சீதா கல்யாண வைபோகம்
(1)
தேச தேச மகராஜனுக்குத் திருமுடி அபிஷேகம் செய்ய I
ராஜ ராஜர் எல்லோரும் முறை முறையாய் எடுத்தனர் வைபோகம் ||

(2)
சோதிமணி நெடு வீதியில் மகர தோரணம் தூக்கினர் |
மீதினிலே பிசகாமல் நாலிரு மேருவுண்டாக்கினார் ||
(3)
முத்துக் குடை, பவள சித்திரக்குடை முறை முறையாய் நிரைத்தார் I
அப்புறம் சுற்றுக்கு வானவர்கள் உள்ள சொர்ண மலர்கள் விரித்தனர் ||
தேச தேச மகராஜனுக்குத் திருமுடி அபிஷேகம் செய்ய I
ராஜ ராஜர் எல்லோரும் முறை முறையாய் எடுத்தனர் வைபோகம் ||
(4)
கோலப் பதுமை – இந்திர ஜாலம் பதுமை கட்டிக் கூற்தறி கமுகு நட்டார் I
சுற்றிலும்-மேலுக்கும் – கீழுக்கும்-கோலக் கண்ணாடிகள் விதம்விதமாக – இட்டார் ||
(5)
சூடக வால்வளை – கோதையர் கீதங்கள் சோபனமுடன் அமைத்தார் I
அபிநய – நாடக சாலையும் – பாடக சாலையும் நால் முகமும் – சமைத்தார் ||
தேச தேச மகராஜனுக்குத் திருமுடி அபிஷேகம் செய்ய I
ராஜ ராஜர் எல்லோரும் முறை முறையாய் எடுத்தனர் வைபோகம் ||
(6)
பூந்துகில் கரித்து- மாந்தழை விரித்துப் பூரணகும்பம் -பதித்தார் I
புவி வேந்தரும் – பலமாந்தரும் – ஆனந்தம் மேற்கொண்டு – குதி குதித்தார்கள் ||
(7)
முத்துப்-பவளம் – மாணிக்கத்தால் செய்த ஆபரணம் திருத்தினார் I
சோபனம் பணிக்கும் நவரத்ன பாலிகை எங்கெங்கும் – பளபளவென – இருத்தினர் ||
தேச தேச மகராஜனுக்குத் திருமுடி அபிஷேகம் செய்ய I
ராஜ ராஜர் எல்லோரும் முறை முறையாய் எடுத்தனர் வைபோகம் ||
(8)
மாமன்-ஜனகனும் – தாய் மார்களும் கண்டுமகிழ்ச்சி கண்ணீர் துளித்தார் – பின்னும் I
நாமிங்கே செய்த தவமே தவமென்றுநகருள்ளோரும் – களித்தார்கள் ||

(9)
சந்திர குலத்தில் வந்த சீதைக்கு – நாதனென்று சந்திரன் புகழ்ந்தானே I
கூட இந்த வைபோகத்தை ஆயிரம் கண் கொண்டு இந்திரன் மகிழ்ந்தானே ||
சந்திர குலத்தில் வந்த சீதைக்கு – நாதனென்று சந்திரன் புகழ்ந்தானே I
கூட இந்த வைபோகத்தை ஆயிரம் கண் கொண்டு இந்திரன் மகிழ்ந்தானே ||
தேச தேச மகராஜனுக்குத் திருமுடி அபிஷேகம் செய்ய I
ராஜ ராஜர் எல்லோரும் முறை முறையாய் எடுத்தனர் வைபோகம் ||
தேச தேச மகராஜனுக்குத் திருமுடி அபிஷேகம் செய்ய I
ராஜ ராஜர் எல்லோரும் முறை முறையாய் எடுத்தனர் வைபோகம் ||
(10)
சீதா கல்யாண – வைபோகம்
ராமா கல்யாண – வைபோகம் I
சீதா ராம கல்யாண – வைபோகம்
ராம சீதா கல்யாண – வைபோகம் ||
சீதா கல்யாண – வைபோகம்
ராமா கல்யாண – வைபோகம் I
சீதா ராம கல்யாண – வைபோகம்
ராம சீதா கல்யாண – வைபோகம் ||
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே