ஸ்ரீ நரசிம்ஹ கவசம்

(1)
ந்ரு’ஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹலாதே3 நோதி3தம் புரா
ஸர்வ ரக்ஷாகரம் புண்யம் ஸர்வோபத்3ரவ நாஶனம்

முன்னர் பிரகலாதனால் சொல்லப்பட்டதும், சகல விதமான இன்னல்களிலிருந்தும் ரட்சிக்கக்கூடியதும், புண்ணியமானதும், எல்லாவித உபத்திரவங்களையும் நாசம் செய்யக்கூடியதுமான நரசிம்ம கவசத்தைக் கூறுகிறேன்.

(2)
ஸர்வ ஸம்பத்கரம் சைவ
ஸ்வர்க3 மோக்ஷ ப்ரதா3யகம்
த்4யாத்வா ந்ரு’ஸிம்ஹம் தே3வேஸம்
ஹேம ஸிம்ஹாஸநஸ்த்தி2தம்

இதைப் பாராயணம் செய்வதால் சகல சம்பத்துகளையும் பெறலாம். சொர்க்கவாசமோ, மோட்சமோ எது வேண்டினும் கிடைக்கும். தேவர்களின் ஈசனும், ஸ்வர்ணமயமான சிம்மாசனத்தில் வீற்றிருப்பவருமான நரசிம்மனை தியானிக்க வேண்டும்.

(3)
விவ்ரு’தாஸ்யம் த்ரிநயநம்
ஶரதி3ந்து3 ஸமப்ரப4ம்
லக்ஷ்ம்யாலிங்கி3த வாமாங்க3ம்
விபூ4திபி4: உபாஶ்ரிதம்

விரிந்த வாயைக் கொண்டவரும், மூன்று விழிகளுள்ளவரும், சரத்கால சந்திரன் போன்ற தேஜஸை யுடையவரும், ஸ்ரீமஹாலக்ஷ்மியால் ஆலிங்கனம் செய்யப்பட்ட இடது பாகத்தை கொண்ட வரும், விபூதிகளால் அலங்கரிக்கப்பட்டவருமாகிய அவரைத் தியானிக்க வேண்டும்.

(4)
சதுர்பு4ஜம் கோமளாங்க3ம் ஸ்வர்ண குண்ட3ல ஶோபி4தம்
ஸரோஜ ஶோபி4தோரஸ்கம் ரத்ந கேயூர முத்3ரிதம்

நான்கு கரங்களை உடையவரும், மிருதுவான அங்கங்களை உடையவரும், தங்கக் காதணிகளால் ஒளிர்வவரும், வலிமையும் வீரமும் நிறைந்த மார்பைக் கொண்டவரும், ரத்னமயமான தோள்வளையங்களால் அலங்கரிக்கப்பட்டவருமாவார்.

(5)
தப்த காஞ்ஜன ஸங்காஶம் பீத நிர்மல வாஸஸம்
இந்த்3ராதி3 ஸூரமெளளிஸ்த2 ஸ்பு2ரந் மாணிக்ய தீ3ப்திபி4:

உருக்கிய தங்கம் போல் காந்தி உடையவரும், நிர்மலமான பீதாம்பரத்தை அணிந்தவரும், இந்திரன் முதலிய தேவர்களின் சிரசுகளில் ஒளிவீசும் மாணிக்க ரத்தினங்களின் பிரகாசத்தால் மேலும் ஒளிர்பவருமாவார்.

(6)
விராஜிதபத3 த்3வந்த்3வம் ஶங்க2சக்ராதி3 ஹேதிபி4:
3ருத்மதா ச விநயாத் ஸ்தூயமாநம் முதா3ந்விதம்

சங்கு, சக்கரம் போன்ற ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், கருடாழ்வாரால் பணிவுடன் போற்றப்படுபவரும், ஆனந்தம் நிறைந்தவருமான அவரைத் தியானிக்க வேண்டும்.

