9. ஜதிபுரா முகாரவிந்தா (கோவர்தனின் புனித வாய்)
அல்லது ஶ்ரிங்க ஸ்தலி

நோக்கங்கள்:

நோக்கம்1: முகாரவிந்தாவின் வரலாற்று மற்றும் பக்தி தொடர்பான முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள.

நோக்கம்2: தொடர்புடைய கோவில்கள் மற்றும் வழிபாட்டு செயல்களை விளக்க.

நோக்கம்3: முகாரவிந்தாவில் நடைபெறும் பக்தி செயல்களை விளக்க.

நோக்கம்4: தாமரைக் முகம் (முகாரவிந்தா) குறித்த பாரம்பரியப் பொருளை அறிந்துகொள்ள.

நோக்கம்5: தாமரை வடிவம் தொடர்பான வேத குறிப்புகளை அறிந்துகொள்ள.

நோக்கம்6: கோவிலில் பிரதிபலிக்கப்படும் கோவர்தன் வடிவத்தை விளக்க.

நோக்கம்7: முகாரவிந்தாவைச் சுற்றியுள்ள புனித இடங்களை விளக்க.

நோக்கம்8: ஜாதிபுரா கிராமத்தின் வரலாற்று பின்னணியை அறிந்துகொள்ள.

நோக்கம்9: முகாரவிந்தாவுடன் தொடர்புடைய லீலைகள் மற்றும் புராணக் கதைகளை அறிந்துகொள்ள.

முகாரவிந்தா: தெய்வீகத்தின் சான்று
நோக்கம்1: முகாரவிந்தாவின் வரலாற்று மற்றும் பக்தி தொடர்பான முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள.

மதுராவிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ள கோவர்தனில் உள்ள ஜதிபுரா கிராமத்தில் முகாரவிந்தா கோயில் அமைந்துள்ளது. கோவர்தனில், ஸ்ரீ கிரிராஜ் என்று அழைக்கப்படும் இந்த புனித மலை வணங்கப்படுகிறது, மேலும் இந்த கோயிலை வல்லப சம்பிரதாயம் (குஜராத்தில் இருந்து) கவனித்து வருகிறது.

முகாரவிந்தா கோயில்: இந்த கோயில் ஸ்ரீ கிரிராஜ் கோவர்தன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது, இது பகவான் ஸ்ரீ கிரிராஜ் தோற்றம் தரும் இடமாகவும், அவரது சக்தி மிக்க இடமாகவும், பிரபலமாக அறியப்படுகிறது. வல்லப சம்பிரதாயத்தின்படி கோவர்த்தன் பூஜையின் போது விருந்தாவன் வாசிகளால் செய்யப்பட்ட அனைத்து பிரசாதங்களையும் பகவான் இந்த இடத்திலிருந்து ஏற்றுக கொண்டு உட்கொண்டார் என்று நம்பப்படுகிறது. வ்ரஜ் மொழியில் ‘வி’ என்பது ‘பி’ என்றும் உச்சரிக்கப்படுவதால், ’விருந்தாவனம்’, பிருந்தாவனம் என அழைக்கப்படுவது போன்று முகாரவிந்தா கோயில், முகாரபிந்தா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

நோக்கம்2: தொடர்புடைய கோவில்கள் மற்றும் வழிபாட்டு செயல்களை விளக்க.

ஜிஹ்வா கோயில்: இது கோவர்தனின் நாக்கு என்று அறியப்படுகிறது. கோவர்தன் பூஜைக்கு முன்தினம் வரும் அன்னகூட நிகழ்வுக்கு, இங்கிருந்துதான் ஸ்ரீ வ்ரஜ வாசிகள் வழங்கிய உணவு வகைகளை கிரிராஜ் ஏற்றுக் கொண்டு சாப்பிடுகிறார்.

அன்னகூட நிகழ்வு என்பது கோவர்த்தன லீலை நடந்த உண்மையான நாளாகிய தீபாவளிக்கு ஒரு நாள் கழித்து கடவுளுக்கு செய்யப்படும் சிறப்பு வழிபாடு ஆகும்.

நோக்கம்3: முகாரவிந்தாவில் நடைபெறும் பக்தி செயல்களை விளக்க.

கோவர்தன் கிரிவலத்தில் உள்ள முக்கியமான இடங்களில் முகாரவிந்தா கோயிலும் ஒன்றாகும். பலர் இந்த கிரிவலத்தை முகாரவிந்தா கோவர்தனிடமிருந்து தொடங்குகிறார்கள். சிலர் குடம் நிரம்ப பாலை வைத்துக்கொண்டு கிரிவலம் செய்கிறார்கள், பால் குடத்தின் வழியாக மெதுவாக வழிந்து ஓடுகிறது. இது ‘தூத் தார் பரிக்ரமா’ என்று அழைக்கப்படுகிறது.

நோக்கம்4: தாமரைக் முகம் (முகாரவிந்தா) குறித்த பாரம்பரியப் பொருளை அறிந்துகொள்ள.

முகாரவிந்தா கோயில் மானசி-கங்கையின் வடகரையில் அமைந்துள்ளது. இது கோவர்த்தனின் தாமரை போன்ற முகம் ஆகும். முகா என்றால் முகம் (குறிப்பாக வாய்) என்றும் அரவிந்த் என்றால் தாமரை என்றும் பொருள். கீதா மஹாத்மியத்தின் 4 வது ஸ்லோகத்தில், ஸ்ரீமத் பகவத் கீதை பகவானின் திருவாயிலிருந்து தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது. இங்கும் கோவர்த்தன கிரிராஜின் வாய், தாமரை திருவாய் என்று அழைக்கப்படுகிறது. அவரது வாய் மட்டுமல்ல, பகவானின் திருமுகமும் தாமரை போன்றது. அவரது தாமரைப் திருப்பாதங்களும் அப்படித்தான்.

நோக்கம்5: தாமரை வடிவம் தொடர்பான வேத குறிப்புகளை அறிந்துகொள்ள.

கீதை ஸுகீதா கர்தவ்யா கிம் அன்யை:
ஶாஸ்திர-விஸ்தரை: யா ஸ்வய பத்மநாபஸ்ய
முக-பத்மாத் வினிஹ்ஸ்ருதா

பொருள்: பகவத் கீதையை உற்சாகத்துடன் படிக்க வேண்டும், விரிவான சாஸ்திரங்களைப் படிப்பதால் என்ன பயன்? கீதை பகவானின் தாமரை உதடுகளிலிருந்து வெளிப்பட்டது.

ஸ்ரீமத் பாகவதத்தின் ஸ்லோகம் 1.8.22 இல் குந்தி மகாராணி பகவானை வணங்கும்போது பின்வருமாறு சொல்வது போல் பகவானின் முகம் மற்றும் வாய் மட்டுமல்ல, தாமரை பெரும்பாலும் பகவானின் தெய்வீகப் பாதங்களுடனும், கண்களுடனும் தொடர்பு படுத்தப்படுகிறது.

னம: பம்கஜ-நாபாய னம: பங்கஜ-மாலினே னம:
பம்கஜ-நேத்ராய னமஸ் தே பங்கஜாங்ரயே

பொருள்: தாமரை மலர் போன்று அழுந்திய வயிறு கொண்டவரும், தாமரை மலர்களால் ஆன மாலைகளால் எப்போதும் அலங்கரிக்கப்பட்டவரும், தாமரையைப் போன்ற குளிர்ச்சியான பார்வையைக் கொண்டவரும், தாமரை மலர்களால் செதுக்கப்பட்ட பாதங்கள் கொண்டவருமான பகவானே, உமக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.

கோவர்த்தன் வடிவில் அமைந்துள்ள முகாரவிந்தா கோயில்:
நோக்கம்6: கோவிலில் பிரதிபலிக்கப்படும் கோவர்தன் வடிவத்தை விளக்க.

கோவர்த்தன் மலையின் உருவம் அமர்ந்திருக்கும் ஒரு பசுவின் உருவமாகும். அது தன் கழுத்தைத் வளைத்து தன் தாமரை முகத்தைத் அதன் வயிற்றருகே வைத்துள்ளது போல அமைந்துள்ளது கோவர்த்தன் நகரம். அதன் இரு கண்கள் ராதா-குண்ட் மற்றும் ஷ்யாம்-குண்ட். முகாரவிந்தா கோயில் ஜதிபுரத்தில் கிரிராஜின் தாமரை முக முகம் கொண்ட அழகிய கோயில்.

முகாரவிந்தா கோயில்:
நோக்கம்7: முகாரவிந்தாவைச் சுற்றியுள்ள புனித இடங்களை விளக்க.

ஸ்ரீஜி மதுராவிலுள்ள கிரிராஜ் கோவர்தன் நதிக்கரையில் வசிக்கிறார். முகாரவிந்தா கோயில் கோவர்தன் மலையின் அடிவாரத்தில் ஒரு பெரிய பாறையில் அமைந்துள்ளது. இப்புனித தலத்தின் இன்னொரு பெயர் ஷ்ரிங்க ஸ்தலி. இந்த இடம் தெய்வீகமானது மற்றும் அருகிலுள்ள பல புனிதர்களின் புனித இடங்களுக்கு ஆதாரமாக உள்ளது. ஸ்ரீ குசைஞ்ஜியின் துளசி கியாரா, மஹாபிரபுஜியின் துளசி கியாரா, ஸ்ரீ குசைஞ்ஜியின் பைதக்ஜி, ஸ்ரீ கிர்தார்ஜி பைதக்ஜி, கோகுல்நாத்ஜியின் கோயில், ஸ்ரீ மதன்மோகன்ஜியின் கோயில், ஸ்ரீ மஹாபிரபுஜியின் பைதக், ஸ்ரீ சந்திரமாஜியின் கோயில், தண்டவதி ஷீலா மற்றும் பல புனித இடங்கள் அருகில் அமைந்துள்ளன. ஒவ்வொரு இடத்திற்கும் அதன் தனிப்பட்ட புனிதமான சிறப்புகள் உள்ளன. பல புகழ்பெற்ற மகான்கள் இந்த இடங்களை வழிபட்டுள்ளனர், இன்றும் இந்த இடங்கள் தெய்வீக சக்தி மற்றும் ஆற்றல் நிறைந்தவைகளாக உள்ளன.

ஜதிபுரா
நோக்கம்8: ஜாதிபுரா கிராமத்தின் வரலாற்று பின்னணியை அறிந்துகொள்ள.

கிரிராஜ் கோவர்தனின் மேற்கில் அமைந்துள்ள ஜதிபுரா, முதலில் யதிபுரா என்று அழைக்கப்பட்டது. அது ஆள் நடமாட்டம் இல்லாத பக்கமாக இருந்தாலும், ஸ்ரீஜியின் சேவைக்காக ஏறுவது எளிதாக இருந்ததால் ஸ்ரீ வல்லபா ஆச்சார்யா கிரிராஜ்ஜின் இந்தப் பக்கத்தில் வசிக்க விரும்பினார்.

ஒரு சாது அல்லது துறவியின் மற்றொரு பெயர் ‘யதி’. ஸ்ரீ வல்லபாவைத் தேடும் எவரும் இங்கே அனுப்பப்பட்டனர். மக்கள் விரைவில் அதை ‘யதி’ வசிக்கும் இடம் என்று அழைக்கத் தொடங்கினர்; எனவே ஜதிபுரா என்று பெயர். வ்ரஜ் மொழியில் ‘ய’ என்பது ‘ஜ’ என்று உச்சரிக்கப்படுகிறது.

முகாரவிந்தாவுக்கு முன்னால் 14 வது புஷ்டி மார்க் பைதக்ஜி அமைந்துள்ளது. இங்கிருந்துதான் ஸ்ரீ வல்லபா, பகவானைப் பற்றி கிரிராஜ்ஜிடம் விவரித்தார்.

மாதவேந்திர பூரி சமாதி: மாதவேந்திர பூரி, ஈஸ்வர பூரியின் குரு மகாராஜ்ஆவார். ஈஸ்வர பூரி, சைதன்ய மகாபிரபுவின் தீட்சை குரு ஆவார். மாதவேந்திர பூரி கோவர்தனத்தில் இங்குதான் தனது பஜனைப் பயிற்சிகளைச் செய்தார்.

பகவான் தரிசனம் தந்த நிகழ்வு:
நோக்கம்9: முகாரவிந்தாவுடன் தொடர்புடைய லீலைகள் மற்றும் புராணக் கதைகளை அறிந்துகொள்ள.

ஸ்ரீநாத்ஜி மேவாருக்குச் சென்றபோது தண்டவதி குன்று ஆறு அடி உயரமாக இருந்ததாக நம்பப்படுகிறது. புலஸ்திய முனிவர் கிரிராஜ் கோவர்த்தனுக்கு கொடுத்த சாபத்தின் காரணமாக ஒவ்வொரு நாளும் அதன் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்த தண்டவதி குன்றை சுற்றியுள்ள நிலங்கள் தோண்டப்பட்டு பகவான் தரிசனங்கள் பக்தர்களுக்கு எளிதில் தெரியும்படி செய்யப்பட்டது.

புராணங்களின்படி, ஸ்ரீ கிருஷ்ணர் பிரஜ்தாமை விட்டு வெளியேறி தனது மற்ற கடமைகளுக்காக நாத்வாராவுக்குச் சென்றார். கோபிகைகள் மற்றும் பிரஜ்வாசிகளின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீ கிருஷ்ணர் ஆறு மாதங்கள் இங்கேயே ஓய்வு எடுக்க வர முடிவு செய்தார். வசந்த பஞ்சமி முதல் தசரா வரை ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்கள் ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு ஓய்வெடுப்பதாக கருதப்படுகிறது. தனது நாதத்வாரா கோவிலில் சந்தியா ஆரத்திக்குப் பிறகு, அவர் ஸ்ரீ கோவர்தனில் உள்ள முகாரவிந்தா கோயிலுக்கு வந்து ஓய்வு தரிசனம் தருகிறார். இந்த காலகட்டத்தில், அவரது இருப்பை, அவரை ஏற்றுக்கொள்ளும் பக்தர்களால் ந்ன்கு உணர முடியும்.

தெய்வத்திற்கு முக்கிய பிரசாதம் பால். உலகெங்கிலும் உள்ள மக்கள் பகவானை வழிபட இங்கு வருகிறார்கள். பகவானை மகிழ்விக்க பகவானுக்கு அளிக்கப்படும் சிறப்பு பூஜையான பால் அபிஷேகத்தை யார் வேண்டுமானாலும் இங்கு செய்யலாம். திருவிழா காலங்களில், பெரும் கூட்டம் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் இங்கு வந்து பகவானுக்கு பால், பூ படைத்து வழிபட்டு செல்கின்றனர்.

தரிசன நேரம்:
காலை:- 05:30 மணி முதல் 11:00 மணி வரை
மாலை:- 04:00 மணி முதல் 10:00 மணி வரை

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare