பீஷ்ம ஸ்துதி

(ஸ்ரீமத் பாகவதம் 1.9.32 – 1.9.43)

பதம் 1.9.32

ஸ்ரீ பீஷ்ம உவாச
இதி மதிர் உபகல்பிதா வித்ருஷ்ணா
43வதி ஸாத்வத-புங்க3வே விபூ4ம்னி
ஸ்வ ஸுக2ம் உபக3தே க்வசித்3 விஹர் தும்
ப்ரக்ருதிம் உபேயுஷி யத்3-ப4வ-ப்ரவாஹ:

பீஷ்மதேவர் கூறினார்; இதுவரை வெவ்வேறு விஷயங்களிலும், கடமைகளிலும் ஈடுபட்டிருந்த எனது சிந்தனை, உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவற்றை இப்பொழுது நான் சர்வசக்தி படைத்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரில் ஈடுபடுத்துவேனாக, அவர் எப்பொழுதும் சுய திருப்தியுடையவராவார். ஆனால் அவரிடமிருந்து தான் ஜடவுலக படைக்கப்படுகிறது என்றாலும், அவர் பக்தர்களில் தலைவராக இருப்பதால், ஐடவுவகில் அவதரித்து தெய்வீக இன்பத்தை அவர் அனுபவிக்கிறார்.

பதம் 1.9.33

த்ரி-பு4வன-கமனம் தமால-வர்ணம்
ரவி-கர-கௌ3ர-வர-அம்ப3ரம் த3தா4னே
வபுர் அலக குலாவ்ருதான்னாப்3ஜம்
விஜய-ஸகே2 ரதிர் அஸ்து மே ‘னவத்3யா

ஸ்ரீ க்ருஷ்ணர், அர்ஜுனனின் நெருங்கிய நண்பராவார். அவர் தமால மரத்தின் நீல நிறத்தையொத்த திவ்யமான உடலுடன் இவ்வுலகில் தோன்றியுள்ளார். மூன்று கிரக அமைப்புக்களில் (மேல், மத்திய, கீழ்) உள்ள அனைவரையும் அவரது உடல் கவர்ந்திழுக்கிறது. பளபளக்கும் அவரது மஞ்சள் நிற ஆடையும், சந்தனக் குழம்பினால் வரையப்பட்ட சித்திரங்களைக் கொண்ட, அவரது தாமரை முகமும் என்னைக் கவர்ந்திழுக்கும் பொருட்களாக அமைய வேண்டும். மேலும் கர்ம பலன்களில். நான் பற்றில்லாமல் இருப்பேனாக.

பதம் 1.9.34

யுதி துரக3–ரஜோ-விதூம்ர-விஷ்வக்
௧ச-லூலித-ஸ்ரமவாரி-அலங்க்ருதாஸ்யே
மம நிசித-சரைர் விபி4த்யமான-
த்வசி விலஸத் கவசே ‘ஸ்து க்ருஷ்ண ஆத்மா

(சிநேகத்தினால் அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஏவல் புரிந்த இடமான) போர்க்களத்தில், குதிரைகளின் குளம்புகளால் எழுப்பப்பட்ட தூசுகளினால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அலைபாயும் கேசம் சாம்பல் நிறமாக மாறியது. மேலும் அவரது பணியினால் விளைந்த வியர்வை முத்துக்கள் அவரது முகத்தை நனைத்தன. எனது கூரிய அம்புகள் தைத்த காயங்களால் அதிகரிக்கப்பட்ட இவ்வெல்லா அலங்காரங்களையும் அவர் அனுபவித்தார். என் மனம் ஸ்ரீ கிருஷ்ணரிடமே ஆழ்ந்து விடட்டும்.

பதம் 1.9.35

ஸபதி3 ஸகி2-வசோ நிசம்ய மத்4யே
நிஜ-பரயோர் ப3லயோ ரத2ம் நிவேஸ்ய
ஸ்தி2தவதி பர-ஸைனிகாயுர் அக்ஷணா
ஹ்ருதவதி பார்த-ஸகே2 ரதி மமாஸ்து

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது நண்பனின் உத்தரவை ஏற்று, அர்ஜுனனுடைய சேனைக்கும்,துரியோதனனின் சேனைக்கும் மத்தியில் தேரை ஓட்டினார். அங்கிருந்த சமயத்தில், தமது கருணைமிருந்த பார்வையால் எதிரிலுள்ள படைப்பிரிவினரின் ஆயுளைக் குறைத்து விட்டார். எதிரியின் மீது பார்வையைச் செலுத்தியே இதை அவர் சாதித்துவிட்டார். அந்த கிருஷ்ணரின் மீது என் மனம் நிலைக்கட்டும்.

பதம் 1.9.36

வ்யவஹித-ப்ருதனா–முக2ம் நிரீக்ஷ்ய
ஸ்வ-ஜன-வதாத்3 விமுக2ஸ்ய தோஷ—பு3த்4யா
குமதிம் அஹரத்3 ஆத்ம-வித்3யயா யஸ்
சரண-ரதி: பரமஸ்ய தஸ்ய மே ‘ஸ்து

போர்க்களத்தில் தனக்கு முன் இருந்த வீரர்களையும், சேனாதிபதிகளையும் பார்வையிட்ட அர்ஜுனன், அறியாமையினால் கலக்கமடைந்ததாக காணப்பட்ட பொழுது, பகவான் அவருக்கு ஆன்மீக அறிவைப் புகட்டி அவரது அறியாமையைக் களைந்தார். அவரது தாமரைப் பாதங்கள் எப்பொழுதும் என்னைக் கவர்ந்திழுக்கும் பொருளாக அமையட்டும்.

பதம் 1.9.37

ஸ்வ-நிக3மம் அபஹாய மத்-ப்தரிக்ஞாம்
ருதம் அதி4கர் தும் அவப்லுதோ ரத2ஸ்த2:
த்ருத-ரத2சரணோ ‘ப்4யயாச் சலத்3கு3ர்
ஹரிர் இவ ஹந்தும் இப4ம் க3தோத்தரீய:

அவரது சொந்த வாக்குறுதியை மீறி என் ஆசையை நிறைவேற்றும் வகையில் தேரிலிருந்து கீழே குதித்த அவர், அதன் சக்கரத்தை கையில் எடுத்துக்கொண்டு, சிங்கம் யானையைக் கொன்றுவிட செய்வதை போல், என்னை நோக்கி விரைவாக ஓடிவந்தார். வழியில் அவ மேலாடையும் கூட சரிந்து கீழே விழுந்தது.

பதம் 1.9.38

சித-விஷிக2-ஹதோ விசீர்ண-த3ம் ஷ:
க்ஷதஜ-பரிப்லுத ஆததாயினோ மே
ப்ரஸப4ம் அபி4ஸஸார மத்3–வதா4ர்த2ம்
ஸ ப4வது மே ப4கவான் க3திர் முகுந்த3:

முக்தி அளிப்பவரான, அந்த பரம் புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எனது முடிவான இலக்காக இருப்பாராக எனது கூரிய அம்புகளால் ஏற்பட்ட காயங்களினால் கோபமடைந்ததைப் போல், போர்க்களத்தில் என்னை அவர் திடீரென்று தாக்க முற்பட்டார். அவரது கேடயம் சிதறிப் போயிருந்தது. மேலும் காயங்களினால் அவரது உடலில் இரத்தம் தோய்ந்திருந்தது.

பதம் 1.9.39

விஜய-ரத2-குடும்ப3 ஆத்த-தோத்ரே
த்ருத-ஹய-ரஸ்மினி தச்—ச்2ரியேக்ஷணீயே
4கவதி ரதிர் அஸ்து மே முமூர்ஷோர்
யம் இஹ நிரீஷ்ய ஹதா க3தா: ஸ்வ-ரூபம்

இறக்கும் சமயத்தில் எனது இறுதி கவர்ச்சி பரம புருஷராகிய ஸ்ரீகிருஷ்ணர் மீது நிலைபெறட்டும். வலது கரத்தில் ஒரு சாட்டையையும். இடது கரத்தில் கடிவாளத்தையும் பிடித்திருந்தவரும், எல்லா வகையிலும் அர்ஜுனனின் இரதத்திற்குப் பாதுகாப்பளிப்பதில் மிகவும் கவனமாக இருந்தவருமான, அர்ஜுனனுடைய சாரதியின் மீது என் மனதை நான் ஒருமுனைப்படுத்துகிறேன். குருட்சேத்திரப் போர்க்களத்தில் அவரைக் கண்டவர்கள், மரணத்திற்குப் பின் அவர்களது சுய உருவங்களைப் பெற்றனர்.

பதம் 1.9.40

லலித-க3தி-விலாஸ-வல்கு3ஹாஸ
ப்ரணய–நிரீக்ஷண-கல்பிதோருமானா:
க்ருத-மனு-க்ருத-வத்ய உன்மதா3ந்தா:
ப்ரக்ருதிம் அக3ன் கில யஸ்ய கோ3ப-வத்4வ:

அன்பான புன்னகையாலும், அசைவுகளாலும் விருந்தாவனத்தின் இளநங்கைகளைக் (கோபியர்கள்) கவர்ந்தவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் என் மனம் நிலை பெறட்டும். (ராச நடனத்திலிருந்து பகவான் மறைந்த பிறகு) இளநங்கைகள் பகவானின் அங்க அசைவுகளை அப்படியே நடித்துக் காட்டினர்.

பதம் 1.9.41

முனி-க3ண-ந்ருப்-வர்ய-ஸங்குலே ‘ந்த:
ஸதஸி யுதிஷ்டிர-ராஜஸூய ஏஷாம்
அர்ஹணம் உபபேத3 ஈக்ஷணீயோ
மம த்ரு3ஷி-கோ3சர ஏஷ ஆவிர் ஆத்மா

யுதிஷ்டிர மகாராஜனால் இயற்றப்பட்ட ராஜஸூய யாகத்தின் போது, அரச குடும்பத்தினர் மற்றும் பண்டிதர்கள் ஆகிய மிகச்சிறந்த உலகப் பிரமுகர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். அச்சிறந்த கூட்டத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவராலும் இணையற்ற பரம புருஷராக வழிபடப்பட்டார். இச்சம்பவம் நான் இருக்கும்பொழுது நடந்ததாகும். மேலும் பகவானிடம் என் மனதை பதிப்பதற்காகவே இச்சம்பவத்தை நான் நினைவு கூர்ந்தேன்.

பதம் 1.9.42

தம் இமம் அஹம் அஜம் சரீர-பா4ஜாம்
ஹ்ருதி3 ஹ்ருதி3 தி4ஷ்டிதம் ஆத்ம கல்பிதானாம்
ப்ரதித்3ருஷம் இவ நைகதா4ர்கம் ஏகம்
ஸமதி4-க3தோ ‘ஸ்மி விதூ4த-பே43-மோஹ:

பகவான் எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறார், மனக் கற்பனையாளர்களின் இதயத்திலும் இருக்கிறார் என்பதற்கு எதிரான எண்யத்திலிருந்து இப்பொழுது நான் விடுபட்டுவிட்டேன் என்பதால் இப்பொழுது என் முன் நிற்கும் அந்த ஒரே பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணரை முழு மன ஒருமையுடன் என்னால் தியானிக்க முடிகிறது.

பதம் 1.9.43

ஸூத உவாச
க்ருஷ்ண ஏவம் ப4கவதி மனோ
வாக்3 த்3ருஷ்டி வ்ருத்திபி:
ஆத்மனி ஆத்மானம் ஆவேஷ்ய
ஸோ ‘ன்தஹ்ஸ்வாஸ உபாரமத்

சூத கோஸ்வாமி கூறினார். இவ்வாறாக பீஷ்மதேவர் அவரது மனம், பேச்சு, பார்வை மற்றும் செயல்கள் ஆகியவற்றுடன் பரமாத்மாவாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு மெளனமானார். அவரது மூச்சும் நின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare