பதம் 9.20.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரத மகாராஜனின் வம்சத்தில் வந்த பரீட்சித்து மகாராஜனே, எந்த வம்சத்தில் நீர் பிறந்தீரோ, எதில் பல புனித அரசர்கள் தோன்றினரோ, எதிலிருந்து பல பிராமண வம்சங்கள் துவங்கினவோ, அந்த பூரு வம்சத்தை இப்பொழுது நான் விவரிக்கிறேன்.
பதம் 9.20.2 : இந்த பூரு வம்சத்திலிருந்து ஜனமேஜய மகாராஜன் பிறந்தார். ஜனமேஜயனின் மகன் பிரசின்வான். அவரது மகன் பிரவீரன். அதன் பிறகு, பிரவீரனின் மகன் மனுஷ்யு. மனுஷ்யுவிலிருந்து சாருபதன் என்ற மகன் வந்தார்.
பதம் 9.20.3 : சாருபதனின் மகன் சுத்யு. சுத்யுவின் மகன் பஹுகவன். பஹுகவனின் மகன் சம்யாதி. சம்யாதியிலிருந்து அஹம்யாதி என்ற ஒரு மகன் வந்தார். அவரிலிருந்து ரௌத்ராஸ்வன் பிறந்தார்.
பதங்கள் 9.20.4 – 9.20.5 : ரௌத்ராஸ்வனுக்கு ரிதேயு, கக்ஷேயு, ஸ்தண்டிலேயு, கிருதேயுகன், ஜலேயு, சன்னதேயு, தர்மேயு, சத்யேயு, விரதேயு மற்றும் வனேயு என்ற மகன்கள் இருந்தனர் வனேயு இளையவர். பிரபஞ்ச உயிரிலிருந்து உற்பத்தியாகும் பத்து புலன்களைப் போலவே, ரெள்த்ராஸ்வரின் இப்பத்து மகன்களும் அவரது முழு கட்டுப்பாட்டின்கீழ் செயற்பட்டனர். அவர்களனைவரும் கிருதாசி என்ற பெயருடைய அப்ஸரஸ்ஸிற்குப் பிறந்தவர்களாவர்.
பதம் 9.20.6 : ரிதேயுவிற்கு ரந்திதேவர் என்றொரு மகன் இருந்தார். அவருக்கு சுமதி, துருவன், அப்ரதிரதன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். அப்ரதிரதனுக்கு கண்வன் என்ற ஒரே ஒரு மகன் இருந்தார்.
பதம் 9.20.7 : கண்வரின் மகன் மேதாதிதி, பிரஸ்கன்னன் முதலான அவருடைய மகன்கள் எல்லோரும் பிராமணர்களாவர். ரந்திநாவரின் மகனான சுமதிக்கு, ரேபி, என்றொரு மகன் இருந்தார். துஷ்மந்த மகாராஜன் ரேபியின் மகன் என்று பிரசித்தி பெற்றவர்.
பதங்கள் 9.20.8 – 9.20.9 : ஒரு சமயம் துஷ்மந்த மகாராஜன் காட்டிற்கு வேட்டையாடச் சென்ற போது, மிகவும் களைத்துப் போய் கண்வ முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அங்கு ரமா தேவியைப் போல் மிகவும் அழகான ஒரு பெண்ணைக் கண்டார். அங்கு அவள் தன் பிரபையால் முழு ஆசிரமத்தையும் பிரகாசப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். இயல்பாகவே அவளது அழகால் கவரப்பட்ட அரசர், சில படை வீரர்களால் சூழப்பட்டபடி அவளிடம் சென்றார்.
பதம் 9.20.10 : அந்த அழகிய பெண்ணைக் கண்ட அரசர், வேட்டையாடிய களைப்பு நீங்கி, புத்துணர்வு பெற்றவரானார். காம வேட்கையின் காரணத்தால் அவளால் மிகவும் கவரப்பட்ட அவர், பரிகாசமாக பின்வருமாறு அவளிடம் வினவினார்.
பதம் 9.20.11 : தாமரைக் கண்களையுடைய அழகியே, நீ யார்? நீ யாருடைய மகள்? தனிமையான இந்த வனத்தில் உனக்கென்ன வேலை? நீ ஏன் இங்கு தங்கியிருக்கிறாய்?
பதம் 9.20.12 : ஓ பேரழகியே, நீ ஒரு க்ஷத்திரியரின் மகளாக இருக்க வேண்டுமென்று என் மனத்திற்குத் தோன்றுகிறது. நான் பூரு வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதால், என் மனம் எதையும் அதர்மமான முறையில் அனுபவிக்க முயன்றதேயில்லை.
பதம் 9.20.13 : சகுந்தலை கூறினாள்: நான் விஸ்வாமித்திரரின் மகளாவேன். என் தாய் மேனகை என்னை வனத்தில் விட்டுச் சென்றுவிட்டாள். வீரரே, மிகவும் சக்தி வாய்ந்த கண்வமுனிவர் இதைப்பற்றிய அனைத்தையும் அறிவார். இப்பொழுது நான் உங்களுக்கு எவ்வாறு சேவை செய்யக்கூடும் என்பதைக் கூறுங்கள்.
பதம் 9.20.14 : தாமரை இதழ்கள் போன்ற கண்களையுடைய அரசே, தயவு செய்து இங்கு வந்து அமர்ந்து எங்களால் அளிக்க முடிந்த உபசரணையை ஏற்றுக் கொள்ளுங்கள். எங்களிடம் “நீவாரா” சாதம் இருக்கிறது. அன்புடன் இதை ஏற்றுக் கொள்வீராக. மேலும் நீங்கள் விரும்பினால், தயக்கமின்றி இங்கு தங்கலாம்.
பதம் 9.20.15 : துஷ்மந்த மகாராஜன் பதில் கூறினார்: அழகிய புருவங்களுடைய சகுந்தலையே, நீ மாமுனிவரான விஸ்வாமித்திரரின் குடும்பத்தில் பிறந்திருக்கிறாய். உன்னுடைய வரவேற்பு உன் குலப் பெருமைக்குத் தகுதியுடையதாக உள்ளது. இதைத்தவிர, அரச குமாரிகள் பொதுவாக தங்களுடைய கணவன்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது தான் வழக்கம்.
பதம் 9.20.16 : துஷ்மந்த மகாராஜனின் திருமணப் பேச்சிற்கு பதிலாக சகுந்தலை மௌனம் சாதித்ததால், சம்மதம் பூர்த்தியடைந்தது. பிறகு, திருமண விதிகளை அறிந்திருந்த அந்த அரசர், கந்தர்வர்களுக்கு இடையில் நடைபெறும் திருமணச் சடங்கிற்கேற்ப, வேத பிரணவத்தை (ஓம்காரத்தை) உச்சரித்து உடனே அவளை மணந்து கொண்டார்.
பதம் 9.20.17 : பயனின்றி தன் வீரியத்தைச் செலவிடாத துஷ்மந்த மகாராஜன், இரவில் தன் ராணியான சகுந்தலையின் கர்பத்தில் தன் விந்துவைப் பாய்ச்சினார். காலையில் அவர் தன் அரண்மனைக்கு திரும்பிச் சென்றார். அதன் பிறகு உரிய காலத்தில் சகுந்தலை ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
பதம் 9.20.18 : அந்த வனத்தில் கண்வமுனிவர், புதிதாகப் பிறந்த குழந்தைக்குச் செய்ய வேண்டிய வேதச் சடங்குகளையெல்லாம் செய்தார். பின்னர் அச்சிறுவன் ஒரு சிங்கத்தைப் பிடித்து அதனுடன் விளையாடும் அளவிற்கு மிகுந்த சக்திசாலியாக மாறினான்.
பதம் 9.20.19 : அழகிய பெண்களிலேயே மிகச் சிறந்தவளான சகுந்தலை, ஜெயிக்க முடியாத பலமுடையவரும், பரமபுருஷரின் ஓர் அம்சமுமான தன் மகனுடன் தன் கணவரான துஷ்மந்தரை அணுகினாள்.
பதம் 9.20.20 : அந்த அரசர் குற்றமற்றவர்களான அவரது மனைவியையும் மகனையும் ஏற்க மறுத்துவிட்டார். அப்பொழுது, அங்கிருந்த அனைவரும் கேட்கும்படியாக ஓர் அசரீரி ஆகாயத்தில் ஒலித்தது.
பதம் 9.20.21 : அந்த அசரீரி கூறியது: துஷ்மந்த மகாராஜனே, ஒரு மகன் உண்மையில் அவனது தந்தைக்குச் சொந்தமானவன். ஆனால் அந்த தாயோ, ஒரு துருத்தியின் பையைப் போன்ற ஒரு பை மட்டுமே ஆவாள். தந்தையே மகனாகப் பிறக்கிறான் என்பது வேத வாக்காகும். எனவே சகுந்தலையை அவமதிக்காமல் உன் சொந்த மகனை நீ பராமரிக்க வேண்டும்.
பதம் 9.20.22 : துஷ்மந்த மகாராஜனே, எவன் விந்தைப் பாய்ச்சுகிறானோ அவனே உண்மையான தந்தையாவான். அவனுடைய மகன் அவனை யமராஜனின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறான். இச்சிறுவனை உண்டு பண்ணியவன் உண்மையில் நீதான். சகுந்தலை உண்மையைத்தான் பேசுகிறாள்.
பதம் 9.20.23 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: துஷ்மந்த மகாராஜன் மண்ணுலகை விட்டுப் பிரிந்ததும், அவரது மகன் ஏழு தீவுகளுக்கும் உரிமையாளராக, உலகச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார். அவர் இவ்வுலகில் பரமபுருஷரின் ஓர் அம்சமாகக் குறிப்பிடப்படுகிறார்.
பதங்கள் 9.20.24 – 9.20.26 : துஷ்மந்தரின் புத்திரரான பரத மகாராஜனின் வலது உள்ளங்கையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய சக்கரத்தின் அடையாளமும், அவரது உள்ளங்கால்களில் தாமரை வட்டத்தின் அடையாளமும் இருந்தன. மிகச் சிறந்த வேதக் கிரியைகளைச் செய்து பரம புருஷரை வழிபட்டதால் அவர் முழு உலகிற்கும் சக்கரவர்த்தியாகவும், எஜமானராகவும் ஆனார். பிறகு பிருகு முனிவரை புரோகிதராகக் கொண்டு, கங்கையின் முகத்துவாரத்திலிருந்து அதன் உற்பத்தி ஸ்தானம் வரையுள்ள கங்கைக் கரையில் அவர் ஐம்பத்தைந்து அசுவமேத யாகங்களைச் செய்தார். பிரயாகையில் நதிகள் கூடுமிடத்திலிருந்து, உற்பத்தி ஸ்தானம் வரையுள்ள யமுனைக்கரையில் அவர் எழுபத்தெட்டு அசுவமேத யாகங்களைச் செய்தார். அவர் மிகச் சிறந்த ஓரிடத்தில் யாக பீடத்தை அமைத்து, ஏராளமான செல்வத்தை பிராமணர்களுக்கு விநியோகித்தார். அவர் ஆயிரக்கணக்கான பிராமணர்களுள் ஒவ்வொருவருக்கும் ஒரு பத்வம் (13,084) பசுக்களை தானமாகக் கொடுத்தார்.
பதம் 9.20.27 : இவ்வாறாக துஷ்மந்த மகாராஜனின் மகனான பரதன், அந்த யாகங்களுக்காக மூவாயிரத்து முன்னூறு குதிரைகளைச் சேகரித்து மற்றெல்லா அரசர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவர் பரம குருவான ஸ்ரீ ஹரியை அடைந்தவராக இருந்ததால், அவருடைய ஐசுவரியம் ஐசுவரியத்தையும் மிஞ்சியதாக இருந்தது.
பதம் 9.20.28 : மஷ்ணாரம் என்ற யாகத்தை (அல்லது மஷ்ணாரம் என்ற இடத்தில் செய்யப்படும் ஒரு யாகத்தை) பரத மகாராஜன் செய்த போது, அவர் வெண் தந்தங்களுடனும், கருமை நிற உடல்களுடனும் கூடிய தங்க ஆபரணங்களால் முற்றிலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பதினான்கு இலட்சம் மிகச் சிறந்த யானைகளை தானம் செய்தார்.
பதம் 9.20.29 : (யாராலும் தன் கைகளால் சுவர்க்க லோகங்களைத் தொட முடியாது என்பதால்) எப்படி ஒருவனால் தன் சொந்த கரங்களின் பலத்தினாலேயே சுவர்க்க லோகங்களை அணுக முடியாதோ அப்படியே, பரத மகாராஜனின் அற்புதச் செயல்களை யாராலும் செய்து காட்ட முடியாது. இத்தகைய செயல்களைக் கடந்த காலத்தில் எவராலும் செய்ய இயலவில்லை, எதிர்காலத்திலும் எவராலும் செய்யமுடியாது.
பதம் 9.20.30 : பரத மகாராஜன் தமது சுற்றுப்பிரயாணத்தின் போது, கிராதர்கள், ஹூணர்கள், யவனர்கள், பௌண்ட்ரகரர்கள், கங்கர்கள், கசர்கள், சகர்கள் மற்றும் வேதக் கொள்கையான பிராமண பண்பாட்டை எதிர்த்த அரசர்கள் ஆகிய அனைவரையும் வென்றார் அல்லது கொன்றார்.
பதம் 9.20.31 : முன்பு, தேவர்களை வெற்றி கொண்ட அசுரர்கள், ரஸாதளம் என்ற கீழுலகங்களைத் தஞ்சமடைந்தனர். பிறகு தேவர்களின் மனைவிகளையும், புதல்விகளையும் கூட அங்கு கொண்டு வந்தனர். ஆனால் பாத மகாராஜன் அப்பெண்களையெல்லாம் அவர்களது சகாக்களுடன் அசுரர்களின் பிடியிலிருந்து விடுவித்து, அவர்களை தேவர்களிடம் ஒப்படைத்தார்.
பதம் 9.20.32 : பரத மகாராஜன் இருபத்தேழாயிரம் ஆண்டுகளுக்குத் தேவையான அனைத்தையும், இந்த மண்ணுலகிலும், சுவர்க்கலோகங்களிலும் உள்ள தமது பிரஜைகளுக்கு வழங்கினார். அவர் தமது உத்தரவுகளைப் பரப்பி, தமது வீரர்களை எல்லாத் திசைகளிலும் பிரித்தனுப்பினார்.
பதம் 9.20.33 : பரத மகாராஜன் முழு பிரபஞ்சத்திற்கும் சக்கரவர்த்தி என்பதால், அவர் பேரரசுக்குரிய ஐசுவரியங்களையும், வெல்லுதற்குரிய வீரர்களையும் பெற்றிருந்தார். அவருக்கு அவரது குடும்பமும், மகன்களுமே வாழ்வில் அனைத்துமாகத் தெரிந்தது. ஆனால் இறுதியில் ஆன்மீக முன்னேற்றத்திற்கு இவையெல்லாம் வெறும் தடைக்கற்களே என்று அவர் எண்ணியதால் அவற்றை அனுபவிப்பதை நிறுத்திவிட்டார்.
பதம் 9.20.34 : பரீட்சித்து மகாராஜனே, பரத மகாராஜனுக்கு விதர்ப தேசத்து அரசரின் புதல்விகளான மூன்று பிரியமான மனைவிகள் இருந்தனர். அம்மூவரும் குழந்தைகள் பெற்று, அக்குழந்தைகள் அரசரை ஒத்திருக்காததால், அரசர் தங்களை நேர்மை கெட்ட ராணிகள் என்று கருதி தங்களை விலக்கிவிடுவாரோ என்றெண்ணியதால் அவர்கள் தங்களுடைய சொந்த மகன்களையே கொன்றுவிட்டனர்.
பதம் 9.20.35 : குழந்தை பெறும் தமது முயற்சி தோல்வியடைந்ததைக் கண்ட அரசர், ஒரு மகனைப் பெறுவதற்கு மருத்-தோமம் என்ற யாகத்தை நடத்தினார். அவரிடம் பூரணத் திருப்தியடைந்து மருக்கள் எனப்படும் தேவர்கள், அவருக்கு பரத்வாஜர் என்ற பெயருடைய ஒரு மகனை அளித்தனர்.
பதம் 9.20.36 : பிருஹஸ்பதி என்ற தேவர், கர்பவதியாக இருந்த தன் சகோதரனின் மனைவியான மமதாவினால் கவரப்பட்டு, அவளுடன் உடலுறவு கொள்ள விரும்பினார். அவளது கர்பத்திலிருந்த மகன் இதைத்தடுத்ததால், பிருஹஸ்பதி அவனைச் சபித்துவிட்டு பலவந்தமாக மமதாவின் கர்பத்திற்குள் விந்துவைப் பாய்ச்சினார்.
பதம் 9.20.37 : மமதா முறைதவறிப் பிறந்த ஒரு மகனைப் பெற்றதற்காக, தன் கணவரால் நிராகரிக்கப்படுவோமோ என்று மிகவும் அஞ்சினாள். எனவே அக்குழந்தையை விட்டு விடுவதென்று அவள் முடிவு செய்தாள். ஆனால் அக்குழந்தைக்கு ஒரு பெயரைச் சூட்டி அந்த பிரச்சினையை தேவர்கள் தீர்த்து வைத்தனர்.
பதம் 9.20.38 : பிருஹஸ்பதி மமதாவிடம் பின்வருமாறு கூறினார்: “முட்டாள் பெண்ணே இக்குழந்தை ஒரு மனிதனின் மனைவியிலிருந்து மற்றொரு மனிதனின் விந்துவின் மூலமாகப் பிறந்தது என்றாலும், நீதான் இக்குழந்தையைப் பராமரிக்க வேண்டும்”. இதைக்கேட்ட மமதா, ‘ஓ பிருஹஸ்பதி, நீங்கள்தான் இவனைப் பராமரிக்க வேண்டும்!” என்று பதிலளித்தாள். இவ்வாறு பேசியபின் பிருஹஸ்பதியும், மமதாவும் அங்கிருந்து சென்று விட்டனர். இவ்வாறாக அக்குழந்தை பரத்வாஜன் என்று அறியப்பட்டது.
பதம் 9.20.39 : அக்குழந்தையைப் பராமரிக்கும்படி தேவர்களால் மமதா தூண்டப்பட்ட போதிலும், அக்குழந்தையின் தகாத பிறப்பின் காரணத்தால் அவனை உபயோகமற்றவனாக அவள் கருதினாள். எனவே அவள் அக்குழந்தையை விட்டுச் சென்றுவிட்டாள். இதனால் மருத்கள் எனப்படும் தேவர்கள் அக்குழந்தையைப் பராமரித்து வந்தனர். பிறகு பரத மகாராஜன் ஒரு குழந்தை இல்லாமல் ஏமாற்றமடைந்த பொழுது இக்குழந்தை அவருடைய மகனாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.