ஸ்ரீ குரு-வந்தனா

(1)
ஸ்ரீ-கு3ரு-சரண-பத்3ம, கேவல-ப4கதி-ஸத்3
3ந்தோ3 முஞி ஸாவதா4ன மதே
ஜாஹார ப்ரஸாதே3 பாஇ, ஏ ப4வ தரியா ஜா3
க்ருஷ்ண-ப்ராப்தி ஹய ஜா3ஹா ஹ’தே

ஸ்ரீ குருவின் தாமரைத் திருவடிகள் மட்டுமே தூய பக்தித்தொண்டினை அடைவதற்கான வழியாகும். அந்தத் தாமரைத் திருவடிகளுக்கு நான் மிகுந்த கவனத்துடனும் மரியாதையுடனும் தண்டம் சமர்ப்பிக்கின்றேன். சகோதரர்களே! அவரது கருணையினால் இந்த பௌதிக வாழ்வெனும் கடலைக் கடந்து கிருஷ்ணரின் கருணையை அடைய முடியும்.


(2)
கு3ரு-முக2-பத்3ம-வாக்ய, சித்தேதே கரியா ஐக்ய
ஆர நா கரிஹ மனே ஆஷா2
ஸ்ரீ-கு3ரு-சரணே ரதி, ஏஇ ஸே உத்தம-க3தி
ஜே3 ப்ரஸாதே3 பூரே ஸர்வ ஆஷா2

குருவின் தாமரைத் திருவாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் எனது சித்தத்துடன் (உணர்வுடன்) ஐக்கியமாக்கியுள்ளேன், அந்த வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் நான் விரும்புவதில்லை. ஸ்ரீ குருவின் தாமரைத் திருவடிகளின் மீதான பற்றுதல் உத்தம கதியை வழங்கும். அந்த கருணையினால் எல்லா ஆசைகளும் பூர்த்தியடைகின்றன.


(3)
சக்ஷு -தா3ன தி3ல ஜே3இ, ஜன்மே ஜன்மே ப்ரபு4 ஸேஇ
தி3வ்ய- ஜ்ஞான ஹ்ருதே ப்ரகாஷி2
ப்ரேம-ப4க்தி ஜா3ஹா ஹஇதே, அவித்2யா வினாஷ, ஜா3தே
வேதே3 கா3ய ஜா3ஹார சரித

எனது இருண்ட கண்களைத் திறந்து தெய்வீகப் பார்வை என்னும் தானத்தை வழங்கிய ஆன்மீக குரு பிறவிதோறும் எனது பிரபுவாவார். அவர் தெய்வீக ஞானத்தை எனது இதயத்தில் வெளிப்படுத்துகிறார். அவரிடமிருந்தே பிரேம பக்தி வெளிப்படுகிறது. அவராலேயே அறியாமை அகற்றப்படுகிறது. அவரது குணங்களை வேத சாஸ்திரங்கள் பாடுகின்றன.


(4)
ஸ்ரீ-கு3ரு கருணா-ஸிந்து4, அத4ம ஜனார ப4ந்து4
லோகநாத2 லோகேர ஜீவன
ஹா ஹா ப்ரபு4 கர த3யா, தே3ஹ மோரே பத3-சா2யா
ஏபே332 கு4ஷுக த்ரிபு4வன

எங்களின் ஆன்மீக குரு கருணையின் கடலாவார். வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களின் நண்பராவார், எல்லா பக்தர்களின் எஜமானராகவும் உயிராகவும் திகழ்கிறார். அன்புள்ள பிரபுவே! என் மீது கருணை கொள்ளுங்கள், தங்களது தாமரைத் திருவடியின் நிழலில் இடம் கொடுங்கள். உங்களது புகழ் மூவுலகமும் பரவட்டும்.

** ஹரே கிருஷ்ணா **

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare