அலைபாயுதே கண்ணா


அலைபாயுதே கண்ணா ! என் மனம் மிக
அலைபாயுதே உன் ஆனந்த மோஹன வேணு கானமதில்

நிலைபெயராது சிலை போலவே நின்ற
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா -என் மனம்

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உறுத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா – ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
கனைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலெனக்களித்த வா
கதறிமனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ ‐ இது முறையோ‐ இது தருமம் தானோ –
குழ-லூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனது வேதனை மிகவொடு

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare