அத்தியாயம் – 3
சுகன்யை, சியவன முனி திருமணம்
பதம் 9.3.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, மனுவின் மற்றொரு மகனான சர்யாதி வேத ஞானத்தைப் பூரணமாக அறிந்த அரசராவார். அங்கிர வம்சத்தினரின் யாகத்தில், இரண்டாவது நாள் செய்ய வேண்டிய கிரியைகளைப் பற்றி அவர் எடுத்துக் கூறினார்.
பதம் 9.3.2 : சர்யாதிக்கு சுகன்யை எனும் ஓரழகிய, கமலக் கண்களையுடைய மகள் இருந்தாள். சியவன முனிவரின் ஆசிரமத்தைக் காண அவளுடன் அவர் வனம் சென்றார்.
பதம் 9.3.3 : தன் தோழிகளால் சூழப்பட்டிருந்த சுகன்யை, வனத்திலுள்ள மரங்களிலிருந்து பலவகையான பழங்களை சேகரித்துக் கொண்டு இருக்கும்பொழுது, ஒரு மண்புழுத் துவாரத்தினுள் சூரியனைப் போல் பிரகாசிக்கும் இரு பொருட்களைக் கண்டாள்.
பதம் 9.3.4 : விதிவசத்தால் தூண்டப்பட்டவளைப் போல், அச்சிறுமி அறியாமையால் அவ்விரு ஒளிகளையும் முள்ளால் குத்தினாள். குத்தப்பட்ட உடனேயே அவற்றிலிருந்து இரத்தம் கசியத் துவங்கியது.
பதம் 9.3.5 : உடனேயே, சர்யாதியின் படைவீரர்கள் அனைவருக்கும் திடீரென மலமும், மூத்திரமும் கழிப்பதற்கு இடையூறு ஏற்பட்டது. இதைக் கண்ட சர்யாதி ஆச்சரியத்துடன் தன் சகாக்களிடம் பின்வருமாறு வினவினார்.
பதம் 9.3.6 : பிருகு புத்திரரான சியவன முனிக்கு நம்மிலொருவர் ஏதோ தீங்கிழைக்க முயன்றிருப்பது விந்தையாக அல்லவா இருக்கிறது! நிச்சயமாக நம்மில் யாரோ ஒருவர் இந்த ஆசிரமத்தை மாசுபடுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
பதம் 9.3.7 : மிகவும் அச்சத்திற்குள்ளான சிறுமி சுகன்யை தன் தந்தையிடம் கூறினாள்: நான் ஏதோ தவறு செய்துவிட்டேன். அறியாமையால் இவ்விரு ஒளிரும் பொருட்களை நான் முள்ளால் குத்திவிட்டேன்.
பதம் 9.3.8 : தன் மகளின் இக்கூற்றைக் கேட்டதும் சர்யாதி மகாராஜன் மிகவும் பயந்துவிட்டார். மண்புழுத் துவாரத்தினுள் அமர்ந்திருந்தவர் சியவன முனிதான் என்பதால், பல வழிகளில் அவரை சமாதானப்படுத்த அரசர் முயன்றார்.
பதம் 9.3.9 : சிந்தனையில் ஆழ்ந்த சர்யாதி மகாராஜன் சியவன முனியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, தன் மகளை (பணிவிடை செய்ய) முனிவருக்குக் கொடுத்தார். இவ்வாறு பெருங்கஷ்டத்துடன் ஆபத்திலிருந்து விடுபட்டதும், சியவன முனியிடம் அனுமதி பெற்று அவர் வீடு திரும்பினார்.
பதம் 9.3.10 : சியவன முனியைத் தன் கணவராகப் பெற்ற சுகன்யை, அவர் எளிதில் கோபப்படக்கூடியவர் என்பதையறிந்து, அவரது மனோ நிலைக்கேற்ப கவனமாக நடந்து கொண்டாள். அவரது கருத்தறிந்து கவனக் குறைவில்லாமல் அவருக்குச் சேவை செய்தாள்.
பதம் 9.3.11 : சிறிது காலத்திற்குப்பின், சுவர்க்கலோக வைத்தியர்களான அஸ்வினி-குமாரர்கள் சியவன முனியின் ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. மரியாதையுடன் அவர்களை வணங்கிய சியவன முனி, இளமையை அளிக்கும் திறமையுடைய அவர்களிடம் தமக்கு அதை அருளும்படி வேண்டிக்கொண்டார்.
பதம் 9.3.12 : சியவன முனி கூறினார்: யாகத்தில் சோமபானம் இல்லாத உங்களுக்கு, ஒரு பாத்திரம் நிறைய சோமபானத்தை ஏற்படுத்தி உங்களுக்கு அளிப்பதாக நான் உறுதி செய்கிறேன். அழகும், இளமையும் இளம் பெண்களை கவரக் கூடியவை என்பதால், அன்புடன் அவற்றை எனக்குத் தந்தருளுங்கள்.
பதம் 9.3.13 : வைத்திய சிரேஷ்டர்களான அஸ்வினி-குமாரர்கள் சியவன முனிவரின் திட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். “சித்தியளிக்கும் இம்மடுவில் மூழ்கி எழுங்கள்” (இந்த மடுவில் குளிப்பவரின் விருப்பங்கள் நிறைவேறும்) என்று அந்த பிராமணரிடம் அவர்கள் கூறினர்.
பதம் 9.3.14 : இவ்வாறு கூறிய அஸ்வினி-குமாரர்கள், வயது முதிர்ந்தவரும், நோய்வாய்ப்பட்டு தளர்ந்த போதிலும், நரைத்த முடியும் கொண்டவரும், உடல் முழுவதிலும் இரத்த நாளங்கள் இருக்கக் காணப்பட்டவருமான சியவன முனியைப் பற்றியவாறு, மூவரும் மடுவில் மூழ்கினர்.
பதம் 9.3.15 : பிறகு, மிக அழகிய தேக அம்சங்களைக் கொண்ட மூன்று புருஷர்கள் மடுவிலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் அழகிய உடை அணிந்து, தாமரை மாலைகளாலும், குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். அம்மூவருமே சம அழகுடையவர்களாக இருந்தனர்.
பதம் 9.3.16 : அவர்கள் சம அழகு கொண்டவர்களாக இருந்ததால், சிறந்த பதிவிரதையும், அழகுமிக்கவளுமான சுகன்யையால் இரு அஸ்வினி குமாரர்களிலிருந்து தன் கணவரைப் பிரித்தறிய இயலவில்லை. தன் கணவரைத் தெரிந்து கொள்ள இயலாமல் அஸ்வினி குமாரர்களை அவள் சரணடைந்தாள்.
பதம் 9.3.17 : அஸ்வினி குமாரர்கள் சுகன்யையின் பதிபக்தியைக் கண்டு மிகவும் திருப்தியடைந்தனர். இவ்வாறாக அவளது கணவரான சியவன முனியை அவளிடம் காட்டியபின், முனிவரிடம் விடைபெற்று, தங்களுடைய விமானத்திலேறி சுவர்க்கம் சென்றனர்.
பதம் 9.3.18 : பிறகு, சர்யாதி மகாராஜன் ஒரு யாகம் செய்ய உத்தேசித்து சியவன முனியின் ஆசிரமத்திற்குச் சென்றபோது, தன் பெண்ணின் பக்கத்தில் சூரியனைப் போல் பிரகாசமுள்ள, பேரழகு வாய்ந்த இளம் மனிதனொருவன் நிற்பதைக் கண்டார்.
பதம் 9.3.19 : தன் பாதத்தில் வணங்கிய பெண்ணை விருப்பமில்லாதவர் போல் பார்த்த அரசர், அவளை ஆசீர்வதிக்காமலேயே பின்வருமாறு கூறினார்.
பதம் 9.3.20 : நெறிதவறிய பெண்ணே! இது என்ன உன் ஆசை இப்படி ஆயிற்று? அனைவராலும் மதிக்கப்படும் மிகவும் மரியாதைக்குரிய உன் கணவரை நீ வஞ்சித்துவிட்டாய். அவர் முதிர்ந்த வயதினால் நோய்வாய்ப்பட்டு, கவர்ச்சியற்றவராக இருப்பதால், அவரை விட்டு விலகி, தெருப் பிச்சைக்காரனைப் போல் காணப்படும் இந்த இளம் மனிதனை உன் கணவனாக ஏற்றாயே!
பதம் 9.3.21 : மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்த என் மகளே, நீ எப்படி உன் மனதை இந்த அளவிற்கு தாழ்த்திக் கொண்டாய்? வெட்கமில்லாமல் ஒரு கள்ளக் காதலனை உன்னால் எப்படி வைத்திருக்க முடிகிறது? இதனால் உன் தந்தையின் வம்சத்தையும், உன் கணவரின் வம்சத்தையும் நீ நரக வாழ்வை நோக்கி தாழ்ந்திவிடுவாய்.
பதம் 9.3.22 : ஆனால் தந்தையின் வசை மொழிகளைக் கேட்ட சுகன்யை, தன் கற்புடையமையின் பெருமிதத்தால் சிரித்துக் கொண்டே தன் தந்தையிடம்,”அப்பா, என்னருகில் நிற்கும் இந்த இளம் மனிதர், பிருகு வம்சத்தில் பிறந்த உங்கள் மாப்பிள்ளையான சியவன மகரிஷியே தான்” என்று கூறினாள்.
பதம் 9.3.23 : இவ்வாறாக தன் கணவர் எப்படி ஒரு வாலிபனுக்குரிய அழகிய உடலைப் பெற்றார் என்பதை சுகன்யை விளக்கினாள். இதைக் கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்த அரசர் பெருமகிழ்ச்சியுடன் அன்பிற்குரிய தன் மகளை அணைத்துக் கொண்டார்.
பதம் 9.3.24 : சர்யாதி மகாராஜனை சோம-யாகம் செய்வித்த சியவன முனி, சோமபானத்தைப் பருகும் தகுதியற்றவர்களாக இருந்த அஸ்வினி குமாரர்களுக்குத் தமது தவ வலிமையால் ஒரு பாத்திரம் நிறைய சோமபானத்தை அளித்தார்.
பதம் 9.3.25 : அமைதிகுலைந்து கோபமடைந்த இந்திரன் சியவன முனிவரைக் கொல்ல அவசரமாக வஜ்ராயுதத்தைக் கையிலெடுத்தார். ஆனால் சியவன முனி தமது சக்தியால்; வஜ்ராயுதத்தைப் பிடித்திருந்த இந்திரனின் கரத்தை செயலிழக்கச் செய்துவிட்டார்.
பதம் 9.3.26 : வெறும் வைத்தியர்களாக மட்டுமே இருந்த அஸ்வினி குமாரர்கள் யாகங்களில் சோமபானத்தைப் பருக அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும், அன்றுமுதல் அவர்கள் அதைப் பருக தேவர்கள் அனுமதித்தனர்.
பதம் 9.3.27 : உத்தானபர்ஹி, ஆனர்த்தன் மற்றும் பூரிஷேணன் என்ற மூன்று மகன்களை சர்யாதி மகராஜன் பெற்றார். ஆனர்த்தனிலிருந்து ரேவதன் என்ற ஒரு மகன் வந்தார்.
பதம் 9.3.28 : எதிரிகளை ஒடுக்குபவரான பரீட்சித்து மகாராஜனே, இந்த ரேவதன் சமுத்திரத்தின் ஆழத்தில் குசஸ்தலி என்ற இராஜ்யத்தை நிர்மாணித்தார். அங்கு வாழ்ந்து கொண்டே ஆனர்த்தம் முதலிய தேசங்களை அவர் ஆண்டு வந்தார். அவருக்கு, ககுத்மியை மூத்தவராகக் கொண்ட நூறு சிறந்த மகன்கள் இருந்தனர்.
பதம் 9.3.29 : ககுத்மி, தம் சொந்த மகளான ரேவதியை அழைத்துக் கொண்டு, இயற்கையின் முக்குணங்களுக்கு மேற்பட்டதான பிரம்மலோகத்திலுள்ள பிரம்மதேவரிடம் சென்று, அவளுக்கேற்ற ஒரு வரனைப் பற்றி விசாரித்தார்.
பதம் 9.3.30 : ககுத்மி அங்கு சென்றபொழுது, பிரம்மதேவர் கந்தர்வர்களின் இசை நிகழ்ச்சிகளைக் கேட்பதில் ஈடுபட்டிருந்ததால், ஒரு நொடிப் பொழுது அவருடன் பேசுவதற்குக்கூட அவருக்கு நேரம் இருக்கவில்லை. எனவே ககுத்மி காத்திருந்தார். இசை நிகழ்ச்சி முடிவுற்றதும் பிரம்ம தேவரை வணங்கியெழுந்த ககுத்மி, தன் நீண்ட நாள் ஆசையைத் தெரிவித்தார்.
பதம் 9.3.31 : அவரது வார்த்தைகளைக் கேட்டபின், மிகவும் சக்தி வாய்ந்தவரான பிரம்ம தேவர் உரக்க நகைத்து ககுத்மியிடம் கூறினார்: அரசே, மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரையெல்லாம் நீர் இதயத்தில் நினைத்திருந்தீரோ, அவர்கள் அனைவரும் காலத்தின் போக்கினால் இறந்துவிட்டனர்.
பதம் 9.3.32 : இருபத்தேழு சதுர்-யுகங்கள் கடந்துவிட்டன. யாரை நீர் முடிவு செய்திருந்தீரோ அவர்கள் மட்டுமின்றி, அவர்களுடைய மகன்களும், பேரன்களும், பிறவம்சத்தினரும் கூட மறைந்துவிட்டனர். அவர்களுடைய பெயர்களைக் கூட உம்மால் கேட்க முடியாது.
பதம் 9.3.33 : அரசே, இங்கிருந்து கிளம்பிச் சென்று, இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும், பகவான் பலதேவருக்கு உமது மகளைக் கொடும். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராவார். உண்மையில் அவர் பரமபுருஷராவார். அவரது ஓர் அம்சமாக இருப்பவர்தான் பகவான் விஷ்ணு. அவருக்கு உமது மகளைக் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.
பதம் 9.3.34 : பகவான் பலதேவர் பரமபுருஷராவார். அவரைப் பற்றி கேட்பவரும், பாடுபவரும் தூய்மையடைகிறார். அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர் எப்பொழுதும் நன்மை செய்பவர் என்பதால், உலகைப் புனிதப்படுத்தவும், அதன் பாரத்தைக் குறைக்கவும், அவரது எல்லா உபகரணங்களுடனும் அவர் பூமியில் அவதரித்துள்ளார்.
பதம் 9.3.35 : பிரம்ம தேவரிடமிருந்து இந்த உத்தரவைப் பெற்ற ககுத்மி, அவரை வணங்கிவிட்டு தமது சொந்த வசிப்பிடத்திற்குத் திரும்பினார். பிறகு யக்ஷர்களைப் போன்ற உயர்ந்த ஜீவராசிகளிடம் கொண்ட பயத்தினால் எல்லாத் திசைகளிலும் சிதறி வாழ்ந்துவந்த தன் சகோதரர்களாலும் மற்ற உறவினர்களாலும் கைவிடப்பட்டு, தன் வசிப்பிடம் காலியாகக் கிடப்பதை அவர் கண்டார்.
பதம் 9.3.36 : பிறகு மிகவும் அழகுவாய்ந்த தன் மகளைப் பரமசக்தி படைத்தவரான பலதேவருக்குக் கொடுத்தபின், உலக வாழ்விலிருந்து ஓய்வு பெற்ற அரசர், நர-நாராயணரை திருப்திப்படுத்துவதற்காக பத்ரிகாசிரமத்திற்குச் சென்றார்.