அத்தியாயம் – 9
அம்சுமானின் வம்சம்
பதம் 9.9.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தன் பாட்டனாரைப் போலவே அம்சுமானும், பௌதிக உலகிற்கு கங்கையைக் கொண்டுவர நெடுங்காலம் தவமிருந்தார். எனினும் அதைச் சாதிக்க முடியாமல் நாளடைவில் மரணமடைந்தார்.
பதம் 9.9.2 : அம்சுமானைப் போலவே, அவரது மகன் திலீபனும் கங்கையைக் கொண்டு வர முடியாமல் நாளடைவில் காலமானார், பிறகு திலீபனின் மகனான பகீரதன் கங்கையை இவ்வுலகிற்குக் கொண்டு வருவதற்காக கடுந்தவங்களைச் செய்தார்.
பதம் 9.9.3 : அதன்பிறகு, பகீரத மகராஜனுக்கு கங்கா தேவி தரிசனமளித்து, “உன் தவத்தால் மிகவும் திருப்தியடைந்தேன், விரும்பிய வரத்தைக் கேள்” என்று கூற, அரசரும் அவள் முன் சிரம் பணிந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
பதம் 9.9.4 : கங்கா தேவி பதிலளித்தாள்: நான் ஆகாயத்திலிருந்து பூமியில் விழும் பொழுது நீரின் கடுமையான வேகத்தைத் தாங்கக் கூடியவர் யார்? தாங்கக் கூடியவர் இல்லையென்றால், நான் பூமியைப் பிளந்து கொண்டு, பிரபஞ்சத்தின் பாதாள பகுதியான ரஸாதளத்திற்குச் சென்று விடுவேன்.
பதம் 9.9.5 : அரசே, நான் மண்ணுலகிற்கு இறங்கிச் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் பொதுமக்கள் தங்களுடைய பாவ விளைவுகளைப் போக்கிக் கொள்ள என்னுடைய நீரில் குளிப்பார்கள். இவ்வாறு இப்பாவ விளைவுகளெல்லாம் என்னில் சேகரிக்குமானால், அவற்றிலிருந்து எப்படி நான் விடுபடுவேன்? இதை நீ நன்கு யோசித்துப் பார்.
பதம் 9.9.6 : பகீரதன் கூறினார். தூய பக்தர்கள் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள காரணத்தால், துறவிகளாகவும், பெளதிக ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களாகவும், வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுவதில் கைதேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இவர்கள் எப்பொழுதும் புகழுக்குரியவர்களாகவும், தூய ஒழுக்கம் உடையவர்களாகவும், இழிவடைந்த ஆத்மாக்களை எல்லாம் விடுவிக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர். இத்தகயை தூய பக்தர்கள் உங்களுடைய நீரில் குளிக்கும்போது, பொதுமக்களிடமிருந்து கிரகிக்கப்பட்ட பாவ விளைவுகள் செயலிழந்து போகும் என்பது நிச்சயம். ஏனெனில், எல்லாப் பாவ விளைவுகளையும் போக்கக் கூடியவரான பரமபுருஷரையே இத்தகைய பக்தர்கள் எப்பொழுதும் தங்களது இதயங்களில் வைத்துப் போற்றுகின்றனர்.
பதம் 9.9.7 : நூல்களால் பின்னப்பட்டுள்ள ஒரு துணி, நீளவாட்டமாகவும், அகலவாட்டமாகவும் செல்வதைப் போலவே, நீளவாட்டமாகவும் அகலவாட்டமாகவும் பரந்துள்ள இப்பிரபஞ்சம் முழுவதுமே பரமபருஷரின் வெவ்வேறு சக்திகளுக்குக் கீழ்ப்படிந்ததாக உள்ளது. சிவபெருமான் பகவானின் அவதாரம் என்பதால், அவர் பரமாத்மாவின் பிரதிநிதியாக உடல்பெற்ற ஆத்மாவினுள் இருக்கிறார். உங்களுடைய வேகத்தைத் தமது தலைமீது அவரால் தாங்கிக் கொள்ள முடியும்.
பதம் 9.9.8 : இங்ஙனம் கூறியபின், பகீரதனும் தவத்தால் சிவபெருமானை திருப்திப்படுத்தினார். பரீட்சித்து மகாராஜனே, சிவபெருமானும் மிக விரைவில் பகீரதனிடத்தில் திருப்தியடைந்தார்.
பதம் 9.9.9 : பகீரத மகாராஜன் சிவபெருமானை அணுகி, கங்கையின் வேகத்தைத் தாங்கியருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு, சிவபெருமானும், “அப்படியே ஆகட்டும்” என்று கூறினார். அந்த கங்கை நீர் பகவான் விஷ்ணுவின் பாதங்களிலிருந்து உற்பத்தியாவதால், புனிதப்படுத்தும் அந்நீரை மிகவும் கவனமாக சிவபெருமான் தன் தலைமீது தாங்கிக் கொண்டார்.
பதம் 9.9.10 : ராஜரிஷியாகிய பகீரதன், வீழ்ந்த ஆத்மாக்களை எல்லாம் காப்பாற்றக்கூடிய கங்கையைத் தன் முன்னோர்களின் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
பதம் 9.9.11 : பகீரதன் துரிதமாகச் செல்லும் இரதத்திலேறி, கங்கா தேவியின் முன் இரதத்தை ஓட்டிச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற கங்கா தேவியும் பல நாடுகளை புனிதப்படுத்திக் கொண்டே, பகீரதனின் முன்னோர்களான சகர புத்திரர்கள் சாம்பலாகிக் கிடந்த இடத்தை அடைந்தாள். இவ்வாறாக கங்கை நீர் அவர்கள் மீது தெளிக்கப்பட்டது.
பதம் 9.9.12 : சகர மகாராஜனின் புத்திரர்கள் மகா புருஷர் ஒருவருக்குக் குற்றம் புரிந்ததால், அவர்களது உடல்களின் வெப்பம் அதிகரித்து அதனாலேயே எரிந்து சாம்பலாகினர். ஆனால் கங்கை நீர் தெளிக்கப்பட்டதாலேயே அவர்களனைவரும் சுவர்க்க லோகங்களுக்குச் செல்லும் தகுதி பெற்றனர். கங்கை நீரைக் கொண்டு கங்கையையே வழிபடுவோரைப் பற்றி என்னவென்று சொல்வது?
பதம் 9.9.13 : சாம்பலாய்ப்போன உடல்களில் கங்கை நீர் பட்ட மாத்திரத்தில் சகர புத்திரர்கள் சுவர்க்க லோகங்களுக்கு உயர்த்தப்பட்டனர். அப்படியிருக்க, திட விரதத்துடனும், சிரத்தையுடனும் கங்கையை வழிபடுபவனைப் பற்றி கேட்க வேண்டுமா? அத்தகைய ஒரு பக்தனுக்கு விளையப் போகும் நன்மையைப்பற்றி ஒருவரால் கற்பனைதான் செய்து பார்க்க முடியும்.
பதம் 9.9.14 : பரமபுருஷராகிய அனந்ததேவரின் தாமரைப் பாதங்களிலிருந்து கங்காதேவி ஊற்றெடுப்பதால், பெளதிக பந்தத்திலிருந்து ஒருவரை விடுவிக்க அவளால் முடிகிறது. எனவே அவளைப்பற்றி இங்கு வர்ணிக்கப்பட்டிருப்பவை எல்லாம் சிறிதும் ஆச்சரியமானவை அல்ல.
பதம் 9.9.15 : பெளதிக சிற்றின்ப ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ள மாமுனிவர்கள் தங்களுடைய மனங்களை பகவத் தொண்டில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அத்தகையவர்கள் சிரமமின்றி பெளதிக பந்தத்திலிருந்து விடுபடுகின்றனர். அவர்கள் பகவானின் ஆன்மீக குணத்தை அடையப்பெற்று உன்னத படியில் நிலைபெறுகின்றனர். இதுவே பரம புருஷரின் பெருமையாகும்.
பதங்கள் 9.9.16 – 9.9.17 : பகீரதனுக்கு சுருதன் என்ற ஒரு மகன் இருந்தார். அவரது மகன் நாபன் இவர் ஏற்கனவே விவரிக்கப்பட்ட நாபனிலிருந்து வேறுபட்டவராவார். நாபனுக்கு சிந்துத்வீபன் என்ற ஒரு மகனிருந்தார். சிந்துத்வீபனிலிருந்து அயுதாயு வந்தார். அயுதாயுவிலிருந்து ருதூபர்ணன் வந்தார். இவர் நளராஜனுக்கு நண்பராவார். ருதூபர்ணன் நளராஜனுக்கு சூதாட்டக் கலையை கற்றுத் தந்தார். நளராஜனோ, குதிரைகளை அடக்கி அவற்றைப் பராமரிக்கும் கலையை ருதூபர்ணனுக்குக் கற்றுத் தந்தார். ரிதூபர்ணனின் மகன் சர்வகாமன்.
பதம் 9.9.18 : சர்வகாமனுக்கு சுதாஸன் என்றொரு மகனிருந்தார். சௌதாஸன் என்ற அவரது மகன் தமயந்தியின் கணவராவார். சௌதாஸன் சிலசமயங்களில் மித்திரஸஹன் அல்லது கல்மாஷபாதன் என்றும் அறியப்பட்டார். கெட்ட செய்கையின் காரணத்தால் புத்திர பாக்கியம் இல்லாதிருந்த இவர், வசிஷ்டரால் சபிக்கப்பட்டு ஒரு இராட்சஸனாக மாறினார்.
பதம் 9.9.19 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: ஓ சுகதேவ கோஸ்வாமி, சௌதாஸனின் ஆன்மீக குருவான வசிஷ்டர் ஏன் அச்சிறந்த ஆத்மாவைச் சபித்தார்? இதை நான் அறிய விரும்புகிறேன். இதில் இரகசியம் எதுவும் இல்லையென்றால், தயவுசெய்து எனக்குக் கூறியருள வேண்டுகிறேன்.
பதங்கள் 9.9.20 – 9.9.21 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஒரு சமயம் காட்டில் வசிப்பதற்காகச் சென்ற சௌதாஸன் அங்கு ஒரு இராட்சஸனைக் கொன்றார். ஆனால் அந்த இராட்சஸனின் சகோதரனை மன்னித்து விடுதலை செய்தார். ஆயினும், அந்த இராட்சஸனோ, பழிக்குப் பழிவாங்க முடிவு செய்தான். அரசருக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்துடன், அரசரின் வீட்டில் சமையற்காரனாக பொறுப்பேற்றான். ஒரு நாள், அரசரின் ஆன்மீக குருவான வசிஷ்ட முனிவர் பகல் போஜனத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இராட்சஸ சமையற்காரனும் அவருக்கு நர மாமிசத்தைப் பரிமாறினான்.
பதம் 9.9.22 : தனக்கு பரிமாறப்பட்ட உணவுகளைச் சோதித்துப் பார்த்த வசிஷ்டர், அது நர மாமிசமென்பதால் உண்ணத் தகாதது என்பதைத் தன் யோக சக்தியினால் புரிந்து கொண்டார். இதனால் அவர் கடுங்கோபமடைந்து, உடனே சௌதாஸனை ஓர் இராட்சஸனாக மாறும்படி சபித்து விட்டார்.
பதங்கள் 9.9.23 – 9.9.24 : நர மாமிசத்தைப் பரிமாறியது இராட்சஸன்தான், அரசரல்ல என்பதைப் புரிந்து கொண்ட வசிஷ்டர், குற்றமற்ற அவரைச் சபித்துவிட்டதால், தன்னை தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக பன்னிரண்டு ஆண்டுகள் தவமியற்றினார். இதற்கிடையில் சௌதாஸ மகாராஜன் வசிஷ்டரைச் சபிப்பதற்காக, நீரை எடுத்து சாப மந்திரத்தை உச்சரிக்கத் தயாரானார். ஆனால் அவரது மனைவியான மதயந்தி அவ்வாறு செய்யாமல் அவரைத் தடுத்துவிட்டாள். பிறகு பத்து திசைகளிலும், ஆகாயத்திலும், பூமியிலும், எல்லா இடங்களிலும் ஜீவராசிகள் நிறைந்திருப்பதை அரசர் கண்டார்.
பதம் 9.9.25 : இவ்வாறாக சௌதாஸன் ஓர் இராட்சஸனின் குணத்தையும், காலில் ஒரு கரும் புள்ளியையும் பெற்றார். இதனால் அவர் கல்மாஷபாதன் எனப்பட்டார். ஒரு சமயம் கல்மாஷபாத மகாராஜன், வனத்தில் ஒரு பிராமண சதிபதிகள் சிற்றின்ப விவகாரத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார்.
பதங்கள் 9.9.26 – 9.9.27 : இராட்சஸ குணத்தாலும்; பெரும் பசியாலும் தூண்டப்பட்ட சௌதாஸ மகாராஜன் அந்த பிராமணரைப் பற்றினார். பிறகு, இரங்கத்தக்க நிலையிலிருந்த பிராமணரின் மனைவி, அரசரிடம் கூறினாள்: வீரரே, உண்மையில் நீங்கள் ஓர் இராட்சஸனல்ல; மாறாக, இக்ஷ்வாகு மகாராஜனின் வம்சத்தில் வந்தவர். உண்மையில், நீங்கள் ஒரு சிறந்த வீரரும், மதயந்தியின் கணவருமாவீர். எனவே, எனக்கு இன்னும் குழந்தையைத் தராத தன் கணவரைத் தயவு செய்து என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.
பதம் 9.9.28 : அரசே, வீரரே, இந்த மனித உடல் பிரபஞ்சத்தின் நன்மைக்குரியது. இவ்வுடலை நீங்கள் அகால மரணமடையச் செய்தால், மனித வாழ்வின் எல்லா நன்மைகளையும் நீர் கொன்றவராவீர்.
பதம் 9.9.29 : இவர் மிகவும் கற்றறிந்த தகுதியுடைய ஒரு பிராமணராவார். தவ வாழ்வை மேற்கொண்டுள்ள இவர், அனைத்து ஜீவராசிகளின் இதய மத்தியிலும் உறையும் பரமபுருஷரான பரமாத்மாவை வழிபட பெரும் ஆவல் கொண்டுள்ளார்.
பதம் 9.9.30 : பிரபுவே, தாங்கள் சமயக் கோட்பாடுகளை நன்கு அறிந்தவர். தந்தையால், ஒரு மகன் கொல்லத் தகாதவனாவான். அதைப்போலவே, இந்த பிராமணரும் அரசரால் பாதுகாக்கப்பட வேண்டியவராவர். உங்களைப் போன்ற ஒரு ராஜரிஷியால் அவர் எப்படி கொல்லத் தகுந்தவராவார்?
பதம் 9.9.31 : தாங்கள் பிரசித்திபெற்றவரும், கற்றோருக்கிடையில் வணங்கப்படுபவருமாவீர். பாவமறியாத ஒரு சாதுவும், வேத வல்லுனருமான இந்த பிராமணரைக் கொல்ல எப்படித் துணிந்தீர்? இவரைக் கொல்வது, கர்ப்பத்திலுள்ள ஒரு கருவைக் கொல்வது போலாகும், அல்லது ஒரு பசுவைக் கொல்வது போலாகும்.
பதம் 9.9.32 : என்னால் என் கணவரின்றி ஒரு கணமும் உயிர் வாழ முடியாது. அவரின்றி நான் ஒரு சவத்திற்கு ஒப்பாவேன். எனவே இவரை நீங்கள் தின்ன விரும்பினால், முதலில் என்னைத் தின்றுவிடுவது நல்லது.
பதம் 9.9.33 : வசிஷ்டரின் சாபத்தால் தண்டிக்கப்பட்ட சௌதாஸ மகாராஜன், ஒரு புலி அதன் இரையைப் புசிப்பதுபோல் அந்த, பிராமணரை விழுங்கினார். பிராமணரின் மனைவி மிகவும் பரிதாபகரமான வகையில் பேசிய போதிலும், சௌதாஸன் அவளது துயரத்திற்குச் சிறிதும் அசையவில்லை.
பதம் 9.9.34 : பதிவிரதையான அந்த பிராமண பெண்மணி, குழந்தைப் பேறளிக்கும் தறுவாயிலிருந்த தன் கணவர் அந்த இராட்சஸனால் விழுங்கப்பட்டதைக் கண்டு, துயரமும், வருத்தமும் மேலிட, கோபத்துடன் அரசரைச் சபித்தாள்.
பதம் 9.9.35 : பாவியான முட்டாளே, ஒரு குழந்தைக்குரிய வித்தைப் பெறும் ஆசையில் நான் காம வசப்பட்டிருந்த போது, நீ என் கணவரைத் தின்றுவிட்டாய். எனவே உன் மனைவிக்கு ஒரு குழந்தையைக் கொடுக்க முயலும்போது நீ மரணமடைவாய். அதாவது, சிற்றின்ப இச்சையுடன் உன் மனைவுடன் கூடும்போது நீ மரணமடைவாய்.
பதம் 9.9.36 : இவ்வாறாக பிராமணரின் மனைவி, மித்திரஸஹன் என்ற சௌதாஸ மகாராஜனைச் சபித்தாள். பிறகு தன் கணவருடன் செல்ல விரும்பிய அவள், தீமூட்டி, தன் கணவரின் எலும்புகளை அதில் போட்டு, தானும் தீக்குளித்து, தன் கணவர் சென்ற இடத்திற்குச் சென்றாள்.
பதம் 9.9.37 : பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின், வசிஷ்டரின் சாபம் நீங்கப் பெற்ற சௌதாஸ மகாராஜன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பினார். ஆனால் பிராமணப் பெண்ணின் சாபத்தைப் பற்றி ராணியால் நினைவுபடுத்தப்பட்டு அவர் உடலுறவு கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டார்.
பதம் 9.9.38 : இவ்வாறு அறிவிக்கப்பட்ட பின், எதிர்கால உடலுறவு சுகத்தைக் கைவிட்ட அரசர், விதிவசத்தால் மகனில்லாமலேயே இருந்தார். பிறகு, அரசரின் அனுமதியுடன், மாமுனிவரான வசிஷ்டர், மதயந்தியின் மூலமாக ஒரு குழந்தையைப் பெற்றார்.
பதம் 9.9.39 : மதயந்தி ஏழு ஆண்டுகளாக குழந்தையை கர்பத்தில் சுமந்த போதிலும் அவளுக்குப் பிரசவம் ஆகவில்லை. எனவே, வசிஷ்டர் அவளது கர்பப்பையை ஒரு கல்லால் அடித்தார். இதனால் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக குழந்தை அஸ்மகன் (“கல்லிலிருந்து பிறந்தவன்”) என்று அழைக்கப்பட்டான்.
பதம் 9.9.40 : அஸ்மகனிலிருந்து பாலிகன் பிறந்தார். பாலிகன் பெண்களால் சூழப்பட்டிருந்ததால், பரசுராமரின் கோபத்திலிருந்து தப்பினார். இதனால் அவர் நாரீகவசன் (“பெண்களால் பாதுகாக்கப்படுபவர்”) என்று அழைக்கப்பட்டார். பரசுராமர் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அழித்துவிட்ட போது, பிறகு தோன்றிய க்ஷத்திரியர்களுக்கு பாலிகன் காரணகர்த்தா ஆனார். எனவே அவர் மூலகன், (“க்ஷத்திரிய வம்சத்தின் மூலம்”) எனப்பட்டார்.
பதம் 9.9.41 : பாலிகனிலிருந்து தசரதன் என்ற மகன் வந்தார். தசரதனிலிருந்து ஐடவிடி எனறு ஒரு மகன் வந்தார். ஐடவிடியிலிருந்து விஸ்வஸஹ மகாராஜன் வந்தார். விஸ்வஸஹ மகாராஜனின் மகன் புகழ் பெற்ற கட்வாங்க மகாராஜனாவார்.
பதம் 9.9.42 : கட்வாங்க மகாராஜன் போரில் ஜயிக்க முடியாதவரானார். அவர் தேவர்களின் வேண்டுதலுக்கிணங்கி, தேவர்களின் பக்கம் நின்று அசுரர்களை வென்றார். இதனால் திருப்தியடைந்த தேவர்கள் அவருக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினர். எனவே அரசரும் தமது ஆயுட் காலத்தைப் பற்றி வினவியதற்கு, இன்னும் ஒரு நொடிப் பொழுது மட்டுமே எஞ்சியிருக்கிறது என்று தேவர்கள் பதிலளித்தனர். இவ்வாறாக உடனே ராஜமாளிகையை விட்டு வெளியேறி, தமது சொந்த வசிப்பிடத்திற்கு சென்ற அரசர், அங்கு தம் மனதை முழுமையாக பகவானின் தாமரைப் பாதங்களில் ஈடுபடுத்தினார்.
பதம் 9.9.43 : கட்வாங்க மகாராஜன் எண்ணினார்: எங்கள் குல தெய்வங்களான பிராமண பண்பாட்டையும், பிராமணர்களையும்விட, எனக்கு என் உயிர்கூட அவ்வளவு பிரியமானதல்ல. எனவே என் இராஜ்யம், பூமி, மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? பிராமணர்களைவிட எனக்கு அதிக பிரியமுள்ளது வேறொன்றுமில்லை.
பதம் 9.9.44 : சிறுவயதில்கூட நான் அற்பப் பொருட்களாலோ அல்லது அதர்மக் கொள்கைகளாலோ ஒரு போதும் கவரப்பட்டதில்லை. பரமபுருஷரை விட அதிக பெருமானமுள்ள எதையும் நான் கண்டதுமில்லை.
பதம் 9.9.45 : மூவுலக நாயகர்களாகிய தேவர்கள், நான் விரும்பிய வரத்தைக் கொடுக்க விரும்பினர். ஆனால் இந்த ஜட உலகிலுள்ள அனைத்தையும் படைத்தவரான பரமபுருஷரிடம் நான் அக்கறை கொண்டிருப்பதால், அவர்களது வரத்துக்கு நான் ஆசைப்படவில்லை. எல்லா பெளதிக வரங்களையும் விட, நான் பரமபுருஷரிடம் அதிக விருப்பம் கொண்டுள்ளேன்.
பதம் 9.9.46 : உயர் கிரகங்களில் வாழும் உயர்ந்த நிலையை தேவர்கள் பெற்றிருந்தாலும், அவர்களது புலன்களும், மனங்களும், புத்தியும் பௌதிக சூழ்நிலைகளால் சிதறிக் கிடக்கின்றன. எனவே, உயர்ந்த நிலையிலுள்ள அவர்கள் கூட இதயத்தில் நித்திய வாசம் புரிபவரான பரமபுருஷரை அறிந்து கொள்ளவில்லை. எனவே குறைந்த அனுகூலங்களைப் பெற்றுள்ள மனிதர்களைப் போன்றோரைப்பற்றி கேட்கவும் வேண்டுமா?
பதம் 9.9.47 : எனவே பகாவனின் சக்தியால் உண்டாக்கப்பட்ட பொருட்களின் மீது எனக்குள்ள பற்றை இப்பொழுது நான் துறந்து விட வேண்டும். பகவத் சிந்தனையில் ஈடுபட்டு, அவரையே நான் சரணடைய வேண்டும். இந்த பெளதிக சிருஷ்டி பகவானின் பகிரங்க சக்தியால் படைக்கப்பட்டது என்பதால், இது காட்டில் அல்லது குன்றின் மீது காணப்படும் கற்பனையான ஒரு நகரத்தைப் போன்றதாகும். ஒவ்வொரு பந்தப்பட்ட ஆத்மாவிற்கும் பெளதிகப் பொருட்களில் இயற்கையான கவர்ச்சியும், பற்றும் உள்ளன. ஆனால் இப்பற்றைத் துறந்து, ஒருவர் பரமபுருஷரிடம் சரணைடய வேண்டும்.
பதம் 9.9.48 : இவ்வாறாக பகவானுக்குத் தொண்டு செய்வதெனும் முன்னேற்றமான புத்தியைக் கொண்டு, கட்வாங்க மகாராஜன், அறியாமை நிறைந்த உடலுடனான பொய்யான அடையாளத்தைக் கைவிட்டார். நித்தியத் தொண்டரெனும் தமது சுயநிலையில் பகவானுக்குத் தொண்டு செய்வதில் தம்மை அவர் ஈடுபடுத்திக் கொண்டார்.
பதம் 9.9.49 : பரமபுருஷ பகவானாகிய வாசுதேவன், கிருஷ்ணர், அருவமானவரோ, சூன்யமானவரோ அல்ல என்றாலும், அவரை நினைக்கும் குறைந்த புத்தியுடையவர்களுக்கு அவரை அறிவது மிகவும் கடினம். எனவே பகவான் தூய பக்தர்களால் அறிந்து கொள்ளப்பட்டு துதிக்கப்படுகிறார்.