ஸ்ரீ நரசிம்ஹ பிரணாம்
(1)
நமஸ்தே நரசிம்’ஹாய
ப்ரஹ்லாத3-லாத3தா3யினே
ஹிரண்யகஷி பூர்வக்ஷஹ
ஷில-டங்கா-ந காலாயே
(2)
இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ
யதோ யதோ யாமி ததோ நரசிம்ஹ
பஹீர் நரசிம்ஹ ஹ்ருத3யே நரசிம்ஹ
நரஸிம்ஹம் ஆதி3ம் சரணம் ப்ரபத்3யே
(3)
நரசிம்மதேவருக்கான பிரார்த்தனை
(ஸ்ரீ தஸாவதார ஸ்தோத்திரம் – ஜெயதேவ கோஸ்வாமி)
தவகர-கமல-வரே ந-கா2ம்
அத்3புத4 ஷ்ரிங்கா3ம்
த3லிதாம்-ஹிரண்ய-கஷிபு-தனு-ப்4ரிங்கா3ம்
கேஷவ த்4ருதா-நரஹரி-ரூபா
ஜெய ஜக3 தீ3ஷ ஹரே!
ஜெய ஜக3 தீ3ஷ ஹரே!
ஜெய நரசிம்ம தேவ்! ஜெய நரசிம்ம தேவ்!
நரசிம்ம தேவ்! ஜெய நரசிம்ம தேவ்!
ஜெய ப்ரஹலாத் மஹராஜ்! ஜெய ப்ரஹலாத் மஹராஜ்!
ப்ரஹலாத் மஹராஜ்! ஜெய ப்ரஹலாத் மஹராஜ்!
மொழிபெயர்ப்பு
1. பகவான் நரசிம்மரே, பிரகலாத மஹாராஜாவிற்கு மகிழ்ச்சியளிப்பவரே, அசுரன் ஹிரண்யகசிபுவின் கல்போன்ற மார்பினை உளிபோன்ற நகங்களால் பிளப்பவரே, உம்மை நான் வணங்குகிறேன்.
2. பகவான் நரசிம்மர் இங்கும் இருக்கிறார், அங்கும் இருக்கிறார். நான் எங்குச் சென்றாலும் அங்கே இருக்கிறார். அவர் வெளியிலும் இருக்கிறார், இதயத்திலும் இருக்கிறார். அனைத்திற்கும் ஆதியாகவும் பரம புகலிடமாகவும் திகழக்கூடிய பகவான் நரசிம்மரிடம் நான் சரணடைகிறேன்.
3. கேசவரே! பிரபஞ்சத்தின் பிரபுவே! பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் தோன்றிய பகவான் ஹரியே, எல்லாப் புகழும் உமக்கே! ஒருவன் சிறு பூச்சியை விரல் நகங்களுக்கிடையே வைத்து எளிதாக நசுக்குவதுபோல, சக்தி வாய்ந்த அசுரன் ஹிரண்யகசிபுவின் உடலை உமது தாமரை கரங்களின் அற்புதமான கூரிய நகங்களால் கிழித்தெறிந்துவிட்டீர்கள்.
** ஹரே கிருஷ்ணா **

