23. தாலவனம் – பலராமரின் லீலைகள் நடந்த புனித வனம்

நோக்கங்கள்:

நோக்கம் 1: வனத்தின் நிலப்பரப்பில் குறைவு ஏற்பட்டிருந்தாலும், தாலவனமானது வ்ரஜ மண்டலத்தின் பன்னிரண்டு புனித வனங்களில் ஒன்றாக இருப்பதன் முக்கியத்துவத்தை உணருதல்.

நோக்கம் 2: பாலராமர் அசுரன் தேனுகாசுரனை வதம் செய்ததின் தொடர்புடன் தாலவனத்தின் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் பற்றி விவரிப்பது.

நோக்கம் 3: தாலவனத்தின் முக்கிய புனித இடங்கள் மற்றும் அவை பாலராமரின் லீலைகளை எவ்வாறு நினைவூட்டுகின்றன என்பதையும் மேலும் இன்றளவும் பக்தி நிகழ்வுககளை பறைசாற்றும் முக்கிய இடங்களாக எவ்வாறு திகழ்கின்றன என்பதையும் ஆராய்வது.

நோக்கம் 4: வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தாலவனத்தில் பாலராமர் மற்றும் பகவான் கிருஷ்ணர் இணைந்து தேனுகாசுரனை வதம் செய்த திவ்ய லீலையை விவரிப்பது.

நோக்கம் 5: தாலவனத்தின் ஆன்மீக மகத்துவத்தை விளக்கும் வேதக் குறிப்புகள் மேலும் அவை கூறும் ஆன்மீக பலன்களை உணர்ந்து கொள்வது.

நோக்கம் 6: மதுரா மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து, தாலவனத்தின் நவீன உருவாக விளங்கும் தார்சி கிராமத்தை வரைபடத்தில் கண்டறிதல்.

நோக்கம் 1: வனத்தின் நேரடி இருப்பில் குறைவு ஏற்பட்டிருந்தாலும், தாலவனமானது வ்ரஜ மண்டலத்தின் பன்னிரண்டு புனித வனங்களில் ஒன்றாக இருப்பதன் முக்கியத்துவத்தை உணருதல்.

கண்ணோட்டம்

வ்ரஜ மண்டலத்தின் பன்னிரண்டு திவ்ய வனங்களான த்வாதச கனனங்களில் ஒன்றாகிய தாலவனம், பகவான் கிருஷ்ணரின் அண்ணனான பாலராமரின் திவ்ய லீலைகளால் புகழ்பெற்றது. இன்று அந்த வனம் அதன் பசுமையான மூல வடிவில் இல்லை என்றாலும், அதன் மகிமைகள் வேதங்களில், புனித பண்டிகைகளில், உற்சவங்ககளில் மற்றும் பக்தர்களின் இதயங்களில் இன்றும் தங்கி இருக்கின்றன.

நோக்கம் 2: பாலராமர் அசுரன் தேனுகாசுரனை வதம் செய்ததின் தொடர்புடன் தாலவனத்தின் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் பற்றி விவரிப்பது.

வரலாற்று முக்கியத்துவம்

தாலவனம் வரலாற்று ரீதியாக அதன் பழம்தரும் பனை மரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, அவை தெய்வீக அமிர்தமாகக் கருதப்பட்டன, ஆனால் இப்போது சில பனைகள் மட்டுமே காணப்படுகின்றன; அவையும் முந்தைய காலத்தில் இருந்த அளவிற்கு விரிவாக இல்லை.

காட்டின் பனை பழங்களைக் காத்து வந்த சக்திவாய்ந்த தேனுகாசுரன் என்ற கழுதை அசுரனை பகவான் பலராமர் இங்குதான் கொன்றார்.

தேனுகாசுரன் முந்தைய ஜென்மத்தில் துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டான், பின்னர் பலராமரின் ஸ்பரிசத்தால் முக்தி பெற்றான்.

தற்போது, இந்தப் பகுதி தார்சி (அல்லது தராசி) என்று அழைக்கப்படுகிறது, இது மதுராவிலிருந்து தென்மேற்கே சுமார் 6 மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமமாகும். இங்கே பக்தர்கள் கிருஷ்ணர் மற்றும் பலராமரின் திவ்ய லீலைகளை பிரதிபலிக்கும் பலராமர் திருக்கோயிலான தௌஜி மந்திரை தரிசிக்க வருகின்றனர்.

3-அடி உயர பலராமர் விக்ரஹம், அவரது துணைவியார்
ஸ்ரீமதி ரேவதி மற்றும் கிருஷ்ணருடன்

தௌஜி மந்திர்

நோக்கம் 3: தாலவனத்தின் முக்கிய புனித இடங்கள் மற்றும் அவை பாலராமரின் லீலைகளை எவ்வாறு நினைவூட்டுகின்றன என்பதையும் மேலும் இன்றளவும் பக்தி நிகழ்வுககளை பறைசாற்றும் முக்கிய இடங்களாக எவ்வாறு திகழ்கின்றன என்பதையும் ஆராய்வது.

