44. நந்த பவன்

நோக்கங்கள்:

நோக்கம் 1: நந்த பவனின் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது.

நோக்கம் 2: நந்த பவனில் உள்ள புனித இடங்கள் பற்றி அறிதல்.

நோக்கம் 3: நந்த பவனின் கட்டமைப்பையும் தெய்வீக சூழலும் புரிந்து கொள்வது

நோக்கம் 4: தற்கால ஸ்ரீகிருஷ்ணர்-பாலராமர் கோயிலை விவரித்தல்.

நோக்கம் 5: ஸ்ரீமதி ராதா ராணி மற்றும் கிருஷ்ணரின் இரகசிய சந்திப்பு இடத்தைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது.

நோக்கம் 6 : பல்வேறு திருவிளையாட்டுக்களை (pastimes) விவரித்தல்.

நோக்கம் 7 : ஸ்ரீ சைதன்ய மகாபிருபுவின் தெய்வீக பணி, ஆறு கோஸ்வாமிகள் கிருஷ்ணரின் லீலைக் கணிப்பிடங்களை கண்டறிந்து, பக்தி கலாச்சாரத்தை உயிர்ப்பித்த விதத்தை புரிந்துகொள்வது.

நோக்கம் 8: கிருஷ்ணர் மற்றும் பாலராமரின் தினசரி சிறுவயது செயல்கள் (childhood activities) விவரித்தல்.

நோக்கம் 9 : நந்த மகாராஜாவின் மகிமைகள் மற்றும் பெருமைகளை வெளிப்படுத்துதல்.

நோக்கம் 1: நந்த பவனின் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது.

நந்த மஹாராஜாவின் அரண்மனை போன்ற வாசஸ்தலம்

ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பாலராமரின் வாசஸ்தலம்

இன்றைய கிருஷ்ண-பாலராமர் கோவில் கட்டப்பட்டுள்ள துல்லியமான இடம்

நந்த கோபர், யசோதா மற்றும் கிருஷ்ணரின் விக்ரஹங்கள், நந்தீஸ்வர மலையிலுள்ள குகைகளில் ஸ்ரீசைதன்ய மகாபிரபுவால் கண்டுபிடிக்கப்பட்ட அதே விக்ரஹங்களாகக் கூறப்படுகின்றன

நோக்கம் 2: நந்த பவனில் உள்ள புனித இடங்கள் பற்றி அறிதல்.

கிருஷ்ண-பாலராமர் கோவில்

ஸ்ரீமதி ராதா ராணியின் ஓய்வு இடம்

காடு செல்லும் பாதை

மாடுகளை மேய்க்கச் செல்லும் பாதை

ஸ்ரீமதி ராதா ராணியை இங்கிருந்து வழியனுப்பி வைக்கப்பட்ட இடம்

தயிர் கடையப்பட்ட இடம்

பூர்ணமாசி வருகை புரிந்த பாதை

நோக்கம் 3: நந்த பவனின் கட்டமைப்பையும் தெய்வீக சூழலும் புரிந்து கொள்வது

நந்த பவன்:
இது நந்த மகாராஜாவின் இல்லம் அமைந்திருந்த இடமாகும்; இது நந்த பவன் என அழைக்கப்பட்டது. இங்கு ஸ்ரீகிருஷ்ணரும் பாலராமரும் வசித்தனர். பவன் என்ற சொல்லுக்கு “அரண்மனை போன்ற இல்லம்” என்பது பொருள் (VMP).

நந்தரின் இல்லம் மிக விசாலமாக இருந்தது. அதில் நந்த பாபா, யசோதாமாதா, ரோகிணி மாதா, கிருஷ்ணர் மற்றும் பாலதேவர் ஆகியோருக்கென தனித்தனியான படுக்கையறைகள் இருந்தன. இதோடு, சமையலறை, பொருள்களை வைக்கும் அறை, உணவறை, ஓய்வறைகள் மற்றும் ராதா ராணிக்கும் கிருஷ்ணருக்கும் தனியாக அமையப்பட்ட அறைகளும் இருந்தன.

மிக விரிவான நந்த பவன வளாகத்தில் பல அற்புதமான லீலைத் தலங்கள் உள்ளன.

நோக்கம் 4: தற்கால ஸ்ரீகிருஷ்ணர்-பாலராமர் கோயிலை விவரித்தல்.

கிருஷ்ண-பாலராமர் கோவில்:

இன்றைய கிருஷ்ண-பாலராமர் கோவில், ஒருகாலத்தில் நந்தரின் இல்லம் இருந்த அதே இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில், யசோதா மாதாவும் நந்த மகாராஜாவும் பெரிய வடிவில் காணப்படுகின்றனர்; அவர்களுக்கிடையில் கிருஷ்ணரும் பாலராமரும் நிற்கின்றனர். நந்தரின் வலப்பக்கத்தில், கிருஷ்ணரின் நண்பர்களான ஸ்ரீதாமா மற்றும் மதுமங்களர் காணப்படுகின்றனர். யசோதாவின் இடப்பக்கத்தில் ராதாராணி, அதன் பின் ரோகிணி மாதா மற்றும் பாலராமரின் துணைவியாரான ரேவதி ஆகியோரும் நிற்கின்றனர். நந்தர், யசோதா மற்றும் கிருஷ்ணர் ஆகிய மூவரின் விக்ரஹங்கள், நந்தீஸ்வர மலையில் உள்ள ஒரு குகையில் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவால் கண்டுபிடிக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. மற்ற விக்ரஹங்கள் பின்னாளில் சேர்க்கப்பட்டவை. இன்றைய நந்தகிராமத்தில் உள்ள கிருஷ்ண-பாலராமர் கோவில், பார்சானாவின் செல்வந்த நிலத்தரசர் ரூபராமசிங் அவர்களால் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நோக்கம் 5: ஸ்ரீமதி ராதா ராணி மற்றும் கிருஷ்ணரின் இரகசிய சந்திப்பு இடத்தைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துதல்.

ஸ்ரீமதி ராதா ராணியின் ஓய்வு இடம்:
இது ஸ்ரீமதி ராதா ராணியின் ஓய்வு இடமாகும். சமையலை முடித்த பின், யசோதாம்மாவின் வேண்டுகோளின்படி, தனிஷ்டா சகி கொண்டு வந்த, கிருஷ்ணரின் உச்சிஷ்டத்துடன் கலந்த பிரசாதத்தை ஸ்ரீமதி ராதா ராணி அருந்துவார். அதன் பின், யசோதாம்மா அவரை இத்தோட்டத்தில் ஓய்வெடுக்க அழைப்பார். அந்த நேரத்தில், சகிகளே அவருடைய ரகசிய சந்திப்பை கிருஷ்ணருடன் ஏற்பாடு செய்வார்கள். இவ்விடம் ராதாபாக், அதாவது ராதையின் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

நோக்கம் 6 : பல்வேறு திருவிளையாட்டுக்களை (pastimes) விவரித்தல்.

காட்டிற்குச் செல்லும் பாதை:
ஒவ்வொரு நாளும், அன்னை யசோதை பலராமரையும், கிருஷ்ணரையும் வெவ்வேறு விதங்களில் அலங்கரித்து, பசுக்களை மேய்க்கக் காட்டிற்குச் செல்ல அவர்களைத் தயார்படுத்துவாள். கனத்த இதயத்துடன் அவர்களையும் சகாக்களுடன் இங்கிருந்து அனுப்பிவிடுவாள்

பசு மேய்ச்சலுக்குச் செல்லும் பாதை:
நடனத்திலும் சிறந்த ராமரும் கிருஷ்ணரும் தங்கள் நண்பர்களுடன் இந்தப் பாதையைக் கடந்து மாடு மேய்ச்சலுக்குச் சென்றனர்.

ஸ்ரீமதி ராதா ராணி விடைபெற்ற இடம்:
இங்கே, அன்னை யசோதா, ஸ்ரீமதி ராதா ராணியை ஜாவதாவுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு, கண்ணீர் மல்கிய கண்களுடன் அவளை மடியில் அமர்த்திக் கொள்வார்.

தயிர் கடைந்த இடம்:
தினமும் காலையில், அன்னை யசோதா இந்த இடத்தில் தயிர் கடைந்தார். இன்றுவரை, இங்கே ஒரு பெரிய தயிர் பானையைக் காணலாம்.

பூர்ணமாசியின் வருகைப் பாதை:
யோகமாயா பூர்ணமாசி குழந்தை கிருஷ்ணரை தரிசனம் செய்ய இந்தப் பாதை வழியாக நந்த-பவவனுக்கு வருவார்.

விக்ரஹம்

நோக்கம் 7 : ஸ்ரீ சைதன்ய மகாபிருபுவின் தெய்வீக பணி, ஆறு கோஸ்வாமிகள் கிருஷ்ணரின் லீலைக் கணிப்பிடங்களை கண்டறிந்து, பக்தி கலாச்சாரத்தை உயிர்ப்பித்த விதத்தை புரிந்துகொள்வது.

விருந்தாவனத்திலிருந்து ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் பிரயாணத்தின் போது, அவர் ஆறு கோஸ்வாமிகளை அந்த புனித ஸ்தலத்திற்கு அனுப்பினார். அவர்களின் பணி, கிருஷ்ணரின் லீலைகள் நடைபெற்ற புனித ஸ்தலங்களைத் தேடி மீட்பதும், ராதா-கிருஷ்ணர் ஆலயங்களை நிறுவுவதும், பக்தி-சாஸ்திரத்தைப் பற்றிய நூல்களை எழுதியும், பொதுவாக மக்களிடையே கிருஷ்ண பக்தி மரபை மீண்டும் உயிர்ப்பிப்பதுமாகும். சிறிது காலத்திலேயே, விருந்தாவனம், கோவர்தனம், நந்தகிராமம் மற்றும் பர்ஷானா போன்ற முக்கிய லீலைஸ்தலங்களில் ஆலயங்கள் நிறுவப்பட்டன.

நோக்கம் 8: கிருஷ்ணர் மற்றும் பாலராமரின் தினசரி சிறுவயது செயல்கள் (childhood activities) விவரித்தல்.

கிருஷ்ணர் மற்றும் பலராமரின் சிறுவயது விளையாட்டுகள்:

இந்த புனித இடத்தில், ஸ்ரீகிருஷ்ணரும் பலதேவரும் தங்கள் சிறுவயது, பால்யம் மற்றும் யௌவன காலங்களில் பல திவ்ய விளையாட்டுகளை விளையாடினர். ஒவ்வொரு காலைபொழுதிலும், ஜாவத் கிராமத்திலிருந்து ஸ்ரீமதி ராதாராணி தன் சகிகளுடன் தாயார் யசோதாவின் அன்பான வேண்டுகோளை ஏற்று இங்கு வருவார். பெரும் ஆனந்தத்துடன், தாய் ரோகிணியுடன் சேர்ந்து கிருஷ்ணருக்காக அநேக சுவையான உணவுகளைச் சமைப்பார். பின்னர், கிருஷ்ணர் தன் நண்பர்களுடன் அருகிலுள்ள பெரும் உணவுக் கூடத்தில் உணவருந்தி, அங்கிருந்து நூறு அடிகள் தூரத்தில் அமைந்திருந்த படுக்கையறையில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பார்.

நோக்கம் 9 : நந்த மகாராஜாவின் அரண்மனை மகிமைகள் மற்றும் பெருமைகளை வெளிப்படுத்துதல்.

ஸ்ரீ ரகுபதி உபாத்யாயர் நந்த பாபாவையும், அவருடைய இந்தத் தலத்தையும் இனிய சொற்களில் மகிமைப்படுத்துகிறார்:

– பத்யாவலி (126)
“சாமான்ய உலக வாழ்க்கையின் குழப்பங்களை அஞ்சுகிறவர்கள்
ஸ்ருதி, ஸ்ம்ருதி போன்றவற்றை வணங்கட்டும்;
மற்றவர்கள் மஹாபாரதத்தை வணங்கட்டும்;
ஆனால், பரம்பொருள் தன் முழங்கால்களில்
இங்கு அங்கு தவழ்ந்து விளையாடும்
நந்தபாபாவின் முற்றத்தையே நான் எப்போதும் வணங்குவேன்.”

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare