அத்தியாயம் – 23
யயாதி புத்திரர்களின் வம்சங்கள்
பதம் 9.23.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: யயாதியின் நான்காவது மகனான அனுவிற்கு சபானரன், சாக்ஷு, பரேஷ்ணு என்ற மூன்று மகன்கள் இருந்தனர். அரசே, சபானரனிலிருந்து காலனரர் என்ற மகன் வந்தார். அவரிலிருந்து சிருஞ்சயர் என்ற மகன் வந்தார்.
பதம் 9.23.2 : சிருஞ்ஜயரிலிருந்து ஜனமேஜயன் என்ற மகன் வந்தார். ஜனமேஜயனிலிருந்து மஹாசாலரும், அவரிலிருந்து மஹாமனாவும், அவரிலிருந்து உசீனரர், திதிக்ஷு என்ற இரு மகன்களும் வந்தனர்.
பதங்கள் 9.23.3 – 9.23.4 : சிபி, வரன், கிருமி, தக்ஷன் ஆகியோர் உசீனரரின் நான்கு மகன்களாவர். சிபியிலிருந்து விருஷாதர்பன், சுதீரர், மத்ரர், ஆத்ம-தத்வ-வித்கேகயர் என்ற நான்கு மகன்கள் வந்தனர். திதிக்ஷுவின் மகன் ருஷத்ரதர். அவரிலிருந்து ஹோமரும், ஹோமரிலிருந்து சுதபாவும், அவரிலிருந்து பலியும் வந்தனர்.
பதம் 9.23.5 : தீர்கதமரின் விந்தின் மூலமாக, உலகச் சக்ரவர்த்தியான பலியின் மனைவியினால் அங்கன், வங்கன், கலிங்கன், சுஹ்மன், புண்ட்ரன், ஓட்ரன் என்ற ஆறு மகன்கள் பிறந்தனர்.
பதம் 9.23.6 : அங்கன் முதலான ஆறு மகன்கள் பிறகு இந்தியாவின் கிழக்குத் திசையிலுள்ள ஆறு மாநிலங்களுக்கு அரசர்களாயினர். அந்த மாநிலங்கள் அந்தந்த அரசர்களின் பெயர்களுக்கேற்ப அறியப்பட்டன. அங்கனிலிருந்து கலப்பானன் என்ற மகனும், அவரிலிருந்து திவிரதன் என்ற மகனும் வந்தனர்.
பதங்கள் 9.23.7 – 9.23.10 : திவிரதனிலிருந்து தர்மரதன் என்ற மகன் வந்தார். அவரது மகன் சித்ரரதன். அவர் ரோமபாதர் என்று பிரசித்தி பெற்றார். ஆனால் ரோமபாதருக்கு குழந்தை இல்லை. ஆகவே அவரது நண்பரான தசரத மகாராஜன் சாந்தா என்ற தம் சொந்த மகளை அவருக்குக் கொடுத்தார். ரோமபாதரும் அவளைத் தன் மகளாக ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு அவள் ரிஷ்யஸ்ருங்கரை மணந்து கொண்டாள். சுவர்க்க லோகத்து தேவர்கள் மழைபொழியத் தவறிய பொழுது, ரிஷ்யஸ்சிருங்கர் ஒரு யாகம் செய்வதற்கு புரோகிதராக நியமிக்கப்பட்டார். அவர் விலைமாதர்களின் நடனம், இசை, நாடகம், விலைமாதர்களின் ஆலிங்கனம் மற்றும் ஆராதனை ஆகியவற்றினால் கவர்ச்சியூட்டப்பட்டு வனத்திலிருந்து அழைத்துவரப்பட்டார். ரிஷ்யஸ்சிருங்கர் வந்த பிறகு மழை பொழிந்தது. அதன்பிறகு குழந்தையில்லாத தசரத மகாராஜனின் சார்பாக புத்ர-காமேஷ்டி யாகத்தை ரிஷ்யஸ்ருங்கர் செய்தார். ரிஷ்யஸ்சிருங்கரின் கருணையால் ரோமபாதரிலிருந்து சதுரங்கன் பிறந்தார். சதுரங்கனிலிருந்து பிருதுலாக்ஷன் பிறந்தார்.
பதம் 9.23.11 : பிருதுலாக்ஷனின் மகன்கள் பிருஹத்ரதன், பிருஹத்கர்மா, பிருஹத்பானு ஆகியோராவர். மூத்தவரான பிருஹத்ரதரிலிருந்து பிருஹத்மனா என்ற மகன் வந்தார். அவரிலிருந்து ஜயத்ரதன் என்ற மகன் வந்தார்.
பதம் 9.23.12 : ஜயத்ரதன் தன் மனைவியான சங்பூதியின் கர்பத்தில் விஜயன் என்ற மகனைப் பெற்றார். விஜயனிலிருந்து திருதி பிறந்தார். திருதியிலிருந்து திருதௌரதனும், அவரிலிருந்து சத்கர்மாவும், சத்கர்மாவிலிருந்து அதிரதரும் வந்தனர்.
பதம் 9.23.13 : அதிரதன் கங்கைக் கரையில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, ஒரு பெட்டகத்தில் வைத்து மூடப்பட்டிருந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். குந்தியால் தன் திருமணத்திற்கு முன்பே அக்குழந்தை நதியில் விடப்பட்டது. அதிரதனுக்கு மகன்கள் இல்லாததால், அக்குழந்தையை அவர் தன் குழந்தைபோல் வளர்த்து வந்தார். (இக்குழந்தை பிறகு கர்ணன் என்று அறியப்பட்டது).
பதம் 9.23.14 : அரசே, விருஷசேனர் கர்ணனின் ஒரே மகனாவார். யயாதியின் மூன்றாவது மகனான துருஹ்யுவிற்கு பப்ரு என்ற ஒரு மகன் இருந்தார். பப்ருவின் மகன் சேது என்று அறியப்பட்டார்.
பதம் 9.23.15 : சேதுவின் மகன் ஆரப்தன். அவரது மகன் காந்தாரன். காந்தாரனின் மகன் தர்மன். தர்மனின் மகன் திருத்தர். திருத்தரின் மகன் துர்மதன். துர்மதனின் மகன் பிரசேதர். அவருக்கு நூறு மகன்கள் இருந்தனர்.
பதம் 9.23.16 : பிரசேதர்கள் (பிரசேதாவின் மகன்கள்), வேத நாகரீகமற்ற இந்தியாவின் வடக்குப் பிரதேசத்தை ஆக்கிரமித்து, அங்கு அரசர்களாயினர். யயாதியின் இரண்டாவது மகன் துர்வசு. துர்வசுவின் மகன் வஹ்னி. வஹ்னியின் மகன் பர்கன். பர்கரின் மகன் பானுமான்.
பதம் 9.23.17 : பானுமானின் மகன் திரிபானு. அவரது மகன் உதாரகுணமுள்ள கரந்தமர். கரந்தமரின் மகன் அமருதர். அவருக்கு மகன்களில்லை. ஆகவே அவர் பூரு வம்சத்தைச் சேர்ந்த ஒரு மகனை (துஷ்மந்த மகாராஜனை) தன் சொந்த மகனாக தத்து எடுத்துக் கொண்டார்.
பதங்கள் 9.23.18 – 9.23.19 : துஷ்மந்த மகாராஜன், மருதரைத் தன் தந்தையாக ஏற்றுக் கொண்ட போதிலும், அரியாசனத்தில் அமர விருப்பங்கொண்டு, அவரது பூர்வீக வம்சத்திற்கே (பூரு வம்சத்திற்கே) திரும்பிச் சென்றார். பரீட்சித்து மகாராஜனே, இப்பொழுது நான் யயாதி மகாராஜனின் மூத்த மகனான யதுவின் வம்சத்தை விவரிக்கப் போகிறேன். இந்த வர்ணனை மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகும். இது மனித சமூகத்திலுள்ள பாவ விளைவுகளை அழிக்கவல்லது. இந்த வர்ணனையைக் கேட்பதாலேயே ஒருவன் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான்.
பதங்கள் 9.23.20 – 9.23.21 : அனைத்து ஜீவராசிகளிலும் பரமாத்மாவாக இருப்பவரும், பரமபுருஷருமாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது சுயரூபத்தில் ஒரு மானிடராக யது வம்சத்தில் அவதரித்தார். யதுவிற்கு சஹஸ்ரஜித், குரோஷ்டா, நலன், ரிபு என்ற நான்கு மகன்கள் இருந்தனர். இந்நால்வரில் மூத்தவரான சஹஸ்ரஜித்திற்கு சதஜித் என்ற ஒரு மகன் இருந்தார். அவருக்கு மஹாஹயர், ரேணுஹயர், ஹைஹயர் என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.
பதம் 9.23.22 : ஹைஹயரின் மகன் தர்மன். தர்மரின் மகன் குந்தியின் தந்தையான நேத்ரர். குந்தியிலிருந்து சோஹஞ்சி என்ற மகனும், அவரிலிருந்து மஹிஷ்மான், மஹிஷ்மானிலிருந்து பத்ரசேனரும் வந்தனர்.
பதம் 9.23.23 : பத்ரசேனரின் மகன்கள் துர்மதர் என்றும் தனகர் என்றும் அறியப்பட்டனர். தனகர் கிருதவீரியருக்கும், கிருதாக்னி, கிருதவர்மா, கிருதெளஜன் ஆகியோருக்குத் தந்தையாவார்.
பதம் 9.23.24 : கிருதவீரியரின் மகன் அர்ஜுனன். அவர் (கார்த்தவீர்யார்ஜுனர்) ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலகிற்கும் சக்ரவர்த்தியானார். அவர் பரமபுருஷரின் அவதாரமான தத்தாத்திரேயரிடமிருந்து அஷ்ட-சித்தி எனப்படும் யோக சித்திகளைப் பெற்றார்.
பதம் 9.23.25 : யாகம், தானம், தவம், யோகசக்தி, கல்வி, பலம் அல்லது கருணை ஆகியவற்றில் இவ்வுலகிலுள்ள வேறெந்த அரசராலும் கார்த்தவீர்யாஜுனருக்குச் சமமாக முடியாது.
பதம் 9.23.26 : கர்த்தவீர்யார்ஜுனர் எண்பத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முழு தேக பலத்துடனும், தடையற்ற ஞாபக சக்தியுடனும் பௌதிக ஐசுவரியங்களை அனுபவித்தார். அதாவது, அவர் தமது ஆறு புலன்களால் முடிவற்ற பௌதிக ஐசுவரியங்களை அனுபவித்தார்.
பதம் 9.23.27 : கார்த்தவீர்யார்ஜுனரின் ஆயிரம் மகன்களில் ஐவர் மட்டுமே பரசுராமருடனான போருக்குப் பிறகு எஞ்சியிருந்தனர். அவர்கள் ஜயத்வஜன், சூரசேனர், விருஷபர், மது, ஊர்ஜிதர் ஆகியோராவர்.
பதம் 9.23.28 : ஜயத்வஜருக்கு தாளஜங்கர் என்ற ஒரு மகன் இருந்தார். அவருக்கு நூறு மகன்கள் இருந்தனர். தாளஜங்கம் என்ற அந்த வம்சத்திலுள்ள க்ஷத்ரியர்களும், ஒளர்வ ரிஷியிடமிருந்து சகர மகாராஜனால் பெறப்பட்ட பெரும் சக்தியினால் அழிக்கப்பட்டனர்.
பதம் 9.23.29 : தாளஜங்கரின் மகன்களுள் வீதிஹோதரர் மூத்தவராவார். விதிஹாத்ரரின் மகனான மதுவிற்கு விருஷ்ணி என்ற பெயருடைய கீர்த்தி வாய்ந்த ஒரு மகன் இருந்தார். மதுவிற்கு நூறு மகன்கள் இருந்தனர். அவர்களுள் விருஷ்ணி மூத்தவராவார். யாதவ, மாதவ, விருஷ்ணி என்ற வம்சங்களுக்கு யது, மது, விருஷ்ணி ஆகியோர் மூலமாவர்.
பதங்கள் 9.23.30 – 9.23.31 : பரீட்சித்து மகாராஜனே, யது, மது, விருஷ்ணி ஆகிய மூவரும் ஒவ்வொரு வம்சத்தை ஆரம்பித்து வைத்ததால், அவர்களது வம்சங்கள் யாதவ, மாதவ மற்றும் விருஷ்ணி எனப்படுகின்றன. குரோஷ்டா என்ற யதுவின் மகனுக்கு விருஜினவான் என்ற ஒரு மகன் இருந்தார். அவரது மகன் சுவாஹிதர், சுவாஹிதரின் மகன் விஷத்கு. அவரது மகன் சித்ரரதன். சித்ரரதனின் மகன் சசபிந்து. மிகச் சிறந்த யோகியும், சிறந்த பாக்கியசாலியுமான சசபிந்து பதினான்கு ஐசுவரியங்களைப் பெற்றிருந்தார். மேலும் பதினான்கு சிறந்த ஆபரணங்களுக்கு அவர் உரிமையாளராகவும் இருந்தார். இவ்விதமாக அவர் உலகச் சக்ரவர்த்தியானார்.
பதம் 9.23.32 : புகழ்பெற்ற சசபிந்துவிற்குப் பத்தாயிரம் மனைவிகள் இருந்தனர். ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு லட்சம் மகன்களை அவர் பெற்றார். இவ்வாறாக அவரது மகன்களின் எண்ணிக்கை 100 கோடியாகும்.
பதம் 9.23.33 : இத்தகைய மகன்களில், பிருதுஸ்ரவர், பிருதுகீர்த்தி போன்ற அறுவர் முக்கியமானவர்கள் ஆவர். பிருதுஸ்ரவரின் மகன் தர்மர். அவரது மகன் உசனா. உசனா நூறு அசுவமேத யாகங்களைச் செய்தவராவார்.
பதம் 9.23.34 : உசனாவின் மகன் ருசகர். அவருக்கு புருஜித், ருக்மர், ருக்மேஷு, பிருது, ஜியாமகர் என்ற ஐந்து மகன்கள் இருந்தனர். இந்த மகன்களைப் பற்றி நான் கூறுவதைக் கேட்பிராக.
பதங்கள் 9.23.35 – 9.23.36 : ஜியாமகருக்கு மகன்கள் இல்லை. ஆனால் அவர் தன் மனைவியான சைப்யாவிடம் அச்சம் கொண்டிருந்ததால், அவரால் மற்றொரு மனைவியை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஒரு சமயம் ஜியாமகர் யாரோ ஒரு பகை அரசரின் வீட்டிலிருந்து, விலைமாதாக இருந்த ஒரு பெண்ணை அழைத்து வந்தார். ஆனால் அவளைக் கண்ட சைப்யா கடுங்கோபமடைந்து, “என் கணவரே, வஞ்சகரே, ரதத்திலுள்ள என்னுடைய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த பெண் யார்?” என்று தன் தலைவனிடம் கேட்டாள். அதற்கு ஜியாமகர், “இந்த பெண் உன்னுடைய மருமகளாக இருப்பாள்” என்று பதிலளித்தார். இந்த பரிகாச வார்த்தைகளைக் கேட்ட சைப்யா சிரித்துக் கொண்டே பின்வருமாறு பதிலளித்தாள்.
பதம் 9.23.37 : “நான் மலடியாக இருக்கிறேன், சக மனைவிகளும் எனக்கில்லை. அப்படியிருக்க இந்த பெண் எவ்வாறு என் மருமகளாவாள்? இதற்கு விளக்கமளிப்பீராக” என்று சைப்யா கூறினாள். அதற்கு ஜியாமகர். “எனதருமை ராணியே, உண்மையில் உனக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த பெண் உனக்கு மருமகளாக வருவாள்” என்று பதிலளித்தார்.
பதம் 9.23.38 : நீண்ட காலத்திற்கு முன்பு ஜியாமகர் தேவர்களையும், பித்ருக்களையும் வழிபட்டு அவர்களை திருப்திப்படுத்தினார். இப்பொழுது அவர்களுடைய கருணையால் ஜியாமகரின் வார்த்தைகள் உண்மையாயின. சைப்யா ஒரு மலடியாக இருந்த போதிலும், தேவர்களின் கருணையால் கர்பவதியாக மாறிய அவள், காலப்போக்கில் விதர்பன் என்ற ஒரு மகனை ஈன்றாள். அக்குழந்தை பிறப்பதற்கு முன்பே, அந்த பெண் மருமகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததால், விதர்பன் வளர்ந்து பெரியவரானதும் உண்மையாகவே அவளைத் திருமணம் செய்து கொண்டார்.