(7)
ஸ்வஹ்ரு’த் கமல ஸம்வாஸம்
க்ரு’த்வா து கவசம் படே2த்
ந்ரு’ஸிம்ஹோ மே ஶிர:
பாது லோகரக்ஷாத்மஸம்ப4வ:

ஸ்ரீ நரசிம்ஹ ஸ்வாமியை தியானித்து இருதயத் தாமரையில் இருத்தி இக்கவசத்தைப் படிக்கவேண்டும். உலகத்தைக் காப்பதற்காகத் தோன்றிய ஸ்ரீநரசிம்மமூர்த்தி என் சிரசை ரட்சிக்கட்டும்.

(8)
ஸர்வகோ3பி ஸ்தம்ப4வாஸ:
பா2லம் மே ரக்ஷது த்4வநிம்
ந்ரு’ஸிம்ஹோ மே த்3ரு’ஶௌ பாது
ஸோமஸூர்யாக்3னி லோசனந:

எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவராயினும் தூணில் வசித்த ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி எனது நெற்றியைக் காக்கட்டும். எனது குரலை நரசிம்மர் பாதுகாக்கட்டும். சூரியன், சந்திரன், அக்னி மூவரையும் விழிகளாகக் கொண்டவர் எனது கண்களைக் காப்பாற்ற வேண்டும்.

(9)
ஸ்ம்ரு’திம் மே பாது ந்ரு’ஹரி:
முனிவர்ய ஸ்துதி ப்ரிய:
நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து
முக2ம் லக்ஷ்மீ முக2 ப்ரிய:

மேன்மையான மகரிஷிகளின் ஸ்துதிகளில் பிரியம் கொண்ட ஸ்ரீநரஹரி எனது சிந்தையைக் காக்கட்டும்.. சிங்கத்தின் நாசியையுடையவர் எனது மூக்கினை ரட்சிக்க வேண்டும். கமலவாஸினியின் வதனத்தைப் பார்ப்பதில் பிரியமுள்ளவர் என் முகத்தைக் காப்பாற்ற வேண்டும்.

(10)
ஸர்வ வித்3யாதி4ப : பாது
ந்ரு’ஸிம்ஹோ ரஸனாம் மம
வக்த்ரம் பாத்விந்து3 வத3ந:
ஸதா3 ப்ரஹலாத3 வந்தி3த:

அனைத்து வித்யைகளுக்கும் அதிபரான ஸ்ரீநரசிம்ஹர் எனது நாக்கைப் பாதுகாக்க வேண்டும். எப்பொழுதும் பிரகலாதனால் சேவிக்கப்பட்ட சந்திரன் போன்ற முகமுடையவர் எனது வாக்கை ரட்சிக்கட்டும்.

(11)
ந்ரு’ஸிம்ஹ : பாது மே கண்ட்ட2ம் ஸ்கந்தெள4 பூ44ரணாந்தக்ரு’த்
தி3வ்யாஸ்த்ர ஶோபி4த பு4ஜ: ந்ரு’ஸிம்ஹ: பாதுமே பு4ஜெள

ஸ்ரீநரசிம்ஹர் என் கழுத்தைக் காக்கவேண்டும். பூபாரத்தைக் குறைக்கின்றவர் எனது தோள்களை ரக்ஷிக்கட்டும். திவ்ய அஸ்திரங்களால் சோபிக்கின்ற கரங்களையுடைய ஸ்ரீநரசிம்மர் எனது கைகளைப் பாதுகாக்க வேண்டும்.

(12)
கரெள மே தே3வவரதோ3 ந்ரு’ஸிம்ஹ: பாது ஸர்வத:
ஹ்ரு’த3யம் யோகி3ஸாத்4யஶ்ச நிவாஸம் பாது மே ஹரி:

தேவர்களுக்கு வரமளிப்பவர் என் உள்ளங் கைகளை ரட்சிக்கட்டும். நான்கு பக்கங்களிலும் ஸ்ரீநரசிம்ம பகவான் பாதுகாக்க வேண்டும். யோகியரால் அடையத் தகுந்தவர் எனது இருதயத்தைக் காப்பாற்ற வேண்டும். ஸ்ரீஹரியானவர் தனது இருப்பிடமான என் நெஞ்சத்து ரக்ஷிக்கட்டும்.

