11. ரங்கஜி திருக்கோயில்

நோக்கங்கள்:
நோக்கம் 1 : ஸ்ரீ ரங்கஜி கோவிலின் கட்டிடக் கலை பற்றி அறிதல்.
நோக்கம் 2 : ஸ்ரீ ரங்கஜி கோவிலின் வரலாற்றுப் பின்னணி அறிதல்.
நோக்கம் 3 : கோவிலின் அமைப்பை புரிந்துகொள்ளுதல்.
நோக்கம் 4 : பல்வேறு சன்னிதிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ளுதல்.
நோக்கம் 1 : ஸ்ரீ ரங்கஜி கோவிலின் கட்டிடக் கலை பற்றி அறிதல்.
ஸ்ரீ ரங்கஜி கோவில் தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஸ்ரீரங்கம் கோவிலை ஒத்திருக்கும்.ஸ்ரீ ரங்கஜி என்பது ஆதி சேஷனின் மேல் சாய்ந்து இருக்கும் விஷ்ணுவின் ஒரு வடிவம். இந்தக் கோவில் தென்னிந்திய திராவிடக் கட்டிடக் கலையில் அமைக்கப்பட்டதுடன், முக்கிய நுழைவாயிலின் மேல் அழகிய கோபுரம் கொண்டுள்ளது. இது விருந்தாவனில் உள்ள மிகப்பெரிய கோவில் ஆகும். இந்தக் கோவில் 1851-ஆம் ஆண்டு லக்ஷ்மிசந்த் சேத் அவர்களால், சுமார் 45 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
நோக்கம் 2 : ஸ்ரீ ரங்கஜி கோவிலின் வரலாற்றுப் பின்னணி அறிதல்.
ஸ்ரீ ரங்கஜி கோவில் பகவான் ஸ்ரீ கோதை ரங்கமன்னாருக்கே அர்ப்பணிக்கப்பட்டது. கோதை அல்லது ஆண்டாள் என தென்னிந்தியாவில் அழைக்கப்படும் இவர், 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வைஷ்ணவ ஆழ்வார். அவர் இயற்றிய திருப்பாவை பகவான் ஸ்ரீகிருஷ்ணரையும், அவருடைய லீலைகள் நடந்த புனித இடமான விருந்தாவனத்தை மையமாகக் கொண்டு உள்ளது.
அவர் பகவானைப் அடையும் பேரார்வத்தில் உண்ணாவிரதம் இருந்து, பக்திப் பாடல்கள் பாடி, இறுதியில் அவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
பகவான் ஶ்ரீ ரங்கநாதர் (அதாவது கிருஷ்ணர்) ஆண்டாளின் பிரார்த்தனைகளுக்கு பதிலளித்து அவருடைய மணமகனாக வந்து காட்சி தருகிறார்.
ஸ்ரீ ரங்கநாத மந்திரில், ஸ்ரீகிருஷ்ணர் மணமகனாக, கையில் தடி வைத்தபடி தென்னிந்திய திருமண முறையை ஒத்திருக்கும் விதத்தில் இருக்கிறார். அவரின் வலப்பக்கத்தில் ஆண்டாள் இருக்க, இடப்பக்கத்தில் கிருஷ்ணரின் வாகனமான கருடன் உள்ளார்.
ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் (143 பாடல்கள்) மூன்று விருப்பங்களை வெளிப்படுத்தினார்.
1. முதல் விருப்பம் – விருந்தாவனத்தில் பகவான் கிருஷ்ணரின் திருவடியில் வாழ வேண்டும்.
2. இரண்டாவது விருப்பம் – கிருஷ்ணர் தன்னை மணமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; இதை பகவான் ஶ்ரீ ரங்கநாதர் நிறைவேற்றினார்.
3. மூன்றாவது விருப்பம் – பகவானுக்காக நூறு பானைகளில் பால் சாதம் (க்ஷீரண்ணம்) சமர்ப்பிக்க வேண்டும்; இதை 11ஆம் நூற்றாண்டு வைஷ்ணவ ஆச்சாரியார் ஸ்ரீ ராமானுஜாசார்யர் நிறைவேற்றினார்.
ஆண்டாளின் முதல் விருப்பம் ஸ்ரீ ரங்கதேசிக ஸ்வாமிஜி அவர்களால் நிறைவேற்றப்பட்டது. அவரே இக்கோவிலை கட்டி, ஸ்ரீ கோதை-ரங்கமன்னார் திவ்ய தம்பதிகளாக (தெய்வீக தம்பதிகள்) விருந்தாவனத்தில் குடியமரச் செய்தார்.
ஒருமுறை ஸ்வாமிஜி தமது சீடர்களிடம் தென்னிந்திய கோவில்களின் சிறப்பை விளக்கிக் கூறிக் கொண்டிருந்தபோது, மதுராவைச் சேர்ந்த சேத் ஸ்ரீ ராதாகிருஷ்ணாஜி மற்றும் ஸ்ரீ கோவிந்த தாஸ்ஜி என்னும் சகோதரர்கள், விருந்தாவனத்தில் ஸ்ரீ கோதை-ரங்கமன்னாரை நிறுவ வேண்டும் என்ற தங்கள் ஆவலை வெளிப்படுத்தினர்.
ஆண்டாளின் நிறைவேறாத விருப்பத்தை எப்போதும் நினைத்திருந்த ஸ்வாமிஜி, இதை தெய்வீக சைகையாகக் கொண்டு உடனே ஸ்ரீரங்கத்திற்குச் சென்று ஸ்ரீ கோதை-ரங்கமன்னார் தம்பதிகளிடம் ஆலயம் அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றார்.
ஸ்ரீரங்கத்திலிருந்து திறமையான தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு விருந்தாவனத்திற்கு கொண்டு வரப்பட்டனர், மேலும் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் 1845 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.
மதுரா சகோதரர்களின் முழுமையான பங்களிப்பும், ஸ்ரீ கோதை-ரங்கமன்னாரின் அருளும் காரணமாக, கோவில் 1851-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.
இவ்வாறு, விருந்தாவனத்தில் மிகச் சிறப்பான கோதை-ரங்கமன்னார் கோவில் வெளிப்பட்டது.
இந்த கோவிலின் அமைப்பு ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவிலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், உள்ளூர் கலைஞர்களின் திறமையை கருத்தில் கொண்டு சில கட்டிட மாற்றங்கள் செய்யப்பட்டன. ஸ்ரீ ரங்கநாத கோவில், தென்னிந்திய மற்றும் வடஇந்தியக் கோவில்களின் கட்டிடக்கலையின் அபூர்வமான மற்றும் அழகிய கலவையாகும். இது பாரம்பரிய தென்னிந்திய முறையில் கட்டப்பட்டு, கருவறையைச் சுற்றி ஐந்து சதுரவட்டச் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில் ஜெய்ப்பூர் பாணியில் செதுக்கப்பட்ட அழகிய இரு கல் வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன
நோக்கம் 3 : கோவிலின் அமைப்பை புரிந்துகொள்ளுதல்.
கோவிலின் மேற்கு வாசலுக்கு வெளியே 50 அடி உயரமுடைய மரத்தால் செய்யப்பட்ட ரதம் உள்ளது. அது வருடத்தில் ஒருமுறை மட்டுமே பிரம்மோற்சவத்தில் வெளிக்கொணரப்படுகிறது. மேற்கு புறத்தில் செதுக்கப்பட்ட கல் வாயிலில் நுழைந்தவுடன், ஏழு மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய கோபுரம் கண்களில் படுகிறது. அதன் இடப்புறமும் வலப்புறமும் மின்சார வசதியுடன் இயங்கும் லீலைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன; அவை ஸ்ரீ ராமரும் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகளையும் விளக்குகின்றன. கிழக்கு புறத்தில் ஐந்து மாடிகளைக் கொண்ட மற்றொரு கோபுரம் உள்ளது. இவ்விரு கோபுரங்களுக்கும் இடையே, வெளிப்புறச் சுற்றுச்சுவரில் ‘புஷ்கரணி’ என்று அழைக்கப்படும் பெரிய குளம் அமைந்துள்ளது.
இருபுறச் சமச்சீராக, குளத்தின் எதிர்புறத்தில் ஒரு சிறிய தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் ஆண்டாள் தெய்வீகமாய் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியில் கொண்டு வரப்படுகிறார். அந்த தோட்டத்தில் அழகிய கல் நீரூற்று அமைந்துள்ளன; அவை சிறப்பு நிகழ்ச்சிகளில் இயக்கப்படுகின்றன.
தோட்டத்துக்கும் குளத்துக்கும் இடையில், கிழக்கு கோபுரத்துக்கு நேராக, “பரஹத்வாரி” மற்றும் ஸ்ரீ ஹனுமான் ஜியின் சிறிய சன்னிதி அமைந்துள்ளது.
தோட்டத்திற்கு அடுத்தபடியாக, வெளிப்புற முற்றத்தைச் சுற்றி செல்லும்போது, கோவர்தன் பீடத்தின் ஆசனம் உள்ளது. இங்கு தற்போதைய கோவர்தன் பீடாதீஷரும், ஸ்ரீ ரங்க்ஜி மந்திர் டிரஸ்ட் போர்டின் தலைவருமான ஸ்ரீ கோவர்தன் ரங்காசார்யஜி மகாராஜ் தங்குகிறார். இதனுடன், பூசாரிகளும், ஆலய ஊழியர்களும் வசிக்கும் குடியிருப்புகள் வரிசையாக அமைந்துள்ளன.
கோயில் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டுள்ளது. இதில் பாரம்பரிய வாயில்கள் உள்ளன.

மண்டபம் பக்தர்கள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தென்னிந்திய பாணியில் கட்டப்பட்ட எல்லா ஆலயத்திலும் இருப்பது போல, ஆலயக் குளமும் (திருக்குளம்) உள்ளது.
நோக்கம் 4 : பல்வேறு சன்னிதிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ளுதல்.
ஆலயத்துக்குள் நுழைய இரு வாயில்களிலிருந்தும் செல்ல முடியும். ஆனால், கிழக்கு வாயிலே பிரதான வாயிலாகக் கருதப்படுகிறது.
உள்ளே நுழைந்தவுடன், வலப்புறமாக (பிரதக்ஷிணை திசையில்) சென்றால்:
- சமையலறை
- ஸ்ரீ ரகுநாத்ஜி கோவில் (இறைவன் ராமர்)
- ஸ்ரீ பௌதநாத்ஜி கோவில் (இறைவன் ரங்கநாதர்)
- வைகுந்த துவார் (இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வைகுந்த ஏகாதசியில் திறக்கப்படும்)
- கோவில் தேர் – கோயிலின் திருவிழாக்களில் வெளிப்படும் தெய்வீக வாகனங்கள் வைக்கப்படும் இடம்
- கிடங்கு
- மணிக்கூண்டு கோபுரம்
- மணிக்கூண்டு கோபுரத்தைத் தாண்டி மற்றொரு வாயிலில் சென்றவுடன், 50 அடி உயரமுடைய தங்கம் பூசப்பட்ட “த்வஜஸ்தம்பம்” (கொடி தூண்) காணலாம்.
மீண்டும் வலப்பக்கச் சுற்றில் செல்லத் தொடங்கும்போது, முதலில் ஸ்ரீ சீஷ் மஹால் (ஜூலா உற்சவத்தின் போது ஸ்ரீ கோதை ரங்கமன்னார் இங்கே வீற்றிருக்கிறார்) காணலாம்.
அதற்குப் பின் பின்வரும் சன்னிதிகள் வரிசையாகக் காணப்படுகின்றன: –
- ஸ்ரீ சுதர்ஶன்ஜி
- ஸ்ரீ நரசிம்ஹஜி
- திருப்பதி பாலாஜி (ஸ்ரீ வெங்கடேஸ்வரர்)
- ஸ்ரீ வேணுகோபால்ஜி
- ஸ்ரீ ஆழ்வார் சன்னிதிகள்
- ஸ்ரீ ராமானுஜாச்சார்ய சுவாமிஜி – இவருடன் ஸ்ரீ நம்மாழ்வார் (ஷட்கோப் சுவாமிஜி), ஸ்ரீ நாதமுனி சுவாமிஜி, ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
ஸ்ரீ ரங்கதேசிக சுவாமிஜி (ஆலய நிறுவனர்), ஸ்ரீ யமுனாசார்ய சுவாமிஜி, ஸ்ரீ காஞ்சிபூர்ண சுவாமிஜி
த்வஜஸ்தம்பத்தின் இடப்புறத்தில் இறுதியில் யக்ஞசாலை அமைந்துள்ளது.
இங்கு ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களில் “பவித்ரோற்சவம்” நடைபெறும். ஆலயத்தின் நடுப்பகுதியில் பிரதான மூர்த்தியான ஸ்ரீ கோதை-ரங்கமன்னாரின் சன்னிதி அமைந்துள்ளது.
ஸ்ரீ கோதை ரங்கமன்னாரின் சன்னிதிக்குள் நுழையும்போது, தெய்வீக சன்னிதியை காப்பாற்றும் “ஸ்ரீ ஜெயன்–விஜயன்” காட்சியளிக்கின்றனர். ஸ்ரீ கோதை–ரங்கமன்னார் மூலவிக்ரகமாக, அவரின் வலப்புறத்தில் ஸ்ரீ கோதை தேவி மற்றும் இடப்புறத்தில் ஸ்ரீ கருடாழ்வார் உடன் அருள்பாலிக்கிறார். முன்புறத்தில் ஸ்ரீ கோதை–ரங்கமன்னாரின் உற்சவ விக்ரகம், ஸ்ரீ சுதர்ஷனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ நித்யகோபாலர் (ஸ்ரீ லட்டு கோபாலர்), போக மூர்த்தி மற்றும் சயன மூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.

மேற்கு வாயிலுக்கு அருகில், ஒரு ரதம் உள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகளில், ஸ்ரீ ரங்கஜி அந்த ரதத்தில் ஏறி ஊர்வலமாக வருகிறார். வருடத்தில் ஒருமுறை, ஸ்ரீ ரங்கநாதருக்காக ரதயாத்திரை நடத்தப்படுகிறது. அப்போது, அந்த ரதம் அருகிலுள்ள ரங்கஜி தோட்டத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அந்த ரதங்கள், பூரியில் பயன்படுத்தப்படுபவைகளைக் காட்டிலும் சிறியதாக இருந்தாலும், பக்தர்களின் பக்தி உணர்வுகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

நோக்கம் 5 : பகவான் அவர்களின் பல்வேறு லீலைகளை வெளிப்படுத்தும் உருவப்படங்களின் (dioramas- பகவான் லீலைகளை உயிரோட்டமாக காட்சிப்படுத்தும் ஒரு வகையான சிற்பக்கலை) ஆன்மீக மற்றும் பண்பாட்டு மதிப்பை சிறப்பித்துக் காட்டுதல்.
இராவணன் வதம்

கும்பகர்ணனை எழுப்புதல்

ராஸ லீலா
கோவர்தன லீலை மற்றும் பிற கிருஷ்ண லீலைகள்


