அத்தியாயம் – 7
மாந்தாதா மகாராஜனின் வம்சம்
பதம் 9.7.1
ஸ்ரீ-சுக உவாச
மாந்தாது: புத்ர-ப்ரவரோ யோ ‘ம்பரீஷ: ப்ரகீர்த்தித:
பிதாமஹேன ப்ரவ்ருதோ யெனவனாஸ்வஸ் து தத்-ஸுத:
ஹாரீதஸ் தஸ்ய புத்ரோ ‘பூன் மாந்தாத்ரு-ப்ரவரா இமே
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; மாந்தாது:—மாந்தாதாவின்; புத்ர-ப்ரவர:—பிரசித்திபெற்ற மகன்; ய:—யாரொருவர்; அம்பரீஷ:—அம்பரீஷர் என்ற; ப்ரகீர்த்தித:—புகழ் பெற்றவர்; பிதாமஹேன—அவரது பாட்டனாரான யுவனாஸ்வரால்; ப்ரவ்ருத:—ஏற்கப்பட்டார்; யௌவனாஸ்வ:—யௌவனாஸ்வன் என்ற; து—மேலும்; தத்-ஸுத:—அம்பரீஷரின் மகன்; ஹாரித:—ஹாரிதன் என்ற; தஸ்ய—யௌவனாஸ்வனின்; புத்ர:—மகன்; அபூத்—ஆனார்; மாந்தாத்ரு—மாந்தாதாவின் வம்சத்தில்; ப்ரவரா:—மிகவும் பிரபலமானவர்கள்; இமே—அவர்களனைவரும்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மாந்தாதாவின் மகன்களுள் மிகவும் பிரசித்தி பெற்றவர் அம்பரீஷர் என்று புகழப்படுபவராவார். அம்பரீஷரை அவரது பாட்டனாரான யுவனாஸ்வர் தன் மகனாக தத்து எடுத்துக் கொண்டார். அம்பரீஷரின் மகன் யௌவனாஸ்வன். யௌவனாஸ்வனின் மகன் ஹாரீதன். மாந்தாதாவின் வம்சத்தில் அம்பரீஷர், ஹாரீதன் மற்றும் யௌவனாஸ்வன் ஆகியோர் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கினர்.
பதம் 9.7.2
நர்மதா ப்ராத்ருபிர் தத்தா புருகுத்ஸாய யோரகை:
தயா ரஸாதளம் நீதோ புஜகேந்ர-ப்ரயுக்தயா
நர்மதா—நர்மதை என்ற; ப்ராத்ருபி:—அவளது சகோதரர்களால்; தத்தா—தத்தம் செய்து கொடுக்கப்பட்டார்; புருகுத்ஸாய—புருகுத்ஸனுக்கு; யா—அவள்; உரகை:—சர்ப்ப கணங்களால் (பாம்புகளால்); தயா—அவளால்; ரஸாதளம்—பிரபஞ்சத்தின் அடிப்பகுதிக்கு; நீத:—அழைத்துச் செல்லப்பட்டார்; புஜக-இந்ர-ப்ரயுக்தயா—சர்பராஜனான வாசுகியால் ஈடுபடுத்தப்பட்டு.
நர்மதையின் பாம்பு சகோதரர்கள் அவளை புருகுத்ஸனுக்குக் கொடுத்தனர். வாசுகியால் அனுப்பப்பட்ட அவள் புருகுத்ஸனை பிரபஞ்சத்தின் அடிப்பகுதிக்கு அழைத்துச் சென்றாள்.
பதம் 9.7.3
கந்தர்வான் அவதீத் தத்ர வத்யான் வை விஷ்ணு-சக்தி- த்ருக்
நாகால் லப்த-வர: ஸர்பாத் அபயம் ஸ்மரதாம் இதம்
கந்தர்வான்—கந்தர்வலோக வாசிகள்; அவதீத்—அவர் கொன்றார்; தத்ர—அங்கு (பிரபஞ்சத்தின் கீழ்ப்பகுதியில்); வத்யான்—கொல்லப்பட வேண்டிய; வை—உண்மையில்; விஷ்ணு-சக்தி-த்ருக்—பகவான் விஷ்ணுவால் சக்தியளிக்கப்பட்டு; நாகாத்—நாகர்களிடமிருந்து; லப்த-வர:—ஒரு வரம் பெற்று; ஸர்பாத்—பாம்புகளிடமிருந்து; அபயம்—அபயம்; ஸ்மரதாம்—நினைவுகூர்பவர்களின்; இதம்—இச்சம்பவத்தை.
பிரபஞ்சத்தின் கீழ்ப்பிரதேசமான ரஸாதளத்தில், பகவான் விஷ்ணுவால் சக்தியளிக்கப்பட்டிருந்த புருகுத்ஸனால், கொல்லத் தகுந்தவர்களான கந்தர்வர்கள் அனைவரையும் கொன்றுவிட முடிந்தது. பிரபஞ்சத்தின் கீழ்ப் பிரதேசத்திற்கு நர்மதன் அழைத்து வரப்பட்ட இவ்வரலாற்றை நினைவுகூறும் எவருக்கும் பாம்புகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு நிச்சயம் என்ற வரத்தை நர்மதன் பாம்புகளிடமிருந்து பெற்றார்.
பதம் 9.7.4
த்ரஸத்தஸ்யு: பௌருகுத்ஸோ யோ ‘னரண்யஸ்ய தேஹ-க்ருத்
ஹர்யஸ்வஸ் தத்-ஸுதஸ் தஸ்மாத் ப்ராருணோ ‘த த்ரிபந்தன:
த்ரஸத்தஸ்யு:—திரஸத்தஸ்யு என்ற; பெளருகுத்ஸ:—புருகுத்ஸரின் மகன்; ய:—யார்; அனரண்யஸ்ய—அனரண்யனின்; தேஹ-க்ருத்—தந்தை; ஹர்யஸ்வ:—ஹர்யஸ்வன் என்ற; தத்-ஸுத:—அனரண்யரின் மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து (ஹர்யஸ்வன்); ப்ராருண:—பிராருணன் என்ற; அத—பிறகு, பிராருணனிலிருந்து; த்ரிபந்தன:—அவரது மகன், திரிபந்தனன்.
புருகுத்ஸரின் மகன் திரஸத்தஸ்யு. அவர் அனரண்யனின் தந்தையாவார். அனரண்யனின் மகன் ஹர்யஸ்வன். அவரது தந்தை பிராருணன். பிராருணன் திரிபந்தனின் தந்தையாவார்.
பதங்கள் 9.7.5 – 9.7.6
தஸ்ய ஸத்யவ்தரத: புத்ரஸ் த்ரிசங்குர் இதி விஸ்ருத:
ப்ராப்தஸ் சாண்டாளதாம் சாபாத் குரோ: கெளசிக-தேஜஸா
ஸசரீரோ கத: ஸ்வர்கம் அத்யாபி திவி த்ருஸ்யதே
பாதிதோ ‘வாக்-சிரா தேவைஸ் தேனைவ ஸ்தம்பிதோ பலாத்
தஸ்ய—திரிபந்தனனின்; ஸத்யவ்ரத:—சத்தியவிரதன் என்ற; புத்ர:—மகன்; த்ரிசங்கு:—திரிசங்கு என்று; இதி—இவ்வாறாக; விஸ்ருத:—புகழ் பெற்ற; ப்ராப்த—அடைந்தார்; சாண்டாளதாம்—ஒரு சூத்திரனை விட இழிவான சண்டாளனின் நிலையை; சாபாத்—சாபத்தால்; குரோ:—அவரது தந்தையின்; கெளசிக-தேஜஸா—கௌசிகரின் (விஸ்வாமித்திரரின்) சக்தியால்; ஸ-சரீர:—இவ்வுடலில் இருக்கும் போதே; கத:—சென்றார்; ஸ்வர்கம்—சுவர்க்க லோகத்திற்கு; அத்ய அபி—இன்றுவரை; திவி—ஆகாயத்தில்; த்ருஸ்யதே—காண முடியும்; பாதித—விழுந்துவிட்டதால்; அவாக்-சிரா:—தலைகீழாக; தேவை:—தேவர்களின் வீரியத்தால்; தேன—விஸ்வாமித்திரரால்; ஏவ—உண்மையில்; ஸ்தம்பித:—நிலையாக; பலாத்—உயர்சக்தியால்.
திரிபந்தனின் மகன் சத்தியவிரதன். இவர் திரிசங்கு என்று பிரசித்தி பெற்றார்; ஒரு பிராமண புத்திரியின் திருமணத்தின்போது அவளை திரிசங்கு கடத்திச் சென்றார். இதனால் இவரது தந்தை, ஒரு சூத்திரனைவிட இழிவான சண்டாளனாகும்படி இவரைச் சபித்து விட்டார். அதன்பிறகு, விஸ்வாமித்திரரின் செல்வாக்கினால், அவர் தன் பௌதிக உடலுடனேயே சுவர்க்க லோகங்களுக்குச் சென்றார். ஆனாலும் தேவர்களின் செல்வாக்கினால் அவர் தலைகீழாக விழுந்தார். ஆயினும், விஸ்வாமித்திரரின் சக்தியால் அவர் நடு வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்; இன்று கூட ஆகாயத்தில் தலைகீழாக அவர் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
பதம் 9.7.7
த்ரைசங்கவோ ஹரிஸ்சந்ரோ விஸ்வாமித்ர-வஸிஷ்டயோ:
யன்-நிமித்தம் அபூத் யுத்தம் பக்ஷிணோர் பஹு-வார்ஷிகம்
த்ரைசங்கவ:—திரிசங்குவின் மகன்; ஹரிஸ்சந்ர:—ஹரிச்சந்திரன் என்ற; விஸ்வாமித்ர-வஸிஷ்டயோ:—விஸ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையில்; யத்-நிமித்தம்—ஹரிச்சந்திரனின் பொருட்டு; அபூத்—நிகழ்ந்தது; யுத்தம்—பெரும்போர்; பக்ஷிணோ:—அவ்விருவருமே பறவைகளாக உருமாற்றப்பட்டனர்; பஹு-வார்ஷிகம்—பல வருஷங்களாக.
திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திரன். அவர் பொருட்டு விஸ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் கலகம் உண்டாகி, இருவரும் பறவை உருக்கொண்டு பல வருஷங்கள் சண்டையிட்டனர்.
பதம் 9.7.8
ஸோ ‘நபத்யோ விஷண்ணாத்மா நாரஸ்யோபதேசத:
வருணம் சரணம் யாத: புத்ரோ மே ஜாயதாம் ப்ரபோ
ஸ:—அந்த ஹரிச்சந்திரன்; அனபத்ய:—மகனில்லாததால்; விஷண்ணாத்மா—எனவே மிகவும் வருத்தப்பட்டார்; நாரதஸ்ய—நாரதரின்; உபதேசத:—உபதேசத்தால்; வருணம்—வருணனிடம்; சரணம் யாத:—சரணமடைந்தார்; புத்ர:—ஒரு மகன்; மே—எனக்கு; ஜாயதாம்—பிறக்க வேண்டும்; ப்ரபோ—பிரபுவே.
ஹரிச்சந்திரன் தனக்கு மகனில்லாததால் மிகவும் வருத்தப்பட்டார். எனவே ஒரு சமயம், நாரதரின் அறிவுரைப்படி, அவர் வருணனிடம் சரணடைந்து, ‘எனக்கு மகனில்லை பிரபு, தாங்கள் எனக்கொரு மகனைக் கொடுப்பீர்களா?” வேண்டினார்.
பதம் 9.7.9
யதி வீரோ மஹாராஜ தேனவை த்வாம் யஜே இதி
ததேதி வருணேனாஸ்ய புத்ரோ ஜாதஸ் து ரோஹித:
யதி வீர:—ஒரு மகனிருந்தால்; மஹாராஜ—பரீட்சித்து மகாராஜனே; தேவ ஏவ—அந்த மகனையும்; த்வாம்—தங்களுக்கே; யஜே—யாகப்பசுவாகக் கொடுத்துவிடுவேன்; இதி—இவ்வாறாக; ததா—உங்கள் விருப்பம் போல்; இதி—இவ்வாறாக ஏற்றார்; வருணேன—வருணனால்; அஸ்ய—ஹரிசந்திர மகாராஜனுக்கு; புத்ர:—ஒரு மகன்; ஜாத:—பிறந்தான்; து—உண்மையில்; ரோஹித:—ரோஹிதன் என்ற.
பரீட்சித்து மகாராஜனே, ஹரிச்சந்திரன் பின்வருமாறு வருணனிடம் வேண்டினார், “பிரபுவே எனக்கொரு மகன் பிறந்தால், அவனாலேயே உங்களுக்கு யாகம் செய்து உங்களை திருப்திப்படுத்துவேன்”. ஹரிச்சந்திரனின் வேண்டுகோளைக் கேட்ட வருணனும், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தார். வருணனின் வரத்தால், ஹரிச்சந்திரனுக்கு ரோஹிதன் என்றொரு மகன் பிறந்தான்.
பதம் 9.7.10
ஜாத: ஸுதோ ஹி அனேனாங்க மாம் யஜஸ்வேதி ஸோ ‘ப்ரவீத்
யதா பசுர் நிர்தச: ஸ்யாத் அத மேத்யோ பவேத் இதி
ஜாத:—பிறந்ததும்; ஸுத:—ஒரு மகன்; ஹி—உண்மையில்; அனேன—இந்த மகனால்; அங்க—ஹரிச்சந்திரனே; மாம்—எனக்கு; யஜஸ்வ—பலிகொடும்; இதி—இவ்வாறு; ஸ:—அவர், வருணன்; அப்ரவீத்—கூறினார்; யதா—அப்பொழுது; பசு:—ஒரு மிருகம்; நிர்தச:—பத்து நாட்கள் கழிந்ததும்; ஸ்யாத்—ஆகவேண்டும்; அத—பிறகு; மேத்ய:—பலியிடத்தகுந்ததாக; பவேத்—ஆகிறது; இதி—இவ்வாறு (ஹரிச்சந்திரன் கூறினார்).
அதன்பிறகு, குழந்தை பிறந்ததும், ஹரிச்சந்திரனை அணுகிய வருணன், “இப்பொழுது உமக்கு ஒரு மகன் பிறந்துவிட்டான். இவனைக் கொண்டு எனக்கொரு யாகத்தை நீர் செய்யலாம்” என்று கூறினார். இதற்கு பதிலாக ஹரிச்சந்திரனும், “ஒரு மிருகம் பிறந்த பத்தாவது நாளில் அது பலியிடுவதற்குத் தகுதியுள்ளதாகிறது” என்று கூறினார்.
பதம் 9.7.11
நிர்தசே ச ஸ ஆகத்ய யஜஸ்வேதி ஆஹ ஸோ ‘ப்ரவீத் தந்தா:
பசோர் யஜ் ஜாயேரன் அத மேத்யோ பவேத் இதி
நிர்தசே—பத்து நாட்களுக்குப்பின்; ச—கூட; ஸ:—அவர், வருணன்; ஆகத்ய—அங்கு சென்று; யஜஸ்வ—இப்பொழுது பலியிடும்; இதி—இவ்வாறு; ஆஹ—கூறினார்; ஸ:—அவர், ஹரிச்சந்திரன்; அப்ரவீத்—பதிலளித்தார்; தந்தா:—பற்கள்; பசோ:—மிருகத்தின்; யத்—எப்பொழுது; ஜாயேரன்—முளைக்கிறதோ; அத—அப்பொழுது; மேத்ய:—பலியிடத் தகுதியுடையதாகிறது; பவேத்—ஆகும்; இதி—இவ்வாறு.
பத்து நாட்களுக்குப் பின் வருணன் மீண்டும் வந்து, “யாகத்தை இப்பொழுது நீர் நிறைவேற்றலாம்” என்று கூறினார். அதற்கு ஹரிச்சந்திரனும், “மிருகத்திற்குப் பற்கள் முளைக்கும்பொழுது அது பலியிடுவதற்குப் போதுமான தூய்மையை அடைகிறது” என்று பதிலளித்தார்.
பதம் 9.7.12
தந்தா ஜாதா யஜஸ்வேதி ஸ ப்ரத்யாஹாத ஸோ ‘ப்ரவீத்
யதா பதந்தி அஸ்ய தந்தா அத மேத்யோ பவேத் இதி
தந்தா:—பற்களும்; ஜாதா:—முளைத்துவிட்டன; யஜஸ்வ—இப்பொழுது பலியிடும்; இதி—இவ்வாறு; ஸ:—அவர், வருணன்; ப்ரத்யாஹ—கூறினார்; அத—அதன்பின்; ஸ:—அவர், ஹரிச்சந்திரன்; அப்ரவீத்—பதிலளித்தால்; யாதா—எப்பொழுது; பதந்தி—விழுகிறதோ; அஸ்ய—அவனது; தந்தா:—பற்கள்; அத—அப்பொழுது; மேத்ய:—பலியிடத் தகுதியுடையது; பவேத்—ஆகும்; இதி—இவ்வாறு.
பற்கள் முளைத்ததும் வருணன் வந்து, “பற்கள் முளைத்துவிட்டன. எனவே இப்பொழுது நீர் பலிகொடுக்கலாம்” என்று கூறினார். ஹரிச்சந்திரனும், “அதனுடைய எல்லாப் பற்களும் விழுந்துவிடும் பொழுது அது பலியிடத் தகுதியுடையதாகும்” என்று பதிலளித்தார்.
பதம் 9.7.13
பசோர் நிபதிதா தந்தா யஜஸ்வேதி ஆஹ ஸோ ‘ப்ரவீத்
யதா பசோ: புனர் தந்தா ஜாயந்தே ‘த பசு: சுசி:
பசோ:—மிருகத்தின்; நிபதிதா:—விழுந்துவிட்டன; தந்தா:—பற்கள்; யஜஸ்வ—இப்பொழுது பலியிடும்; இதி—இவ்வாறு; ஆஹ—கூறினார் (வருணன்); ஸ:—அவர், ஹரிச்சந்திரன்; அப்ரவீத்—பதிலளித்தார்; யதா—எப்பொழுது; பசோ:—மிருகத்தின்; புன:—மீண்டும்; தந்தா:—பற்கள்: ஜாயந்தே—முளைக்கிறதோ; அத—அப்பொழுது; பசு—மிருகம்; சுசி:—பலியிடத்தூய்மையுடையதாகிறது.
பற்கள் விழுந்ததும் வருணன் திரும்பிவந்து, “இப்பொழுது மிருகத்தின் பற்கள் விழுந்து விட்டதால் அதைப் பலியிடலாம்” என்று கூறினார். ஹரிச்சந்திரனும் அதற்கு, “மிருகத்திற்கு மீண்டும் பற்கள் முளைக்கும்பொழுது, அது பலியடுவதற்குப் போதுமான தூய்மையடையும்” என்று பதிலளித்தார்.
பதம் 9.7.14
புனர் ஜாதா யஜஸ்வேதி ஸ ப்ரத்யாஹாத ஸோ ‘ப்ரவீத்
ஸன்னாஹிகோ யதா ராஜன் ராஜன்யோ ‘த பசு: சுசி:
புன:—மீண்டும்; ஜாதா:—முளைத்துவிட்டன; யஜஸ்வ—இப்பொழுது நீர் பலியிடலாம்; இதி—இவ்வாறு; ஸ:—அவர், வருணன்; ப்ரத்யாஹ—பதிலளித்தார்; அத—அதன்பிறகு; ஸ:—அவர், ஹரிச்சந்திரன்; அப்ரவீத்—கூறினார்; ஸான்னாஹிக:—ஒரு கேடயத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்பொழுது; யதா—எப்பொழுது; ராஜன்—வருணராஜனே; ராஜன்ய:—க்ஷத்திரியன்; அத—அப்பொழுது; பசு:—யாகப்பசு; சுசி:—தூய்மையடைகிறது.
மீண்டும் பற்கள் முளைத்ததும், வருணன் வந்து, “யாகத்தை இப்பொழுது நீர் செய்யலாம்” என்று ஹரிச்சந்திரனிடம் கூறினார். ஆனால் ஹரிச்சந்திரனோ, “அரசே, யாகப்பசு ஒரு க்ஷத்திரியனாகி, எதிரியிடமிருந்து தன்னால் பாதுகாத்துக் கொள்ளும் தகுதியைப் பெறும் பொழுது அவன் தூய்மையடைவான்” என்று கூறினார்.
பதம் 9.7.15
இதி புத்ரானுராகேண ஸ்னேஹ-யந்த்ரித-சேதஸா
காலம் வஞ்சயதா தம் தம் உக்தோ தேவஸ் தம் ஐக்ஷத
இதி—இவ்வாறாக; புத்ர-அனுராகேண—மகனிடம் கொண்ட பாசத்தால்; ஸ்னேஹ-யந்த்ரித-சேதஸா—இத்தகைய பாசத்தால் அவரது மனது கட்டுப்படுத்தப்பட்டு; காலம்—காலம்; வஞ்சயதா—ஏமாற்றினார்; தம்—அவரை; தம்—அதை; உக்த:—கூறினார்; தேவ:—வருண தேவன்; தம்—அவருக்காக (ஹரிச்சந்திரனுக்காக); ஐக்ஷத—வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகக் காத்திருந்தார்.
ஹரிச்சந்திரன் உண்மையாகவே தன் மகனிடம் மிகவும் பற்றுக் கொண்டிருந்தார். இப்பாசத்தினால், வருண தேவனைக் காத்திருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இவ்வாறாக வருணனும் காலம் வரும், வரும் என்றெண்ணிக் காத்திருந்தார்.
பதம் 9.7.16
ரோஹிதஸ் தத் அபிக்ஞாய பிது: கர்ம சிகீரிஷிதம்
ப்ராண-ப்ரேப்ஸுர் தனுஷ்-பாணிர் அரண்யம் ப்ரத்யபத்யத
ரோஹித:—ஹரிச்சந்திரனின் மகன்; தத்—இவ்வுண்மையை; அபிக்ஞாய:—நன்கு அறிந்து கொண்டார்; பிது:—தன் தந்தையின்; கர்ம—செயலை; சிகீர்ஷிதம்—செய்யத் திட்டமிட்டிருந்த; ப்ராண-ப்ரேப்ஸு:—தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பி; தனு:-பாணி:—வில்லையும், அம்புகளையும் எடுத்துக்கொண்டு; அரண்யம்—காட்டிற்கு; ப்ரத்யபத்யத—சென்றார்.
தன் தந்தை தன்னை யாகப்பசுவாகப் பலி கொடுக்க முடிவு செய்திருந்ததை ரோஹிதனால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே மரணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் வில்லையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டு காட்டிற்குச் சென்றார்.
பதம் 9.7.17
பிதரம் வருண-க்ரஸ்தம் ஸ்ருத்வா ஜாத-மஹோதரம்
ரோஹிதோ க்ராமம் ஏயாய தம் இந்ர: ப்ரத்யஷேதத
பிதரம்—தன் தந்தையைப் பற்றி; வருண-க்ரஸ்தம்—வருணன் ஏவி நீர்க்கோப்பு (மகோதரம்) வியாதியால் தாக்கப்பட்டு; ஸ்ருத்வா—கேள்விப்பட்டதும்; ஜாத—வளர்ந்துவிட்டதை; மஹா-உதரம்—காற்றினால் உப்பிய வயிறு; ரோஹித:—அவரது மகன் ரோஹிதன்; க்ராமம்-ஏயாய—தலைநகருக்குத் திரும்ப விரும்பினார்; தம்—அவரை (ரோஹிதனை); இந்ர—இந்திரன்; ப்ரத்யஷேதத—அங்கு செல்வதிலிருந்து தடுத்துவிட்டார்.
வருணனால் ஏவப்பட்ட நீர்க்கோப்பு நோயினால் தந்தை பீடிக்கப்பட்டிருப்பதையும், அவரது வயிறு மிகவும் பெரிதாக உப்பிவிட்டதையும் கேள்விப்பட்ட ரோஹிதன் தலைநகருக்குத் திரும்ப எண்ணினார். ஆனால் இந்திரன் அவரைத் தடுத்துவிட்டார்.
பதம் 9.7.18
பூமே: பர்யடனம் புண்யம் தீர்த-க்ஷேத்ர-நிஷேவணை:
ரோஹிதாயாதிசச் சக்ர: ஸோ ‘பி அரண்யே ‘வஸத் ஸமம்
பூமே:—உலகின்; பர்யடனம்—பிராயணம் செய்து; புண்யம்—புண்ணிய ஸ்தலங்களுக்கு; தீர்த-க்ஷேத்ர—தீர்த்த யாத்திரை ஸ்தலங்களுக்கு; நிஷே-வணை—அத்தகைய இடங்களில் சேவை செய்வதால் அல்லது அத்தகைய இடங்களுக்குச் சென்று வருவதால்; ரோஹிதாய—ரோஹிதனுக்கு; ஆதிசத்—உத்தரவிட்டார்; சக்ர:—இந்திரன்; ஸ:—அவர், ரோஹிதன்; அபி—கூட; அரண்யே—காட்டில்; அவஸத்—வாழ்ந்தார்; ஸமாம்—ஒரு வருஷம்.
பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரையை மேற்கொள்வது புண்ணியச் செயலாகும் என்பதால், அத்தகைய இடங்களுக்குச் சென்று வரும்படி இந்திரன் ரோஹிதனுக்கு அறிவுரை கூறினார். ரோஹிதனும், இந்திரனின் உத்தரவுப்படி ஓராண்டு காலம் வன வாசத்தை மேற்கொண்டார்.
பதம் 9.7.19
ஏவம் த்விதீய த்ருதீயே சதுர்தே பஞ்சமே ததா
அப்யேத்யாப்யேத்ய ஸ்தவிரோ விப்ரோ பூத்வாஹ வ்ருத்ர-ஹா
ஏவம்—இவ்வாறாக; த்விதீயே—இரண்டாம் ஆண்டு; த்ருதீயே—மூன்றாம் ஆண்டு; சதுர்தே—நான்காம் ஆண்டு; பஞ்சமே—ஐந்தாம் ஆண்டு; ததா—அதேபோன்று; அப்யேத்ய—அவர்முன் வந்தும்; அப்யேத்ய—மீண்டும் அவர்முன் வந்து; ஸ்தவிர:—மிகவும் வயதானவராக; விப்ர:—ஒரு பிராமணராக; பூத்வா—அவ்வாறு மாறி; ஆஹ—கூறினார்; வ்ருத்ர-ஹா—இந்திரன்.
இவ்விதமாக இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டுகளின் முடிவில் தன் தலைநகருக்குத் திரும்ப விரும்பிய ரோஹிதனை, ஒரு வயதான பிராமணராக வந்த இந்திரதேவன், முந்திய ஆண்டுகளில் கூறிய அதே வார்த்தைகளைக் கூறி அவரைத் தடுத்து வந்தார்.
பதம் 9.7.20
ஷஷ்டம் ஸம்வத்ஸரம் தத்ர சரித்வா ரோஹித: புரீம்
உபவ்ரஜன் அஜீகர்தாத் அக்ரீணான் மத்யமம் ஸுதம்
சுனஹ்சேபம் பசும் பித்ரே ப்ரதாய ஸம்வந்தத
ஷஷ்டம்—ஆறாம்; ஸம்வத்ஸரம்—ஆண்டு; தத்ர—காட்டில்; சரித்வா—சுற்றித் திரிந்து; ரோஹித:—ஹரிச்சந்திரனின் மகன்; புரீம்—அவரது தலைநகரில்; உபவ்ரஜன்—அங்கு சென்றார்; அஜீகர்தாத்—அஜிகர்த்தரிடமிருந்து; அக்ரீணாத்—விலைக்கு (கிரயத்துக்கு) வாங்கினார்; மத்யமம்—இரண்டாவது; ஸுதம்—மகனை; சுனஹ்சேபம்—சுனசேபன் என்ற; பசும்—யாகப்பசுவாக உபயோகிப்பதற்கு; பித்ரே—அவரது தந்தையிடம்; ப்ரதாய—கொடுத்து; ஸமவந்தத—மரியாதையுடன் வணங்கினார்.
அதன்பிறகு, ஆறாம் ஆண்டும் காட்டில் சுற்றித்திரிந்த பின், தன் தந்தையின் தலைநகருக்குத் திரும்பிய ரோஹிதன், அஜீகர்த்தரின் இரண்டாவது மகனான சுனசேபனை விலைக்கு வாங்கினார். பிறகு சுனசேபனை யாகப்பசுவாக உபயோகித்துக் கொள்ளும்படி தன் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு, மரியாதையுடன் அவரை அவர் வணங்கினார்.
பதம் 9.7.21
தத: புருஷ-மேதேன ஹரிஸ்சந்ரோ மஹா-யசா:
முக்தோதரோ ‘யஜத் தேவான் வருணாதீன் மஹத்-கத:
தத:—அதன்பிறகு; புருஷ-மேதேன—யாகத்தில் ஒரு மனிதனைப் பலியிடுவதன் மூலமாக; ஹரிஸ்சந்ர:—ஹரிச்சந்திர மகாராஜன்; மஹா-யசா:—மிகவும் புகழ்பெற்ற; முக்த-உதர:—நீர்க்கோப்பு நோயிலிருந்து விடுபட்டார்; அஜயத்—பலி கொடுத்தார்; தேவான்—தேவர்களுக்கு; வருண-ஆதீன்—வருணன் முதலான மற்ற; மஹத்-கத:—மற்றவர்களைப் போல் சரித்திரப் புகழ் பெற்றவர்.
அதன்பிறகு, சரித்திரப்புகழ் பெற்றவர்களுள் ஒருவரான ஹரிச்சந்திர மகாராஜன், பெரியதொரு நரபலி யாகத்தைச் செய்து எல்லா தேவர்களையும் திருப்திப்படுத்தினார். இவ்விதமாக வருணனால் உண்டாக்கப்பட்ட நீர்க்கோப்பு நோய் குணமடைந்தது.
பதம் 9.7.22
விஸ்வாமித்ரோ ‘பவத் தஸ்மின் ஹோதா சாத்வர்யுர் ஆத்மவான்
ஜமதக்னிர் அபூத் ப்ரஹ்மா வஸிஷ்டோ ‘யாஸ்ய: ஸாம-க:
விஸ்வாமித்ர:—சிறந்த முனிவரும், யோகியுமான விஸ்வாமித்திரர்; அபவத்—ஆனார்; தஸ்மின்—அப்பெரும் யாகத்தில்; ஹோதா—நிவேதனம் செய்யும் தலைமைப் புரோகிதர்; ச—தவிரவும்; அத்வர்யு:—யஜுர் வேத மந்திரங்களை ஓதி யாகச் சடங்குகளைச் செய்பவர்; ஆத்மவான்—பூரண தன்னுணர்வு பெற்ற; ஜமதக்னி:—ஜமதக்னி; அபூத்—ஆனார்; ப்ரஹ்மா—தலைமை பிராமணராக செயற்படும்; வஸிஷ்ட:—மாமுனிவர்; அயாஸ்ய:—மற்றொரு மாமுனிவர்; ஸாம-க:—சாமவேத மந்திரங்களை ஒதுபவராக ஈடுபட்டிருந்த.
அப்பெரும் நரபலி யாகத்தில், நிவேதனம் செய்யும் தலைமைப் புரோகிதராக விஸ்வாமித்திரர் இருந்தார். பூரண தன்னுணர்வு பெற்ற ஜமதக்னி, யஜுர் வேத மந்திரங்கள் ஓதும் பொறுப்பை ஏற்றிருந்தார். வசிஷ்டர் முக்கிய பிராமண புரோகிதராக இருந்தார். மற்றும் அயாஸ்ய முனி சாமவேத மந்திரங்களை ஒதும் பொறுப்பை ஏற்றிருந்தார்.
பதம் 9.7.23
தஸ்மை துஷ்டோ ததாவ் இந்ர: சாதகௌம்பமயம் ரதம்
சுனஹ்சேபஸ்ய மஹாத்மியம் உபரிஷ்டாத் ப்ரசக்ஷ்யதே
தஸ்மை—அவருக்கு, ஹரிச்சந்திரனுக்கு; துஷ்ட:—மிகவும் திருப்தியடைந்து; ததெள—கொடுத்தார்; இந்ர:—சுவர்க்கராஜன்; சாதகௌம்ப-மயம்—தங்கத்தாலான; ரதம்—இரதத்தை; சுனஹ் சேபஸ்ய—சுனசேபனைப் பற்றிய; மாஹாத்மியம்—பெருமைகளை; உபரிஷ்டாத்—விஸ்வாமித்திரரின் மகன்களைப் பற்றி விவரிக்கும் போது; பிரசக்ஷ்யதே—விவரிக்கப்படும்.
ஹரிச்சந்திரனிடம் மிகவும் திருப்தியடைந்த இந்திரன், அவருக்கு ஒரு தங்க ரதத்தைப் பரிசளித்தார். விஸ்வாமித்திரனின் மகன்களைப் பற்றி விளக்கும்போது சுனசேபனின் பெருமைகளும் விவரிக்கப்படும்.
பதம் 9.7.24
ஸத்யம் ஸாரம் த்ருதிம் த்ருஷ்ட்வா ஸபார்யஸ்ய ச பூபதே:
விஸ்வாமித்ரோ ப்ருசம் ப்ரீதோ ததாவீ அவிஹதாம் கதிம்
ஸத்யம்—சத்தியம்; ஸாரம்—உறுதி; த்ருதிம்—பொறுமை; த்ருஷ்ட்வா—கண்டு; ஸ-பார்யஸ்ய—அவரது மனைவியுடன்; ச—மேலும்; பூபதே:—ஹரிச்சந்திர மகாராஜனின்; விஸ்வாமித்ர:—மாமுனிவரான விஸ்வாமித்திரர்; ப்ருசம்—மிகவும்; ப்ரீத:—திருப்தியடைந்து; ததெள—அவருக்கு அளித்தார்; அவிஹதாம்-கதிம்—அழிவற்ற அறிவை.
இவ்வாறாக ஹரிச்சந்திர மகாராஜனும் அவரது மனைவியும் சத்திய சீலர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், சாராம்சத்தில் சிரத்தையுள்ளவர்களாகவும் இருப்பதைக் கண்ட விஸ்வாமித்திர முனிவர், மனித வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய அழிவற்ற ஞானத்தை அவர்களுக்கு அளித்தார்.
பதங்கள் 9.7.25 -9.7.26
மன: ப்ருதிவ்யாம் தாம் அத்பிஸ் தேஜஸாபோ ‘நிலேன தத்
கே வாயும் தாரயாம்ஸ் தச் ச பூதாதௌ தம் மஹாத்மனி
தஸ்மிஞ் ஞான-கலாம் த்யாத்வா தயாஜ்ஞாஞானம் வினிர்தஹன்
ஹித்வா தாம் ஸ்வேன பாவேன நிர்வாண-ஸுக-ஸம்விதா
அனிர்தேஸ்யாப்ரதர்க்யேண தஸ்தெள வித்வஸ்த-பந்தன:
மன:—(உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல் மற்றும் தற்காத்துக் கொள்ளுதல் எனும் பெளதிக ஆசைகள் நிறைந்த) மனதை; ப்ருதிவ்யாம்—மண்ணில்; தாம்—அதை; அத்பி:—நீருடன்; தேஜஸா—மற்றும் நெருப்புடன்; அப:—நீரை; அநிலேன—நெருப்பில்; தத்—அதை; கே—ஆகாயத்தில்; வாயும்—காற்று; தாரயன்—கலந்து; தத்—அதை; ச—கூட; பூத-ஆதெள—பௌதிக தோற்றத்திற்கு மூலமாகிய பொய் அகங்காரத்தில்; தம்—அது (பொய் அகங்காரம்); மஹா-ஆத்மனி—மஹத்-தத்துவத்தில் (மொத்த பெளதிக சக்தியில்); தஸ்மின்—மொத்த பெளதிக சக்தியில்; ஞான-கலாம்—ஆன்மீக அறிவும் அதன் பல்வேறு கிளைகளும்; த்யாத்வா—தியானிப்பதன் மூலம்; தயா—இம்முறையினால்; அஞ்ஞானம்—அறியாமை; விணிர்தஹன்—குறிப்பாக அடக்கினார்; ஹித்வா—கைவிட்டு; தாம்—பௌதிக நோக்கத்தை; ஸ்வேன—தன்னுணர்வினால்; பாவேன—பக்தித் தொண்டில்; நிர்வாண-ஸுக-ஸம்விதா—பௌதிக வாழ்வைவிட்டதனால் கிடைத்த உன்னத ஆனந்தத்தினால்; அநிர்தேஸ்ய—புலப்படாத; அப்ரதர்க்யேண—நினைத்தற்கரிய; தஸ்தெள—இருந்தார்; வித்வஸ்த—இருந்து முற்றிலும் விடுபட்டு; பந்தன:—பெளதிக பந்தத்தில்.
ஹரிச்சந்திர மகாராஜன், பௌதிக சுகபோகங்களால் நிறைந்திருந்த தன் மனதை மண்ணுடன் கலக்கச் செய்து, அதை முதலில் தூய்மைப்படுத்தினார். பிறகு அவர் மண்ணை நீருடனும், நீரை நெருப்புடனும், நெருப்பைக் காற்றுடனும் மற்றும் காற்றை ஆகாயத்துடனும் கலக்கச் செய்தார். அதன்பிறகு ஆகாயத்தை மொத்த பெளதிக சக்தியுடனும், மொத்த பெளதிக சக்தியை ஆன்ம ஞானத்துடனும் அவர் கலக்கச் செய்தார். தான் பரமபுருஷரின் பின்னப் பகுதி என்று உணர்வதே இந்த ஆன்ம ஞானமாகும். தன்னுணர்வு பெற்ற ஆத்மா பகவத் தொண்டில் ஈடுபடும் பொழுது அவன் கண்டறிய முடியாதவனாகவும், நினைத்தற்கரியவனாகவும் ஆகிறான். இவ்வாறு ஆன்ம ஞானத்தில் நிலைபெறும் அவன் பெளதிக பந்தத்திலிருந்து முற்றிலும் விடுபட்டவனாகிறான்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “மாந்தாதா மகாராஜனின் வம்சம்” எனும் தலைப்பை கொண்ட ஏழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.