அத்தியாயம் – 5
துர்வாசரின் உயிர் காப்பாற்றப்பட்டது
பதம் 9.5.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக சுதர்சன சக்கரத்தினால் மிகவும் துன்புறுத்தப்பட்ட துர்வாச முனி, பகவான் விஷ்ணுவின் அறிவுரைகளைப் பெற்றதும், உடனே அம்பரீஷ மகாராஜனை அணுகினார். பெருந் துன்பத்திற்கு உள்ளாகியிருந்ததால், முனிவர் அரசரின் தாமரைப் பாதங்களில் விழுந்து அவற்றைப் பற்றிக் கொண்டார்.
பதம் 9.5.2 : அவரது தாமரைப் பாதங்களை துர்வாசர் தொட்டதால் அம்பரீஷ மகராஜன் மிகவும் வெட்கப்பட்டார். துர்வாசர் பிரார்த்தனைகள் செய்ய முற்பட்டதைக் கண்டு, இரக்கத்தினால் அவர் மிகவும் மனம் நொந்தவரானார். இதனால் அவர் பரமபுருஷரின் சிறந்த ஆயுதத்தை நோக்கி உடனே பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினார்.
பதம் 9.5.3 : அம்பரீஷ மகாராஜன் கூறினார்: ஓ சுதர்சன சக்கரமே, தாங்களே அக்னியும், சக்திமிக்க சூரியனுமாவீர். ஒளிரும் பொருட்களுக்கெல்லாம் தலைவராகிய சந்திரனும் தாங்களே. தாங்களே, நீர், மண், ஆகாயம் மற்றும் காற்றுமாவீர். ஐந்து புலன் பொருட்களும் (ஓசை, ஸ்பரிசம், உருவம், சுவை மற்றும் முகர்வுணர்வு) தாங்களே. மேலும் தாங்களே புலன்களாகவும் இருக்கிறீர்.
பதம் 9.5.4 : பரமபுருஷராகிய அச்சுதனுக்கு மிகப்பிரியமானவரே, தங்களுக்கு ஆயிரக்கணக்கான அரங்களுள்ளன. ஜட உலகின் எஜமானரே, சர்வ ஆயுதங்களையும் அழிப்பவரே, பரமபுருஷரின் மூல பார்வையே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். அன்புகூர்ந்து இந்த பிராமணருக்கு மங்களம் அருளி இவரைக் காத்தருள வேண்டும்.
பதம் 9.5.5 : ஓ சுதர்சன சக்கரமே, தங்களே தர்மமும், சத்தியமும், உற்சாகமூட்டும் வாக்கியங்களும், யாகமும் மற்றும் யாகப் பலன்களை அனுபவிப்பவரும் ஆவீர். முழு பிரபஞ்சத்தையும் காத்து இரட்சிப்பவரும், பரமபுருஷரின் கரங்களில் உன்னதமான பரம சக்தியாக இருப்பவரும் தாங்களே. தாங்கள் பகவானின் மூலப் பார்வையாக விளங்குவதால், சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறீர்கள். தங்களுடைய செயல்களினால் தான் அனைத்தும் படைக்கப்பட்டன என்பதால் தாங்கள் எங்கும் பரவியிருக்கிறீர்.
பதம் 9.5.6 : ஒ சுதர்சனமே, மிகவும் மங்களகரமான குடத்தைப் பெற்றிருப்பதால் தாங்கள் தர்மத்தைத் தாங்குபவராக இருக்கிறீர். அதர்மவாதிகளான அசுரர்களுக்குத் தாங்கள் அமங்களமளிக்கும் வால் நட்சத்திரத்தைப் போன்றவராவீர். உண்மையில், மூவுலகங்களையும் காத்து இரட்சிப்பவர் தாங்கள்தான். உன்னதமான பிரகாசம் நிறைந்தவரும், மனதைப் போல் வேகமுள்ளவருமான தங்களால் அற்புதமாக செயற்பட முடியும், நம: என்று உச்சரித்து, எனது பணிவான வணக்கங்களை நான் சமர்பித்துக் கொள்கிறேன்.
பதம் 9.5.7 : பேச்சுத் திறமை உடையவரே, தர்ம மயமான தங்களுடைய பிரகாசத்தினால் உலகில் இருள் மறைந்து, மகாத்மாக்களின் அல்லது கற்றுணர்ந்தவர்களின் அறிவு வெளிப்படுகின்றது. உண்மையில், தோன்றியும் தோன்றாதும் இருப்பவை, ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் இருப்பவை, மற்றும் உயர்ந்தவையாகவும் தாழ்ந்தவையாகவும் இருப்பவை ஆகிய அனைத்தும், தங்களுடைய பிரகாசத்தினால் தோற்றுவிக்கப்பட்ட, தங்களுடைய வெவ்வேறான வடிவங்களே என்பதால், தங்களுடைய பிரகாசத்தை மிஞ்சக்கூடியவர் ஒருவருமில்லை.
பதம் 9.5.8 : சளைக்காதவரே, பரமபுருஷரால் அனுப்பப்படும் தாங்கள், போர்க்களத்திலுள்ள தைதிய, தானவர்களுக்கிடையில் புகுந்து, அவர்களுடைய கரங்களையும், வயிறுகளையும், தொடைகளையும், கால்களையும் மற்றும் தலைகளையும் இடைவிடாமல் துண்டித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
பதம் 9.5.9 : பிரபஞ்சத்தின் காவலரே, பரமபுருஷரின் சர்வ சக்தி படைத்த ஆயுதமாக இருக்கும் தாங்கள், பகவானால் ஏவப்பட்டு பகைவர்களைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். எங்களுடைய வம்சத்தின் நன்மையை முன்னிட்டு, அன்பு கூர்ந்து இந்த ஏழை பிராமணருக்கு ஆதரவு காட்ட வேண்டும். இது நிச்சயமாக எங்களுக்கெல்லாம் நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.
பதம் 9.5.10 : தகுதியுள்ளவர்களுக்கு எங்கள் குடும்பம் தானம் கொடுத்திருக்குமானால், சமயச் சடங்குகளையும், யாகங்களையும் நாங்கள் செய்திருப்போமானால், எங்களது வர்ணாசிரம கடமைகளை நாங்கள் சரியாகச் செய்திருப்போமானால், கற்றறிந்த பிராமணர்களால் நாங்கள் வழிநடத்தப்பட்டு இருப்போமானால், இவற்றிற்குப் பதிலாக இந்த பிராமணர் சுதர்சன சக்கரத்தின் தாபத்திலிருந்து விடுபடட்டும்.
பதம் 9.5.11 : இரண்டற்ற ஒருவரும், எல்லா திவ்ய குணங்களுக்கும் இருப்பிடமும், மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிராகவும், ஆத்மாவாகவும் இருப்பவருமான பரமபுருஷர் எங்களிடம் திருப்தி அடைந்திருப்பாரானால், பிராமணரான இந்த துர்வாச முனி தாபத்தின் துன்பத்திலிருந்து விடுபடட்டும்.
பதம் 9.5.12 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சுதர்சன சக்கரத்தையும், பகவான் விஷ்ணுவையும் அரசர் துதித்ததால், அவரது பிரார்த்தனைக்கிணங்கி, பிராமணரான துர்வாசரைத் தகித்த சுதர்சன சக்கரம் சாந்தமாயிற்று.
பதம் 9.5.13 : மிகவும் சக்திவாய்ந்த யோகியான துர்வாச முனி, சுதர்சன சக்கரத்தின் வெப்பத்திலிருந்து விடுபட்டதும், உண்மையாகவே திருப்தியடைந்து, அம்பரீஷ மகாராஜனின் குணங்களைப் போற்றி, அவருக்கு மிகச்சிறந்த வரங்களை அளித்தார்.
பதம் 9.5.14 : துர்வாச முனி கூறினார்: அரசே, நான் குற்றம் செய்தவன் என்ற போதிலும், தாங்கள் என் மங்களத்திற்காக வேண்டினீர்கள் என்பதால், பரமபுருஷருடைய பக்தர்களின் பெருமையை இன்று நான் கண் கூடாகக் கண்டேன்.
பதம் 9.5.15 : தூய பக்தர்களின் தலைவரான பரமபுருஷரை அடைந்தவர்களுக்கு, செய்யவும், கைவிடவும் முடியாதது என்ன இருக்கிறது?
பதம் 9.5.16 : பகவானின் தொண்டர்களுக்குச் சாத்தியமில்லாதது என்ன இருக்கிறது? அவரது புனித நாமத்தைக் கேட்பதாலேயே ஒருவர் தூய்மையடைகிறார்.
பதம் 9.5.17 : அரசே, என் குற்றங்களையும் பொருட்படுத்தாமல் தாங்கள் என்னுயிரைக் காப்பாற்றினீர்கள். எனவே பரம கருணாமூர்த்தியான தங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டவனானேன்.
பதம் 9.5.18 : துர்வாச முனிவர் திரும்பி வருவதை எதிர்பார்த்திருந்த அரசர் உணவருந்தாமல் காத்திருந்தார். எனவே முனிவர் திரும்பி வந்ததும் அரசர் அவரது தாமரை பாதங்களில் விழுந்து, அவரை மகிழ்வித்துத் திருப்தியாக போஜனம் செய்வித்தார்.
பதம் 9.5.19 : இவ்வாறாக துர்வாச முனிவரை அரசர் மரியாதையுடன் வரவேற்றார். அறுசுவை உணவுகளை உண்டு மிகவும் திருப்தியடைந்த துர்வாசர், “தயவுகூர்ந்து தாங்களும் உணவருந்துங்கள்” என்று பேரன்புடன் அரசரை வேண்டிக்கொண்டார்.
பதம் 9.5.20 : துர்வாச முனி கூறினார்: அன்பிற்குரிய அரசே, தங்களிடம் நான் மிகவும் திருப்தியடைந்தேன். தங்களை ஒரு சாதாரண மனிதர் என்று எண்ணி, முதலில் உங்களுடைய உபசரணையை நான் ஏற்று கொண்டேன். ஆனால் பகவானின் பக்தர்களிலேயே மிகச் சிறந்தவர் தாங்கள்தான் என்பதைப் பிறகுதான் என் சுய புத்தியைக் கொண்டு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே, தங்களைக் கண்டதாலும், தங்களுடைய பாதங்களைத் தொட்டதாலும், தங்களுடன் பேசியதாலுமே நான் திருப்தியடைந்து, தங்களுக்குக் கடமைப்பட்டவனானேன்.
பதம் 9.5.21 : வானுலக வாழ்வு பெற்ற தேவமங்கைகள் இடைவிடாமல் ஒவ்வொரு கணமும் தங்களது களங்கமற்ற குணத்தைப் பற்றி பாடிக்கொண்டே இருப்பார்கள். இவ்வுலக மக்களும் உங்களுடைய பெருமைகளை எப்பொழுதும் பாடுவார்கள்.
பதம் 9.5.22 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக எல்லா வகையிலும் திருப்தியடைந்த மகா யோகியான துர்வாசர், அரசரிடம் அனுமதி பெற்று, தொடர்ந்து அரசரின் புகழைப் பாடிக்கொண்டே அந்த இடத்தை விட்டகன்று, ஆகாய மார்க்கமாக, நாஸ்திகர்களும், கற்பனையான வறட்டுத் தத்துவவாதிகளும் இல்லாத பிரம்ம லோகத்திற்குச் சென்றார்.
பதம் 9.5.23 : அம்பரீஷ மகாராஜனின் இடத்தை விட்டகன்ற துர்வாச முனி ஓராண்டு காலம் திரும்பி வரவில்லை. அதுவரை அரசர் உபவாசமிருந்து நீரை மட்டுமே பருகி வந்தார்.
பதம் 9.5.24 : ஓராண்டிற்குப் பின் துர்வாசர் திரும்பிவந்தார். அம்பரீஷ மகாராஜனும் தூய அறுசுவை உணவு வகைகளால் அவரை போஜனம் செய்வித்து, தானும் உண்டார். பிராமணரான துர்வாசர் எரிந்து சாம்பலாகும் பேராபத்திலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கண்ட அரசர், பகவானின் அருளால் தமக்கும் பெரும் சக்தியிருப்பதை உணர்ந்தார். ஆனால் அனைத்தும் பகவானால் செய்யப்பட்டன என்பதால், எந்த பாராட்டையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
பதம் 9.5.25 : இவ்விதமாக, பக்தித் தொண்டினால் அநேக உன்னத குணங்களைப் பெற்றிருந்த அம்பரீஷ மகாராஜன், பிரம்மத்தையும், பரமாத்மாவையும், பரமபுருஷ பகவானையும் பூரணமாக அறிந்திருந்ததால், அவர் பக்தித் தொண்டை சிறப்பாக நிறைவேற்றினார் அவருக்கிருந்த தூய பக்தியினால், இந்த ஜட உலகிலுள்ள மிக உயர்ந்த கிரகத்தைக் கூட அவர் நரகத்துக்கொப்பாகவே கருதினார்.
பதம் 9.5.26 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அதன்பிறகு, அம்பரீஷ மகாராஜன் தமது பக்தி வாழ்வின் முதிர்ந்த நிலையின் காரணத்தாலும், பெளதிக விஷயங்களுடன் தொடர்ந்து வாழ விரும்பாததாலும், சுறுசுறுப்பான குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்றார். தமக்குச் சமமான குணம் படைத்த தன் மகன்களுக்கிடையில் இராஜ்யத்தை பிரித்துக் கொடுத்த அவர், வானப்பிரஸ்த வாழ்வை ஏற்று, பகவான் வாசுதேவனிடம் மனதைப் பூரணமாக ஒருமுகப்படுத்துவதற்காக வனத்திற்குச் சென்றார்.
பதம் 9.5.27 : அம்பரீஷ மகாராஜனின் செயல்களைப் பற்றிய இப்புண்ணிய கதையைப் பாடுபவர் அல்லது நினைப்பவர் யாராயினும் அவர் பகவானின் தூய பக்தராவார் என்பது நிச்சயம்.
பதம் 9.5.28 : பகவானின் கருணையால், தூய பக்தரான அம்பரீஷ மகாராஜனின் சரித்திரத்தைக் கேட்பவர் முக்தியடைவார் அல்லது தாமதமின்றி உடனே ஒரு பக்தராக மாறுவார் என்பது நிச்சயம்.