வருதினி ஏகாதசி

யுதிஷ்டிரர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிம், “வாசுதேவரே, என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, தாங்கள், கிருஷ்ண பக்ஷ, வைகாசி மாத, ஏகாதசியின் பயன்களைச் சொல்வீர்களாக”.
ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார், “இந்த வைகாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி, வருதினி ஏகாதசி, என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில், முழு உபவாசம் கடைபிடிப்பவர்கள், பாபங்கள் முழுமையும் விலகி, தொடர் இன்பங்களை அனுபவிப்பர்.
வருதினி ஏகாதசியில், உபவாசம் இருக்கும் துர்பாக்கிய பெண், பாக்கியசாலி ஆகவும், விரதம் இருப்பவர் மகிழ்ச்சியையும், முக்தியையும் பெறுவர். எல்லா பாபங்களும் அழிந்து, மறுபிறப்பு என்கிற துன்பம் இல்லாமல் செய்கிறது. இந்த விரதத்தைக் கடைப்பிடித்து மந்தாதா மற்றும் பல அரசர்கள் முக்தி அடைந்தனர். இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த மகாராஜா துந்துமாரா தன் குஷ்ட ரோகத்தில் இருந்து (சிவபெருமானிடம் பெற்ற சாபம் ) விடுபட்டார்.
இந்த விரதம் கடைப்பிடிப்பவர்கள்
- பத்தாயிரம் ஆண்டு கடுமையான தவம் செய்வதால் அடையும் பயன் பெறுவர்.
- குருக்ஷேத்ரத்தில் சூரிய கிரகணத்தின் போது ஏராளமான தங்கம் தானம் செய்த பயன் பெறுவர்.
- பாவம் தீர்ந்து புத்துயிர் அளிக்கும்.
- குதிரை தானம் அளிப்பதை விட யானை அளிப்பது சிறந்தது, யானையைவிட நிலத்தை அளிப்பது, நிலத்தை விட எள்ளை அளிப்பது, எள்ளை விட தங்கத்தை அளிப்பது, தங்கத்தை விட தானியங்களை முன்னோர்க்கு தேவர்க்கு அளித்து அவர்கள் ஏற்றுக் கொள்ளுதல்.
- தானியங்கள் அளிப்பதை விட கன்னிகாதானம் சிறந்தது.
மேலும் தானியங்கள் அளிப்பதற்கு நிகர் பசுக்களை அளித்தல். அதைவிட சிறந்தது அறியாமையில் இருப்பவர்களுக்கு ஆன்மீக ஞானம் அளித்தல். இவை எல்லாவற்றையும் விட சிறந்தது வர்தினி ஏகாதசி விரதம்.
ஏகாதசியில் கைவிட வேண்டியவை:
சூது விளையாட்டு, புரளி பேசுதல், தவறு காணுதல், கோபம், பொய் பேசுதல்.
எவனொருவன் வர்தினி விரதம் கடை பிடிக்கிறானோ அவன் எல்லா பாபங்களில் இருந்தும் விடுபட்டு மோக்ஷம் அடைகிறான்.
அரசே எவனுக்கு தான் சேர்த்து வைத்துள்ள பாபங்களைப் பற்றியும் இறப்பு பற்றியும் பயம் உள்ளதோ அவன் கண்டிப்பாக இந்த விரதம் கடை பிடிக்க வேண்டும்.
இறுதியாக யுதிஷ்டிரரே எவர் ஒருவர் , இந்த வருதினி ஏகாதசியின் பயனை படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ ,அவர்கள், ஆயிரம் பசுக்களை தானம் செய்த பயனையும், இறுதியில், விஷ்ணுவின் பரம பதத்தினையும் அடைகிறார்கள்.

