46. விருந்தாவனத்தில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் திவ்ய லீலைகள்

நோக்கங்கள்:
நோக்கம் 4: மகாபிரபு விருந்தாவனத்தில் யமுனையை தரிசித்த போது ஏற்பட்ட ஆனந்த நிலையைப் பற்றி அறிதல்.
நோக்கம் 1: ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஏன் விருந்தாவனத்தை பார்வையிட ஆவலுடன் இருந்தார் என்பதைப் புரிந்துகொள்வது, மற்றும் இது அவருடைய ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் மீதுள்ள பரிசுத்தமான ப்ரேம-பக்தியை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை அறிதல்.
ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவாக அவதரித்த போது, அவர் ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபத்தை பரப்புவதற்கும், ஸ்ரீமதி ராதாராணியின் ஸ்ரீ கிருஷ்ணருக்கான ப்ரேமத்தின் இனிமையை அனுபவிப்பதற்கும் அவதரித்தார். அவருடைய மனத்தில் இருந்த ஒரு பரிசுத்தமான ஆசை, ஸ்ரீ கிருஷ்ணரின் நித்திய லீலை நடந்த இடமான விருந்தாவனத்தை தரிசிப்பதுதான்.
ஒரு பக்தருக்கு, விருந்தாவனம் என்பது வெறும் கோவில்கள் மற்றும் காடுகளால் ஆன இடம் அல்ல — அது ஸ்ரீ கிருஷ்ணரின் நித்திய வாசஸ்தலமாகும். மகாபிரபு விரும்பியது:
- ஸ்ரீ கிருஷ்ணர் தனது பால்ய பருவத்தில் தெய்வீக லீலைகளை நிகழ்த்திய புனிதமான இடங்களைப் தரிசிப்பது ,
- கிருஷ்ண ப்ரேமையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துதல்,
- மற்றும் உலகம் முழுவதும் ப்ரேம-பக்தி மனநிலையுடன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைவதை ஊக்குவித்தல்.
“அவர் மதுரா மற்றும் விருந்தாவனத்திற்கு சென்று, ஸ்ரீ கிருஷ்ணர் தமது லீலைகளை அனுபவித்த புனிதமான இடங்களை தரிசனம் செய்ய விரும்பினார்.”
— சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 17.2–3
நோக்கம் 2: ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் விருந்தாவனத்தை அடைய முதல் முயற்சி பற்றி அறிதல், மற்றும் இந்த பயணம் அவருடைய பணிவும், பக்தர்களின் அன்பும் எவ்வளவு ஆழமானது என்பதை வெளிப்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்வது

தன் புனிதமான தென்னிந்தியப் பயணத்திற்கு முன், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு விருந்தாவனத்திற்கு செல்லத் தீர்மானித்தார். ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் நடந்த இடங்களை பார்வையிடும் ஆவல் அவரது இதயத்தில் பெருகியது. ஆனால் அந்தப் பயணம் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.
சந்நியாசம் ஏற்ற பிறகு, மகாபிரபு தெய்வீக பரவசத்தில் இருந்தார். அவரது மனம் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளின் ஸ்மரணயில் மூழ்கியிருந்தது, மற்றும் அவரது பாதங்கள் விருந்தாவனத்தை நோக்கி அவசரமாக நகர்ந்தன. ஆனால் நவத்வீபத்தில் இருந்த அவரது அன்பு சகோதரர்கள் — நித்யானந்த பிரபு, சந்திரசேகர ஆசார்யர், மற்றும் ஜகதானந்த பண்டிதர் — ஆழ்ந்த கவலையில் இருந்தனர். பெங்காலின் வழிகள் அபாயகரமானவை, மேலும் பரவசத்தில் மூழ்கிய மகாபிரபு பாதுகாப்பை பற்றி சிந்திக்கவில்லை.
அவர்கள் ஒரு சிறந்த திட்டத்தை உருவாக்கினர்
மகாபிரபு வடக்கு நோக்கி நடந்தபோது, நித்யானந்த பிரபு அவரை யமுனை என கூறி கங்கை நதிக்கே அழைத்துச் சென்றார், ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமயில் மூழ்கியிருந்த மகாபிரபு இதை அறியவில்லை. அவரது கண்களில் கண்ணீர் மல்க, விருந்தாவனத்தை அடைந்துவிட்டதாக எண்ணி அவர் அந்த நதியில் இறங்கினார். அந்த தருணத்தில், அருகிலுள்ள படகில் ஸ்ரீ அத்வைத ஆசார்யர் தோன்றினார். அவரை பார்த்ததும், மகாபிரபு இது விருந்தாவனம் அல்ல, அவரை அன்புடன் ஏமாற்றியிருந்தனர் என்ற உண்மையை உணர்ந்தார். ஆனால் அவர் எதிர்ப்பு காட்டவில்லை. பதிலாக, அவர் புன்னகையுடன் அந்த அன்பான சூழ்ச்சியை புரிந்துகொண்டார்.
அத்வைத ஆசார்யர் அவரை சாந்திபூருக்கு அழைத்துச் சென்று, அங்கு அவருக்காக காத்திருந்த சசி மாதாவை சந்திக்க ஏற்பாடு செய்தார். சசி மாதாவும் “நீங்கள் செல்லவேண்டும் என்றால், ஜகன்னாத புரியில் தங்குங்கள். அங்கு இருந்தால், உங்கள் செய்திகளை நான் கேட்க முடியும்.” என்ற வேண்டுகோளை மஹாப்ரபுவிடம் வைக்க, மகாபிரபு, தாயின் ஆசைக்கும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு கீழ்ப்படிந்து, அதை ஏற்றுக்கொண்டார். அவர் விருந்தாவனப் பயணத்தை ரத்து செய்து, ஜகன்னாத புரியை நோக்கி திரும்பினார்.
“சைதன்ய மகாபிரபு விருந்தாவனப் பயணத்தை ரத்து செய்து, ஜகன்னாத புரிக்கு செல்லத் தீர்மானித்தார்.”
— சைதன்ய சரிதாம்ருதம், மத்திய 1.167
இந்த முதல் முயற்சி தோல்வியால் முடிவடைந்ததல்ல. அது ஒரு பரிசுத்தமான உணர்வை வெளிப்படுத்தியது: பக்தர்களின் ப்ரேமத்திற்கும் தாயின் சிறிய ஆசைக்கும் கூட பகவான் கட்டுப்படுகிறார்.
பாடம்:
பகவான் ச்வதந்திரமானவராக இருந்தாலும், பக்தர்களின் வேண்டுகோளயும் வழிகாட்டுதலையும் ஏற்கிறார். இந்த மனநிலை நமக்கு பணிவும், ஒத்துழைப்பு மிக்க சேவையின் முக்கியத்துவத்தையும் கற்பிக்கிறது.
நோக்கம் 3: மகாபிரபுவின் இரண்டாவது, வெற்றிகரமான விருந்தாவனப் பயணத்தைப் பற்றி அறிதல், மற்றும் அது ஸ்ரீ கிருஷ்ணரின் புனிதமான லீலை நடந்த இடத்தை பார்வையிடும் அவரது பரிசுத்தமான ஆசையை எவ்வாறு நிறைவேற்றியது என்பதை புரிந்துகொள்வது.
(Madhya 17–18)

புரியில் தங்கிய பின், தென்னிந்திய பயணத்தில் இருந்த மகாபிரபு, பலபத்ர பட்டாசாரியருடன் விருந்தாவனத்திற்குப் புறப்பட்டார். அவர் மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க, பெரும் சாலைகளை விட்டுவிட்டு, அமைதியான காடுவழியை தேர்ந்தெடுத்தார். ஆனால், அவரது பொன்னான திருமேனி, தெய்வீக கீர்த்தனை—இவை கிராமவாசிகளின் மனங்களை உருகச் செய்தன.
“மக்கள் காந்தம் போல அவரை நோக்கி ஓடினார்கள்; ஆடினார்கள், அழுதார்கள், அன்புடன் அவரை பின்தொடர்ந்தார்கள்.”
நோக்கம் 4: மகாபிரபு விருந்தாவனத்தில் யமுனையை தரிசித்த போது ஏற்பட்ட ஆனந்த நிலையைப் பற்றி அறிதல்.

யமுனை தரிசனம் (மத்திய- 18.73–81)
யமுனா நதியை பார்த்தவுடன்,ஸ்ரீ சைதன்ய மகாபிரபு கிருஷ்ண பிரேமத்தில் வெளிப்புற உணர்வை இழந்தார். “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று உரக்க அழைத்தபடி, அவர் யமுனையின் நீருக்குள் பாய முயன்றார். ஆனால், அவருடன் இருந்த பலபத்ரர் அவரை தடுத்தார்.
“யமுனை நதியைப் பார்த்தவுடன்,
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு பரம ஆனந்தத்தில் மூழ்கினார்.”
— சைதன்ய சரிதாம்ருதம், மத்திய 19.78
நோக்கம் 5: மகாபிரபுவின் கோவர்த்தன பரிக்ரமாவைப் பற்றி அறிதல், மற்றும் அது ஸ்ரீ கிருஷ்ணரின் புனிதமான இடத்திற்கு அவர் காட்டிய பக்தியை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்வது (மத்திய 18.34–38).

மகாபிரபு கோவர்தன மலையை வலம் வந்தார், சாஷ்டாங்கமாக விழுந்து மீண்டும் மீண்டும் வணங்கி அந்த மலைக்கு “ஹரிதாஸ-வர்ய” – கிருஷ்ணரின் சிறந்த சேவகர் என்ற புகழை அளித்தார். (ஸ்ரீ.பா. 10.21.18)
அவர் கோவர்தன மலைக்குள் உள்ள ஒவ்வொரு கல்லையும், ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து வேறுபடாத தெய்வீக ரூபமாகவே பார்த்தார்.
அவர் “ஹரிதாஸ-வர்ய” என்ற சேவக மனப்பான்மையில், அந்த மலைக்கு வலம் வந்தது ஒரு சடங்காக அல்ல, ஆனந்தம், பணிவு, சரணாகதி ஆகியவற்றின் வெளிப்பாடாக இருந்தது.
தன் காலில் செருப்பின்றி வலம் வந்ததன் மூலம், மகாபிரபு கோவர்தனத்தை ஒரு தெய்வீக ரூபமாகவும், கிருஷ்ணரின் அன்பு சேவகராகவும் காண்பித்தார். இது பக்தர்களுக்குப் விருந்தாவனத்தின் புனிதத்துவத்தையும், ஆன்மீக மாற்றத்தை கொடுக்கக்கூடிய சக்தி வாய்ந்த இடம் என்பதை காண்பித்தது.
நோக்கம் 6: மகாபிரபு ராதா-குண்டம் மற்றும் ஷ்யாம-குண்டத்தை எவ்வாறு அடையாளம் கண்டார் என்பதை அறிதல், மற்றும் அந்த தருணம் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லீலைகளுடன் அவருடைய பரிசுத்தமான தொடர்பை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்வது.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, கோவர்த்தனத்திற்கு அருகிலுள்ள அரிட்ட-கிராமத்திற்கு வந்தபோது, ஒரு நெல் வயலில் உள்ள இரண்டு சிறிய குளங்களைப் பார்த்தார். தன் தெய்வீக உள்ளுணர்வாலும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொண்ட பிரேமத்தின் பரவச நிலையாலும், அவற்றை ஸ்ரீமதி ராதாராணி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் அரிஷ்டாசுரனை வதம் செய்த பின் உருவாக்கிய புனித குண்டங்களாக உடனே அடையாளம் கண்டார்.
பக்தியில் ஆழ்ந்து, “இங்கே ராதா-குண்டம்! இங்கே ஷ்யாம-குண்டம்!” என்று பரவசமாக கூறி, அந்த குண்டங்களில் புனிதமாகக் குளித்தார். ராதா-குண்டத்திலிருந்து எடுத்த மண்ணை திலகமாக அணிந்து, “இது படைப்பின் மிகப் புனிதமான இடம்” என்று அறிவித்தார்.
ISKCON-இன் கௌடிய வைஷ்ணவ உபதேசங்களின்படி, இந்த நிகழ்வு ஸ்ரீமதி ராதாராணியின் பாவத்தை மகாபிரபு எவ்வளவு ஆழமாக உணர்ந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது. ராதா-குண்டம் என்பது ஸ்ரீமதி ராதாராணியின் ப்ரேமத்தின் உருவாகவே கருதப்படுகிறது. அதனால் பக்தர்கள், தூய ப்ரேம-பக்திக்காக ஏங்கும் மனதுடன், அதனை மிகுந்த மரியாதையுடன் அணுக வேண்டும்.
பின்னர், மகாபிரபுவின் ஆணையின்படி, ரூப கோஸ்வாமி மற்றும் ரகுுநாத தாஸ் கோஸ்வாமிகள் இந்த புனித குண்டங்களை மீட்டு உலகறியச் செய்தனர்.
நோக்கம் 7: மகாபிரபு விருந்தாவனத்தின் பன்னிரண்டு காடுகளில் எவ்வாறு கீர்த்தனம் செய்தார் என்பதை அறிதல், மற்றும் அவர் பாடல்களிலும் புனிதமான பயணத்திலும் ஸ்ரீ கிருஷ்ணருக்கான பரிசுத்தமான அன்பை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதை புரிந்துகொள்வது.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு விருந்தாவனத்தை தரிசிக்கும்போது, மதுவனம், பாண்டீரவனம், விருந்தாவனம் போன்ற பன்னிரண்டு புனித வனங்களிலும் பரவசமாக சங்கீர்த்தனத்தை பாடி, பகவான் கிருஷ்ணரின் லீலைகளை ஆனந்தமாக அனுபவித்தார். பக்தர்களுடன் இணைந்து, மரங்களை அணைத்தார், புனித நதிகளில் ஸ்நானம் செய்தார், மிருகங்களுக்கும் பழங்குடியினருக்கும் பக்தியை அருளினார்.. புனித நாமத்தின் மாயக்காட்சியை அவர் வெளிப்படுத்தினார். சைதன்ய சரிதாம்ருதம் (மத்திய 17.192 முதல்) இக்கதையை விவரிக்கிறது. அவரது பயணம், சங்கீர்த்தனத்தின் சக்தி இயற்கையையும் இதயங்களையும் புனிதமாக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது—ஒவ்வொரு வன பாதையும் பவித்ர ப்ரேமத்தின் தெய்வீக இருப்பிடமாக இருக்கிறது.
நோக்கம் 8: ஸ்ரீ சைதன்ய மகாபிரபு பார்வையிட்ட புனிதமான இடங்களின் ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்தல், மற்றும் அவரது சங்கீர்த்தனம் அந்த இடங்களை, பக்தி மற்றும் தெய்வீக நினைவுகளின் மூலம் எவ்வாறு புனிதமாக்கியது என்பதை புரிந்துகொள்வது.
யமுனா
மஹாபிரபு மதுராவுக்கு வந்தபோது, விஸ்ராம் காட் பகுதியில் புனித யமுனையில் ஸ்நானம் செய்தார். நதியின் மென்மையான ஓட்டம், கிருஷ்ணரின்லீலைகளை— கோபியர்களுடன் நீரை தெறித்து விளையாடல், படகு லீலைகள், யமுனாவின் தெய்வீக அணைப்பு—அவரது மனதில் எழுப்பியது. பரவச பாவத்தில் மூழ்கிய மஹாபிரபு, வெறும் நீரை அல்ல, ஒவ்வொரு சிற்றலையிலும் கிருஷ்ணரின் புன்னகையை கண்டார்.
கோவர்த்தன
மஹாபிரபு கோவர்த்தன மலைக்காட்சியை கண்டவுடன், முழுமையாக தரையில் விழுந்து வணங்கினார். மலைக்கான ஒரு கல்லை அணைத்து, பரவசமாக அழுதார். “ஹரிதாஸ-வர்ய” எனக் கோவர்த்தனை புகழ்ந்தார்—கிருஷ்ணரின் சிறந்த சேவகர். பக்தியுடன் பரிக்ரமா செய்தார்; கிருஷ்ணர் பக்தர்களை பாதுகாக்க மலையை தூக்கிய லீலையை நினைத்தார். ஒவ்வொரு அடியும் ஒரு ஜபம், ஒவ்வொரு மூச்சும் ஒரு ஸ்துதி.
ராதா-குண்டம்
அரிஷ்ட கிராமத்தில், மஹாபிரபு ஸ்ரீமதி ராதாராணி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித குண்டங்களைத் தேடினார். காலத்தின் ஓட்டத்தில் மறைந்திருந்தாலும், இரண்டு நெல் வயல்கள்களை—காளி படி மற்றும் கௌரி படியை—அவர் ச்யாம குண்டம் மற்றும் ராதா குண்டமாக அடையாளம் கண்டார். ஆனந்த கண்ணீருடன், அந்த நீரில் ஸ்நானம் செய்தார், அதன் மண்ணை நெற்றியில் பூசினார், மற்றும் ராதா குண்டத்தை “மிக உயர்ந்த புனித ஸ்தலம்” என அறிவித்தார். “பிரம்மனுக்கே கூட, நான் அனுபவித்த பரவசத்தை விவரிக்க முடியாது,” என்றார்.
வாம்சி வட்
வாம்சி வட் பகுதியில், ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகளை ராசலீலைக்காக அழைத்த பூர்வீக மரத்தின் கீழ் மஹாபிரபு அமர்ந்தார். கிருஷ்ணரின் வாம்சியின் இசை அவரது உள்ளத்தில் ஒலித்தது. அவர் பரம ப்ரேம பாவத்தில் திளைத்து, பக்தியின் மனநிலையுடன் ராசலீலையை மீண்டும் அனுபவித்தார்.
நோக்கம் 9: ஸ்ரீ சைதன்ய மகாபிரபு கோஸ்வாமிகளுக்கு அளித்த முக்கியமான உபதேசங்களைப் புரிந்து கொண்டு, அவர்கள் விருந்தாவனத்தின் புனித தலங்களை நிறுவுவது மற்றும் பக்தி இலக்கியங்களை எழுதுவது குறித்த பணியை மையமாக கொண்டு செயல்படுதல்.
விருந்தாவனத்தின் புனித நிலத்தை தரிசித்த பின், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தம்முடைய நெருங்கிய பக்தர்களான ரூப கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமிக்கு மிக முக்கியமான ஆன்மீக உபதேசங்கள் மற்றும் பொறுப்புகளை வழங்கினார். இந்த உபதேசங்கள், தூய பக்தியின் பாதையை பின் வரும் சந்நிதியினர்கள் வரை பாதுகாக்கவும் பரப்பவும் உதவின.
ரூப கோஸ்வாமிக்கு — பிரயாகத்தில் (தசாஶ்வமேத காட் – கங்கை நதி)
மஹாபிரபு ரூப கோஸ்வாமியை சந்தித்து, ஆன்மீக நூல்களை எவ்வாறு எழுத வேண்டும் என்பதை அன்புடன் விளக்கினார். அவர் பக்தியின் பல பாவங்களைப் பற்றி உபதேசித்தார் — கிருஷ்ண உணர்வு, பிரேம பக்தி, அந்த ப்ரேமத்தை எழுத்தில் எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் கூறினார்.
மேலும் அவர்
“பக்தி என்ற பெருங்கடலில் ஒரு சிறு துளியை உனக்குக் கொடுக்கிறேன் — இப்போது அதை பரவச்செய்வாயாக.”
என்று கூறினார் பின்னர் ரூப கோஸ்வாமி, பக்தி-ரஸாம்ருத-சிந்து போன்ற அழகிய நூல்களை எழுதினார், அவை நமக்கு கிருஷ்ணரை ப்ரேமத்துடன் எப்படி வழிபட வேண்டும் என்பதை உபதேசிக்கின்றன.
சனாதன கோஸ்வாமிக்கு — வாராணசியில் (அறிவின் நகரம்)
மஹாபிரபு சனாதன கோஸ்வாமிக்கு கீழ்கண்ட உத்தரவுகளை வழங்கினார்:
விருந்தாவனத்தில் மறைந்த புனித ஸ்தலங்களைத் தேடி மீட்டெடுக்கவும்
வைஷ்ணவ நூல்களை எழுதவும், பக்தியைப் பற்றி மக்கள் அறிய உதவவும்
கிருஷ்ணரை அன்பும் மரியாதையும் கொண்டே வழிபட எப்படி என்பதை போதிக்கவும்
அவர் கூறினார்:
“விருந்தாவனத்திற்கு செல்; மிகுந்த பணிவுடன் மறைந்த புனித ஸ்தலங்களைத் தேடு,
தூய பக்தி சேவையைப் பற்றி எழுது.” (சை.ச. மத்திய 20.106)
பின்னர் சனாதன கோஸ்வாமி பல புனித ஸ்தலங்களை கண்டுபிடித்தார்,பக்தர்களுக்கான நடைமுறை வழிகாட்டி நூல்களை எழுதியார், மதன-மோகன் போன்ற விக்ரஹங்களை வழிபட ஏற்பாடு செய்தார்.
இருவரும் பக்தியில் நிரம்பிய எளிய வாழ்க்கை வாழ்ந்தனர்ரூப மற்றும் சனாதன கோஸ்வாமிகள், விருந்தாவனத்தில் பணிவான முனிவர்களாக வாழ்ந்தனர் —
மரங்களின் கீழ் உறங்கினர், பவித்ர நாமத்தை ஜபித்தனர், இன்றும் பக்தர்களை ஊக்குவிக்கும் நூல்களை எழுதினர். அவர்கள் மஹாபிரபுவின் உபதேசங்களை ஆழமான ப்ரேமத்துடனும் நம்பிக்கையுடனும் பின்பற்றினர்.
நோக்கம் 10: விருந்தாவனத்திலும் புரியிலும், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு ஸ்ரீ ராதையின் கிருஷ்ணருக்கான ஆவலையும் பிரிவின் வேதனையையும் எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதை அவரது பரிசுத்தமான ஜபம், கண்ணீர், மற்றும் பிரிவு சார்ந்த பாடல்களின் மூலம் உணர்தல்.
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீமதி ராதாராணியின் கிருஷ்ணரிடம் இருந்து பிரிவின் பாவத்தில்—விரஹ பாவத்தில்—ஆழமாக மூழ்கினார்.அவரது நாமஜபம் உணர்ச்சி மிக்கதாக இருந்தது. அதில் கண்ணீர், நடுக்கம், பரவசமான பக்தி போன்ற நிலைகள் அனைத்தும் ராதிகாரணியின் ஆழமான ஏக்கத்தை பிரதிபலிப்பதாக இருந்தது
“ என் உயிரை மயக்கும் கிருஷ்ணர் எங்கே இருக்கிறார்?” என்று உரக்க அழைத்தார். மணல் மேடுகளை கோவர்த்தன மலை எனக் கருதுவதன் மூலம் அவரது தெய்வீக ப்ரேம பக்தியின் ஆழத்தை வெளிப்படுத்தினார். இந்த பரவச தருணங்களை, ஸ்வரூப தாமோதரரும் ரகுுநாத தாஸ் கோஸ்வாமியும் பதிவு செய்துள்ளனர். இவை, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, பக்தியின் உயர்ந்த நிலையை உடலாலும் உள்ளத்தாலும் எவ்வாறு உபதேசித்தார் என்பதை காட்டுகின்றன. அங்கு கிருஷ்ணரின் நினைவு மற்றும் பிரிவின் வலி பிரிக்க முடியாத ஒன்றாக மாறுகிறது.
நோக்கம் 11: மஹாப்ரபு மற்றும் கோஸ்வாமிகள் எவ்வாறு தன் இதய பூர்வமான பக்தியினால் தங்கள் யாத்திரையில் பகவானை உணர்ந்தனர் என்ற பாடத்தின் மூலம் நாமும் பணிவான மன நிலை மற்றும் ப்ரார்தனைகளோடு இந்த விருந்தாவன யாத்திரையை மேற்கொள்வதை பற்றி புரிந்து கொள்வது.
விருந்தாவனம் என்பது ஒரு புனித நகரம் மட்டும் அல்ல—அது பகவான் கிருஷ்ணரின் வாசஸ்தலம். அங்கே செல்ல திட்டமிடும்போது, பயண ஏற்பாடுகள், சுற்றிப்பார்க்கும் இடங்கள் போன்றவற்றில் நாம் சிக்கிக்கொள்ளலாம். ஆனால், விருந்தாவனம் நம்மிடம் மென்மையான மன நிலையை தோற்றுவிக்கிறது-ஜபம், பணிவு, மற்றும் கிருஷ்ணருக்கான ஏக்கம்.அந்த மனப்பாங்குடன் நுழைய முயலலாம். அவசர கதியில் ஓடாமல், மெதுவாக நடக்கலாம்.
அங்கு படங்கள் எடுப்பதற்காக மட்டும் அல்ல, அந்தத் ஸ்தலத்தின் பரிமாணம் நம்மைத் தொட்டிடட்டும். ஒவ்வொரு கோயில் மணி ஒலியிலும், ஒவ்வொரு தூசியால் மூடிய பாதையிலும், கிருஷ்ணர் அங்கு வாழ்கிறார்.
மஹாபிரபுவின் தரிசனத்தை நினைவில் கொள்வோம்.அவர் சுற்றுலா குழுவுடன் செல்லவில்லை— நடந்து சென்றார், கீர்த்தனம் செய்தார், மிகுந்த ஏக்கத்துடன் கிருஷ்ணருக்காக அழுதார். அவரது கண்ணீரால், விருந்தாவனம் மீண்டும் விழித்தெழுந்தது. அது நாடகம் அல்ல— அது அவருடைய அன்பு.உண்மை, ஆழமான, தெய்வீகமான ப்ரேமை.
நம்மிடம் அந்த ஆழமானபக்தி இல்லாவிட்டாலும், நாம் முயற்சி செய்யலாம். ஒரு கோயிலில், வரிசையில் நிற்கிற போது, அல்லது யமுனையின் ஓட்டத்தைப் பார்க்கும் போது, நாம் நாம ஜபம் செய்யலாம் ஒரு நிமிடம் கண்களை மூடி பிரார்த்திக்கலாம், “கிருஷ்ணா” என்று மெதுவாகச் சொல்லலாம், மென்மையாக ஒரு ஜபத்தை மனதிலிருந்து அர்ப்பணிக்கலாம்.
கோஸ்வாமிகள் விருந்தாவனத்தில் வாழ்ந்தது மட்டுமல்ல—அவர்கள் அதன் ஓசையாய் மாறினார்கள். ஆடம்பரமான வீடுகள் இல்லை, பெரிய திட்டங்கள் இல்லை—பக்தி, ஆழமான சாஸ்திரப் பயிற்சி, தாமத்திற்கான பராமரிப்பு மட்டுமே அவர்களிடம். இந்த உந்துதலை நாமும் நம் இல்லங்களுக்கு கொண்டு செல்லலாம்— நம் உள்ளத்தில் ஒரு சிறிய விருந்தாவனத்தை கட்டலாம்.
மஹாபிரபுவை நாம் நினைக்கும் போது… அவரது விருந்தாவன தரிசனம் குறுகிய காலமாக இருந்தாலும், அது மிகுந்த சக்தி கொண்டதாக இருந்தது. அந்த இடம் அவர் வெறும் வழி பாதையாக சென்றதல்ல—அவர் அந்தத் தலத்தின் ஆன்மாவை மீண்டும் எழுந்து ஒளிரச் செய்தார். அவரது தரிசனம், கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் விருந்தாவன ப்ரேமத்தின் அடித்தளமாக மாறியது.
நம் தனிப்பட்ட ஜபம் இவ்வாறு இருக்க வேண்டும்:
“ஓ கௌராங்க மஹா பிரபு, என் உள்ளத்தில் விருந்தாவனத்தை விழித்தெழ அருள் புரியுங்கள். நான் உண்மையுடன் ஜபிக்க வேண்டும். உணர்வுடன் அழவேண்டும். நீங்கள் காட்டியபடி, கிருஷ்ணரை ப்ரேமத்துடன் நேசிக்க வேண்டும்.”
இந்த பாவத்துடன் நாம் பயணம் செய்தால்—எண்ணங்களில் மட்டும் என்றாலும், விருந்தாவனம் நம்முடன் இருக்கும். அதுவே அந்த பயணத்தை உண்மையான ஆன்மிகப் பயணமாக மாற்றும்.

