பதம் 9.21.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார். பரத்வாஜன் மருத்தேவர்களால் கொடுக்கப்பட்டதால், விததர் என்று அறியப்பட்டார். விததரின் மகன் மன்யு. மன்யுவிலிருந்து பிருஹத்க்ஷத்ரர், ஜயன், மஹாவீரியர், நரன், கர்கர் ஆகிய ஐந்து மகன்கள் வந்தனர். இந்த ஐவரில் நரன் என்பவருக்கு சங்க்ருதி என்ற பெயருடைய ஒரு மகன் இருந்தார்.
பதம் 9.21.2 : பாண்டு வம்சத்தவரான பரீட்சித்து மகாராஜனே, சங்க்ருதிக்கு குரு, ரந்திதேவர் என்ற இரு மகன்கள் இருந்தனர். ரந்திதேவர் இவ்வுலகிலும் அடுத்ததிலும் புகழ்பெற்று விளங்கினார். ஏனெனில், அவர் மானிட சமூகத்தில் மட்டுமின்றி தேவர்களின் சமூகத்திலும் புகழப்பட்டார்.
பதங்கள் 9.21.3 – 9.21.5 : ரந்திதேவர் எதையுமே சம்பாதிக்க முயற்சி செய்யவில்லை. விதியின் ஏற்பாட்டினால் கிடைத்ததை மட்டுமே அவர் அனுபவித்து வந்தார். ஆனால் விருந்தினர்கள் வரும்பொழுது அனைத்தையும் அவர் அளிப்பார். இவ்வாறாக அவர் தமது குடும்பத்தினருடன் அதிக துன்பத்தை அனுபவித்து வந்தார். உண்மையில், அவரும் அவரது குடும்பத்தினரும் உணவும், நீரும் இல்லாமல் நடுங்கினர். இருப்பினும் ரந்திதேவர் எப்பொழுதும் அமைதியாகவே இருந்தார். ஒரு சமயம், நாற்பத்தெட்டு நாட்கள் உபவாசம் இருந்த பிறகு, காலையில் ரந்திதேவர் பாலாலும், நெய்யாலும் சமைக்கப்பட்ட சிறிது உணவையும், சிறிது நீரையும் பெற்றார். ஆனால் அவரும் அவரது குடும்பத்தினரும் அதைச் சாப்பிடப் போகும் வேளையில் ஒரு பிராமண அதிதி அங்கு வந்தார்.
பதம் 9.21.6 : ரந்திதேவர் அனைத்து ஜீவராசிகளிலும், எல்லா இடங்களிலும் பரமபுருஷரின் இருப்பைக் கண்டதால், அவர் அந்த அதிதியை விசுவாசத்துடனும் மரியாதையுடனும் வரவேற்று அந்த உணவில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்தார். அந்த பிராமணரும் அந்த உணவைச் சாப்பிட்ட பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பதம் 9.21.7 : அதன்பிறகு, எஞ்சியுள்ள உணவைத் தன் உறவினர்களோடு பகிர்ந்து கொண்ட ரந்திதேவர், தன் பாகத்தை உண்ணப்போகும் சமயத்தில் ஒரு சூத்திர விருந்தாளி அங்கு வந்தார். அந்த சூத்திரனையும் பகவானுடன் உறவு கொண்டுள்ளவராகவே கண்ட மகாராஜா ரந்திதேவர், அவருக்கும் உணவில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
பதம் 9.21.8 : அந்த சூத்திரர் சென்றபிறகு, நாய்களால் சூழப்பட்டிருந்த மற்றொரு அதிதி வந்து, “அரசே, நானும் எனது நாய்களும் மிகவும் பசியோடிருக்கிறோம். சாப்பிட எதையேனும் கொடுத்தருள வேண்டும்” என்று கூறினான்.
பதம் 9.21.9 : மகாராஜா ரந்திதேவரும் மிகவும் மரியாதையுடன் மிஞ்சியிருந்த உணவை அந்த நாய்களுக்கும் அவற்றின் எஜமானருக்கும் அளித்தார். அரசர் அவர்களுக்கு மரியாதையையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொண்டார்.
பதம் 9.21.10 : அதன்பிறகு, குடிநீர் மட்டுமே மிஞ்சியிருந்தது. அதுவும் ஒருவரை மட்டுமே திருப்திப்படுத்தக்கூடிய அளவுதான் இருந்தது. ஆனால் அந்த அரசர் அதைப் பருகப்போகும் வேளையில் ஒரு சண்டாளன் அங்கு தோன்றி, “அரசே, நான் இழிகுலத்தில் பிறந்தவன் என்றாலும், அன்புடன் சிறிதளவு குடிநீர் தரும்படி வேண்டுகிறேன்” என்று கூறினான்.
பதம் 9.21.11 : களைத்துப்போயிருந்த அந்த ஏழைச் சண்டாளனின் பரிதாபத்திற்குரிய வார்த்தைகளைக் கேட்டு மிகவும் வருந்திய ரந்திதேவ மகாராஜன், அழுவது போன்ற பின்வரும் வார்த்தைகளைப் பேசலானார்.
பதம் 9.21.12 : நான் அஷ்ட சித்திகளுக்காகவோ, பிறவித்தளையிலிருந்து விடுபடுவதற்காகவோ பரமபுருஷரிடம் பிரார்த்திக்கவில்லை. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திலிருந்து விடுபடும் பொருட்டு, அவர்களது சார்பாக எல்லாத் துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு அவர்களுக்கிடையில் வாழ்வதை மட்டுமே நான் விரும்புகிறேன்.
பதம் 9.21.13 : உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இந்த ஏழைச் சண்டாளனின் உயிரைக் காப்பாற்ற என்னுடைய நீரைக் கொடுத்ததன் மூலமாக, நான் தாகம், பசி, களைப்பு, உடல் நடுக்கம், வருத்தம், துன்பம், விசனம், மாயை, ஆகிய அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டேன்.
பதம் 9.21.14 : இயற்கையாகவே மிகவும் அன்புடையவராகவும், அமைதியானவராகவும் இருந்த ரந்திதேவர், தாகப்பிணியின் காரணத்தால் மரணத்தின் வாயிலில் இருந்தபோதிலும், இவ்வாறு பேசியபின் தமது சொந்த பாகமாக இருந்த நீரையும் தயக்கமின்றி அந்த சண்டாளனுக்குக் கொடுத்துவிட்டார்.
பதம் 9.21.15 : பெளதிக ஆசைகள் உள்ளவர்களுக்கு வேண்டிய வரமளித்து அவர்களை திருப்திப்படுத்தக் கூடியவர்களான பிரம்மதேவர், சிவபெருமான் போன்ற தேவர்கள்தான் உண்மையில் பிராமணர், சூத்திரன், சண்டாளன் போன்ற ரூபங்களில் அங்கு வந்திருந்தனர். எனவே, பிறகு அவர்கள் ரந்திதேவ மகாராஜனின் முன்னிலையில் தங்களது சுயரூபங்களை வெளிப்படுத்தினர்.
பதம் 9.21.16 : தேவர்களிடமிருந்து அடையப்படும் பெளதிக நன்மைகளை அனுபவிக்கும் ஆசை ரந்திதேவருக்கு இருந்ததில்லை. அவர்களுக்கு அவர் தமது வணக்கங்களை தெரிவித்துக் கொண்டார். ஆனால் உண்மையில் அவர் வாசுதேவராகிய பகவான் ஸ்ரீ விஷ்ணுவிடம் மிகவும் பற்றுக் கொண்டவராக இருந்ததால், அவர் தமது மனதை பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் பதித்தார்.
பதம் 9.21.17 : பரீட்சித்து மகாராஜனே, மகாராஜா ரந்திதேவர் எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் நிலைத்தவராகவும், பெளதிக ஆசைகளிலிருந்து விடுபட்டவராகவும் உள்ள ஒரு தூய பக்தராக இருந்ததால், பகவானின் மாயா சக்தியால் அவர் முன் நிலைத்திருக்க இயலவில்லை. அதற்கு மாறாக, மாயையானது ஒரு கனவுபோல் அவரிடமிருந்து முற்றிலும் மறைந்து போயிற்று.
பதம் 9.21.18 : ரந்திதேவ மகாராஜனின் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் அவரது கருணைக்குப் பாத்திரமாகி, பரமபுருஷராகிய பகவான் நாராயணரிடம் பற்றுக்கொண்ட தூய பக்தர்களாகவும், மிகச் சிறந்த யோகிகளாகவும் ஆகினர்.
பதங்கள் 9.21.19 – 9.21.20 : கர்கரிலிருந்து சினி என்ற ஒரு மகன் வந்தார். அவரது மகன் கார்கியர் எனப்படுவார். கார்கியர் ஒரு க்ஷத்திரியர் என்ற போதிலும், அவரிலிருந்து ஒரு பிராமண வம்சம் தோன்றியது. மஹாவீரியரிலிருந்து துரிதக்ஷயன் என்ற மகன் வந்தார். அவருடைய மகன்கள் திரய்யாருணி, கவி, புஷ்கராருணி ஆகியோராவர். துரிதக்ஷயரின் இம் மகன்கள் க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்தவர்கள் என்ற போதிலும், அவர்களும் பிராமணர்களின் அந்தஸ்தைப் பெற்றனர். பிரஹத்க்ஷத்ரருக்கு ஹஸ்தி என்ற ஒரு மகன் இருந்தார். அவர் ஹஸ்தினாபுரம் (இப்பொழுது புதுடில்லி) என்ற நகரை நிர்மாணித்தார்.
பதம் 9.21.21 : ஹஸ்தி மகாராஜனிலிருந்து அஜமீடன், துவிமீடன், புருமீடன் ஆகிய மூன்று மகன்கள் வந்தனர். பிரியமேதன் முதலான அஜமீடனின் வம்சத்தவர்கள் எல்லோரும் பிராமணர்களின் அந்தஸ்தைப் பெற்றனர்.
பதம் 9.21.22 : அஜமீடரிலிருந்து பிருஹதிஷு என்றொரு மகன் வந்தார். அவரிலிருந்து பிருஹத்தனு என்ற மகன் வந்தார். அவரிலிருந்து பிருஹத்காயர் என்ற மகன் வந்தார். பிருஹத்காயரிலிருந்து ஜயத்ரதன் என்ற மகன் வந்தார்.
பதம் 9.21.23 : ஐயத்ரதனின் மகன் விசதர். அவரது மகன் சியேனஜித். சியேனஜித்தின் மகன்கள் ருசிராஸ்வர், திருடஹனு, காசியர், வத்ஸர் ஆகியோராவர்.
பதம் 9.21.24 : ருசிராஸ்வரின் மகன் பாரர். பாரரின் மகன்கள் பிருத்துஸேனர், நீபர் ஆகியோராவர். நீபருக்கு நூறு மகன்கள் இருந்தனர்.
பதம் 9.21.25 : நீப மகாராஜன் சுகரின் மகளும், தன்மனைவியுமான கிருத்வியின் கர்பத்தில் பிஹ்மதத்தர் என்ற மகனைப் பெற்றார். சிறந்த யோகியான பிரஹ்மதத்தர் தன் மனைவியான சரஸ்வதியின் கர்பத்தில் விஷ்வக்ஷேனர் என்ற மகனைப் பெற்றார்.
பதம் 9.21.26 : விஷ்வக்ஷேனர், மாமுனிவரான ஜைகீஷவ்யரின் உபதேசங்களைப் பின்பற்றி, அஸ்டாங்க யோக முறையைப் பற்றிய விரிவான ஒரு வர்ணனையைத் தொகுத்தார். விஷ்வக்ஷேனரிலிருந்து உதக்ஷேனர் பிறந்தார். உதக்ஷேனரிலிருந்து பல்லாடர் பிறந்தார். இந்த மகன்களனைவரும் பிருஹதிஷுவின் வம்சத்தினர் எனப்படுகின்றனர்.
பதம் 9.21.27 : துவிமீடரின் மகன் யவீனரர். அவரது மகன் கிரிதிமான். கிரிதிமானின் மகன் ஸத்யதிருதி என்று புகழ்பெற்றவராவார். ஸத்யதிருதியிலிருந்து திருடனேமி என்ற மகன் வந்தார். அவர் சுபார்ஸ்வரின் தந்தையானார்.
பதங்கள் 9.21.28 – 9.21.29 : சுபார்ஸ்வரிலிருந்து சுமதி என்ற மகனும், சுமதியிலிருந்து சன்னதிமானும், சன்னதிமானிலிருந்து கிருதியும் வந்தனர். கிருதி பிரம்மாவிடமிருந்த யோக சக்தியைப் பெற்று, சாம வேதத்தின் பிராச்யஸாம சுலோகங்களைச் சேர்ந்த ஆறு சம்ஹிதைகளைக் கற்பித்தார். கிருதியின் மகன் நீபர். நீபரின் மகன் உத்கிராயுதர், அவரது மகன் க்ஷேம்யர். அவரது மகன் சுவீரர். சுவீரரின் மகன் ரிபுஞ்சயர்.
பதம் 9.21.30 : ரிபுஞ்சயரிலிருந்து பஹுரதர் என்ற மகன் வந்தார். புருமீடருக்கு மகனில்லை. அஜமீடருக்கு நளினீ என்ற அவரது மனைவியின் மூலமாக நீலன் என்ற ஒரு மகன் இருந்தார். நீலனின் மகன் சாந்தி.
பதங்கள் 9.21.31 – 9.21.33 : சாந்தியின் மகன் சுசாந்தி. அவரது மகன் புருஜன். அவரது மகன் அர்கன். அர்கனிலிருந்து பர்மியாஸ்வர் வந்தார். அவரிலிருந்து முத்கலர், யவீனரர், பிருஹத்விஸ்வர், காம்பில்லர், சஞ்சயர் ஆகிய ஐந்து மகன்கள் வந்தனர். பர்மியாஸ்வர் தன் மகன்களிடம், “எனதருமை மகன்களே, என்னுடைய ஐந்து இராஜ்யங்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் அதைச் செய்வதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது” என்று வேண்டினார். இவ்வாறாக அவரது ஐந்து மகன்களும் பாஞ்சாளர்கள் என்று அறியப்பட்டனர். முத்கலரிலிருந்து மௌத்கல்யர்கள் என்ற ஒரு பிராமண வம்சம் வந்தது.
பதம் 9.21.34 : பர்மியாஸ்வரின் மகனான முத்கலருக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணும் அடங்கிய இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். ஆண் குழந்தைக்கு திவோதாஸர் என்றும் பெண் குழந்தைக்கு அகலிகை என்றும் பெயரிடப்பட்டது. அகலிகையின் கணவரான கௌதமரின் விந்தின் மூலமாக அகலிகையின் கர்பத்திலிருந்து சதானந்தர் என்ற மகன் வந்தார்.
பதம் 9.21.35 : சதானந்தரின் மகன் சத்யதிருதி. அவர் வில் வித்தையில் நிபுணராவார். சத்யதிருதியின் மகன் சரத்வான். சரத்வான் ஊர்வசியை சந்தித்த பொழுது, அவரது விந்து வெளிப்பட்டு ஒரு நாணல்புல் கூட்டத்தின் மேல் விழுந்தது. அந்த விந்திலிருந்து சர்வ மங்களமுள்ள இரு குழந்தைகள் பிறந்தன. ஒன்று ஆண், மற்றது பெண்.
பதம் 9.21.36 : சாந்தனு மகாராஜன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றிருந்த போது, அங்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் கிடப்பதைக் கண்டார். அவர்கள்மீது இரக்கம் கொண்டு அவர்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இதன் காரணமாக, ஆண் குழந்தை கிருப என்று அறியப்பட்டது. பெண் குழந்தை கிருபி என்று பெயரிடப்பட்டது. கிருபி பிறகு துரோணாச்சார்யரின் மனைவியானாள்.