ஸ்ரீ சிக்ஷாஷ்டகம்

(1)
சேதோ-த3ர்பண-மார்ஜனம்
4வ-மஹா-தா3வாக்3 னி-நிர்வாபணம்
ஶ்ரேய:(ஹ்க்)-கைரவ-சந்த3ரிகா-விதரணம்
வித்3யா-வதூ4-ஜீவனம்
ஆனந்தா3ம்பு3தி4-வர்த4னம்
ப்ரதி-பத3ம் பூர்ணாம்ருதாஸ்வாத3னம்
ஸர்வாத்ம-ஸ்நபனம் பரம் விஜயதே
ஸ்ரீ-கிருஷ்ண-ஸங்கீர்த்தனம்


சேத – இதயத்தின், தர்பண – கண்ணாடி,மார்ஜனம் – தூய்மைப்படுத்தி, பவ – பௌதிக இருப்பின், மஹா-தா-வ-அக்னி – கொழுந்துவிட்டு எரியும்காட்டுத் தீ, நிர்வாபணம் – அணைத்து, ஷ்ரேய – நல்லதிர்ஷ்டம் என்னும், கைரவ – வெண்தாமரை, சந்த் ரிகா – நிலவொளி, விதரணம் – பரவச்செய்து, வித்யா – கல்வியின், வதூ, ஜீவனம் – வாழ்க்கை, ஆனந்த – ஆனந்தத்தின், அம்பு தி – பெருங்கடல், வர்தனம் – அதிகரித்து, ப்ரதி-பதம் – ஒவ்வோர் அடியிலும், பூர்ண-அம்ருத – பூரண அமிர்தத்தின், ஆஸ்வாதனம் – சுவையை வழங்கி, ஸர்வ – அனைவருக்கும், ஆத்ம ஸ்நபனம் – தன்னை நீராட்டி, பரம் – தெய்வீகமான, விஜயதே – வெற்றி உண்டாகட்டும், ஸ்ரீ-க்ருஷ்ண-ஸங்கீர்தனம் – ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாம ஸங்கீர்த்தனத்திற்கு.


ஸ்ரீ கிருஷ்ண நாம ஸங்கீர்த்தனமே மிகப்பெரும் வெற்றியைத்தரும். ஏனென்றால் இது காலம் காலமாக நம் இதயத்தில் படிந்துள்ள அழுக்கை சுத்தப்படுத்தி, கட்டுண்ட வாழ்வில் தொடரும் பிறப்பு, இறப்பு என்ற தீயை அணைக்கிறது. நிலவு தன் ஒளியால் குளிர்ச்சியை கொடுப்பது போல, இந்த ஸங்கீர்த்தன இயக்கமானது மனித இனத்திற்கு பெரும் வரப்பிரசாதமாகும். இது தெய்வீக ஞானத்திற்கு உயிரூட்டுகிறது. பேரானந்த கடலை பெருக வைக்கிறது. எப்பொழுதும் நாம் விரும்பும் அமுதத்தை முழுமையாக சுவைக்க செய்கிறது.


(2)
நாம்நாம் அகாரி ப3ஹுதா4 நிஜ-ஸர்வ-ஶக்திஸ்
தத்ரார்பிதா நியமித:(ஸ்) ஸ்மரணே ந கால:(ஹ)
ஏதாத்3ருஶீ தவ க்ருபா ப43வன் மமாபி
து3ர்தை3வம்-ஈத்3ருஶம் இஹாஜனி நானுராக3:(ஹ)

நாம் நாம் – பகவானுடைய திருநாமங்களின், அகாரி – தோற்றம், பஹுதா -பலவிதமான, நிஜ-ஸர்வ-ஷக்தி – தமது எல்லாவிதமான சக்திகளையும், தத்ர – அவற்றில், அர்பிதா – வழங்கியுள்ளார், நியமித – கட்டுப்பாடுகள், ஸ்மரணே – நினைப்பதில், ந – இல்லை, கால – காலம் கருதுதல், ஏதாத்,ரு’ஷீ, – இவ்வளவு, தவ – தங்களின், க்ரு’பா – கருணை, பகவன் – எம்பெருமானே, மம – எனது, அபி – இருப்பினும், துர்தைவம் – துரதிர்ஷ்டம், ஈத்ரு’ஷம் – இது, இஹ – இதில் (திருநாமத்தில்), அஜனி – பிறப்பது, ந – இல்லை, அனுராக – பற்றுதல்.


எம்பெருமானே, உமது திருநாமம் மட்டுமே அனைத்து ஜீவன்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியதாகும். இவ்வாறாக கிருஷ்ணா, கோவிந்தா என ஆயிரக்கணக்கான பெயர்களை உடையவராயிருக்கிறீர். இத்தகைய தெய்வீக நாமங்களில் உம்முடைய தெய்வீகசக்தியை உள்ளடக்கியிருக்கிறீர்கள். இந்த நாமங்களை ஜெபிப்பதற்கு கடினமான நிபந்தனை எதுவும் இல்லை. உம்முடைய கருணையினால், உம்முடைய தெய்வீக நாமங்களினால், நாங்கள் சுலபமாக உம்மை அடைந்துவிட முடியும், ஆனால் இத்தகைய நாமங்களில் ருசியற்ற நான் மிகவும் துர்பாக்ய சாலியாயிருக்கிறேன்.


(3)
த்ருநாத்3 அபி ஸுநீசேன
தரோர் அபி ஸஹிஷ்ணுனா
அமானினா மானதே3
கீர்தநீய:(ஸ்) ஸதா3 ஹரி: (ஹி)

த்ருணாத் அபி – புல்லைவிட, ஸு-நீசேன – தாழ்வாக, தரோ: அபி – மரத்தைவிட, ஸஹிஷ்ணுனா – அதிகமான சகிப்புத்தன்மையுடன், அமானினா – பொய் கர்வமின்றி, மான தேன – எல்லாருக்கும் மரியாதை கொடுத்து, கீர்தனீய: – கீர்த்தனம் செய்யப்பட வேண்டும், ஸதா – எப்போதும், ஹரி – பகவானின் திருநாமம்.

பகவானின் புனித நாமத்தை ஜெபிக்கும் ஒருவர் தாழ்வான மனநிலையில் இருக்க வேண்டும். ஒரு புல்லைவிட பணிவாக தன்னை நினைத்து, மரத்தைவிடப் பொறுமையாக, பொய் கர்வங்களை தவிர்த்து, பிறருக்கு எல்லா மரியாதையையும் கொடுக்க தயாராயிருக்க வேண்டும். இத்தகைய மனோபாவத்தில் ஒருவர் பகவானின் புனித நாமத்தை இடைவிடாமல் ஜெபிக்க முடியும்.


(4)
ந த4னம் ந ஜனம் ந ஸுந்த3ரீம்
கவிதாம் வா ஜகத்3ஈஶ காமயே
மம ஜன்மநி ஜன்மநீஶ்வரே
4வதாத்34க்திர் அஹைதுகீ த்வயி

ந – இல்லை, தனம் – செல்வம், ந – இல்லை, ஜனம் – பின்பற்றுபவர்கள், ந – இல்லை, ஸுந்தரீம் – அழகிய பெண்கள், கவிதாம் – மலர்ச் சொற்களால் விளக்கப்பட்டுள்ள பலன்நோக்குச் செயல்கள், வா – அல்லது, ஜகத் – ஈஷ – பிரபஞ்சத்தின் இறைவனே, காமயே – நான் விரும்புவது, மம – எனது, ஜன்மனி – ஜன்மனி – பிறவி தோறும், ஈஷ்வரே – பரம புருஷ பகவானுக்கு, பவதாத் – இருக்கட்டும், பக்தி – பக்தித் தொண்டு, அஹைதுக் – உள்நோக்கமற்ற, த்வயி – தங்களுக்கு.


எல்லாம் வல்ல பெருமானே, பொருள் சேர்க்க எனக்குவிருப்பம் இல்லை. அழகிய பெண்களை நான் விரும்பவில்லை, என்னை பின்பற்றுவோரும் எனக்கு வேண்டாம். ஒவ்வொரு பிறவியிலும் உமது காரணமற்ற பக்திசேவையே எனக்கு தேவை.


(5)
அயி நந்த3-தனுஜ – கிங்கரம்
பதிதம் மாம் விஷமே-ப4வாம்பு3தௌ4
க்ருபயா தவ பாத3-பங்கஜ-
ஸ்தி2த-தூ4லி-ஸத்3ருஷம் விசிந்தய

அயி – எம்பெருமானே, நந்த தனுஜ – நந்த மஹாராஜரின் மகன் கிருஷ்ணர், கிங்கரம் – சேவகன், பதிதம் – வீழ்ச்சியுற்ற, மாம் – என்னை, விஷமே – கொடூரமான, பவ -அம்பு -தௌ – அறியாமையின் கடலில், க்ருபயா – காரணமற்ற கருணையினால், தவ – தங்களது, பாத பங்கஜ – தாமரைத் திருவடிகள், ஸ்தித – நிலைபெற்றுள்ள, தூலீ -ஸத்ரு’ஷம் – தூசியைப் போன்று, விசிந்தய – கருதுவீராக.


நந்த மகராஜாவின் புதல்வனே (கிருஷ்ணா), நான் உனது நிரந்தர சேவகன், எவ்வாறோ நான் பிறப்பு, இறப்பு என்ற கடலில் விழுந்து விட்டேன். தயவு செய்து இதிலிருந்து என்னை கை தூக்கி உனது தாமரைப் பாதங்களில் ஒரு தூசியாக என்னை வைத்துக்கொள்ளும்.


(6)
நயனம் க3லத்3 அஶ்ரு-தா4ரயா
வத3னம் க3த்333 ருத்34யா கி3ரா
புலகைர் நிசிதம் வபு:(ஹ்க்) கதா3
தவ நாம-க்3ரஹணே ப4விஷ்யதி

நயனம் – கண்களில், காலத் -அஷ்ரு -தாரயா – கண்ணீர் தாரை தாரையாகப்பொழிந்து, வதனம் – வாயில், கத்கத – தழுதழுத்து, ருதயா – அடைத்து, கிரா – வார்த்தைகள், புலகை – தெய்வீக இன்பத்தினால் மயிர்க்கூச்செறிதல் ஏற்பட்டு, நிசிதம் – மூடப்பட்டு, வபு – உடல், கதா – எப்போது, தவ – உங்களது, நாம -க்ரஹணே – நாமத்தை உச்சரிக்கையில், பவிஷ்யதி – இருக்கும்.


எம்பெருமானே, உமது புனித நாமத்தை ஜெபிக்கும் போது, என் கண்களில் பக்திப் பரவசத்தால் எப்பொழுது ஆனந்த கண்ணீர் பெருகும்? எப்பொழுது எனது நாதழுதழுத்து, மயிர் சிலிர்த்து உமது நாமத்தை ஜெபிக்கபோகிறேன்?


(7)
யுகா3யிதம் நிமேஷேண
சக்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம்
ஶூந்யாயிதம் ஜக3த் ஸர்வம்
கோ3விந்த3-விரஹேண மே

யுகாயிதம் – யுகம்போன்று தோன்றி, நிமேஷேண – நொடியில், சக்ஷுஷா – கண்களிலிருந்து, ப்ராவ்ருஷாயிதம் – கண்ணீர் மழைபோல் பொழிகிறது, ஷுன்யாயிதம் – சூன்யமாக, ஜகத் – உலகம், ஸர்வம் – எல்லாம், கோவிந்த – பகவான் கோவிந்தரின், விரஹேணமே – எனது பிரிவினால்.


ஓ கோவிந்தா! உம்முடைய பிரிவு, ஒரு க்ஷணம் என்றாலும் அது பல யுகங்களாக உணர்கிறேன். கண்களில் கண்ணீர் பெருகி மழை போல் பொழிகிறது. நீர் இல்லாமல் அனைத்து உலகத்தையும் வெற்றிடமாக நான் உணர்கிறேன்


(8)
ஆஶ்லிஷ்ய வா பாத3-ரதாம் பிநஷ்டு மாம்
அத3ர்ஶநான் மர்ம ஹதாம் கரோது வா
யதா2 ததா2 வா வித43தாது லம்படோ
மத் ப்ராண நாத2ஸ் து ஸ ஏவ நாபர:(ஹ)

ஆஷ்லிஷ்ய – பெரும் மகிழ்ச்சியுடன் அரவணைத்தல், வா – அல்லது, பாத -ரதாம் – தாமரைத் திருவடிகளில், பினஷ்டு – நசுக்கட்டும், மாம் – எனக்கு, அதர்ஷனாத் – தரிசனம் தராமல், மர்ம -ஹதாம் – இதயத்தை நொறுங்க, கரோது – செய்யட்டும், வா – அல்லது, யதா – எவ்வாறு (அவர் விரும்புகிறாரோ), ததா – அவ்வாறு, வா – அல்லது, வித தாது – செய்யட்டும், லம்பட – பித்தர், மத் -ப்ராண -நாத – என் பிராண நாதர், து – ஆனால், ஸ – அவர், ஏவ -மட்டும், ந அபர – வேறு யாரும் இல்லை.


கிருஷ்ணரை தவிர வேறு எவரையும் நான் என் இறைவனாக அறியேன். அவர் என்னை முரட்டுத்தனமாக நடத்தினாலும், அணைத்துக் கொண்டாலும், என் முன் தோன்றாமல் என் இதயத்தை நோகச் செய்தாலும் அவரே என் பிரபுவாவார். என்னிடம் எவ்வாறு வேண்டுமானாலும் நடந்து கொள்ள அவருக்கு உரிமை உண்டு. ஏனென்றால் அவர் எவ்வித கட்டுப்பாடும் இன்றி எப்பொழுதும் எனதுவணக்கத்திற் குரிய பகவானாவார்.


** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare