8. இஸ்கான் ஸ்ரீ கிருஷ்ண பாலராமர் திருக்கோயில்
ஶ்ரீல பிரபுபாதர் நிறுவிய ஆன்மீக ஒளிவீசும் திருத்தலம்

நோக்கங்கள்:

நோக்கம் 1: ஶ்ரீல பிரபுபாதர் கனவாகக் கண்ட கிருஷ்ண-பலராம் கோவிலின் தோற்றம், புனிதமான இடம், மற்றும் பிரதான விக்ரஹங்களை விவரித்துரைப்பது.

நோக்கம் 2: கிருஷ்ண-பலராம் கோவிலில் உள்ள ஶ்ரீல பிரபுபாதரின் சமாதியின் பக்திப் பரிமாணத்தைப் புரிந்துகொள்வது.

நோக்கம் 3: கோவிலின் பிரதான விக்ரஹங்களுக்கு தினமும் செய்யபடும் அலங்காரம், அபிஷேகம் மற்றும் அர்ச்சனை மற்றும் நைவேதியம் ஆகியவற்றை தரிசிப்பது

நோக்கம் 4: கிருஷ்ண-பலராம் கோவிலில் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் தனித்துவமான கட்டிடக்கலை, பண்பாட்டு, மற்றும் பக்தி அம்சங்களை ஆராய்வது.

நோக்கம் 5: கிருஷ்ண-பலராம் கலாச்சார மையம் பற்றிய அறிவைப் பெறுவது.

நோக்கம் 6: 24 மணி நேர கீர்த்தனையை மீண்டும் உயிர்ப்பித்ததில் ஶ்ரீபாத் ஐந்த்ர பிரபுவின் பங்கு மற்றும் அவர் விருந்தாவனில் விட்டுச் சென்ற நிலையான ஆன்மீக மரபைப் பற்றி அறிதல்.

நோக்கம் 7: ஶ்ரீல பிரபுபாதரின் பாதுகாக்கப்பட்ட அறைகள், அவர் விருந்தாவனில் இருந்த இறுதி நாட்கள், மற்றும் அவரின் சமாதி மந்திரின் பக்திப் பெருமையைப் பற்றி அறிதல்.

நோக்கம் 8: கிருஷ்ண-பலராம் கோவிலின் அமைதியான சூழல் மற்றும் அதன் ஆன்மீக நோக்கத்தைப் புரிந்துகொள்வது.

நோக்கம் 1: ஶ்ரீல பிரபுபாதர் கனவாகக் கண்ட கிருஷ்ண-பலராம் கோவிலின் தோற்றம், புனிதமான இடம், மற்றும் பிரதான விக்ரஹங்களை விவரித்துரைப்பது.

அடித்தளம் & முக்கியத்துவம்

விருந்தாவனில் உள்ள கிருஷ்ண-பலராம் கோவிலில் இஸ்கான் நிறுவனர்-ஆசார்யர், பரமபூஜ்யர் ஏ.சி. பக்திவேதாந்த ஸ்வாமி ஶ்ரீல பிரபுபாதர் அவர்களால் 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ரமண ரேதி என்ற புனிதத் தலத்தில்—அங்கு பகவான் கிருஷ்ணரும் பலராமரும் ஆனந்தமுடன் மாடுகளை மேய்த்தனர்—இந்தக் கோவில், அவர்களின் தெய்வீக லீலைகளை மகிமைப்படுத்திய ஶ்ரீல பிரபுபாதரின் தொலைநோக்குப் பார்வை உயிர் ஊட்டும் சாட்சி ஆக நிற்கிறது. கோவிலின் மூன்று பிரதான சன்னதிகளின் நடுவில் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண-பலராம், இடப்புறத்தில் ஸ்ரீ ஸ்ரீ கவுர-நிதாய், வலப்புறத்தில் ஸ்ரீ ஸ்ரீ ராதா சியாமசுந்தர் அவர்களுடன் லலிதா மற்றும் விஸாகா ஆகியோர் வீற்றிருக்கின்றனர். வெறும் வழிபாட்டுத் தலமாக அல்லாமல், இந்த கோவில் கிருஷ்ண-பக்தியின் ஆன்மீக மையமாக இருந்து, உலகம் முழுவதும் இருந்து வரும் ஆன்மீகத் தேடல் இருப்பவர்களை விருந்தாவனின் பக்தி உணர்வில் மூழ்கச் செய்கிறது.

நோக்கம் 2: கிருஷ்ண-பலராம் கோவிலில் உள்ள ஶ்ரீல பிரபுபாதரின் சமாதியின் பக்திப் பரிமாணத்தைப் புரிந்துகொள்வது.

ஸ்ரீல பிரபுபாதரின் சமாதி மந்திர்

ஸ்ரீல பிரபுபாதரின் சமாதி கோவில் விருந்தாவனில் உள்ள கிருஷ்ணா பாலராமர் கோவிலின் வளாகத்துக்குள் அமைந்துள்ளது.

இந்த சமாதியில் தினசரி குரு பூஜை நடைபெறும். அங்கு பக்தர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் “ஶ்ரீ-குரு-சரண-பத்மா” என்ற பக்திப் பாடலை பாடி மலர் மாலைளை அர்ப்பணிக்கின்றனர். இது இஸ்கானின் தனித்துவமான பாரம்பரியமாகும்.

சமாதி அழகாக அலங்கரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது, அங்கு இடைவிடாத அர்ப்பணிப்புகள் மற்றும் நினைவேந்தல் விழாக்கள், குறிப்பாக அவரது மறைவுத்தினம் (நவம்பர் 14) அன்று நடத்தப்படுகின்றன.

இந்த கோவில் ஓய்விடமாக மட்டுமின்றி, அனைத்து இஸ்கான் பக்தர்களுக்கும் நினைவு மற்றும் தியானத்தின் இடமாகவும் செயல்படுகிறது.

நோக்கம் 3: கோவிலின் பிரதான விக்ரஹங்களுக்கு தினமும் செய்யபடும் அலங்காரம்,அபிஷேகம் மற்றும் அர்ச்சனை மற்றும் நைவேத்தியம் ஆகியவற்றை தரிசிப்பது

கிருஷ்ணா பலராமர் கோவிலின் பிரதான விக்ரஹங்கள்

ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா பலராமர்:
இந்தகோவிலின் பிரதான விக்ரஹங்களான கிருஷ்ணா மற்றும் பலராமர் தங்கள் இளமை கால கோபால உருவங்களில் நின்று, மகிழ்ச்சி மற்றும் தெய்வீக சக்தியை பிரகாசிக்கச் செய்கின்றனர். பலராமர் கிருஷ்ணரை அணைத்துக் கொண்டு நிற்கிறார். அவர்களதுத் தோற்றம் சகோதர அன்பும் நித்தியத் தோழமையும் வெளிப்படுகிறது.

ஸ்ரீ ஸ்ரீ கவுர-நிதாய்:
இடது பக்கத்தில் அமைந்துள்ள இந்த தங்க நிறமுள்ள விக்ரஹங்கள் மிகுந்த கருணைபொருந்திய மற்றும் அன்பு நிறைந்த கடவுளின் அவதாரங்களை பிரதிபலிக்கின்றனர். அவர்கள் புனித நாமங்களை சுதந்திரமாக நமக்கு வழங்குகின்றனர். மற்றும் கலியுகத்தில் வீழ்ச்சி அடைந்த ஆன்மாக்களை உயர்த்துகின்றனர்.

ஸ்ரீ ஸ்ரீ ராதா ச்யாமசுந்தர் லலிதா மற்றும் விஷாகாவுடன்:
வலது பக்கத்தில் ராதா ச்யாமசுந்தர் தன்னுடைய அன்பு சகிகளுடன் நின்றுள்ளார். ச்யாமசுந்தர் ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டலின் படி வடிவமைக்கபட்டு பிரதிஷ்டை செய்யபட்டுள்ளார். பக்தர்களின் இதயங்களை தனது மயக்கும் உருவத்தால் கவருகிறார்.

ஒவ்வொரு சன்னதியிலும் அருமையான நைவேத்தியம், நுட்பமான உடை மாற்றங்கள் மற்றும் விரிவான தினசரி ஆரத்திகள், ஆழ்ந்த பக்தி மற்றும் பெருமையுடன் கொண்டாடப்பட்டு அர்ப்பணிக்கப்படுகின்றன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் பெறவும், இந்த தெய்வீக உருவங்களை மையமாகக் கொண்ட கோவிலின் விழாக்களில் பங்கேற்கவும் கூட்டமாக வருகிறார்கள்.

நோக்கம் 4: கிருஷ்ண-பலராம் கோவிலின் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் தனித்துவமான கட்டிடக்கலை, பண்பாட்டு, மற்றும் பக்தி அம்சங்களை ஆராய்வது.

விருந்தாவனில் உள்ள கிருஷ்ண-பலராம் கோவில், பக்தி, பாரம்பரியம் மற்றும் ஆன்மீக ஒலியால் நிரம்பிய ஆழமான ஆன்மீக அனுபவத்தை வழங்குகிறது. 1975 ஆம் ஆண்டிலிருந்து, இதில் உலகப்புகழ்பெற்ற 24 மணி நேர கீர்த்தனம் நடத்தப்படுகிறது, இது பக்தர்கள் தலைமையில் நாமம் சங்கீதத்தின் தொடர்ச்சியாக அர்ப்பணிப்போடு நடத்தப்படுகிறது. இந்த கோவில் ஸ்ரீல பிரபுபாதாவின் சமாதி மண்டபம் இங்கு உள்ளது, அங்கு அவரது தெய்வீக உடல் ஓய்வெடுக்கிறது, மற்றும் பக்தர்கள் அன்றாடம் இதனை மதிப்புடன் வழிப்படுகின்றனர். தினமும் காலை 4:00 மணிக்கு மங்கள ஆரத்தி ஆரம்பித்து, துளசி பூஜை, குரு பூஜை, பகவத்கீதை மற்றும் ஸ்ரீமத் பகவதம் குறித்த சாஸ்திரப் பாடங்கள் நடைபெறுகின்றன, இதனால் ஆழமான ஆன்மீக முன்னேற்றம் வளர்கிறது. பக்தர்கள் பவித்ரமான பிரசாதம் பெறுகின்றனர், மற்றும் கீர்த்தனைகள், தரிசனங்கள் மற்றும் திருவிழாக்கள் மூலம் கோவிலினல் ஒரு உயிரோட்டமான சூழல் நிலவுகிறது , வருடம் முழுவதும் ஆயிர கணக்கான பக்தர்களை, தூய்மையுடனும் , ஊக்கமுடனும், கிருஷ்ணர் மற்றும் பலராமர் கோவில் அவர்களை ஈர்க்கிறது. கோவிலின் கட்டிடவடிவமைப்பு, தோட்டங்கள் மற்றும் அருங்காட்சியகம், உலகம் முழுவதிலுள்ள ஆன்மீக பக்தர்களுக்கு ஒரு புனித இடமாக உள்ளது.

நோக்கம் 5: கிருஷ்ண-பலராம் கலாச்சார மையம் பற்றிய அறிவைப் பெறுவது.

புதிய கிருஷ்ணா-பலராம் கலாசார மையம்

கிருஷ்ணா பலராம் கலாச்சார மையம் (KBCC) என்பது விருந்தாவனில் உள்ள கிருஷ்ணா பலராம் கோவில் வளாகத்தின் உள்ளே ஒரு தெளிவான திட்டமிட பட்ட அவரை நல்ல முயற்சி, இது 1975ல் ஸ்ரீல A.C. பக்திவேந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்களால் நிறுவப்பட்டது. முதன்மை கட்டிடங்களில் உள்ள கட்டிடக் குறைபாடுகளால், ISKCON விருந்தாவன் வளாகத்தை பாதுகாப்பும் நீடித்த ஆயுளும் உறுதி செய்ய புதிய கட்டமைப்பில் மாறுகிறது. புதிய மையம் சுமார் 200,000 சதுர அடி பரப்பளவில் விரிவடைய உள்ளது மற்றும் 112 அறைகள் கொண்ட விருந்தினர் இல்லம், பெரிய கோவிந்தா உணவகம், கருத்தரங்குகள், கடைகள், கீழ்தளத்தில் பார்கிங், அழகான தோட்டப் பகுதிகள் மற்றும் விரிவடைந்த ஸ்ரீல பிரபுபாதா அருங்காட்சியகம் ஆகியவை இடம்பெற உள்ளன. பாரம்பரிய அழகியமைப்புகள் மற்றும் சூரிய சக்தி மற்றும் நீர் சேகரிப்பு போன்ற நவீன நிலைத்தன்மை அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட KBCC, பக்தர்கள் மற்றும் ஆன்மீக தேடுதல் உள்ளவர்களுக்கு பல தலைமுறைகளாக சேவை செய்யும் நோக்கத்துடன் உள்ளது. கோவிலின் 50வது ஆண்டு விழாவுக்குள், 2025ஆம் ஆண்டில், இதன் நிறைவேற்றம் மேற்கொள்ளப்படுவதாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

நோக்கம் 6: 24 மணி நேர கீர்த்தனையை மீண்டும் உயிர்ப்பித்ததில் ஶ்ரீபாத் ஐந்த்ர பிரபுவின் பங்கு மற்றும் அவர் விருந்தாவனில் விட்டுச் சென்ற நிலையான ஆன்மீக மரபைப் பற்றி அறிதல்.

ஸ்ரீபாத ஐந்திரப் பிரபு – 24 மணி நேர கீர்த்தனையின் ஆணிவேர்.

ஸ்ரீபாத ஐந்திரப் பிரபு, அமெரிக்காவில் எட்வர்டு ஸ்ட்ரைக்கர் என பிறந்தார், 1986ல் நிரந்தரமாக விருந்தாவனுக்கு இடம்பெயர்ந்தார்.

கிருஷ்ண பலராம் கோவிலில் 24 மணி நேர கீர்த்தனையை மீட்டெடுத்து, அதனை வழிநடத்தினார். 2010’ல் தன் உயிர் பிரியும்வரை தொடர்ந்து நடத்தினார்.

ஆழமான பக்தி, பணிவு, புரட்சிகரமான கீர்த்தனை மூலம் அவர் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு ஊக்கமளித்தார்.

அவரது சமாதி கோவில் வளாகத்தில் உள்ள குருகுலத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ளது.

உலகம் முழுவதிலிருந்த பக்தர்கள் தொடர்ந்து அவரது அறை மற்றும் சமாதியை ஆன்மீக உற்சாகத்திற்காக வருகை தருகின்றனர்.

நோக்கம் 7: ஶ்ரீல பிரபுபாதரின் பாதுகாக்கப்பட்ட அறைகள், அவர் விருந்தாவனில் இருந்த இறுதிநாட்கள் மற்றும் அவரின் சமாதி மந்திரின் பக்திப் பெருமையைப் பற்றி அறிதல்.

ஸ்ரீல பிரபுபாதா அருங்காட்சியகம் மற்றும் விருந்தாவனில் அவரது இருப்பை உணர்தல்

பிரத்யேக விடுதி மற்றும் அருங்காட்சியகம்:
ஸ்ரீல பிரபுபாதர் விருந்தாவனில் நீண்ட காலமாக தங்கியிருந்தார், குறிப்பாக கிருஷ்ண-பலராம் மண்டபத்தின் கட்டுமான காலத்தில் கோவிலுக்கருகே அமைந்த அவர் வாழ்ந்த விடுதி அருங்காட்சியகமாகக் மாற்றப்பட்டுள்ளது. இதில் அவரது தனிப்பட்ட பொருட்கள், எழுதும் மேசை, புத்தகங்கள் மற்றும் புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியக சிறப்பம்சங்கள்:
இதில் அவரது எழுதும் மேசை, படுக்கை, டைப் ரைட்டர், சொற்பொழிவுக் பதிவேட்டகம் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. அவரது கடின பணி மற்றும் பயணங்களை பதிவுசெய்த அரிய புகைப்படங்கள் மற்றும் கடிதங்கள், வீடியோ கண்காட்சி மூலம் காட்டபடுகின்றது.

தியான இடம்: பக்தர்கள் அமைதியாக அமர்ந்து, பிரபுபாதரின் ஆன்மிக பாரம்பரியம் மற்றும் அர்ப்பணிப்பில் இருந்து ஊக்கத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

விருந்தாவனில் ஸ்ரீல பிரபுபாதரின் இறுதி நாட்கள்:
1977 அக்டோபர்–நவம்பர் காலத்தில் ஸ்ரீல பிரபுபாதர் தனது இறுதி நாட்களை விருந்தாவனில் கழித்து, 1977 நவம்பர் 14 அன்று கிருஷ்ண-பாலராம் மண்டபத்தில் அவரது உடலை விட்டு சென்றார்.
சமாதி மண்டபம்: மார்பிள் மூலம் செய்யப்பட்ட அவரது அழகான சமாதி மண்டபம் கோவிலில் அமைந்துள்ளது. இப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து மரியாதை செலுத்துகிறார்கள்.

நோக்கம் 8: கிருஷ்ண-பலராம் மந்திரின் அமைதியான சூழல் மற்றும் அதன் ஆன்மீக நோக்கத்தைப் புரிந்துகொள்வது.

கிருஷ்ண-பலராம் கோவில் விருந்தாவனில் அமைந்துள்ள அமைதியான ரமன் ரெட்டி பகுதியிலே உள்ளது. பக்தர்கள் தினமும் கோவிலை சுற்றி பரிக்ரமா செய்து, அன்புடன் சேவை செய்து, மனதில் ஆழமான பக்தி ரசத்தை (பக்தி-ரசா) உணருகிறார்கள். ஸ்ரீல பிரபுபாதர் இந்த கோவிலை அகில உலகத்துடனும் கிருஷ்ண பக்தியைப் பகிர்வதற்கான சிறப்பான பரிசாக கட்டியுள்ளார். உண்மையாக கிருஷ்ணரை நாடுபவர்களுக்கு, இந்த கோவில் கோலோக விருந்தாவனம் என்ற ஆன்மீக உலகத்துக்கான நுழை வாயிலாக இருக்கிறது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare