யாரடா ....... யாரடா ............. நீ
இராகம் : அடானா
தாளம் : ஆதி
யாரடா ……. யாரடா …………. நீ?
யாரடா ……. யாரடா …………. நீ?
அல்லா வழிக் கடந் துள்ளே வந்து அச்சம்
இல்லாமலே வெண்ணை கொள்ளையிடும் பையன் (யாரடா …. (2))
நேரா நிற்கச் சாயக் கொண்டையோ ……………….
நேராநிற்கச் சாயக் கொண்டையும் அதிலே
நீல நிறத்துச் சிகண்டியும், எங்கள்
காராம் பசு வெண்ணை உருண்டையும் தின்று
கையோடும் வாயோடும் சண்டை போடும் பையன் (யாரடா …… (2))
அங்கும் இங்கும் பார்த்து யாரும் இல்லா நேரம்
எங்கள் மனை வந்து நிற்கிறாய்? (2)
ஐயம் இல்லாமல் மனை மேல் மனை வைத்தென்
பையன் மேலேறியும் நிற்கிறாய்
அங்கே கட்டி வைத்த ஓசையிடும் மணி
ஆடாமல் நாக்கைப் பிடிக்கிறாய் ………….(2)
அத்தனை செய்தும் போறாதென் றென்னைப் பார்த்து
அந்தரங்கக் கண்ணும் அடிக்கிறாய் ……… (யாரடா …… (2))
போயும் போயும் இந்தக் காவல் வைத்தப்புறம்
போனேனே நானொரு மட்டி – இந்தப்
புத்தியில்லாமல் கையில் சாவியைத் தந்தேனே
பொல்லாத் தனத்திற்கு வட்டி – உன்
மாயத்தனத்திற்கு எங்கள் வீட்டுப் பையன்
தோழன் ஆனான் பூனைக்குட்டி (2) (யாரடா …… (2))
** ஹரே கிருஷ்ணா **

