அத்தியாயம் – 21
பரத வம்சம்
பதம் 9.21.1
ஸ்ரீ-சுக உவாச
விததஸ்ய ஸுதான் மன்யோர் ப்ருஹத்க்ஷத்ரோ ஜயஸ் தத:
மஹாவீர்யோ நரோ கர்க: ஸங்க்ருதிஸ் து நராத்மஜ:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; விததஸ்ய—ஏமாற்றமான சூழ்நிலையில் பரத மகாராஜனின் குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விததரின் (பரத்வாஜரின்); ஸுதாத்—மகனிலிருந்து; மன்யோ:—மன்யு என்பவர்; ப்ருஹத்க்ஷத்ர:—பிருஹத்க்ஷத்ரர்; ஜய—ஜயன்; தத:—அவரிலிருந்து; மஹாவீர்ய—மஹாவீர்யர்; நர:—நரர்; கர்க:—கர்கர்; ஸங்க்ருதி:—சங்க்ருதி: து—நிச்சயமாக; நர-ஆத்மஜ:—நரரின் மகன்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார். பரத்வாஜன் மருத்தேவர்களால் கொடுக்கப்பட்டதால், விததர் என்று அறியப்பட்டார். விததரின் மகன் மன்யு. மன்யுவிலிருந்து பிருஹத்க்ஷத்ரர், ஜயன், மஹாவீரியர், நரன், கர்கர் ஆகிய ஐந்து மகன்கள் வந்தனர். இந்த ஐவரில் நரன் என்பவருக்கு சங்க்ருதி என்ற பெயருடைய ஒரு மகன் இருந்தார்.

பதம் 9.21.2
குருஸ் ச ரந்திதேவஸ் ச ஸங்க்ருதே: பாண்டு-நந்தன
ரந்திதேவஸ்ய மஹிமா இஹாமுத்ர ச கீயதே

குரு:—குரு என்ற ஒரு மகன்; ச—மேலும்; ரந்திதேவ: ச—மற்றும் ரந்திதேவர் என்ற ஒரு மகனும்; ஸங்க்ருதே:—சங்க்ருதியிலிருந்து; பாண்டு-நந்தன—பாண்டு வம்சத்தவரான பரீட்சித்து மகாராஜனே; ரந்திதேவஸ்ய—ரந்திதேவரின்; மஹிமா—மகிமைகள்; இஹ—இவ்வுலகிலும்; அமுத்ர—அடுத்த உலகிலும்; ச—கூட; கீயதே—புகழப்படுகின்றன.

பாண்டு வம்சத்தவரான பரீட்சித்து மகாராஜனே, சங்க்ருதிக்கு குரு, ரந்திதேவர் என்ற இரு மகன்கள் இருந்தனர். ரந்திதேவர் இவ்வுலகிலும் அடுத்ததிலும் புகழ்பெற்று விளங்கினார். ஏனெனில், அவர் மானிட சமூகத்தில் மட்டுமின்றி தேவர்களின் சமூகத்திலும் புகழப்பட்டார்.

பதங்கள் 9.21.3 – 9.21.5
வியத்-வித்தஸ்ய தததோ லப்தம் லப்தம் புபுக்ஷத:
நிஷ்கிஞ்சனஸ்ய தீரஸ்ய ஸகுடும்பஸ்ய ஸுதத:

வ்யதீயுர் அஷ்ட-சத்வாரிம்சத் அஹானி அபிபத: கில
க்ருத-பாயஸ-ஸம்யாவம் தோயம் ப்ராதர் உபஸ்திதம்

க்ருச்ர-ப்ராப்த-குடும்பஸ்ய க்ஷுத்-த்ருட்ப்யாம் ஜாத-வேபதோ:
அதிதிர் ப்ராஹ்மண: காலே போக்து-காமஸ்ய சாகமத்

வியத்-வித்தஸ்ய—சாதக பறவை ஆகாயத்திலிருந்து நீரைப் பெறுவதுபோல், விதியால் அனுப்பப்பட்ட பொருட்களைப் பெற்ற ரந்திதேவரின்; ததத:—மற்றவர்களுக்கு விநியோகித்தார்; லப்தம்—தான் பெற்றதையெல்லாம்; லப்தம்—இத்தகைய பொருட்களை; புபுக்ஷத:—அவர் அனுபவித்தார்; நிஷ்கிஞ்சனஸ்ய—எப்பொழுதும் பொருளற்றவராக இருந்தார்; தீரஸ்ய—எனினும் மிகவும் அமைதியாக இருந்தார்; ஸ-குடும்பஸ்ய—அவரது குடும்ப அங்கத்தினர்களுடன் கூட; ஸுதத:—மிகவும் துன்புற்று; வ்யதீயு:—கடந்து சென்றது; அஷ்ட-சத்வாரிம்சத்—நாற்பத்தெட்டு; அஹானி—நாட்கள்; அபிபத:—நீர்கூட பருகாமல்; கில—உண்மையில்; க்ருத-பாயஸ—நெய்யும், பாலும் கொண்டு தயாரிக்கப்பட்ட பாயசமும்; ஸம்யாவம்—பலவகையான தானிய உணவுகளும்; தோயம்—நீரும்; ப்ராத:—காலையில்; உபஸ்திதம்—தற்செயலாக வந்தன; க்ருச்ர-ப்ராப்த—துன்புறும்; குடும்பஸ்ய—அவரது குடும்ப அங்கத்தினர்கள்; க்ஷுத்-த்ருப்யாம்—பசியாலும், தாகத்தாலும்; ஜாத வேபதோ:—நடுங்களாயினர்; அதிதி:—ஓர் அதிதி; ப்ராஹ்மண:—ஒரு பிராமணர்; காலே—அச்சமயத்தில்; போக்து காமஸ்ய—எதையேனும் உண்ண விரும்பிய ரந்திதேவரின்; ச—கூட; ஆசமத்—அங்கு வந்தார்.

ரந்திதேவர் எதையுமே சம்பாதிக்க முயற்சி செய்யவில்லை. விதியின் ஏற்பாட்டினால் கிடைத்ததை மட்டுமே அவர் அனுபவித்து வந்தார். ஆனால் விருந்தினர்கள் வரும்பொழுது அனைத்தையும் அவர் அளிப்பார். இவ்வாறாக அவர் தமது குடும்பத்தினருடன் அதிக துன்பத்தை அனுபவித்து வந்தார். உண்மையில், அவரும் அவரது குடும்பத்தினரும் உணவும், நீரும் இல்லாமல் நடுங்கினர். இருப்பினும் ரந்திதேவர் எப்பொழுதும் அமைதியாகவே இருந்தார். ஒரு சமயம், நாற்பத்தெட்டு நாட்கள் உபவாசம் இருந்த பிறகு, காலையில் ரந்திதேவர் பாலாலும், நெய்யாலும் சமைக்கப்பட்ட சிறிது உணவையும், சிறிது நீரையும் பெற்றார். ஆனால் அவரும் அவரது குடும்பத்தினரும் அதைச் சாப்பிடப் போகும் வேளையில் ஒரு பிராமண அதிதி அங்கு வந்தார்.

பதம் 9.21.6
தஸ்மை ஸம்வ்யபஜத் ஸோ ‘ன்னம் ஆத்ருத்ய ஸ்ரத்தயான்வித:
ஹரிம் ஸர்வத்ர ஸம்பஸ்யன் ஸ புக்த்வா ப்ரயயௌ த்விஜ:

தஸ்மை—அவருக்கு (பிராமணருக்கு); ஸம்வ்யபஜத்—பிரித்த பிறகு தமது பாகத்தைக் கொடுத்தார்; ஸ:—அவர் (ரந்திதேவர்); அன்னம்—அந்த உணவை; ஆத்ருத்ய—மிகவும் மரியாதையுடனும்; ஸ்ரத்தயா அன்வித:—விசுவாசத்துடனும்; ஹரிம்—பரமபுருஷரை; ஸர்வத்ர—எல்லா இடங்களிலும், அல்லது அனைத்து ஜீவராசிகளின் இதயத்திலும்; ஸம்பஸ்யன்—பார்த்து; ஸ:—அவர்; புக்த்வா—உணவை உண்ட பின்; ப்ரயயௌ—அந்த இடத்தை விட்டு அகன்றார்; த்விஜ—அந்த பிராமணர்.

ரந்திதேவர் அனைத்து ஜீவராசிகளிலும், எல்லா இடங்களிலும் பரமபுருஷரின் இருப்பைக் கண்டதால், அவர் அந்த அதிதியை விசுவாசத்துடனும் மரியாதையுடனும் வரவேற்று அந்த உணவில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்தார். அந்த பிராமணரும் அந்த உணவைச் சாப்பிட்ட பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்.

பதம் 9.21.7
அதான்யோ போக்ஷ்யமாணஸ்ய விபக்தஸ்ய மஹீபதே:
விபக்தம் வ்யபஜத் தஸ்மை வ்ருஷலாய ஹரிம் ஸ்மரன்

அத—அதன்பிறகு; அன்ய:—மற்றொரு விருந்தாளி; போக்ஷ்யமாணஸ்ய—உண்ணும் தறுவாயில் இருந்தபொழுது; விபக்தஸ்ய—குடும்பத்திற்கென ஒரு பகுதியைப் பிரித்த பிறகு; மஹீபதே:—அரசரின்; விபக்தம்—குடும்பத்திற்கென ஒதுக்கப்பட்ட உணவை; வ்யபஜத்—அவர் பிரித்து வினியோகித்தார்; தஸ்மை—அவருக்கு; வ்ருஷலாய—ஒரு சூத்திரருக்கு; ஹரிம்—பரமபுருஷரை; ஸ்மரன்—நினைந்து.

அதன்பிறகு, எஞ்சியுள்ள உணவைத் தன் உறவினர்களோடு பகிர்ந்து கொண்ட ரந்திதேவர், தன் பாகத்தை உண்ணப்போகும் சமயத்தில் ஒரு சூத்திர விருந்தாளி அங்கு வந்தார். அந்த சூத்திரனையும் பகவானுடன் உறவு கொண்டுள்ளவராகவே கண்ட மகாராஜா ரந்திதேவர், அவருக்கும் உணவில் ஒரு பங்கைக் கொடுத்தார்.

பதம் 9.21.8
யாதே சூத்ரே தம் அன்யோ ‘காத் அதிதி: ஸ்வபிர் ஆவ்ருத:
ராஜன் மே தீயதாம் அன்னம் ஸகணாய பபுக்ஷதே

யாதே—அவர் சென்றபிறகு; சூத்ரே—சூத்திர விருந்தாளி; தம்— அரசருக்கு; அன்ய:—மற்றொரு; அகாத்—அங்கு வந்தார்; அதிதி:—விருந்தாளி; ஸ்வபி:-ஆவ்ருத:—நாய்களால் சூழப்பட்டபடி; ராஜன்—அரசே; மே—எனக்கு; தீயதாம்—கொடுங்கள்; அன்னம்—உணவு; ஸ-கணாய—என் நாய்களுடன்; பபுக்ஷதே—உணவுக்காக ஏங்கும்.

அந்த சூத்திரர் சென்றபிறகு, நாய்களால் சூழப்பட்டிருந்த மற்றொரு அதிதி வந்து, “அரசே, நானும் எனது நாய்களும் மிகவும் பசியோடிருக்கிறோம். சாப்பிட எதையேனும் கொடுத்தருள வேண்டும்” என்று கூறினான்.

பதம் 9.21.9
ஸ ஆத்ருத்யாவசிஷ்டம் யத் பஹு-மான-புரஸ்க்ருதம்
தச் ச தத்வா நமஸ்சக்ரே ஸ்வப்ய: ஸ்வ-பதயே விபு:

ஸ:—அவர் (ரந்திதேவர்); ஆத்ருத்ய—அவர்களைக் கெளரவித்த பின்; அவசிஷ்டம்—அந்த பிராமணருக்கும், சூத்திரருக்கும் உணவளித்தபின் எஞ்சியிருந்த உணவை; யத்—இருந்ததை; பஹு-மான-புரஸ்க்ருதம்—அவருக்கு அதிக மரியாதை செலுத்தி; தத்—அதை; ச—கூட; தத்வா—கொடுத்துவிட்டு; நம:-சக்ரே—வணக்கம் செலுத்தினார்; ஸ்வப்ய:—நாய்களுக்கு; ஸ்வ-பதயே—நாய்களின் எஜமானருக்கு; விபு:—சர்வ சக்திசாலியான அந்த அரசர்.

மகாராஜா ரந்திதேவரும் மிகவும் மரியாதையுடன் மிஞ்சியிருந்த உணவை அந்த நாய்களுக்கும் அவற்றின் எஜமானருக்கும் அளித்தார். அரசர் அவர்களுக்கு மரியாதையையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொண்டார்.

பதம் 9.21.10
பானீய-மாத்ரம் உச்சேஷம் தச் சைக-பரிதர்பணம்
பாஸ்யத: புல்கஸோ ‘ப்யாகாத் அபோ தேஹி அசுபாய மே

பானீய-மாத்ரம்—குடிநீர் மட்டுமே; உச்சேஷம்—உணவில் மிஞ்சியது; தத் ச—அதுகூட; ஏக—ஒருவருக்கு; பரிதர்ப்பணம்—திருப்தியளிக்கக் கூடியது; பாஸ்யத:—அரசர் பருகபோகும் வேளையில்; புல்கஸ:—ஒரு சண்டாளன்; அப்யாகாத்—அங்கு வந்தான்; அப:—நீர்; தேஹி—தயவு செய்து கொடுங்கள்; அசுபாய—நான் இழிகுலத்தைச் சேர்ந்த சண்டாளன் என்ற போதிலும்; மே—எனக்கு.

அதன்பிறகு, குடிநீர் மட்டுமே மிஞ்சியிருந்தது. அதுவும் ஒருவரை மட்டுமே திருப்திப்படுத்தக்கூடிய அளவுதான் இருந்தது. ஆனால் அந்த அரசர் அதைப் பருகப்போகும் வேளையில் ஒரு சண்டாளன் அங்கு தோன்றி, “அரசே, நான் இழிகுலத்தில் பிறந்தவன் என்றாலும், அன்புடன் சிறிதளவு குடிநீர் தரும்படி வேண்டுகிறேன்” என்று கூறினான்.

பதம் 9.21.11
தஸ்ய தாம் கருணாம் வாசம் நிசம்ய விபுல-ஸ்ரமாம்
க்ருபயா ப்ருச-ஸந்தப்த இதம் ஆஹாம்ருதம் வச:

தஸ்ய—அவனுடைய (சண்டாளனின்); தாம்—அந்த; கருணாம்—பரிதாபத்திற்குரிய; வாசம்—வார்த்தைகளை; நிசம்ய—கேட்டு; விபுல—மிகவும்; ஸ்ரமாம்—களைத்துப் போயிருந்த; க்ருபயா—இரக்கத்தினால்; ப்ருச-ஸந்தப்த:—மிகவும் வருந்தி; இதம்—இந்த; ஆஹ—பேசலானார்; அம்ருதம்—மிகவும் இனிய; வச:—வார்த்தைகளை.

களைத்துப்போயிருந்த அந்த ஏழைச் சண்டாளனின் பரிதாபத்திற்குரிய வார்த்தைகளைக் கேட்டு மிகவும் வருந்திய ரந்திதேவ மகாராஜன், அழுவது போன்ற பின்வரும் வார்த்தைகளைப் பேசலானார்.

பதம் 9.21.12
ந காமயே ‘ஹம் கதிம் ஈஸ்வராத் பராம்
அஷ்டர்த்தி-யுக்தாம் அபுனர்-பவம் வா
ஆர்த்திம் ப்ரபத்யே ‘கில-தேஹ-பாஜாம்
அந்த-ஸ்திதோ யேன பவந்தி அதுஹ்கா:

ந—இல்லை; காமயே—விரும்புகிறேன்; அஹம்—நான்; கதிம்—கதியை; ஈஸ்வராத்—பரமபுருஷரிடமிருந்து; பராம்—சிறந்த; அஷ்ட-ரித்தி-யுக்தாம்—எட்டு வகையான யோக சித்திகளடங்கிய; அபுண-பவம்—தொடர்ந்த பிறவிச் சக்கரத்தின் நிறுத்தம் (முக்தி); வா—அல்லது; ஆர்த்திம்—துன்பங்களை: ப்ரபத்யே—நான் ஏற்றுக் கொள்கிறேன்; அகில-தேஹ-பாஜாம்—அனைத்து ஜீவராசிகளின்; அந்த:-ஸ்தித:—அவர்களுக்கிடையில் இருந்துகொண்டு; யேன—எதனால்; பவந்தி—அவர்கள் ஆக வேண்டும்; அதுஹ்கா:—துன்பமற்றவர்களாக.

நான் அஷ்ட சித்திகளுக்காகவோ, பிறவித்தளையிலிருந்து விடுபடுவதற்காகவோ பரமபுருஷரிடம் பிரார்த்திக்கவில்லை. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திலிருந்து விடுபடும் பொருட்டு, அவர்களது சார்பாக எல்லாத் துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு அவர்களுக்கிடையில் வாழ்வதை மட்டுமே நான் விரும்புகிறேன்.

பதம் 9.21.13
க்ஷுத்-த்ருத்-ஸ்ரமோ காத்ர-பரிப்ரமஸ் ச
தைன்யம் க்லம: சோக-விஷாத-மோஹா:
ஸர்வ நிவ்ருத்தா: க்ருபணஸ்ய ஜந்தோர்
ஜிஜீவிஷோர் ஜீவ-ஜலார்பணான் மே

க்ஷுத்—பசி; த்ருத்—தாகம்; ஸ்ரம:—களைப்பு; காத்ர-பரிப்ரம:—உடல் நடுக்கம்; ச—மேலும்; தைன்யம்—ஏழ்மை; க்லம:—துன்பம்; சோக—சோகம்; விஷாத—விசனம்; மோஹா:—மற்றும் குழப்பம்; ஸர்வே—இவையனைத்தும்; நிவ்ருத்தா:—முடிந்து; க்ருபணஸ்ய—ஏழையின்; ஜந்தோ:—ஜீவராசி (சண்டாளன்); ஜிஜீவிஷோ:—வாழ விரும்பும்; ஜீவ—உயிரைக் காத்து; ஜல—நீரை; அர்பணாத்—கொடுப்பதால்; மே—என்னுடைய.

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இந்த ஏழைச் சண்டாளனின் உயிரைக் காப்பாற்ற என்னுடைய நீரைக் கொடுத்ததன் மூலமாக, நான் தாகம், பசி, களைப்பு, உடல் நடுக்கம், வருத்தம், துன்பம், விசனம், மாயை, ஆகிய அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டேன்.

பதம் 9.21.14
இதி ப்ரபாஷ்ய பானீயம் ம்ரியமாண: பிபாஸயா
புல்கஸாயாததாத் தீரோ நிஸர்க-கருணோ ந்ருப:

இதி—இவ்வாறு; ப்ரபாஷ்ய—கூறியபின்; பானீயம்—குடிநீரை; ம்ரியமாண:—மரண வாயிலில் இருந்த போதிலும்; பிபாஸயா—தாகத்தினால்; புல்கஸாய—இழிகுலத்து சண்டாளனுக்கு; அததாத்—கொடுத்து விட்டார்; தீர:—அமைதியுள்ள; நிஸர்க-கருண:—இயற்கையாகவே மிகவும் கருணையுள்ள; ந்ருப:—அரசர்.

இயற்கையாகவே மிகவும் அன்புடையவராகவும், அமைதியானவராகவும் இருந்த ரந்திதேவர், தாகப்பிணியின் காரணத்தால் மரணத்தின் வாயிலில் இருந்தபோதிலும், இவ்வாறு பேசியபின் தமது சொந்த பாகமாக இருந்த நீரையும் தயக்கமின்றி அந்த சண்டாளனுக்குக் கொடுத்துவிட்டார்.

பதம் 9.21.15
தஸ்ய த்ரிபுவனாதீசா: ஃபலதா: ஃபலம் இச்சதாம்
ஆத்மானம் தர்சயாம் சக்ருர் மாயா விஷ்ணு வினிர்மிதா:

தஸ்ய—அவர்முன் (ரந்திதேவர்முன்); த்ரி-புவன-அதீசா:—மூவுலகங்களையும் ஆள்பவர்கள் (பிரம்மா, சிவன் போன்ற தேவர்கள்); ஃபல-தா:—கர்ம பலன்களையெல்லாம் அருளக்கூடியவர்களான; ஃபலம் இச்சதாம்—பெளதிக நன்மைகளை விரும்புபவர்களின்; ஆத்மானம்—அவர்களது சுய சொரூபங்களை; தர்சயாம் சக்ரு:—தோற்றுவித்தனர்; மாயா:—மாயா சக்தி; விஷ்ணு—பகவான் விஷ்ணுவால்; வினிர்மிதா:—படைக்கப்பட்ட.

பெளதிக ஆசைகள் உள்ளவர்களுக்கு வேண்டிய வரமளித்து அவர்களை திருப்திப்படுத்தக் கூடியவர்களான பிரம்மதேவர், சிவபெருமான் போன்ற தேவர்கள்தான் உண்மையில் பிராமணர், சூத்திரன், சண்டாளன் போன்ற ரூபங்களில் அங்கு வந்திருந்தனர். எனவே, பிறகு அவர்கள் ரந்திதேவ மகாராஜனின் முன்னிலையில் தங்களது சுயரூபங்களை வெளிப்படுத்தினர்.

பதம் 9.21.16
ஸ வை தேப்யோ நமஸ்க்ருத்ய நிஹ்ஸங்கோ விகத-ஸ்ப்ருஹ:
வாஸுதேவே பகவதி பக்த்யா சக்ரே மன: பரம்

ஸ:—அவர் (ரந்திதேவர்); வை—உண்மையில்; தேப்ய:—பிரம்மதேவர், சிவபெருமான் மற்றும் பிற தேவர்களுக்கு; நம-க்ருத்ய—வணக்கம் செலுத்தி; நிஹ்ஸங்க:—அவர்களிடமிருந்து எந்த நன்மையையும் பெறும் நோக்கமின்றி; விகத-ஸ்ப்ருஹ:—பௌதிக உடைமைகளைப் பெறும் ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு; வாஸுதேவே—பகவான் வாசுதேவருக்கு; பகவதி—பரமபுருஷரான; பக்த்யா—பக்தித் தொண்டால்; சக்ரே—பதித்தார்; மன:—மனதை; பரம்—வாழ்வின் இறுதி நோக்கமாக.

தேவர்களிடமிருந்து அடையப்படும் பெளதிக நன்மைகளை அனுபவிக்கும் ஆசை ரந்திதேவருக்கு இருந்ததில்லை. அவர்களுக்கு அவர் தமது வணக்கங்களை தெரிவித்துக் கொண்டார். ஆனால் உண்மையில் அவர் வாசுதேவராகிய பகவான் ஸ்ரீ விஷ்ணுவிடம் மிகவும் பற்றுக் கொண்டவராக இருந்ததால், அவர் தமது மனதை பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் பதித்தார்.

பதம் 9.21.17
ஈஸ்வராலம்பனம் சித்தம் குர்வதோ ‘னன்ய-ராதஸ:
மாயா குணமயீ ராஜன் ஸ்வப்னவத் ப்ரத்யலீயத

ஈஸ்வர-ஆலம்பனம்—பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் பூரண சரணடைந்து; சித்தம்—அவரது உணர்வை; குர்வத:—பதித்து; அனன்ய-ராதஸ:—வழிதவறிச் செல்லாதவரும், பரமபுருஷருக்கு தொண்டு செய்வதைத் தவிர வேறெதையும் விரும்பாதவருமான ரந்திதேவருக்கு; மாயா—மாயா சக்தி; குண-மயீ—இயற்கையின் முக்குணங்களைக் கொண்ட; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; ஸ்வப்ன-வத்—ஒரு கனவுபோல்; ப்ரத்யலீயத—மறைந்துவிட்டது.

பரீட்சித்து மகாராஜனே, மகாராஜா ரந்திதேவர் எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் நிலைத்தவராகவும், பெளதிக ஆசைகளிலிருந்து விடுபட்டவராகவும் உள்ள ஒரு தூய பக்தராக இருந்ததால், பகவானின் மாயா சக்தியால் அவர் முன் நிலைத்திருக்க இயலவில்லை. அதற்கு மாறாக, மாயையானது ஒரு கனவுபோல் அவரிடமிருந்து முற்றிலும் மறைந்து போயிற்று.

பதம் 9.21.18
தத்-ப்ரஸங்கானுபாவேன ரந்திதேவானுவர்த்தின:
அபவன் யோகின: ஸர்வே நாராயண-பராயணா:

தத்-ப்ரஸங்க-அனுபாவேன—(பக்தி-யோகத்தைப் பற்றி அவரிடம் பேசும்பொழுது) ரந்திதேவருடன் சகவாசம் கொண்டதால்; ரந்திதேவ அனுவர்த்தின:—ரந்திதேவரின் பரிவாரம் (அதாவது, அவரது சேவகர்கள், அவரது குடும்பத்தினர், அவரது நண்பர்கள் மற்றும் பிறர்); அபவன்—ஆகினர்; யோகின:—முதல்தர அஷ்டாங்க யோகிகளாக, அல்லது பக்தி யோகிகளாக; ஸர்வே—அவர்களனைவரும்; நாராயண-பராயண:—பரமபுருஷராகிய நாராயணரின் பக்தர்கள்.

ரந்திதேவ மகாராஜனின் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் அவரது கருணைக்குப் பாத்திரமாகி, பரமபுருஷராகிய பகவான் நாராயணரிடம் பற்றுக்கொண்ட தூய பக்தர்களாகவும், மிகச் சிறந்த யோகிகளாகவும் ஆகினர்.

பதங்கள் 9.21.19 – 9.21.20
கர்காச் சினிஸ் ததோ கார்க்ய: க்ஷத்ராத் ப்ரஹ்ம ஹி அவர்தத
துரிதக்ஷயோ மஹாவீர்யாத் தஸ்ய த்ரய்யாருணி: கவி:

புஷ்கராருணிர் இதி அத்ர யே ப்ராஹ்மண-கதிம் கதா:
ப்ருஹத்க்ஷத்ரஸ்ய புத்ரோ ‘பூத் ஹஸ்தீ யத்-ஹஸ்தினாபுரம்

கர்காத்—(பரத்வாஜரின் மற்றொரு பேரனான) கர்கரிலிருந்து; சினி:—சினி என்ற ஒரு மகன்; தத:—அவரிலிருந்து (சினியிலிருந்து); கார்க்ய:—கார்க்யர் என்ற ஒரு மகன்; க்ஷத்ராத்—அவர் ஒரு க்ஷத்திரியர் என்ற போதிலும்; ப்ரஹ்ம—பிராமணர்கள்; ஹி—உண்மையில்; அவர் தத—சாத்தியமாயிற்று; துரிதக்ஷய:—துரிதக்ஷயர் என்ற மகன்; மஹாவீர்யாத்—மஹாவீர்யரிலிருந்து (பரத்வாஜரின் மற்றொரு பேரன்); தஸ்ய—அவரது; த்ரய்யாருணி—திரய்யாருணி என்ற மகன்; கவி:—கவி என்ற ஒரு மகன்; புஷ்கராருணி:—புஷ்கராருணி என்ற ஒரு மகன்; இதி—இவ்வாறு; அத்ர—அங்கு; யே—அவர்களனைவரும்; ப்ராஹ்மண-கதிம்—பிராமணர்களின் அந்தஸ்தை; கதா:—அடைந்தனர்; ப்ருஹத் க்ஷத்ரஸ்ய—பரத்வாஜரின் பேரனான பிருஹத்க்ஷத்ரரின்; புத்ர:—மகன்; அபூத்—ஆனார்; ஹஸ்தீ—ஹஸ்தி; யத்—எவரிலிருந்து; ஹஸ்தினாபுரம்—ஹஸ்தினாபுர நகரம் (புதுடில்லி) நிர்மாணிக்கப்பட்டது.

கர்கரிலிருந்து சினி என்ற ஒரு மகன் வந்தார். அவரது மகன் கார்கியர் எனப்படுவார். கார்கியர் ஒரு க்ஷத்திரியர் என்ற போதிலும், அவரிலிருந்து ஒரு பிராமண வம்சம் தோன்றியது. மஹாவீரியரிலிருந்து துரிதக்ஷயன் என்ற மகன் வந்தார். அவருடைய மகன்கள் திரய்யாருணி, கவி, புஷ்கராருணி ஆகியோராவர். துரிதக்ஷயரின் இம் மகன்கள் க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்தவர்கள் என்ற போதிலும், அவர்களும் பிராமணர்களின் அந்தஸ்தைப் பெற்றனர். பிரஹத்க்ஷத்ரருக்கு ஹஸ்தி என்ற ஒரு மகன் இருந்தார். அவர் ஹஸ்தினாபுரம் (இப்பொழுது புதுடில்லி) என்ற நகரை நிர்மாணித்தார்.

பதம் 9.21.21
அஜமீடோ த்விமீடஸ்: புருமீடஸ் ச ஹஸ்தின:
அஜமீடஸ்ய வம்ஸ்யா: ஸ்யு: ப்ரியமேதாதயோ த்விஜா:

அஜமீட:—அஜமீடன்; த்விமீட:—துவிமீடன்; ச—கூட; புருமீட:—புருமீடன்; ச—கூட; ஹஸ்தின:—ஹஸ்தியின் மகன்களாயினர்; அஜமீடஸ்ய—அஜமீடனின்; வம்ஸ்யா:—வம்சத்தவர்கள்; ஸ்யு:—ஆவர்; ப்ரியமேத-ஆதய:—பிரியமேதர் முதலான; த்விஜா:—பிராமணர்கள்.

ஹஸ்தி மகாராஜனிலிருந்து அஜமீடன், துவிமீடன், புருமீடன் ஆகிய மூன்று மகன்கள் வந்தனர். பிரியமேதன் முதலான அஜமீடனின் வம்சத்தவர்கள் எல்லோரும் பிராமணர்களின் அந்தஸ்தைப் பெற்றனர்.

பதம் 9.21.22
அஜமீடாத் பிருஹதிஷுஸ் தஸ்ய புத்ரோ பிருஹத்தனு:
பிருஹத்காயஸ் ததஸ் தஸ்ய புத்ர ஆஸீஜ் ஜயத்ரத:

அஜமீடாத்—அஜமீடரிலிருந்து; ப்ருஹதிஷு:—பிருஹதிஷு என்ற மகன்; தஸ்ய—அவரது; புத்ர:—மகன்; ப்ருஹத்தனு:—பிருஹத்தனு; ப்ருஹத்காய:—பிருஹத்காயர்; தத:—அதன்பிறகு; தஸ்ய—அவரது; புத்ர:—மகன்; ஆஸீத்—ஆவார்; ஜயத்ரத:—ஜயத்ரதர்.

அஜமீடரிலிருந்து பிருஹதிஷு என்றொரு மகன் வந்தார். அவரிலிருந்து பிருஹத்தனு என்ற மகன் வந்தார். அவரிலிருந்து பிருஹத்காயர் என்ற மகன் வந்தார். பிருஹத்காயரிலிருந்து ஜயத்ரதன் என்ற மகன் வந்தார்.

பதம் 9.21.23
தத்-ஸுதோ விசதஸ் தஸ்ய ஸ்யேனஜித் ஸமஜாயத
ருசிராஸ்வோ த்ருடஹனு: காஸ்யோ வத்ஸஸ் ச தத்-ஸுதா:

தத்-ஸுத:—ஜயத்ரதரின் மகன்; விசத—விசதர்; தஸ்ய—விசதரின் மகன்; ஸ்யேனஜித்—சியேனஜித்; ஸமஜாயத—பிறந்தார்; ருசிராஸ்வ:—ருசிராஸ்வர்; த்ருடஹனு:—திருடஹனு; காஸ்ய:—காஸ்யர்; வத்ஸ:—வத்ஸர்; ச—கூட; தத்-ஸுதா:—சியேனஜித்தின் மகன்கள்.

ஐயத்ரதனின் மகன் விசதர். அவரது மகன் சியேனஜித். சியேனஜித்தின் மகன்கள் ருசிராஸ்வர், திருடஹனு, காசியர், வத்ஸர் ஆகியோராவர்.

பதம் 9.21.24
ருசிராஸ்வ-ஸுத: பார: ப்ருதுஸேனஸ் தத்-ஆத்மஜ:
பாரஸ்ய தனயோ நீபஸ் தஸ்ய புத்ர-சதம் து அபூத்

ருசிராஸ்வ-ஸுத:—ருசிராஸ்வரின் மகன்; பார:—பாரர்; ப்ருதுஸேன:—பிருதுசேனர்; தத்—அவருடைய; ஆத்மஜ:—மகன்; பாரஸ்ய—பாரரிலிருந்து; தனய:—ஒரு மகன்; நீப:—நீபர்; தஸ்ய—அவரது; புத்ர-சதம்—நூறு மகன்கள்; து—உண்மையில்; அபூத்—உண்டாயினர்.

ருசிராஸ்வரின் மகன் பாரர். பாரரின் மகன்கள் பிருத்துஸேனர், நீபர் ஆகியோராவர். நீபருக்கு நூறு மகன்கள் இருந்தனர்.

பதம் 9.21.25
ஸ க்ருத்வ்யாம் சுக-கன்யாயாம் ப்ரஹ்மதத்தம் அஜீஜனத்
யோகீ ஸ கவி பார்யாயாம் விஷ்வக்ஷேனம் அதாத் ஸுதம்

ஸ:—அவர் (நீபர்); க்ருத்வ்யாம்—அவரது மனைவியான கிருத்வியில்; சுக-கன்யாயாம்—சுகரின் மகளான; ப்ரஹ்மதத்தம்—பிரம்மதத்தர் என்ற மகனை; அஜீஜனத்—பெற்றார்; யோகீ—ஓர் அஷ்டாங்கி யோகியான; ஸ:—அந்த பிரம்மதத்தர்; கவி—கவி அல்லது சரஸ்வதி என்ற பெயருடைய; பார்யாயாம்—அவரது மனைவியின் கர்பத்தில்; விஷ்வக்ஷேனம்—விஷ்வக்ஷேனரை; அதாத்—பெற்றார்; ஸுதம்—ஒரு மகனை.

நீப மகாராஜன் சுகரின் மகளும், தன்மனைவியுமான கிருத்வியின் கர்பத்தில் பிஹ்மதத்தர் என்ற மகனைப் பெற்றார். சிறந்த யோகியான பிரஹ்மதத்தர் தன் மனைவியான சரஸ்வதியின் கர்பத்தில் விஷ்வக்ஷேனர் என்ற மகனைப் பெற்றார்.

பதம் 9.21.26
ஜைகீஷவ்யோபதேசேன யோக-தந்த்ரம் சகார ஹ
உதக்ஷேனஸ் ததஸ் தஸ்மாத் பல்லாடோ பார்ஹதீஷவா:

ஜைகீஷவ்ய—ஜைகீஷவ்யர் என்ற மாமுனிவரின்; உபதேசேன—உபதேசத்தால்; யோக-தந்த்ரம்—அஷ்டாங்க யோகத்தைப் பற்றிய ஒரு விரிவான வர்ணனையை; சகார—தொகுத்தார்; ஹ—கடந்த காலத்தில்; உதக்ஷேன:—உதக்ஷேனர்; தத:—அவாிலிருந்து (விஷ்வக்ஷேனரிலிருந்து); தஸ்மாத்—அவரிலிருந்து (உதக்ஷேனரிலிருந்து); பல்லாட:—பல்லாடர் என்ற மகன்; பர்ஹதீஷவா:—(இவர்களனைவரும்) பிருஹதிஷுவின் வம்சத்தினர் (எனப்படுகின்றனர்).

விஷ்வக்ஷேனர், மாமுனிவரான ஜைகீஷவ்யரின் உபதேசங்களைப் பின்பற்றி, அஸ்டாங்க யோக முறையைப் பற்றிய விரிவான ஒரு வர்ணனையைத் தொகுத்தார். விஷ்வக்ஷேனரிலிருந்து உதக்ஷேனர் பிறந்தார். உதக்ஷேனரிலிருந்து பல்லாடர் பிறந்தார். இந்த மகன்களனைவரும் பிருஹதிஷுவின் வம்சத்தினர் எனப்படுகின்றனர்.

பதம் 9.21.27
யவீனரோ த்விமீடஸ்ய க்ருதிமாம்ஸ் தத்-ஸுத: ஸ்ம்ருத:
நாம்னா ஸத்யத்ருதிஸ் தஸ்ய த்ருடனேமி: ஸீபார்ஸ்வக்ருத்

யவீனர:—யவீனரர்; த்விமீடஸ்ய—துவிமீடரின் மகன்; க்ருதிமான்—கிருதிமான்; தத்-ஸுத:—யவீனாரின் மகன்; ஸ்ம்ருத:—புகழ் பெற்றவரானார்; நாம்னா—என்ற பெயரால்; ஸத்யத்ருதி:—சத்யதிருதி; தஸ்ய—அவருடைய (சத்யதிருதியின்); த்ருடனேமி:—திருடனேமி; ஸீபார்ஸ்வ-கிருத்—சுபார்ஸ்வரின் தந்தை.

துவிமீடரின் மகன் யவீனரர். அவரது மகன் கிரிதிமான். கிரிதிமானின் மகன் ஸத்யதிருதி என்று புகழ்பெற்றவராவார். ஸத்யதிருதியிலிருந்து திருடனேமி என்ற மகன் வந்தார். அவர் சுபார்ஸ்வரின் தந்தையானார்.

பதங்கள் 9.21.28 – 9.21.29
ஸீபார்ஸ்வாத் ஸுமதிஸ் தஸ்ய புத்ர: ஸன்னிதிமாம்ஸ் தத:
க்ருதீ ஹிரண்யணாபாத் யோ யோகம் ப்ராப்ய ஜகௌ ஸ்ம ஷட்

ஸம்ஹிதா: ப்ராச்யஸாம்னாம் வை நீபோ ஹி உத்க்ராயுதஸ் தத:
தஸ்ய க்ஷேம்ய: ஸுவீரோ ‘த ஸுவீரஸ்ய ரிபுஞ்ஜய:

ஸீபார்ஸ்வாத்—சுபார்ஸ்வரிலிருந்து; ஸுமதி:—சுமதி என்ற மகன்; தஸ்யபுத்ர:—அவரது மகன் (சுமதியின் மகன்); ஸன்னதிமான்—சன்னதிமான்; தத:—அவரிலிருந்து; க்ருதி—கிருதி என்ற மகன்; ஹிரண்யநாபாத்—பிரம்ம தேவரிடமிருந்து; ய:—அவர்; யோகம்—யோக சக்தியை; ப்ராப்ய—பெற்று; ஜகெள—கற்பித்தார்; ஸ்ம—கடந்த காலத்தில்; ஷட்—ஆறு; ஸம்ஹிதா:—வர்ணனைகளை; ப்ராச்யஸாம்னாம்—சாம வேதத்திலுள்ள பிராச்யஸாம சுலோகங்களின்; வை—உண்மையில்; நீப:—நீபர்; ஹி—நிச்சயமாக; உத்க்ராயுத:—உத்கிராயுதர்; தத:—அவரிலிருந்து; தஸ்ய—அவரது; க்ஷேம்ய:—க்ஷேம்யர்; ஸுவீர:—சுவீரர்; அத—அதன் பிறகு; ஸுவீரஸ்ய—சுவீரரின்; ரிபுஞ்ஜய:—ரிபுஞ்ஜயர் என்ற ஒரு மகன்.

சுபார்ஸ்வரிலிருந்து சுமதி என்ற மகனும், சுமதியிலிருந்து சன்னதிமானும், சன்னதிமானிலிருந்து கிருதியும் வந்தனர். கிருதி பிரம்மாவிடமிருந்த யோக சக்தியைப் பெற்று, சாம வேதத்தின் பிராச்யஸாம சுலோகங்களைச் சேர்ந்த ஆறு சம்ஹிதைகளைக் கற்பித்தார். கிருதியின் மகன் நீபர். நீபரின் மகன் உத்கிராயுதர், அவரது மகன் க்ஷேம்யர். அவரது மகன் சுவீரர். சுவீரரின் மகன் ரிபுஞ்சயர்.

பதம் 9.21.30
த்தோ பஹுரதோ நாம புருமீடோ ‘ப்ராஜோ ‘பவத்
நளின்யாம் அஜமீடஸ்ய நீல:சாந்திஸ் து தத்-ஸுத:

தத:—அவரிலிருந்து (ரிபுஞ்சயரிலிருந்து); பஹுரத:—பஹுரதர்; நாம—என்ற பெயருடைய; புருமீட:—துவிமீடரின் இளைய சகோதரரான புருமீடர்; அப்ரஜ:—மகனில்லாதவராக; அபவத்—ஆனார்; நளின்யாம்—நளினியின் மூலமாக; அஜமீடஸ்ய—அஜமீடரின்; நீல:—நீலன்; சாந்தி:—சாந்தி; து—பிறகு; தத்-ஸுத:—நீலனின் மகன்.

ரிபுஞ்சயரிலிருந்து பஹுரதர் என்ற மகன் வந்தார். புருமீடருக்கு மகனில்லை. அஜமீடருக்கு நளினீ என்ற அவரது மனைவியின் மூலமாக நீலன் என்ற ஒரு மகன் இருந்தார். நீலனின் மகன் சாந்தி.

பதங்கள் 9.21.31 – 9.21.33
சாந்தே: ஸுசாந்திஸ் தத்-புத்ர: புருஜோ ‘ர்கஸ் ததோ ‘பவத்
பர்ம்யாஸ்வஸ் தனயஸ் தஸ்ய பஞ்சாஸன் முத்கலாதய:

யவீனரோ ப்ருஹத்விஸ்வ: காம்பில்ல: ஸஞ்சய ஸுதா:
பர்ம்யாஸ்வ: ப்ராஹ புத்ரா மே பஞ்சானாம் ரக்ஷணாய ஹி

விஷயாணாம் அலம் இமே இதி பஞ்சால-ஸம்க்ஞிதா:
முத்கலாத் ப்ரஹ்ம-நிர்வ்ருத்தம் கோத்ரம் மௌத்கல்ய-ஸம்க்ஞிதம்

சாந்தே:—சாந்தியின்; ஸுசாந்தி:—சுசாந்தி; தத்-புத்ர:—அவரது மகன்; புருஜ:—புருஜர்; அர்க:—அர்கர்; தத:—அவரிலிருந்து; அபவத்—உண்டானார்; பர்ம்யாஸ்வ:—பர்மியாஸ்வர்; தனய:—மகன்; தஸ்ய—அவருடைய; பஞ்ச—ஐந்து மகன்கள்; ஆஸன்—ஆகியோராவர்; முத்கல-ஆதய:—முத்கலர் முதலான; யவீனர:—யவீனரர்; ப்ருஹத்விஸ்வ:—பிருஹத்விஸ்வர்; காம்பில்ல:—காம்பில்லர்; ஸஞ்ஜய:—சஞ்ஜயர்; ஸுதா:—மகன்கள்; பர்ம்யாஸ்வ:—பர்மியாஸ்வர்; ப்ராஹ—கூறினார்; புத்ரா:—மகன்கள்; மே—எனது; பஞ்சானாம்—ஐவரின்; ரக்ஷணாய—பாதுகாப்பிற்கு; ஹி—உண்மையில்; விஷயாணாம்—வெவ்வேறு இராஜ்யங்களின்; அலம்—தகுதியுடையவர்கள்; இமே—அவர்களனைவரும்; இதி—இவ்வாறு; பஞ்சால—பஞ்சாலம்; ஸம்க்ஞிதா:—அறியப்பட்டனர்; முத்கலாத்—முத்கலரிலிருந்து; ப்ரஹ்ம-நிர்வ்ருத்தம்—பிராமணர்கள் அடங்கிய; கோத்ரம்—ஒரு வம்சம்; முத்கல்ய—முத்கல்யர்; ஸம்க்ஞிதம்—அவ்வாறு அறியப்பட்டனர்.

சாந்தியின் மகன் சுசாந்தி. அவரது மகன் புருஜன். அவரது மகன் அர்கன். அர்கனிலிருந்து பர்மியாஸ்வர் வந்தார். அவரிலிருந்து முத்கலர், யவீனரர், பிருஹத்விஸ்வர், காம்பில்லர், சஞ்சயர் ஆகிய ஐந்து மகன்கள் வந்தனர். பர்மியாஸ்வர் தன் மகன்களிடம், “எனதருமை மகன்களே, என்னுடைய ஐந்து இராஜ்யங்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் அதைச் செய்வதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது” என்று வேண்டினார். இவ்வாறாக அவரது ஐந்து மகன்களும் பாஞ்சாளர்கள் என்று அறியப்பட்டனர். முத்கலரிலிருந்து மௌத்கல்யர்கள் என்ற ஒரு பிராமண வம்சம் வந்தது.

பதம் 9.21.34
மிதுனம் முத்கலாத் பார்ம்யாத் திவோதாஸ: புமான் அபூத்
அஹல்யா கன்யகா யஸ்யாம் சதானந்தஸ் து கௌதமாத்

மிதுனம்—ஓர் ஆணும், ஒரு பெண்ணும் அடங்கிய இரட்டைக் குழந்தைகள்; முத்கலாத்—முத்கலனிலிருந்து; பார்மயாத்—பர்மியாஸ்வரின் மகன்; திவோதாஸ:—திவோதாஸர்; புமான்—ஆண்; அபூத்—உற்பத்தியானார்; அஹல்யா—அகலிகை; கன்யகா—பெண்; யஸ்யாம்—யாரின் மூலமாக; சதானந்த:—சதானந்தர்; து—உண்மையில்; கெளதமாத்—அவளது கணவரான கெளதமரால் உற்பத்தி செய்யப்பட்டார்.

பர்மியாஸ்வரின் மகனான முத்கலருக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணும் அடங்கிய இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். ஆண் குழந்தைக்கு திவோதாஸர் என்றும் பெண் குழந்தைக்கு அகலிகை என்றும் பெயரிடப்பட்டது. அகலிகையின் கணவரான கௌதமரின் விந்தின் மூலமாக அகலிகையின் கர்பத்திலிருந்து சதானந்தர் என்ற மகன் வந்தார்.

பதம் 9.21.35
தஸ்ய ஸத்யத்ருதி: புத்ரோ தனுர்-வேத-விஸாரத:
சரத்வாம்ஸ் தத்-ஸுதோ யஸ்மாத் உர்வசீ-தர்சனாத் கில
சர-ஸ்தம்பே ‘பதத் ரேதோ மிதுனம் தத் அபூச் சுபம்

தஸ்ய—அவருடைய (சதானந்தருடைய); ஸத்யத்ருதி:—சத்தியதிருதி; புத்ர:—ஒரு மகன்; தனு:-வேத-விசாரத:—வில் வித்தையில் நிபுணரான; சரத்வான்—சரத்வான்; தத்-ஸுத:—சத்யதிருதியின் மகன்; யஸ்மாத்—யாரிலிருந்து; உர்வசீ-தர்சனாத்—விண்ணுலக ஊர்வசியைக் கண்டதாலேயே; கில—உண்மையில்; சர-ஸ்தம்பே—ஒரு நாணல்புல் கூட்டத்தின் மேல்; அபதத்—விழுந்தது; ரேத:—விந்து; மிதுனம்—ஓர் ஆணும், ஒரு பெண்ணும்; தத் அபூத்—பிறந்தனர்; சுபம்—சர்வ மங்களமுள்ள.

சதானந்தரின் மகன் சத்யதிருதி. அவர் வில் வித்தையில் நிபுணராவார். சத்யதிருதியின் மகன் சரத்வான். சரத்வான் ஊர்வசியை சந்தித்த பொழுது, அவரது விந்து வெளிப்பட்டு ஒரு நாணல்புல் கூட்டத்தின் மேல் விழுந்தது. அந்த விந்திலிருந்து சர்வ மங்களமுள்ள இரு குழந்தைகள் பிறந்தன. ஒன்று ஆண், மற்றது பெண்.

பதம் 9.21.36
தத் த்ருஷ்ட்வா க்ருபயாக்ருஹ்ணாச் சாந்தனுர் ம்ருகயாம் சரன்
க்ருப: குமார: கன்யா ச த்ரோண-பத்னி அபவத் க்ருபீ

தத்—அந்த இரட்டைக் குழந்தைகளை; த்ருஷ்ட்வா—கண்டு; க்ருபயா—கருணையால்; அக்ருஹ்ணாத்—எடுத்துச் சென்றார்; சாந்தனு:—சாந்தனு மகாராஜன்; ம்ருகயாம்—காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபொழுது; சரன்—அவ்வாறு சஞ்சரித்த; க்ருப:—கிருபர்; குமார:—ஆண்குழந்தை; கன்யா—பெண்குழந்தை; ச—கூட; த்ரோண-பத்னி—துரோணரின் மனைவி; அபவத்—ஆனாள்; க்ருபீ—கிருபி என்ற.

சாந்தனு மகாராஜன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றிருந்த போது, அங்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் கிடப்பதைக் கண்டார். அவர்கள்மீது இரக்கம் கொண்டு அவர்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இதன் காரணமாக, ஆண் குழந்தை கிருப என்று அறியப்பட்டது. பெண் குழந்தை கிருபி என்று பெயரிடப்பட்டது. கிருபி பிறகு துரோணாச்சார்யரின் மனைவியானாள்.


ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “பரத வம்சம்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare