அத்தியாயம் – 23
யயாதி புத்திரர்களின் வம்சங்கள்
பதம் 9.23.1
ஸ்ரீ-சுக உவாச
அனோ: ஸபானரஸ் சக்ஷு: பரேஷ்ணுஸ் ச த்ரய: ஸுதா:
ஸபானராத் காலனர: ஸ்ருஞ்ஜயஸ் தத்-ஸுதஸ் தத:
ஸ்ரீ-சுக:—உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அனோ:—யயாதியின் நான்கு மகன்களில் நான்காவதான அனுவின்; ஸபானர:—சபானார்; சக்ஷு:—சக்ஷு; பரேஷ்ணு:—பரேஷ்ணு; ச—மேலும்; த்ரய:—மூன்று; ஸுதா:—மகன்கள், ஸபானராத்—சபானரரிலிருந்து; காலநர:—காலநரர்; ஸ்ருஞ்சய:—சிருஞ்சயர்; தத்-ஸுத:—காலநரரின் மகன்; தத:—அதன்பிறகு.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: யயாதியின் நான்காவது மகனான அனுவிற்கு சபானரன், சாக்ஷு, பரேஷ்ணு என்ற மூன்று மகன்கள் இருந்தனர். அரசே, சபானரனிலிருந்து காலனரர் என்ற மகன் வந்தார். அவரிலிருந்து சிருஞ்சயர் என்ற மகன் வந்தார்.
பதம் 9.23.2
ஜனமேஜயஸ் தஸ்ய புத்ரோ மஹாசாலோ மஹாமனா:
உசீனரஸ் திதிக்ஷுஸ் ச மஹாமனஸ ஆத்மஜௌ
ஜனமேஜய:—ஜனமேஜயர்; தஸ்ய—அவருடைய (ஜனமேஜயருடைய); புத்ர:—ஒரு மகன்; மஹாசால:—மஹாசாலர்; மஹாமனா:—(மஹாசாலரிலிருந்து) மஹாமனா என்ற ஒரு மகன்; உசீனர:—உசீனரர்; திதிக்ஷு:—திதிக்ஷு; ச—மேலும்; மஹாமனஸ:—மஹாமனாவிலிருந்து; ஆத்மஜௌ—இரு மகன்கள்.
சிருஞ்ஜயரிலிருந்து ஜனமேஜயன் என்ற மகன் வந்தார். ஜனமேஜயனிலிருந்து மஹாசாலரும், அவரிலிருந்து மஹாமனாவும், அவரிலிருந்து உசீனரர், திதிக்ஷு என்ற இரு மகன்களும் வந்தனர்.
பதங்கள் 9.23.3 – 9.23.4
சிபிர் வர: க்ருமிர் தக்ஷஸ் சத்வாரோசீனராத்மஜா:
வ்ருஷாதர்ப: ஸுதீரஸ் ச மத்ர: கேகய ஆத்மவான்
சிபேஸ் சத்வார ஏவாஸம்ஸ் திதிகேஷாஸ் ச ருஷாத்ருத:
ததோ ஹோமோ ‘த ஸுதபா பலி: ஸுதபசோ ‘பவத்
சிபி:—சிபி; வர:—வரர்; க்ருமி:—கிருமி; தக்ஷ:—தக்ஷன்; சத்வார:—நான்கு; உசீனர-ஆத்மஜா:—உசீனரரின் மகன்கள்; வ்ருஷாதர்ப—விருஷாதர்பர்; ஸுதீர: ச—மேலும் சுதீரர்; மத்ர—மத்ரர்; கேகய:—கேகயர்; ஆத்மவான்—தன்னுணர்வு பெற்ற; சிபே:—சிபியின்; சத்வார:—நான்கு; ஏவ—உண்மையில்; அஸன்—இருந்தனர், திதிகேஷா:—திதிக்ஷுவின்; ச—கூட; ருஷத்ரத:—ருஷத்ரதர் என்ற மகன்; தத:—அவரிலிருந்து (ருஷத்ரதரிலிருந்து); ஹோம:—ஹோமர்; அத—அவரிலிருந்து (ஹோமரிலிருந்து); ஸுதபா:—சுதபா; பலி:—பலி; ஸுதபஸ:—சுதபாவின்; அபவத்—இருந்தார்.
சிபி, வரன், கிருமி, தக்ஷன் ஆகியோர் உசீனரரின் நான்கு மகன்களாவர். சிபியிலிருந்து விருஷாதர்பன், சுதீரர், மத்ரர், ஆத்ம-தத்வ-வித்கேகயர் என்ற நான்கு மகன்கள் வந்தனர். திதிக்ஷுவின் மகன் ருஷத்ரதர். அவரிலிருந்து ஹோமரும், ஹோமரிலிருந்து சுதபாவும், அவரிலிருந்து பலியும் வந்தனர்.
பதம் 9.23.5
அங்க-வங்க-கலிங்காத்யா: ஸுஹ்ம-புண்ட்ரௌட்ர- ஸம்க்ஞித:
ஜக்ஞிரே தீர்கதமஸோ பலே: க்ஷேத்ரே மஹீக்ஷித:
அங்க—அங்கன்; வங்க—வங்கன்; கலிங்க—கலிங்கன்; ஆத்யா:—முதலான; ஸுஹ்ம—சுஹ்மர்; புண்ட்ர—புண்ட்ரர்; ஓட்ர—ஓட்ரர்; ஸம்க்ஞிதா:—அவ்வாறு அறியப்பட்ட; ஜக்ஞிரே—பிறந்தனர்; தீர்கதமஸ:—தீர்கதமரின் விந்தின் மூலமாக; பலே:—பலியின்; க்ஷேத்ரே—மனைவியில்; மஹீ-க்ஷித—உலகச் சக்ரவர்த்தியின்.
தீர்கதமரின் விந்தின் மூலமாக, உலகச் சக்ரவர்த்தியான பலியின் மனைவியினால் அங்கன், வங்கன், கலிங்கன், சுஹ்மன், புண்ட்ரன், ஓட்ரன் என்ற ஆறு மகன்கள் பிறந்தனர்.
பதம் 9.23.6
சக்ரு: ஸ்வ-நாம்னா விஷயான் ஷட் இமான் ப்ராச்யகாம்ஸ் ச தே
கலபானோ ‘ங்கதோ ஜக்ஞே தஸ்மாத் திவிரதஸ் தத:
சக்ரு:—அவர்கள் படைத்தனர்; ஸ்வ-நாம்னா—அவர்களது சொந்த பெயர்களால்; விஷயான்—வெவ்வேறு மாநிலங்களை; ஷட்—ஆறு; இமான்—இவ்வெல்லா; ப்ராச்யகான் ச—(இந்தியாவின்) கிழக்குப் பகுதியில்; தே—அவர்கள் (ஆறு அரசர்கள்); கலபான:—கலபானர்; அங்கத:—அங்க மகாராஜனலிருந்து; ஜக்ஞே—பிறந்தார்; தஸ்மாத்—அவரிலிருந்து (கலபானரிலிருந்து); திவிரத:—திவிரதர்; தத:—அதன்பிறகு.
அங்கன் முதலான ஆறு மகன்கள் பிறகு இந்தியாவின் கிழக்குத் திசையிலுள்ள ஆறு மாநிலங்களுக்கு அரசர்களாயினர். அந்த மாநிலங்கள் அந்தந்த அரசர்களின் பெயர்களுக்கேற்ப அறியப்பட்டன. அங்கனிலிருந்து கலப்பானன் என்ற மகனும், அவரிலிருந்து திவிரதன் என்ற மகனும் வந்தனர்.
பதங்கள் 9.23.7 – 9.23.10
ஸுதோ தர்மரதோ யஸ்ய ஜக்ஞே சித்ரரதோ ‘ப்ரஜா:
ரோமபாத இதி க்யாதஸ் தஸ்மை தசரத: ஸகா
சாந்தாம் ஸ்வ-கன்யாம் ப்ராயச்சத் ரிஷ்யஸ்ருங்க உவாஹ யாம்
தேவே ‘வர்ஷதி யம் ராமா ஆனின்யுர் ஹரிணீ-ஸுதம்
நாட்ய-ஸங்கீத-வாதித்ரைர் விப்ரமாலிங்கனார்ஹணை:
ஸ து ராஜ்ஞோ ‘னபத்யஸ்ய நிரூப்யேஷ்டிம் மருத்வதே
ப்ரஜாம் அதாத் தசரதோ யேன லேபே ‘ப்ரஜா: ப்ரஜா’
சதுரங்கோ ரோமபாதாத் ப்ருதுலாக்ஷஸ் து தத்-ஸுத:
ஸுத:—ஒரு மகன்; தர்மரத:—தர்மரதன்; யஸ்ய—அவரிலிருந்து (திவிரதரிலிருந்து); ஜக்ஞே—பிறந்தார்; சித்ரரத:—சித்ரரதர்; அப்ரஜா:—மகன்கள் இல்லாமல்; ரோமபாத—ரோமபாதர்; இதி—இவ்வாறு; க்யாத:—புகழ்பெற்ற; தஸ்மை—அவருக்கு; தசரத—தசரதர்; ஸகா—நண்பரான; சாந்தாம்—சாந்தாவை; ஸ்வ-கன்யாம்—தசரதரின் சொந்த மகளை; ப்ராயச்சத்—கொடுத்தார்; ரிஷ்யஸ்ருங்க:—ரிஷ்யஸ்ருங்கர்; உவாஹ—மணந்தார்; யாம்—அவளுக்கு (சாந்தாவிற்கு); தேவே—வருண தேவன்; அவர்ஷதி—மழை பொழியவில்லை; யம்—யாருக்கு (ரிஷ்யஸ்ருங்கருக்கு); ராமா:—விலைமாதர்களை; ஆனின்யு:—கொண்டுவந்து; ஹரினீ-ஸுதம்—ஒரு பெண்மானின்; மகனான அந்த ரிஷ்யஸ்ருங்கர்; நாட்ய-ஸங்கீத-வாதித்ரை:—ஆடலாலும், பாடலாலும், இசையாலும்; விப்ரம—வசீகரித்து; ஆலிங்கன—ஆலிங்கனத்தாலும்; அர்ஹணை:—வழிபட்டாலும்; ஸ—அவர் (ரிஷ்யஸ்ருங்கர்); து—உண்மையில்; ராஜ்ஞ:—மகாராஜா தசரதரிலிருந்து; அனபத்யஸ்ய—குழந்தையற்ற; நிரூப்ய—ஸ்தாபித்தபின்; இஷ்டிம்—ஒரு யாகத்தை; மருத்வதே—மருத்வான் என்ற தேவரின்; ப்ரஜாம்—குழந்தையை; அதாத்—கொடுத்தார்; தசரத:—தசரதரர்; யேன—எதனால் (யக்ஞ பலனாக); லேபே—பெற்றார்; அப்ரஜா:—அவருக்கு மகன்களில்லை என்ற போதிலும்; ப்ரஜா:—மகன்கள்; சதுரங்க:—சதுரங்கர்; ரோமபாதாத்—சித்ரரதரிலிருந்து; ப்ருதுலாக்ஷ:—பிருதுலாக்ஷர்; து—உண்மையில்; தத்-ஸுத:—சதுரங்கரின் மகன்.
திவிரதனிலிருந்து தர்மரதன் என்ற மகன் வந்தார். அவரது மகன் சித்ரரதன். அவர் ரோமபாதர் என்று பிரசித்தி பெற்றார். ஆனால் ரோமபாதருக்கு குழந்தை இல்லை. ஆகவே அவரது நண்பரான தசரத மகாராஜன் சாந்தா என்ற தம் சொந்த மகளை அவருக்குக் கொடுத்தார். ரோமபாதரும் அவளைத் தன் மகளாக ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு அவள் ரிஷ்யஸ்ருங்கரை மணந்து கொண்டாள். சுவர்க்க லோகத்து தேவர்கள் மழைபொழியத் தவறிய பொழுது, ரிஷ்யஸ்சிருங்கர் ஒரு யாகம் செய்வதற்கு புரோகிதராக நியமிக்கப்பட்டார். அவர் விலைமாதர்களின் நடனம், இசை, நாடகம், விலைமாதர்களின் ஆலிங்கனம் மற்றும் ஆராதனை ஆகியவற்றினால் கவர்ச்சியூட்டப்பட்டு வனத்திலிருந்து அழைத்துவரப்பட்டார். ரிஷ்யஸ்சிருங்கர் வந்த பிறகு மழை பொழிந்தது. அதன்பிறகு குழந்தையில்லாத தசரத மகாராஜனின் சார்பாக புத்ர-காமேஷ்டி யாகத்தை ரிஷ்யஸ்ருங்கர் செய்தார். ரிஷ்யஸ்சிருங்கரின் கருணையால் ரோமபாதரிலிருந்து சதுரங்கன் பிறந்தார். சதுரங்கனிலிருந்து பிருதுலாக்ஷன் பிறந்தார்.
