அத்தியாயம் – 6
சபரி முனிவரின் வீழ்ச்சி
பதம் 9.6.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, அம்பரீஷருக்கு விரூபன், கேதுமான் மற்றும் சம்பு என்ற மூன்று மகன்கள் இருந்தனர். விரூபனுக்கு பிருஷதஸ்வனும், பிருஷதஸ்வனுக்கு ரதீதரனும் மகன்களாகப் பிறந்தனர்.
பதம் 9.6.2 : ரதீதரனுக்கு மகன்களில்லாததால், தனக்கு மகன்களைப் பெற்றுத் தரும்படி அங்கிர மாமுனிவரை ரதீதரன் வேண்டிக்கொண்டார். இந்த வேண்டுகோளின்படி, அங்கிரர், ரதீதரனுடைய மனைவியின் மூலமாக பிராமண சக்திகளைக் கொண்ட மகன்களைப் பெற்றெடுத்தார்.
பதம் 9.6.3 : ரதீதரனுடைய மனைவியின் மூலமாகப் பிறந்ததால் இவ்வெல்லா மகன்களும் ரதீதர வம்சம் என்றும், அங்கிரரரின் விந்திலிருந்து பிறந்ததால் இவர்கள் அங்கிர வம்சம் என்றும் அழைக்கப்பட்டனர். ரதீதரனின் குழந்தைகளிலேயே இந்த மகன்கள் மிகவும் முக்கியமானவர்களாவர். ஏனெனில் பிறப்பின் காரணத்தால் இவர்கள் பிராமணர்களாகக் கருதப்பட்டனர்.
பதம் 9.6.4 : இக்ஷ்வாகு மனுவின் புத்திரராவார். மனு தும்மும்பொழுது, அவரது நாசித் துவாரங்களிலிருந்து இக்ஷ்வாகு பிறந்தார். இஷ்வாகு மகாராஜனுக்கு நூறு மகன்கள் இருந்தனர். அவர்களுள் விகுக்ஷி, நிமி மற்றும் தண்டகன் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்களாவர்.
பதம் 9.6.5 : நூறு மகன்களில் இருபத்தைந்து பேர், இமய மலைக்கும், விந்திய மலைக்கும் இடையிலுள்ள ஆரியவர்தத்தின் மேற்குப் பகுதிக்கு அரசர்களாயினர். மற்றொரு இருபத்தைந்து பேர் ஆரியவர்தத்தின் கிழக்குப் பகுதிக்கு அரசர்களாயினர். முக்கியமான மூன்று மகன்கள் மத்திய பகுதிக்கு அரசர்களாயினர். மற்ற மகன்கள் வேறு பல இடங்களுக்கு அரசர்களாயினர்.
பதம் 9.6.6 : ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முன்னோர்களுக்குச் செய்யும் படையல்கள் அஷ்டகா-ஸ்ராத்தம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஸ்ராத்த சடங்கு மாதத்தின் தேய்பிறைக் காலத்தில் நடத்தப்படுகிறது. இச்சடங்கில் படைப்பதற்காக, இஷ்வாகு மகாராஜன் தன் மகனான விகுக்ஷுவை உடனே காட்டிற்குச் சென்று கொஞ்சம் சுத்தமான மாமிசத்தைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டார்.
பதம் 9.6.7 : அதன்பிறகு, இக்ஷ்வாகுவின் மகனான விகுக்ஷி காட்டிற்குச் சென்று, படையலுக்குத் தகுந்த பல மிருகங்களைக் கொன்றார். ஆனால் பசியால் களைப்படைந்த அவர் மறந்துபோய் தான் கொன்ற ஒரு முயலைத் தின்றுவிட்டார்.
பதம் 9.6.8 : விகுக்ஷி மீதமுள்ள மாமிசத்தை இக்ஷ்வாகு மகாராஜனிடம் கொடுத்தார். அவரும் அதை தூய்மைப்படுத்துவதற்காக வசிஷ்டரிடம் கொடுத்தார். ஆனால் விகுக்ஷி அந்த மாமிசத்தின் ஒரு பகுதியை சாப்பிட்டுவிட்டார் என்பதை உடனே வசிஷ்டரால் அறிந்து கொள்ள முடிந்தது. எனவே ஸ்ராத்த சடங்கில் அது உபயோகிக்க தகுந்ததல்ல என்று கூறிவிட்டார்.
பதம் 9.6.9 : வசிஷ்டரால் இவ்வாறு அறிவிக்கப்பட்டதும், தன் மகன் விகுக்ஷி செய்திருப்பதைப் புரிந்துகொண்ட இக்ஷ்வாகு மகாராஜன் மிகவும் கோபமடைந்தார். இவ்வாறாக விகுக்ஷி கட்டுப்பாட்டு விதிகளை மீறியதால், நாட்டை விட்டே வெளியேறும்படி அவருக்குக் கட்டளையிட்டார்.
பதம் 9.6.10 : கற்றறிந்த சிறந்த பிராமணரான வசிஷ்டரிடமிருந்து பரம சத்தியத்தைப் பற்றிய உபதேசத்தைப் பெற்று இக்ஷ்வாகு மகாராஜன் துறவு பூண்டார். ஒரு யோகிக்குரிய கொள்கைகளைப் பின்பற்றியதன் மூலம், இந்த ஜட உடலை விட்டபின் பரம பூரணத்துவத்தை அவர் அடைந்தார்.
பதம் 9.6.11 : அவரது தந்தையின் மறைவுக்குப்பின் நாடு திரும்பிய விகுக்ஷி, அரசராகி மண்ணுலகை ஆண்டு வந்ததுடன், பல்வேறு யாகங்களைச் செய்து பரமபுருஷரை திருப்திப்படுத்தினார். பிற்காலத்தில் விகுக்ஷி சசாதன் என்று புகழப்பட்டார்.
பதம் 9.6.12 : சசாதனின் மகன் புரஞ்ஜயன். அவர் இந்திரவாகனன் என்றும், சிலசமயங்களில் ககுத்ஸ்தன் என்றும் அறியப்பட்டார். வெவ்வேறு செயல்களுக்குரிய வேறுபட்ட பெயர்களை எப்படி அவர் பெற்றார் என்பதை தயவுகூர்ந்து கேளும்.
பதம் 9.6.13 : முன்பு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நாசம் விளைவிக்கும் யுத்தம் ஒன்று நிகழ்ந்தது. தோற்றுப்போன தேவர்கள் புரஞ்சயனைத் தங்களுடைய உதவியாளராகக் கொண்டு அசுரர்களை வென்றனர். எனவே வீரரான அவர், புரஞ்ஜயன் (“அசுரர்களின் வசிப்பிடத்தை வென்றவர்”) என்று அழைக்கப்படுகிறார்.
பதம் 9.6.14 : இந்திரன் தன் வாகனமாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன், புரஞ்ஜயன் எல்லா அசுரர்களையும் கொல்ல சம்மதித்தார். தற்பெருமையின் காரணத்தால் இதை இந்திரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் பிறகு, பரமபுருஷரான விஷ்ணுவின் உத்தரவால் அதை ஏற்றுக் கொண்ட இந்திரன், புரஞ்ஜயனின் மிகப்பெரிய எருது வாகனமானார்.
பதங்கள் 9.6.15 – 9.6.16 : கவசத்தால் நன்கு பாதுகாக்கப்பட்டிருந்த புரஞ்ஜயன், யுத்தம் செய்யும் விருப்பத்துடன், திவ்யமான ஒரு வில்லையும் கூரிய அம்புகளையும் கைகளில் எடுத்து, தேவர்கள் புகழ, எருதின் (இந்திரனின்) மீதேறி அதன் திமில் மீது அமர்ந்தார். இதனால் அவர் ககுத்ஸ்தன் எனப்பட்டார். பரமாத்மாவும், பரமபுருஷருமான பகவான் விஷ்ணுவால் சக்தியளிக்கப்பட்ட புரஞ்ஜயன் அப்பெரிய எருதின் மேல் அமர்ந்ததால் அவர் இந்திரவாகனன் எனப்பட்டார். தேவர்களால் சூழப்பட்டிருந்த அவர், மேற்குத் திசையிலிருந்து அசுரர்களின் வசிப்பிடத்தைத் தாக்கினார்.
பதம் 9.6.17 : புரஞ்ஜயனுக்கும், அசுரர்களுக்கும் இடையில் கொடூரமான யுத்தம் நிகழ்ந்தது. உண்மையிலேயே அது மிகவும் கொடூரமாக இருந்ததால், அதைப்பற்றி கேட்டாலும் ஒருவருக்கு மயிர் சிலிர்க்கும். புரஞ்ஜயன் முன் வரத் துணிவு கொண்ட எல்லா அசுரர்களும், அவரது அம்புகளால் உடனடியாக யமலோகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
பதம் 9.6.18 : யுகமுடிவில் தோன்றும் காலாக்கினியை ஒத்திருந்த, இந்திரவாகனனின் தீப்பறக்கும் அம்புகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியிருந்த அசுரர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு விரைந்து ஓட்டம் பிடித்தனர்.
பதம் 9.6.19 : எதிரிகளை வென்றபின், ராஜரிஷியான புரஞ்ஜயன், எதிரிகளின் செல்வங்கள் மற்றும் மனைவிகள் உட்பட அனைத்தையும், வஜ்ராயுதத்தை வைத்திருப்பவரான இந்திரனிடம் ஒப்படைத்தார். இதனால் அவர் புரஞ்ஜயன் என்று புகழப்பட்டார். இவ்வாறாக புரஞ்ஜயனின் வெவ்வேறு செயல்களால் அவர் வேறுபட்ட பெயர்களுடன் அழைக்கப்பட்டார்.
பதம் 9.6.20 : புரஞ்ஜயனின் மகன் அனேனன் என்றும், அனேனனின் மகன் பிருது என்றும், அவரது மகன் விஸ்வகந்தி என்றும், அவரது மகன் சந்திரன் என்றும், சந்திரனின் மகன் யுவனாஸ்வன் என்றும் அறியப்பட்டனர்.
பதம் 9.6.21 : யுவனாஸ்வனின் மகன் சிராவஸ்தன். இவர் சிராவஸ்திபுரி என்ற நகரத்தை நிர்மாணித்தார். சிராவஸ்தனின் மகன் பிருகதஸ்வன், அவரது மகன் குவலயாஸ்வன். இவ்விதமாக இந்த வம்சம் பெருகியது.
பதம் 9.6.22 : உதங்க முனிவரை திருப்திப்படுத்துவதற்காக, மிகவும் சக்தி வாய்ந்தவரான குவலயாஸ்வன், தன்னுடைய இருபத்தோராயிரம் மகன்களின் உதவியுடன் துந்து என்ற அசுரனைக் கொன்றார்.
பதங்கள் 9.6.23 – 9.6.24 : பரீட்சித்து மகாராஜனே, இக்காரணத்தினால் குவலயாஸ்வன், துந்துமாரன் (“துந்துவைக் கொன்றவர்”) என்று புகழப்பட்டார். துந்துவின் வாயிலிருந்து வெளிப்பட்ட தீயினால், திருடாஸ்வன், கபிலாஸ்வன் மற்றும் பத்ராஸ்வன் என்ற அவரது மூன்று மகன்களைத் தவிர மற்றனைவரும் எரிந்து சாம்பலாயினர். திருடாஸ்வனிலிருந்து ஹர்யஸ்வன் என்ற மகன் வந்தார். இவரது மகன் நிகும்பன் என்று புகழப்பட்டார்.
பதம் 9.6.25 : நிகும்பனின் மகன் பஹுலாஸ்வா, பஹுலாஸ்வானின் மகன் கிருசாஸ்வா, க்ருசாஸ்வாவின் மகன் சேனாஜித், சேனாஜித்தின் மகன் யுவனாஸ்வா. யுவனஸ்வாவுக்கு மகன்கள் இல்லை, இதனால் அவர் குடும்ப வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று காட்டுக்குச் சென்றார்.
பதம் 9.6.26 : யுவனாஸ்வன் தன் நூறு மனைவிகளுடன் காட்டிற்குச் சென்ற போதிலும், அவர்களனைவரும் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர். ஆயினும் காட்டிலுள்ள முனிவர்கள் அரசரிடம் மிகவும் இரக்கம் கொண்டு, அவருக்குப் புத்திர பாக்கியம் உண்டாகச் செய்வதற்காக, மிகவும் கவனத்துடனும், ஜாக்கிரதையுடனும் ஓர் இந்தர-யாகத்தைச் செய்ய ஆரம்பித்தனர்.
பதம் 9.6.27 : ஓரிரவு தாகத்துடனிருந்த அரசர் யாக அரங்கிற்குள் நுழைந்தார். பிராமணர்கள் அனைவரும் படுத்திருப்பதைக் கண்ட அவர், தன் மனைவி குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மந்திர ஜலத்தைத் தானே எடுத்து குடித்துவிட்டார்.
பதம் 9.6.28 : படுக்கையிலிருந்து எழுந்ததும், நீர் கலசம் காலியாகக் கிடப்பதைக் கண்ட பிராமணர்கள், ஒரு குழந்தையைப் பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த நீரைக் குடித்தவர் யார் என்று வினவினர்.
பதம் 9.6.29 : பரம ஆளுனரான பகவானால் தூண்டப்பட்ட அரசர்தான் அந்த நீரைக் குடித்தவர் என்பதை அறிந்த பிராமணர்கள் அனைவரும், “ஐயகோ! தெய்வ அருள் அல்லவா உண்மையான சக்தி! பரமனின் சக்தியை யாராலும் தடுக்க முடியாது!” என்று உணர்ச்சி ததும்பக் கூறினர். இவ்விதமாக பகவானுக்குத் தங்களுடைய பணிவான வணக்கங்களை அவர்கள் சமர்ப்பித்தனர்.
பதம் 9.6.30 : அதன்பிறகு காலப்போக்கில், சக்திவாய்ந்த ஓரரசருக்குரிய எல்லா நல்ல அறிகுறிகளையும் கொண்ட ஒரு மகன், யுவனாஸ்வ மகா ராஜனுடைய வயிற்றின் வலப்பக்கத்தின் அடிப்பகுதியிலிருந்து வெளியே வந்தான்.
பதம் 9.6.31 : குழந்தை முலைப்பாலுக்காக விடாமல் அழுதுகொண்டே இருந்ததால் பிராமணர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாகி, “இக்குழந்தையை கவனித்துக்கொள்ளப் போகிறவர் யார்” என்று கேட்டனர், பிறகு அந்த யாகத்தில் வழிபடப்பட்ட இந்திரன் வந்து, “அழாதே” என்று கூறி குழந்தையைத் தேற்றினார். பிறகு இந்திரன் தனது ஆள்காட்டி விரலை குழந்தையின் வாயில் வைத்து, “நீ என்னைப் பருகு” என்று கூறினார்.
பதம் 9.6.32 : குழந்தையின் தந்தையான யுவனாஸ்வன் பிராமணர்களின் ஆசியைப் பெற்றிருந்ததால், அவர் மரணத்திற்குப் பலியாகவில்லை. இச்சம்பவத்திற்குப் பின் கடுந்தவங்களை இயற்றிய அவர் அந்த இடத்திலேயே சித்தியடைந்தார்.
பதங்கள் 9.6.33 – 9.6.34 : யுவனாஸ்வனின் மகனான மாந்தாதா துன்பம் விளைவித்த இராவணன் மற்ற திருடர்கள், மோசக்காரர்கள் போன்றவர்களின் அச்சத்திற்குக் காரணமாக இருந்தார். பரீட்சித்து மகாராஜனே, யுவனாஸ்வ புத்திரரைக் கண்டு அவர்கள் அஞ்சியதால், திரசத்தஸ்யு என்ற பெயரை இந்திரன் அவருக்குச் சூட்டினார். பரமபுருஷரின் கருணையால் யுவனாஸ்வ புத்திரர் பெரும் சக்தியைப் பெற்றிருந்ததால், அவர் ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலகிற்கும், இரண்டற்ற ஒரே சக்கரவர்த்தியாக இருந்து ஆண்டு வந்தார்.
பதங்கள் 9.6.35 – 9.6.36 : பரமபுருஷ பகவான், யாகத்திற்குத் தேவையான திரவியங்கள், வேத மந்திர பாராயணம், கட்டுப்பாட்டு விதிகள், யாகம் செய்பவர், புரோகிதர்கள், யாகப்பலன், யாக அரங்கம், மற்றும் யாகத்திற்குரிய காலம் போன்றவற்றின் மங்களகரமான அம்சங்களிலிருந்து வேறுபட்டவரல்ல. தன்னுணர்வுக் கொள்கைகளை அறிந்திருந்த மாந்ததாதா, உன்னத பரமாத்மாவாக உள்ளவரும், அனைத்து தேவர்களையும் தமக்குள் அடக்கிக் கொண்டிருப்பவருமான அந்த பரமபுருஷராகிய ஸ்ரீ விஷ்ணுவை வழிபட்டார். பிராமணர்களுக்கு ஏராளமான தான தருமங்களைச் செய்த அவர், பகவானை வழிபடுவதற்காக இத்தகைய யாகங்களைச் செய்தார்.
பதம் 9.6.37 : அடிவானத்தில், பிரகாசித்துக் கொண்டு சூரியன் உதயமாகும் இடத்திலிருந்து, அது மறையும் இடம் வரையுள்ள எல்லா இடங்களும், புகழ்பெற்ற யுவனாஸ்வ புத்திரரான மாந்தாதாவிற்குச் சொந்தமென்று கூறப்படுகிறது.
பதம் 9.6.38 : சசபிந்துவின் மகளான பிந்துமதியின் மூலமாக, புருகுத்ஸன், அம்பரீஷர் மற்றும் முசுகுந்தன் ஆகிய மூன்று மகன்களை மாந்தாதா ஈன்றார். இவர்களுள் முசுகுந்தன் மிகச்சிறந்த ஒரு யோகியாவார். இம்மூன்று சகோதரர்களுக்கு ஐம்பது சகோதரிகள் இருந்தனர். இவர்களனைவரும் சபரி மாமுனிவரைத் தங்கள் கணவராக ஏற்றனர்.
பதங்கள் 9.6.39 – 9.6.40 : யமுனை நதிக்கடியில் தவத்தில் ஈடுபட்டிருந்த சபரி முனி இரு மீன்கள் உடலுறவு விவகாரத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். இவ்வாறாக சிற்றின்ப வாழ்வின் சுகத்தை உணர்ந்து, அந்த ஆசையால் தூண்டப்பட்ட அவர் மாந்தாதா மகாராஜனிடம் சென்று ராஜகுமாரிகளில் ஒருத்தியைத் தரும்படி யாசித்தார். இந்த வேண்டுகோளுக்கு பதிலாக அரசர் கூறினார். “பிராமணரே, என் புதல்விகளில் ஒவ்வொருவரும் தன் விருப்பப்படி எந்த கணவரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.”
பதங்கள் 9.6.41 – 9.6.42 : சபரிமுனி எண்ணினார்: இப்பொழுது நான் முதுமையின் காரணத்தால் பலவீனம் அடைந்திருக்கிறேன். முடியும் நரைத்து விட்டது. தோல் தளர்ந்துவிட்டது. தலை ஆடுகிறது. தவிரவும் நனோ ஒரு யோகி, எனவே பெண்கள் என்னை விரும்பவில்லை. இவ்வாறாக அரசரும் என்னைக் கைவிட்டதால், தேவ மங்கையரும் விரும்பும் வகையில் என்னுடைய உடலை நான் சீர்படுத்திக்கொள்ளப் போகிறேன். இகலோக அரசகுமாரிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
பதம் 9.6.43 : அதன்பிறகு, சபரிமுனி மிகவும் இளமையானவராகவும், அழகு மிக்கவராகவும் மாறியதும், அரண்மனைத் தூதவன் அவரைச் செல்வம் கொழிக்கும் அரச குமாரிகளின் அந்தப்புரத்திற்குள் அழைத்துச் சென்றான். அங்கிருந்த ஐம்பது அரசகுமாரிகளும் அவர் ஒருவரையே தங்கள் கணவராக ஏற்றுக்கொண்டனர்.
பதம் 9.6.44 : அதன்பிறகு, சபரி முனியால் கவரப்பட்ட அரச குமாரிகள், தங்களுடைய சகோதரி உறவுமுறையையும் கைவிட்டு, “எனக்குத்தான் இவர் பொருத்தமானவர், உனக்கல்ல” என்று போட்டியிட்டவாறு” ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். இவ்விதமாக அங்கு பெரியதொரு மனஸ்தாபம் விளைந்தது.
பதங்கள் 9.6.45 – 9.6.46 : சபரிமுனி பிழையின்றி வேத மந்திரங்களை உச்சரிப்பதில் கைதேர்ந்தவர் என்பதால், அவரது கடுந்தவங்களின் பயனாக பின்வரும் விஷயங்களை அவர் அடையப்பெற்றார். செல்வம் கொழிக்கும் வீடு, ஆடை அணிகலன்கள், நன்கு உடையணிந்து அலங்கரிக்கப்பட்டிருந்த பணிப்பெண்கள், பணியாட்கள், சுத்தமான நீர் கொண்ட ஏரிகள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றைக் கொண்ட பலவகையான பூங்காவனங்கள். பலவகையான பூக்களின் நறுமணங்களால் நிரப்பப்பட்டிருந்த பூங்காவனத்தில், பாடகர்களால் சூழப்பட்டவாறு பறவைகளின் கீச்சிடும் ஓசையும், வண்டுகளின் ரீங்காரமும் ஒலித்தன. சபரிமுனிவரின் வீட்டில் ஏராளமான விலையுயர்ந்த படுக்கைகள், ஆசனங்கள், ஆபரணங்கள் ஆகியவையும், குளிப்பதற்கான வசதிகளும், பலவகையான சந்தனக் குழம்புகளும், மலர் மாலைகளும், மற்றும் அறுசுவை உணவு வகைகளும் இருந்தன. இவ்வாறாக செல்வம் கொழிக்கும் பொருட்களால் சூழப்பட்டிருந்த முனிவர் அவரது அநேக மனைவிகளுடன் குடும்ப விவகாரங்களில் ஈடுபட்டிருந்தார்.
பதம் 9.6.47 : ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலகிற்கும் பேரரசராக விளங்கிய மாந்தாதா, சபரி முனியின் ஐசுவரியத்தைக் கண்டு ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போனார். இவ்வாறாக, தான் உலகிற்கே பேரரசர் என்ற பொய் அகங்காரத்தை அவர் கைவிட்டார்.
பதம் 9.6.48 : இவ்வாறாக சபரிமுனிவர் இந்த ஜட உலகில் புலன்நுகர்வை அனுபவித்தார். ஆனால் தொடர்ந்து நெய்த்துளிகளை விடுவதால் தீ அணைந்து விடுவதில்லை என்பது போலவே, அவர் சிறிதும் திருப்தியடையவில்லை.
பதம் 9.6.49 : அதன்பிறகு ஒருநாள், மந்திரங்களை உச்சரிப்பதில் கைதேர்ந்தவரான சபரிமுனி தனியான ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது, தனது வீழ்ச்சியின் காரணத்தைப் பற்றி சிந்தித்தார். மீன்களின் சிற்றின்ப விவகாரங்களுடன் தான் கண்களால் தொடர்பு கொண்டதே இதற்குக் காரணமென்பதையும் உணர்ந்தார்.
பதம் 9.6.50 : ஐயகோ! சாதுக்களால் அனுஷ்டிக்கப்படும் எல்லா விதிமுறைகளையும் பின்பற்றி, நீருக்கடியில் நான் தவமியற்றியபோதிலும், மீன்களின் சிற்றின்ப விவகாரங்களுடன் கண்களால் தொடர்பு கொண்டதாலேயே, நீண்ட கால தவப் பயனை நான் இழந்தவனானேன். அனைவரும் இவ்வீழ்ச்சியைக் கண்டு, இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பதம் 9.6.51 : பெளதிக பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தியடைய விரும்பும் ஒருவன் சிற்றின்ப வாழ்வில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களின் சகவாசத்தைக் கைவிடுவதுடன், புலன்களை (காண்பது, கேட்பது, பேசுவது மற்றும் நடப்பது போன்ற) புறவிஷயங்களில் ஈடுபடுத்துவதையும் கைவிட வேண்டும். ஒருவன் எப்பொழுதும் தனிமையான ஓரிடத்திலேயே வாழ்ந்து, எல்லையற்ற பரமபுருஷரின் பத்ம பாதங்களில் மனதைப் பூரணமாக பதியச் செய்ய வேண்டும். மேலும் பிறர் சகவாசத்தை ஒருவர் விரும்பினார், அவன் மேற்கொண்ட செயல்களில் ஈடுபட்டுள்ள மனிதர்களோடு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.
பதம் 9.6.52 : முதலில் தனியாக இருந்த நான், அஷ்டாங்க யோக தவத்தில் ஈடுபட்டிருந்தேன். ஆனால் பிறகு, சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்த மீன்களின் சகவாசத்தினால் நான் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன். பிறகு ஐம்பது மனைவிகளுக்குக் கணவனாகிய நான், அவர்கள் ஒவ்வொருவரிலும் நூறு மகன்களைப் பெற்றேன். இவ்வாறாக என் குடும்பம் ஐயாயிரம் அங்கத்தினர்கள் கொண்டதாக அதிகரித்தது. ஜட இயற்கைக் குணங்களின் தூண்டுதலால் இழிவடைந்த நான், பௌதிக வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று எண்ணினேன். இவ்வாறாக இப்பிறவியிலும், அடுத்ததிலும் இன்பம் அனுபவிக்க வேண்டுமென்ற என்னுடைய பௌதிக ஆசைகளுக்கு ஒரு முடிவே இல்லை.
பதம் 9.6.53 : இவ்வாறாக சிலகாலத்திற்கு குடும்ப விவகாரங்களில் தன் வாழ்வை அவர் கழித்தார். பெளதிக சகவாசத்தைத் துறப்பதற்காக அவர் வானப்பிரஸ்த வாழ்வை ஏற்று, காட்டிற்கும் சென்றார். தங்களது கணவரைத் தவிர வேறு புகலிடம் இல்லாத அவரது தர்ம பத்தினிகளும் அவரைப் பின்தொடர்ந்தனர்.
பதம் 9.6.54 : ஆத்மாவில் நல்ல பரிச்சயம் உள்ளவரான சபரிமுனி காட்டிற்குச் சென்று கடுந்தவங்களை மேற்கொண்டார். இவ்விதமாக, மரணத்தின் போது ஏற்படும் தீயில் அவர் இறுதியாக தம்மை பரமபுருஷரின் தொண்டில் ஈடுபடுத்திக் கொண்டார்.
பதம் 9.6.55 : பரீட்சித்து மகாராஜனே, தங்கள் கணவர் ஆன்மீக உலகிற்கு முன்னேறிச் செல்வதைக் கண்டதால், சபரிமுனியின் ஆன்மீக சக்தியால் அவரது மனைவிகளாலும் ஆன்மீக உலகினுள் பிரவேசிக்க முடிந்தது. தீ அணைக்கப்பட்டதும் அதன் சுடர்களும் நின்றுவிடுவதற்கு இது ஒப்பாகும்.