அத்தியாயம் – 24
பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர்
பதம் 9.24.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: விதர்பர் தன் தந்தையால் கொண்டு வரப்பட்ட பெண்ணின் கர்பத்தில் குசன், கிரதன், ரோமபாதர் என்ற மூன்று மகன்களைப் பெற்றார். விதர்ப வம்சத்தில் வந்த ரோமபாதர் எல்லோருக்கும் பிரியமானவராக இருந்தார்.
பதம் 9.24.2 : ரோமபாதரின் மகன் பப்ரு. அவரிலிருந்து கிருதி என்ற மகன் வந்தார். கிருதியின் மகன் உசிகர். உசிகரின் மகன் சேதி. சேதியிலிருந்து சைத்யர் என்ற அரசரும் மற்றவர்களும் பிறந்தனர்.
பதங்கள் 9.24.3 – 9.24.4 : கிரதரின் மகன் குந்தி. குந்தியின் மகன் விருஷ்ணி. விருஷ்ணியின் மகன் நிவ்ருதி. நிவ்ருதியின் மகன் தஸார்ஹர், அவரிலிருந்து வியோமரும், வியோமரிலிருந்து ஜீமூதரும், அவரிலிருந்து விக்ருதியும், விக்ருதியிலிருந்து பீமரதரும், அவரிலிருந்து நவரதரும், நவரதரிலிருந்து தசரதரும் வந்தனர்.
பதம் 9.24.5 : தசரதரிலிருந்து சகுனி என்ற ஒரு மகன் வந்தார். சகுனியிலிருந்து கரம்பி என்ற மகன் வந்தார். கரம்பியின் மகன் தேவராதர். அவரது மகன் தேவக்ஷத்ரர். அவரது மகன் மது. மதுவின் மகன் குருவசர். அவரிலிருந்து அனு என்ற மகன் வந்தார்.
பதங்கள் 9.24.6 – 9.24.8 : அனுவின் மகன் புருஹோத்ரர். அவரது மகன் அயு. அயுவின் மகன் சாத்வதர், சிறந்த ஆசிய மன்னரே, சாத்வதருக்கு பஜமானர், பஜி, திவ்யர், விருஷ்ணி, தேவாவிருதர், அந்தகர், மஹாபோஜர் என்ற ஏழு மகன்கள் இருந்தனர். பஜமானர் அவரது ஒரு மனைவியின் மூலமாக நிம்லோசி, கிங்கனர், திருஷ்டி என்ற மூன்று மகன்களைப் பெற்றார். அவரது பிற மனைவிகளிலிருந்து சதாஜித், சஹஸ்ராஜித், அயுதாஜித் என்ற வேறு மூன்று மகன்கள் வத்தனர்.
பதம் 9.24.9 : தேவாவிருதரின் மகன் பப்ரு. தேவாவிருதர் மற்றும் பப்ரு ஆகியோரைப் பற்றிய புகழ்பெற்ற இரு துதிப்பாடல்கள் உள்ளன. எமது முன்னோர்களால் பாடப்பட்ட அவற்றை, தூரத்திலிருந்து நாம் கேட்டிருக்கிறோம். அவர்களது குணங்களை விவரிக்கும் அதே ஸ்தோத்திரங்களை இப்பொழுதும் நான் கேட்கிறேன் (ஏனெனில் முன்பு கேட்கப்பட்டது இன்றும் தொடர்ந்து பாடப்பட்டு வருகிறது).
பதங்கள் 9.24.10 – 9.24.11 : “மனிதருக்கிடையில் பப்ரு சிறந்தவரென்றும், தேவாவிருதர் தேவர்களுக்குச் சமமானவர் என்றும் முடிவு செய்யப்பட்டது. பப்ரு மற்றும் தேவாவிருதரின் சகவாசத்தின் காரணத்தால் 14,065 என்ற எண்ணிக்கையுடைய அவர்களது வம்சத்தவர்கள் அனைவரும் முக்தியடைந்தனர். மிகச்சிறந்த பக்திமானாக விளங்கிய மஹாபோஜ வம்சத்தில் போஜ அரசர்கள் தோன்றினர்.
பதம் 9.24.12 : அரசே, எதிரிகளை அடக்கக் கூடியவரான பரீட்சித்து மகாராஜனே, விருஷ்ணியின் மகன்கள் சுமித்ரர், யுதாஜித் ஆகியோராவர். யுதாஜித்திலிருந்து சினியும், அனமித்ரரும் வந்தனர். அனமித்ரரிலிருந்து நிக்னர் என்ற மகன் வந்தார்.
பதம் 9.24.13 : நிக்னரின் இரு மகன்கள் சத்ராஜிதர் மற்றும் பிரசேனர். அனமித்ரரின் மற்றொரு மகன் மற்றொரு சினி ஆவார். அவரது மகன் சத்யகர்.
பதம் 9.24.14 : சத்யகரின் மகன் யுயுதானர். அவரது மகன் ஜயன். ஜயனிலிருந்து குணி என்ற மகனும், குணியிலிருந்து யுகந்தரர் என்ற மகனும் வந்தனர். அனமித்ரரின் மற்றொரு மகன் விருஷ்ணி எனப்படுவார்.
பதம் 9.24.15 : விருஷ்ணியிலிருந்து ஸ்வபல்கர், சித்ரரதர் என்ற மகன்கள் வந்தனர். ஸ்வபல்கரிலிருந்து அவரது மனைவி காந்தினியின் மூலமாக அக்ரூரர் வந்தார். அக்ரூரர் மூத்தவராவார். ஆனால் பன்னிரண்டு வேறு மகன்களும் இருந்தனர். அவர்கள் அனைவருமே மிகவும் புகழ் பெற்றவர்கள்.
பதங்கள் 9.24.16 – 9.24.18 : இந்த பன்னிருவரின் பெயர்கள் ஆசங்கர், சாரமேயர், மிருதுரர், மிருதுவித், கிரி, தர்மவிருத்தர், சுகர்மா, க்ஷேத்ரோபேக்ஷர், அரிமர்தனர், சத்ருக்னர், கந்தமாதர், பிரதிபாஹு என்பனவாகும். இச்சகோதரர்களுக்குச் சுசாரா என்ற ஒரு சகோதரியும் இருந்தாள். அக்ரூரரிலிருந்து தேவவான், உபதேவர் என்ற இரு மகன்கள் வந்தனர். சித்ரரதருக்கு பிருது, விதூரதர் முதலான பல மகன்கள் இருந்தனர். அவர்களனைவரும் விருஷ்ணி வம்சத்தைச் சேர்ந்தவர்களாக அறியப்பட்டனர்.
பதம் 9.24.19 : குகுரர், பஜமானர், சுசி, கம்பலபர்ஹிஷர் ஆகியோர் அந்தகரின் நான்கு மகன்களாவர். குகுரரின் மகன் வஹ்னி, அவரது மகன் விலோமா.
பதம் 9.24.20 : விலோமாவின் மகன் கபோதரோமா. அவரது மகன் அனு. அனுவின் நண்பர் தும்புரு. அனுவிலிருந்து அந்தகர் வந்தார். அந்தகரிலிருந்து துந்துபியும், அவரிலிருந்து அவித்யோத்தரும் வந்தனர். அவித்யோத்தரிலிருந்து புனர்வசு என்ற மகன் வந்தார்.
பதங்கள் 9.24.21 – 9.24.23 : புனர்வசுவிற்கு முறையே ஆஹுகர் மற்றும் ஆஹுகி என்ற ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். ஆஹுகருக்கு தேவகர், உக்ரசேனர் என்ற இரு மகன்கள் இருந்தனர். தேவகருக்கு தேவவான், உபதேவர், சுதேவர், தேவவர்தனர் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். மேலும் அவருக்கு சாந்திதேவா, உபதேவா, ஸ்ரீதேவா, தேவரக்ஷிதா, சஹதேவா, தேவகீ, திருததேவா என்ற ஏழு புதல்விகளும் இருந்தனர். இவர்களுள் திருததேவா மூத்தவளாவாள். கிருஷ்ணரின் தந்தையான வசுதேவர் இந்த ஏழு சகோதரிகளையும் மணந்து கொண்டார்.
பதம் 9.24.24 : கம்சன், சுனாமா, நியக்ரோதர், கங்கர், சங்கு, சுஹு, ராஷ்ட்ரபாலர், திருஷ்டி, துஷ்டிமான் ஆகியோர் உக்ரசேனரின் மகன்களாவர்.
பதம் 9.24.25 : கம்சா, கம்சவதீ, கங்கா, சூரபூ, ராஷ்ட்ரபாலிகா ஆகியோர் உக்ரசேனரின் புதல்விகளாவர். அவர்கள் வசுதேவருடைய இளைய சகோதரர்களின் மனைவிகளாயினர்.
பதம் 9.24.26 : சித்ரரதனின் மகன் விதூரதன். அவரது மகன் சூரர். சூரரின் மகன் பஜமானர். அவரது மகன் சினி. சினியின் மகன் போஜர். போஜரின் மகன் இருதிகர்.
பதம் 9.24.27 : தேவமீடர், சததனு, கிருதவர்மா ஆகியோர் கிருதிகரின் மூன்று மகன்களாவர். தேவமீடரின் மகன் சூரர். சூரரின் மனைவி மாரிஷா என்பவளாவாள்.
பதங்கள் 9.24.28 – 9.24.31 : சூர மகாராஜன் மாரிஷாவின் மூலமாக வசுதேவர், தேவபாகர், தேவஸ்ரவா, ஆனகர், சிருஞ்சயர், சியாமகர், கங்கர், சமீகர், வத்ஸகர், விருகர் ஆகியோரைப் பெற்றார். இந்த பத்து மகன்களும் கங்களமற்ற புண்ணியவான்களாவர். வசுதேவர் பிறந்த பொழுது விண்ணுலக தேவர்கள் பேரிகைகளை (துந்துபிகளை) முழங்கினர். ஆகவே புருஷோத்தமராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் தோற்றத்திற்குத் தகுந்த இடத்தை அளித்தவரான வசுதேவர் ஆனகதுந்துபி என்றும் அறியப்பட்டார். சூர மகாராஜனின் ஐந்து புதல்விகளாக பிருதா, சுருததேவா, சுருதகீர்த்தி, சுருதஸ்ரவா, ராஜாதிதேவி ஆகியோர் வசுதேவரின் சகோதரிகளாவர். சூரர் பிருதாவைத் தன் நண்பரான குந்திக்குக் கொடுத்தார். குந்திக்கு மகப்பேறு இல்லை. எனவே பிருதாவின் மற்றொரு பெயர் குந்தீ என்பதாகும்.
பதம் 9.24.32 : ஒரு சமயம் துர்வாசர் பிருதாவினுடைய தந்தையான குந்தியின் வீட்டில் ஒரு விருந்தாளியாக வந்திருந்தபொழுது, பிருதா அவருக்குச் சேவை செய்து அவரை திருப்திப்படுத்தினாள். எனவே ஒருவித யோக சக்தியை அவரிடமிருந்து அவள் பெற்றாள். அதைக் கொண்டு எந்த தேவரையும் அவளால் அழைக்க இயலும். அந்த யோக சக்தியின் ஆற்றலைச் சோதிக்க விரும்பிய புனிதவதியான குந்தீ, உடனே சூரிய தேவனை அழைத்தாள்.
பதம் 9.24.33 : குந்தீ சூரியதேவனை அழைத்த உடனேயே அவர் அவள் முன் தோன்றினார். அதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்த அவள், “இந்த யோக சக்தியின் வலிமையை நான் சோதித்துப் பார்க்க விரும்பினேன், அவ்வளவுதான். தேவையில்லாமல் தங்களை நான் அழைத்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன். தயவுசெய்து என்னை மன்னித்து திரும்பிச் செல்லுங்கள்” என்று சூரியதேவனிடம் கூறினாள்.
பதம் 9.24.34 : சூரியதேவன் கூறினார்: அழகிய பிருதாவே, தேவர்களுடனான உனது சந்திப்பு வீண் போகாது. ஆகவே எனது விந்தை உனது கர்பத்தில் நான் பதிக்கப்போகிறேன். இதனால் நீ ஒரு மகனுக்குத் தாயாவாய். நீ இன்னும் திருமணமாகாத ஒரு பெண்ணாக இருப்பதால், உனது கன்னித்தன்மையைப் பாதுகாக்க நான் ஏற்பாடு செய்கிறேன்.
பதம் 9.24.35 : இவ்வாறு கூறிய பிறகு சூரியதேவன் தன் விந்தைப் பிருதாவின் கர்பத்திற்குள் செலுத்திவிட்டு சுவர்க்க லோகத்திற்குத் திரும்பிச் சென்றார். அதன்பிறகு குந்திதேவிக்கு உடனே ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை இரண்டாவது சூரிய தேவனைப் போல் காட்சியளித்தது.
பதம் 9.24.36 : மக்களின் தூற்றுதலுக்கு அஞ்சிய குந்தி, மிகவும் கஷ்டத்துடன் அவளது குழந்தையிடமுள்ள பாசத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. தன் விருப்பத்திற்கெதிராக அவள் அக்குழந்தையை ஒரு பெட்டகத்தில் வைத்து மூடி, நதிநீரில் மிதந்து செல்லும்படி விட்டுவிட்டாள். பரீட்சித்து மகாராஜனே, உமது முப்பாட்டனாரும், புண்ணியவானும், பராக்கிரமசாலியுமான பாண்டு மகாராஜன் பிறகு குந்தியை மணந்து கொண்டார்.
பதம் 9.24.37 : காரூஷ மன்னரான விருத்தசர்மா, குந்தியின் சகோதரியான சுருத தேவாவை மணந்தார். அவளது கர்பத்திலிருந்து தந்தவக்ரன் பிறந்தான். சனகர் முதலான முனிவர்களால் சபிக்கப்பட்ட தந்தவக்ரன் முன்பு இரண்யாக்ஷன் என்ற பெயருடன் திதியின் மகனாகப் பிறந்திருந்தான்.
பதம் 9.24.38 : கேகய நாட்டு அரசரான திருஷ்டகேது மகாராஜன் குந்தியின் மற்றொரு சகோதரியான சுருதகீர்த்தியை மணந்தார். சுருதகீர்த்திக்கு சந்தர்தனன் முதலான ஐந்து மகன்கள் இருந்தனர்.
பதம் 9.24.39 : ஜயசேனர், மற்றொரு சகோதரியான ராஜாதிதேவியின் கர்பத்தில் விந்தன், அனுவிந்தன் என்ற இரு மகன்களைப் பெற்றார், அது போலவே, சேதி நாட்டரசர் சுருதஸ்ரவாவை மணந்தார். இந்த அரசரின் பெயர் தமகோஷர் என்பதாகும்.
பதம் 9.24.40 : சுருதஸ்ரவாவின் மகன் சிசுபாலன். அவனது பிறப்பு (ஸ்ரீமத் பாகவதத்தின் ஏழாம் காண்டத்தில்) முன்பே விவரிக்கப்பட்டுள்ளது. வசுதேவரின் சகோதரரான தேவபாகர் என்பவர் தன் மனைவி கம்சாவின் மூலமாக சித்ரகேது, பிருஹத்பலன் என்ற இரு மகன்களைப் பெற்றார்.
பதம் 9.24.41 : வசுதேவரின் சகோதரரான தேவஸ்ரவா கம்சவதியை மணந்து அவள் மூலமாக சுவீரன் இஷுமன் என்ற இரு மகன்களைப் பெற்றார். கங்கன் தன் மனைவியான கங்காவின் மூலமாக பகன், சத்யஜித், புருஜித் என்ற மூன்று மகன்களைப் பெற்றார்.
பதம் 9.24.42 : சிருஞ்சய மகாராஜன் தன் மனைவி ராஷ்ட்ரபாலிகாவின் மூலமாக, விருஷன், துர்மர்ஷணன் முதலான மகன்களைப் பெற்றார். சியாமக மகாராஜன் தன் மனைவி சூரபூமியின் மூலமாக ஹரிகேசன், இரண்யாக்ஷன் என்ற இரு மகன்களைப் பெற்றார்.
பதம் 9.24.43 : அதன்பிறகு வத்ஸக மகாராஜன், அவரது மனைவியும், ஓர் அப்சரஸ்ஸுமான மிஸ்ரகேசியின் கர்பத்தின் மூலமாக விருக்கன் முதலான மகன்களைப் பெற்றார். விருக்கன் அவனது மனைவியான துர்வாக்ஷியின் மூலமாக தக்ஷன், புஷ்கரன், சாலன் போன்றவர்களைப் பெற்றான்.
பதம் 9.24.44 : சமீகரிலிருந்து அவரது மனைவியான சுதாமனியின் கர்பத்தின் மூலமாக சுமித்ரரும், அர்ஜுனபாலரும், மற்ற மகன்களும் வந்தனர். ஆனக மகாராஜன் அவரது மனைவி கர்ணிகாவின் மூலமாக ரிததாமர், ஜயன் என்ற இரு மகன்களைப் பெற்றார்.
பதம் 9.24.45 : தேவகீ, பௌரவி, ரோகிணி, பத்ரா, மதிரா, ரோசனா, இளை ஆகியோரும் மற்றவர்களும் ஆனகதுந்துபியின் (வசுதேவரின்) மனைவிகளாவர். இவர்கள் அனைவரிலும் தேவகி முக்கியமானவளாவாள்.
பதம் 9.24.46 : வசுதேவர் அவரது மனைவி ரோகிணியின் மூலமாக பலன், கதன், சாரணர், துர்மதர், விபுலர், துருவர், கிருதர் போன்ற மகன்களைப் பெற்றார்.
பதங்கள் 9.24.47 – 9.24.48 : பெளரவியின் கர்பத்திலிருந்து பூதர், சுபத்ரர், பத்ரபாஹு, துர்மதர், பத்ரர் ஆகியோர் உட்பட பன்னிரண்டு மகன்கள் வந்தனர். நந்தர், உபநந்தர், கிருதகர், சூரர், மற்றும் பிறர் மதிராவின் கர்பத்திலிருந்து பிறந்தவர்களாவர். பத்ரா (கெளசல்யா), கேசி என்ற ஒரே ஒரு மகனைப் பெற்றாள்.
பதம் 9.24.49 : வசுதேவர் அவரது மற்றொரு மனைவியான ரோசனாவின் மூலமாக ஹஸ்தன், ஹேமாங்கதன் போன்ற மகன்களைப் பெற்றார். மேலும் இளை என்ற அவரது மனைவியின் மூலமாக அவர் உருவல்கர் முதலான மகன்களைப் பெற்றார். இவர்களனைவரும் யது வம்சத்தில் முக்கியமானவர்களாக விளங்கினர்.
பதம் 9.24.50 : ஆனகதுந்துபியின் மனைவிகளுள் ஒருத்தியான திருததேவாவின் கர்பத்திலிருந்து விப்ருஷ்டர் என்ற மகன் வந்தார். வசுதேவரின் மற்றொரு மனைவியான சாந்திதேவாவின் மகன்கள் பிரசமர், பிரசிதர் போன்றவர்களாவர்.
பதம் 9.24.51 : வசுதேவருக்கு உபதேவா என்ற ஒரு மனைவியும் இருந்தாள். அவள் மூலமாக ராஜன்யர், கல்பர், வர்ஷர் முதலான பத்து மகன்கள் வந்தனர். மற்றொரு மனைவியான ஸ்ரீதேவாவிலிருந்து வசு, ஹம்ஸர், சுவம்ஸர் போன்ற ஆறு மகன்கள் வந்தனர்.
பதம் 9.24.52 : வசுதேவரின் விந்தின் மூலமாக தேவரக்ஷிதாவின் கர்பத்தில் கதா முதலான ஒன்பது மகன்கள் பிறந்தனர். தர்மமே உருவான வசுதேவருக்கு சஹதேவா என்ற ஒரு மனைவியும் இருந்தாள். அவளது கர்பத்தின் மூலமாக சுருதர், பிரவரர் முதலான எட்டு மகன்கள் பிறந்தனர்.
பதங்கள் 9.24.53 – 9.24.55 : சஹதேவாவுக்குப் பிறந்த பிரவரர், சுருதர் போன்ற எட்டு மகன்கள், சுவர்க்க லோகங்களிலுள்ள எட்டு வஸுக்களின் அவதாரங்களாவர். வசுதேவர் தேவகியின் கர்பத்தின் மூலமாக உயர்ந்த தகுதியுடைய எட்டு மகன்களைப் பெற்றார். இவர்களுள் கீர்த்திமான், சுஷேணர், பத்ரசேனர், ரிஜு, சம்மர்தனர், பத்ரர் மற்றும் பரமபுருஷரும், சேஷ அவதாரமுமான சங்கர்ஷணர் ஆகியோரும் அடங்குவர். எட்டாவது மகன் பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணராவார். ஒரே புதல்வியும், மகா பாக்கியசாலியுமான சுபத்திரை உமது பாட்டியாவாள்.
பதம் 9.24.56 : எப்பொழுதெல்லாம் தர்மம் சீரழிந்து அதர்மம் அதிகரிக்கிறதோ அப்பொழுது பரம ஆளுனரும், பரமபுருஷருமாகிய பகவான் ஸ்ரீ ஹரி தன்னிச்சையாகத் தோன்றுகிறார்.
பதம் 9.24.57 : ஆனால் அரசே, பரீட்சித்து மகாராஜனே, பகவானின் சொந்த விருப்பத்தைப் பொறுத்தவரை, அவரது தோற்றத்திற்கோ, மறைவிற்கோ அல்லது செயல்களுக்கோ எந்த காரணமும் இல்லை. பரமாத்மா என்ற முறையில் அனைத்தையும் அவர் அறிவார். அதனால் அவரை பாதிக்கக் கூடிய எந்த காரணமும் இல்லை. கர்ம பலன்கள் கூட அவரை பாதிப்பதில்லை.
பதம் 9.24.58 : பரமபுருஷர் அவரது இரக்கத்தினால் ஜீவராசிக்கு முக்தியளித்து, அந்த ஜீவராசியின் பிறப்பு, இறப்பு பெளதிக வாழ்வின் நீடிப்பு ஆகியவற்றை நிறுத்துவதற்காகவே, இப்பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களில் தமது பௌதிக சக்தியின் மூலமாக செயற்படுகிறார். இவ்வாறாக ஜீவராசி பகவானின் இராஜ்யமான பரமபதத்தை அடைய அவர் சக்தியளிக்கிறார்.
பதம் 9.24.59 : அரசாங்கத்தை ஆக்ரமித்துக் கொண்டுள்ள அசுரர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்கள் போல் உடை அணிந்துள்ள போதிலும். அவர்கள் அரசாங்கத்தின் கடமையை அறிந்திருக்கவில்லை. இதன் விளைவாக, இறைவனின் ஏற்பாட்டினால், பெரும் படைபலத்தைப் பெற்றுள்ள இத்தகைய அசுரர்கள் ஒருவரோடொருவர் யுத்தம் செய்கின்றனர். இவ்வாறாக பூமியில் அசுரர்களால் ஏற்பட்டுள்ள பெரும் பாரம் குறைக்கப்படுகிறது. பரமபுருஷரின் விருப்பத்தால் அசுரர்கள் தங்களுடைய படைபலத்தை அதிகரிக்கின்றனர். அதனால் அவர்களுடைய எண்ணிக்கை குறையும். பக்தர்களுக்கும் கிருஷ்ண உணர்வில் முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு கிட்டும்.
பதம் 9.24.60 : பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரானவர், சங்கர்ஷணர் மற்றும் பலராமர் ஆகியோரின் ஒத்துழைப்புடன், பிரம்மதேவர், சிவபெருமான் போன்றவர்களால் கூட புரிந்துகொள்ள முடியாத செயல்களைச் செய்தார். (உதாரணமாக, பூமியின் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு, அசுரர்களைக் கொல்லும் நோக்கத்துடன் ஸ்ரீ கிருஷ்ணர் குருட்சேத்திர யுத்தத்தை ஏற்பாடு செய்தார்).
பதம் 9.24.61 : எதிர்காலத்தில் வரப்போகும் கலியுகத்தில் பிறவி எடுக்கவிருக்கும் பக்தர்களுக்கு அகாரணமான கருணையைக் காட்டும் பொருட்டு, பரம புருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவானை நினைப்பதாலேயே பெளதிக வாழ்வின் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் ஒருவன் விடுபடும் வகையில் செயற்பட்டார். (அதாவது, எதிர்காலத்தில் வரப்போகும் பக்தர்கள் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள கிருஷ்ண உணர்வு உபதேசங்களை ஏற்றுக் கொள்வதன் மூலமாக பௌதிக துன்பங்களிலிருந்து விடுபடக்கூடிய முறையில் பகவான் செயற்பட்டார்).
பதம் 9.24.62 : பகவத் பக்தர்கள் பகவானின் மகிமைகளைப் புனிதமடைந்த தங்களுடைய உன்னதமான செவிகளால் கேட்பதாலேயே, உறுதியான பௌதிக ஆசைகளிலிருந்தும், பலன் கருதும் செயல்களிலுள்ள ஈடுபாட்டிலிருந்தும் உடனே விடுபடுகின்றனர்.
பதங்கள் 9.24.63 – 9.24.64 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் போஜ, விருஷ்ணி, மது, அந்தக, சூரசேன, தசார்ஹ, குரு, சிருஞ்சய மற்றும் பாண்டு வம்சத்தவர்களின் உதவியுடன் பல்வேறு செயல்களைப் புரிந்தார். பகவான் தமது உன்னதமான உடலில் தோன்றி அவரது இனிய புன்னகைகளாலும், அவரது அன்பான நடத்தையாலும், அவரது உபதேசங்களாலும், கோவர்தன மலையைத் தூக்கியது போன்ற அவரது அசாதாரணமான லீலைகளாலும் மனித சமூகம் முழுவதையும் மகிழ்வித்தார்.
பதம் 9.24.65 : ஸ்ரீ கிருஷ்ணரின் திருமுகம் சுறாமீன்களையொத்த காதணிகளைப் போன்ற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருடைய செவிகள் மிகவும் அழகானவை. அவருடைய கன்னங்கள் பொலிவுடன் விளங்குகின்றன. மேலும் அவருடைய புன்னகை அனைவரையும் கவர்ந்திழுப்பதாக உள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்ப்பவர் ஒரு விழாக் கோலத்தைப் பார்ப்பார். அவரது திருமுகமும், உடலும் அனைவரும் பார்த்து, பூரண திருப்தியடையும் வகையில் உள்ளன. ஆனால் தங்களுடைய கண்களின் நொடிப்பொழுது இமைப்பினால் ஏற்படும் தடங்கலுக்காக பக்தர்கள் சிருஷ்டிக் கர்த்தாவிடம் கோபம் கொள்கின்றனர்.
பதம் 9.24.66 : லீலா புருஷோத்தமர் எனப்படும் பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வசுதேவரின் புதல்வராகத் தோன்றினார். ஆனால் உடனே தன் தந்தையின் வீட்டை விட்டு, தமது அந்தரங்க பக்தர்களுடனான அன்பான உறவுமுறையை விரிவடையச் செய்வதற்காக பிருந்தாவனத்திற்குச் சென்றார். பிருந்தாவனத்தில் பகவான் பல அசுரர்களைக் கொன்றார். அதன்பிறகு துவாரகைக்கு திரும்பிச் சென்ற அவர், மகளிர் திலகங்களான பல மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டு, அவர்கள் மூலமாக நூற்றுக்கணக்கான மகன்களைப் பெற்றார். மேலும் இல்லற வாழ்வின் விதிமுறைகளை ஸ்தாபிக்கும் பொருட்டு, தம்மையே வழிபடுவதற்குரிய யாகங்களையும் அவர் செய்தார்.
பதம் 9.24.67 : அதன்பிறகு, உலக பாரத்தைக் குறைப்பதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குடும்ப அங்கத்தினர்களுக்கிடையில் ஒரு கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தினார். குருட்சேத்திரப் போர்க்களத்தில் தமது பார்வையாலேயே எல்லா அசுர மன்னர்களையும் கொன்று அர்ஜுனனுக்கு அவர் வெற்றியை தேடித் தந்தார். இறுதியாக அவர் உத்தவருக்கு உன்னத வாழ்வைப் பற்றியும், உன்னத பக்தியைப் பற்றியும் உபதேசித்தார். அதன்பிறகு அவர் அவரது சுயரூபத்தில் தமது உலகிற்கு திரும்பிச் சென்றார்.