பதம் 9.23.11
ப்ருஹத்ரதோ ப்ருஹத்கர்மா ப்ருஹத்பானுஸ் ச தத்-ஸுதா:
ஆத்யாத் ப்ருஹன்மனாஸ் தஸ்மாஜ் ஜயத்ரத உதாஹ்ருத:
ப்ருஹத்ரத:—பிருஹத்ரதன்; ப்ருஹத்கர்மா—பிருஹத்கர்மா; பிருஹத்பானு:—பிருஹத்பானு; ச—மேலும்; தத்-ஸுதா—பிருதுலாக்ஷரின் மகன்கள்; ஆத்யாத்—மூத்தவரிலிருந்து (பிருஹத்ரதரிலிருந்து); ப்ருஹன்மனா:—பிருஹன்மனா பிறந்தார்; தஸ்மாத்—அவரிலிருந்து (பிருஹன்மனாவிலிருந்து); ஜயத்ரத:—ஜயத்ரதன் என்ற மகன்; உதாஹ்ருத:—அவரது மகனாகப் புகழ் பெற்றார்.
பிருதுலாக்ஷனின் மகன்கள் பிருஹத்ரதன், பிருஹத்கர்மா, பிருஹத்பானு ஆகியோராவர். மூத்தவரான பிருஹத்ரதரிலிருந்து பிருஹத்மனா என்ற மகன் வந்தார். அவரிலிருந்து ஜயத்ரதன் என்ற மகன் வந்தார்.
பதம் 9.23.12
விஜயஸ் தஸ்ய ஸம்பூத்யாம் ததோ த்ருதிர் அஜாயத
ததோ த்ருதவ்ரதஸ் தஸ்ய ஸத்கர்மாதிரதஸ் தத:
விஜய:—விஜயன்; தஸ்ய—அவருடைய (ஜயத்ரதனின்); ஸம்யூத்யாம்—மனைவியின் கர்பத்தில்; தத:—அதன்பிறகு (விஜயனிலிருந்து): த்ருதி:—திருதி; அஜாயத—பிறந்தார்; தத:—அவரிலிருந்து (திருதியிலிருந்து); த்ருதவ்ரத:—திருதவ்ரதன் என்ற மகன்; தஸ்ய—அவருடைய (திருதவ்ரதர்); ஸத்கர்மா—சத்கர்மா; அதிரத—அதிரதர்; தத:—அவரிலிருந்து (சத்கர்மாவலிருந்து).
ஜயத்ரதன் தன் மனைவியான சங்பூதியின் கர்பத்தில் விஜயன் என்ற மகனைப் பெற்றார். விஜயனிலிருந்து திருதி பிறந்தார். திருதியிலிருந்து திருதௌரதனும், அவரிலிருந்து சத்கர்மாவும், சத்கர்மாவிலிருந்து அதிரதரும் வந்தனர்.
பதம் 9.23.13
யோ ‘ஸௌ கங்கா-தடே க்ரீடன் மஞ்ஜூஷாந்தர்கதம் சிசும்
குந்த்யாபவித்தம் கானீனம் அனபத்யோ ‘கரோத் ஸுதம்
ய: அஸௌ—அவர் (அதிரதன்); கங்கா-தடே—கங்கைக் கரையில்; க்ரீடன்—விளையாடிக் கொண்டிருந்த பொழுது; மஞ்ஜூஷ—அந்தஹ்கதம் ஒரு பெட்டகத்தில் வைத்து மூடப்பட்ட; சிசும்—ஒரு குழந்தையைக் கண்டெடுத்தார்; குந்த்யா அபவித்தம்—இது குந்தியால் கைவிடப்பட்ட குழந்தையாகும்; கானீனம்—அவளது திருமணத்திற்கு முன் அவள் கன்னியாக இருந்தபொழுது அக்குழந்தை பிறந்த காரணத்தால்; அனபத்ய:—இந்த அதிரதன் மகனில்லாததால்; அகரோத்—குழந்தையை ஏற்றுக்கொண்டார்; ஸுதம்—தன் மகனாக.
அதிரதன் கங்கைக் கரையில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, ஒரு பெட்டகத்தில் வைத்து மூடப்பட்டிருந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். குந்தியால் தன் திருமணத்திற்கு முன்பே அக்குழந்தை நதியில் விடப்பட்டது. அதிரதனுக்கு மகன்கள் இல்லாததால், அக்குழந்தையை அவர் தன் குழந்தைபோல் வளர்த்து வந்தார். (இக்குழந்தை பிறகு கர்ணன் என்று அறியப்பட்டது).
பதம் 9.23.14
வ்ருஷஸேன: ஸுதஸ் தஸ்ய கர்ணஸ்ய ஜகதீபதே
த்ருஹ்யோஸ் ச தனயோ பப்ரு: ஸேதுஸ் தஸ்யாத்மஜஸ் தத:
வ்ருஷஸேன:—விருஷசேனர்; ஸுத:—ஒரு மகன்; தஸ்ய கர்ணஸ்ய—அதே கர்ணனின்; ஜகதீ பதே—பரீட்சித்து மகாராஜனே; த்ருஹயோ: ச—யயாதியின் மூன்றாவது மகனான துருஹ்யுவின்; தனய:—ஒரு மகன்; பப்ரு:—பப்ரு; ஸேது:—சேது; தஸ்ய—அவருடைய (பப்ருவின்); ஆத்மஜ: தத:—அதன்பிறகு ஒரு மகன்.
அரசே, விருஷசேனர் கர்ணனின் ஒரே மகனாவார். யயாதியின் மூன்றாவது மகனான துருஹ்யுவிற்கு பப்ரு என்ற ஒரு மகன் இருந்தார். பப்ருவின் மகன் சேது என்று அறியப்பட்டார்.
பதம் 9.23.15
ஆரப்தஸ் தஸ்ய காந்தாரஸ் தஸ்ய தர்மஸ் த்தோ த்ருத:
த்ருதஸ்ய துர்மதஸ் தஸ்மாத் ப்ரசேதா ப்ராசேதஸ: சதம்
ஆரப்த:—ஆரப்தன் (இவர் சேதுவின் மகனாவார்); தஸ்ய—அவருடைய (ஆரப்தர்); காந்தார:—காந்தாரர் என்ற மகன்; தஸ்ய—அவருடைய (காந்தாரர்); தர்ம:—தர்மர் என்ற ஒரு மகன்; தத—அவரிலிருந்து (தர்மர்); த்ருத:—திருதர் என்ற ஒரு மகன்; த்ருதஸ்ய—திருதத்தின்; துர்மத:—துர்மதா என்ற ஒரு மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து (துர்மதர்); ப்ரசேதா:—பிரசேதர் என்ற ஒரு மகன்; ப்ராசேதஸ:—பிரசேதஸருக்கு; சதம்—நூறு மகன்கள் இருந்தனர்.
சேதுவின் மகன் ஆரப்தன். அவரது மகன் காந்தாரன். காந்தாரனின் மகன் தர்மன். தர்மனின் மகன் திருத்தர். திருத்தரின் மகன் துர்மதன். துர்மதனின் மகன் பிரசேதர். அவருக்கு நூறு மகன்கள் இருந்தனர்.
பதம் 9.23.16
ம்லேச்சாதிபதயோ ‘பூவன் உதீசீம் திசம் ஆஸ்ரிதா:
துர்வஸோஸ் ச ஸுதோ வஹ்னிர் வஹ்னேர் பர்கோ ‘த பானுமான்
ம்லேச்ச—மிலேச்ச தேசம் என்ற பகுதியின் (வேத நாகரீகமற்ற இடம்); அதிபதய:—அரசர்கள்; அபூவன்—ஆயினர்; உதீசீம்—இந்தியாவின் வடக்குப் பிரதேசத்திலுள்ள; திசம்—தசையை; ஆஸ்ரிதா:—ஆதிக்க எல்லையாக ஏற்று; துர்வஸோ: ச—யயாதியின் இரண்டாவது மகனான துர்வசுவின்; ஸுத:—மகன்; வஹ்னி:—வஹ்னி; வஹ்னே:—வஹ்னியின்; பர்க:—பர்கர் என்ற மகன்; அத—அதன்பிறகு அவரது மகன்; பானுமான்—பானுமான்.
பிரசேதர்கள் (பிரசேதாவின் மகன்கள்), வேத நாகரீகமற்ற இந்தியாவின் வடக்குப் பிரதேசத்தை ஆக்கிரமித்து, அங்கு அரசர்களாயினர். யயாதியின் இரண்டாவது மகன் துர்வசு. துர்வசுவின் மகன் வஹ்னி. வஹ்னியின் மகன் பர்கன். பர்கரின் மகன் பானுமான்.
பதம் 9.23.17
த்ரிபானுஸ் தத்-ஸுதோ ‘ஸ்யாபி கரந்தம உதார-தீ:
மருதஸ் தத்-ஸுதோ ‘புத்ர: புத்ரம் பௌரவம் அன்வபூத்
த்ரிபானு:—திரிபானு: தத்-ஸுத:—பானுமானின் மகன்; அஸ்ய—அவருடைய (திரிபானுவினுடைய); அபி—கூட; கரந்தம:—கரந்தமர்; உதார-தீ:—மிகவும் உதாரகுணமுள்ளவரான; மருத:—மருதர்; தத்-ஸுத:—கரந்தமரின் மகன்; அபுத்ர:—குழந்தை இல்லாததால்; புத்ரம்—அவரது மகனாக; பெளரவம்—பூரு வம்சத்து மகனான துஷ்மந்த மகாராஜனை; அன்வபூத்—தத்து எடுத்துக் கொண்டார்.
பானுமானின் மகன் திரிபானு. அவரது மகன் உதாரகுணமுள்ள கரந்தமர். கரந்தமரின் மகன் அமருதர். அவருக்கு மகன்களில்லை. ஆகவே அவர் பூரு வம்சத்தைச் சேர்ந்த ஒரு மகனை (துஷ்மந்த மகாராஜனை) தன் சொந்த மகனாக தத்து எடுத்துக் கொண்டார்.
பதங்கள் 9.23.18 – 9.23.19
துஷ்மந்த: ஸ புனர் பேஜே ஸ்வ-வம்சம் ராஜ்ய-காமுக:
யயாதேர் ஜ்யேஷ்ட-புத்ரஸ்ய யதோர் வம்சம் நரர்ஷப
வர்ணயாமி மஹா-புண்யம் ஸர்வ-பாப-ஹரம் ந்ருணாம்
யதோர் வம்சம் நர: ஸ்ருத்வா ஸர்வ-பாபை: ப்ரமுச்யதே
துஷ்மந்த—துஷ்மந்த மகாராஜன்; ஸ:—அவர்; புன: பேஜே—மீண்டும் ஏற்றார்; ஸ்வ-வம்சம்—அவரது சொந்த வம்சத்தை (பூரு வம்சத்தை); ராஜ்ய-காமுக:—அரியாசனத்தில் அமர விரும்பியதால்; யயாதே:—யயாதி மகாராஜனின்; ஜ்யேஷ்ட-புத்ரஸ்ய—முதல் மகனான யதுவின்; யதோ: வம்சம்—யது வம்சம்; நர-ரிஷப—மனிதரின் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே; வர்ணயாமி—நான் விவரிக்கப்போகிறேன்; மஹா-புண்யம்—மிகவும் புண்ணியம் வாய்ந்த; ஸர்வ-பாப-ஹரம்—பாவச் செயல்களின் விளைவுகளை நாசம் செய்கிறது; ந்ருணாம்—மனித சமூகத்தின்; யதோ: வம்சம்—யது வம்சத்தின் வர்ணனையை; நர:—ஒருவன்; ஸ்ருத்வா—கேட்பதாலேயே; ஸர்வ-பாபை:—எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும்; ப்ரமுச்யதே—விடுவிக்கப்படுகிறான்.
துஷ்மந்த மகாராஜன், மருதரைத் தன் தந்தையாக ஏற்றுக் கொண்ட போதிலும், அரியாசனத்தில் அமர விருப்பங்கொண்டு, அவரது பூர்வீக வம்சத்திற்கே (பூரு வம்சத்திற்கே) திரும்பிச் சென்றார். பரீட்சித்து மகாராஜனே, இப்பொழுது நான் யயாதி மகாராஜனின் மூத்த மகனான யதுவின் வம்சத்தை விவரிக்கப் போகிறேன். இந்த வர்ணனை மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகும். இது மனித சமூகத்திலுள்ள பாவ விளைவுகளை அழிக்கவல்லது. இந்த வர்ணனையைக் கேட்பதாலேயே ஒருவன் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான்.
பதங்கள் 9.23.20 – 9.23.21
யதராவதீர்ணோ பகவான் பரமாத்மா நராக்ருதி:
யதோ: ஸஹஸ்ரஜித் க்ரோஷ்டா நலோ ரிபுர் இதி ஸ்ருதா:
சத்வார: ஸூனவஸ் தத்ர சதஜித் ப்ரதமாத்மஜ:
மஹாஹயோ ரேணுஹயோ ஹைஹயஸ் சேதி தத்-ஸுதா:
யத்ர—எங்கு, எந்த வம்சத்தில்; அவதீர்ண:—அவதரித்தார்; பசுவான்—பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர்; பரமாத்மா—அனைவருக்கும் பரமாத்மாவான; நர-ஆக்ருதி:—ஒரு மனிதனை முழுமையாக ஒத்திருக்கும் ஒருவர்; யதோ:—யதுவின்; ஸஹஸ்ரஜித்—சஹஸ்ரஜித்; க்ரோஷ்டா—குரோஷ்டா; நல:—நலன்; ரிபு:—ரிபு; இதி ஸ்ருதா:—இவ்வாறு அவர்கள் புகழப்படுகின்றனர்; சத்வார:—நான்கு; ஸூனவ:—மகன்கள்; தத்ர—அங்கு; சதஜித்—சதஜித்; ப்ரதம-ஆத்மஜ:—முதல் மகன்களின்; மஹாஹய:—மஹாஹயர்; ரேணுஹய:—ரேணுஹயர்; ஹைஹய:—ஹைஹயர்; ச—மேலும்; இதி—இவ்வாறு; தத்-ஸுதா:—அவரது மகன்கள் (சத்யஜித்தின் மகன்கள்).
அனைத்து ஜீவராசிகளிலும் பரமாத்மாவாக இருப்பவரும், பரமபுருஷருமாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது சுயரூபத்தில் ஒரு மானிடராக யது வம்சத்தில் அவதரித்தார். யதுவிற்கு சஹஸ்ரஜித், குரோஷ்டா, நலன், ரிபு என்ற நான்கு மகன்கள் இருந்தனர். இந்நால்வரில் மூத்தவரான சஹஸ்ரஜித்திற்கு சதஜித் என்ற ஒரு மகன் இருந்தார். அவருக்கு மஹாஹயர், ரேணுஹயர், ஹைஹயர் என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.
பதம் 9.23.22
தர்மஸ் து ஹைஹய-ஸுதோ நேத்ர: குந்தே: பிதா தத:
ஸோஹஞ்ஜிர் அபவத் குந்தேர் மஹிஷ்மான் பத்ரஸேனக:
தர்ம: து—ஆனால் தர்மர்; ஹைஹய-ஸுத:—ஹைஹயரின் மகனானார்; நேத்ர:—நேத்ரர்; குந்தே:—குந்தியின்; பிதா—தந்தை; தத:—அவரிலிருந்து (தர்மரிலிருந்து); ஸோஹஞ்ஜி:—சோஹஞ்ஜி; அபவத்—ஆனார்; குந்தே:—குந்தியின் மகன்; மஹிஷ்மான்—மஹிஷ்மான்; பத்ரஸேனக:—பத்ரசேனகர்.
ஹைஹயரின் மகன் தர்மன். தர்மரின் மகன் குந்தியின் தந்தையான நேத்ரர். குந்தியிலிருந்து சோஹஞ்சி என்ற மகனும், அவரிலிருந்து மஹிஷ்மான், மஹிஷ்மானிலிருந்து பத்ரசேனரும் வந்தனர்.
பதம் 9.23.23
துர்மதோ பத்ஸேனஸ்ய தனக: க்ருதவீர்யஸூ:
க்ருதாக்னி: க்ருதவர்மா ச க்ருதெளஜா தனகாத்மஜா:
துர்மத:—துர்மதர்; பத்ரஸேனஸ்ய—பத்ரசேனரின்; தனக:—தனகர்; க்ருதவீர்ய-ஸூ:—கிருதவீர்யரைப் பெற்று; க்ருதாக்னி:—கிருதாக்னி என்ற; க்ருதவர்மா—கிருதவர்மா; ச—கூட; க்ருதௌஜா:—கிருதெளஜர்; தனக-ஆத்மஜா:—தனகரின் மகன்கள்.
பத்ரசேனரின் மகன்கள் துர்மதர் என்றும் தனகர் என்றும் அறியப்பட்டனர். தனகர் கிருதவீரியருக்கும், கிருதாக்னி, கிருதவர்மா, கிருதெளஜன் ஆகியோருக்குத் தந்தையாவார்.
பதம் 9.23.24
அர்ஜுன: க்ருதவீர்யஸ்ய ஸப்த-த்வீபேஸ்வரோ ‘பவத்
தத்தாத்ரேயாத் தரேர் அம்சாத் ப்ராப்த-யோக-மஹாகுண:
அர்ஜுன:—அர்ஜுனன்; க்ருதவீர்யஸ்ய—கிருதவீர்யரின்; ஸப்த-த்வீப—ஏழு தீவுகளின் (முழு உலகின்); ஈஸ்வர: அபவத்—சக்கரவர்த்தியானார்; தத்தாத்ரேயாத்—தத்தாத்திரேயரிலிருந்து; ஹரே:-அம்சாத்—பரமபுருஷரின் அவதாரமான அவரிலிருந்து; ப்ராப்த—அடைந்தார்; யோக-மஹாகுண:—யோக சக்தியின் குணத்தை.
கிருதவீரியரின் மகன் அர்ஜுனன். அவர் (கார்த்தவீர்யார்ஜுனர்) ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலகிற்கும் சக்ரவர்த்தியானார். அவர் பரமபுருஷரின் அவதாரமான தத்தாத்திரேயரிடமிருந்து அஷ்ட-சித்தி எனப்படும் யோக சித்திகளைப் பெற்றார்.
பதம் 9.23.25
ந நூனம் கார்த்தவீர்யஸ்ய கதிம் யாஸ்யந்தி பார்த்திவா:
யக்ஞ-தான-தபோ-யோகை: ஸ்ருத-வீர்ய-தயாதிபி:
ந—இல்லை; நூனம்—உண்மையில்; கார்த்தவீர்யஸ்ய—சக்கரவர்த்தியான கார்த்தவீர்யரின்; கதி—செயல்களை; யாஸ்யந்தி—அறியவோ அல்லது அடையவோ இயலும்; பார்த்திவா:—உலகிலுள்ள அனைவரும்; யக்ஞ—யக்ஞங்கள்; தான—தானம்; தப:—தவம்; யோகை:—யோக சக்திகள்; ஸ்ருத—கல்வி; வீர்ய—பலம்; தயா—கருணை; ஆதிபி:—முதலான இக்குணங்களால்.
யாகம், தானம், தவம், யோகசக்தி, கல்வி, பலம் அல்லது கருணை ஆகியவற்றில் இவ்வுலகிலுள்ள வேறெந்த அரசராலும் கார்த்தவீர்யாஜுனருக்குச் சமமாக முடியாது.
பதம் 9.23.26
பஞ்சாசீதி ஸஹஸ்ராணி ஹி அவ்யாஹத-பல: ஸமா:
அனஷ்ட-வித்த-ஸ்மரணோ புபுஜே ‘க்ஷய்ய-ஷட்-வஸு
பஞ்சாசீதி—எண்பத்தைந்து; ஸஹஸ்ராணி—ஆயிரங்கள்; ஹி—உண்மையில்; அவ்யாஹத—முடிவற்ற; பல:—யாருடைய பலம்; ஸமா:—ஆண்டுகள்; அனஷ்ட—சீர்கெடாத; வித்த—பெளதிக ஐசுவரியங்களையும்; ஸ்மரண:—ஞாபக சக்தியையும்; புபுஜே—அனுபவித்தார்; அக்ஷய்ய—சீர்கெடாத; ஷட்-வஸு—ஆறு வகையான பெளதிக ஐசுவரியங்களை.
கர்த்தவீர்யார்ஜுனர் எண்பத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முழு தேக பலத்துடனும், தடையற்ற ஞாபக சக்தியுடனும் பௌதிக ஐசுவரியங்களை அனுபவித்தார். அதாவது, அவர் தமது ஆறு புலன்களால் முடிவற்ற பௌதிக ஐசுவரியங்களை அனுபவித்தார்.
பதம் 9.23.27
தஸ்ய புத்ர-ஸஹஸ்ரேஷு பஞ்சைவோர்வரிதா ம்ருதே
ஜயத்வஜ: சூரஸேனோ வ்ருஷபோ மதுர் ஊர்ஜித:
தஸ்ய—அவருடைய (கார்த்தவீர்யார்ஜுனரின்); புத்ர-ஸஹஸ்ரேஷு—ஆயிரம் மகன்களில்; பஞ்ச—ஐவர்; ஏவ—மட்டுமே; உர்வரிதா:—உயிருடன் எஞ்சியிருந்தனர்; ம்ருதே—(பரசுராமருடனான) ஒரு போரில்; ஜயத்வஜ:—ஜயத்வஜன்; சூரஸேன:—சூரசேனர்; வ்ருஷப:—விருஷபர்; மது:—மது; ஊர்ஜித:—மற்றும் ஊர்ஜிதர்.
கார்த்தவீர்யார்ஜுனரின் ஆயிரம் மகன்களில் ஐவர் மட்டுமே பரசுராமருடனான போருக்குப் பிறகு எஞ்சியிருந்தனர். அவர்கள் ஜயத்வஜன், சூரசேனர், விருஷபர், மது, ஊர்ஜிதர் ஆகியோராவர்.
பதம் 9.23.28
ஜயத்வஜாத் தாலஜங்கஸ் தஸ்ய புத்ர-சதம் து அபூத்
க்ஷத்ரம் யத் தாலஜங்காக்யம் ஔர்வ-தோஜோபஸம்ஹ்ருதம்
ஜயத்வஜாத்—ஜயத்வஜரின்; தாலஜங்க:—தாலஜங்கர் என்ற ஒரு மகன்; தஸ்ய—அவருடைய (தாலஜங்கரின்); புத்ர-சதம்—நூறு மகன்கள்; து—உண்மையில்; அபூத்—பிறந்தனர்; க்ஷத்ரம்—ஒரு க்ஷத்திரிய வம்சம்; யத்—எது; தாளஜங்க-ஆக்யம்—தாளஜங்கர்கள் என்று அறியப்பட்டனர்; ஒளர்வ-தேஜ:—மிகவும் சக்திவாய்ந்த; உபஸம்ஹ்ருதம்—சகர மகாராஜனால் கொல்லப்பட்டனர்
ஜயத்வஜருக்கு தாளஜங்கர் என்ற ஒரு மகன் இருந்தார். அவருக்கு நூறு மகன்கள் இருந்தனர். தாளஜங்கம் என்ற அந்த வம்சத்திலுள்ள க்ஷத்ரியர்களும், ஒளர்வ ரிஷியிடமிருந்து சகர மகாராஜனால் பெறப்பட்ட பெரும் சக்தியினால் அழிக்கப்பட்டனர்.
பதம் 9.23.29
தேஷாம் ஜ்யேஷ்டோ விதிஹோத்ரோ
வ்ருஷ்ணி: புத்ரோ மதோ: ஸ்ம்ருத:
தஸ்ய புத்ர-சதம் து ஆஸீத்
வ்ருஷ்ணி-ஜ்யேஷ்டம் யத: குலம்
தேஷாம்—அவர்கள் அனைவரிலும்; ஜ்யேஷ்ட:—மூத்தவர்; வீதிஹோத்ர:—வீதிஹோத்ரர் என்ற மகனாவார்; வ்ருஷ்ணி:—விருஷ்ணி; புத்ர:—மகனாவார்; மதோ:—மதுவின்; ஸ்ம்ருத:—கீர்த்திவாய்ந்த; தஸ்ய—அவருடைய (வ்ருஷ்ணியின்); புத்ர-சதம்—நூறு மகன்கள்; ஆஸீத்—இருந்தனர்; வ்ருஷ்ணி—விருஷ்ணி; ஜ்யேஷ்டம்—மூத்தவராவார்; யத:—அவரிலிருந்து; குலம்—வம்சம்.
தாளஜங்கரின் மகன்களுள் வீதிஹோதரர் மூத்தவராவார். விதிஹாத்ரரின் மகனான மதுவிற்கு விருஷ்ணி என்ற பெயருடைய கீர்த்தி வாய்ந்த ஒரு மகன் இருந்தார். மதுவிற்கு நூறு மகன்கள் இருந்தனர். அவர்களுள் விருஷ்ணி மூத்தவராவார். யாதவ, மாதவ, விருஷ்ணி என்ற வம்சங்களுக்கு யது, மது, விருஷ்ணி ஆகியோர் மூலமாவர்.
