ருக்மிணி சந்தேஷ்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு ருக்மிணியின் செய்தி
(ஸ்ரீமத் பாகவதம் – 10.52.37 – 10.52.43)

(37)
ஸ்ரீ ருக்மிணி உவாச
ஶ்ருத்வா கு³ணான் பு⁴வன ஸுந்த³ர ஶ்ருண்வதாம் தே
நிர்விஶ்ய கர்ண விவரைர் ஹரதோ(அ)ங்க³ – தாபம்
ரூபம் த்³ருஶாம் த்³ருஶிமதாம் அகி²லார்த² லாப⁴ம்
த்வய்யச்யுதா விஶதி சித்தம் அபத்ரபம் மே

(38)
கா-த்வா முகுந்த³ மஹதீ குலஶீலரூப-
வித்³யா வயோ-த்³ரவிண தா⁴ம-பி⁴ராத்ம-துல்யம்
தீ⁴ரா பதிம் குலவதீ நவ்ருணீத கன்யா
காலே ந்ருஸிம்ஹ நரலோக மனோ(அ)பி⁴ ராமம்

(39)
தன்மே ப⁴வான் க²லு-வ்ருத꞉(ஃப்) பதிரங்க³ ஜாயாம்
ஆத்மார்-பிதஶ்-ச ப⁴வதோ(அ)-த்ரவிபோ⁴ விதே⁴ஹி
மா வீர-பா⁴க³-மபி⁴-மர்ஶது சைத்³ய ஆராத்³-
கோ³மா-யுவன் ம்ருʼக³-பதேர் ப³லிமம்பு³ஜாக்ஷ

(40)
பூர்தேஷ்ட த³த்த-நியம வ்ரத-தே³வ விப்ர-
கு³ர்வர்சநாதி³ – பி⁴ரலம் ப⁴க³வான் பரேஶ꞉ (ஹ)
ஆராதி⁴தோ யதி³-க³தா³-க்³ரஜ ஏத்ய பாணிம்
க்³ருஹ்ணாது மே நத³மகோ⁴ஷ-ஸுதா த³யோ(அ)ன்யே

(41)
ஶ்வோ பா⁴விநித்வ மஜிதோ த்³வஹனே வித³ர்பா⁴ன்
கு³ப்த꞉(ஸ்) ஸமேத்ய ப்ருதநா பதிபி⁴꞉(ஃப்) பரீத: (ஹ)
நிர்மத்²ய சைத்³ய மக³தே⁴ந்த்³ர ப³லம் ப்ரஸஹ்ய
மாம் ராக்ஷஸேன விதி⁴நோத்³-வஹ வீர்ய-ஶுல்காம்

(42)
அந்த꞉(ஃப்) புராந்தர சரீமநிஹத்ய ப³ந்தூ⁴ன்
த்வாமுத்³வஹே கத²மிதி ப்ரவதா³ம் யுபாயம்
பூர்வேத்³யுரஸ்தி மஹதீ குலதே³வ யாத்ரா
யஸ்யாம்ʼ ப³ஹிர் நவ வதூ⁴ர் கி³ரிஜா முபேயாத்

(43)
யஸ்யாங்க்⁴ரி பங்கஜ ரஜ꞉(ஸ்) ஸ்நபனம் மஹாந்தோ
வாஞ்ச²ந்த்-யுமா-பதி-ரிவாத்ம-தமோ(அ)-பஹத்யை
யர்ஹ்யம்பு³ஜாக்ஷ நலபே⁴ய ப⁴வத்-ப்ரஸாத³ம்
ஜஹ்யாமஸூன் வ்ரதக்ருʼஶான் ஶதஜன்மபி⁴꞉(ஸ்) ஸ்யாத்

மொழிபெயர்ப்பு:

37. (பிராமணரால் படிக்கப்பட்ட கடிதத்தில்) ஸ்ரீ ருக்மிணி கூறினாள்: புவனசுந்தரா, கிருஷ்ணா, கேட்பவர்களின் காதுகளின் வழி உட்புகுந்து, அவர்களுடைய உடலின் தாபத்தைப் போக்குகின்ற உமது குணங்களைப்பற்றியும், காண்பவர்களின் காணும் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றும் உமது அழகைப் பற்றியும் கேட்டு, வெட்கமற்ற என் மனம் உம்மிடம் செல்கிறது.

38. முகுந்தா, குலம், குணம், அழகு, அறிவு, இளமை, செல்வம் மற்றும் செல்வாக்கு ஆகிய இவற்றில் உமக்கு இணையாவர் நீர் ஒருவரே. மனிதர்க்கிடையில் சிங்கமே, மனித சமூகத்தின் மனங்களை நீர் மகிழ்விக்கிறீர். நற்குலத்தில் பிறந்தவளும், நிதான புத்தியுடையவளும், கௌரவமானவளும், திருமண வயதை அடைந்தவளுமான எந்த பெண்தான், உரியபருவத்தில் உம்மை கணவராகத் தேர்ந்தெடுக்க விரும்பமாட்டாள்?

39. எனவே, எனது பிரியமுள்ள பகவானே. உங்களை என் கணவராகத் தேர்ந்தெடுத்துள்ள நான், என்னையே உங்களிடம் அர்ப்பணிக்கிறேன். சர்வவல்லமை உடையவரே, தயவு செய்து விரைந்து வந்து என்னை உங்கள் மனைவியாகச் செய்து கொள்ளுங்கள். தாமரைக் கண்ணா, சிங்கத்தின் இரையை நரி கவர்ந்தாற்போல், வீரரான நீங்கள் அடையவேண்டிய என்னை சிசுபாலன் தீண்டி விடக்கூடாது.

40. புண்ணிய காரியங்கள், வேள்விகள், தானம், சடங்குகள், விரதங்கள் ஆகியவற்றைச் செய்ததாலும், தேவர்கள், பிராமணர்கள், மற்றும் குருமார்கள் ஆகியோரைப் பூஜிப்பதாலும், பரமபுருஷரைப் போதுமான அளவிற்கு நான் வழிபட்டிருப்பேனாயின், அந்த கதாக்ரஜன் வந்து என் கரம் பிடிக்கப்பட்டும், தமகோஷனின் மகனோ, பிறரோ அல்ல.

41. ஜயிக்கப்பட முடியாதவரே, நாளையதினம் என் விவாகச் சடங்கு துவங்கப்போகும் சமயத்தில், நீங்கள் உங்கள் சேனாதிபதிகளால் சூழப்பட்டபடி, யாருக்கும் தெரியாமல் விதர்ப்ப நாட்டிற்கு வரவேண்டும். பிறகு சிசுபாலன் மற்றும் ஜராசந்தன் ஆகியோரின் படை பலத்தை நசுக்கி, உங்கள் வீரத்தால் என்னை வென்று, இராட்சஸ விதிப்படி என்னை விவாகம் செய்து கொள்ளுங்கள்.

42. நான் அரண்மனையின் அந்தப்புரத்தில் தங்கியிருப்பேன் என்பதால், “உன்னுடைய உறவினர்களில் சிலரையாவது கொல்லாமல் என்னால் எப்படி உன்னை கடத்திச் செல்ல முடியும்?” என்று நீங்கள் வியப்படையக் கூடும். ஆனால் அதற்கொரு உபாயம் கூறுகிறேன்: விவாகத்திற்கு முதல் நாள் குலதேவதையைப் பூஜிப்பதற்காக ஆடம்பரத்துடன் யாத்திரை போவதுண்டு. அந்த ஊர்வலத்தில் புது மணப்பெண் நகருக்கு வெளியிலுள்ள கெளரியின் ஆலயத்திற்குப் போவாள்.

43. தாமரைக்கண்ணா, சிறந்த ஆத்மாக்களான சிவபெருமானைப் போன்றவர்கள் கூட உங்கள் தாமரைப் பாதங்களின் புழுதியில் குளித்து, தங்கள் அறியாமையை போக்கில் கொள்கின்றனர். என்னால் உங்கள் கருணையைப் பெற முடியவில்லை என்றால், கடும் விரதங்களால் உடலை நலியச் செய்து உயிரை விட்டுவிடுவேன். பிறகு, நூற்றுக்கணக்கான பிறவிகளில் முயன்ற பிறகாவது உமதருளைப் பெறுவேன்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare