அத்தியாயம் – 22
அஜமீடரின் வம்சத்தினர்
பதம் 9.22.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, திவோதாஸரின் மகன் மித்ராயு. மித்ராயுவிலிருந்து சியவனர், சுதாசர், சஹதேவர், சோமகர் ஆகிய நான்கு மகன்கள் வந்தனர். சோமகர் ஜந்துவின் தந்தையாவார்.
பதம் 9.22.2 : சோமகருக்கு நூறு மகன்கள் இருந்தனர். அவர்களுள் பிருஷதர் இளையவராவார். பிருஷதரிலிருந்து துருபத மகாராஜன் பிறந்தார். இவர் எல்லா மேலதிகாரத்திலும் சிறந்து விளங்கினார்.
பதம் 9.22.3 : துருபத மகாராஜனிலிருந்து திரெளபதி பிறந்தாள். துருபத மகாராஜனுக்கு திருஷ்டத்யும்னன் முதலான பல மகன்களும் இருந்தனர். திருஷ்டத்யும்னரிலிருந்து திருஷ்டகேது என்ற மகன் வந்தார். இவர்களனைவரும் பர்மியாஸ்வரின் வம்சத்தினர் அல்லது பாஞ்சால வம்சம் என்று அறியப்படுகின்றனர்.
பதங்கள் 9.22.4 – 9.22.5 : அஜமீடரின் மற்றொரு மகன் ரிக்ஷர் எனப்பட்டார். ரிக்ஷரிலிருந்து சம்வரணர் என்ற மகன் வந்தார். சம்வரணரிலிருந்து அவரது மனைவியும், சூரியதேவரின் மகளுமான தபதியின் கர்பத்தின் மூலமாக குருட்சேத்திரத்தின் அரசரான குரு வந்தார். குருவிற்கு பரீக்ஷி, சுதனு, ஜஹ்னு, நிஷதர் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். சுதனுவிலிருந்து சுஹோத்ரரும், சுஹோத்ரரிலிருந்து சியவனரும், சியவனரிலிருந்து கிருதியும் பிறந்தனர்.
பதம் 9.22.6 : கிருதியின் மகன் உபரிசர வசு. பிருஹத்ரதன் முதலான அவரது மகன்களுள் குசாம்பர், மத்ஸ்யர், பிரத்யக்ரர் மற்றும் சேதிபர் ஆகியோரும் அடங்குவர். உபரிசத வசுவின் மகன்களனைவரும் சேதி நாட்டு அரசர்களாயினர்.
பதம் 9.22.7 : பிருஹத்ரதரிலிருந்து குசாக்ரர் பிறந்தார். அவரிலிருந்து ரிஷபரும், ரிஷபரிலிருந்து சத்யஹிதரும் பிறந்தனர். சத்யஹிதரின் மகன் புஷ்பவான். புஷ்பவானின் மகன் ஜஹு.
பதம் 9.22.8 : பிருஹத்ரதர் மற்றொரு மனைவியின் கர்பத்தில் ஒரு மகனின் இருபாதிகளைப் பெற்றார். அந்த இரு பாதிகளைக் கண்ட அந்த தாய் அவற்றை வேண்டாமென்று விலக்கிவிட்டாள். பிறகு ஜரா என்ற ஓர் அரக்கி அவ்விரு பகுதிகளையும் விளையாட்டாக இணைத்து, “உயிர் பெற்றெழு, உயிர் பெற்றெழு!” என்று கூறினாள். இவ்வாறாக ஜராசந்தன் என்ற மகன் பிறந்தான்.
பதம் 9.22.9 : ஜராசந்தனிலிருந்து சஹதேவன் என்ற மகன் வந்தார். சஹதேவனிலிருந்து சோமாபியும், சோமாபியிலிருந்து சுருதஸ்ரவரும் வந்தனர். பரீக்ஷி என்று அழைக்கப்பட்ட குருவின் மகளுக்கு மகன்களில்லை. ஆனால் ஜஹ்னு என்ற குருவின் மகனுக்கு சுரதன் என்ற ஒரு மகன் இருந்தார்.
பதம் 9.22.10 : சுருதரிலிருந்து விதூரதர் என்ற மகன் வந்தார். அவரிலிருந்து சார்வபெளமர் பிறந்தார். அவரிலிருந்து ஜயசேனர் வந்தார். ஜயசேனரிலிருந்து ராதிகரும், ராதிகரிலிருந்து அயுதாயுவும் வந்தனர்.
பதம் 9.22.11 : அயுதாயுவிலிருந்து அக்ரோதனர் என்ற மகன் வந்தார். அவரது மகன் தேவாதிதி. தேவாதிதியின் மகன் ரிக்ஷர், ரிக்ஷரின் மகன் திலீபர். திலீபரின் மகன் பிரதீபர்.
பதங்கள் 9.22.12 – 9.22.13 : பிரதீபரின் மகன்கள் தேவாபி, சாந்தனு, பாஹ்லிகர் ஆகியோராவர். தேவாபி தன் தந்தையின் இராஜ்யத்தை விட்டு வனம் சென்றார். ஆகவே சாந்தனு அரசரானார். முற்பிறவியில் மஹாபிஷர் என்று அறியப்பட்ட சாந்தனுவிற்கு, தன் கைகளால் ஒருவரைத் தொடுவதாலேயே அவரை முதுமையிலிருந்து இளமையானவராக மாற்றும் திறமை இருந்தது.
பதங்கள் 9.22.14 – 9.22.15 : அந்த அரசரால், முக்கியமாக தன் கையால் தொடும் அனைவரையும் புலன்நுகர்வு விஷயத்தில் மகிழ்ச்சியடையச் செய்ய முடிந்தது என்பதால், அவருடைய பெயர் சாந்தனு என்றாயிற்று. ஒருசமயம் அவரது இராஜ்யத்தில் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மழை பெய்யவில்லை. இதனால் அந்த அரசர் கற்றறிந்த பிராமண ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்தார். அவர்களும், “நீங்கள் உங்களுடைய தமையனின் உடைமையை அனுபவிப்பதால், குறையுடையவராக இருக்கிறீர்கள். உமது இராஜ்யமும், வீடும் மேன்மையுற, இந்த இராஜ்யத்தை நீர் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்” என்று கூறினர்.
பதங்கள் 9.22.16 – 9.22.17 : பிராமணர்கள் இவ்வாறு கூறியதும், சாந்தனு மகாராஜன் வனம் சென்று தன் தமையனான தேவாபியை இராஜ்யப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். ஏனெனில் பிரஜைகளைப் பராமரிப்பது ஓர் அரசரின் கடமையாகும். ஆனால் முன்பு, சாந்தனுவின் மந்திரியான அஸ்வவாரர், வேத விதிகளை மீறி, தன்னை அரச பதவிக்குத் தகுதியற்றவராகச் செய்து கொள்ளும்படி தேவாபியைத் தூண்டி விடுமாறு சில பிராமணர்களை ஏவினார். அந்த பிராமணர்களும் தேவாபியை வேதக் கொள்கைகளிலிருந்து விலகச் செய்தனர். எனவே சாந்தனுவால் கேட்டுக்கொள்ளப்பட்ட பொழுது அரச பதவியை ஏற்றுக் கொள்ள தேவாபி சம்மதிக்கவில்லை. மாறாக, அவர் வேதக் கொள்கைகளை நிந்தித்ததால் இழிவடைந்தவரானார். இச்சூழ்நிலையின் காரணமாக சாந்தனு மீண்டும் அரசரானார். இதனால் மகிழ்ந்த இந்திரன் மழையைப் பொழிந்தார். தேவாபி பிறகு அஷ்டாங்க-யோக மார்கத்தை ஏற்று தன் மனதையும் புலன்களையும் அடக்குவதற்காக கலாப-கிராமத்திற்குச் சென்றார். அங்கு தான் அவர் இன்னும் வாழ்ந்து வருகிறார்.
பதங்கள் 9.22.18 – 9.22.19 : இக்கலியுகத்தில் சந்ர-வம்சம் ஒரு முடிவுக்கு வந்ததும், தேவாபி, அடுத்த சத்ய-யுகத்தின் துவக்கத்தில் சந்ர— வம்சத்தை மீண்டும் இவ்வுலகில் ஸ்தாபிப்பார். பாஹ்லீகரிலிருந்து (சாந்தனுவின் சகோதார்) சோமதத்தர் என்ற மகன் வந்தார். அவருக்கு பூரி, பூரிஸ்வரர், சலர் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். சாந்தனுவிலிருந்து அவரது மனைவியான கங்கையின் கர்பத்தின் மூலமாக பீஷ்மர் வந்தார். அவர் மேன்மைக்குரிய, தன்னுணர்வு பெற்ற பக்தரும், கற்றறிந்த பண்டிதருமாவார்.
பதம் 9.22.20 : பீஷ்மதேவர் வீரர்களுக்கெல்லாம் முதன்மையானவராக விளங்கினார். அவர் பகவான் பரசுராமரைப் போரில் வென்றபோது, பகவான் பரசுராமர் அவரிடம் மிகவும் திருப்தியடைந்தார். சாந்தனுவின் விந்தினால் ஒரு மீனவ புத்திரியான சத்யவதியின் கர்பத்தில் சித்ராங்கதர் பிறந்தார்.
பதங்கள் 9.22.21 – 9.22.24 : விசித்ரவீரியனின் தமையனான சித்ராங்கதன், சித்ராங்கதன் என்ற அதே பெயருடைய ஒரு கந்தர்வரால் கொல்லப்பட்டார். சத்யவதி சாந்தனுவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக, வேதங்களின் தலைமை அதிகாரியும், பராசர முனிவரின் புதல்வரும், கிருஷ்ண துவைபாயனர் என்று அறியப்படுபவருமான வியாசதேவரைப் பெற்றெடுத்தாள். வியாசதேவரிலிருந்து நான் (சுகதேவ கோஸ்வாமி) பிறந்தேன். அவரிடமிருந்து ஸ்ரீமத் பாகவதம் என்ற இந்த மகா காவியத்தை நான் கற்றறிந்தேன். பரமபுருஷரின் அவதாரமான வேதவியாசர், பைலர் முதலான அவரது சீடர்களை விலக்கிவிட்டு, எல்லா பெளதிக ஆசைகளிலிருந்தும் நான் விடுபட்டிருந்ததால், எனக்கு இந்த ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார். காசிராஜனின் இரு புதல்விகளான அம்பிகாவும், அம்பாலிகாவும் பலவந்தமாக கடத்தப்பட்ட பொழுது, விசித்ரவீரியர் அவர்களை மணந்து கொண்டார். ஆனால் அவ்விரு மனைவிகளிடம் அவர் அளவுக்கதிகமான பற்றுக் கொண்டிருந்ததால், அவருக்கு இதய நோய் ஏற்பட்டு, க்ஷயரோகத்தினால் மரணமடைந்தார்.
பதம் 9.22.25 : பாதராயனர் என்ற ஸ்ரீல வியாசதேவர், தம் தாயான சத்யவதியின் உத்தரவுப்படி, மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார். தமது சகோதரராகிய விசித்ரவீரியரின் இரு மனைவிகளான அம்பிகா மற்றும் அம்பாலிகாவின் கர்பங்களில் இரு மகன்களையும், விசித்ரவீரியரின் பணிப்பெண்ணின் மூலமாக மூன்றாவது மகனையும் அவர் பெற்றார். இந்த மகன்கள், திருதராஷ்டிரர், பாண்டு, விதுரர் ஆகியோராவர்.
பதம் 9.22.26 : அரசே, திருதராஷ்டிரரின் மனைவியான காந்தாரி நூறு மகன்களையும், ஒரு மகளையும் பெற்றெடுத்தாள். மூத்த மகன் துரியோதனனாவான். துச்சலை அந்த மகளின் பெயராகும்.
பதங்கள் 9.22.27 – 9.22.28 : பாண்டு, ஒரு முனிவரால் சபிக்கப்பட்ட காரணத்தால் உடலுறவு வாழ்விலிருந்து விலகியிருக்க வேண்டியதாயிற்று. ஆகவே அவரது மூன்று மகன்களான யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் ஆகியோர் அவரது மனைவியான குந்தியின் கர்பத்தின் மூலமாக தர்மராஜனாலும், வாயு தேவனாலும், வருணதேவனாலும் பெற்றெடுக்கப்பட்டனர். பாண்டுவின் இராண்டாவது மனைவியான மாத்ரி இரு அஸ்வின்-குமாரர்களின் மூலமாக நகுலனையும், சஹதேவனையும் பெற்றெடுத்தாள். யுதிஷ்டிரர் முதலான ஐந்து சகோதரர்களும் திரௌபதியின் கர்பத்தின் மூலமாக ஐந்து மகன்களைப் பெற்றனர். இந்த ஐந்து மகன்களும் உமது பெரியப்பன்களாவர்.
பதம் 9.22.29 : யுதிஷ்டிரரிலிருந்து பிரதிவிந்தியர் என்ற மகன் வந்தார். பீமனிலிருந்து சுருதசேனர் என்ற மகனும், அர்ஜுனனிலிருந்து சுருதகீர்த்தி என்ற மகனும், நகுலனிலிருந்து சதாநீகர் என்ற மகனும் வந்தனர்.
பதங்கள் 9.22.30 – 9.22.31 : அரசே, சஹதேவரின் மகன் சுருதகர்மா எனப்படுவார். மேலும் யுதிஷ்டிரரும் அவரது சகோதரர்களும் மற்ற மனைவிகளின் மூலமாக மற்ற மகன்களைப் பெற்றார். பீமசேனர் ஹிடிம்பா என்ற அவரது மனைவியின் மூலமாக கடோத்கஜன் என்ற மகனையும், காளீ என்ற அவரது மனைவியின் மூலமாக சர்வகதன் என்ற மகனையும் பெற்றார். அதுபோலவே சஹதேவர் மலை ராஜனின் மகளும், தனது மனைவியுமான விஜயாவின் மூலமாக சுஹோத்ரர் என்ற மகனைப் பெற்றார்.
பதம் 9.22.32 : நகுலன் ரேணுமதி என்ற தன் மனைவியின் மூலமாக நரமித்ரன் என்ற மகனைப் பெற்றார். அதுபோலவே அர்ஜுனன் நாகர்களின் மகளும், உலுபி எனப்படுபவளுமான தன் மனைவியின் மூலமாக இராவான் என்ற மகனையும், மணிப்புர இளவரசியின் கர்பத்தின் மூலமாக பப்ருவாஹனன் என்ற மகனையும் பெற்றார். பப்ருவாஹனன் மணிப்புர அரசரின் ஸ்வீகார புத்திரரானார்.
பதம் 9.22.33 : பரீட்சித்து மகாராஜனே, உமது தந்தையான அபிமன்யு, சுபத்திரையின் கர்பத்திலிருந்து அர்ஜுனரின் மகனாகப் பிறந்தார். அவர் எல்லா அதிரதர்களையும் (ஆயிரம் ரத வீரர்களுடன் போரிடக் கூடியவர்கள்) வென்றவராவார். அவரிலிருந்து விராட்ராஜனின் புதல்வியான உத்தரையின் கர்பத்தின் மூலமாக நீர் பிறந்தீர்.
பதம் 9.22.34 : குருட்சேத்திரப் போர்க்களத்தில் குரு வம்சம் அழிக்கப்பட்ட பிறகு, துரோணாச்சாரியரின் மகனால் பிரயோகிக்கப்பட்ட பிரம்மாஸ்திரத்தினால் நீரும் கொல்லப்படும் தறுவாயில் இருந்தீர். ஆனால் பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் கருணைால் மரணத்திலிருந்து நீர் காப்பாற்றப்பட்டீர்.
பதம் 9.22.35 : அரசே, உமது நான்கு மகன்களான ஜனமேஜயன், சுருதசேனர், பீமசேனர், உக்ரசேனர் ஆகியோர் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். இவர்களில் ஜனமேஜயன் மூத்தவராவார்.
பதம் 9.22.36 : தக்ஷகன் என்ற பாம்பினால் உமக்கு ஏற்படப் போகும் மரணத்தின் காரணத்தால், உமது மகனான ஜனமேஜயன் கடுங்கோபமடைந்து, உலகிலுள்ள எல்லாப் பாம்புகளையும் கொன்று விடுவதற்குரிய ஒரு யாகத்தைச் செய்வார்.
பதம் 9.22.37 : ஜனமேஜயன், உலகமுழுவதையும் வென்ற பிறகு, கலஷரின் மகனான துரரைத் தனது புரோகிதராக ஏற்று அஸ்வமேத யக்ஞங்களைச் செய்வார். அதற்காக அவர் துரங்க-மேதஷாட் என்று அறியப்படுவார்.
பதம் 9.22.38 : சதாநீகர் என்ற ஜனமேஜயனின் புதல்வர், யாக்ஞவல்க்யரிடமிருந்து வேதங்களையும், கிரியா முறைகளைச் செய்யும் கலையையும் கற்பார். மேலும் அவர் கிருபாசாரியாரிடமிருந்து யுத்த கலையையும், சௌனகரிடமிருந்து தெய்வீக விஞ்ஞானத்தையும் கற்றுக் கொள்வார்.
பதம் 9.22.39 : சஹஸ்ராநீகர் சதாநீகரின் மகனாக இருப்பார். அவரிலிருந்து அஸ்வமேதஜர் என்ற மகன் வருவார். அஸ்வமேதஜரிலிருந்து அசீம கிருஷ்ணர் வருவார். நேமிசக்ரர் அவரது மகனாக இருப்பார்.
பதம் 9.22.40 : ஹஸ்தினாபுர நகரம் (புதுடில்லி) நதியால் மூழ்கடிக்கப்படும் பொழுது, நேமிசக்ரர் கௌசாம்பி என்ற இடத்தில் வசிப்பார். அவரது மகன் சித்ரரதன் என்று புகழ் பெறுவார். சுசிரதன் சித்ரரதனின் மகனாக இருப்பார்.
பதம் 9.22.41 : சுசிரதனிலிருந்து விருஷ்டிமான் என்ற மகன் வருவார். அவரது மகனான சுஷேணர் முழு உலகிற்கும் சக்கரவர்த்தியாக இருப்பார். சுனீதர் சுஷேணரின் மகனாக இருப்பார். நிருசக்ஷு சுனீதரின் மகனாக இருப்பார். நிருசக்ஷுவிலிருந்து சுகீநலன் என்ற மகன் வருவார்.
பதம் 9.22.42 : பரிப்பிலவன் சுகீநலனின் மகனாக இருப்பார். அவரது மகனாக சுனயர் இருப்பார். சுனயரிலிருந்து மேதாவி என்ற மகனும், மேதாவியிலிருந்து நிருபஞ்சயரும், நிருபஞ்சயரிலிருந்து தூர்வரும், தூர்வரிலிருந்து திமியும் வருவார்கள்.
பதம் 9.22.43 : திமியிலிருந்து பிருஹத்ரதரும், அவரிலிருந்து சுதாஸரும், சுதாஸரிலிருந்து சதாநீகரும் வருவார்கள். சதாநீகரிலிருந்து துர்தமனர் வருவார். அவரிலிருந்து மஹீனரர் என்ற மகன் வருவார்.
பதங்கள் 9.22.44 – 9.22.45 : மஹீனரரின் மகனாக தண்டபாணி இருப்பார். நிமி அவரது மகனாக இருப்பார். அவரிலிருந்து க்ஷேமக மகாராஜன் பிறப்பார். நான் இப்பொழுது பிராமணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் பிறப்பிடமானதும், தேவர்களாலும், மாமுனிவர்களாலும் பூஜிக்கப்படுவதுமான சந்ர-வம்சத்தைப் பற்றி உமக்கு விவரித்தேன். இக்கலியுகத்தில் க்ஷேமகர் தான் கடைசி சக்கரவர்த்தியாக இருப்பார். இப்பொழுது நான் மாகத வம்சத்தின் எதிர்காலத்தைப் பற்றி விவரிக்கப்போவதைக் கவனமாகக் கேளும்.
பதங்கள் 9.22.46 – 9.22.48 : ஜராசந்தனின் மகனான சஹதேவருக்கு மார்ஜாரி என்ற மகன் இருப்பார். மார்ஜாரியிலிருந்து சுருதஸ்ரவரும், அவரிலிருந்து யுதாவும், அவரிலிருந்து நிர்மித்ரரும் வருவார்கள். சுனக்ஷத்ரர் நிர்மித்ரரின் மகனாக இருப்பார். அவரிலிருந்து பிருஹத்சேனரும், பிருஹத்சேனரிலிருந்து கர்மஜித்தும் வருவார்கள். சுதஞ்ஜயர் கர்மஜித்தின் மகனாக இருப்பார். அவரது மகனாக விப்ரரும், விப்ரரின் மகனாக சுசியும் இருப்பார்கள். சுசியின் மகனாக க்ஷேமரும், அவரது மகனாக சுவ்ரதரும், சுவ்ரதரின் மகனாக தர்மசூத்ரரும் இருப்பார்கள். தர்ம சூத்ரரிலிருந்து சமன் வருவார். சமனிலிருந்து தியுமத் சேனரும், அவரிலிருந்து சுமதியும், சுமதியிலிருந்து சுபலரும் வருவார்கள்.
பதம் 9.22.49 : சுபலரிலிருந்து சுனீதரும், சுனீதரிலிருந்து சத்யஜித்தும், அவரிலிருந்து விஸ்வஜித்தும், விஸ்வஜித்திலிருந்து ரிபுஞ்சயரும் வருவார்கள். இவர்களனைவரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உலகை ஆளவிருக்கும் பிருஹத்ரதனின் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.