(13)
மத்4யம் பாது ஹிரண்யாக்ஷவக்ஷ: குக்ஷிவிதா3ரண:
நாபி4ம் மே பாது ந்ரு’ஹரி: ஸ்வநாபி4 ப்3ரஹ்ம ஸம்ஸ்துத:

தங்கம் போன்ற கண்களைக் கொண்ட இரண்யகசிபுவின் மார்பு, வயிறு இவற்றைப் பிளந்தவர் என் மத்ய பாகத்தைக் காப்பாற்ற வேண்டும். தனது நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மாவினால் போற்றப்பட்ட நரஹரி என் தொப்புளைப் பாதுகாக்கவேண்டும்.

(14)
ப்3ரஹ்மாண்ட3 கோடய : கட்யாம்
யஸ்யாஸெள பாது மே கடிம்
கு3ஹ்யம் மே பாது குஹ்யாநாம்
மந்த்ராணாம் கு3ஹ்யரூபத்4ரு’க்

எவரது இடுப்பில் பிரமாண்ட கோடிகள் விளங்குகின்றனவோ அவர் எனது இடுப்பை ரக்ஷிக்கட்டும். ரகஸ்யமான மந்திரங்களுக்கு, மந்திரங்களின் ரகசிய அர்த்தமாக இருக்கின்றவர் எனது குஹ்ய பாகத்தைப் பாதுகாக்கட்டும்.

(15)
ஊரூ மநோப4வ: பாது ஜாநுநீ நரரூபத்4ருத்
ஜங்கே4 பாது த4ரா பா4ர ஹர்த்தா யோ(அ)ஸெள ந்ரு’கேஸரீ

மனதில் தியானிக்கும் நரசிம்ம ஸ்வாமி எனது தொடைகளை ரட்சிக்கட்டும். மனித உடம்பும், சிங்க முகமும் கொண்டவர் எனது முழங்கால்களைக் காக்கட்டும். எந்த நரசிம்மர் பூபாரத்தைப் போக்குகின்றாரோ அவர் எனது ஆடுசதைகளைப் பாதுகாக்கட்டும்.

(16)
ஸூர ராஜ்யப்ரத3: பாது பாதெள3 மே ந்ரு’ஹரீஶ்வர:
ஸஹஸ்ரஶீர்ஷா புருஷ: பாது மே ஸர்வஶஸ்தநும்

தேவர்களுக்கு இராஜ்யத்தை அளித்த ஸ்ரீநரஹரி எனது கால்களையும், பாதங்களையும் காக்க வேண்டும். ஆயிரம் தலைகளைக் கொண்ட புருஷோத்தமர் எனது சரீரத்தையும் காக்க வேண்டும்.

(17)
மஹோக்3ர: பூர்வத: பாது மஹா வீராக்3ரஜோ(அ)க்3நித:
மஹாவிஷ்ணுர் த3க்ஷிணே து மஹாஜ்வாலஸ்து நைர்ரு’தெள

மிகவும் உக்ரமாயிருப்பவர் என்னைக் கிழக்கு திசையில் ரக்ஷிக்கட்டும். மகாவீரர்களுக்கு முதன்மையானவர் என்னை அக்னி திசையில் காக்கட்டும். மஹாவிஷ்ணு தெற்குதிசையில் பாதுகாக்க வேண்டும். பெரிய சுடரானவர் நிருதி திக்கில் காக்கட்டும்.

(18)
பஶ்சிமே பாது ஸர்வேஶோ தி3ஶி மே ஸர்வதோமுக2:
ந்ரு’ஸிம்ஹ: பாது வாயவ்யாம் ஸெளம்யாம் பூ4ஷணவிக்3ரஹ:

சர்வேசன் மேற்கு திசையில் காக்கவேண்டும். எல்லா திக்கிலும் முகமுள்ள நரசிம்ம ஸ்வாமி என்னை வாயுதிசையில் ரட்சிக்கட்டும். பூஷணங்கள் தரித்த பகவான் என்னை வடக்கு திக்கில் காக்கட்டும்.

(19)
ஈஶாந்யாம் பாது ப4த்3ரோ மே ஸர்வமங்க3ள தா3யக:
ஸம்ஸாராப4யத: பாது ம்ரு’த்யோர்ம்ரு’த்யுர் ந்ரு’கேஸரீ

அனைத்து மங்களங்களையும் அளிக்கும் மங்களமூர்த்தி என்னை ஈசான (வடகிழக்கு) திசையில் ரக்ஷிக்கட்டும். யமனுக்கும் யமனான நரசிம்ம ஸ்வாமி சம்சார பயத்திலிருந்து காக்கட்டும்.

(20)
இத3ம் ந்ரு’ஸிம்ஹ கவசம் ப்ரஹலாத3 முக மண்டி3தம்
4க்திமாந் ய: படேந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே

பிரகலாதன் வாயிலிருந்து வந்த இந்த நரசிம்ம கவசத்தை பக்தியுடன் தினமும் எவர் படிக்கின்றாரோ அவர் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுகின்றார்.

(21)
புத்ரவாந் த4நவான் லோகே தீ3ர்கா4யுருப ஜாயதே
யம் யம் காமயதே காமம் தம் தம் ப்ராப்நோத்ய ஸம்ஶயம்

இவ்வுலகில் ஆண்வாரிசு உள்ளவர்களாகவும், பணக்காரர்களாகவும், நீண்டஆயுளுள்ளவர்களாகவும் வாழ்வார்கள். எந்தெந்தப் பொருளை விரும்புவாரோ அந்தந்தப் பொருளை அடைவார் என்பதில் சந்தேகமில்லை.

(22)
ஸர்வத்ர ஜய மாப்நோதி ஸர்வத்ர விஜயீ ப4வேத்
பூ4ம்யந்தரிக்ஷ தி3வ்யாநாம் க்3ரஹாணாம் விநிவாரணம்

எல்லா இடங்களிலும் வெற்றியை அடைவான். எங்கு சென்றாலும் யாவரையும் ஜெயிப்பான். பூமி, பாதாளம், சொர்க்கம் இவற்றிலுள்ள குரூர (நவ) கிரஹ உபாதைகள் நீங்கும்.

(23)
வ்ரு’ஶ்சிகோரக3 ஸம்பூ4த விஷாபஹரணம் பரம்
ப்3ரஹ்மராக்ஷஸயக்ஷாணாம் தூ3ரோத்ஸாரணகாரணம்

தேள், பாம்பு இவற்றால் ஏற்படும் நஞ்சினை அறவே அகற்றிவிடும். பிரம்மராக்ஷஸ், யக்ஷன் இவற்றைத் தொலைதூரத்திற்கு விரட்டும்.

(24)
பூ4ர்ஜே வா தாளபாத்ரே வா கவசம் லிகி2தம் ஶுப4ம்
கரமூலே த்4ரு’தம் யேந ஸித்4யேயு : கர்மஸித்34ய:

பூர்ஜ பத்ரத்திலோ, பனை ஓலையிலோ இந்த சுபம்தரும் கவசத்தை எழுதி, தோளுக்குக் கீழேயுள்ள கையில் அணிந்துகொண்டால் எல்லா காரியங்களும் சித்திக்கும்.

(25)
தே3வாஸூர மநுஷ்யேஷூ ஸ்வம் ஸ்வமேவ ஜயம் லபே4த்
ஏக ஸந்த்4யம் த்ரி ஸந்த்4யம் வா ய : படேந் நியதோ நர:

காலையிலோ அல்லது மூன்று சந்தியா காலங்களிலோ இந்த ஸ்லோகத்தைத் தவறாமல் படிப்பவர் தேவ, அசுரர், மனிதர்களிடமிருந்து தான் அடைய வேண்டிய வெற்றியை அடைவார்.

(26)
ஸர்வ மங்க3ள மாங்க3ள்யம்
பு4க்திம் முக்திஞ்ச விந்த3தி
த்3வாத்ரிம்ஶதி ஸஹஸ்ராணி
படே2த் ஶுத்3தா4த்மநாம் ந்ரு’ணாம்

தூய்மையான மனமுடைய மனிதன் இந்த ஸ்தோத்திரத்தை 32,000 தடவை பாராயணம் செய்தால், அவன் எல்லா மங்களங்களிலும் உயர்ந்த மங்களத்தையும், போக (புக்தி) பலனையும், மோட்சத்தையும் பெறுவான்.

(27) & (28)
கவசஸ்யாஸ்ய மந்த்ரஸ்ய மந்த்ரஸித்3தி4: ப்ரஜாயதே
அநேந மந்த்ரராஜேந க்ரு’த்வா ப4ஸ்மாபி4 மந்த்ரணம்

திலகம் விந்யஸேத்3யஸ்து தஸ்ய க்ரஹப4யம் ஹரேத்
த்ரிவாரம் ஜபமாநஸ்து த3த்தம் வார்யபி4மந்த்ரய ச

மேற்கூறிய மந்திர பலன் கிட்டும். மந்திரங்களில் அரசனான இந்தக் கவசத்தை ஜபித்து, விபூதியை அபிமந்திரித்து அதனை திலகமாக அணிந்தால், கிரகபயம் நீங்கும். மேலும், மூன்று முறை ஜபித்து, நீரையும் அபிமந்திரம் செய்ய வேண்டும்.

(29)
ப்ராஶயேத்யோ நரோ மந்த்ரம் ந்ரு’ஸிம்ஹத்4யாநமாசரந்
தஸ்ய ரோகா3: ப்ரணஶ்யந்தி யே ச ஸ்யு: குக்ஷிஸம்பவா:

ஜலத்தைத் தொட்டுக்கொண்டு மூன்று நாட்கள் ஜபித்து அந்த நீரை எவர் ஸ்ரீநரசிம்ஹரைத் தியானித்தபடி குடிக்கிறாரோ அவருக்கு வயிறு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.

(30)
கிமத்ர ப3ஹூநோக்தேந ந்ரு’ஸிம்ஹ ஸத்3ருஶோ ப4வேத்
மநஸா சிந்திதம் யத்து ஸ தச்சாப்நோத்ய ஸம்ஶயம்

அதிகம் சொல்வானேன்! ஸ்ரீநரசிம்ம ஸ்வாமிக்கு சமமானவனாகவே ஆகிவிடுவார். மனதில் நினைப்பது நடக்கும். அதில் ஐயப்பாடே இல்லை!

(31) & (32)
3ர்ஜந்தம் க3ர்ஜயந்தம் நிஜபு4ஜபடலம்
ஸ்போ2டயந்தம் ஹட2ந்தம்
ரூப்யந்தம் தாபயந்தம் தி3வி பு4வி திதிஜம்
க்ஷேபயந்தம் க்ஷிபந்தம்
க்ரந்த3ந்தம் ரோஷயந்தம் தி3ஶி தி3ஶி ஸததம்
ஸம்ஹரந்தம் ப4ரந்தம்
வீக்ஷந்தம் கூ4ர்ணயந்தம் கரநிகரஶதைர்
தி3வ்ய ஸிம்ஹம் நமாமி

கர்ஜித்துக் கொண்டும், கர்ஜிக்கும்படி செய்து கொண்டும், தனது ஆயிரக்கணக்கான கைகளை ஒன்றை ஒன்றால் தட்டிக்கொண்டும், பலாத்காரத்தைச் செய்து கொண்டும், தான் ஜ்வலித்துக்கொண்டும், அசுரனை தபிக்கச் செய்து கொண்டும், நூற்றுக்கணக்கான கைகளால் ஆகாயத்தில் எறிந்தும், பூமியில் தள்ளியும், தான் அலறிக் கொண்டும், ஆக்ரோஷம் ஏற்படும்படியும், ஒவ்வொரு திசையிலும் சம்கரித்தும், தரித்தும், பார்த்தும், சுழலச் செய்தும் விளங்குகின்ற திவ்யமான நரசிம்ம பகவானை நமஸ்கரிக்க வேண்டும்.

** ஹரே கிருஷ்ணா ** 

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare