அத்தியாயம் – 8
சகர புத்திரர்கள் பகவான் கபிலரைச்
சந்தித்தல்
பதம் 9.8.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ரோஹிதனின் மகன் ஹரிதன். ஹரிதனின் மகன் சம்பன். இவர் சம்பாபுரி என்ற நகரத்தை நிர்மாணித்தார். சம்பனின் மகன் சுதேவன். அவரது மகன் விஜயன்.
பதம் 9.8.2 : விஜயனின் மகன் பருகன். பருகனின் மகன் விருகன். விருகனின் மகன் பாஹுகன். பாஹுக மகாராஜன் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு, அரசிழந்ததால், வானப்பிரஸ்தம் ஏற்று மனைவிகளுடன் வனம் புகுந்தார்.
பதம் 9.8.3 : மூப்படைந்த பாஹுகன் மரணமடைந்ததும், அவருடைய மனைவிகளுள் ஒருத்தி உடன்கட்டை ஏற விரும்பினாள். அப்போது அவன் கர்பவதியாய் இருப்பதை அறிந்த ஒளரவ முனி அவளைத் தடுத்துவிட்டார்.
பதம் 9.8.4 : அவள் கர்ப்பவதியாக இருப்பதையறிந்த அவளது சக்களத்திகள், உணவுடன் கலந்து அவளுக்கு விஷத்தைக் கொடுத்தனர். ஆனால் அது செயற்படாமற் போயிற்று. இதற்குப் பதிலாக, மகன் விஷத்துடன் பிறந்தான். சாகரன் பிறகு சக்கரவர்த்தியானார். கங்காசாகரம் என்ற இடம் மகன்களால் ஏற்படுத்தப்பட்டதாகும்.
பதங்கள் 9.8.5 – 9.8.6 : சகர மகாராஜன், தன் ஆன்மீக குருவான ஒளரவரின் உத்தரவுப்படி, யவனர்களையும், சகர்களையும், ஹைஹயர்களையும் மற்றும் பர்பரர்களையும் போன்ற நாகரீகமற்ற மக்களைக் கொல்லாமல்விட்டார். அதற்குப் பதிலாக அவர்களில் சிலரை அவர் அலங்கோலமாக உடையணியச் செய்தார். அவர்களில் சிலரின் தலையை மழித்து மீசைகளை மட்டும் வைத்திருக்க அனுமதித்தார். சிலரைத் தலைவிரிகோலமாகவும், வேறு சிலரைப் பாதி தலையை மழித்தும், மற்றும் சிலரை உள்ளாடைகள் இல்லாமலும், இன்னும் சிலரைப் புற ஆடைகள் இல்லாமலும் இருக்கச் செய்தார். இவ்வாறாக, வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இவர்களைச் சகர மகாராஜன் கொல்லவில்லை என்றாலும், இவர்களை வெவ்வேறாக உடையணியச் செய்தார்.
பதம் 9.8.7 : மகா முனிவரான ஔர்வாவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சாகர மஹாராஜா அஸ்வமேத யாகங்களைச் செய்து, பரமாத்மாவைத் திருப்திப்படுத்தினார். ஆனால் சொர்க்கத்தின் அரசனான இந்திரன் யாகத்தில் செலுத்த வேண்டிய குதிரையைத் திருடினான்.
பதம் 9.8.8 : (சகர மகாராஜனுக்கு சுமதி, கேசினி என இரு மனைவிகள்). சுமதியின் மகன்கள் தங்களுடைய வீரியத்திலும், செல்வாக்கிலும் மிகவும் கர்வம் கொண்டிருந்தனர். தங்களது தந்தையின் உத்தரவுப்படி, காணாமற் போன குதிரைத் தேடினர். இப்படித் தேடும்பொழுது, பூமியை அவர்கள் மிகவும் பரவலாகத் தோண்டினர்.
பதங்கள் 9.8.9 – 9.8.10 : அதன்பிறகு வடகிழக்குத் திசையில், கபில முனிவரின் ஆசிரமத்துக்கருகில் அவர்கள் குதிரையைக் கண்டனர். “இவன்தான் குதிரையைத் திருடியவன். கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். மகா பாவியான இவனைக் கொல்லுங்கள், கொல்லுங்கள்” என்று கூச்சலிட்டுக் கொண்டு. சகரனின் அறுபதாயிரம் மகன்களும் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு முனிவரை நோக்கி ஓடினார்கள். அப்போது அம்முனிவர் கண்களைத் திறந்தார்.
பதம் 9.8.11 : சுவர்க்க ராஜனான இந்திரனின் மாயையால் புத்தியிழந்த சகர புத்திரர்கள், ஒரு மகாபுருஷரை அவமதித்தனர். அதன் விளைவாக, அவர்களது சொந்த உடல்களிலிருந்து கிளம்பிய தீயினால் உடனே அவர்கள் எரிந்து சாம்பலாகினர்.
பதம் 9.8.12 : கபில முனிவரின் கண்களிலிருந்து கிளம்பிய தீயினால் சகர மகாராஜனின் புத்திரர்கள் எரிந்து சாம்பலாயினர் என்று சிலசமயங்களில் விவாதிக்கப்படுகறிது. ஆனால் இக்கூற்று சிறந்த பண்டிதர்களால் ஆதரிக்கப்படவில்லை. ஏனெனில், பூமியிலிருந்து கிளம்பிய பூழுதியால் ஆகாயத்தை களங்கப்படுத்த முடியாது என்பதைப் போலவே, கபில முனிவரின் உடல் முற்றிலும் சத்வ குணத்தில் இருப்பதால், அது கோபத்தின் வடிவில் தமோ குணத்தை வெளிப்படுத்துவது சாத்தியமல்ல.
பதம் 9.8.13 : கபில முனிவர் இவ்வுலகில் சாங்கிய தத்துவத்தை எடுத்துரைத்தார். இது அறியாமையெனும் கடலைக் கடப்பதற்குரிய மிகவும் சக்திவாய்ந்த ஒரு படகாகும். உண்மையில், பௌதிக உலகெனும் கடலைக் கடக்க விரும்புவோர் இந்த தத்துவத்தை புகலிடமாகக் கொள்ளலாம். சிறந்த ஞானியும், உன்னதமான படித்தரத்தில் நிலைபெற்றவருமான இத்தகைய ஒரு மகா புருஷரில், நண்பன், பகைவன் என்ற வேறுபாடு எப்படி இருக்க முடியும்?
பதம் 9.8.14 : சகர மகாராஜனின் மகன்களுள் அஸமஞ்சஸன் என்பவர். அரசரின் இரண்டாவது மனைவியான கேசினிக்குப் பிறந்தவராவார். அஸமஞ்சஸரின் மகன் அம்சுமான் எனப்பட்டார். அவர் தன் பாட்டனாரான சகர மகாராஜனுக்கு நன்மை செய்வதில் எப்பொழுதும் ஈடுபட்டிருந்தார்.
பதங்கள் 9.8.15 – 9.8.16 : தன் முற்பிறவியில் அஸமஞ்சஸன் சிறந்ததொரு அஷ்டாங்க யோகியாக விளங்கினார். ஆனால் தீய உறவின் காரணத்தால் உயர்ந்த நிலையிலிருந்து விழுந்தார். இப்பிறவியில் ஓர் அரச குடும்பத்தில் பிறந்த அவர் ஜாதி-ஸ்மரராக இருந்தார்; அதாவது, தன் முற்பிறப்பை நினைவுகூறும் விசேஷ நன்மையைப் பெற்றிருந்தார். ஆயினும் தன்னை ஒரு துஷ்டனாக அவர் காட்டிக் கொள்ள விரும்பினார். எனவே உறவினர்களுக்கு பிரியமற்றவையாகவும், பிறர் கண்களுக்கு வெறுக்கத்தக்கனவாகவும் உள்ள செயல்களை அவர் செய்துவந்தார். சரயூ நதியில் விளையாடும் சிறுவர்களை நீரின் ஆழமான பகுதிகளில் விட்டெறிந்து அவர்களுக்குத் தொல்லைகளைக் கொடுத்து வந்தார்.
பதம் 9.8.17 : அஸமஞ்சஸன் இத்தகைய வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டதால், அவர் மீதிருந்த பாசத்தைத் துறந்த அவரது தந்தை அவரை நாடு கடத்தினார். பிறகு அஸமஞ்சஸன் தன் யோக சக்தியால் சிறுவர்களைப் பிழைப்பித்து அவர்களை அரசரிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் காட்டினார். அதன்பிறகு, அஸமஞ்சஸன் அயோத்தியை விட்டு வெளியேறினார்.
பதம் 9.8.18 : பரீட்சித்து மகாராஜனே, தங்கள் குழந்தைகள் உயிர் பிழைத்ததைக் கண்ட அயோத்தியா வாசிகள் அனைவரும் வியப்படைந்தனர். சகர மகாராஜன் தன் மகனின் பிரிவை எண்ணி மிகவும் வருந்தினார்
பதம் 9.8.19 : அதன்பிறகு, சகர மகாராஜனின் பேரனான அம்சுமான், குதிரையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி அரசரால் உத்தரவிடப்பட்டார். அவரது தந்தையின் சகோதரர்கள் சென்ற அதே வழியைப் பின்பற்றிய அம்சுமான், படிப்படியாக சாம்பல் குவியலை அடைந்து, அருகில் குதிரை நிற்பதைக் கண்டார்.
பதம் 9.8.20 : விஷ்ணுவின் அவதாரமாக கபில மாமுனிவர் குதிரைக்கருகில் அமர்ந்திருப்பதைக் கண்ட மகானான அம்சுமான், கைகூப்பி நமஸ்கரித்து, மிகவும் கவனத்துடன், மரியாதையாக அவரைத் துதித்தார்.
பதம் 9.8.21 : அம்சுமான் கூறினார்: எம்பெருமானே, இன்றுவரை, பிரம்ம தேவரால் கூட உங்களுடைய உன்னத நிலையைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தியானத்தினாலோ, மனக் கற்பனையாலோ இதை அவரால் புரிந்துகொள்ள முடியாது. எனவே, தேவர்களாகவும், மிருகங்களாகவும், மனிதர்களாகவும், பறவைகளாகவும் பிரம்மாவால் படைக்கப்பட்டுள்ள எங்களைப் போன்ற மற்றவர்களைப் பற்றி என்னென்று சொல்வது? நாங்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறோம். எனவே, உன்னத புருஷராகிய தங்களை எங்களால் எப்படி அறிய முடியும்?
பதம் 9.8.22 : எம்பெருமானே, எல்லோருடைய இதயத்திலும் தாங்கள் முழுமையாக வீற்றிருக்கிறீர்கள். ஆனால் பெளதிக உடல்களால் மூடப்பட்டுள்ள ஜீவராசிகளால் உங்களைக் காண முடியாது. ஏனெனில், அவர்கள் ஜட இயற்கையின் முக்குணங்களால் நடத்தப்படும் புறச்சக்தியால் வசியப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது புத்தி சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருப்பதால், மூன்று ஜட இயற்கைக் குணங்களின் செயல்களையும், அவற்றின் விளைவுகளையும் மட்டுமே அவர்களால் காண முடியும். தமோ குணத்தினுடைய செயல், விளைவுகளின் காரணத்தால், ஜீவராசிகள் விழிப்புற்ற நிலையிலோ அல்லது உறக்க நிலையிலோ இருந்தாலும், அவர்களால் ஐட இயற்கையின் செயல்களை மட்டுமே காண முடிகிறது; தங்களை அவர்களால் காண முடிவதில்லை.
பதம் 9.8.23 : எம்பெருமானே, ஜட இயற்கையின் முக்குணங்களின் வசியத்திலிருந்து விடுபட்டுள்ள நான்கு குமாரர்களைப் (சனக, சனாதன, சனந்தன மற்றும் சனத் குமாரர்) போன்ற முனிவர்களால் ஞான சொரூபியான தங்களை நினைக்க முடிகிறது. ஆனால் என்னைப் போன்ற ஓர் அறிவிலியால் தங்களை எப்படி நினைக்க முடியும்?
பதம் 9.8.24 : சாந்த சொரூபியான பகவானே, ஜட இயற்கையும், பலனை எதிர்பார்க்கும் கருமங்களும், அவற்றின் பயனாக விளையும் பௌதிகமான பெயர்களும், உருவங்களும் தங்களாலேயே படைக்கப்படுகின்றன. தாங்கள் அவற்றினால் பாதிக்கப்படுவதில்லை. எனவே, தங்களுடைய உன்னத நாமம் பெளதிக பெயர்களிலிருந்து வேறானதும், தங்களுடைய திவ்யரூபம் பெளதிக உருவங்களிலிருந்து வேறுபட்டதுமாகும். பகவத்கீதையைப் போன்ற உபதேசங்களை அருளுவதற்காகவே தாங்கள் பௌதிக உடலை ஒத்திருக்கும் ஒருடலை ஏற்றிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் தாங்கள்தான் ஆதியான பரமபுருஷராவீர். எனவே தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 9.8.25 : எம்பெருமானே, காமம், பேராசை, பொறாமை மற்றும் அறியாமை ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் மனக்குழப்பம் அடைந்திருப்பவர்கள். இவ்வுலகில் உங்களுடைய மாயையால் உண்டாக்கப்பட்டுள்ள பொய்யான வீடு மற்றும் குடும்பத்தில் மட்டும் விருப்பம் கொண்டுள்ளனர். வீடு, மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியவற்றில் பற்றுக் கொண்டுள்ள அவர்கள் நிரந்தரமாக இந்த ஜட உலகிலேயே சுற்றித் திரிகின்றனர்.
பதம் 9.8.26 : அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாக இருப்பவரே, பரம புருஷரே, தங்களை தரிசித்ததால், கடக்க முடியாத மாயைக்கும், பெளதிக பந்தத்திற்கும் மூல காரணமான சிற்றின்ப ஆசைகளிலிருந்து இன்று நான் முற்றிலும் விடுபட்டவனானேன்.
பதம் 9.8.27 : பரீட்சித்து மகாராஜனே, அம்சுமான் பகவானை இப்படிப் புகழ்ந்ததும், விஷ்ணுவின் சக்திவாய்ந்த அவதாரமாகிய கபில மாமுனிவர், அவரிடம் மிகவும் கருணை கொண்டு, அவருக்கு ஞான மார்க்கத்தை விளக்கினார்.
பதம் 9.8.28 : பரமபுருஷர் கூறினார்: என் அன்பிற்குரிய அம்சுமானே, உன் பாட்டனாரால் தேடப்படும் யாகக்குதிரை இதோ இருக்கிறது. தயவு செய்து அதை எடுத்துக் கொள். எரிந்து சாம்பலாகிப் போன உன் முன்னோர்களைப் பொறுத்தவரை, கங்கை நீரால் மட்டுமே அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும். வேறெந்த வழியாலும் அல்ல.
பதம் 9.8.29 : அதன்பிறகு, அம்சுமான் கபில முனிவரை வலம் வந்து, சிரம் தாழ்த்தி, மரியாதையுடன் அவரை வணங்கினார். இவ்வாறு பூரணமாக அவரை திருப்திப்படுத்திய அம்சுமான், யாகக் குதிரையை ஓட்டிச் சென்றார். இக்குதிரையைக் கொண்டு, எஞ்சியுள்ள சடங்குகளையும் சகர மகாராஜன் நிறைவேற்றினார்.
பதம் 9.8.30 : இராஜ்யப் பொறுப்பை அம்சுமானிடம் ஒப்படைத்த பின், பெளதிக ஆசைகளிலிருந்தும், பெளதிக பந்தத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்ட சகர மகாராஜன், ஒளரவ முனிவரால் உபதேசிக்கப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றி, பரமகதி அடைந்தார்.