விஜய துந்துபி
(1)
விஜய துந்துபி அடித்தார் நகரெங்கும்
தசரதன் அருளிய – மொழி பாடிட்டார்
திசை திசை சொல்லி விடுத்தார் வாசலில்
அஜையும் விஜய – கேதனம் எடுத்தார்
விஜய துந்துபி அடித்தார் நகரெங்கும்
தசரதன் அருளிய – மொழி பாடிட்டார்
(2)
பூரண கும்பம் அமைத்தார் தெருவெங்கும்
தோரணம் அழகாய் – தானே சமைத்தார்
வாரணம் அலங்கரித்தார் – முனிவர்கள்
ஆரணம் முறை முறை – ஆர்ப்பரித்தார்
விஜய துந்துபி அடித்தார் நகரெங்கும்
தசரதன் அருளிய – மொழி பாடிட்டார்
(3)
சிந்தூரம் எழுதிடுவார் – பரிமள சந்தனத்தால்
தரை மெழுகிடுவார் – கந்தப் பொடிகளால்
மாவிலை தோரணம் – கட்டுவார் பந்தலில்
ஆட்டம் பாட்டம் – கொண்டாட்டம் என
விஜய துந்துபி அடித்தார் நகரெங்கும்
தசரதன் அருளிய – மொழி பாடிட்டார்
(4)
வானவர்கள் வந்து – திரிவார் அடிக்கடி
மேனகை – ஊர்வசி நர்த்தனம் புரிவார்
கான வித்தைகள் – படிப்பார் அதுக்கின்னம்
ஆன கோகிலம் – போலச்சடி படிப்பார்
விஜய துந்துபி அடித்தார் நகரெங்கும்
தசரதன் அருளிய – மொழி பாடிட்டார்
(5)
ரம்பையர் நடமாட – வீணையில் தும்புரு
நாரதர் கீதம் இசை பாட
செம்பொன் மணி சூட – ஸ்ரீ ராமனுக்கு
சாமரம் போட – மன்னர் எழுந்தோட
விஜய துந்துபி அடித்தார் நகரெங்கும்
தசரதன் அருளிய – மொழி பாடிட்டார்
(6)
இப்படி கொண்டாடி – ஸ்ரீ ராமனுக்கு
ஒப்பனை செய்வதே – தென்ன நாடி
சந்தோஷத்தில் கூடி பாடி – அயோத்தியில் அனைவரும்
மலர் மாரி மாரி – பொழிந்தனர் அங்கே
விஜய துந்துபி அடித்தார் நகரெங்கும்
தசரதன் அருளிய – மொழி பாடிட்டார்
திசை திசை சொல்லி விடுத்தார் வாசலில்
அஜையும் விஜய – கேதனம் எடுத்தார்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே !
** ஹரே கிருஷ்ணா **