தாலவனத்தில் (தார்சி) தரிசிக்க வேண்டிய தலங்கள்

தலம்விளக்கம்
தௌஜி மந்திர் (பலராமர் கோவில்)பகவான் பலராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட முக்கிய கோவில். தேனுகாசுரனை வென்ற தெய்வீக நிகழ்வை நினைவுகூர்கிறது.
சங்கர்ஷண குண்டம்பகவான் பலராமருடன் தொடர்புடைய புனித நீர்த்தலம். இங்கு யாத்திரிகள் ஸ்நானம் செய்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
விழா (பத்ரா மாதம்)பலராமரின் லீலையை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் பத்ரா மாதத்தின் (ஜூலை–ஆகஸ்ட்) சுக்ல பக்ஷ 11ஆம் நாளில் விழா கொண்டாடப்படுகிறது.

சங்கர்ஷண குண்டம் – இந்த புனித நீர்த்தளத்தில் ஸ்நானம் செய்வதால், இம்மையிலே செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

நோக்கம் 4: வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தாலவனத்தில் பாலராமர் மற்றும் பகவான் கிருஷ்ணர் இணைந்து தேனுகாசுரனை வதம் செய்த திவ்ய லீலையை விவரிப்பது.

லீலைகள்: தேனுகாசுர அசுரனை வதம் செய்தல்

பாகவத புராணம் மற்றும் ஆனந்த பிருந்தாவன சம்புவில் விவரிக்கபட்டுள்ளபடி:

ஒரு நாள், பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தபோது, பகவான் கிருஷ்ணரும் பலராமரும் மாடு மேய்க்கும் சிறுவர்களுடன் தாலவனம் அருகே சென்றனர். நெருங்கிய மாடு மேய்க்கும் நண்பர்களான ஸ்ரீதாமா, சுபலா, ஸ்தோக-கிருஷ்ணா கிருஷ்ண-பலராமரை அணுகி, “ஓ வலிமையுடைய பலராமரே, தயவுசெய்து கடும் பசியில் இருந்து எங்களை விடுவிக்கவும். அருகிலுள்ள காட்டில் வளரும் புதிய, சாறு நிறைந்த, நன்றாக பழுத்த பனைப்பழங்ளை ருசிக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இருப்பினும், இந்த காட்டை தேனுகாசுரன் என்ற பெரிய கழுதை அரக்கன் காத்துவருகின்றான். அவன் மிகவும் கொடூரமானவன். அவன் ஒரு பறவை, பூச்சியை கூட காட்டுக்குள் நுழைந்து பழங்களை அனுபவிக்க அனுமதிப்பதில்லை. பிருந்தாவனத்தின் இளவரசர்களாகிய நீங்கள் தான் இந்த அரக்கனுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டி இந்த இனிய பழங்களால் எங்களை பசியாற்றச் செய்ய வேண்டும்.”

பலராமரும் கிருஷ்ணரும் தங்கள் நண்பர்களை மகிழ்விக்க தாலவனத்துக்குள் சென்றார்கள். அங்கே பெரும் பெரும் பனைமரங்களைப் பார்த்த பலராமர், அவற்றில் ஒன்றை வலுவாகக் குலுக்கியபோது, எல்லா பனைப்பழங்களும் தரையில் விழத் தொடங்கின. இதைப் பார்த்து கோபாலர்கள் குதித்தும் ஆடியும் மகிழ்ந்தனர்.

அந்த வேளையில், தேனுகாசுரன் தனது பனைப்பழங்கள் விழும் சத்தத்தை கேட்டான். கொந்தளித்து அங்கே பாய்ந்து வந்து, நேராக பலராமரிடம் சென்று, கழுதை போல பின்னங்கால்களைத் திருப்பி, பலராமரின் மார்பில் முடிந்தவரை பலமாக உதைத்தான்.

ஆனால் ஸ்ரீ பலராமர் மிகுந்த பொறுமையுடன், எதுவும் நடக்காதது போல்அசையாமல் நின்றார். இதனால் அவமானப்பட்ட தேனுகாசுரன் மீண்டும் திரும்பி பலராமரின் மார்பில் உதைத்தான்.

இறுதியாக, ஸ்ரீ பலராமர் எளிதாக ஒரே கையால் தேனுகாசுரனின் இரு பின்பக்க கால்களையும் பிடித்து, தலையின் மேல் ஒரு விளையாட்டுப் பொருளைப் போலச் சுழற்றினார். அந்த வலுவான சுழற்சியின் பலத்தால் தேனுகாசுரன் உயிரிழந்தான். பின்னர் பலராமர் அவன் பிரம்மாண்டமான சடலத்தை ஒரு உயர்ந்த பனைமரத்தின் மேல் எறிந்தார். அந்த பனைமரம் அடுத்த மரத்தின் மேல் விழுந்தது; அது மறுமரத்தின் மேல் விழுந்தது. இவ்வாறு டொமினோ விளைவு போல பல பனைமரங்கள் சரிந்தன.

தேனுகாசுரனின் கழுதை-அனுசரர்கள் தங்கள் தலைவனின் மரணத்தை பழிவாங்க கிருஷ்ண-பலராமரை நோக்கி பாய்ந்தனர். ஆனால் கிருஷ்ணரும் பலராமரும் ஒவ்வொரு கழுதையையும் பின்பக்க கால்களில் பிடித்து சுழற்றி, கொன்று, பனைமரங்களின் மேல் எறிந்தனர். அப்பொழுது அந்தப் பனைமரங்கள் பலவண்ணக் கழுதைகளால் அலங்கரிக்கப்பட்ட மேகங்களைப் போலத் தோன்றின.

பின்னர் கிருஷ்ண-பலராமரும், கோபாலர்களும் இனிய பழுத்த பனைப்பழங்களை உண்டு மகிழ்ந்தனர். அதன் பின் பசுக்கள் புல் மேய தாலவனத்திற்குள் வந்தன; பறவைகள் விதைகளையும் பழங்களையும் தின்றன. இவ்வாறு தாலவனம் மீண்டும் கிருஷ்ணபலராமரின் லீலைகளுக்கு இனிமையான வனமாக மாறியது.

கோபாலர்கள் எடுத்துச் சென்ற பாதையைப் போல, நாமும் குருவையும் கிருஷ்ணரையும் பிரார்த்திக்க வேண்டும். நம்முடைய இதயங்கள் இப்போது காமம், கோபம், பொறாமை, அகங்காரம், மாயை, பேராசை ஆகிய அரக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. கிருஷ்ண-பலராமர் அவற்றை அழித்து விட்டால், அந்த இதயத்தில் பக்திப் பழங்கள் விளைந்து, அன்பான சேவையின் பலன்களை அவர்களுக்கே அர்ப்பணிக்க முடியும்.

நோக்கம் 5: தாலவனத்தின் ஆன்மீக மகத்துவத்தை விளக்கும் வேதக் குறிப்புகள் மேலும் அவை கூறும் ஆன்மீக பலன்களை உணர்ந்து கொள்வது.

வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் தாலவனத்தின் பெருமை

ஆதி-வராஹ புராணம், மதுரா மகாத்மியம் (MM), மற்றும் பிற புனித நூல்களில் தாலவனத்தின் மகிமை குறிப்பிடப்பட்டுள்ளன:

“இரண்டாவது வனம் திவ்யமான தாலவனம் ஆகும். இங்கே ஸ்நானம் செய்பவன் அனைத்து வெற்றிகளையும் அடைவான்.” (ஆதி வராக புராணம், MM-332)

“இங்கு நீலத் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட தெளிந்த நீர்க் குளம் உள்ளது. இங்கே ஸ்நானம் செய்வதாலும், தானம் செய்வதாலும் அனைத்து மனோவாஞ்சைகளும் நிறைவேறும்.” (MM-333)

“இப்புனித வனத்தில் அரக்கன் வதம் செய்யப்பட்டது; அது பகவானின் லீலைகளுக்கும் யாதவர்களின் நலன்களுக்கும் உதவியது.” (MM-334)

“இந்த நீர்நிலைகளில் ஸ்நானம் செய்பவன் யாதவ குலத்தில் பிறந்து, பகவானின் திருவுருவத்தை தரிசிக்கிறான்.” (MM-335)

ஆன்மீக நுண்ணறிவு

தாலவனம் என்பது வ்ரஜவனங்களின் ஆழமான ஆன்மீகச் சின்னமாக விளங்குகிறது. தேனுகாசுரனை பலராமர் வதம் செய்தது, பக்தியின் இனிமையை உணர்வதற்கு முன் அகந்தை மற்றும் அறியாமையை நீக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்த புனித பூமியை பக்தியுடன் தரிசிப்பது மனத்தைத் தூய்மைப்படுத்தி, தெய்வீகத் தூண்டுதலை அளித்து, இறைவனின் நித்ய லீலைகளுடன் ஆழ்ந்த இணைப்பை ஏற்படுத்துகிறது.

நோக்கம் 6: மதுரா மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து, தாலவனத்தின் நவீன உருவாக விளங்கும் தார்சி கிராமத்தை வரைபடத்தில் கண்டறிதல்.

தாலவனத்தின் இருப்பிடம் (தார்சி, மதுரா)

தாலவனம் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள தார்சி என்ற நவீன கிராமத்துடன் ஒத்திருக்கிறது.

இது மதுரா நகரத்திலிருந்து தென்மேற்கு திசையில் சுமார் 6 மைல் (10 கி.மீ.) தொலைவில், மற்றும் மதுவனத்திலிருந்து தென்மேற்கு திசையில் சுமார் 2½ மைல் தொலைவில் அமைந்துள்ளது.

தார்சி கிராமத்தின் விரிவான வரைபடத்தில், இதன் புவியியல் பரப்பு சுமார் 4.79 சதுர கி.மீ. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மதுரா தாலுகா மற்றும் மாவட்டத் தலைமையகத்துடன் சுமார் 6–10 கி.மீ. தொலைவில்நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare