விஜய ஏகாதசி

யுதிஷ்டிரர், “பகவான் கிருஷ்ணரே!  வசுதேவர் மகனே! பங்குனி மாதம் ( பிப்ரவரி – மார்ச்) கிருஷ்ண பட்ச ஏகாதசி பற்றி கூறுவீராக”, என்று கேட்டார்.

கிருஷ்ணர், ” யுதிஷ்டிரா! இப்பிறவியிலும் மறுபிறப்பிலும் வெற்றியை தரக் கூடிய விஜய ஏகாதசி பற்றி கூறுகிறேன். கேட்பீர்! ” என்றார்.

“இந்த ஏகாதசி விரதம் இருந்தாலும் அதைப் பற்றி கேட்டாலும் பாபம் தீரும்.  நாரத முனி ஒரு முறை பிரம்மனிடம் விஜய ஏகாதசி பற்றி கேட்டார்.  அவர், “இது விரதங்களில் மிகப் பழமையானது. வெற்றியை தரக் கூடியது. வனவாசத்தில் ராமர் சீதை லட்சுமணர் பஞ்சவடியில் தங்கி இருந்தனர். இராவணன் என்ற அரக்கன் சீதையை கவர்ந்து செல்ல ராமர் சாதாரண மனிதன் போல் துயருற்றார். சீதையை தேடிச் செல்லும் வழியில் இறந்து கொண்டிருக்கும் ஜடாயுவை கண்டார். சீதையைப் பற்றிய விவரங்களை கூறி விட்டு ஜடாயு வைகுந்தம் செல்ல, ராமர் பின்னர் கபந்தன் என்ற அரக்கனை கொன்றார்.

பின்னர் ராமனும் வானர அரசன் சுக்ரீவனும் நண்பர்கள் ஆயினர்..

அவர்கள் வானர மற்றும் கரடிகளுடன் கூடிய சேனையை நிறுவி அனுமனை இலங்கைக்கு அனுப்பினர். அனுமார் அசோக வனத்தில் சீதையைக் கண்டு இராமரின் செய்தியை சொல்லி அவர் கொடுத்த கணையாழியை சீதையிடம் அளித்து பேருதவி புரிந்தார். சுக்ரீவரின் உதவியுடன் இலங்கை செல்லத் துவங்கினர்.   ராமர் கடற்கரையில் லட்சுமணரிடம் “சுமித்ரையின் மகவே! இந்த ஆழ்ந்த கடலை கடக்க நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  வருண தேவனின் உறைவிடமும், திமிங்கிலம்  மற்றும் கொடூர கடலுயிரிகள் நிறைந்த இந்தக் கடலை எவ்வாறு தாண்டுவது?” என்றார்.

லக்ஷ்மணன் உடனே, “தேவர்களில் சிறந்தவரே! பகதல்பிய முனிவர் இங்கிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள தீவில் வசிக்கிறார்.  வயதில் அவரிடம் இதைக் கடக்கும் வழியை கேட்போம்” என்று கூறினார்.

எனவே ராமரும், லட்சுமணரும் பகதல்பிய முனியின் ஆசிரமம் அடைந்தனர். இருவரும் விஷ்ணுவை வணங்குவது போல் அவருக்கு பணிவுடன் தங்கள் வணக்கத்தை தெரியப்படுத்தினர். முனிவர் ராமரை உடனே அடையாளம் கண்டு கொண்டு அவர்கள் தன்னை  நாடி வந்த காரணம் என்ன என்றார்.

ராமர், “இருபிறப்பெடுத்தவரே! ராவணன்  தலைமையில் இலங்கையில் இருக்கும் அசுரரை அழிக்க வந்துள்ளேன்.  வானர மற்றும் கரடிப் படையுடன் இந்த கடலைக் கடந்து செல்ல உபயாம என்னவென்று அறிய உங்களை வந்தடைந்தேன் என்று கூறினார்.” கடலைக் கடக்கும் வழியை நான் கூறுகிறேன்.

நீயும் உனது படையும் விஜய ஏகாதசி விரதத்தைக் கடைபிடித்தால் கண்டிப்பாக கடலை கடக்க இயலுவதோடு வெற்றியும் அடைவீர்கள்” என்றார். ராமரும் படையினரும் விஜய ஏகாதசி விரதம் இருந்து வென்றனர்.  யாரொருவர் இந்த விரதம் முறைப்படி இருக்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் வெற்றியும் இறப்பிற்கு பின் வைகுந்தமும் அடைவர். “எனவே நாரதரே! ஏன் நாம் இந்த விரதம் முறைப்படி இருக்க வேண்டும் என உணர்ந்து இருப்பீர். மன்னிக்க இயலாத பாவங்களையும் தீர்க்கக் கூடியது இந்த விரதம்.  மேலும் அசுவமேத யாகம் செய்த பலனை தரக் கூடியது”.

இதுவே பங்குனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி அல்லது  விஜய ஏகாதசியின் பயனாக ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்ட செய்தியாகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare