அத்தியாயம் – 2
மனு புத்திரர்களின் வம்சங்கள்
பதம் 9.2.1
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் கதே ‘த ஸுத்யும்னே மனுர் வைவஸ்வத: ஸுதே
புத்ர-காமஸ் தபஸ் தேபே யமுனாயாம் சதம் ஸமா:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; கதே—வானப்பிரஸ்த வாழ்வை ஏற்றார்; அத—அதன்பிறகு; ஸுத்யும்னே—சுத்யும்னன்; மனு: வைவஸ்வத:—சிராத்ததேவர் எனும் வைவஸ்வத மனு; ஸுதே—அவரது மகன்; புத்ர-காம:—மகன்களைப் பெற விரும்பி; தப: தேபே—கடுந்தவம் செய்தார்; யமுனாயாம்—யமுனை நதிக்கரையில்; சதம் ஸமா:—நூறு ஆண்டுகள்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அதன்பிறகு, அவரது மகனான சுத்யும்னன் வானப்பிரஸ்த வாழ்வை ஏற்பதற்கு வனம் சென்றதும், இன்னும் அதிக மகன்களைப் பெற விரும்பிய வைவஸ்வத மனு (சிராத்ததேவர்), யமுனைக் கரையில் நூறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார்.
பதம் 9.2.2
ததோ ‘யஜன் மனுர் தேவம் அபத்யார்தம் ஹரிம் ப்ரபும்
இக்ஷ்வாகு-பூர்வஜான் புத்ரான் லேபே ஸ்வ-ஸத்ருசான் தச
தத:—அதன்பிறகு; அயஜத்—வழிபட்டார்; மனு:—வைவஸ்வத மனு; தேவம்—பரமபுருஷரை; அபத்ய-அர்த்தம்—மகன்களைப் பெறும் விருப்பத்துடன்; ஹரிம்—பரமபுருஷரான ஹரியை; ப்ரபும்—பகவான்; இக்ஷ்வாகு-பூர்வ-ஜான்—அவர்களில் இக்ஷ்வாகு மூத்தவராவார்; புத்ரான்—மகன்களை; லேபே—பெற்றார்; ஸ்வ-ஸத்ருசான்—அவருக்கொப்பான; தச—பத்து.
பிறகு, மகன்களைப் பெறும் இவ்விருப்பத்துடன், சிராத்ததேவர் எனப்படும் மனு, தேவர்களின் இறைவனான பரமபுருஷ பகவானை வழிபட்டார். இவ்வாறு அவருக்கொப்பான பத்து மகன்களை அவர் பெற்றார். அவர்களுள் இக்ஷ்வாகு மூத்தவராவார்.
பதம் 9.2.3
ப்ருஷத்ரஸ் து மனோ: புத்ரோ கோ-பாலோ குருணா க்ருத:
பாலயாம் ஆஸ கா யத்தோ ராத்ரியாம் வீராஸன வ்ரத:
ப்ருஷத்ர: து—அவர்களில் பிருஷத்ரன்; மனோ:—மனுவின்; புத்ர:—புத்திரன்; கோ-பால:—பசுக்களை மேய்த்தார்; குருணா—ஆன்மீக குருவின் கட்டளைப்படி; க்ருத:—ஈடுபட்டு; பாலயாம் ஆஸ—அவர் பாதுகாத்தார்; கா:—பசுக்களை; யத்த:—அவ்வாறு ஈடுபட்டிருந்தார்; ராத்ரியாம்—இரவில்; வீராஸன-வ்ரத:—வாளேந்தி நிற்கும் வீராசன விரதத்தை மேற்கொண்டு.
இம்மகன்களில் பிருஷத்ரன் என்பவர், தன் ஆன்மீக குருவின் கட்டளைப்படி பசுக்களைப் பாதுகாத்து வந்தார். பசுக்களுக்குப் பாதுகாப்பளிக்க இரவு முழுவதும் அவர் வாளேந்தி நிற்பார்.
பதம் 9.2.4
ஏகதா ப்ராவிசத் கோஷ்டம் சார்தூலோ நிசி வர்ஷதி
சயானா காவ உத்தாய பீதாஸ் தா பப்ரமுர் வ்ரஜே
ஏகதா—ஒருசமயம்; ப்ராவிசத்—புகுந்தது; கோஷ்டம்—பசுத்தொழுவத்தில்; சார்தூல:—ஒரு புலி; நிசி—இரவில்; வர்ஷதி—மழை பெய்யும் பொழுது; சயானா:—படுத்திருந்த; காவ:—பசுக்கள்; உத்தாய—எழுந்து; பீதா:—பீதியடைந்து; தா:—அவை; பப்ரமு:—இங்குமங்குமாக சிதறியோடின; வ்ரஜே—பசுத்தொழுவத்தைச் சூழ்ந்த நிலப்பரப்பில்.
ஒருசமயம் இரவில், மழை பெய்யும்பொழுது, ஒரு புலி பசுத் தொழுவத்தினுள் நுழைந்தது. புலியைக் கண்டதும் படுத்திருந்த பசுக்கள் பீதியுடன் எழுந்து இங்குமங்கும் சிதறியோடின.
பதங்கள் 9.2.5 – 9.2.6
ஏகாம் ஜக்ராஹ பலவான் ஸா சுக்ரோச பயாதுரா
தஸ்யாஸ் து க்ரந்திதம் ஸ்ருத்வா ப்ருஷத்ரோ ‘நுஸஸாரஹ
கட்கம் ஆதாய தரஸா ப்ரலீனோடு-கணே நிசி
அஜானன் அச்சினோத் பப்ரோ: சிர: சார்தூல-சங்கயா
ஏகாம்—பசுக்களில் ஒன்றை; ஜக்ராஹ—பற்றியது; பலவான்—சக்திவாய்ந்த புலி; ஸா—அப்பசு; சுக்ரோச—அலறத் துவங்கியது; பய-ஆதுரா—துன்பத்துடனும், அச்சத்துடனும்; தஸ்யா:—அதன்; து—ஆனால்; க்ரந்திதம்—அலறலை; ஸ்ருத்வா—கேட்டு; ப்ருஷத்ர:—பிருஷத்ரன்; அனுஸஸார ஹ—பின்தொடர்ந்தார்; கட்கம்—வாளை; ஆதாய—எடுத்துக்கொண்டு; தரஸா—துரிதமாக; ப்ரலீன-உடு-கணே—நட்சத்திரங்கள் மேகங்களால் மறைக்கப்பட்டிருந்த சமயத்தில்; நிசி—இரவில்; அஜானன்—அறியாமல்; அச்சினோத்—துண்டித்துவிட்டார்; பப்ரோ:—பசுவின்; சிர:—தலையை; சார்தூல—சங்கயா புலியின் தலை என்று தப்பாக எண்ணி.
மிகவும் வலிமையுள்ள அப்புலி பசுவைப் பற்றியதும், அது துன்பத்துடனும், அச்சத்துடனும் அலறியது. அந்த அலறலைக் கேட்ட பிருஷத்ரன் உடனே அவ்வோசையைப் பின்தொடர்ந்து கையில் வாளேந்திச் சென்றார். ஆனால் நட்சத்திரங்கள் மேகங்களால் மறைக்கப்பட்டிருந்ததால், பசுவைப் புலி என்றெண்ணி, தவறுதலாக பெரும் வலிமையுடன் பசுவின் தலையைத் துண்டித்துவிட்டார்.
பதம் 9.2.7
வ்யாக்ரோ ‘பி வ்ருக்ண-ஸ்ரவணோ நிஸ்த்ரிம்சாக்ராஹதஸ் தத:
நிஸ்சக்ராம ப்ருசம் பீதோ ரக்தம் பதி ஸமுத்ஸ்ருஜன்
வ்யாக்ர:—புலி; அபி—கூட; வ்ருக்ன-ஸ்ரவண:—அதன் காது துண்டிக்கப்பட்டு; நிஸ்த்ரிம்ச-அக்ர-ஆஹத:—வாளின் நுனியால் வெட்டப்பட்டதால்; தத:—அதன்பிறகு; நிஸ்சக்ராம—ஓட்டம் பிடித்தது; ப்ருசம்—மிகவும்; பீத:—பீதியடைந்து; ரக்தம்—இரத்தம்; பதி—சாலையில்; ஸமுத்ஸ்ருஜன்—சிந்தியவாறு.
வாள் நுனியால் புலியின் காது வெட்டப்பட்டதால், அப்புலி பீதியடைந்து சாலையில் இரத்தம் சிந்தியவாறு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
பதம் 9.2.8
மன்யமானோ ஹதம் வ்யாக்ரம் ப்ருஷத்ர: பர-வீர-ஹா
அத்ராக்ஷீத் ஸ்வ-ஹதாம் பப்ரும் வ்யுஷ்டாயாம் நிசி துஹ்கித:
மன்யமான:—நினைத்திருந்த; ஹதம்—கொல்லப்பட்டது; வ்யாக்ரம்—புலி; ப்ருஷத்ர:—மனு புத்திரரான பிருஷத்ரன்; பர-வீர-ஹா—எதிரியைத் தண்டிக்கும் வல்லமை பெற்றிருந்தும்; அத்ராக்ஷீத்—கண்டு; ஸ்வ-ஹதாம்—அவரால் கொல்லப்பட்டது; பப்ரும்—பசு; வ்யுஷ்டாயாம் நிசி—இரவு கடந்ததும் (காலையில்); துஹ்கித:—மிகவும் மகிழ்ச்சியற்றவரானார்.
எதிரியை வெல்லும் திறமையுடைய பிருஷத்ரன், இரவில் தன்னால் கொல்லப்பட்டது புலி என்று நினைத்தார். ஆனால் காலையில் தான் கொன்றது பசு என்பதையறிந்து மிகவும் கவலைப்பட்டார்.
பதம் 9.2.9
தம் சசாப குலாசார்ய க்ருதாகஸம் அகாமத:
ந க்ஷத்ர-பந்து: சூத்ரஸ் த்வம் கர்மணா பவிதாமுனா
தம்—அவரை (பிருஷத்ரனை); சசாப—சபித்தார்; குல-ஆசார்ய:—குலகுருவான வசிஷ்டர்; க்ருத-ஆகஸம்—பசுவைக் கொன்ற பெரும் பாவத்தினால்; அகாமத:—அதை அவர் செய்ய விரும்பாத போதிலும்; ந—இல்லை; க்ஷத்ர-பந்து:—க்ஷத்திரியரின் குடும்ப அங்கத்தினர்; சூத்ர: த்வம்—நீ ஒரு சூத்திரனைப் போல் நடந்து கொண்டதால்; கர்மணா—எனவே உன் கர்ம பலனால்; பவிதா—நீ ஒரு சூத்திரனாகப் பிறப்பாய்; அமுனா—பசுவைக் கொன்றதால்.
பிருஷத்ரன் அறியாமல் பாவம் செய்திருந்த போதிலும், அவரது குலகுருவான வசிஷ்டர் பின்வருமாறு கூறி அவரைச் சபித்தார்: “அடுத்த பிறவியில் உன்னால் ஒரு க்ஷத்திரியனாக முடியாது. பசுவைக் கொன்றதால் நீ ஒரு சூத்திரனாகப் பிறப்பாய்”.
பதம் 9.2.10
ஏவம் சப்தஸ் து குருணா ப்ரத்யக்ருஹ்ணாத் க்ருதாஞ்ஜலி:
அதாரயத் வ்ரதம் வீர ஊர்த்வ-ரேதா முனி-ப்ரியம்
ஏவம்—இவ்வாறு; சப்த:—சபிக்கப்பட்ட; து—ஆனால்; குருணா—அவரது ஆன்மீக குருவால்; ப்ரத்யக்ருஹ்ணாத்—அவர் (பிருஷத்ரன்) ஏற்றுக்கொண்டார்; க்ருத-அஞ்ஜலி:—கூப்பிய கரங்களுடன்; அதாரயத்—மேற்கொண்டார்; வ்ரதம்—பிரம்மச்சரிய விரதத்தை; வீர:—அந்த வீரர்; ஊர்த்வ-ரேதா:—புலன்களை அடக்கிய; முனி-ப்ரியம்—மாமுனிவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட.
வீரரான பிருஷத்ரன் தன் ஆன்மீக குருவால் இவ்வாறு சபிக்கப்பட்டபோது, அச்சாபத்தை அவர் கூப்பிய கரங்களுடன் ஏற்றுக் கொண்டார். பிறகு, புலன்களை அடக்கிய அவர், மாமுனிவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டார்.
பதங்கள் 9.2.11 – 9.2.13
வாஸுதேவ பகவதி ஸர்வாத்மனி பரே ‘மலே
ஏகாந்தித்வம் கதோ பக்த்யா ஸர்வ-பூத-ஸுஹ்ருத் ஸம:
விமுக்த-ஸங்க: சாந்தாத்மா ஸம்யதாக்ஷோ ‘பரிக்ரஹ:
யத் ருச்சயோபபன்னேன கல்பயன் வ்ருத்திம் ஆத்மன:
ஆத்மனி ஆத்மானம் ஆதாய ஞான-த்ருப்த: ஸமாஹித:
விசசார மஹீம் ஏதாம் ஜடாந்த-பதிராக்ருதி:
வாஸுதேவே—பரமபுருஷ பகவானுக்கு; பகவதி—பகவானுக்கு; ஸர்வ-ஆத்மனி—பரமாத்மாவுக்கு; பரே—திவ்யமானவருக்கு; அமலே—பெளதிக களங்கமற்ற பரமபுருஷருக்கு; ஏகாந்தித்வம்—மனதை வேறு வழியில் திருப்பாமல் பக்தித்தொண்டைச் செய்து; கத—அவ்வாறு நிலைபெற்றிருந்ததால்; பக்த்யா—தூய பக்தியினால்; ஸர்வ-பூத-ஸுஹ்ருத் ஸம:—ஒரு பக்தராகவும், சினேகமாகவும் மற்றும் அனைவரிடமும் சமமாகவும் இருந்ததால்; விமுக்த-ஸங்க:—பெளதிக களங்கமின்றி; சாந்த-ஆத்மா—சாந்த சொரூபியாய்; ஸம்யத—புலனடக்கத்துடன்; அக்ஷ:—யாருடைய பார்வை; அபரிக்ரஹ:—வேறு யாரிடமிருந்தும் எந்த தானத்தையும் ஏற்காமல்; யத்-ருச்சயா—பகவானின் கருணையால்; உப்பன்னேன—உடல் தேவைகளுக்கு கிடைக்கக் கூடியவைகளால்; கல்பயன்—இந்த ஏற்பாட்டைச் செய்து; வ்ருத்திம்—உடல் தேவைகள்; ஆத்மன:—ஆத்ம நன்மைக்காக; ஆத்மனி—மனதிற்குள்; ஆத்மானம்—பரமாத்மாவான பரமபுருஷரை; ஆதாய—எப்பொழுதும் பதித்து; ஞான-த்ருப்த:—உன்னத அறிவில் பூரண திருப்தியடைந்து; ஸமாஹித:—எப்பொழுதும் பரவச நிலையில்; விசசார—முழுவதிலும் பிரயாணம் செய்தார்; மஹீம்—பூமி; ஏதாம்—இந்த; ஜட—ஊமை; அந்த—குருடன்; பதிர—செவிடன்; ஆக்ருதி:—போன்று காணப்பட்டு.
அதன்பிறகு, எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட பிருஷத்ரன், மன அமைதி பெற்று, தன் புலன்களைக் கட்டுப்படுத்தினார். பகவானின் கருணையால் உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்கு, கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைந்தும், பௌதிக சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமலும், யாரிடமும் பாரபட்சமில்லாமலும் இருந்த அவர், உன்னத பரமாத்மாவும், பெளதிக களங்கமற்றவரும், பரமபுருஷ பகவானுமாகிய வாசுதேவனிடம் முழு கவனத்தையும் செலுத்தினார். இவ்வாறு மனதைப் பரமபுருஷரிடம் பதித்து, ஆத்ம ஞானத்தில் பூரண திருப்தியடைந்த பிருஷத்ரன், பகவானின் தூய பக்தித் தொண்டை அடைந்து, செவிடனைப் போலவும், ஊமையைப் போலவும், குருடனைப் போலவும், பெளதிகச் செயல்களில் பற்றில்லாதவராய், உலக முழுவதிலும் பிரயாணம் செய்ய ஆரம்பித்தார்.
பதம் 9.2.14
ஏவம் வ்ருத்தோ வனம் கத்வா த்ருஷ்ட்வா தாவாக்னிம் உத்திதம்
தேனோபயுக்த-கரணோ ப்ரஹ்ம ப்ராப பரம் முனி:
ஏவம் வ்ருத்த:—வாழ்வின் இத்தகைய ஒரு நிலையில் வைக்கப்பட்டு; வனம்—வனத்திற்கு; கத்வா—சென்றபின்; த்ருஷ்ட்வா—அவர் கண்டதும்; தாவ-அக்னிம்—ஒரு காட்டுத் தீயை; உத்திதம்—அங்குள்ள; தேன—அத்தீயால்; உபயுக்த-கரண:—புலன்களை எல்லாம் எரித்து; ப்ரஹ்ம—பரலோகத்தை; ப்ராப—அவர் அடைந்தார்; பரம்—இறுதி இலக்கான; முனி:—மிகச்சிறந்ததொரு புண்ணிய புருஷராக.
இந்த மனோநிலையுடன் சிறந்ததொரு துறவியாக மாறிய பிருஷத்ரன், வனத்தில் புகுந்த பொழுது, கொழுந்து விட்டெரியும் ஒரு காட்டுத் தீயைக் கண்டார். தனது உடலை தீயில் எரித்து விடுவதற்கு இச்சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். இவ்வாறாக அவர் பரலோகமான ஆன்மீக உலகை அடைந்தார்.
பதம் 9.2.15
கவி: கனீயான் விஷயேஷு நிஹ்ஸ்ப்ருஹோ
விஸ்ருஜ்ய ராஜ்யம் ஸஹ பந்துபிர் வனம்
நிவேஸ்ய சித்தே புருஷம் ஸ்வ-ரோசிஷம்
விவேச கைசோர-வயா: பரம் கத:
கவி:—கவி எனும் மற்றொரு மகன்; கனீயான்—இளையவரான; விஷயேஷு—பெளதிக சுகபோகங்களில்; நிஹ்ஸ்ப்ருஹ:—பற்றில்லாததால்; விஸ்ருஜ்ய—கைவிட்டபின்; ராஜ்யம்—அவரது தந்தையின் சொத்தான இராஜ்யத்தை; ஸஹ பந்துபி:—நண்பர்களால் சூழப்பட்டவராய்; வனம்—வனம்; நிவேஸ்ய—எப்பொழுதும் வைத்து; சித்தே—இதயத்தின் ஆழத்தில்; புருஷம்—பரமபுருஷரை; ஸ்வ-சோசிஷம்—சுயப்பிரகாசமுள்ள; விவேச—புகுந்தார்; கைசோர வயா:—பூரண வாலிபத்தை அடையாத இளம் மனிதர்; பரம்—பரலோகம்; கத:—புகுந்தார்.
மனுவின் இளைய புத்திரரான கவி, பெளதிக சுகபோகங்களை அனுபவிக்க விரும்பாததால், பூரண வாலிபத்தை அடையுமுன்பே இராஜ்யத்தைத் துறந்தார். சுயப்பிரகாசம் கொண்டவரான பரமபுருஷரை இதயத்தில் எப்பொழுதும் தியானித்தவாறு, நண்பர்கள் புடை சூழ வனம் சென்ற அவர் இறுதியில் பூரணத்துவம் அடைந்தார்.
பதம் 9.2.16
கரூஷான் மானவாத் ஆஸன் காரூஷா: க்ஷத்ர-ஜாதய:
உத்தரா-பத-கோப்தாரோ ப்ரஹ்மண்யா தர்ம-வத்ஸலா:
கரூஷாத்—கரூஷரிலிருந்து; மானவாத்—மனுபுத்திரரிலிருந்து; ஆஸன்—தோன்றினர்; காரூஷா:—காரூஷர்கள் எனும்; க்ஷத்ர-ஜாதய:—க்ஷத்திரிய பிரிவினர்; உத்தரா—வடக்கு; பத:—திசையின்; கோப்தார:—அரசர்கள்; ப்ரஹ்மண்யா:—பிராமண பண்பாட்டைப் பாதுகாத்த புகழுக்குரியவர்கள்; தர்ம-வத்ஸலா:—சிறந்த தர்மவான்களாக.
மற்றொரு மனு புத்திரரான கரூஷரிலிருந்து காரூஷ வம்சம் வந்தது. இது ஒரு க்ஷத்திரிய வம்சமாகும். காரூஷ க்ஷத்திரியர்கள் வடதிசையைச் சேர்ந்த அரசர்களாவர். சிறந்த தர்மவான்களாக விளங்கிய அவர்கள், பிராமண பண்பாட்டைப் பாதுகாத்த புகழுக்குரியவர்களாவர்.
பதம் 9.2.17
த்ருஷ்டாத் தார்ஷ்டம் அபூத் க்ஷத்ரம் ப்ரஹ்ம-பூயம் கதம் க்ஷிதௌ
ந்ருகஸ்ய வம்ச: ஸுமதிர் பூதஜ்யோதிஸ் ததோ வஸு:
த்ருஷ்டாத்—மற்றொரு மனு புத்திரரான திருஷ்டரிலிருந்து; தார்ஷ்டம்—தார்ஷ்டம் என்ற ஒரு ஜாதி; அபூத்—உண்டானது; க்ஷத்ரம்—க்ஷத்திரிய பிரிவைச் சேர்ந்த; ப்ரஹ்ம-பூயம்—பிராமண நிலையை; கதம்—அடைந்தனர்; க்ஷிதௌ—உலகில்; ந்ருகஸ்ய—மற்றொரு மனு புத்திரரான நிருகனின்; வம்ச:—வம்சம்; ஸுமதி:—சுமதி என்ற; பூதஜ்யோதி:—பூதஜோதி என்ற; தத:—அதன்பிறகு; வஸு:—வசு என்ற.
திருஷ்டன் என்ற மனு புத்திரனிலிருந்து தார்ஷ்டம் என்று அழைக்கப்பட்ட க்ஷத்திரிய வம்சம் வந்தது. இந்த வம்சத்தினர் இவ்வுலகில் பிராமணர்களின் நிலையை அடைந்தனர். பிறகு, நிருகன் என்ற மனு புத்திரனிலிருந்து சுமதி வந்தார். சுமதியிலிருந்து பூதஜோதியும், பூதஜோதியிலிருந்து வசுவும் வந்தனர்.
பதம் 9.2.18
வஸோ: ப்ரதீகஸ் தத்-புத்ர ஓகவான் ஓகவத்-பிதா
கன்யா சௌகவதீ நாம ஸுதர்சன உவாஹ தாம்
வஸோ:—வசுவின்; ப்ரதீக:—பிரதீகன் என்ற; தத்-புத்ர:—அவரது மகன்; ஓகவான்—ஓகவான் என்ற; ஓகவத்-பிதா—ஓகவானின் தந்தையான; கன்யா—அவரது மகள்; ச—கூட; ஓகவதீ—ஓகவதி; நாம—எனும் பெயர் கொண்ட; ஸுதர்சன:—சுதர்சனன்; உவாஹ—மணந்தார்; தாம்—அந்த மகளை (ஓகவதியை).
வசுவின் மகன் பிரதீகன், அவரது மகன் ஓகவான், ஒகவானின் மகனும் ஓகவான் என்றே அழைக்கப்பட்டார். அவரது மகள் ஓகவதி. அவளை சுதர்சனன் மணந்தார்.
பதம் 9.2.19
சித்ரஸேனோ நரிஷ்யந்தாத் ரிக்ஷஸ் தஸ்ய ஸுதோ ‘பவத்
தஸ்ய மீட்வாம்ஸ் தத: பூர்ண இந்ரஸேனஸ் து தத்-ஸுத:
சித்ரஸேன:—சித்ரசேனன் என்ற ஒருவர்; நரிஷ்யந்தாத்—மற்றொரு மனுபுத்திரரான நரிஷ்யந்தரிலிருந்து; ரிக்ஷ:—ரிக்ஷன்; தஸ்ய—சித்ரசேனனின்; ஸுத:—மகன்; அபவத்—ஆனார்; தஸ்ய—அவரின் (ரிக்ஷனின்); மீட்வான்—மீட்வான்; தத:—அவரிலிருந்து (மீட்வானிலிருந்து); பூர்ண:—பூர்ணன்; இந்ரஸேன:—இந்ரசேனன்; து—ஆனால்; தத்-ஸுத:—அவரது மகன் (பூர்ணன்).
நரிஷ்யந்தரிலிருந்து சித்ரசேனன் என்ற மகன் வந்தார். அவரிலிருந்து ரிக்ஷன் என்ற மகன் வந்தார். ரிக்ஷனிலிருந்து மீட்வானும், மீட்வானிலிருந்து பூர்ணனும், பூர்ணனிலிருந்து இந்ரசேனனும் வந்தனர்.
பதம் 9.2.20
வீதிஹோத்ரஸ் து இந்ரஸேனாத் தஸ்ய ஸத்யஸ்ரவா அபூத்
உருஸ்ரவா: ஸுதஸ் தஸ்ய தேவதத்தஸ் ததோ ‘பவத்
வீதிஹோத்ர:—வீதிஹோத்ரன்; து—ஆனால்; இந்ரஸேனாத்—இந்ரசேனனில் இருந்து; தஸ்ய—வீதிஹோத்ரனின்; ஸத்யஸ்ரவா:—சத்யஸ்ரவன் என்ற; அபூத்—வந்தார்; உருஸ்ரவா:—உருஸ்ரவன்; ஸுத:—மகனாவார்; தஸ்ய—அவரின் (சத்யஸ்ரவனின்); தேவதத்த:—தேவதத்தன்; தத:—உருஸ்ரவனிலிருந்து; அபவத்—வந்தார்.
இந்ரசேனனிலிருந்து வீதிஹோத்ரனும், வீதிஹோத்ரனிலிருந்து சத்யஸ்ரவனும், சத்யஸ்ரவனிலிருந்து உருஸ்ரவனும், உருஸ்ரவனிலிருந்து தேவதத்தனும் வந்தனர்.
பதம் 9.2.21
ததோ ‘க்னிவேஸ்யோ பகவான் அக்னி: ஸ்வயம் அபூத் ஸுத:
கானீன இதி விக்யாதோ ஜாதூகர்ண்யோ மஹான் ரிஷி:
தத:—தேவதத்தனிலிருந்து; அக்னிவேஸ்ய:—அக்னிவேஸ்யன் என்ற ஒரு மகன்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த; அக்னி:—அக்னி தேவன்; ஸ்வயம்—சுயமாகவே; அபூத்—ஆனார்; ஸுத:—மகன்; கானீன:—கானீனன்; இதி—இவ்வாறு; விக்யாத:—புகழப்பட்டார்; ஜாதூகர்ண்ய:—ஜாதூகர்ண்யன்; மஹான் ரிஷி:—சிறந்த மகான்.
தேவதத்தனிலியிருந்து அக்னிவேஸ்யன் என்ற ஒரு மகன் வந்தார். அவர் அக்னி தேவனேயாவார். புகழ்பெற்ற மகானாகிய இப்புதல்வர் கானீனன் என்றும் ஜாதூகர்ண்யன் என்றும் பிரசித்தி பெற்றவராவார்.
பதம் 9.2.22
ததோ ப்ரஹ்ம-குலம் ஜாதம் ஆக்னிவேஸ்யாயனம் ந்ருப
நரிஷ்யந்தான்வய: ப்ரோக்தோ திஷ்ட-வம்சம் அத: ஸ்ருணு
தத:—அக்னிவேஸ்யனிலிருந்து; ப்ரஹ்ம-குலம்—ஒரு பிராமண வம்சம்; ஜாதம்—உற்பத்தியானது; அக்னிவேஸ்யாயனம்—ஆக்னிவேஸ்யாயனம் என்ற; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே; நரிஷ்யந்த—நரிஷ்யந்தரின்; அன்வய:—வம்சத்தினர்; ப்ரோக்த:—விளக்கப்பட்டது; திஷ்ட-வம்சம்—திஷ்ட வம்சம்; அத:—அதன்பிறகு; ஸ்ருணு—கேளும்.
ராஜனே, அக்னிவேஸ்யனிலிருந்து ஆக்னிவேஸ்யாயனம் என்ற பிராமண வம்சம் ஒன்று வந்தது. இதுவரை நான் நரிஷ்யந்தரின் வம்சத்தைப் பற்றி விளக்கினேன். இப்பொழுது திஷ்ட வம்சத்தைப் பற்றி விவரிக்கப் போகிறேன். தயவுசெய்து என்னிடமிருந்து கேளும்.
பதங்கள் 9.2.23 – 9.2.24
நாபாகோ திஷ்ட-புத்ரோ ‘ன்ய: கர்மணா வைஸ்யதாம் கத:
பலந்தன: ஸுதஸ் தஸ்ய வத்ஸப்ரீதிர் பலந்தனாத்
வத்ஸப்ரீதே: ஸுத: ப்ரம்ஸுஸ் தத்-ஸுதம் ப்ரமதிம் விது:
கனித்ர: ப்ரமதேஸ் தஸ்மாச் சாக்ஷுஷோ ‘த விவிம்சதி:
நாபாக:—நாபாகன் என்ற; திஷ்ட-புத்ர:—திஷ்ட புத்திரன்; அன்ய:—மற்றொரு; கர்மணா—தொழிலால்; வைஸ்யதாம்—வைசியர் பிரிவை; கத:—அடைந்தார்; பலந்தன:—பலந்தனன் என்ற; ஸுத:—மகன்; தஸ்ய—அவரின் (நாபாகனின்); வத்ஸப்ரீதி:—வத்ஸப்ரீதி என்ற; பலந்தனாத்—பலந்தனிலிருந்து; வத்ஸப்ரீதே:—வத்ஸப்ரீதியிலிருந்து; ஸுத:—மகன்; ப்ராம்சு:—பிராம்சு என்ற; தத்-ஸுதம்—அவருடைய (பிராம்சுவின்) மகன்; ப்ரமதிம்—பிரமதி என்ற; விது:—நீர் புரிந்து கொள்ள வேண்டும்; கனித்ர:—கனித்ரன் என்ற; ப்ரமதே:—பிரமதியிலிருந்து; தஸ்மாத்—அவரிலிருந்து (கனித்ரனிலிருந்து); சாக்ஷுஷ:—சாக்ஷுஷன் என்ற; அத—இவ்வாறாக (சாக்ஷுஷனிலிருந்து); விவிம்சதி:—விவிம்சதி என்ற மகன்.
திஷ்டனுக்கு நாபாகன் என்ற ஒரு மகன் இருந்தார். பிறகு விவரிக்கப்படவிருக்கும் நாபாகனிலிருந்து வேறுபட்டவரான இந்த நாபாகன் ஒரு வைசியரானார். நாபாகனின் மகன் பலந்தனன் எனப்பட்டார். பலந்தனனின் மகன் வத்சப்ரீதி. அவரது மகன் பிராம்சு. பிராம்சுவின் மகன் பிரமதி. பிரமதியின் மகன் கனித்ரன். கனித்ரனின் மகன் சாக்ஷுஷன். அவரது மகன் விவிம்சதி.
பதம் 9.2.25
விவிம்சதே: ஸுதோ ரம்ப: கனீநேத்ரோ ‘ஸ்ய தார்மிக:
கரந்தமோ மஹாராஜ தஸ்யாஸீத் ஆத்மஜோ ந்ருப
விவிம்சதே:—விவிம்சதியிலிருந்து; ஸுத:—மகன்; ரம்ப:—ரம்பன் என்ற; கனீநேத்ர:—கனீநேத்ரன் என்ற; அஸ்ய—ரம்பனின்; தார்மிக:—சிறந்த மதப்பற்றுள்ளவர்; கரந்தம—கரந்தமன் என்ற; மஹாராஜ—ராஜனே; தஸ்ய—அவரின் (கனீநேத்ரனின்); ஆஸீத் ஆத்மஜ:—மகனாவார்; ந்ருப—அரசே.
விவிம்சதியின் மகன் ரம்பன். அவரது மகன் மிகச் சிறந்தவரும், சமயப் பற்றுள்ளவருமான கனீநேத்ர மகாராஜனாவார். அரசே, கனிநேத்ரனின் மகன் கரந்தம மகாராஜனாவார்.
பதம் 9.2.26
தஸ்யாவீக்ஷித் ஸுதோ யஸ்ய மருத்தஸ் சக்ரவர்த்தி அபூத்
ஸம்வர்தோ ‘யாஜயத் யம் வை மஹா-யோகி அங்கிர:-ஸுத:
தஸ்ய—அவரின் (கரந்தமனின்) அவீக்ஷித்—அவீக்ஷித் என்ற; ஸுத:—மகன்; யஸ்ய—எவரின் (அவீக்ஷித்); மருத்த:—மருத்தன் என்ற (மகன்), சக்ரவர்த்தீ—சக்கரவர்த்தி; ஆபூத்—ஆனார்; ஸம்வர்த:—சம்வர்த்தன்; அயாஜயத்—யாகம் இயற்றுவதில் ஈடுபடுத்தினார்; யம்—யாரை (மருத்தனை); வை—உண்மையில்; மஹா-யோகீ—மகா யோகி; அங்கிர:-ஸுத:—அங்கிரரின் மகன்.
கரந்தமனிலிருந்து அவீக்ஷித்து என்ற மகன் வந்தார். அவீக்ஷித்திலிருந்து சக்கவர்த்தியாக இருந்த மருத்தன் என்ற மகன் வந்தார். மகாயோகியும், அங்கிர புத்திரருமான சம்வர்தர் மருத்தனை யாகம் செய்வதில் ஈடுபடுத்தினார்.
பதம் 9.2.27
மருத்தஸ்ய யதா யக்ஞோ ந ததான்யோ ‘ஸ்தி கஸ்சன
ஸர்வம் ஹிரண்மயம் து ஆஸீத் யத் கிஞ்சித் சாஸ்ய சோபனம்
மருத்தஸ்ய—மருத்தனின்; யதா—அதே மாதிரி; யக்ஞ:—யாகமும்; ந—இல்லை; ததா—அதுபோல்; அன்ய:—வேறெந்த; அஸ்தி—உள்ளது; கஸ்சன—எதுவும்; ஸர்வம்—எல்லாம்; ஹிரண்-மயம்—தங்கக்தால் செய்யப்பட்டிருந்தன; து—உண்மையில்; ஆஸீத்—இருந்தன; யத்-கிஞ்சித்—அவருக்குச் சொந்தமானவை எல்லாம்; ச—மேலும்; அஸ்ய—மருத்தனின்; சோபனம்—மிகவும் அழகாக.
மருந்த ராஜனின் யாகப் பொருட்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததால் அவை அழகாக இருந்தன. உண்மையில், அவருடைய யாகத்துடன் வேறெந்த யாகத்தையும் ஒப்பிட முடியாது.
பதம் 9.2.28
அமாத்யத் இந்ர: ஸோமேன தக்ஷிணாபிர் த்விஜாதய:
மருத: பரிவேஷ்டாரோ விஸ்வேதேவா: ஸபா:-ஸத:
அமாத்யத்—மது உண்டு மயங்கினார்; இந்ர:—சுவர்க்க ராஜனான இந்திர தேவன்; ஸோமேன—சோம-ரஸம் உண்டு; தக்ஷிணாபி:—போதுமான நன்கொடைகளைப் பெற்று; த்விஜாதய:—பிராமணர் பிரிவினர்; மருத:—காற்றுகள்; பரிவேஷ்டார:—உணவு வகைகளை அளித்தன; விஸ்வேதேவா:—பிரபஞ்ச தேவர்கள்; ஸபா-ஸத:—சபா உறுப்பினர்கள்.
அந்த யாகத்தின்போது அதிகமான சோம-ரசத்தை உண்ட இந்திர தேவன் மதிமயக்கமடைந்தார். பிராமணர்கள் அதிகமான நன்கொடைகளைப் பெற்று திருப்தியடைந்தனர். காற்றுக்களைக் கட்டுப்படுத்தும் பற்பல தேவர்கள் அந்த யாகத்திற்கான உணவு வகைகளை அளித்தனர். விஸ்வேதேவர்கள் சபா உறுப்பினர்களாக இருந்தனர்.
பதம் 9.2.29
மருத்தஸ்ய தம: புத்ரஸ் தஸ்யாஸீத் ராஜ்யவர்தன:
ஸுத்ருதிஸ் தத்-ஸுதோ ஜக்ஞே ஸௌத்ருதேயோ நர: ஸுத:
மருத்தஸ்ய—மருத்தனின்; தம:—தமன் (என்ற); புத்ர:—புத்திரன்; தஸ்ய—அவரின் (தமனின்); ஆஸீத்—இருந்தார்; ராஜ்ய-வர்தன:—ராஜ்யவர்தனன் என்ற, அல்லது இராஜ்யத்தை விரிவடையச் செய்யக் கூடிய ஒருவர்; ஸுத்ருதி—சுத்ருதி எனும் பெயர் கொண்ட; தத்-ஸுத:—அவரது (ராஜ்யவர்தனனின்) மகன்; ஜக்ஞே—பிறந்தார்; ஸௌத்ருதேய:—ஸௌத்ருதியிலிருந்து; நர:—நரன் என்ற; ஸுத:—மகன்.
மருத்தனின் மகன் தமன். தமனின் மகன் ராஜ்யவர்தனன். ராஜ்யவர்தனனின் மகன் சுத்ருதி. அவரது மகன் நரன்.
பதம் 9.2.30
தத்-ஸுத-கேவலஸ் தஸ்மாத் துந்துமான் வேகவாம்ஸ் தத:
புதஸ் தஸ்யாபவத் யஸ்ய த்ருணபிந்துர் மஹீபதி:
தத்-ஸுத:—அவரது (நரனின்) மகன்; கேவல:—கேவலன் என்பவர்; தஸ்மாத்—அவரிலிருந்து (கேவலனிலிருந்து); துந்துமான்—துந்துமான் என்ற ஒரு மகன் பிறந்தார்; வேகவான்—வேகவான் என்ற; தத:—அவரிலிருந்து (துந்துமானிலிருந்து); புத:—புதன் என்ற; தஸ்ய—அவரின் (வேகவானின்); அபவத்—வந்தார்; யஸ்ய—எவரின் (புதனின்); த்ருணபிந்து:—திருணபிந்து என்ற ஒரு மகன்; மஹீபதி:—அரசர்.
நரனின் மகன் கேவலன். அவரது மகன் துந்துமான். அவரது மகன் வேகவான். வேகவானின் மகன் புதன். புதனின் மகன் திருணபிந்து. இவர் இம் மண்ணுலகிற்கு அரசரானார்.
பதம் 9.2.31
தம் பேஜே ‘லம்புஷா தேவீ பஜனீய-குணாலயம்
வராப்ஸரா யத: புத்ரா: கன்யா சேலவிளாபவத்
தம்—அவரை (திருணபிந்துவை); பேஜே—கணவனாக ஏற்றாள்; அலம்புஷா—அலம்புஷை என்ற மங்கை; தேவி—தேவதை; பஜனீய—ஏற்றுக் கொள்ளத் தகுந்த; குண-ஆலயம்—எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடம்; வர-அப்ஸரா:—அப்ஸரஸ்களிலேயே மிகச்சிறந்தவள்; யத:—எவரிலிருந்து (திருணபிந்துவிலிருந்து); புத்ரா:—சில மகன்கள்; கன்யா—ஒரு மகள்; ச—மேலும்; இலவிளா—இலவிளை என்பவள்; அபவத்—பிறந்தாள்.
அலம்புழை, அப்ஸரஸ்களிலேயே மிகச் சிறந்தவளாகவும், உயர்ந்த தகுதிபெற்ற மங்கையாகவும் இருந்தாள். இதேபோன்ற தகுதியுடைய திருணபிந்துவை அவள் தன் கணவனாக ஏற்றாள். சில மகன்களையும், இலவிளை என்ற ஒரு மகளையும் அவள் பெற்றெடுத்தாள்.
பதம் 9.2.32
யஸ்யாம் உத்பாதயாம் ஆஸ விஸ்ரவா தனதம் ஸுதம்
ப்ராதாய வித்யாம் பரமாம் ரிஷிர் யோகேஸ்வர: பிது:
யஸ்யாம்—எவரில் (இலவிளை மூலம்); உத்பாதயாம் ஆஸ—பெற்றெடுத்தாள்; விஸ்ரவா:—விஸ்ரவர்; தன-தம்—குபேரனை, அல்லது பணம் கொடுப்பவரை; ஸுதம்—ஒரு மகனை; ப்ராதாய—பெற்றபின்; வித்யாம்—உன்னத அறிவை; பரமம்—திவ்யமான; ரிஷி—சிறந்த புண்ணிய புருஷர்; யோக-ஈஸ்வர:—மகா யோகி; பிது:—அவரது தந்தையிடமிருந்து.
சிறந்த மகானும், மகா யோகியுமான விஸ்ரவர் அவரது தந்தையிடமிருந்து உன்னத அறிவைப் பெற்றார். பிறகு, பணம் கொடுப்பவரான குபேரன் என்ற புகழ்பெற்ற ஒரு மகனை, இலவிளையின் மூலமாக அவர் பெற்றார்.
பதம் 9.2.33
விசால: சூன்யபந்துஸ் ச தூம்ரகேதுஸ் ச தத்-ஸுதா:
விசாலோ வம்ச-க்ருத் ராஜா வைசாலீம் நிர்மமே புரீம்
விசால:—விசாலன் என்ற; சூன்யபந்து:—சூன்யபந்து என்ற; ச—கூட; தூம்ரகேது:—தூம்ரகேது என்ற; ச—மேலும்; தத்-ஸுதா:—திருணபிந்துவின் மகன்களை; விசால:—அம்மூவரில் விசால ராஜன்; வம்ச-க்ருத்—ஒரு வம்சத்தை ஏற்படுத்தினார்; ராஜா—அரசர்; வைசாலீம்—வைசாலீ என்ற; நிர்மமே—கட்டினார்; புரீம்—ஓர் அரண்மனையை.
திருணபிந்துவுக்கு விசாலன், சூன்யபந்து, தூம்பரகேது என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இம்மூவரில் விசாலன் என்பவர் ஒரு வம்சத்தை உண்டாக்கியதுடன், வைசாலி என்ற ஓர் அரண்மனையையும் கட்டினார்.
பதம் 9.2.34
ஹேமசந்ர: ஸுதஸ் தஸ்ய தூம்ராக்ஷஸ் தஸ்ய சாத்மஜ:
தத்-புத்ராத் ஸம்யமாத் ஆஸீத் க்ருசாஸ்வ: ஸஹ-தேவஜ:
ஹேமசந்ர:—ஹேமசந்திரன் என்பவர்; ஸுத:—மகன்; தஸ்ய—அவரின் (விசாலனின்); தூம்ராக்ஷ:—தூம்ராக்ஷன் என்பவர்; தஸ்ய—அவரின் (ஹேமசந்திரனின்); ச—கூட; ஆத்மஜ:—மகன்; தத்-புத்ராத்—அவரது (தூம்ராக்ஷனின்) மகனிலிருந்து; ஸம்யமாத்—சம்யமன் என்பவரிலிருந்து; ஆஸீத்—வந்தார்; க்ருசாஸ்வ:—கிருசாஸ்வன்; ஸஹ—அவருடன்; தேவஜ:—தேவஜன்.
விசாலனின் மகன் ஹேமசந்திரன் எனப்பட்டார். அவரது மகன் தூம்ராக்ஷன். அவரது மகன் சம்யமன். இவரது மகன்கள் தேவஜன் மற்றும் கிருசாஸ்வன் ஆகியோராவர்.
பதங்கள் 9.2.35 – 9.2.36
க்ருசாஸ்வாத் ஸோமதத்தோ ‘பூத் யோ ‘ஸ்வமேதைர் இடஸ்பதிம்
இஷ்ட்வா புருஷம் ஆபாக்ரியாம் கதிம் யோகேஸ்வராஸ்ரிதாம்
ஸௌமதத்திஸ் து ஸுமதிஸ் தத்-புத்ரோ ஜனமேஜய:
ஏதே வைசால-பூபாலாஸ் த்ருணபிந்தோர் யசோதரா:
க்ருசாஸ்வாத்—கிருஸ்வாஸ்வரிலிருந்து; ஸோமதத்த:—சோமதத்தன் என்ற ஒரு மகன்; அபூத்—வந்தார்; ய:—அவர் (சோமத்தன்); அஸ்வமேதை:—அஸ்வமேத யாகங்களைச் செய்து; இடஸ்பதிம்—பகவான் விஷ்ணுவை; இஷ்டவா—வழிபட்டபின்; புருஷம்—பகவான் விஷ்ணுவை; ஆப—அடைந்தார்; அக்ரியாம்—அனைத்திலும் சிறந்த; கதிம்—கதியை; யோகேஸ்வர-ஆஸ்ரிதாம்—சிறந்த அஷ்டாங்க யோகிகளுக்குரிய; ஸௌமதத்தி:—சோமதத்தனின் மகன்; து—ஆனால்; ஸுமதி:—சுமதி என்ற ஒரு மகன்; தத்-புத்ர:—அவரது (சுமதியின்) மகன்; ஜனமேஜய:—ஜனமேஜயன் எனப்பட்டார்; ஏதே—அவர்களனைவரும்; வைசால-பூபாலா:—வைசால வம்சத்தின் அரசர்கள்; த்ருணபிந்தோ: யச:-தரா:—திருணபிந்து மகாராஜனின் புகழை தொடரச் செய்தார்.
கிருசாஸ்வரின் மகனான சோமதத்தன் அஸ்வமேத யாகங்களைச் செய்து பரமபுருஷரான விஷ்ணுவை திருப்திப்படுத்தினார். பரம புருஷரை வழிபட்டதால், சிறந்த அஷ்டாங்க யோகிகள் வாழத்தகுந்த கிரகத்தை அவர் அடைந்தார். சோமத்தனின் மகன் சுமதி. அவரது மகன் ஜனமேஜயன். விசால வம்சத்தில் தோன்றிய இந்த அரசர்கள் அனைவரும் திருணபந்து மகாராஜனின் புகழுக்குரிய நிலையை நன்கு காப்பாற்றி வந்தனர்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “மனு புத்திரர்களின் வம்சங்கள்” எனும் தலைப்பை கொண்ட இரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.