பதங்கள் 9.23.30 – 9.23.31
மாதவா வ்ருஷ்ணயோ ராஜன் யாதவாஸ் சேதி ஸம்க்நிதா:
யது-புத்ரஸ்ய ச க்ரோஷ்டோ: புத்ரோ வ்ருஜினவாம்ஸ் தத:
ஸ்வாஹிதோ ‘தோ விஷத்குர் வை தஸ்ய சித்ரரதஸ் தத:
சசபிந்துர் மஹா-யோகீ மஹா-பாகோ மஹான் அபூத்
சதுர்தச-மஹாரத்னஸ் சக்ரவர்த்தி அபராஜித:
மாதவா:—மதுவிலிருந்து துவங்கிய வம்சம்; வ்ருஷ்ணய—விருஷ்ணியிலிருந்து துவங்கிய வம்சம்; ராஜன்—அரசே (பரீட்சித்து மகாராஜனே); யாதவா:—யதுவிலிருந்து துவங்கிய வம்சம்; ச—மேலும்; இதி—இவ்வாறு; ஸம்க்ஞிதா:—அவர்கள் வேறுபட்டுள்ள காரணத்தால் அவ்வாறு அழைக்கப்படுகின்றனர்; யது-புத்ரஸ்ய—யது புத்திரனின்; ச—கூட; க்ரோஷ்டோ:—குரோஷ்டரின்; புத்ர:—புத்திரர்; வ்ருஜினவான்—அவருடைய பெயர் விருஜினவான் என்பதாகும்; தத:—அவரிலிருந்து (விருஜினவானிலிருந்து); ஸ்வாஜித:—சுவாஹிதர்; அத—அதன்பிறகு; விஷத்கு:—விஷத்கு என்ற ஒரு மகன்; வை—உண்மையில்; தஸ்ய—அவருடைய; சித்ரரத:—சித்ரரதன்; தத:—அவரிலிருந்து; சசபிந்து:—சசபிந்து; மஹா-யோகீ—சிறந்த யோகியான; மஹா-பாக:—மகா பாக்கியசாலியான; மஹான்—ஒரு மகான்; அபூத்—ஆனார்; சதுர்தச-மஹாரத்ன:—பதினான்கு வகையான சிறந்த ஐசுவரியங்களை; சக்ரவர்த்தீ—சக்கரவர்த்தியாக அவர் பெற்றிருந்தார்; அபராஜித:—வேறெவராலும் வெல்ல முடியாத.
பரீட்சித்து மகாராஜனே, யது, மது, விருஷ்ணி ஆகிய மூவரும் ஒவ்வொரு வம்சத்தை ஆரம்பித்து வைத்ததால், அவர்களது வம்சங்கள் யாதவ, மாதவ மற்றும் விருஷ்ணி எனப்படுகின்றன. குரோஷ்டா என்ற யதுவின் மகனுக்கு விருஜினவான் என்ற ஒரு மகன் இருந்தார். அவரது மகன் சுவாஹிதர், சுவாஹிதரின் மகன் விஷத்கு. அவரது மகன் சித்ரரதன். சித்ரரதனின் மகன் சசபிந்து. மிகச் சிறந்த யோகியும், சிறந்த பாக்கியசாலியுமான சசபிந்து பதினான்கு ஐசுவரியங்களைப் பெற்றிருந்தார். மேலும் பதினான்கு சிறந்த ஆபரணங்களுக்கு அவர் உரிமையாளராகவும் இருந்தார். இவ்விதமாக அவர் உலகச் சக்ரவர்த்தியானார்.
பதம் 9.23.32
தஸ்ய பத்னீ-ஸஹஸ்ராணாம் தசானாம் ஸுமஹா—யசா:
தச-லக்ஷ-ஸஹஸ்ராணி புத்ராணாம் தாஸ்வ் அஜீஜனத்
தஸ்ய—சசபிந்துவின்; பத்னீ—மனைவிகள்; ஸஹஸ்ராணாம்—ஆயிரக்கணக்கான; தசானாம்—பத்து; ஸு-மஹா-யசா:—மிகவும் புகழ்பெற்ற; தச—பத்து; லக்ஷ—லட்சம்; ஸஹஸ்ராணி—ஆயிரக்கணக்கான; புத்ராணாம்—மகன்களை; தாஸு—அவர்களில்; அஜீஜனத்—அவர் பெற்றார்.
புகழ்பெற்ற சசபிந்துவிற்குப் பத்தாயிரம் மனைவிகள் இருந்தனர். ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு லட்சம் மகன்களை அவர் பெற்றார். இவ்வாறாக அவரது மகன்களின் எண்ணிக்கை 100 கோடியாகும்.
பதம் 9.23.33
தேஷாம் து ஷட் ப்ரதானானாம் ப்ருதுஸ்ரவஸ ஆத்மஜ:
தர்மோ நாமோசனா தஸ்ய ஹயமேத-சதஸ்ய யாட்
தேஷாம்—இத்தனை மகன்களில்; து—ஆனால்; ப்ரதானானாம்—அவர்களில் தலைசிறந்த ஆறு மகன்கள் இருந்தனர்; ப்ருதுஸ்ரவஸ:—பிருதுஸ்ரவரின்; ஆத்மஜ:—மகன்; தர்ம:—தர்மர்; நாம—என்ற பெயருடைய; உசனா—உசனா; தஸ்ய—அவருடைய; ஹயமேத-ஸதஸ்ய—நூறு அஸ்வமேத யாகங்கள்; யாட்—செய்தவராவார்.
இத்தகைய மகன்களில், பிருதுஸ்ரவர், பிருதுகீர்த்தி போன்ற அறுவர் முக்கியமானவர்கள் ஆவர். பிருதுஸ்ரவரின் மகன் தர்மர். அவரது மகன் உசனா. உசனா நூறு அசுவமேத யாகங்களைச் செய்தவராவார்.
பதம் 9.23.34
தத்-ஸுதோ ருசகஸ் தஸ்ய பஞ்சாஸன் ஆத்மஜா: ஸ்ருணு புருஜித்-ருக்ம-ருக்மேஷு-ப்ருது-ஜ்யாமக-ஸம்க்ஞிதா:
தத்-ஸுத:—உசனாவின் மகன்; ருசக:—ருசகர்; தஸ்ய—அவருக்கு; பஞ்ச—இந்து; ஆஸன்—இருந்தனர்; ஆத்மஜா:—மகன்கள்; ஸ்ருணு—(அவர்களுடைய பெயர்களை) கேளும்; புருஜித்—புருஜித்; ருக்ம—ருக்மர்; ருக்மேஷு—ருக்மேஷு; ப்ருது—பிருது; ஜ்யாமக—ஜியாமகர்; ஸம்க்ஞிதா:—என்று இந்த ஐவருக்கும் பெயர் சூட்டப்பட்டது.
உசனாவின் மகன் ருசகர். அவருக்கு புருஜித், ருக்மர், ருக்மேஷு, பிருது, ஜியாமகர் என்ற ஐந்து மகன்கள் இருந்தனர். இந்த மகன்களைப் பற்றி நான் கூறுவதைக் கேட்பிராக.
