ஸ்ரீ பிரம்ம ஸம்ஹிதை

(தெய்வத்திரு ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் கோஸ்வாமி மஹாராஜர் )

ஸ்லோகம் – 1
ஈஸ்வர பரம: க்ருஷ்ண ஸச்சிதா3நந்த3 விக்3ரஹ:
அநாதி3ராதி3ர் கோ3விந்த3: ஸர்வ காரண காரணம்

கோவிந்தன் எனப்படும் கிருஷ்ணர் முழுமுதற்கடவுள். அவரது சரீரம் நித்திய ஆனந்தமயமானது. அவர் சகலத்தின் தோற்றுவாய். அவர் ஆதியற்றவர், பல காரணங்களுக்கும் அவரே காரணமானவர்.


ஸ்லோகம் – 29
சிந்தாமணி ப்ரகர ஸத்3மஸு கல்பவ்ருக்ஷ
லக்ஷ வ்ருதேஷு ஸுரபி4ர் அபி4பால யந்தம்
லக்ஷ்மி ஸஹஸ்ர ஶத ஸம்ப்4ரம ஸேவ்ய மாநம்
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

நான் கோவிந்தனை வழிபடுகிறேன். அவர் ஆதிபுருஷன். முதல் புருஷனான அவர் பசுக்களை மேய்ப்பவர். இந்த இடம் ஆன்மீக விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டது. சுற்றிலும் லட்சக் கணக்கான கேட்டவரமளிக்கும் கல்பதருக்கள். இந்த ஆதி புருஷனுக்கு ஆயிரமாயிரம் லக்ஷ்மிகள் அல்லது கோபியர் சேவை புரிகின்றனர்.


ஸ்லோகம் – 30
வேணும் க்வணந்தம் அரவிந்த33ளாய தாக்ஷம்
3ரஹாவதம் ஸமஸிதாம் பு33 ஸுந்த3ராங்க3ம்
கந்த3ர்ப கோடி கமநீய விஶேஷ ஶோப4ம்
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

ஆதிபுருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். புல்லாங்குழல் இசைப்பில் அவர் தன்னிகரற்றவர். அவரது மொட்டு விரிந்தது போன்ற மலர்க்கண்கள்; தலையில் மயிற்பீலி. அவரது கொள்ளை கொள்ளும் அழகு நீல மேகங்கள் போன்றது. அவரது ஒப்பற்ற எழில் உருவம் லட்சக்கணக்கான கோபியரை வசீகரிக்கக்கூடியது.


ஸ்லோகம் – 31
ஆலோல சந்த3ர கலஸத்3 வநமால்ய வம்ஶீ
ரத்நாங்க33ம் ப்ரணய கேலி கலா விளாஸம்
ஶ்யாமம் த்ரிப4ங்க3 ளலிதம் நியத ப்ரகாஶம்
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

ஆதிபுருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். அவரது கழுத்தில் சந்திர உருவம் பதித்த தொங்கட்டான் பூமாலை; அவரது இரு கரங்களும் முரளியும், அணிகலன்களும் தரித்துள்ளன. அவர் எப்போதும் இன்பலீலைகளில் ஆழ்ந்திருப்பவர். அவரது சியாமசுந்தர மூவனைத் தோற்றம் எப்போதும் வெளியில் தெரிகின்றது.


ஸ்லோகம் – 32
அங்கா3நி யஸ்ய ஸகலேந்த்3ரிய வ்ருத்தி மந்தி
பஶ்யந்தி பாந்தி கலயந்தி சிரம் ஜக3ந்தி
ஆநந்த3 சிந்மய ஸது3ஜ்ஜ்வல விக்3ர ஹஸ்ய
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி


யாருடைய உருவம் ஆனந்தம், உண்மை, முழுமை நிரம்பியதோ (கண்ணைக் கூசும் பிரகாசமானது) அத்தகைய முழுமுதற் கடவுளான கோவிந்தனை நான் வணங்குகிறேன். அந்த ஆன்மீக உருவத்தின் ஒவ்வொரு அவயவமும் எல்லா அவயவங்களின் வேலைத்திறனையும் கொண்டது. அத்தகைய முழுமுதற் கடவுள் என்றென்றும் பார்த்து பரிபாலித்து, ஆன்மீக மற்றும் ஜட புவனங்களை இயக்கி வருகிறார்.


ஸ்லோகம் – 33
அத்3வைதம் அச்யுதம் அநாதி3ம் அநந்த ரூபம்
ஆத்3யம் புராண புருஷம் நவ யெவநம் ச
வேதே3ஷு து3ர்லப4ம் அது3ர்லப4ம் ஆத்ம – ப4க்தௌ
கோ3விந்த3ம் ஆதி3-புருஷம் தம் அஹம் ப4ஜாமி

வேதங்களாலும் அடையமுடியாத, ஆனால் ஆத்மார்த்த பக்தியினால் மட்டுமே அடையக்கூடிய அந்த உன்னத புருஷனை, புருஷோத்தமனை வணங்குகிறேன். அவர் ஈடு இணையற்றவர்; அழிவற்றவர்; ஆதி இல்லாதவர்; முடிவற்ற வடிவம் கொண்டவர், அவரே முதலும் நிரந்தமுமான புருஷன். இப்படி அன்றும் இன்றும் என்றென்றும் இருப்பவர் இளமை ததும்பும் வாலிபன்.


ஸ்லோகம் – 34
பந்தா2ஸ்து கோடி ஶத வத்ஸர ஸம்ப்ர க3ம்யோ
வாயோரதா2பி மநஸோ முநிபுங்க3 வாநாம்
ஸோ(அ)ப்யஸ்தி யத் ப்ரபத3 ஸீம்ந்ய விசிந்தய தத்த்வே
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

ஆதி புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். எண்ணற்ற யோகிகள் அவரது தாமரைத் திருவடியின் கால் கட்டை விரலின் ஒரு விளிம்பையே காண்கின்றனர். இவர்கள் ஆன்மீக விருப்பத்தினால் உந்தப்பட்டு மூச்சுக் கட்டுப்பாடான ப்ராணாயமத்தை மேற்கொள்கிறார்கள். இதே கால்கட்டை விரல் விளிம்பை கண்ணோக்கும் ஞானிகள் கூட உருவமற்ற பிரம்மத்தை ஆண்டாண்டு காலமாய்த் தேடிக் கொண்டேயிருக்கிறவர்கள். பலவற்றை தவிர்த்த பிறகே பரமனைக் காண்பவர்கள்.


ஸ்லோகம் – 35
ஏகோ(அ) ப்யஸௌ ரசயிதும் ஜக3த்3 அண்ட கோடிம்
யச்ச3க்திர் அஸ்தி ஜக3த்3 அண்ட3 சயா யத3ந்த:
அண்டா3ந்த2ரஸ்த2 பரமாணு சயாந்தர ஸ்த2ம்
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

அவர் ஓர் பாகுபாடற்ற வஸ்து. ஏனென்றால் சக்திக்கும்,அதனை உடையவருக்கும் இடையில் பாகுபாடில்லை. கோடானு கோடிஉலகங்களைப் படைக்கும் அவர் தொழிலில் அவரது சக்தி அவரிடமிருந்து பிரிவதில்லை. எல்லா பிரபஞ்சங்களும் அவரிடத்தில்;அவர் ஒவ்வொரு அணுவிலும் முழுமையாக உள்ளார். இந்த அணுக்கள் ஒரே சமயத்தில் பிரபஞ்சம் முழுவதிலும் சிதறிக் கிடக்கின்றன. இத்தகைய ஆதிகோவிந்தனை நான் வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 36
யத்3 பா4வ பா4வித தி4யோ மநுஜாஸ் ததை2
ஸம்ப்ராப்ய ரூப மஹிமாஸந யாந பூ4ஷா:
ஸூக்தைர் யமேவ நிக3ம ப்ரதி2தை ஸ்துவந்தி
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

ஆதி புருஷனான அதே கோவிந்தனை வணங்குகிறேன். பக்தி சொரிந்த மாந்தர்கள் இந்த ஆதிபுருஷனை துதிபாடுகின்றனர். வேதங்கள் வழங்கும் மந்த்ர-ஸுக்கத்தை ஒதுகின்றனர். இப்படியாக அவர்கள் தகுந் அழகு, பெருமை, சிங்காதனங்கள், ஊர்திகள், அணிகலன்கள், முதலானவற்றைப் பெறுகின்றனர்.


ஸ்லோகம் – 37
ஆநந்த3 சிந்மய ரஸ ப்ரதிபா4வி தாபி4ஸ்
தாபி4ர் ய ஏவ நிஜ ரூபதயா கலாபி4:
கோ3ளோக ஏவ நிவஸத்யகி2லாத்ம பூ4தோ
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

கோலோகத்தில் ராதையுடன் வசிக்கும் ஆதிபுருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன். ராதை அவரது சொந்த ஆன்மீக சாயல் கொண்டவள். பரமபுருஷன் ஆயக்கலைகள் அறுபத்துனான்கினையும் நேயக்கற்றவர். ராதையின் தோழிகளுடன் கூடிய கூட்டத்தில் கோவிந்தன் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பவர். ராதையின் சகிகள் அவளது விரிவுகள், ஒவ்வொரு கோபியிடமும் ராதையின் நிரந்தர ஆனந்த ஆன்மிக ரஸம் பட்டு பரவியிருக்கிறது.


ஸ்லோகம் – 38
ப்ரேமாஞ்ஜந ச்சு2ரித ப4க்தி விளோச நேந
ஸந்தஹ் ஸதை3வ ஹ்ருத3யேஷு விளோகயந்தி
யம் ஶ்யாமஸுந்த3ரம் அசிந்தய கு3ண ஸ்வருபம்
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

கிருஷ்ணரேயான சியாமசுந்தரனை, கோவிந்தனை, ஆதிபுருஷனை வணங்குகிறேன். அவர் எண்ணமுடியாத குணாதிசயங்கள் கொண்டவர். அவரை தூய பக்தர்கள் தங்கள் இதயத்தின் இதயத்தில் வைத்து அஞ்சனம் நீட்டியதுபோல அன்பு தீட்டிய விழிகளால் காண்கின்றனர்.


ஸ்லோகம் – 39
ராமாதி3 மூர்த்திஷு கலா நியமேந திஷ்ட2ந்
நாநாவதார மகரோத்3 பு4வநேஷு கிந்து
க்ருஷ்ண: ஸ்வயம் ஸமப4வத் பரம: புமாந் யோ
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

எந்த ஆதி புருஷன் கோவிந்தன் கிருஷ்ணர், ராமன், நரசிம்மன், வாமணன் போன்ற அவதாரங்களை எடுத்தவரோ அவரையே நான் வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 40
யஸ்ய ப்ராபா4 ப்ரப4வதோ ஜக33ண்ட3 கோடி
கோடிஷ்வஶேஷ வஸுதா4தி3 விபூ4தி பி4ந்நம்
தத்3 ப்3ரஹ்ம நிஷ்களம் அனந்தம் அஶேஷ பூ4தம்
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

உபநிஷதங்கள் எதை பிரம்மம் என்று வர்ணிக்கின்றதோ அதன் தோற்றுவாய் சுயம்பிரகாசமான ஆதிபுருஷன் கோவிந்தன். இந்த கோவிந்தன் வகுபடாத வரம்பற்ற எல்லையற்ற சத்தியன். இவரை நான் வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 41
மாயா ஹி யஸ்ய ஜக33ண்ட3 ஶதானி ஸூதே
த்ரைகு3ண்ய தத்3 விஷய வேத3 விதாய மாநா
ஸத்த்வா வளம்பி3 பர ஸத்த்வம் விஶுத்34 ஸத்த்வம்
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

அனைத்து இருப்பிற்கும் ஆதாரமான இறுதி உண்மையான மெய்ப்பொருள் புருஷனான கோவிந்தனை வணங்குகிறேன். அவரது புறச்சக்தி சத்வ, ரஜ, தம, குணங்களைத் தழுவியது. ஜட உலகம் பற்றிய வேத அறிவை பரப்பச் செய்வது.


ஸ்லோகம் – 42
ஆநந்த3 சிந்மய ரஸாத்மதயா மன:ஸு
ய: ப்ராணிநாம் ப்ரதிப2லந் ஸ்மரதா முபேத்ய
லீலாயிதேந பு4வநானி ஜயத்ய ஜஸ்ரம்
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

புருஷனான கோவிந்தனை நான் வணங்குகிறேன், அவரது புகழ் உலகில் ஆட்சி செலுத்துகின்றது. அவரது திருவிளையாடல்கள் அகிலம் பரந்தவை. சச்சிதானந்த சொரூபமாய் அவரது மாட்சிமை அகிலத்தில் நிலவுகின்றது.


ஸ்லோகம் – 43
கோ3ளோக நாம்நி நிஜ தா4ம்நி தலே ச தஸ்ய
தே3வி மஹேஶ ஹரி தா4மஸு தேஷு தேஷு
தே தே ப்ரபா4வ நிசயா விஹிதாஶ்ச் ச யேந
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

தேவிதாமம் என்ற இருப்பிடம் அனைத்து உலகங்களிலும் மிகமிகத் தாழ்மையான உலகம், அதற்கும் சற்றுமேலாக மஹேச தாமம் என்ற சிவலோகம். அதற்கும் மேலாக ஹரிதாமம் என்ற வைகுந்தலோகம். எல்லாவற்றுக்கும் சிகரமாய் கோலோகம். பகவான் கிருஷ்ணரின் வசிப்பிடம் இது. படிப்படியாக உலகங்களை உரிய ஆளுனர்களுக்கு வழங்கிய ஆதிபுருஷனான கேசவனை நான் வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 44
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய ஸாதன சக்திர் ஏக
சாயேவ யஸ்ய புவனானி பிபர்தி துர்கா
இச்சானுரூப மபியஸ்ய ச சேஷ்ட தேஸா
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

சித் சக்தியின் நிழலான மாயா (புறச் சக்தி) மக்களால் துர்காதேவியாக வழிபடப்படுகிறாள். அவளே இந்த ஜகத்தைப் படைத்து, காத்து, அழிப்பவள்.யாருடைய சித்தப்படி துர்காதேவி நடந்துகொள்கிறாளோ அந்த ஆதி கோவிந்தனை நான் வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 45
க்ஷுரம் யதா23தி4 விகார விஶேஷ யோகா3த்
ஸஞ்ஜாயதே ந ஹி தத: ப்ரத23ஸ்தி ஹேதோ
ய: ஶம்பு4தாம் அபி ததா2 ஸமுபைதி கார்யாத்
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

அமிலங்களால் பால் தயிராகத் திரிகிறது. இருப்பினும் இந்த தயிர் பாலும் அல்ல; பாலிலிருந்து தன்மையில் மாறுபட்டதுமல்ல. அதே போன்ற ஆதி புருஷனாகிய கோவிந்தனை நான் வணங்குகிறேன். இந்த ஆதி புருஷனிடமிருந்து திரிபடைந்தவர் சிவபெருமான்; அழிக்கும் தொழிலின் அதிபதி.


ஸ்லோகம் – 46
தீ3பார்சிரேவ ஹி த3ஶாந்தரம் அபி4யுபேத்ய
தீ3பாயதே விவருத ஹேது ஸமாந த4ர்மா
யஸ் தாத்3ருக்3 ஏவ ஹி ச விஷ்ணுதயா விபா4தி
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

ஒரு தீபம் மற்றொரு தீபத்தை ஏற்றினாலும் தன்னொளி குறைவதில்லை. அதேபோல் தன்னை பல விதங்களில் தோன்றச் செய்யும் பிரபு கோவிந்தனை நான் வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 47
ய: காரணார்ணவ ஜலே ப4ஜதி ஸ்ம யோக3
நித்3ராம் அநந்த ஜக3த்3 அண்ட3 ஸ ரோம கூப:
ஆதா4ர ஶக்திம் அவலம்ப்3ய பராம் ஸ்வ மூர்த்திம்
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

ஆதிபுருஷன் கோவிந்தனின் ஓர் அம்சமான அனந்தன் என் ஆதிசேஷன், காரணக்கடலில் ஆதிசேஷன் மீது படுத்த நிலையில் யோகநித்திரை புரிகிறார் கோவிந்தன். அவரது கேச நுண்துளைகளில் இந்த பிரபஞ்சமே அடங்கியிருக்கிறது. அத்தகைய கோவிந்தனை. ஆதிபுருஷனை வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 48
யஸ்யைக நிஶ்வஸித காலம் அதா2வலம்ப்3
ஜீவந்தி லோம பி3லஜா ஜக3த்3 அண்ட3 நாதா2:
விஷ்ணுர் மஹாந் ஸ இஹயஸ்ய கலா விஶேஷோ
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

பிரம்மனும் இதர ஜட உலக அதிகாரிகளும் மஹாவிஷ்ணுவின் முடியின் நுண்துளையிலிருந்து தோன்றியவர்கள். மஹா விஷ்ணு மூச்சை உள்ளிழுக்கும் வரையில் இவர்கள் உயிருடன் இருப்பவர்கள். யாரின் அங்கத்தின் அங்கம் மஹா விஷ்ணுவோ அன்னவரை நான் வணங்குகிறேன். அவரே ஆதி புருஷன் கோவிந்தன்.


ஸ்லோகம் – 49
பா4ஸ்வாந் யதா2ஶ்ம ஶகலேஷு நிஜேஷு தேஜ:
ஸ்வீயம் கியத் ப்ரகடயத்யபி தத்3வத் அத்ர
ப்3ரஹ்மா ய ஏஷ ஜக3த்3 அண்ட3 விதா4ந கர்தா
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

ஆதி புருஷனான கோவிந்தனிடமிருந்து பிரிந்தவர் அவரது அங்கமான பிரம்மா. இந்த மண்ணுலகத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை அவர் கோவிந்தனிடம் இருந்தே பெறுகிறார். தன் பெயரையே கொண்ட சூர்யகாந்தக் கற்கள் மேல் சூரிய ஒளிபட்டு பிரகாசிப்பதில்லையா அது போன்றது இது. அத்தகைய முழுமுதற் கடவுளான கோவிந்தனை வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 50
யத் பாத3 பல்லவ யுக3ம் விநிதா4ய கும்ப4
த்3வந்த்3வே ப்ரணாம ஸமயே ஸ க3ணாதி4ராஜ:
விக்4நாந் விஹந்தும் அலம் அஸ்ய ஜக3த்-த்ரயஸ்ய
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

ஆதி புருஷனான கோவிந்தனின் தாமரைத் திருவடிகளை கணேசன் தன் தந்தங்களில் தாங்குகிறார். எதற்கென்றால் மூவுலகங்களிலும் முன்னேற்றப் பாதையில் தென்படும் தடைகளை நீக்குவதற்கான சக்தியை அதிகாரத்தை பெறுவதற்கு. அத்தகைய கோவிந்தனை நான் வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 51
அக்3நிர் மஹீ க33நம் அம்பு3 மருத்3தி3 ஶஶ்ச
காலஸ் ததா2த்ம-மநஸ் ஸீதி ஜக3த்-த்ரயாணி
யஸ்மாத்34வந்தி விப4வந்தி விஶந்தி யம் ச
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

நெருப்பு, மண், அண்டைவெளி, தண்ணீர், காற்று, திசை, காலம், ஆத்மா, மனது என்ற ஒன்பது மூலகங்களால் மூவுலகும் நிறைந்துள்ளது. யாரிடமிருந்து இவை தோன்றுகிறதோ, யாரிடம் இவை இருக்கின்றதா, ஊழி நாசத்தின் போது யாரிடம் இவை அடைக்கலம் புகுகின்றதோ அவர் ஆதி புருஷன். அந்த கோவிந்தனை நான் வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 52
யச் சக்ஷுர் ஏஷ ஸவிதா ஸக3ல க்ரஹாணாம்
ராஜா ஸமஸ்த ஸுரமூர்த்திர் அஶேஷ தேஜா:
யஸ்யாஜ்ஞயா ப்4ரமதி ஸம்ப்4ருத கால சக்ரோ
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

எல்லா கிரகங்களின் அரசன் சூரியன், இதன் ஒளி அளப்பரியது. நல்லாத்ம சொரூபம் சூரியன். இவ்வுலகத்தின் கண் போன்றது சூரியன், காலசக்ரத்தில் ஏறி புவனத்தை பவனி வரும் சூரியன் பிரபு கோவிந்தனின் ஆணைப்படி நடப்பவர். அந்த கோவிந்தனை நான் வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 53
4ர்மோ(அ)த2 பாப நிச்சயஸ் ஶ்ருதயஸ் தபாம்ஸி
ப்3ரஹ்மாதி3 கீட பதகா3வத4யஶ்ச ஜீவா:
யத்33த மாத்ர விப4வ ப்ரகட ப்ரபா4வா
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

நான் மூல புருஷன் கோவிந்தனை வழிபடுகிறேன். இவர் வழங்கிய அதிகாரம் எல்லா பாவங்கள், புண்ணியங்கள், வேதங்கள், தவங்கள், ஜீவன்கள், பிரம்மா முதல் அற்ப பூச்சிவரை நிறைந்துள்ளன.


ஸ்லோகம் – 54
யஸ் த்வ இந்த்3ரகோ3பம் அத2வேந்த்3ரம் அஹோ ஸ்வ கர்மா
3ந்தா4நுரூப ப2ல பா4ஜனம் ஆதநோதி
கர்மாணி நிர்த3ஹதி கிந்து ச ப4க்தி பா4ஜாம்
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

கோவிந்தன் பக்தர்களின் கர்ம வினைகளை வேரோடு சுட்டெரித்து அழிக்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் வினைகளுக்கேற்ற பலனை அனுபவிக்குமாறு அவர் செய்கிறார். எந்தெந்த துறையில் மக்கள் இருந்தாலும் அவர்களின் முன் வினைகளில் இன்பமானாலும் அது துன்பமானாலும் பலனை அனுபவிக்க செய்கிறார். இந்திரகோபம் என்ற அற்ப பூச்சியானாலும் இந்திரனேயானாலும் அவரின் இந்த கட்டளையை மீற முடியாது.


ஸ்லோகம் – 55
யம் க்ரோத4 காம ஸஹஜ ப்ரணயாதி3 பீ4தி
வாத்ஸல்ய மோஹ கு3ரு கௌ3ரவ ஸேவ்ய பா4வை:
ஸஞ்சிந்த்ய தஸ்ய ஸத்3ரூஶீம் தநுமாபு ரேதே
கோ3விந்த3ம் ஆதி3 புருஷம் தமஹம் ப4ஜாமி

சினம், காம இச்சை, நட்பு போன்ற அன்பு, பயம், பெற்றோர் வாஞ்சை, ஏமாற்றம், மரியாதை விரும்பி செய்யும் சேவை, போன்ற மனநிலைகளில் கோவிந்தனை தியானிப்பவர்கள் தங்கள் தியான நிலைக்கேற்ப தேகத்தைப் பெறுகின்றனர். அப்படிபட்ட கோவிந்தனை நான் வணங்குகிறேன்.


ஸ்லோகம் – 56
ஶ்ரிய: காந்தா: காந்தா: பரமபுருஷ: கல்பதரவோ
த்3ருமா பூ4மிஶ் சிந்தாமணி க3ண மயி தோயம் அம்ருதம்
கதா2 கா3நம் நாட்யம் க3மநம் அபி வம்ஶீ ப்ரியஸகீ2
சிதா3நந்த3ம் ஜ்யோதி பரமபி ததா2ஸ்வாத்ய மபி ச
ஸ யத்ர க்ஷுராப்3தி ஸ்ரவதி ஸுரபீ4ப்4யஶ்ச ஸு மஹாந்
நிமேஷார்தா4க்2யோ வா வ்ரஜதி ந ஹி யத்ராபி ஸமய:
4ஜே ஶ்வேதத்3வீபம் தம் அஹம் இஹ கோ3ளோகம் இதியம்
வித3ந்தஸ்தே ஸந்த: க்ஷதி விரள சாரா: கதிபயே

ஸ்வேத தீபம் என்னும் அந்த தெய்வீக இருப்பிடத்தை நான் வணங்குகிறேன். அங்கே பகவானின் அன்பு பத்தினியர் லட்சுமிகள், இவர்கள் கலப்படமற்ற ஆன்மீகச்சாறு; கிருஷ்ணரை தங்களின் காதலனாக எண்ணி ஏங்குபவர்கள். இங்குள்ள ஒவ்வொரு மரமும் கேட்டது தரும் அதிசய மரம். இதன் மண்ணோ சிந்தாமணி. இங்கே தண்ணீர் எல்லாம் அமுதம்: ஒவ்வொரு அசைவும் அபிநயம்; இங்கு புல்லாங்குழல் பிடித்த ஏவலாள். இங்கு வீசும் ஒளி பேரானந்தமானது. இங்கு உயர்ந்த ஆன்மீக இருப்புகள் எல்லாம் அனுபவிக்கத்தகுந்ததும் சுவை நிரம்பியதுமாகும். இங்கு வ(த)ங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் பாற்கடலாக பால் சொரிந்து தள்ளுகின்றன. இங்கு அசையாமல் காலம் ஸ்தம்பித்து நிற்கின்றது. ஆகையால் எதிர்காலம் இல்லை; அரை நொடி கூட இங்கு கழிவதில்லை. அந்த உலகம் கோலோகம். யாருக்கு என்றால் ஒரு சில தன்னையறிந்த ஆத்மாக்களுக்கே.

ஸ்ரீ ஸ்ரீ ப்3ரஹ்ம ஸம்ஹிதா கி- ஜெய்!!
——-ஸ்ரீ ப்3ரஹ்ம ஸம்ஹிதை முற்றிற்று——

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare