ஸ்வ-ஸுதஸ்ய கர்ம தஜ்
ஜஹாஸ தம் சாபி ந தத்ர பஸ்யதீ
உத்தார்ய—அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு; கோபீ—தாய் யசோதை; ஸு-ஸ்ருதம்—மிகவும் சூடான; பய:—பாலை; புன:—மீண்டும்; ப்ரவிஸ்ய—கடையும் இடத்திற்குள் புகுந்தாள்; ஸந்ருஸ்ய—கண்டதால்; ச—கூட; ததி-அமத்ரகம்—தயிர்ப்பானை; பக்னம்—உடைந்து கிடந்தது; விலோக்ய—இதைக் கண்டு; ஸ்வ-ஸுதஸ்ய—அவளது சொந்த குழந்தையின்; கர்ம—செயல்; தத்—அது; ஜஹாஸ—புன்னகை செய்தாள்; தம் ச—கிருஷ்ணரும்; அபி—அச்சமயத்தில்; ந—இல்லாததை; தத்ர—அங்கு; பஸ்யதீ—பார்த்து.
தாய் யசோதை அடுப்பிலிருந்து பாலை இறக்கி வைத்தபின், வெண்ணெய் கடையும் இடத்திற்குத் திரும்பினாள். அங்கு தயிர்ப் பானை உடைந்து கிடப்பதையும், கிருஷ்ணர் இல்லாததையும் கண்ட அவள், பானையை உடைத்தது கிருஷ்ணரின் வேலையாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்தாள்.
பதம் 10.9.8
உலூகலாங்ரேர் உபரி வ்யவஸ்திதம்
மர்காய காமம் தததம் சிசி ஸ்திதம்
ஹையங்கவம் சௌர்ய-விசங்கிதேக்ஷணம்
நிரீக்ஷ்ய பஸ்சாத் ஸுதம் ஆகமச் சனை:
உலூகல-அங்ரே:—குப்புறக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த உரலின்; உபரி—மேல்; வ்யவஸ்திதம்—கிருஷ்ணர் உட்கார்ந்திருந்தார்; மர்காய—ஒரு குரங்கிற்கு; காமம்—தன் விருப்பம்போல்; தததம்—பங்குகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்; சிசி ஸ்திதம்—உரியில் தொங்கிக் கொண்டிருந்த வெண்ணெய்ச் சட்டியிலிருந்த; ஹையங்கவம்—வெண்ணெயையும், மற்ற பால் தயாரிப்புகளையும்; சௌர்ய-விசங்கித—திருடிய காரணத்தால், பயத்துடன் இங்குமங்கும் பார்த்தார்; ஈக்ஷணம்—யாருடைய கண்கள்; நிரீக்ஷ்ய—இச்செயல்களைக் கண்டு; பஸ்சாத்—பின்னாலிருந்து; ஸுதம்—தன் மகனை; ஆகமத்—அவள் அடைந்தாள்; சனை:—மிகவும் மெதுவாகவும், கவனமாகவும்.
அச்சமயத்தில் கிருஷ்ணர், குப்புறக் கவிழ்க்கப்பட்டிருந்த ஒரு மர உரலின் மேல் உட்கார்ந்துகொண்டு, தயிர், வெண்ணெய் போன்ற பால் தயாரிப்புகளை, தம் விருப்பம்போல் குரங்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார். திருட்டைச் செய்ததால். தம் தாயினால் தண்டிக்கப்படக்கூடும் என்றெண்ணி, மிகவும் கவலையுடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார். தாய் யசோதை அவரைக் கண்டதும், மிகவும் கவனத்துடன் பின்புறமிருந்து அவரை நெருங்கினாள்.
பதம் 10.9.9
தாம் ஆத்த-யஷ்டிம் ப்ரஸமீக்ஷ்ய ஸத்வரஸ்
ததோ ‘வருஹ்யாபஸஸார பீதவத்
கோபி அன்வதாவன் ந யம் ஆப யோகினாம்
க்ஷமம் ப்ரவேஷ்டும் தபஸேரிதம் மன:
தாம்—தாய் யசோதையை; ஆத்த-யஷ்டிம்—தன் கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு; ப்ரஸமீக்ஷ்ய—கிருஷ்ணர், அந்த மனோபாவத்தில் அவளைக் கண்டு; ஸத்வர:—மிகவும் வேகமாக; தத:—அங்கிருந்து; அவருஹ்ய—கீழே இறங்கி; அபஸஸார—ஓட்டம் பிடிக்கத் துவங்கினார்; பீத-வத்—மிகவும் அச்சத்தற்குள்ளானது போல; கோபீ—தாய் யசோதை; அன்வதாவத்—அவரைப் பின்தொடரத் துவங்கினாள்; ந—இல்லை; யம்—யாரை; ஆப—அடையத் தவறினர்; யோகினாம்—பெரும் யோகிகளும்; க்ஷமம்—அவரை அடையக் கூடியவர்களான; ப்ரவேஷ்டும்—பிரம்மஜோதியில் அல்லது பரமாத்மாவில் புக முயலும்; தபஸா—கடுமையான தவ, விரதங்களால்; ஈரிதம்—அந்த நோக்கத்திற்காக முயலும்; மன:—தியானத்தின் மூலமாக.
கையில் தடியுடனிருக்கும் தம் தாயைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மிக விரைவாக உரலிலிருந்து கீழே இறங்கி. பெரும் அச்சத்திற்குள்ளானவர் போல் ஓட்டம்பிடிக்கத் துவங்கினார். யோகிகள் கடுமையான தவ, விரதங்ளால் பகவானின் பிரகாசத்திற்குள் புக விருப்பங் கொண்டு, தியானத்தின் மூலமாக பகவானைப் பரமாத்மாவாக கைப்பற்ற முயல்கின்றனர் என்றாலும், அவர்கள் பகவானை அடையத் தவறி விடுகின்றனர். ஆனால் தாய் யசோதை, அதே பரமபுருஷரான கிருஷ்ணரைத் தன் மகன் என்றெண்ணி கிருஷ்ணரைப் பிடிப்பதற்காக, அவரைப் பின்தொடர்ந்து செல்லத் துவங்கினாள்.
பதம் 10.9.10
அன்வஞ்சமானா ஜனனீ ப்ருஹச்-சலச்-
ச்ரோணீ-பராக்ராந்த-கதி: ஸுமத்யமா
ஜவேன விஸ்ரம்ஸித-கேச-பந்தன-
ச்யுத-ப்ரஸூனானுகதி: பராம்ருசத்
அன்வஞ்சமானா—மிகவும் வேகமாக கிருஷ்ணரைப் பின்தொடர்ந்து; ஜனனீ—தாய் யசோதை; ப்ருஹத்-சலத்-ஸ்ரோணீ-பர-ஆக்ராந்த-கதி:—அவளது பெரிய ஸ்தானங்களின் பளுவைத் தாங்க முடியாமல் களைப்படைந்த அவள், தன் வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று; ஸுமத்யமா—அவளது மெல்லிய இடையின் காரணத்தால்; ஜவேன—மிகவும் வேகமாகச் சென்ற காரணத்தால்; விஸ்ரம்ஸித-கேச-பந்தன—வாரி முடிக்கப்பட்டிருந்த அவளது கூந்தல் அவிழ்ந்தது; ச்யுத-ப்ரஸூன-அனுகதி:—அவளைப் பின்தொடர்ந்து மலர்கள் விழுந்தன; பராம்ருசத்—இறுதியில் தவறாமல் கிருஷ்ணரைக் கைப்பற்றினாள்.
கிருஷ்ணரைப் பின்தொடர்ந்த தாய் யசோதை,தன் பெரிய ஸ்தனங்களின் பளுவை அவளது மெல்லிய இடையால் தாங்கிக் கொள்ள இயலாமல், இயல்பாகவே தன் வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. கிருஷ்ணரை வேகமாகப் பின்தொடர்ந்து சென்றதால், அவளது கூந்தல் அவிழ்ந்து, அதிலிருந்த மலர்கள் அவளுக்குப் பின்னால் சிதறி விழுந்தன. எனினும், தன் மகனான கிருஷ்ணரை அவள் கைப்பற்றத் தவறவில்லை.
பதம் 10.9.11
க்ருதாகஸம் தம் ப்ரருதந்தம் அக்ஷிணீ
கஷந்தம் அஞ்ஜன்-மஷிணீ ஸ்வ-பாணினா
உத்வீக்ஷமாணம் பய-விஹ்வலேக்ஷணம்
ஹஸ்தே க்ருஹீத்வா பிஷயந்தி அவாகுரத்
க்ருத-ஆகஸம்—குற்றவாளியான; தம்—கிருஷ்ணரை; ப்ரருதந்தம்—அமும் மனோபாவத்துடன்; அக்ஷிணீ—அவரது இரு கண்களையும்; கஷந்தம்—கசக்கினார்; அஞ்ஜத்-மஷிணீ—அவரது கண்களில் பூசப்பட்டிருந்த கருப்பு மை கண்ணீருடன் கலந்து முகமெங்கும் பரவியது; ஸ்வ-பாணினா—தம் சொந்த கரத்தால்; உத்வீக்ஷமாணம்—அந்த மனோபாவத்தில் தாய் யசோதையால் அவர் காணப்பட்டார்; பய-விஹ்வல-ஈக்ஷணம்—தன் தாயிடமிருந்த அச்சத்தினால், அவரது கண்கள் துன்புற்று காணப்பட்டன; ஹஸ்தே—கரத்தால்; க்ருஹீத்வா—பற்றி; பிஷயந்தீ—தாய் யசோதை அவரை பயமுறுத்தி; அவாகுரத்—இவ்வாறு அவரை அவள் மிகவும் கனிவுடன் தண்டித்தாள்.
தாய் யசோதையிடம் பிடிபட்ட கிருஷ்ணர், இன்னும் அதிக அச்சமடைந்து, தான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொண்டார். அவரை நோக்கிய யசோதை அவர் அழுவதைக் கண்டாள். அவரது கண்ணீர் அவரது கண்களைச் சுற்றிப் பூசப்பட்டிருந்த கருப்பு மையுடன் கலந்தது. இந்நிலையில் அவர் தம் கைகளால் கண்களைக் கசக்கியபொழுது, அந்த மை அவரது முகம் முழுவதிலும் பரவியது. தாய் யசோதை தன் அழகிய புதல்வரின் கையைப் பற்றி, கனிவுடன் அவரை தண்டிக்கத் துவங்கினாள்.
பதம் 10.9.12
த்யக்த்வா யஷ்டிம் ஸுதம் பீதம் விக்ஞாயார்பக-வத்ஸலா
இயேஷ கில தம் பத்தும் தாம்னாதத்-வீர்ய-கோவிதா
த்யக்த்வா—எறிந்துவிட்டு; யஷ்டிம்—தன் கையிலிருந்த கம்பை; ஸுதம்—அவளது மகன்; பீதம்—தன் மகனின் பெரும் பயத்தை கருத்திற் கொண்டு; விக்ஞாய—அறிந்து; அர்பக-வத்ஸலா—கிருஷ்ணரின பாசம் மிக்க தாய்; இயேஷ—விரும்பினாள்; கில—உண்மையில்; தம்—கிருஷ்ணரை; பத்தும்—கட்டிப்போட; தாம்னா—ஒரு கயிற்றால்; அ-தத்-வீர்ய-கோவிதா—(கிருஷ்ணரிடமுள்ள ஆழ்ந்த அன்பின் காரணத்தால்) பரம சக்திவாய்ந்த பரமபுருஷரைப் பற்றி அறியாமல்.
கிருஷ்ணர் யார், அவர் எவ்வளவு சக்திவாய்ந்தவர் என்பதை அறியாத தாய் யசோதை எப்பொழுதும் கிருஷ்ணரின் ஆழ்ந்த அன்பிலேயே மூழ்கியிருந்தாள். கிருஷ்ணரிடமிருந்த தாய்ப்பாசத்தின் காரணத்தால், அவர் யாரென்பதை அறிவதில்கூட அவள் சிரத்தை காட்டவில்லை. எனவே, தன் மகன் மிகவும் பயந்துவிட்டதைக் கண்ட அவள் கம்பை எறிந்துவிட்டு, தொடர்ந்து குறும்புத்தனங்களை அவர் செய்யாமலிருக்க, அவரைக் கட்டிப்போட விரும்பினாள்.
பதங்கள் 10.9.13 – 10.9.14
ந சாந்தர் ந பஹிர் யஸ்ய ந பூர்வம் நாபி சாபரம்
பூர்வாபரம் பஹிஸ் சாந்தர் ஜகதோ யோ ஜகச் ச ய:
தம் மத்வாத்மஜம் அவ்யக்தம் மர்த்ய-லிங்கம் அதோக்ஷஜம்
கோபிகோலுகலே தாம்னா பயந்த ப்ரக்ருதம் யதா
ந—இல்லை; ச—மேலும்; அந்த:—உட்புறமோ; ந—அல்லது; பஹி—வெளிப்புறமோ; யஸ்ய—யாருடைய; ந—அல்லது; பூர்வம்—துவக்கமோ; ந—அல்லது; அபி—உண்மையில்; ச—மேலும்; அபரம்—முடிவோ; பூர்வ-அபரம்—துவக்கமும், முடிவும்; பஹி: ச அந்த:—உள்ளும், புறமும்; ஜகத:—முழு பிரபஞ்ச தோற்றத்தின்; ய:—யாரொருவர்; ஜகத் ச ய:—மேலும் மொத்த சிருஷ்டியில் அனைத்துமாக இருப்பவர்; தம்—அவரை; மத்வா—கருதி; ஆத்மஜம்—தன் சொந்த மகன்; அவ்யக்தம்—தோன்றாதது; மர்த்ய-லிங்கம்—ஒரு மனிதனாகத் தோன்றும்; அதோக்ஷஜம்—புலனறிவுக்கு அப்பாற்பட்டவரை; கோபிகா—தாய் யசோதை; உலூகலே—உரலுடன்; தாம்னா—ஒரு கயிற்றால்; பயந்த—கட்டினாள்; ப்ராக்ருதம் யதா—சாதாரண ஒரு மனிதக் குழந்தைக்குச் செய்வதுபோல்.
பரமபுருஷர், ஆதியும் அந்தமும், உள்ளும் புறமும், முன்னும் பின்னும் இல்லாதவர். அதாவது அவர் எங்கும் பரவியிருப்பவராவார். அவர் காலத்தின் ஆதிக்கத்திற்கு உட்படாதவர் என்பதால், அவருக்குக் கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களுக்கிடையில் எந்த வேறுபாடுமில்லை. இதனால் எல்லாக் காலங்களிலும் அவர் தமது சுயமான உன்னத ரூபத்திலேயே இருக்கிறார். அவர் சம்பந்த உண்மைக்கு அப்பாற்பட்ட பரிபூர்ணராய் இருப்பதால், அனைத்திற்கும் காரண, விளைவாக இருந்தபோதிலும், காரண விளைவிற்கு இடையிலுள்ள வேறுபாட்டிலிருந்து விடுபட்டிருக்கிறார். வெளிப்படையாகத் தோன்றாதவரும், புலன்களுக்கு அப்பாற்பட்டவருமான அவர் இப்பொழுது ஒரு மனிதக் குழந்தையாகத் தோன்றியுள்ளார். தாய் யசோதை அவரைத் தன் சொந்த குழந்தையாகக் கருதி, அவரை ஒரு கயிற்றால் மர உரலுடன் கட்டிப் போட்டாள்.
பதம் 10.9.15
தத் தாம பத்யமானஸ்ய ஸ்வார்பகஸ்ய க்ருதாகஸ:
த்வி-அங்குலோனம் அபூத் தேன ஸந்ததே ‘ன்யச் ச கோபிகா
தத் தாம—கட்டப்படும் அக்கயிற்றை; பத்யமானஸ்ய—தாய் யசோதையால் கட்டப்பட்டுக் கொண்டிருந்தார்; ஸ்வ-அர்பகஸ்ய—அவளது சொந்த மகனின்; க்ருத-ஆகஸ:—ஒரு குற்றவாளியான அவர்; த்வி-அங்குல—இரண்டு அங்குலங்கள் (இரு விரல்களின் அகலம்); ஊனம்—குட்டையாக; அபூத்—ஆனது; தேன—அக்கயிற்றுடன்; ஸந்ததே—இணைத்தாள்; அன்யத் ச—மற்றொரு கயிற்றை; கோபிகா—தாய் யசோதை.
தாய் யசோதா, குறும்புத்தனம் செய்யும் குழந்தையைக் கட்ட முயன்றபோது, இரண்டு விரல் அங்குலம் கட்டும் கயிறு குறைவாக இருப்பதைக் கண்டார். இதனால் அதனுடன் இணைக்கப்பட இன்னொரு கயிற்றைக் கொண்டு வந்தாள்.
பதம் 10.9.16
யதாஸீத் தத் அபி ன்யூனம் தேனான்யத் அபி ஸந்ததே
தத் அபி த்வி-அங்குலம் ன்யூனம் யத் யத் ஆதத்த பந்தனம்
யதா-ஆஸீத்—ஆனபொழுது; தத் அபி—புதிதாக இணைக்கப்பட்ட கயிறுகூட; ன்யூனம்—இன்னும் குட்டையாகவே இருந்தது; தேன—பிறகு, இரண்டாவது கயிற்றுடன்; அன்யத் அபி—மற்றொரு கயிற்றையும்; ஸந்ததே—அவள் இணைத்தாள்; தத் அபி—அதுவும்; த்வி-அங்குலம்—இரு விரல்கள் அளவு; ன்யூனம்—குட்டையாகவே இருந்தது; யத் யத் ஆதத்த—இவ்விதமாக, ஒன்றன்பின் ஒன்றாக அவள் இணைத்த கயிறுகள் எல்லாம்; பந்தனம்—கிருஷ்ணரைக் கட்டுவதற்கு.
இப்புதிய கயிறும் இரண்டங்குலம் குறைவாகவே இருந்தது. மற்றொரு கயிறு அதனுடன் இணைக்கப்பட்ட பொழுது அதுவும் இரண்டங்குலம் குறைவாக இருந்தது. எத்தனை கயிறுகளை அவள் இணைத்தாளோ, அத்தனையும் குறைவாகவே இருந்தன; அவற்றின் நீளக்குறைவை வெற்றிகொள்ள இயலவில்லை.
பதம் 10.9.17
ஏவம் ஸ்வ-கேஹ-தாமானி யசோதா ஸந்தததி அபி
கோபீனாம் ஸுஸ்மயந்தீனாம் ஸ்மயந்தீ விஸ்மிதாபவத்
ஏவம்—இவ்விதமாக; ஸ்வ-கேஹ-தாமானி—வீட்டிலுள்ள எல்லாக் கயிறுகளையும்; யசோதா—தாய் யசோதை; ஸந்தததி அபி—ஒன்றன்பின் ஒன்றாக இணைத்த போதிலும்; கோபீனாம்—தாய் யசோதையின் வயது முதிர்ந்த தோழிகளான கோபியர்கள் அனைவரும்; ஸு-ஸ்மயந்தீனாம்—விநோதமான இச்சம்பவத்தைக் கண்டு மகிழ்ந்தனர்; ஸ்மயந்தீ—தாய் யசோதையும் புன்னகை செய்தாள்; விஸ்மிதா அபவத்—அவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
இவ்வாறாக, வீட்டிலிருந்த எல்லாக் கயிறுகளையும் தாய் யசோதை இணைத்துப் பார்த்தாள். எனினும் கிருஷ்ணரைக் கட்டும் முயற்சியில் தோல்வியையே அடைந்தாள். சுற்றுப்புறத்தைச் சேர்ந்த தாய் யசோதையின் தோழிகளான வயது முதிர்ந்த கோபியர்கள் அந்த வேடிக்கையைக் கண்டு சிரித்து மகிழ்ந்தனர். அவர்களோடு தாய் யசோதையும் சிரித்தாள். அவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
பதம் 10.9.18
ஸ்வ-மாது: ஸ்வின்ன-காத்ராயா விஸ்ரஸ்த-கபர-ஸ்ரஜ:
த்ருஷ்ட்வா பரிஸ்ரமம் க்ருஷ்ண: க்ருபயாஸீத் ஸ்வ-பந்தனே
ஸ்வ-மாது:—அவரது சொந்தத்தாயின்; ஸ்வின்ன-காத்ராயா:—தேவையற்ற உழைப்பினால் தன் தாயின் உடலெங்கும் வியர்த்துவிட்டதை கிருஷ்ணர் கண்டபொழுது; விஸ்ரஸ்த—விழுந்து கொண்டிருந்தன; கபர—அவளது கூந்தலிலிருந்து; ஸ்ரஜ:—யாருடைய அந்த மலர்கள்; த்ருஷ்ட்வா—அவரது தாயின் நிலையைக் கண்டு; பரிஸ்ரமம்—அவள் அளவுக்கதிகமாக உழைத்துக் களைத்துவிட்டதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது; க்ருஷ்ண:—பரமபுருஷர்; க்ருபயா—தம் தாயும், பக்தையுமான அவளிடமுள்ள காரணமற்ற அவரது கருணையால்; ஆஸீத்—ஒப்புக் கொண்டார்; ஸ்வ-பந்தனே—அவர் கட்டுப்பட.
தாய் யசோதையின் கடினமான உழைப்பின் காரணத்தால், அவளது உடல் வியர்த்து, அவளது கூந்தலிலிருந்து மலர்களும். சீப்பும் கீழே விழுந்தன. தன் தாய் இவ்வாறு களைத்து விட்டதைக் கண்ட குழந்தை கிருஷ்ணர், அவளிடம் கருணை கொண்டு, கட்டுப்பட ஒப்புக் கொண்டார்.
பதம் 10.9.19
ஏவம் ஸந்தர்சிதா ஹி அங்க ஹரிணா ப்ருத்ய-வஸ்யதா
ஸ்வ-வசேனாபி க்ருஷ்ணேன யஸ்யேதம் ஸேஸ்வரம் வசே
ஏவம்—இவ்விதத்தில்; ஸந்தர்சிதா—காட்டப்பட்டது; ஹி—உண்மையில்; அங்க—பரீட்சித்து மகாராஜனே; ஹரிணா—பரமபுருஷரால்; ப்ருத்ய-வஸ்யதா—அவரது தொண்டருக்கு அல்லது பக்தருக்குக் கீழ்ப்படியும் அவரது தெய்வீக குணம்; ஸ்வ-வசேன—தமது சொந்த கட்டுப்பாட்டிற்கு மட்டுமே உட்பட்டுள்ளவரான; அபி—உண்மையில்; க்ருஷ்ணேன—கிருஷ்ணரால்; யஸ்ய—யாருடைய; இதம்—முழு பிரபஞ்சமும்; ஸ-ஈஸ்வரம்—சிவபெருமான் மற்றும் பிரம்மதேவர் போன்ற சக்திவாய்ந்த தேவர்களுடன்; வசே—கட்டுப்பாட்டின் கீழ்.
பரீட்சித்து மகாராஜனே! சிவபெருமான், பிரம்மதேவர், இந்திரன் போன்ற மிகச்சிறந்த தேவர்களை உள்ளடக்கிய இப்பிரபஞ்சம் முழுவதும் பரமபுருஷரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிருஷ்ணருடைய இந்த லீலையில் இது இப்பொழுது காட்டப்பட்டது.
பதம் 10.9.20
நேமம் விரிஞ்சோ ந பவோ ந ஸ்ரீர் அபி அங்க-ஸம்ஸ்ரயா
ப்ரஸாதம் லேபிரே கோபீ யத் தத் ப்ராப விமுக்திதாத்
ந—இல்லை; இமம்—இவ்வுயர்ந்த நிலையை; விரிஞ்ச:—பிரம்மதேவரோ; ந—அல்லது; பவ:—சிவபெருமானோ; ந—அல்லது; ஸ்ரீ:—லக்ஷ்மி தேவியோ; அபி—உண்மையில்; அங்க-ஸம்ஸ்ரயா—அவள் எப்பொழுதும் பகவானின் சரிபாதியாக இருந்த போதிலும்; ப்ரஸாதம்—கருணையை; லேபிரே—பெற்றாள்; கோபீ—தாய் யசோதை; யத் தத்—அதைப்போன்ற; ப்ராப—பெற்றனர்; விமுக்தி-தாத்—இந்த ஜட உலகிலிருந்து முக்தியை அளிப்பவரான கிருஷ்ணரிடமிருந்து.
இந்த ஜட உலகிலிருந்து முக்தியை அளிப்பவரான பரமபுருஷரிடமிருந்து எந்த அனுக்கிரத்தை தாய் யசோதை பெற்றாளோ, அதை பிரம்மதேவரோ, சிவபெருமானோ அல்லது எப்பொழுதும் பரமபுருஷரின் சரிபாதியாக உள்ள லக்ஷ்மி தேவியோகூட பெற முடியாது.
பதம் 10.9.21
நாயம் ஸுகாபோ பகவான் தேஹினாம் கோபிகா-ஸுத:
ஞானினாம் சாத்ம-பூதானாம் யதா பக்திமதாம் இஹ
ந—இல்லை; அயம்—இது; ஸுக-ஆப:—மிகச் சுலபமாக அடையப்படுவது; அல்லது மகிழ்ச்சிக்குரிய ஒன்று; பகவான்:—பரமபுருஷர்; தேஹினாம்—தேகாபிமானத்தில் உள்ளவர்களின், குறிப்பாக கருமிகளின்; கோபிகா-ஸுத:—தாய் யசோதையின் மகன் கிருஷ்ணர் (வசுதேவ புத்திரராக உள்ள கிருஷ்ணர் வாசுதேவன் எனப்படுகிறார். தாய் யசோதையின் மகனாக உள்ள அவர் கிருஷ்ணர் எனப்படுகிறார்); ஞானினாம் ச—மேலும் ஜடக் களங்கத்திலிருந்து விடுபட முயலும் ஞானிகளுக்கு; ஆத்ம-பூதனாம்—தன்னிறைவுடைய யோகிகளுக்கு; யதா—போல; பக்தி-மதாம்—பக்தர்களுக்கு; இஹ—இவ்வுலகில்.
தாய் யசோதையின் மகனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தன்னிச்சையான அன்புத் தொண்டில் ஈடுபட்டுள்ள பக்தர்களுக்குச் சுலபமாக அடையக்கூடியவராவார். ஆனால் மனக்கற்பனை வாதிகளுக்கும், கடுந்தவ விரதங்களால் தன்னுணர்வு பெறப் போராடுபவர்களுக்கும், உடலையே தான் என்று கருதுபவர்களுக்கும் அவர் அவ்வளவு சுலபமாக அடையப்படக் கூடியவரல்ல.
பதம் 10.9.22
க்ருஷ்ணஸ்து க்ருஹ-க்ருத்யேஷு வ்யக்ராயாம் மாதரி ப்ரபு:
அத்ராக்ஷீத் அர்ஜுனௌ பூர்வம் குஹ்யகெள தனதாத்மஜௌ
க்ருஷ்ண: து—இதற்கிடையில்; க்ருஹ-க்ருத்யேஷு—குடும்ப விவகாரங்களில் ஈடுபடுவதில்; வ்யக்ராயாம்—சுறுசுறுப்பாக இருந்த பொழுது; மாதரி—அவரது தாய்; ப்ரபு:—பகவான்; அத்ராக்ஷீத்—கண்டார்; அர்ஜுனௌ—இரட்டை மருத மரங்கள்; பூர்வம்—அவர் முன்னிலையில்; குஹ்யகௌ—முன்னொரு யுகத்தில் அவை தேவர்களாக இருந்தன; தனத-ஆத்மஜௌ—தேவர்களின் பொருளாளரான குபேரனின் மகன்கள்.
தாய் யசோதை குடும்ப வேலைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தபொழுது, முன்னொரு யுகத்தில் குபேரனின் தேவ குமாரர்களாக இருந்த இரு மருத மரங்கள் தம்முன் நிற்பதை பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் கவனித்தார்.
பதம் 10.9.23
புரா நாரத-சாபேன வ்ருக்ஷதாம் ப்ராபிதௌ மதாத்
நளகூவர-மணிக்ரீவாவ் இதி க்யாதௌ ஸ்ரியான்விதௌ
புரா—முன்பு; நாரத-சாபேன—நாரதரால் சபிக்கப்பட்ட; வ்ருக்ஷதாம்—மரங்களின் உருவங்களை; ப்ராபிதெள—பெற்றனர்; மதாத்—செருக்கின் காரணத்தால்; நளகூவர—அவர்களுள் ஒருவன் நளகூவரன்; மணிக்ரீவௌ—மற்றவன் மணிகிரீவன்; இதி—இவ்வாறாக; க்யாதெள—புகழ்பெற்ற; ஸ்ரியா அன்விதௌ—செல்வம் மிகுந்த.
நளகூவரன் மற்றும் மணிகிரீவன் என்ற இவ்விரு மகன்களும் முற்பிறவியில் மிகவும் செல்வச் சிறப்புடனும், அதிர்ஷ்டசாலிகளாகவும் இருந்தனர். ஆனால் அகங்காரத்தாலும், பொய்க் கெளரவத்தாலும் யாரைப் பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. இதனால் அவர்கள் நாரத முனிவரால் மரங்களாகும்படி சபிக்கப்பட்டனர்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “தாய் யசோதை ஸ்ரீ கிருஷ்ணரைக் கட்டுதல்” எனும் தலைப்பை கொண்ட ஒன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.