பதங்கள் 9.23.35 – 9.23.36
ஜ்யாமகஸ் து அப்ரஜோ ‘பி அன்யாம் பார்யாம் சைப்யா-பதிர் பயாத்
நாவிந்தச் சத்ரு-பவனாத் போஜ்யாம் கன்யாம் அஹாரஷீத்
ரத-ஸ்தாம் தாம் நிரீக்ஷ்யாஹ சைப்யா பதிம் அமர்ஷிதா
கேயம் குஹக மத்-ஸ்தானம் ரதம் ஆரோபிதேதி வை
ஸ்னுஷா தவேதி அபிஹிதே ஸ்மயந்தீ பதிம் அப்ரவீத்
ஜ்யாமக:—மன்னரான ஜியாமகர்; து—உண்மையில்; அப்ரஜ: அபி—குழந்தையில்லை என்ற போதிலும்; அன்யாம்—மற்றொரு; பார்யாம்—மனைவியை; சைப்யா-பதி:—அவர் சைப்யாவின் கணவராக இருந்ததால்; பயாத்—பயத்தால்; ந அவிந்தத்—ஏற்றுக் கொள்ளவில்லை; சத்ரு-பவனாத்—பகைவனின் வீட்டிலிருந்து; போஜ்யாம்—புலன் நுகர்விற்கு உபயோகிக்கப்பட்ட ஒரு வேசியை; கன்யாம்—பெண்ணை; அஹாரஷீத்—கொண்டுவந்தார்; ரத-ஸ்தாம்—ரதத்தில் அமர்ந்திருந்த; தாம்—அவளை; நிரீக்ஷ்ய—பார்த்து; ஆஹ—கூறினாள்; சைப்யா—ஜியாமகரின் மனைவியான சைப்யா; பதிம்—தன் கணவரிடம்; அமர்ஷிதா—மிகவும் கோபங்கொண்டு; கா இயம்—யாரிவள்; குஹக—வஞ்சகரே; மத்-ஸ்தானம்—என்னுடைய இடத்தில்; ரதம்—ரதத்தில்; அரோபிதா—அமர அனுமதிக்கப்பட்டுள்ள; இதி—இவ்வாறு; வை—உண்மையில்; ஸ்னுஷா—மருமகள்; தவ—உன்னுடைய; இதி—இவ்வாறு; அபிஹிதே—அறிவிக்கப்பட்டு; ஸ்மயந்தீ—சிரித்தபடி; பதிம்—தன் கணவனிடம்; அப்ரவீத்—கூறினாள்.
ஜியாமகருக்கு மகன்கள் இல்லை. ஆனால் அவர் தன் மனைவியான சைப்யாவிடம் அச்சம் கொண்டிருந்ததால், அவரால் மற்றொரு மனைவியை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஒரு சமயம் ஜியாமகர் யாரோ ஒரு பகை அரசரின் வீட்டிலிருந்து, விலைமாதாக இருந்த ஒரு பெண்ணை அழைத்து வந்தார். ஆனால் அவளைக் கண்ட சைப்யா கடுங்கோபமடைந்து, “என் கணவரே, வஞ்சகரே, ரதத்திலுள்ள என்னுடைய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த பெண் யார்?” என்று தன் தலைவனிடம் கேட்டாள். அதற்கு ஜியாமகர், “இந்த பெண் உன்னுடைய மருமகளாக இருப்பாள்” என்று பதிலளித்தார். இந்த பரிகாச வார்த்தைகளைக் கேட்ட சைப்யா சிரித்துக் கொண்டே பின்வருமாறு பதிலளித்தாள்.
பதம் 9.23.37
அஹம் பந்யாஸபத்னீ ச ஸ்னுஷா மே யுஜ்யதே கதம்
ஜனயிஷ்யஸி யம் ராஜ்ஞி தஸ்யேயம் உபயுஜ்யதே
அஹம்—நான்; பந்யா—மலடியாவேன்; அஸ-பத்னீ—சக மனைவிகளும் எனக்கில்லை; ச—கூட; ஸ்னுஷா—மருமகளாக; மே—என்; யுஜ்யதே—இருக்கமுடியும்; கதம்—எவ்வாறு; ஜனயிஷ்யஸி—நீ பெற்றெடுப்பாயோ; யம்—எந்த மகனை; ராஜ்ஞி—எனதருமை ராணியே; தஸ்ய—அவனுக்கு; யம்—இப்பெண்; உபயுஜ்யதே—மிகவும் பொருத்தமானவளாக இருப்பாள்.
“நான் மலடியாக இருக்கிறேன், சக மனைவிகளும் எனக்கில்லை. அப்படியிருக்க இந்த பெண் எவ்வாறு என் மருமகளாவாள்? இதற்கு விளக்கமளிப்பீராக” என்று சைப்யா கூறினாள். அதற்கு ஜியாமகர். “எனதருமை ராணியே, உண்மையில் உனக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த பெண் உனக்கு மருமகளாக வருவாள்” என்று பதிலளித்தார்.
பதம் 9.23.38
அன்வமோதந்த தத விஸ்வே-தேவா: பிதர ஏவ ச
சைப்யா கர்பம் அதாத் காலே குமாரம் ஸுஷுவே சுபம்
ஸ விதர்ப இதி ப்ரோக்த உபயேமே ஸ்னுஷாம் ஸதீம்
அன்வமோதந்த—ஏற்றுக் கொண்டனர்; தத்—ஒரு மகன் பிறப்பான் என்ற கூற்றை; விஸ்வேதேவா:—விஸ்வேதேவ தேவர்களையும்; பிதர:—பிதுருக்களையும்; ஏவ—உண்மையில்; ச—கூட; சைப்யா—ஜியாமகரின் மனைவி; கர்பம்—கர்பம்; அதாத்—தரித்து; காலே—காலப்போக்கில்; குமாரம்—ஒரு மகனை; ஸுஷுவே—பெற்றெடுத்தாள்; சுபம்—மிகவும் மங்கலகரமான; ஸ:—அந்த மகன்; விதர்ப:—விதர்பன்; இதி—இவ்வாறு; ப்ரோக்த:—புகழ்பெற்றவரானார்; உபயேமே—பிறகு மணந்து கொண்டார்; ஸ்ணுஷாம்—மருமகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த; ஸதீம்—கற்புக்கரசியான அப்பெண்.
நீண்ட காலத்திற்கு முன்பு ஜியாமகர் தேவர்களையும், பித்ருக்களையும் வழிபட்டு அவர்களை திருப்திப்படுத்தினார். இப்பொழுது அவர்களுடைய கருணையால் ஜியாமகரின் வார்த்தைகள் உண்மையாயின. சைப்யா ஒரு மலடியாக இருந்த போதிலும், தேவர்களின் கருணையால் கர்பவதியாக மாறிய அவள், காலப்போக்கில் விதர்பன் என்ற ஒரு மகனை ஈன்றாள். அக்குழந்தை பிறப்பதற்கு முன்பே, அந்த பெண் மருமகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததால், விதர்பன் வளர்ந்து பெரியவரானதும் உண்மையாகவே அவளைத் திருமணம் செய்து கொண்டார்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “யயாதி புத்திரர்களின் வம்சங்கள்” எனும் தலைப்பை கொண்ட இருபத்திமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.