உத்தான ஏகாதசி

(மனம் மற்றும் உடல் சுத்திகரிப்பு)

கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஹரிபோதினி, பிரபோதினி, தேவோத்தானி அல்லது உத்தான ஏகாதசி என்று வழங்கப்படுகிறது.

பிரம்மா நாரத முனிவரிடம், “துறவிகளின் சிறந்தவரே! ஹரிபோதினி ஏகாதசி விரதம் பற்றி கூறுகிறேன், கேளுங்கள். இந்த ஏகாதசி அன்று பகவானை சரணடைவோருக்கு மிகுந்த பலனைத் தந்து முக்தியையும் தரவல்லது.

கங்கையில் நீராடினால் கிடைக்கும் பலனைவிட ஹரிபோதினி ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன் அதிகமானதாகும்.   புனித யாத்திரை மேற்கொள்வதால், புனித நீராடுவதால், ஆயிரம் அசுவமேத யாகம் செய்வதால், நூறு ராஜசூய யாகம் செய்வதால் கிடைக்கும் பலனைவிட அதிக பலன் தரக் கூடியது”.

ஹரிபோதினி ஏகாதசி விரதம் இருப்பவர் மூன்று உலகங்களிலும் அடைய இயலாத பெரும் பயன் அடைவர்.  ஒருவர் செய்த சுமேரு மலை போன்ற பாவமும் இந்த பாபஹாரினி அல்லது பிரபோதினி ஏகாதசி விரதம் இருப்பதால் நீங்கும். பஞ்சு மலை எப்படி ஒரு சிறு நெருப்புப் பொறியால் பஸ்மமாகிறதோ, அது போல் ஒருவர் செய்யும் ஆயிரம் ஜன்ம பாபம் கூட இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் அழியும்.

இந்த ஏகாதசி அன்று விதிமுறைப்படி செய்யும் சிறு தொண்டும் சுமேரு மலை போன்ற பயன் தரும்.

*தவறான நடத்தை உள்ளவன்

*அயோக்கியரைப் பாராட்டித் திரிபவன்

இவர்கள் தாங்கள் சேர்த்த புண்ணியத்தை இழப்பர். அவர்களுடன் தொடர்பில் இருந்தாலே நேராக நரகம் செல்வர். அவர்கள் வீட்டில் உண்பவர் தங்கள் புண்ணியம் குழந்தை, செல்வம், ஆயுள் மகிழ்ச்சி எல்லாம் இழப்பர். புண்ணியரை தூற்றுபவன் தங்கள் பதவி, வசதி, பக்தி மற்றும் திருப்தியை இழந்து நரகத்தில் தள்ளப் படுகிறான். மற்ற புண்ணியர் வதைக்கப் படுவதை பார்த்தும் தடுக்காமல் இருப்பவன் கழுதையை விடக் கேவலமாக கருதப் படுவான், தன் கண் எதிரில் வம்சம் அழிவதைக் காண நேரிடும்.

நல்ல பழக்கம் இல்லாதவன், கயவன் அல்லது கொள்ளைக்காரன், மற்றவரிடம் குறை காண்பவன், புனிதமான செயல்களைச் செய்தாலும் இறப்பிற்கு பின் மேன்மை நிலையை அடைய இயலாது.   எனவே ஒருவன் தவறான செயல்கள் செய்வது கூடாது. ஹரிபோதினி ஏகாதசி விரதம் இருப்பதால் நூறு ஜன்ம பாபம் நீங்கி பகவான் விஷ்ணுவின் இருப்பிடம் அடைகிறான். பின்னர் அவனது முன்னோர், பின்னோர், சுற்றம் வைகுண்டம் அடைவர். நரகத்தில் உழலும் முன்னோர் ஆன்மாவும் வைகுண்டம் அடையும்.

புனித யாத்திரை செய்வதாலும், குதிரை, பசு, தங்கம், விளைச்சல் நிலம் தானம் செய்வதாலும் கிடைக்கும்   பலனை விட அதிகம் பலனைத் தருவதோடு, ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தையும் நீக்க வல்லது இந்த ஏகாதசி விரதம். ஒருவருக்கு இறப்பும், சொத்துக்களை இழப்பதும் உறுதியானது.   எனவே ஒருவர் எல்லா சுகங்களையும் துறந்து, பகவான் விஷ்ணுவின் பாதம் பற்றி இந்த ஏகாதசி விரதம் இருந்து பலன் பெற வேண்டும்.

இந்த விரதம் இருப்பவர், சிறந்த பக்திமான், புலன்களைக் கட்டுப் படுத்துபவன் மற்றும் யோகி ஆவான்.

இந்த ஏகாதசி விரதம் இருப்பவன் மூன்று உலகிலும் இல்லாத பயன், மற்றும் விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தவன் ஆகிறான்”.

“நாரதரே! இந்த ஹரிபோதினி ஏகாதசி விரதம் இருப்பவர் மறுபடியும் கருப்பைக்குள் இருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதால், முழுமுதற் கடவுளின் உண்மையான பக்தர்கள் அனைத்து வகையான மதச்சம்பிரதாயங்களை விடுத்து, ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து பகவானை அடைவதை லட்சியமாகக் கொள்கின்றனர்.   தானம் செய்து கிடைக்கும் பலனை விட, ஏகாதசி அன்று பகவானை முழுமையாக அலங்கரித்து விரதம் அனுஷ்டித்தால், நூறு ஜன்ம பாபம் நீங்கும், அவன் எல்லா ஆபத்துகளில் இருந்தும் நீங்கி விடுகிறான்.

பகவான் மிக மகிழ்ந்து இந்த ஏகாதசி விரதம் இருப்பவரைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அப்படி செல்லும் பொழுது பத்து அண்டத் திசையிலும் ஒளி வீசிச் செல்கிறான். குறிப்பாக இந்த ஹரிபோதினி ஏகாதசி, துவாதசி அன்று வரும்போது விரதம் இருந்து, புதிதாகவோ, முன்போ, சிறுவயதில் அல்லது மூப்பில் என எப்படி செய்த பாபமாயினும் நீங்கும். பணம், பொருள், தானியம், பதவி எல்லாம் அடைந்து வைகுண்டத்தை அடைய எந்தத் தடை இருந்தாலும் அகலும்.  இந்த விரதம் ஆயிரம் சந்திர, சூரிய கிரகணத்தில் தானம் செய்யும் பலனையும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடிப் பல்வேறு தானம் செய்து, வேதம் படிப்பதால் கிடைப்பதை (மில்லியனில் ஒரு பங்கு பலன்) விட அதிக பலன் தரும். வேறு என்ன புனிதப் பணிகள் செய்தாலும் இந்த கார்த்திகை மாத ஹரிபோதினி விரதம் இருக்காவிட்டால் எந்த பலனையும் தராது.

இந்த விரத நாளில் பக்தன் அல்லாதவன் சமைத்ததை உண்ணக் கூடாது. அப்படி உண்டால் பௌர்ணமி விரதப் பலன் தான் கிட்டும். யானைகளையும் குதிரைகளையும் தானமாகக் கொடுப்பதை விட, யாகங்கள் செய்வதை விட, நூறு பசுக்களை பிராமணனுக்கு கொடுப்பதை விட விஷ்ணுவை போற்றி அதிக பலன் பெறலாம்.

கார்த்திகை மாதத்தில் பகவானை போற்றிப் புகழ்வதால் ஏழு தீவுகளை தானம் செய்த பலன் கிடைக்கும்.

இந்த விரதம் இருப்பவர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி, “பகவானே இந்த ஏகாதசி விரதம் முறைப்படி இருந்து மறு நாள் பிரசாதம் ஏற்று முடிப்பேன். நீயே எனது பாதுகாப்பாளன்” என்று வேண்டிக் கொண்டு, பகவானின் திருநாமம் சொல்லி வேத மந்திரங்கள், விஷ்ணு துதிகளைப் பாடி ஆன்மீக உலகில் லயிக்க வேண்டும்.

விரதத்தன்று வாசனைப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டு, பாபத்தை புண்ணியமாக மாற்ற வேண்டும்.  சங்கு நீரால் அபிஷேகம் செய்து பூக்கள் சாற்றி, பத்து மில்லியன் பலன் பெறலாம். இந்த நாளில் இந்திரன் கூட அகஸ்திய மலரால் ஜனார்தனனை வழிபடுகிறார்.  பேல் மர இலைகளால் துதிப்பவர் பந்தங்களில் இருந்து விடுபடுவர்.   துளசியால் பகவானை துதிப்பவரின் ஆயிரம் பிறவிப் பாபங்களை சாம்பலாகச் செய்திடுவார்.  துளசி மகாராணியை பார்ப்பவர், கையால் தொட்டு பூஜிப்பவர், துதிப்பவர், அவளது பெருமையை பணிவுடன் சொல்பவர், வீட்டில் வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வழிபடுபவர் நேரடியாக ஹரியின் உறைவிடம் அடைவர்.   இந்த வழிபாடு செய்பவர் துளசி வேர் கிளை விட்டு வளருவது போல் மேலுலகத்தில் ஆயிரம் யுகங்கள் மகிழ்ச்சியாக இருப்பர். மேலும் துளசி எவ்வாறு தன் விதைகளால் மேலும் மேலும் வளர்ந்து கிளை, பூ விட்டு மேலும் விதை மூலம் ஆயிரம் கல்பங்கள் பரப்புகிறதோ அது போல் அவர்களும் தங்கள் முன்னோர்களும் ஹரியிடம் உறைவர்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த கதம்ப மலர்களால் அவரைத் தொழுபவர், யமனையே பார்க்க மாட்டார்கள். பகுளம், அசோகம், படாலி புஷ்பங்களால் அவரை தொழுபவர் தங்கள் துக்கம் தொலைந்து சந்திர, சூரியர் இருக்கும் காலம் வரை வாழ்வர், பின்னர் வீடுபேறு அடைவர். கண்ணரா பூக்களால் அவரை வழிபடுபவர் நான்கு யுகங்கள் கேசவனைத் தொழுவதால் அடையும் பலன் பெறுவர். கார்த்திகை மாதம் துளசியால் பகவானை வணங்கும் ஒருவர் பத்து மில்லியன் பசுக்களை தானம் செய்த பலன் அடைவர்.   புதிய புல் கொண்டு பகவானை அர்ச்சித்தாலும் நூறு மடங்கு பலன் தரும்.  சாமிக மர இலை கொண்டு அர்ச்சிக்க யம பயம் நீங்கும், சம்பங்கி அல்லது மல்லிகை மலரால் அர்ச்சிப்பவர் மறுபிறப்பு நீங்கப் பெறுவர்.   கும்பி மலரால் பூஜிப்பவர் ஒரு பலம் (200 கிராம்) தங்கம் தானம் செய்த பலன் அடைவர்.  ஒரு கேடகி மலர் அல்லது மர ஆப்பிள் மலரால் அர்ச்சிப்பவர் பத்து மில்லியன் பிறவிப் பாபம் நீங்கப் பெறுவர். மேலும் பூக்கள், நூறு இலையால் சிவப்பு மற்றும் மஞ்சள் சந்தனம் தொட்டு அர்சிப்பவர் ஸ்வேதத்வீபத்தில் ஜட உலகிற்கு அப்பால் இருப்பர்.

இப்படி ஹரிபோதினி ஏகாதசி விரதம் இருப்பவர் மறுநாள் காலையில் (நதியில்) நீராடி, ஜெகன்னாதர் திருநாமம் ஜெபித்து நைவேத்தியம் செய்து பகவானுக்கு அர்ப்பணித்து அதை உண்ண வேண்டும்.   பிராமணருக்குத் தங்களால் இயன்ற தானம் வழங்கலாம்.

விஷ்ணு அல்லது துளசிக்கு இந்த மாதம் முழுதும் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.   இந்த ஏகாதசி சாதுர்மாச முடிவாதலால், மாதத்தில் எதைத் தவிர்த்தார்களோ அதை தானம் அளித்து பன்மடங்கு பலன் பெறலாம்.

இதுவே ஸ்கந்த புராணத்தில் உள்ள கார்த்திகை சுக்ல பட்ச ஏகாதசி ஹரிபோதினி அல்லது தேவோத்தான ஏகாதசியின் சிறப்பு ஆகும்.

ஹரி பக்தி விலாசத்திலிருந்து: பிரபோதினிம் உபோஸ்ய ஏவ ந கர்பே வசதே நரஹ சர்வ தர்மன் பரித்யஜ்ய தஸ்மாத் குர்வித நாரதா (ஹரி பக்தி விலாச 16/289 ஸ்கந்த புராணத்தில் பிரம்மன் கூற்று)

ஓ நாரத முனி! பிரபோதினி ஏகாதசி விரதம் இருப்பவர் (பகவான் எழுந்து இருக்கும் போது) ஒரு தாயின் கருவறையில் இருக்க வேண்டிய நிலை வராது. எனவே ஒருவன் தன் எல்லா பணிகளையும் நிறுத்தி இந்த விரதம் இருக்க வேண்டும்.

துக்தப்தி போகி சயனே பகவான் அனந்தோ யஸ்மின் தினே ஸ்வபிதி ச அத விபுத்யதே ச தஸ்மின் அனன்ய மனசாம் உபவாச பஜம் காமம் ததாதி அபிமதம் கருடங்க சயி (ஹரி பக்தி விலாசம் 16/293 பத்ம புராணத்தில் இருந்து)

அறிவுக் கூர்மையுடன் பகவான் ஶ்ரீ ஹரி பாற்கடலில் பாம்பு படுக்கையில் தூங்கும் நாளன்றும் விழிக்கும் அன்றும் விரதம் இருப்பவரது எல்லா விருப்பமும் நிறைவேறும்.

பக்திப்ரத ஹரே சது நாம்னாக் சத பிரபோதினி யஸ்ய விஷனோர் பர மூர்த்தி அவியக்த அனேக ரூபிணி ச க்சிப்த மனுசே லோகே த்வததி முனி புங்கவா (ஹரி பக்தி விலாசம் 16/301 வராஹ புராணத்தில் யமனுக்கும் நாரத முனிக்கும் இடையே உரையாடல்)

ஶ்ரீ ஹரியின் பக்திக்கு பலன் தரக் கூடியது.    ஓ நாரத முனியே! இந்த ஏகாதசியானது ஶ்ரீ ஹரியின் மாயையாக இந்த உலகில் உள்ளது. ஶ்ரீல சனாதன கோஸ்வாமி தன் திக்தர்ஷினி – திகாவில்

இந்த ஏகாதசி விரதம் முறைப்படி இருப்பவர் நேராக ஶ்ரீ ஹரியை அடைவர்.

சதுர் த கிரஹ்ய வை சிர்ணம் சாதுர் மாஸ்ய வ்ரதம் நரஹ் கர்திகே சுக்ல பட்சே து த்வாதஸ்யம் தத் சமாசரேத் (ஹரி பக்தி விலாசம் 16/412 மகாபாரதத்தில் இருந்து)

நான்கு விதமாக சொல்லப் பட்ட சாதுர் மாஸிய விரதம் இருப்பவர் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச துவாதசி அன்று விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். (இஸ்கான் அமைப்பு பௌர்ணமி முதல் பௌர்ணமி வரை சாதுர மாஸ்ய விரதம் அனுஷ்டிப்பர்)

ஏகாதசி யாம் பாரேர் தத்தம் தீபம் பிராஜ்வல்ய மூசிக மனுஷ்யம் துர்லபம் பிராப்ய பரம் கதிம் அவபச (ஹரி பக்தி விலாசம் 16/129 ஸ்கந்த புராணத்தில் இருந்து). ஒரு பெண் எலி மற்றவர் ஏற்றிய நெய் விளக்கை ஏகாதசி அன்று தூண்டி விட்டதால் மனிதப் பிறப்பெடுத்து பின்னர் உயர் பேறு பெற்றது.

ஶ்ரீல சனாதன கோஸ்வாமி தன் திக்தர்ஷினி- திகா என்ற நூலில் எவன் ஏகாதசி தீபம் ஏற்றுகிறானோ நேரடியான பலன் பெறுகிறான் என்று கூறியுள்ளார். பத்ம புராணம் கார்த்திகை மஹாத்மியத்தில் இந்த எலி கதை மிகப் பிரபலம். (ஒரு விஷ்ணு கோவிலில் எலி ஒன்று விளக்கு எண்ணெயை உண்டு வாழ்ந்து வந்தது.

ஒரு முறை பசியால் எரிந்து கொண்டிருந்த விளக்கு திரியின் நெய்யை சுவைத்தது. சூடான திரி அதன் வாயில் ஒட்டிக் கொள்ள குதித்து ஓடிய எலி தீயில் சிக்கி இறந்தது. வாயில் எரிந்து கொண்டிருந்த திரியுடன் குதித்தது ஆரத்தியாக கருதினார் பகவான், எனவே உயர்ந்த மோட்சம் அளித்தார்). பிரபோதினி

சாதுர் மாசம் நான்கு மாதமும் நித்திரையில் (சயனி ஏகாதசி முதல் பாற்கடலில் துயின்ற) இருந்த பகவான் எழுந்திருக்கும் நாள் அவரை ரத யாத்திரை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும். இதைப் பற்றி பத்ம புராணத்தில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare