அத்தியாயம் – 6
சபரி முனிவரின் வீழ்ச்சி
பதம் 9.6.1
ஸ்ரீ-சுக உவாச
விரூப: கேதுமாஞ் சம்புர் அம்பரீஷ-ஸுதாஸ் த்ரய:
விரூபாத் ப்ருஷதஸ்வோ ‘பூத் தத்-புத்ரஸ் து ரதீதர:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; விரூப:—விரூபன் என்ற; கேதுமான்:—கேதுமான் என்ற; சம்பு:—சம்பு என்ற; அம்பரீஷ:—அம்பரீஷ மகாராஜனின்; ஸுதா: த்ரய:—மூன்று மகன்கள்; விரூபாத்—விரூபனிலிருந்து; ப்ருஷதஸ்வ:—பிருஷதஸ்வன் என்ற; அபூத்—வந்தார்; தத்-புத்ர:—அவரது மகன்; து—மேலும்; ரதீதர:—ரதீதரன் என்ற.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, அம்பரீஷருக்கு விரூபன், கேதுமான் மற்றும் சம்பு என்ற மூன்று மகன்கள் இருந்தனர். விரூபனுக்கு பிருஷதஸ்வனும், பிருஷதஸ்வனுக்கு ரதீதரனும் மகன்களாகப் பிறந்தனர்.
பதம் 9.6.2
ரதீதரஸ்யாப்ரஜஸ்ய பார்யாயாம் தந்தவே ‘ர்தித:
அங்கிரா ஜனயாம் ஆஸ ப்ரஹ்ம-வர்சஸ்வின: ஸுதான்
ரதீதரஸ்ய—ரதீதரனின்; அப்ரஜஸ்ய—மகன்களில்லாத; பார்யாயாம்—அவரது மனைவியின் மூலமாக; தந்தவே—சந்ததியைப் பெருக்குவதற்காக; அர்தித:—வேண்டிக்கொள்ளப்பட்டு; அங்கிரா:—மாமுனிவரான அங்கிரர்; ஜனயாம் ஆஸ—பிறக்கச் செய்தார்; ப்ரஹ்ம-வர்சஸ்வின:—பிராமண தகுதிகளைக் கொண்ட; ஸுதான்—மகன்கள்.
ரதீதரனுக்கு மகன்களில்லாததால், தனக்கு மகன்களைப் பெற்றுத் தரும்படி அங்கிர மாமுனிவரை ரதீதரன் வேண்டிக்கொண்டார். இந்த வேண்டுகோளின்படி, அங்கிரர், ரதீதரனுடைய மனைவியின் மூலமாக பிராமண சக்திகளைக் கொண்ட மகன்களைப் பெற்றெடுத்தார்.
பதம் 9.6.3
ஏதே க்ஷேத்ர-ப்ரஸூதா வை புனஸ் து அங்கிரஸா: ஸ்ம்ருதா:
ரதீதராணாம் ப்ரவரா: க்ஷேத்ரோபேதா த்வி-ஜாதய:
ஏதே—அங்கிரரால் பெற்றெடுக்கப்பட்ட மகன்கள்; க்ஷேத்ர-ப்ரஸூதா:—ரதீதரனின் குழந்தைகளாகவும், அவரது குடும்பத்திற்குச் சொந்தமானவர்களாகவும் ஆயினர் (ஏனெனில் அவரது மனைவியின் மூலமாக அவர்கள் பிறந்தனர்); வை—உண்மையில்; புன:—மீண்டும்; து—ஆனால்; ஆங்கிரஸா:—அங்கிர வம்சத்தின்; ஸ்ம்ருதா:—அவர்கள் அழைக்கப்பட்டனர்; ரதீதராணாம்—ரதீதரனுடைய மகன்களின்; ப்ரவரா:—முக்கியமான; க்ஷேத்ர-உபேதா:—நிலத்திலிருந்து (க்ஷேத்ர) பிறந்ததால்; த்வி-ஜாதய:—(பிராமண, க்ஷத்திரியர்களின் கலப்படத்தால்) பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ரதீதரனுடைய மனைவியின் மூலமாகப் பிறந்ததால் இவ்வெல்லா மகன்களும் ரதீதர வம்சம் என்றும், அங்கிரரரின் விந்திலிருந்து பிறந்ததால் இவர்கள் அங்கிர வம்சம் என்றும் அழைக்கப்பட்டனர். ரதீதரனின் குழந்தைகளிலேயே இந்த மகன்கள் மிகவும் முக்கியமானவர்களாவர். ஏனெனில் பிறப்பின் காரணத்தால் இவர்கள் பிராமணர்களாகக் கருதப்பட்டனர்.
பதம் 9.6.4
க்ஷுவதஸ் து மனோர் ஜக்ஞே இக்ஷ்வாகுர் க்ராணத ஸுத:
தஸ்ய புத்ர-சத-ஜ்யேஷ்டா விகுக்ஷி-நிமி-தண்டகா:
க்ஷுவத:—தும்மும்பொழுது: து—ஆனால்; மனோ:—மனுவின்; ஜக்ஞே—பிறந்தார்; இக்ஷ்வாகு:—இஷ்வாகு என்ற; க்ராணத:—நாசித் துவாரங்களில் இருந்து; ஸுத:—மகனான; தஸ்ய—இஷ்வாகுவின்; புத்ர-சத—நூறு மகன்கள்; ஜ்யேஷ்டா:—முக்கியமான; விகுக்ஷி—விகுக்ஷி என்பவரின்; நிமி—நிமி என்பவர்; தண்டகா:—தண்டகன் என்பவர்.
இக்ஷ்வாகு மனுவின் புத்திரராவார். மனு தும்மும்பொழுது, அவரது நாசித் துவாரங்களிலிருந்து இக்ஷ்வாகு பிறந்தார். இஷ்வாகு மகாராஜனுக்கு நூறு மகன்கள் இருந்தனர். அவர்களுள் விகுக்ஷி, நிமி மற்றும் தண்டகன் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்களாவர்.
பதம் 9.6.5
தேஷாம் புரஸ்தாத் அபவன் ஆர்யாவர்தே ந்ருபா ந்ருப
பஞ்ச-விம்சதி: பஸ்சாச் ச த்ரயோ மத்யே ‘பரே ‘ன்யத:
தேஷாம்—அவ்வெல்லா மகன்களுக்கிடையில்; புரஸ்தாத்—கிழக்குப் பக்கத்தில்; அபவன்—அவர்கள் ஆனார்கள்; ஆர்யாவர்தே—இமயமலைக்கும், விந்தியமலைக்கும் இடையிலுள்ள ஆரியவர்தம் என்ற இடத்தில்; ந்ருபா:—அரசர்கள்; ந்ருப—அரசே (பரீட்சித்து மகாராஜன்); பஞ்ச-விம்சதி:—இருபத்தைந்து; பஸ்சாத்—மேற்குப் பக்கத்தில்; ச—கூட; த்ரய:—அவர்களில் மூவர்; மத்யே—மத்தியில் (கிழக்கு, மேற்குத்திசைகளுக்கும் இடையில்); அபரே—மற்றவர்கள்; அன்யத:—மற்ற இடங்களில்.
நூறு மகன்களில் இருபத்தைந்து பேர், இமய மலைக்கும், விந்திய மலைக்கும் இடையிலுள்ள ஆரியவர்தத்தின் மேற்குப் பகுதிக்கு அரசர்களாயினர். மற்றொரு இருபத்தைந்து பேர் ஆரியவர்தத்தின் கிழக்குப் பகுதிக்கு அரசர்களாயினர். முக்கியமான மூன்று மகன்கள் மத்திய பகுதிக்கு அரசர்களாயினர். மற்ற மகன்கள் வேறு பல இடங்களுக்கு அரசர்களாயினர்.
பதம் 9.6.6
ஸ ஏகதாஷ்டகா-ஸ்ராத்தே இக்ஷ்வாகு: ஸுதம் ஆதிசத்
மாம்ஸம் ஆனீயதாம் மேத்யம் விகுக்ஷே கச்ச மா சிரம்
ஸ:—அந்த அரசர் (இக்ஷ்வாகு மகாராஜன்); ஏகதா—ஒரு சமயம்; அஷ்டகா-ஸ்ராத்தே—முன்னோர்களுக்குப் படையல்கள் செய்யும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களின் போது; இக்ஷ்வாகு:—இக்ஷ்வாகு மகாராஜன்; ஸுதம்—அவரது மகனுக்கு; ஆதிசத்—கட்டளையிட்டார்; மாம்ஸம்—மாமிசம்; ஆனீயதாம்—இங்கு கொண்டு வர; மேத்யம்—தூய (வேட்டையாடி அடையப்படும்); விகுக்ஷே—ஓ விகுக்க்ஷி; கச்ச—உடனே சென்று; மா சிரம்—தாமதமின்றி.
ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முன்னோர்களுக்குச் செய்யும் படையல்கள் அஷ்டகா-ஸ்ராத்தம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஸ்ராத்த சடங்கு மாதத்தின் தேய்பிறைக் காலத்தில் நடத்தப்படுகிறது. இச்சடங்கில் படைப்பதற்காக, இஷ்வாகு மகாராஜன் தன் மகனான விகுக்ஷுவை உடனே காட்டிற்குச் சென்று கொஞ்சம் சுத்தமான மாமிசத்தைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டார்.
பதம் 9.6.7
ததேதி ஸ வனம் கத்வா ம்ருகான் ஹத்வா க்ரீயார்ஹணான்
ஸ்ராந்தோ புபுக்ஷிதோ வீர: சசம் சாதத் அபஸ்ம்ருதி:
ததா—உத்தரவுப்படி; இதி—இவ்வாறாக; ஸ:—விகுக்ஷி; வனம்—காட்டிற்கு; கத்வா—சென்று; ம்ருகான்—மிருகங்களை; ஹத்வா—கொன்று: க்ரியா-அர்ஹணான்—ஸ்ராத்த சடங்கிற்குரிய யாகத்தில் படைப்பதற்குப் பொருத்தமான; ஸ்ராந்த:—அவர் களைப்படைந்த போது; புபுக்ஷித:—பசியும்; வீர:—வீரரான; சசம்—ஒரு முயலை; ச—கூட; ஆதத்—அவர் சாப்பிட்டுவிட்டார்; அபஸ்ம்ருதி:—(மாமிசம் ஸ்ராத்த சடங்கில் படைப்பட வேண்டியது என்பதை) மறந்து.
அதன்பிறகு, இக்ஷ்வாகுவின் மகனான விகுக்ஷி காட்டிற்குச் சென்று, படையலுக்குத் தகுந்த பல மிருகங்களைக் கொன்றார். ஆனால் பசியால் களைப்படைந்த அவர் மறந்துபோய் தான் கொன்ற ஒரு முயலைத் தின்றுவிட்டார்.
பதம் 9.6.8
சேஷம் நிவேதயாம் ஆஸ பித்ரே தேன ச தத்-குரு:
சோதித: ப்ரோக்ஷணாயாஹ துஷ்டம் ஏதத் அகர்மகம்
சேஷம்—மீதத்தை; நிவேதயாம்-ஆஸ—அவர் நிவேதனம் செய்தார்; பித்ரே—தன் தந்தைக்கு; தேன—அவரால்; ச—மேலும்; தத்-குரு:—அவர்களுடைய புரோகிதர் அல்லது ஆன்மீக குரு; சோதித:—வேண்டியதால்; ப்ரோக்ஷணாய—தூய்மைப்படுத்தும்படி; ஆஹ—கூறினார்; துஷ்டம்—கெட்டுப்போன; ஏதத்—இந்த மாமிசம்; அகர் மகம்—ஸ்ராத்த சடங்கில் படைக்கப்படுவதற்கு ஏற்றதல்ல.
விகுக்ஷி மீதமுள்ள மாமிசத்தை இக்ஷ்வாகு மகாராஜனிடம் கொடுத்தார். அவரும் அதை தூய்மைப்படுத்துவதற்காக வசிஷ்டரிடம் கொடுத்தார். ஆனால் விகுக்ஷி அந்த மாமிசத்தின் ஒரு பகுதியை சாப்பிட்டுவிட்டார் என்பதை உடனே வசிஷ்டரால் அறிந்து கொள்ள முடிந்தது. எனவே ஸ்ராத்த சடங்கில் அது உபயோகிக்க தகுந்ததல்ல என்று கூறிவிட்டார்.
பதம் 9.6.9
ஞாத்வா புத்ரஸ்ய தத் கர்ம குருணாபிஹிதம் ந்ருப:
தேசான் நிஹ்ஸாரயாம் ஆஸ ஸுதம் த்யக்த-விதிம் ருஷா
ஞாத்வா—அறிந்து; புத்ரஸ்ய—தன் மகனின்; தத்—அந்த; கர்ம—செயல்; குருணா—ஆன்மீக குருவால் (வசிஷ்டரால்); அபிஹிதம்—அறிவிக்கப்பட்டார்; ந்ருப:—அரசர் (இஷ்வாகு); தேசாத்—நாட்டிலிருந்து; நிஹ்ஸாரயாம் ஆஸ—வெளியேற்றினார்; ஸுதம்—தன் மகனை; த்யக்த-விதிம்—கட்டுப்பாட்டு விதிகளை அவர் மீறியதால்; ருஷா—கோபத்தினால்.
வசிஷ்டரால் இவ்வாறு அறிவிக்கப்பட்டதும், தன் மகன் விகுக்ஷி செய்திருப்பதைப் புரிந்துகொண்ட இக்ஷ்வாகு மகாராஜன் மிகவும் கோபமடைந்தார். இவ்வாறாக விகுக்ஷி கட்டுப்பாட்டு விதிகளை மீறியதால், நாட்டை விட்டே வெளியேறும்படி அவருக்குக் கட்டளையிட்டார்.
பதம் 9.6.10
ஸ து வ்பிரேண ஸம்வாதம் ஞாபகேன ஸமாசரன்
த்யக்த்வா கலேவரம் யோகீ ஸ தேனாவாப யத் பரம்
ஸ:—இக்ஷ்வாகு மகாராஜன்; து—உண்மையில்; விப்ரேண—பிராமணருடன் (வசிஷ்டருடன்); ஸம்வாதம்—விவாதம்; ஞாபகேன—அறிவித்தவருடன்; ஸமாசரன்—ஏற்ப செய்து; த்யகத்வா—கைவிட்டு; கலேவரம்—இவ்வுடலை; யோகி—துறவு பூண்ட பக்தி-யோகியாக இருந்ததால்; ஸ:—அரசர்; தேன—அத்தகைய உபதேசங்களால்; அவாப—அடைந்தார்; யத்—அந்நிலையை; பரம்—பரமான.
கற்றறிந்த சிறந்த பிராமணரான வசிஷ்டரிடமிருந்து பரம சத்தியத்தைப் பற்றிய உபதேசத்தைப் பெற்று இக்ஷ்வாகு மகாராஜன் துறவு பூண்டார். ஒரு யோகிக்குரிய கொள்கைகளைப் பின்பற்றியதன் மூலம், இந்த ஜட உடலை விட்டபின் பரம பூரணத்துவத்தை அவர் அடைந்தார்.
பதம் 9.6.11
பிதரி உபரதே ‘ப்யேத்ய விகுக்ஷி: ப்ருதிவீம் இமாம்
சாஸத் ஈஜே ஹரிம் யக்ஞை: சசாத இதி விஸ்ருத:
பிதரி—அவரது தந்தை; உபரதே—இராஜ்ய பொறுப்பிலிருந்து விடுபட்டதும்; அப்யேத்ய—திரும்பி வந்த; விகுக்ஷி:—விகுக்ஷி என்ற மகன்; ப்ருதிவீம்—மண்ணுலகை; இமாம்—இந்த; சாஸத்—ஆண்டு; ஈஜே—வழிபட்டார்; ஹரிம்—பரமபுருஷரான ஹரியை; யக்ஞை:—பலவகையான யாகங்களைச் செய்ததன் மூலமாக; சச-அத:—சசாதன் (“முயலைத் தின்றவர்”); இதி—இவ்வாறாக; விஸ்ருத:—புகழ்பெற்றார்.
அவரது தந்தையின் மறைவுக்குப்பின் நாடு திரும்பிய விகுக்ஷி, அரசராகி மண்ணுலகை ஆண்டு வந்ததுடன், பல்வேறு யாகங்களைச் செய்து பரமபுருஷரை திருப்திப்படுத்தினார். பிற்காலத்தில் விகுக்ஷி சசாதன் என்று புகழப்பட்டார்.
பதம் 9.6.12
புரஞ்ஜயஸ் தஸ்ய ஸுத இந்ரவாஹ இதீரித:
ககுத்ஸ்த இதி சாபி உக்த: ஸ்ருணு நாமானி கர்மபி:
புரம்-ஜய:—புரஞ்ஜயன் (“வசிப்பிடத்தை வென்றவர்”); தஸ்ய—அவரது (விகுக்ஷியின்); ஸுத:—மகன்; இந்ர-வாஹ:—இந்திரவாஹன் “இந்திரனை வாகனமாகக் கொண்டவர்”); இதி—இவ்வாறாக; ஈரித:—அவ்வாறு அறியப்பட்ட; ககுத்ஸ்த:—ககுத்ஸ்தன் (“ஓர் எருதின் திமிலில் இருப்பவர்”); இதி—இவ்வாறாக; ச—மேலும்; அபி—உண்மையில்; உக்த:—அவ்வாறு அறியப்பட்ட; ஸ்ருணு—கேளும்; நாமானி—எல்லாப் பெயர்களையும்; கர்மபி:—ஒருவரின் தொழிலுக்கேற்ப.
சசாதனின் மகன் புரஞ்ஜயன். அவர் இந்திரவாகனன் என்றும், சிலசமயங்களில் ககுத்ஸ்தன் என்றும் அறியப்பட்டார். வெவ்வேறு செயல்களுக்குரிய வேறுபட்ட பெயர்களை எப்படி அவர் பெற்றார் என்பதை தயவுகூர்ந்து கேளும்.
பதம் 9.6.13
க்ருதாந்த ஆஸீத் ஸமரோ தேவானாம் ஸஹ தானவை:
பார்ஷ்ணிக்ராஹோ வ்ருதோ வீரோ தேவைர் தைத்ய-பராஜிதை:
க்ருத-அந்த:—நாசம் விளைவிக்கும் போர்; ஆஸீத்—நிகழ்ந்தது; ஸமர:—போர்; தேவானாம்—தேவர்களின்; ஸஹ—உடன்; தானவை:—அசுரர்கள்; பார்ஷ்ணிக்ராஹ:—சிறந்ததொரு உதவியாளன்; வ்ருத:—ஏற்றனர்; வீர:—வீரன்; தேவை:—தேவர்களால்; தைத்ய—அசுரர்களால்; பராஜிதை:—வெல்லப்பட்டவர்கள்.
முன்பு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நாசம் விளைவிக்கும் யுத்தம் ஒன்று நிகழ்ந்தது. தோற்றுப்போன தேவர்கள் புரஞ்சயனைத் தங்களுடைய உதவியாளராகக் கொண்டு அசுரர்களை வென்றனர். எனவே வீரரான அவர், புரஞ்ஜயன் (“அசுரர்களின் வசிப்பிடத்தை வென்றவர்”) என்று அழைக்கப்படுகிறார்.
பதம் 9.6.14
வசனாத் தேவ-தேவஸ்ய விஷ்ணோர் விஸ்வாத்மன: ப்ரபோ:
வாஹனத்வே வ்ருதஸ் தஸ்ய பபூவேந்ரோ மஹா-வ்ருஷ:
வசனாத்—உத்தரவால் அல்லது வார்த்தைகளால்; தேவ-தேவஸ்ய—தேவர்களுக்கெல்லாம் பரமபுருஷராக இருப்பவரின்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணு; விஸ்வ-ஆத்மன:—மொத்த படைப்பிற்கும் பரமாத்மாவானவர்; ப்ரபோ:—ஆள்பவரான பகவான்; வாஹனத்வே—வாகனமாக மாறியதால்; வ்ருத:—ஈடுபட்டார்; தஸ்ய—புரஞ்ஜயனின் சேவையில்; பபூவ—அவர் ஆனார்; இந்ர:—சுவர்க்கராஜன்; மஹா-வ்ருஷ:—மிகப்பெரிய எருதாக.
இந்திரன் தன் வாகனமாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன், புரஞ்ஜயன் எல்லா அசுரர்களையும் கொல்ல சம்மதித்தார். தற்பெருமையின் காரணத்தால் இதை இந்திரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் பிறகு, பரமபுருஷரான விஷ்ணுவின் உத்தரவால் அதை ஏற்றுக் கொண்ட இந்திரன், புரஞ்ஜயனின் மிகப்பெரிய எருது வாகனமானார்.
பதங்கள் 9.6.15 – 9.6.16
ஸ ஸன்னத்தோ தனுர் திவ்யம் ஆதாய விசிகாஞ் சிதான்
ஸ்தூயமானஸ் தம் ஆருஹ்ய யுயுத்ஸு: ககுதி ஸ்தித:
தேஜஸாப்யாயிதோ விஷ்ணோ: புருஷஸ்ய மஹாத்மன:
ப்ரதீச்யாம் திசி தைத்யானாம் ந்யருணத் த்ரிதசை: புரம்
ஸ:—அவர், புரஞ்ஜயன்; ஸன்னத்த:—சிறந்த ஆயுத பாணியாக; தனு: திவ்யம்—முதல் தரமான அல்லது உன்னதமான ஒரு வில்லை; ஆதாய—எடுத்து; விசிகான்—அம்புகள்; சிதான்—மிகவும் கூரிய; ஸ்தூயமான:—மிகவும் புகழப்பட்டு; தம்—அவரின் (எருதின்); ஆருஹ்ய—மீதேறி; யுயுத்ஸு—யுத்தம் செய்யத் தயாரானார்; ககுதி—எருதின் திமில் மீது; ஸ்தித:—அணிந்து கொண்டு: தேஜஸா—சக்தியால்; ஆப்யாயித—உதவப்பட்டு; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; புருஷஸ்ய—பரமபுருஷர்; மஹா-ஆத்மன:—பரமாத்மாவான; ப்ரதீச்யாம் கிழக்குப் பக்கம்; திசி—திசை; தைத்யானாம்—அசுரர்களின்; ந்யருணத்—கைப்பற்றினார்; த்ரிதசை:—தேவர்களால் சூழப்பட்டவாறு; புரம்—வசிப்பிடம்.
கவசத்தால் நன்கு பாதுகாக்கப்பட்டிருந்த புரஞ்ஜயன், யுத்தம் செய்யும் விருப்பத்துடன், திவ்யமான ஒரு வில்லையும் கூரிய அம்புகளையும் கைகளில் எடுத்து, தேவர்கள் புகழ, எருதின் (இந்திரனின்) மீதேறி அதன் திமில் மீது அமர்ந்தார். இதனால் அவர் ககுத்ஸ்தன் எனப்பட்டார். பரமாத்மாவும், பரமபுருஷருமான பகவான் விஷ்ணுவால் சக்தியளிக்கப்பட்ட புரஞ்ஜயன் அப்பெரிய எருதின் மேல் அமர்ந்ததால் அவர் இந்திரவாகனன் எனப்பட்டார். தேவர்களால் சூழப்பட்டிருந்த அவர், மேற்குத் திசையிலிருந்து அசுரர்களின் வசிப்பிடத்தைத் தாக்கினார்.
பதம் 9.6.17
தைஸ் தஸ்ய சாபூத் ப்ரதனம் துமுலம் லோம-ஹர்ஷணம்
யமாய பல்லைர் அனயத் தைத்யான் அபியயுர் ம்ருதே
தை:—அசுரர்களுடன்; தஸ்ய—அவரின், புரஞ்ஜயனின்; ச—மேலும்; அபூத்—ஏற்பட்டது; ப்ரதனம்—போர்; துமுலம்—மிகவும் கொடூரமான; லோம-ஹர்ஷணம்—எதைக் கேட்பதால் ஒருவரது மயிர் சிலிர்க்குமோ; யமாய—யமலோகத்திற்கு; பல்லை:—அம்புகளால்; அனயத்—அனுப்பினார்; தைத்யான்—அசுரர்களை; அபியயு:—அவரை நோக்கி வந்த; ம்ருதே—அப்போரில்.
புரஞ்ஜயனுக்கும், அசுரர்களுக்கும் இடையில் கொடூரமான யுத்தம் நிகழ்ந்தது. உண்மையிலேயே அது மிகவும் கொடூரமாக இருந்ததால், அதைப்பற்றி கேட்டாலும் ஒருவருக்கு மயிர் சிலிர்க்கும். புரஞ்ஜயன் முன் வரத் துணிவு கொண்ட எல்லா அசுரர்களும், அவரது அம்புகளால் உடனடியாக யமலோகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
பதம் 9.6.18
தஸ்யேஷூ-பாதாபிமுகம் யுகாந்தாக்னிம் இவோல்பணம்
விஸ்ருஜ்ய துத்ருவுர் தைத்யா ஹன்யமானா: ஸ்வம் ஆலயம்
தஸ்ய—அவரது (புரஞ்ஜயனின்); இஷு-பாத—அம்புவீச்சு; அபிமுகம்—எதிரில்; யுக-அந்த—யுகமுடிவில்; அக்னிம்—அக்கினி; இவ—போலவே; உல்பணம்—கொடூரமான; விஸ்ருஜ்ய—தாக்குவதைக் கைவிட்டு; துத்ருவு:—ஓட்டம் பிடித்தனர்; தைத்யா:—எல்லா அசுரர்களும்; ஹன்யமானா:—கொல்லப்படுவதிலிருந்து (புரஞ்ஜயனால்); ஸ்வம்—சொந்த; ஆலயம்—வசிப்பிடங்களுக்கு.
யுகமுடிவில் தோன்றும் காலாக்கினியை ஒத்திருந்த, இந்திரவாகனனின் தீப்பறக்கும் அம்புகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியிருந்த அசுரர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு விரைந்து ஓட்டம் பிடித்தனர்.
பதம் 9.6.19
ஜித்வா பரம் தனம் ஸர்வம் ஸஸ்த்ரீகம் வஜ்ர-பாணயே
ப்ரத்யயச்சத் ஸ ராஜர்ஷிர் இதி நாமபிர் ஆஹ்ருத:
ஜித்வா—வென்று; பரம்—எதிரிகளை; தனம்—செல்வம்; ஸர்வம்—அனைத்தையும்; ஸ-ஸ்த்ரீகம்—அவர்களது மனைவிகளுடன்; வஜ்ர-பாணயே—வஜ்ராயுதத்தை வைத்திருக்கும் இந்திரனுக்கு; ப்ரத்யயச்சத்—திரும்பி வந்து ஒப்படைத்தார்; ஸ:—அதை; ராஜ-ருஷி:—ராஜரிஷி (புரஞ்ஜயன்); இதி—இவ்வாறாக; நாமபி:—பெயர்களால்; ஆஹ்ருத:—அழைக்கப்பட்டார்.
எதிரிகளை வென்றபின், ராஜரிஷியான புரஞ்ஜயன், எதிரிகளின் செல்வங்கள் மற்றும் மனைவிகள் உட்பட அனைத்தையும், வஜ்ராயுதத்தை வைத்திருப்பவரான இந்திரனிடம் ஒப்படைத்தார். இதனால் அவர் புரஞ்ஜயன் என்று புகழப்பட்டார். இவ்வாறாக புரஞ்ஜயனின் வெவ்வேறு செயல்களால் அவர் வேறுபட்ட பெயர்களுடன் அழைக்கப்பட்டார்.
பதம் 9.6.20
புரஞ்ஜயஸ்ய புத்ரோ ‘பூத் அனேனாஸ் தத்-ஸுத: ப்ருது:
விஸ்வகந்திஸ் ததஸ் சந்ரோ யுவனாஸ்வஸ் து தத்-ஸுத:
புரஞ்ஜயஸ்ய—புரஞ்ஜயனின்; புத்ர:—மகன்; அபூத்—பிறந்தார்; அனேனா:—அனேனன் என்ற; தத்-ஸுத:—அவரது மகன்; ப்ருது:—பிருது என்ற; விஸ்வகந்தி:—விஸ்வகந்தி என்ற; தத:—அவரது மகன்; சந்ர:—சந்திரன் என்ற; யுவனாஸ்வ:—யுவனாஸ்வன் என்ற; து—உண்மையில்; தத்-ஸுத:—அவரது மகன்.
புரஞ்ஜயனின் மகன் அனேனன் என்றும், அனேனனின் மகன் பிருது என்றும், அவரது மகன் விஸ்வகந்தி என்றும், அவரது மகன் சந்திரன் என்றும், சந்திரனின் மகன் யுவனாஸ்வன் என்றும் அறியப்பட்டனர்.
பதம் 9.6.21
ஸ்ராவஸ்தஸ் தத்-ஸுதோ யேன ஸ்ராவஸ்தீ நிர்மமே புரீ
ப்ருஹதஸ்வஸ் து ஸ்ராவஸ்திஸ் தத: குவலயாஸ்வக:
ஸ்ராவஸ்த:—சிராவஸ்தன் என்ற; தத்-ஸுத:—யுவனாஸ்வனின் மகன்; யேன—எவரால்; ஸ்ராவஸ்தீ—சிராவஸ்தி என்ற; நிர்மமே—கட்டப்பட்டது; புரீ—மாநகரம்; ப்ருஹதஸ்வ:—பிருகதஸ்வன்; து—இருந்தாலும்; ஸ்ராவஸ்தி:—சிராவஸ்தனால் ஈன்றெடுக்கப்பட்ட; தத:—அவரிலிருந்து; குவலயாஸ்வக:—குவலயாஸ்வன் என்ற.
யுவனாஸ்வனின் மகன் சிராவஸ்தன். இவர் சிராவஸ்திபுரி என்ற நகரத்தை நிர்மாணித்தார். சிராவஸ்தனின் மகன் பிருகதஸ்வன், அவரது மகன் குவலயாஸ்வன். இவ்விதமாக இந்த வம்சம் பெருகியது.
பதம் 9.6.22
ய: ப்ரியார்தம் உதங்கஸ்ய துந்து-நாமாஸுரம் பலீ
ஸுதானாம் ஏக-விம்சத்யா ஸஹஸ்ரைர் அஹனத் வ்ருத:
ய:—அவர்; ப்ரிய-அர்தம்—திருப்திக்காக; உதங்கஸ்ய—உதங்க முனிவரின்; துந்து-நாம—துந்து என்ற; அஸுரம்—அசுரனை: பலீ—மிகவும் சக்திவாய்ந்தவர் (குவலயாஸ்வன்); ஸுதானாம்—மகன்களின்; ஏக-விம்சத்யா ஸஹஸ்ரை:—இருபத்தோராயிரம் பேர்களால்; அஹனத்—கொன்றார்; வ்ருத:—சூழப்பட்டவராக.
உதங்க முனிவரை திருப்திப்படுத்துவதற்காக, மிகவும் சக்தி வாய்ந்தவரான குவலயாஸ்வன், தன்னுடைய இருபத்தோராயிரம் மகன்களின் உதவியுடன் துந்து என்ற அசுரனைக் கொன்றார்.
பதங்கள் 9.6.23 – 9.6.24
துந்துமார இதி க்யாதஸ் தத்-ஸுதாஸ் தே ச ஜஜ்வலு:
துந்தோர் முகாக்னினா ஸர்வே த்ரய ஏவாவசேஷிதா:
த்ருதாஸ்வ: கபிலாஸ்வஸ் ச பத்ராஸ்வ இதி பாரத
த்ருதாஸ்வ-புத்ரோ ஹர்யஸ்வோ நிகும்பஸ் தத்-ஸுத: ஸ்ம்ருத:
துந்து-மார:—துந்துவைக் கொன்றவர்; இதி—இவ்வாறாக; க்யாத:—புகழப்பட்டார்; தத்-ஸுதா:—அவரது மகன்கள்; தே—அவர்கள் அனைவரும்; ச—கூட; ஜஜ்வலு:—எரிந்து சாம்பலாயினர்; துந்தோ:—துந்துவின்; முக-அக்னினா—வாயிலிருந்து வெளிப்பட்ட அக்னியால்; ஸர்வே—அவர்கள் அனைவரும்; த்ரய:—மூவர்; ஏவ—மட்டுமே; அவசேஷிதா:—உயிர்பிழைத்தனர்; த்ருடாஸ்வ:—திருடாஸ்வன்; கபிலாஸ்வ:—கபிலாஸ்வன்; ச—மற்றும்; பத்ராஸ்வ:—பத்ராஸ்வன்; இதி—இவ்வாறாக; பாரத—பரீட்சித்து மகாராஜனே; த்ருதாஸ்வ-புத்ர:—திருடாஸ்வனின் மகன்; ஹர்யஸ்வ:—ஹர்யஸ்வன் என்ற; நிகும்ப:—நிகும்பன்; தத்-ஸுத:—அவரது மகன்; ஸ்ம்ருத:—பிரசித்தமானார்.
பரீட்சித்து மகாராஜனே, இக்காரணத்தினால் குவலயாஸ்வன், துந்துமாரன் (“துந்துவைக் கொன்றவர்”) என்று புகழப்பட்டார். துந்துவின் வாயிலிருந்து வெளிப்பட்ட தீயினால், திருடாஸ்வன், கபிலாஸ்வன் மற்றும் பத்ராஸ்வன் என்ற அவரது மூன்று மகன்களைத் தவிர மற்றனைவரும் எரிந்து சாம்பலாயினர். திருடாஸ்வனிலிருந்து ஹர்யஸ்வன் என்ற மகன் வந்தார். இவரது மகன் நிகும்பன் என்று புகழப்பட்டார்.
பதம் 9.6.25
பஹுலாஸ்வோ நிகும்பஸ்ய க்ருசாஸ்வோ ‘தாஸ்ய ஸேனஜித்
யுவனாஸ்வோ ‘பவத் தஸ்ய ஸோ ‘நபத்யோ வனம் கத:
பஹுலாஸ்வ:—பஹுலாஸ்வன் என்ற; நிகும்பஸ்ய—நிகும்பனின்: க்ருசாஸ்வ:—கிருசாஸ்வன் என்ற; அத—அதன்பிறகு; அஸ்ய—கிருசாஸ்வனின்; ஸேனஜித்—சேனஜித்; யுவனாஸ்வ:—யுவனாஸ்வன் என்ற; அபவத்—பிறந்தார்; தஸ்ய—சேனஜித்தின்; ஸ:—அவர்; அனபத்ய:—மகன்களே இல்லாமல்; வனம் கத:—ஓய்வு பெற்று வானப்பிரஸ்தராக வனம் சென்றார்.
நிகும்பனின் மகன் பஹுலாஸ்வா, பஹுலாஸ்வானின் மகன் கிருசாஸ்வா, க்ருசாஸ்வாவின் மகன் சேனாஜித், சேனாஜித்தின் மகன் யுவனாஸ்வா. யுவனஸ்வாவுக்கு மகன்கள் இல்லை, இதனால் அவர் குடும்ப வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று காட்டுக்குச் சென்றார்.
பதம் 9.6.26
பார்யா-சதேன நிர்விண்ண ரிஷயோ ‘ஸ்ய க்ருபாலவ:
இஷ்டிம் ஸ்ம வர்தயாம் சக்ருர் ஐந்ரீம் தே ஸுஸமாஹிதா:
பார்யா-சதேன—நூறு மனைவிகளுடன்; நிர்விண்ண:—மிகவும் வருத்தத்துடன் இருந்தனர்; ரிஷய:—(காட்டிலுள்ள) முனிவர்கள்; அஸ்ய—அவர்மீது; க்ருபாலவ:—மிகவும் கருணை கொண்டு; இஷ்டிம்—ஒரு சமயச் சடங்கை; ஸ்ம—கடந்த காலத்தில்; வர்தயாம் சக்ரு:—செய்யத் துவங்கினர்; ஐந்ரீம்—இந்திர-யாகம் என்ற; தே—அவர்கள் அனைவரும்; ஸு-ஸமாஹிதா:—மிகவும் கவனத்துடனும், ஜாக்கிரதையாகவும்.
யுவனாஸ்வன் தன் நூறு மனைவிகளுடன் காட்டிற்குச் சென்ற போதிலும், அவர்களனைவரும் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர். ஆயினும் காட்டிலுள்ள முனிவர்கள் அரசரிடம் மிகவும் இரக்கம் கொண்டு, அவருக்குப் புத்திர பாக்கியம் உண்டாகச் செய்வதற்காக, மிகவும் கவனத்துடனும், ஜாக்கிரதையுடனும் ஓர் இந்தர-யாகத்தைச் செய்ய ஆரம்பித்தனர்.
பதம் 9.6.27
ராஜா தத்-யக்ஞ-ஸதனம் ப்ரவிஷ்டோ நிசி தர்ஷித:
த்ருஷ்ட்வா சயானான் விப்ராம்ஸ் தான் பபெள மந்த்ர-ஜலம் ஸ்வயம்
ராஜா—அரசர் (யுவனாஸ்வன்); தத்-யக்ஞ-ஸதனம்—யாக அரங்கிற்குள்; ப்ரவிஷ்ட:—புகுந்து; நிசி—இரவில்; தர்ஷித:—தாகத்துடன் இருந்ததால்; த்ருஷ்ட்வா—கண்டு; சயானான்—படுத்திருப்பதை; விப்ரான்—எல்லா பிராமணர்களும்; தான்—அவர்களனைவரும்; பபௌ—குடித்துவிட்டார்; மந்த்ர-ஜலம்—மந்திர ஜலத்தை; ஸ்வயம்—தானே.
ஓரிரவு தாகத்துடனிருந்த அரசர் யாக அரங்கிற்குள் நுழைந்தார். பிராமணர்கள் அனைவரும் படுத்திருப்பதைக் கண்ட அவர், தன் மனைவி குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மந்திர ஜலத்தைத் தானே எடுத்து குடித்துவிட்டார்.
பதம் 9.6.28
உத்திதாஸ் தே நிசம்யாத வ்யுதகம் கலசம் ப்ரபோ பப்ரச்சு:
கஸ்ய கர்மேதம் பீதம் பும்ஸவனம் ஜலம்
உத்திதா:—எழுந்த பிறகு; தே—அவர்கள் அனைவரும்; நிசம்ய—கண்டு; அத—அதன்பிறகு; வ்யுதகம்—காலியாக இருப்பதை; கலசம்—நீர் கலசம்; ப்ரபோ—பரீட்சித்து மகாராஜனே; பப்ரச்சு:—வினவினர்; கஸ்ய—யாருடைய; கர்ம—செயல்; இதம்—இதை; பீதம்—குடித்தது; பும்ஸவனம்—ஒரு குழந்தையைப் பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த; ஜலம்—நீர்.
படுக்கையிலிருந்து எழுந்ததும், நீர் கலசம் காலியாகக் கிடப்பதைக் கண்ட பிராமணர்கள், ஒரு குழந்தையைப் பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த நீரைக் குடித்தவர் யார் என்று வினவினர்.
பதம் 9.6.29
ராஜ்ஞா பீதம் விதித்வா வை ஈஸ்வர-ப்ரஹிதேன தே
ஈஸ்வராய நமஸ் சக்ருர் அஹோ தைவ-பலம் பலம்
ராஜ்ஞா—அரசரால்; பீதம்—குடிக்கப்பட்டது; விதித்வா—என்பதை அறிந்த; வை—உண்மையாகவே; ஈஸ்வர-ப்ரஹிதேன—பகவானால் தூண்டப்பட்டு; தே—அவர்கள் அனைவரும்; ஈஸ்வராய—பரம ஆளுனரான பரமபுருஷருக்கு; நம: சக்ரு:—பணிவான வணக்கங்களைச் சமர்ப்பித்தனர்; அஹோ—ஜயகோ; தைவ-பலம்—தெய்வ சக்தி; பலம்—அதுவே உண்மையான சக்தியாகும்.
பரம ஆளுனரான பகவானால் தூண்டப்பட்ட அரசர்தான் அந்த நீரைக் குடித்தவர் என்பதை அறிந்த பிராமணர்கள் அனைவரும், “ஐயகோ! தெய்வ அருள் அல்லவா உண்மையான சக்தி! பரமனின் சக்தியை யாராலும் தடுக்க முடியாது!” என்று உணர்ச்சி ததும்பக் கூறினர். இவ்விதமாக பகவானுக்குத் தங்களுடைய பணிவான வணக்கங்களை அவர்கள் சமர்ப்பித்தனர்.
பதம் 9.6.30
தத: கால உபாவ்ருத்தே குக்ஷிம் நிர்பித்ய தக்ஷிணம்
யுவனாஸ்வஸ்ய தனயஸ் சக்ரவர்த்தீ ஜஜான ஹ
தத:—அதன்பிறகு; காலே—காலம்; உபாவ்ருத்தே—கணிந்ததும்; குக்ஷிம்—வயிற்றின் அடிப்பாகத்தின்; நிர்பித்ய—துளைத்துக் கொண்டு; தக்ஷிணம்—வலப்பக்கத்தை; யுவனாஸ்வஸ்ய—யுவனாஸ்வ மகாராஜனின்; தனய:—ஒரு மகன்; சக்ரவர்த்தீ—ஓர் அரசருக்குரிய எல்லா நல்ல அறிகுறிகளுடன்; ஜஜான—உற்பத்தியானான்; ஹ—கடந்த காலத்தில்.
அதன்பிறகு காலப்போக்கில், சக்திவாய்ந்த ஓரரசருக்குரிய எல்லா நல்ல அறிகுறிகளையும் கொண்ட ஒரு மகன், யுவனாஸ்வ மகா ராஜனுடைய வயிற்றின் வலப்பக்கத்தின் அடிப்பகுதியிலிருந்து வெளியே வந்தான்.
பதம் 9.6.31
கம் தாஸ்யதி குமாரோ ‘யம் ஸ்தன்யே ரோரூயதே ப்ருசம்
மாம் தாதா வத்ஸ மா ரோதீர் இதீந்ரோ தேசினிம் அதாத்
கம்—யாரால்; தாஸ்யதி—முலைப்பால் கொடுக்கப்பட்டு கவனித்துக் கொள்ளப்படுவான்; குமார:—குழந்தை; அயம்—இந்த; ஸ்தன்யே—முலைப்பால் குடிப்பதற்கு; ரோரூயதே—அழுகிறான்; ப்ருசம்—அதிகமாக; மாம் தாதா—என்னையே குடி; வத்ஸ—அருமைக் குழந்தாய்; மா ரோதீ:—அழ வேண்டாம்; இதி—இவ்வாறு; இந்ர:—இந்திரன்; தேசினீம்—ஆள்காட்டி விரலை; அதாத்—குடிப்பதற்குக் கொடுத்தார்.
குழந்தை முலைப்பாலுக்காக விடாமல் அழுதுகொண்டே இருந்ததால் பிராமணர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாகி, “இக்குழந்தையை கவனித்துக்கொள்ளப் போகிறவர் யார்” என்று கேட்டனர், பிறகு அந்த யாகத்தில் வழிபடப்பட்ட இந்திரன் வந்து, “அழாதே” என்று கூறி குழந்தையைத் தேற்றினார். பிறகு இந்திரன் தனது ஆள்காட்டி விரலை குழந்தையின் வாயில் வைத்து, “நீ என்னைப் பருகு” என்று கூறினார்.
பதம் 9.6.32
ந மமார பிதா தஸ்ய விப்ர-தேவ-ப்ரஸாதத:
யுவனாஸ்வோ ‘த தத்ரைவ தபஸா ஸித்திம் அன்வகாத்
ந—இல்லை; மமார—இறந்தார்; பிதா—தந்தை; தஸ்ய—குழந்தையின்; விப்ர-தேவ-ப்ரஸாதத:—பிராமணர்களின் கருணையாலும், ஆசியாலும்; யுவனாஸ்வ:—யுவனாஸ்வ மகாராஜன்; அத—அதன்பிறகு; தத்ர ஏவ—இந்த இடத்திலேயே; தபஸா—தவம் புரிந்து; ஸித்திம்—சித்தி; அன்வகாத்—அடைந்தார்.
குழந்தையின் தந்தையான யுவனாஸ்வன் பிராமணர்களின் ஆசியைப் பெற்றிருந்ததால், அவர் மரணத்திற்குப் பலியாகவில்லை. இச்சம்பவத்திற்குப் பின் கடுந்தவங்களை இயற்றிய அவர் அந்த இடத்திலேயே சித்தியடைந்தார்.
பதங்கள் 9.6.33 – 9.6.34
த்ரஸ்த்தஸ்யுர் இதீந்ரோ ‘ங்க விததே நாம யஸ்ய வை
யஸ்மாத் த்ரஸந்தி ஹி உத்விக்னா தஸ்யவோ ராவணாதய:
யௌவனாஸ்வோ ‘த மாந்தாதா சக்ரவர்த்தி அவனீம் ப்ரபு:
ஸப்த-த்வீபவதீம் ஏக: சசாயாச்யுத-தேஜஸா
த்ரஸத்-தஸ்யு:—திரசத்தஸ்யு (“திருடர்களையும், மோசக்காரர்களையும் அச்சுறுத்துபவர்”) என்ற; இதி—இவ்வாறாக; இந்ர:—சுவர்க்கராஜன்; அங்க—அரசே; விததே—கொடுத்தார்; நாம—பெயரை; யஸ்ய—யாரை; வை—உண்மையில்; யஸ்மாத்—யாாிடமிருந்து; த்ரஸந்தி—பயப்படுகிறார்கள்; ஹி—உண்மையில்; உத்விக்னா:—கவலைக்குக் காரணமான; தஸ்யவ:—திருடர்களும், மோசக்காரர்களும்; ராவண-ஆதய:—இராவணனைப் போன்ற பெரும் இராட்சசகர்களின் தலைமையிலான; யொவனாஸ்வ:—யுவனாஸ்வனின் மகன்; அத—இவ்வாறு; மாந்தாதா—மாந்தாதா எனப்பட்ட; சக்ரவர்த்தீ—உலகச்சக்கரவர்த்தி; அவனீம்—இவ்வுலகில்; ப்ரபு:—எஜமானர்; ஸப்த-த்வீப-வதீம்—ஏழு தீவுகளைக் கொண்ட; ஏக:—ஒருவர் மட்டுமே; சசாஸ—ஆண்டார்; அச்யுத-தேஜஸா—பரமபுருஷரின் கருணையால் சக்திமிக்கவராக இருந்ததால்.
யுவனாஸ்வனின் மகனான மாந்தாதா துன்பம் விளைவித்த இராவணன் மற்ற திருடர்கள், மோசக்காரர்கள் போன்றவர்களின் அச்சத்திற்குக் காரணமாக இருந்தார். பரீட்சித்து மகாராஜனே, யுவனாஸ்வ புத்திரரைக் கண்டு அவர்கள் அஞ்சியதால், திரசத்தஸ்யு என்ற பெயரை இந்திரன் அவருக்குச் சூட்டினார். பரமபுருஷரின் கருணையால் யுவனாஸ்வ புத்திரர் பெரும் சக்தியைப் பெற்றிருந்ததால், அவர் ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலகிற்கும், இரண்டற்ற ஒரே சக்கரவர்த்தியாக இருந்து ஆண்டு வந்தார்.
பதங்கள் 9.6.35 – 9.6.36
ஈஜே ச யக்ஞம் க்ரதுபிர் ஆத்ம-வித் பூரி-தக்ஷிணை:
ஸர்வ-தேவமயம் தேவம் ஸர்வாத்மகம் அதீந்ரியம்
த்ரவ்யம் மந்த்ரோ விதிர் யக்ஞோ யஜமானஸ் ததர்த்விஜ:
தர்மோ தேசஸ் ச காலஸ் ச ஸர்வம் ஏதத் யத் ஆத்மகம்
ஈஜே—அவர் வழிபட்டார்; ச—கூட; யக்ஞம்—யாகங்களின் இறைவனை; கிரதுபி:—சிறந்த சமயச் சடங்குகளால்; ஆத்ம-வித்—தன்னுணர்வின் மூலமாக பூரண உணர்வுடன் இருந்தார்; பூரி-தக்ஷிணை:—பிராமணர்களுக்குப் பெரிய நன்கொடைகளைக் கொடுத்ததன் மூலமாக: ஸர்வ-தேவ-மயம்—எல்லா தேவர்களையும் உள்ளடக்கிய; தேவம்—பகவான்; ஸர்வ-ஆத்மகம்—அனைவருக்கும் பரமாத்மாவாக உள்ள; அதி-இந்ரியம்—உன்னதமாக இருக்கின்ற; த்ரவ்யம்—திரவியங்கள்; மந்த்ர:—வேத பாராயணம்; விதி:—கட்டுப்பாட்டு விதிகள்; யக்ஞ:—வழிபடும்; யஜமான:—எஜமானர் (செய்பவர்); ததா—உடன்; ரித்விஜ:—புரோகிதர்கள்; தர்ம:—சமயக் கொள்கைகள்; தேச:—தேசம்: ச—மற்றும்; கால:—காலம்; ச—கூட; ஸர்வம்—அனைத்தும்; ஏதத்—இவையனைத்தும்; யத்—எது; ஆத்மகம்—தன்னுணர்வு பெறச் சாதகமான.
பரமபுருஷ பகவான், யாகத்திற்குத் தேவையான திரவியங்கள், வேத மந்திர பாராயணம், கட்டுப்பாட்டு விதிகள், யாகம் செய்பவர், புரோகிதர்கள், யாகப்பலன், யாக அரங்கம், மற்றும் யாகத்திற்குரிய காலம் போன்றவற்றின் மங்களகரமான அம்சங்களிலிருந்து வேறுபட்டவரல்ல. தன்னுணர்வுக் கொள்கைகளை அறிந்திருந்த மாந்ததாதா, உன்னத பரமாத்மாவாக உள்ளவரும், அனைத்து தேவர்களையும் தமக்குள் அடக்கிக் கொண்டிருப்பவருமான அந்த பரமபுருஷராகிய ஸ்ரீ விஷ்ணுவை வழிபட்டார். பிராமணர்களுக்கு ஏராளமான தான தருமங்களைச் செய்த அவர், பகவானை வழிபடுவதற்காக இத்தகைய யாகங்களைச் செய்தார்.
பதம் 9.6.37
யாவத் ஸூர்ய உதேதி ஸ்ம யாவச் ச ப்ரதிதிஷ்டதி
தத் ஸர்வம் யௌவனாஸ்வஸ்ய மாந்தாது: க்ஷேத்ரம் உச்யதே
யாவத்—அது முதல்; ஸூர்ய:—சூரியன்; உதேதி—அடிவானத்தில் உதிப்பது; ஸ்ம—கடந்த காலத்தில்; யாவத்—அதுவரை; ச—மேலும்; ப்ரதிதிஷ்டதி—தொடர்ந்து இருக்கின்றன; தத்—மேற்கூறிய எல்லாப் பொருட்களும்; ஸர்வம்—அனைத்தும்; யௌவனாஸ்வஸ்ய—யுவனாஸ்வனுடைய மகனின்; மாந்தாது:—மாந்தாதா என்றழைக்கப்பட்ட; க்ஷேத்ரம்—இடம்; உச்யதே—என்று கூறப்படுகிறது.
அடிவானத்தில், பிரகாசித்துக் கொண்டு சூரியன் உதயமாகும் இடத்திலிருந்து, அது மறையும் இடம் வரையுள்ள எல்லா இடங்களும், புகழ்பெற்ற யுவனாஸ்வ புத்திரரான மாந்தாதாவிற்குச் சொந்தமென்று கூறப்படுகிறது.
பதம் 9.6.38
சசபிந்தோர் துஹிதரி பிந்துமத்யாம் அதான் ந்ருப:
புருகுத்ஸம் அம்பரீஷம் முசுகுந்தம் ச யோகினம்
தேஷாம் ஸ்வஸார: பஞ்சாசத் ஸௌபரிம் வவ்ரிரே பதிம்
சசபிந்தோ:—சசபிந்து என்ற அரசரின்; துஹிதரி—மகள் மூலமாக; பிந்துமத்யாம்—பிந்துமதி என்ற; அதாத்—ஈன்றார்; ந்ருப:—அரசர் (மாந்தாதா); புருகுத்ஸம்—புருகுத்ஸன்; அம்பரீஷம்—அம்பரீஷர்; முசுகுந்தம்—முசுகுந்தன்; ச—மேலும்; யோகினம்—சிறந்த யோகி; தேஷாம்—அவர்களின்; ஸ்வஸார:—சகோதரிகள்; பஞ்சாசத்—ஐம்பது; ஸௌபரிம்—சபரி முனிவரை; வவ்ரிரே—ஏற்றனர்; பதிம்—கணவராக.
சசபிந்துவின் மகளான பிந்துமதியின் மூலமாக, புருகுத்ஸன், அம்பரீஷர் மற்றும் முசுகுந்தன் ஆகிய மூன்று மகன்களை மாந்தாதா ஈன்றார். இவர்களுள் முசுகுந்தன் மிகச்சிறந்த ஒரு யோகியாவார். இம்மூன்று சகோதரர்களுக்கு ஐம்பது சகோதரிகள் இருந்தனர். இவர்களனைவரும் சபரி மாமுனிவரைத் தங்கள் கணவராக ஏற்றனர்.
பதங்கள் 9.6.39 – 9.6.40
யமுணாந்தர்-ஜலே மக்னஸ் தப்யமான: பரம் தப:
நிர்வ்ருதிம் மீன-ராஜஸ்ய த்ருஷ்ட்வா மைதுன-தர்மின:
ஜாத-ஸ்ப்ருஹோ ந்ருபம் விப்ர: கன்யாம் ஏகாம் அயாசத
ஸோ’பி ஆஹ க்ருஹ்யதாம் ப்ரஹ்மன் காமம் கன்யா ஸ்வயம்வரே
யமுனா-அந்த:-ஜலே—யமுனை நதியின் ஆழமான நீருக்குள்; மக்ன:—முழுமையாக ஆழ்ந்திருந்தார்; தப்யமான:—தவங்களைச் செய்வதில்; பரம்—அசாதாரணமான; தப:—தவம்; நிர்வ்ருதிம்—சுகம்; மீன-ராஜஸ்ய—ஒரு பெரிய மீன்; த்ருஷ்ட்வா—கண்டு; மைதுன-தர்மிண:—உடலுறவு விவகாரத்தில் ஈடுபட்டிருப்பதை; ஜாத-ஸ்ப்ருஹ:—காம வேட்கை தூண்டப்பட்டவரானார்; ந்ருபம்—அரசரிடம் (மாந்தாதா); விப்ர:—பிராமணர் (சபரிமுனி); கன்யாம் ஏகாம்—ஒரு மகளை; ஆயாசத—கேட்டார்; ஸ:—அவர், அரசர்; அபி—கூட; ஆஹ—கூறினார்; க்ருஹ்யதாம்—நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்; ப்ரஹ்மன்—பிராமணரே; காமம்—அவளது விருப்பம் போல்; கன்யா—மகள்; ஸ்வயம்வரே—சுயம்வரம்.
யமுனை நதிக்கடியில் தவத்தில் ஈடுபட்டிருந்த சபரி முனி இரு மீன்கள் உடலுறவு விவகாரத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். இவ்வாறாக சிற்றின்ப வாழ்வின் சுகத்தை உணர்ந்து, அந்த ஆசையால் தூண்டப்பட்ட அவர் மாந்தாதா மகாராஜனிடம் சென்று ராஜகுமாரிகளில் ஒருத்தியைத் தரும்படி யாசித்தார். இந்த வேண்டுகோளுக்கு பதிலாக அரசர் கூறினார். “பிராமணரே, என் புதல்விகளில் ஒவ்வொருவரும் தன் விருப்பப்படி எந்த கணவரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.”
பதங்கள் 9.6.41 – 9.6.42
ஸ விசிந்த்யாப்ரியம் ஸ்த்ரீணாம் ஜரடோ ‘ஹம் அஸன்-மத:
வலீ-பலித ஏஜத்-க இதி அஹம் ப்ரத்யுதாஹ்ருத:
ஸாதயிஷ்யே ததாத்மானம் ஸுர-ஸ்த்ரீணாம் அபீப்ஸிதம்
கிம் புனர் மனுஜேந்ராணாம் இதி வ்யவஸித: ப்ரபு:
ஸ:—அவர்; சபரிமுனி; விசிந்த்ய—என்று தனக்குள் நினைத்து; அப்ரியம்—விரும்பாதவன்; ஸ்த்ரீணாம்—பெண்கள்; ஜரட:—மூப்பினால் தளர்ந்தவன்; அஹம்—நான்; அஸத்:-மத:—அவர்களால் விரும்பப்படாதவன்; வலீ—சதை சுருங்கியவன்; பலித:—நரை விழுந்தவன்; ஏஜத்-க:—தலையாடுபவன்; இதி—இவ்விதமாக; அஹம்—நான்; ப்ரத்யுதாஹ்ருத:—(அவர்களால்) ஒதுக்கப்பட்டேன்; ஸாதயிஷ்யே—அத்தகைய முறையில் நான் செயற்படப் போகிறேன்; ததா—போல்; ஆத்மானம்—என்னுடல்; ஸுர-ஸ்த்ரீணாம்—தேவ மங்கையருக்கு; அபீப்ஸிதம்—விரும்பத்தக்க; கிம்—பற்றி சொல்லத் தேவையில்லை; புன:—இருப்பினும்; மனுஜ-இந்ராணாம்—இகலோக அரசர்களின் குமாரிகளை; இதி—இவ்விதமாக; வ்யவஸித:—உறுதி கொண்டார்; ப்ரபு:—சக்திவாய்ந்த யோகியான சபரிமுனி.
சபரிமுனி எண்ணினார்: இப்பொழுது நான் முதுமையின் காரணத்தால் பலவீனம் அடைந்திருக்கிறேன். முடியும் நரைத்து விட்டது. தோல் தளர்ந்துவிட்டது. தலை ஆடுகிறது. தவிரவும் நனோ ஒரு யோகி, எனவே பெண்கள் என்னை விரும்பவில்லை. இவ்வாறாக அரசரும் என்னைக் கைவிட்டதால், தேவ மங்கையரும் விரும்பும் வகையில் என்னுடைய உடலை நான் சீர்படுத்திக்கொள்ளப் போகிறேன். இகலோக அரசகுமாரிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
பதம் 9.6.43
முனி: ப்ரவேசித க்ஷத்ரா கன்யாந்தஹ்புரம் ருத்திமத் வ்ருத: ஸ ராஜ-கண்யாபிர் ஏகம் பஞ்சாசதா வர:
முனி:—சபரிமுனி; ப்ரவேசித:—பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டார்; க்ஷத்ரா—அரண்மனைத் தூதுவனால்; கன்யா-அந்தஹ்புரம்—அரச குமாரிகளின் அந்தப்புரத்தினுள்; ருத்தி-மத்—எல்லா வகையிலும் செல்வம் கொழிக்கும்; வ்ருத:—ஏற்கப்பட்டார்; ஸ:—அவர்; ராஜ-கன்யாபி:—ராஜ குமாரிகளால்; ஏகம்—அவர் ஒருவரே; பஞ்சாசதா—ஐம்பது பெண்களாலும்; வர:—கணவராக.
அதன்பிறகு, சபரிமுனி மிகவும் இளமையானவராகவும், அழகு மிக்கவராகவும் மாறியதும், அரண்மனைத் தூதவன் அவரைச் செல்வம் கொழிக்கும் அரச குமாரிகளின் அந்தப்புரத்திற்குள் அழைத்துச் சென்றான். அங்கிருந்த ஐம்பது அரசகுமாரிகளும் அவர் ஒருவரையே தங்கள் கணவராக ஏற்றுக்கொண்டனர்.
பதம் 9.6.44
தாஸாம் கலிர் அபூத் பூயாம்ஸ் தத்-அர்தே ‘போஹ்ய ஸௌஹ்ருதம்
மமானுரூபோ நாயம் வ இதி தத்-கத சேதஸாம்
தாஸாம்—எல்லா அரச குமாரிகளுக்கிடையிலும்; கலி:—சண்டை, சச்சரவுகள்; அபூத்—ஏற்பட்டது; பூயான்—பெரும்; தத்-அர்தே—சபரிமுனிவரின் பொருட்டு; அபோஹ்ய—கைவிட்டு; ஸௌஹ்ருதம்—நல்ல உறவுமுறையையும்; மம—எனக்கே; அனுரூப:—தகுதியுடையவர்; ந—இல்லை; அயம்—இவர்; வ:—உன்னுடையவர்; இதி—இவ்விதமாக; தத்-கத-சேதஸாம்—அவரால் கவரப்பட்டு.
அதன்பிறகு, சபரி முனியால் கவரப்பட்ட அரச குமாரிகள், தங்களுடைய சகோதரி உறவுமுறையையும் கைவிட்டு, “எனக்குத்தான் இவர் பொருத்தமானவர், உனக்கல்ல” என்று போட்டியிட்டவாறு” ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். இவ்விதமாக அங்கு பெரியதொரு மனஸ்தாபம் விளைந்தது.
பதங்கள் 9.6.45 – 9.6.46
ஸ பஹு-ருசஸ் தாபிர் ஆபாரணீய-
தப: ஸ்ரியானர்க்ய-பரிச்சதேஷு
க்ருஹேஷு நானோபவனாமலாம்ப:-
ஸரஹ்ஸு ஸௌகந்திக கானனேஷு
மஹார்ஹ-சய்யாஸன-வஸ்த்ர-பூஷண-ஸ்னானானுலேபாப்யவஹார-மால்யகை:
ஸ்வலங்க்ருத-ஸ்த்ரீ-புருஷேஷு நித்யதா
ரேமே ‘நுகாயத்-த்விஜ-ப்ருங்க-வந்திஷு
ஸ:—அவர், சபரிமுனி; பஹு-ருச:—வேத மந்திரங்களைப் பிரயோகிப்பதில் மிகவும் கைதேர்ந்தவரான; தாபி:—அவரது மனைவிகளுடன்: அபாரணிய—எல்லையற்ற; தப:—தவப்பயன்; ஸ்ரியா—ஐசுவரியங்களால்; அனர்க்ய—இன்பமளிக்கும் பொருட்கள்; பரிச்சதேஷு—பல்வேறு ஆடை அணிகலன்கள்; க்ருஹேஷு—வீட்டிலும், அறைகளிலும்; நானா—பலவகைப்பட்ட; உபவன—பூங்காவனங்கள்; அமல—தூய; அம்ப:—நீர்; ஸரஹ்ஸு—ஏரிகளில்; ஸௌகந்திக—மிகவும் நறுமணமுள்ள; கானனேஷு—தோட்டங்களில்; மஹா-அர்ஹ—விலையுயர்ந்த; சய்யா—படுக்கை; ஆஸன—ஆசனங்கள்; வஸ்த்ர—துணிமணிகள்; பூஷண—ஆபரணங்கள்; ஸ்னான—குளிக்கும் இடங்கள்; அனுலேப—சந்தனக்கட்டை; ஆப்யவஹார—அறுசுவை உணவுகள்; மால்யகை:—மற்றும் மாலைகளுடன்; ஸு-அலங்க்ருத—நன்கு உடுத்தி அலங்கரிக்கப்பட்ட; ஸ்த்ரீ—பெண்கள்; புருஷேஷு—ஆண்களுடன் கூட; நித்யதா—இடைவிடாமல்; ரேமே—அனுபவித்தனர்; அனுகாய-த்விஜ—குருவிகளின் கீச்சிடும் சப்தங்கள்; ப்ருங்க—பெரிய தேனீக்கள்; வந்திஷு—மற்றும் பாடகர்கள்.
சபரிமுனி பிழையின்றி வேத மந்திரங்களை உச்சரிப்பதில் கைதேர்ந்தவர் என்பதால், அவரது கடுந்தவங்களின் பயனாக பின்வரும் விஷயங்களை அவர் அடையப்பெற்றார். செல்வம் கொழிக்கும் வீடு, ஆடை அணிகலன்கள், நன்கு உடையணிந்து அலங்கரிக்கப்பட்டிருந்த பணிப்பெண்கள், பணியாட்கள், சுத்தமான நீர் கொண்ட ஏரிகள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றைக் கொண்ட பலவகையான பூங்காவனங்கள். பலவகையான பூக்களின் நறுமணங்களால் நிரப்பப்பட்டிருந்த பூங்காவனத்தில், பாடகர்களால் சூழப்பட்டவாறு பறவைகளின் கீச்சிடும் ஓசையும், வண்டுகளின் ரீங்காரமும் ஒலித்தன. சபரிமுனிவரின் வீட்டில் ஏராளமான விலையுயர்ந்த படுக்கைகள், ஆசனங்கள், ஆபரணங்கள் ஆகியவையும், குளிப்பதற்கான வசதிகளும், பலவகையான சந்தனக் குழம்புகளும், மலர் மாலைகளும், மற்றும் அறுசுவை உணவு வகைகளும் இருந்தன. இவ்வாறாக செல்வம் கொழிக்கும் பொருட்களால் சூழப்பட்டிருந்த முனிவர் அவரது அநேக மனைவிகளுடன் குடும்ப விவகாரங்களில் ஈடுபட்டிருந்தார்.
பதம் 9.6.47
யத்-கார்ஹஸ்த்யம் து ஸம்வீக்ஷ்ய ஸப்த-த்வீபவதீ-பதி:
விஸ்மித: ஸ்தம்பம் அஜஹாத் ஸார்வபௌம-ஸ்ரியான்விதம்
யத்—யாருடைய; கார்ஹஸ்த்யம்—குடும்ப வாழ்வை; து—ஆனால்; ஸம்வீக்ஷ்ய—கண்டு; ஸப்த-த்வீப-வதீ-பதி:—ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலகிற்கும் அரசரான மாந்தாதா; விஸ்மித:—ஆச்சர்யத்தால் ஸ்தம்பித்துப் போனார்; ஸ்தம்பம்—கௌரவமான ஒரு அந்தஸ்தினால் விளைந்த கர்வத்தை; அஜஹாத்—அவர் கைவிட்டார்; ஸர்வ-பௌம—உலகிற்கே பேரரசரான; ஸ்ரியா-அன்விதம்—எல்லா வகையான ஐசுவரியங்களையும் பெற்றிருப்பதை.
ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலகிற்கும் பேரரசராக விளங்கிய மாந்தாதா, சபரி முனியின் ஐசுவரியத்தைக் கண்டு ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போனார். இவ்வாறாக, தான் உலகிற்கே பேரரசர் என்ற பொய் அகங்காரத்தை அவர் கைவிட்டார்.
பதம் 9.6.48
ஏவம் க்ருஹேஷு அபிரதோ விஷயான் விவிதை: ஸுகை:
ஸேவமானோ ந சாதுஷ்யத் ஆஜ்ய-ஸ்தோகைர் இவானல:
ஏவம்—இவ்வாறாக; க்ருஹேஷு—குடும்ப விவகாரங்களில்; அபிரத—எப்பொழுதும் ஈடுபட்டிருந்தார்; விஷயான்—பௌதிக பொருட்கள்; விவிதை:—பலவகையான பொருட்களுடன்; ஸுகை:—மகிழ்ச்சி; ஸேவமான:—அனுபவித்து; ந—இல்லை; ச—கூட; அதுஷ்யத்—அவரை திருப்திப்படுத்தியது; ஆஜ்ய-ஸ்தோகை:—நெய்த்துளிகளால்; இவ—போல; அனல:—தீ.
இவ்வாறாக சபரிமுனிவர் இந்த ஜட உலகில் புலன்நுகர்வை அனுபவித்தார். ஆனால் தொடர்ந்து நெய்த்துளிகளை விடுவதால் தீ அணைந்து விடுவதில்லை என்பது போலவே, அவர் சிறிதும் திருப்தியடையவில்லை.
பதம் 9.6.49
ஸ கதாசித் உபாஸின ஆத்மாபஹ்னவம் ஆத்மன:
ததர்ச பஹு-ருசாசார்யோ மீன-ஸங்க-ஸமுத்திதம்
ஸ:—அவர், சபரிமுனி; கதாசித்—ஒருநாள்; உபாஸீன:—அமர்ந்து; ஆத்ம-அபஹ்னவம்—தவ நிலையிலிருந்து ஒருவரை இழிவுபடுத்தும்; ஆத்மன:—தானே காரணம்; ததர்ச—கண்டார்; பஹு-ருச-ஆசார்ய:—மந்திரங்களை உச்சரிப்பதில் கைதேர்ந்தவரான சபரிமுனி; மீன-ஸங்க—மீன்களின் சிற்றின்ப விவகாரம்; ஸமுத்திதம்—இச்சம்பவத்தால் விளைந்தது.
அதன்பிறகு ஒருநாள், மந்திரங்களை உச்சரிப்பதில் கைதேர்ந்தவரான சபரிமுனி தனியான ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது, தனது வீழ்ச்சியின் காரணத்தைப் பற்றி சிந்தித்தார். மீன்களின் சிற்றின்ப விவகாரங்களுடன் தான் கண்களால் தொடர்பு கொண்டதே இதற்குக் காரணமென்பதையும் உணர்ந்தார்.
பதம் 9.6.50
அஹோ இமம் பஸ்யத மே வினாசம்
தபஸ்வின: ஸச்-சரித-வ்ரதஸ்ய
அந்தர்ஜலே வாரி-சர ப்ரஸங்காத்
ப்ரச்யாவிதம் ப்ரஹ்ம சிரம் த்ருதம் யத்
அஹோ—ஐயகோ; இமம்—இதை; பஸ்யத—சற்றே கவனியுங்கள்; மே—என்னுடைய; வினாஸம்—வீழ்ச்சியை; தபஸ்வின:—இத்தகைய ஒரு சிறந்த அஷ்டாங்க யோக தபஸ்வியான; ஸத்-சரித—எல்லா விதிமுறைகளையும் அனுஷ்டித்து, ஒழுக்கசீலனாக இருந்த; வ்ரதஸ்ய—உறுதியாக விரதம் பூண்டவனின்; அந்த:-ஐலே—நீருக்கடியில்; வாரி-சர-ப்ரஸங்காத்—நீரினங்களின் விவகாரத்தின் காரணத்தால்; ப்ரச்யாவிதம்—விழுந்துவிட்ட; ப்ரஹ்ம—தவத்திலிருந்து அல்லது பிரம்மத்தை உணர்வதிலிருந்து; சிரம்—நீண்ட காலமாக; த்ருதம்—செய்து வந்த; யத்—எது.
ஐயகோ! சாதுக்களால் அனுஷ்டிக்கப்படும் எல்லா விதிமுறைகளையும் பின்பற்றி, நீருக்கடியில் நான் தவமியற்றியபோதிலும், மீன்களின் சிற்றின்ப விவகாரங்களுடன் கண்களால் தொடர்பு கொண்டதாலேயே, நீண்ட கால தவப் பயனை நான் இழந்தவனானேன். அனைவரும் இவ்வீழ்ச்சியைக் கண்டு, இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பதம் 9.6.51
ஸங்கம் த்யஜேத மிதுன-வ்ரதீனாம் முமுக்ஷு:
ஸர்வாத்மனா ந விஸ்ருஜேத் பஹிர்-இந்ரியாணி
ஏகஸ் சரன் ரஹஸி சித்தம் அனந்த ஈசே
யுஞ்ஜீத் தத்-வ்ரதிஷு ஸாதுஷு சேத் ப்ரஸங்க:
ஸங்கம்—உறவை; த்யஜேத—கைவிட வேண்டும்; மிதுன-வ்ரதீனாம்—முறையான அல்லது முறைகேடான சிற்றின்ப விவகாரங்களில் ஈடுபட்டுள்ளவனின்; முமுக்ஷு:—முக்தியை நாடுபவர்கள்; ஸர்வ-ஆத்மனா—எல்லா வகைகளிலும்; ந—கூடாது; விஸ்ருஜேத்—ஈடுபடுத்த; பஹி:-இந்ரியாணி—புற புலன்களை; ஏக:—மட்டுமே; சரன்—சென்று; ரஹஸி—தனிமையான ஓரிடத்தில்; சித்தம்—இதயம்; அனந்தே ஈசே—எல்லையற்ற பரமபுருஷரின் கமலபாதங்களில் நிலைத்து; யுஞ்ஜீத—ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம்; தத் வ்ரதிஷு—(பௌதிக பந்தத்திலிருந்து முக்தியடைய விரும்பும்) ஒரே எண்ணத்தைக் கொண்டவர்களுடன்; ஸாதுஷு—அத்தகைய சாதுக்கள்; சேத்—என்றால்; ப்ரஸங்க:—சகவாசத்தை ஒருவர் விரும்புவார்.
பெளதிக பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தியடைய விரும்பும் ஒருவன் சிற்றின்ப வாழ்வில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களின் சகவாசத்தைக் கைவிடுவதுடன், புலன்களை (காண்பது, கேட்பது, பேசுவது மற்றும் நடப்பது போன்ற) புறவிஷயங்களில் ஈடுபடுத்துவதையும் கைவிட வேண்டும். ஒருவன் எப்பொழுதும் தனிமையான ஓரிடத்திலேயே வாழ்ந்து, எல்லையற்ற பரமபுருஷரின் பத்ம பாதங்களில் மனதைப் பூரணமாக பதியச் செய்ய வேண்டும். மேலும் பிறர் சகவாசத்தை ஒருவர் விரும்பினார், அவன் மேற்கொண்ட செயல்களில் ஈடுபட்டுள்ள மனிதர்களோடு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.
பதம் 9.6.52
ஏகஸ் தபஸ்வி அஹம் அதாம்பஸி மத்ஸ்ய-ஸங்காத் பஞ்சாசத் ஆஸம் உத பஞ்ச-ஸஹஸ்ர-ஸர்க:
நாந்தம் வ்ரஜாமி உபய-க்ருத்ய-மனோரதானாம்
மாயா குணைர் ஹ்ருத-மதிர் விஷயே ‘ர்த-பாவ:
ஏக:—ஒருவனாக மட்டுமே இருந்தேன்; தபஸ்வீ—தபஸ்வியான; அஹம்—நான்; அத—இவ்வாறாக; அம்பஸி—நீருக்கடியில்; மத்ஸ்ய-ஸங்காத்—மீன்களுடன் சகவாசம் கொண்டதால்; பஞ்சாசத்—ஐம்பது; ஆஸம்—மனைவிகளைப் பெற்றேன்; உத—அவர்கள் ஒவ்வொருவரிலும் நூறு நூறு மகன்களைப் பெற்றேன் என்பதைச் சொல்லத்தேவையில்லை; பஞ்ச-ஸஹஸ்ர-ஸர்க:—ஐயாயிரம் சந்ததியினரை உண்டுபண்ணி; ந அந்தம் வ்ரஜாமி—என்னால் முடிவையே காண முடியவில்லை; உபய-க்ருத்ய—இப்பிறவியிலும்; அடுத்ததிலும் உள்ள கடமைகளுக்கு; மனோரதானாம்—மனோராஜ்யம்; மாயா-குணை:—ஜட இயற்கைக் குணங்களால் தூண்டப்பட்டு; ஹ்ருத—இழந்தேன்; மதி: விஷயே—பௌதிக விஷயங்களிலுள்ள பெரும் கவர்ச்சியை; அர்த்த-பாவ:—சுயநல விவகாரங்கள்.
முதலில் தனியாக இருந்த நான், அஷ்டாங்க யோக தவத்தில் ஈடுபட்டிருந்தேன். ஆனால் பிறகு, சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்த மீன்களின் சகவாசத்தினால் நான் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன். பிறகு ஐம்பது மனைவிகளுக்குக் கணவனாகிய நான், அவர்கள் ஒவ்வொருவரிலும் நூறு மகன்களைப் பெற்றேன். இவ்வாறாக என் குடும்பம் ஐயாயிரம் அங்கத்தினர்கள் கொண்டதாக அதிகரித்தது. ஜட இயற்கைக் குணங்களின் தூண்டுதலால் இழிவடைந்த நான், பௌதிக வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று எண்ணினேன். இவ்வாறாக இப்பிறவியிலும், அடுத்ததிலும் இன்பம் அனுபவிக்க வேண்டுமென்ற என்னுடைய பௌதிக ஆசைகளுக்கு ஒரு முடிவே இல்லை.
பதம் 9.6.53
ஏவம் வஸன் க்ருஹே காலம் விரக்தோ ஞாஸம் ஆஸ்தித:
வனம் ஜகாமானுயயுஸ் தத்-பத்ன்ய: பதி-தேவத:
ஏவம்—இவ்விதமாக; வஸன்—வாழ்ந்து; க்ருஹே—வீட்டில்; காலம்—காலத்தைக் கழித்து; விரக்த:—பற்றற்றவரானார்; ஞாஸம்—துறவு வாழ்வில்; ஆஸ்தித:—நிலைபெற்றார்; வனம்—வனத்திற்கு; ஜகாம—அவர் சென்றார்; அனுயயு:—பின் தொடரப்பட்டார்; தத்-பத்ன்ய:—அவரது எல்லா மனைவிகளாலும்; பதி-தேவதா:—அவர்களுடைய வழிபாட்டுக்குரிய பொருளாக இருந்தவர் அவர்களது கணவர் மட்டுமே என்பதால்.
இவ்வாறாக சிலகாலத்திற்கு குடும்ப விவகாரங்களில் தன் வாழ்வை அவர் கழித்தார். பெளதிக சகவாசத்தைத் துறப்பதற்காக அவர் வானப்பிரஸ்த வாழ்வை ஏற்று, காட்டிற்கும் சென்றார். தங்களது கணவரைத் தவிர வேறு புகலிடம் இல்லாத அவரது தர்ம பத்தினிகளும் அவரைப் பின்தொடர்ந்தனர்.
பதம் 9.6.54
தத்ர தப்த்வா தபஸ் தீக்ஷ்ணம் ஆத்ம-தர்சனம் ஆத்மவான்
ஸஹைவாக்னிபிர் ஆத்மானம் யுயோஜ பரமாத்மனி
தத்ர—காட்டில்; தப்த்வா—தவமியற்றி; தப:—தவ விதிமுறைகள்; தீக்ஷணம்—மிகக் கடுமையாக; ஆத்ம-தர்சனம்—தன்னுணர்வு பெற உதவும்; ஆத்மவான்—தன்னில் பரிச்சயமுள்ள; ஸஹ—உடன்; ஏவ—நிச்சயமாக; அக்னிபி:—தீ; ஆத்மானம்—சொந்த ஆத்மா; யுயோஜ—அவர் ஈடுபட்டார்; பரம-ஆத்மனி—பரமாத்மாவுடனான விவகாரத்தில்.
ஆத்மாவில் நல்ல பரிச்சயம் உள்ளவரான சபரிமுனி காட்டிற்குச் சென்று கடுந்தவங்களை மேற்கொண்டார். இவ்விதமாக, மரணத்தின் போது ஏற்படும் தீயில் அவர் இறுதியாக தம்மை பரமபுருஷரின் தொண்டில் ஈடுபடுத்திக் கொண்டார்.
பதம் 9.6.55
தா: ஸ்வ-பத்யுர் மஹாராஜ நிரீக்ஷ்யாத்யாத்மிகீம் கதிம்
அன்வீயுஸ் தத்-ப்ரபாவேண அக்னிம் சாந்தம் இவார்சிஷ:
தா:—சபரியின் எல்லா மனைவிகளும்; ஸ்வ-பத்யு:—அவர்களது சொந்த கணவருடன்; மஹாராஜ—பரீட்சித்து மகாராஜனே; நிரீக்ஷ்ய—கண்டு; அத்யாத்மிகீம்—ஆன்மீக; கதிம்—முன்னேற்றம்; அன்வீயு:—பின்தொடர்ந்தனர்; தத்-ப்ரபாவேண—தங்களுடைய கணவரின் செல்வாக்கினால் (அவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தும்; அவர்களது கணவரின் செல்வாக்கினால் அவர்களாலும் ஆன்மீக உலகிற்குச் செல்ல முடிந்தது); அக்னிம்—அக்னி; சாந்தம்—முற்றிலும் அணைந்து விடும்; இவ—போல்; அர்சிஷ:—தீச்சுடர்களை.
பரீட்சித்து மகாராஜனே, தங்கள் கணவர் ஆன்மீக உலகிற்கு முன்னேறிச் செல்வதைக் கண்டதால், சபரிமுனியின் ஆன்மீக சக்தியால் அவரது மனைவிகளாலும் ஆன்மீக உலகினுள் பிரவேசிக்க முடிந்தது. தீ அணைக்கப்பட்டதும் அதன் சுடர்களும் நின்றுவிடுவதற்கு இது ஒப்பாகும்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “சபரி முனிவரின் வீழ்ச்சி” எனும் தலைப்பை கொண்ட ஆறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.