அத்தியாயம் – 19
யயாதி மகாராஜன் முக்தியடைதல்
பதம் 9.19.1
ஸ்ரீ-சுக உவாச
ஸ இத்தம் ஆசரன் காமான் ஸ்தரைணோ ‘பஹ்னவம் ஆத்மன:
புத்வா ப்ரியாயை நிர்விண்ணோ காதாம் ஏதாம் அகாயத
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸ:— யயாதி மகாராஜன்; இத்தம்—இவ்விதமாக; ஆசரன்—நடந்து கொண்டு; காமான்—காம இச்சைகளின் விஷயத்தில்; ஸ்த்ரைண:—பெண்களிடம் அதிக பற்றுக் கொண்டிருந்தார்; அபஹ்னவம்—எதிரிடையான செயல்; ஆத்மன:—அவரது சொந்த நன்மையை; புத்வா—புத்தியால் அறிந்து; ப்ரியாயை—பிரிய மனைவியான தேவயானியிடம்; நிர்விண்ண:—வெறுப்புக் கொண்டு; காதாம்—கதையை; ஏதாம்—(பின்வருமாறு) இதை; அகாயத—விவரித்தார்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, யயாதி பெண்களிடம் மிகவும் பற்றுக் கொண்டிருந்தார். ஆனால் காலப் போக்கில் காம சுகத்திலும் அதன் கெட்ட விளைவுகளிலும் வெறுப்புக் கொண்ட அவர், இந்த வாழ்வு முறையைத் துறந்து, பின்வரும் கதையைத் தன் பிரிய மனைவியிடம் விவரித்தார்.
பதம் 9.19.2
ஸ்ருணு பார்கவி அமூம் காதாம் மத்-விதாசரிதாம் புவி
தீரா யஸ்யானுசோசந்தி வனே க்ராம-நிவாஸின:
ஸ்ருணு—தயவுசெய்து கேள்; பார்கவி—சுக்ராசாரியரின் மகளே; அமூம்—இந்த; காதாம்—சரித்திரத்தை; மத்-விதா—என்னுடைய நடத்தையை ஒத்த; ஆசரிதாம்—நடத்தை; புவி—இவ்வுலகினுள்; தீரா:—நிதான புத்தியுடையவர்கள்; யஸ்ய—எவரின்; அனுசோசத்தி—மிகவும் வருத்தப்படுவார்கள்; வனே—வனத்தில்; க்ராம-நிவாசின:—பௌதிக சுகத்தில் அதிக பற்றுடைய.
பிரியமுள்ள மனைவியே, சுக்ராசாரியரின் மகளே, இவ்வுலகில் என்னைப் போலவே ஒருவன் இருந்தான். அவனுடைய வாழ்க்கைச் சரித்திரத்தைக் கூறுகிறேன் கேள். இத்தகைய ஒரு குடும்பஸ்தனின் வாழ்வைப் பற்றிக் கேட்பதன் மூலமாக, இல்லற வாழ்விலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எப்பொழுதும் வருத்தப்படுவார்கள்.
பதம் 9.19.3
பஸ்த ஏகோ வனே கஸ்சித் விசின்வன் ப்ரியம் ஆத்மன:
ததர்ச கூபே பதிதாம் ஸ்வ-கர்ம-வசகாம் அஜாம்
பஸ்த:—ஆடு; ஏக:—ஒரு; வனே—ஒரு வனத்தில்; கஸ்சித்—சில; விசின்வன்—உணவு தேடிக்கொண்டு; ப்ரியம்—மிகப்பிரியமான; ஆத்மன:—தனக்கு; ததர்ச—தற்செயலாகக் கண்டது; கூபே—ஒரு கிணற்றில்; பதிதம்—விழுந்து கிடப்பதை; ஸ்வ-கர்ம-வச-காம்—கர்ம விளைவுகளின் ஆதிக்கத்தின்கீழ்; அஜாம்—ஒரு பெண்ணாடு.
தன் புலன்களை திருப்திப்படுவதற்காக ஓர் ஆண் ஆடு சாப்பிட்டுக் கொண்டே, தற்செயலாக ஒரு கிணற்றருகில் சென்றது. கர்ம பலன்களின் ஆதிக்கத்தினால் தூண்டப்பட்ட ஒரு பெண்ணாடு அக்கிணற்றில் விழுந்து நிராதரவாக நின்று கொண்டிருப்பதைக் கண்டது.
பதம் 9.19.4
தஸ்யா உத்தரணோபாயம் பஸ்த: காமீ விசிந்தயன்
வ்யதத்த தீர்த்தம் உத்ருத்ய விஷாணாக்ரேண ரோதஸீ
தஸ்யா:—அந்த பெண்ணாட்டை; உத்தரண-உபாயம்—(கிணற்றிலிருந்து) காப்பாற்றும் உபாயத்தை; பஸ்த:—அந்த ஆண் ஆடு; காமீ—காம இச்சைகளுடைய; விசிந்தயன்—திட்டமிட்டு; வ்யதத்த—நிறைவேற்றியது; தீர்த்தம்—வெளியே வருவதற்கான ஒரு வழியை; உத்ருத்ய—மண்ணைத் தோண்டி; விஷாண-அக்ரேண—கொம்புகளின் நுனிகளால்; ரோதஸீ—கிணற்றின் விளிம்பில்.
அந்த பெண்ணாட்டைக் கிணற்றிலிருந்து வெளியேற்றும் உபாயத்தைத் திட்டமிட்டபின், அது சுலபமாக வெளியேறும் வகையில், காம இச்சை கொண்ட அந்த ஆண் ஆடு தன் கொம்புகளின் முனைகளால் கிணற்றின் விளிம்பில் மண்ணைத் தோண்டியது.
பதங்கள் 9.19.5 – 9.19.6
ஸோத்தீர்ய குபாத் ஸுஸ்ரோணீ தம் ஏவ சகமே கில
தயா வ்ருதம் ஸமுத்வீக்ஷ்ய பஹ்வ்யோ ‘ஜா: காந்த-காமினீ:
பீவானம் ஸ்மஸ்ருலம் ப்ரேஷ்டம் மீட்வாம்ஸம் யாப-கோவிதம்
ஸ ஏகோ ‘ஜவ்ருஷஸ் தாஸாம் பஹ்வீனாம் ரதி-வர்தன:,br> ரேமே காம-க்ரஹ-க்ரஸ்த ஆத்மானம் நாவபுத்யத
ஸா—அந்த பெண்ணாட்டை; உத்தீர்ய—வெளியேற்றி; குபாத்—கிணற்றிலிருந்து; ஸு-ஸ்ரோணீ—அழகிய இடைகளை உடைய; தம்—ஆண் ஆட்டிடம்; ஏவ—உண்மையில்; சகமே—தன் கணவனாகப் பெற விரும்பியது; கில—உண்மையாகவே; தயா—அதனால்; வ்ருதம்—ஏற்கப்பட்டதை; ஸமுத்வீக்ஷ்ய—கண்ட; பஹ்வ்ய:—வேறு பல; அஜா:—பெண்ணாடுகள்; காந்த-காமினீ:—ஆண் ஆட்டைத் தங்கள் கணவனாக அடைய விரும்பி; பீவனாம்—அதிக பலமும், உறுதியும்; ஸ்மஸ்ருலம்—அழகிய மீசையும், தாடியும் உள்ள; ப்ரேஷ்டம்—முதல்தரமான; மீட்வாம்ஸம்—விந்து பாய்ச்சும் திறமையும்; யாப-கோவிதம்—உடலுறவுக் கலையில் திறமையும்; ஸ:—அந்த ஆண் ஆடு; ஏக:—தனியாக; அஜ-வ்ருஷ:—ஆடுகளின் நாயகனாக; தாஸாம்—எல்லாப் பெண்ணாடுகளின்; பஹ்வீனாம்—பெரும் எண்ணிக்கையுள்ள; ரதி-வர்தன:—காம இச்சையை அதிகரிக்க இயலும்; ரேமே—அது அனுபவித்தது; காம-க்ரஹ-க்ரஸ்த:—காம இச்சையெனும் பேய் பிடித்து; ஆத்மானம்—அதன் சொந்த ஆத்மாவை; ந—இல்லை; அவபுத்யத—புரிந்துகொள்ள முடிந்தது.
அழகிய இடைகளுடைய அந்த பெண்ணாடு கிணற்றிலிருந்து வெளியேறி, மிகவும் அழகான அந்த ஆண் ஆட்டைக் கண்டு, அதையே தன் கணவனாக ஏற்றுக்கொள்ள விரும்பியது. பெண்ணாடு அப்படிச் செய்ததும், ஆண் ஆட்டின் அழகிய தேக அமைப்பையும், அழகிய தாடி மீசைகளையும், விந்து பாய்ச்சும் திறமையையும், உடலுறவு கலையில் உள்ள திறமையையும் கண்டு வேறு பல பெண்ணாடுகளும் அதையே தங்கள் கணவனாக ஏற்க விரும்பின. எனவே, பேய் பிடித்தவன் வெறித்தனத்தைக் காட்டுவது போல், பல பெண்ணாடுகளால் கவரப்பட்ட அச்சிறந்த ஆணாடு, காமக் கேளிக்கைகளில் ஈடுபட்டு, இயல்பாகவே தனது உண்மையான கடமையாகிய தன்னுணர்வை மறந்தது.
பதம் 9.19.7
தம் ஏவ ப்ரேஷ்டதமயா ரமமாணம் அஜான்யயா
விலோக்ய கூப-ஸம்விக்னா நாம்ருஷ்யத் பஸ்த-கர்ம தத்
தம்—அந்த ஆண் ஆடு; ஏவ—உண்மையில்; ப்ரேஷ்டதமயா—பிரியமுள்ள; ரமமாணம்—உடலுறவில் ஈடுபட்டிருப்பதை; அஜா—அந்த பெண்ணாடு; அன்யயா—வேறொரு பெண்ணாட்டுடன்; விலோக்ய—கண்டதால்; கூப-ஸம்விக்னா—கிணற்றில் விழுந்த பெண்ணாடு; ந—இல்லை; அம்ருஷ்யத்—பொறுத்துக்கொண்டது; பஸ்த-கர்ம—ஆட்டின் வேலையை; தத்—அதை (உடலுறவு, ஆட்டின் தொழிலாக இங்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது).
கிணற்றில் விழுந்த அந்த பெண்ணாடு, தன் பிரியமுள்ள ஆண் ஆடு மற்றொரு பெண்ணாட்டுடன் உடலுறவு கொள்வதைக் கண்டதும், அந்த ஆட்டின் செயல்களை அதனால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.
பதம் 9.19.8
தம் துர்ஹ்ருதம் ஸுஹ்ருத்-ரூபம் காமினம் க்ஷண-ஸௌஹ்ருதம்
இந்ரியாராமம் உத்ஸ்ருஜ்ய ஸ்வாமினம் துஹ்கிதா யயௌ
தம்—அதை (ஆண் ஆட்டை); துர்ஹ்ருதம்—கொடூர இதயமுள்ள; ஸுஹ்ருத்-ரூபம்—ஒரு நண்பன் போல் பாசாங்கு செய்து; காமினம்—மிகவும் காம இச்சையுள்ள; க்ஷண-ஸௌஹ்ருதம்—தற்காலிகமாக நட்புக் கொண்டிருந்தது; இந்ரிய-ஆராமம்—புலன்நுகர்வில் அல்லது சிற்றின்பத்தில்; உத்ஸ்ருஜ்ய—கைவிட்டு; ஸ்வாமினம்—தற்போதைய கணவனிடம் அல்லது முந்திய காவலரிடம்; துஹ்கிதா—மிகவும் வருத்தப்பட்டு; யயௌ—அது திரும்பிச் சென்றது.
மற்றொரு பெண் ஆட்டுடனான தன் தலைவனின் நடத்தையைக் கண்டு வருத்தப்பட்ட பெண் ஆடு, உண்மையில் அந்த ஆண் ஆடு தன் நண்பனல்ல என்றும், கடினமான இதயமுள்ளது என்றும், தற்காலிகமாக மட்டுமே தன் நண்பனாக இருந்தது என்றும் எண்ணியது. எனவே, அதன் கணவன் காம இச்சை கொண்டிருந்த காரணத்தால், அது அந்த ஆண் ஆட்டை விட்டுவிட்டு தன்னுடைய முந்திய காவலரிடம் சென்றது.
பதம் 9.19.9
ஸோ ‘பி சானுகத: ஸ்த்ரைண: க்ருபணஸ் தாம் ப்ரஸாதிதும்
குர்வன் இடவிடா-காரம் நாசக்னோத் பதி ஸந்திதும்
ஸ:—அந்த ஆண் ஆடு; அபி—கூட; ச—மேலும்; அனுகத:—பெண் ஆட்டைப் பின்தொடர்ந்து; ஸத்ரைண:—மனைவிக்கு அடங்கி நடக்கும்; க்ருபண:—பரிதாபகரமான; தாம்—அதை (பெண் ஆட்டை); ப்ரஸாதிதும்—திருப்திப்படுத்த; குர்வன்—செய்து; இடவிடா-காரம்—ஆடுகளின் பாஷையில் ஓர் உச்சரிப்பை; ந—இல்லை; அசக்னோத்—முடிந்தது; பதி—சாலையில்; ஸந்திதும்—திருப்திப்படுத்த.
மனைவிக்கு அடங்கிய அந்த ஆண் ஆடு, மிகவும் வருத்தத்துடன் சாலையில் அந்த பெண் ஆட்டைப் பின்தொடர்ந்து சென்று அதை முகத்துதி செய்ய முயன்றது. ஆனால் ஆண் ஆட்டினால் அதை திருப்திப்படுத்த இயலவில்லை.
பதம் 9.19.10
தஸ்ய தத்ர த்விஜ: கஸ்சித் அஜா-ஸ்வாமி அச்சினத் ருஷா
லம்பந்தம் வ்ருஷணம் பூய: ஸந்ததே ‘ர்தாய யோகவித்
தஸ்ய—ஆண் ஆட்டின்; தத்ர—அதன்பிறகு; த்விஜ:—பிராமணர்; கஸ்சித்—ஏதோ ஒரு; அஜா-ஸ்வாமீ—மற்றொரு பெண் ஆட்டைப் பராமரிப்பவர்; அச்சினத்—காயடித்து வீரியமற்றதாக்கினார்; ருஷா—கோபத்தால்; லம்பந்தம்—நீண்ட; வ்ருஷணம்—பீஜங்களை (காய்களை); பூய:—மீண்டும்; ஸந்ததே—இணைத்தார்; அர்த்தாய—சொந்த நன்மைக்காக; யோக-வித்—யோக சக்தியில் வல்லவரான.
அந்த பெண் ஆடு, மற்றொரு பெண் ஆட்டைப் பராமரித்து வந்த ஒரு பிராமணரின் வசிப்பிடத்திற்குச் சென்றது. அந்த பிராமணரும் கோபங்கொண்டு அந்த ஆண் ஆட்டின் தொங்கும் பீஜங்களைத் துண்டித்து விட்டார். ஆனால் அந்த ஆண் ஆடு வேண்டிக் கொண்டதால், அந்த பிராமணர் பிறகு தனது யோக சக்தியினால் அவற்றை மறுபடியும் இணைத்தார்.
பதம் 9.19.11
ஸம்பத்த-வ்ருஷண: ஸோ ‘பி ஹி அஜயா கூப-லப்தயா
காலம் பஹு-திதம் பத்ரே காமைர் நாத்யாபி துஷ்யதி
ஸம்பத்த-வ்ருஷண:—அதன் பீஜங்கள் மீண்டும் இணைக்கப்பட்டதும்; ஸ:—அது; அபி—கூட; ஹி—உண்மையில்; அஜயா—பெண் ஆட்டுடன்; கூப-லப்தயா—கிணற்றிலிருந்து அது பெற்ற; காலம்—காலத்திற்கு; பஹு-திதம்—மிக நீண்ட; பத்ரே—அருமை மனைவியே; காமை:—இத்தகைய காம இச்சைகளால்; ந—இல்லை; அத்ய அபி—இன்றுவரை; துஷ்யதி—திருப்தியடைந்தது.
அருமை மனைவியே, தன் பீஜங்களை திரும்பப்பெற்ற அந்த ஆண் ஆடு, கிணற்றிலிருந்து தான் பெற்ற பெண் ஆட்டுடன் சுகம் அனுபவித்தது. அது பற்பல ஆண்டுகள் இவ்வாறு சுகம் அனுபவித்த போதிலும், இன்றுவரை அது முழுமையாக திருப்தியடையவில்லை.
பதம் 9.19.12
ததாஹம் க்ருபண: ஸுப்ரு பவத்யா: ப்ரேம—யந்த்ரித:
ஆத்மானம் நாபிஜானாமி மோஹிதஸ் தவ மாயயா
ததா—அந்த ஆண் ஆட்டைப் போலவே; அஹம்—நான்; க்ருபன:—வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றிய அறிவில்லாத ஒரு ஏழையாவேன்; ஸு-ப்ரு—அழகிய புருவங்களுடைய என் மனைவியே; பவத்யா:—உன்னுடைய சகவாசத்தில்; ப்ரேம-யந்த்ரித:—உண்மையில் அது காமம் தான் என்றாலும், அன்பினால் கட்டப்பட்டது போல்; ஆத்மானம்—தன்னுணர்வு (நான் யார், என் கடமை என்ன); ந அபிஜானாமி—இன்றுவரை என்னால் உணர இயலவில்லை; மோஹித:—மோகவசப்பட்டு; தவ—உன்னுடைய; மாயயா—கவர்ச்சியான பௌதிக அம்சத்தினால்.
அழகிய புருவமுடைய பிரிய மனைவியே, நான் அந்த ஆண் ஆட்டைப் போன்றவன். ஏனெனில் சிறுமதி படைத்த நான் உன்னுடைய அழகினால் கவரப்பட்டு, தன்னுணர்வெனும் உண்மையான கடமையை மறந்துவிட்டேன்.
பதம் 9.19.13
யத் ப்ருதிவ்யாம் வ்ரீஹி-யவம் ஹிரண்யம் பசவ: ஸ்த்ரிய:
ந துஹ்யந்தி மன:-ப்ரீதிம் பும்ஸ: காம ஹதஸ்ய தே
யத்—என்ன; ப்ருதிவ்யாம்—இவ்வுலகிலுள்ள; வ்ரீஹி—உணவுத் தானியங்கள், அரிசி; யவம்—வால் கோதுமை (பார்லி); ஹிரண்யம்—தங்கம்; பசவ:—மிருகங்கள்; ஸ்த்ரிய:—மனைவிகள் அல்லது மற்ற பெண்கள்; ந துஹ்யந்தி—கொடுக்காது; மன:-ப்ரீதிம்—மன திருப்தியை; பும்ஸ:—ஒருவனுக்கு; காம-ஹதஸ்ய—காம இச்சைகளுக்கு அடிமையாகும் காரணத்தால்; தே—அவை.
ஒருவனுக்கு அரிசி, பார்லி, மற்ற உணவுத் தானியங்கள், தங்கம், மிருகங்கள் மற்றும் பெண்கள் உட்பட, இவ்வுகிலுள்ள அனைத்தும் வேண்டிய அளவுக்கு இருந்தாலும், காம இச்சையுள்ளவனுக்கு மனத்திருப்தி இருக்காது. எதுவுமே அவனை திருப்திப்படுத்தாது.
பதம் 9.19.14
ந ஜாது காம: காமானாம் உபபோகேன சாம்யதி
ஹவிஷா க்ருஷண-வர்த்மேவ பூய ஏவாபிவர்ததே
ந—இல்லை; ஜாது—எச்சமயத்திலும்; காம:—காம இச்சைகள்; காமானம்—மிகவும் காம இச்சை கொண்டவர்களின்; உபபோகேன—காம இச்சைகளை அனுபவிப்பதால்; சாம்யதி—சாந்தப்படுத்த முடியும்; ஹவிஷா—வெண்ணெய் ஊற்றுவதால்; க்ருஷ்ண-வர்த்மா—தீ; இவ—போல்; பூய:—மீண்டும், மீண்டும்; ஏவ—உண்மையில்; அபிவர்ததே—மேலும் அதிகரிக்கிறது.
நெருப்பில் நெய்யை ஊற்றுவதானது நெருப்பைக் குறைக்காது, மாறாக அதை அதிகப்படுத்தும். காம இச்சைகளைத் தொடர்ந்து அனுபவிப்பதன் மூலம் அதை நிறுத்தும் முறை ஒருபோதும் வெற்றியடையாது. (உண்மையில், ஒருவன் தானாக முன்வந்து பெளதிக ஆசைகளை நிறுத்த வேண்டும்.)
பதம் 9.19.15
யதா ந குருதே பாவம் ஸர்வ-பூதேஷ்வ் அமங்கலம்
ஸம-த்ருஷ்டேஸ் ததா பும்ஸ: ஸர்வா: ஸுகமயா திச:
யதா—எப்பொழுது; ந குருதே—இல்லையோ; பாவம்—பற்று அல்லது பொறாமைக்கு வேறுபட்ட ஒரு மனோபாவம்; ஸர்வ-பூதேஷு—எல்லா ஜீவன்களுக்கும்; அமங்கலம்—அமங்கலம்; ஸம-த்ருஷ்டே—சமமான மனநிலையில் இருப்பதால்; ததா—அப்பொழுது; பும்ஸ:—நபரின்; ஸர்வா:—எல்லா; ஸுக-மயா:—மகிழ்ச்சியான ஒருநிலையில்; திச:— திசைகளும்.
ஒரு மனிதன் பொறாமை கொள்ளாதவனாகவும், யாருக்கும் துரதிர்ஷ்டத்தை விரும்பாதவனாகவும் இருந்தால், அவன் சமநிலையுடையவனாக இருக்கிறான். அத்தகைய ஒருவருக்கு, எல்லா திசைகளும் மகிழ்ச்சியாகத் தோன்றும்.
பதம் 9.19.16
யா துஸ்த்யஜா துர்மதிபிர் ஜீர்யதோ யா ந ஜீர்யதே
தாம் த்ருஷ்ணாம் துஹ்க-நிவஹாம் சர்ம-காமோ த்ருதம் த்யஜேத்
யா—எது; துஸ்த்யஜா—விடுவதற்கு மிகக் கடினமானதோ; துர்மதிபி:—பௌதிக சுகத்தில் அளவுக்கதிகமாக பற்றுக் கொண்டவர்களால்; ஜீர்யத:—முதுமையினால் பலமிழந்த ஒருவனால் கூட; யா—எது; ந—இல்லை; ஜீர்யதே—அழிந்துவிடுகிறது; தாம்—இத்தகைய; த்ருஷ்ணாம்—ஆசை; துஹ்க-நிவஹாம்—எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணமான; சர்ம-காம:—தன் சொந்த மகிழ்ச்சியை விரும்புபவன்; த்ருதம்—மிக விரைவில்; த்யஜேத்—கைவிட வேண்டும்.
பெளதிக சுகத்தில் அளவுக்கதிகமாக பற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு, புலன்நுகர்வைக் கைவிடுவது மிகக் கடினம். முதுமையினால் பலமிழந்த நிலையில் இருக்கும் பொழுது கூட ஒருவனால் இத்தகைய புலன்நுகர்வு ஆசைகளைக் கைவிட முடியாது. எனவே, உண்மையில் மகிழ்ச்சியை விரும்பும் ஒருவன், எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணமான இத்தகைய திருப்தியடையாத ஆசைகளைக் கைவிட வேண்டும்.
பதம் 9.19.17
மாத்ரா ஸ்வஸ்ரா துஹித்ரா வா நாவிவிக்தாஸனோ பவேத்
பலவான் இந்ரிய-க்ராமோ வித்வாம்ஸம் அபி கர்ஷதி
மாத்ரா—தன் தாயுடனோ; ஸ்வஸ்ரா—தன் சகோதரியுடனோ; துஹித்ரா—தன் சொந்த மகளுடனோ; வா—அல்லது; ந—கூடாது; அவிவிக்த-ஆஸன:—ஒரே ஆசனத்தில் நெருக்கமாக அமர்ந்து; பவேத்—இருக்க வேண்டும்; பலவான்—மிகவும் பலமுள்ளவை; இந்ரிய-க்ராம:—புலன்களின் தொகுதி; வித்வாம்ஸம்—மிகவும் கற்றறிந்த, முன்னேற்றமடைந்த ஒருவன்; அபி—கூட; கர்ஷதி—சலனமடைகிறான்.
புலன்கள் மிகவும் வலிமையுள்ளவை என்பதால், முதிர்ந்த அறிவுள்ளவன் கூட உடலுறவினால் கவரப்படக்கூடும். எனவே ஒருவன் தன் சொந்த தாயுடனோ, சகோதரியுடனோ அல்லது மகளுடனோகூட ஒரே ஆசனத்தில் அமர தன்னை அனுமதிக்கக் கூடாது.
பதம் 9.19.18
பூர்ணம் வர்ஷ-ஸஹஸ்ரம் மே விஷயான் ஸேவதோ ‘ஸக்ருத்
ததாபி சானுஸவனம் த்ருஷ்ணா தேஷூபஜாயதே
பூர்ணம்—முழுமையாக; வர்ஷ-ஸஹஸ்ரம்—ஆயிரம் ஆண்டுகள்; மே—எனது; விஷயான்—விஷய சுகம்; ஸேவத:—அனுபவித்து; அஸக்ருத்—இடைவிடாமல்; ததா அபி—எனினும்; ச—உண்மையில்; அனுஸவனம்—மேன்மேலும்; த்ருஷ்ணா—காம இச்சைகளில்; தேஷு—விஷய சுகத்திலுள்ள; உபஜாயதே—பெருகிக் கொண்டே போகிறது.
முழுமையாக ஆயிரம் ஆண்டுகளை நான் விஷய சுகத்தை அனுபவிப்பதில் கழித்துள்ளேன். எனினும், இத்தகைய சுகத்தை அனுபவிப்பதிலுள்ள என் ஆசை தினமும் பெருகிக் கொண்டே போகிறது.
பதம் 9.19.19
தஸ்மாத் ஏதாம் அஹம் த்யக்த்வா ப்ரஹ்மணி அத்யாய மானஸம்
நிர்த்வந்வோ நிரஹங்காரஸ் ச்சரிஷ்யாமி ம்ருகை: ஸஹ
தஸ்மாத்—எனவே; ஏதாம்—காம விவகாரங்களிலுள்ள இத்தகைய உறுதியான ஆசைகளை; அஹம்—நான்; த்யக்த்வா—கைவிட்டு; ப்ரஹ்மணி—பரப்பிரம்மனின் மீது; அத்யாய—பதித்து; மானஸம்—மனதை; நிர்த்வந்வ:—இருமையின்றி; நிரஹங்கார:—பொய் அகங்காரத்தின் அடையாளமின்றி; சரிஷ்யாமி—நான் வனத்தில் சஞ்சரிப்பேனாக; ம்ருகை: ஸஹ—வன விலங்குகளுடன்.
எனவே, இப்பொழுது நான் இந்த ஆசைகளையெல்லாம் கைவிட்டு, பரமபுருஷரை தியானிப்பேனாக. மனதால் இட்டுக்கட்டப்படும் இருமைகளிலிருந்தும், பொய் அகங்காரத்திலிருந்தும் விடுபட்டு, நான் வன விலங்குகளுடன் வனத்தில் சஞ்சரிப்பேனாக.
பதம் 9.19.20
த்ருஷ்டம் ஸ்ருதம் அஸத் புத்வா நானுத்யாயேன் ந ஸந்திசேத்
ஸம்ஸ்ருதிம் சாத்ம-நாசம் ச தத்ர வித்வன் ஸ ஆத்ம-த்ருக்
த்ருஷ்டம்—தற்போதைய வாழ்வில் நாம் அனுபவிக்கும் பெளதிக சுகம்; ஸ்ருதம்—(இப்பிறவியிலோ, அடுத்ததிலோ அல்லது சுவர்க்கத்திலோ) எதிர்கால மகிழ்ச்சிக்காக பலனை எதிர்பார்த்து செயற்படுபவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள பெளதிக சுகம்; அஸத்—அனைத்தும் தற்காலிகமானதும், தீமையுடையதுமாகும்; புத்வா—அறிந்து; ந—கூடாது; அனுத்யாயேத்—ஒருவன் அதைப்பற்றி நினைக்கவும்; ந—அல்லது; ஸந்திசேத்—உண்மையில் அனுபவிக்க வேண்டும்; ஸம்ஸ்ருதிம்—பெளதிக இருப்பின் நீடிப்பு; ச—மேலும்; ஆத்ம-நாசம்—தன் உண்மைச் சொரூபத்தின் மறதி; ச—மேலும்; தத்ர—இத்தகைய ஒரு விஷயத்தில்; வித்வான்—நன்கு அறிந்துள்ள; ஸ:—இத்தகைய ஒருவர்; ஆத்ம-த்ருக்—தன்னுணர்வு பெற்ற ஓராத்மா.
பெளதிக சுகமானது, நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ, இப்பிறவியிலோ அல்லது அடுத்ததிலோ, இவ்வுலகிலோ அல்லது சுவர்க்க லோகங்களிலோ இருப்பதானாலும், அது நிலையற்றதும், பயனற்றதுமாகும் என்பதையும், அறிவுள்ளவன் அதை அனுபவிக்க முயலவோ அல்லது அதைப்பற்றி நினைக்கவோ கூடாது என்பதையும் அறிந்திருப்பவன் ஆத்மாவை அறிந்தவனாவான். தொடர்ந்து பௌதிக இருப்பிற்கும், தனது உண்மை சொரூபத்தை மறந்திருப்பதற்கும் பெளதிக சுகம் தான் காரணம் என்பதை, தன்னுணர்வு பெற்ற இத்தகைய ஒருவர் நன்கு அறிவார்.
பதம் 9.19.21
இதி உக்த்வா நாஹுஷோ ஜாயாம் ததீயம் பூரவே வய:
தத்வா ஸ்வ-ஜரஸம் தஸ்மாத் ஆததே விகத-ஸ்ப்ருஹ:
இதி உக்த்வா—இவ்வாறு கூறி; நாஹுஷ:—மன்னர் நாஹுஷரின் புத்திரரான யயாதி மகாராஜன்; ஜாயாம்—அவரது மனைவி தேவயானியிடம்; ததீயம்—அவரது சொந்த; பூரவே—அவரது மகன் பூருவிடம்; வய:—இளமையை; தத்வா—திருப்பிக் கொடுத்து; ஸ்வ-ஜரஸம்—அவரது சொந்த முதுமையை; தஸ்மாத்—அவனிடமிருந்து; ஆததே—வாங்கிக் கொண்டார்; விகத-ஸ்ப்ருஹ:—பெளதிகமான காம இச்சைகளிலிருந்து விடுபட்டு.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இப்பொழுது எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்ட யயாதி மகாராஜன், தன் மனைவியான தேவயானியிடம் இவ்வாறு பேசியபின், தன் இளைய மகனான பூருவை அழைத்து அவனிடம் இளமையை திருப்பிக் கொடுத்துத், தன் முதுமையை அவனிடமிருந்து திரும்ப வாங்கிக் கொண்டார்.
பதம் 9.19.22
திசி தக்ஷிண-பூர்வஸ்யாம் த்ருஹ்யும் தக்ஷிணதோ யதும்
ப்ரதீச்யாம் துர்வஸும் சக்ர உதீச்யாம் அனும் ஈஸ்வரம்
திசி—திசையில்; தக்ஷிண-பூர்வஸ்யாம்—தென்கிழக்கு; த்ருஹ்யும்—துருஹ்யு என்ற அவரது மகனையும்; தக்ஷிணத:—உலகின் தென் பகுதியில்; யதும்—யதுவையும்; ப்ரதீச்யாம்—உலகின் மேற்குப் பகுதியில்; துர்வஸும்—துர்வஸு என்ற அவரது மகனையும்; சக்ரே—அவர் நியமித்தார்; உதீச்யாம்—உலகின் வட பகுதியில்; அனும்—அனு என்ற அவரது மகனையும்; ஈஸ்வரம்—அந்த அரசர்.
யயாதி மகாராஜன் தனது இராஜ்யத்தின் தென்கிழக்குப் பகுதியைத் துருஹ்யு என்ற தன் மகனுக்கும், தென்பகுதியை யது என்ற மகனுக்கும், மேற்குப் பகுதியை துர்வஸு என்ற மகனுக்கும், மற்றும் வடபகுதியை அனு என்ற மகனுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
பதம் 9.19.23
பூ-மண்டலஸ்ய ஸர்வஸ்ய பூரம் அர்ஹத்தமம் விசாம்
அபிஷ்ச்யாக்ரஜாம்ஸ் தஸ்ய வசே ஸ்தாப்ய வனம் யயௌ
பூ-மண்டலஸ்ய—மண்ணுலகம் முழுவதற்கும்; ஸர்வஸ்ய—எல்லா செல்வங்களுக்கும்; பூரும்—அவரது இளைய மகனான பூருவை; அர்ஹத்-தமம்—மிகவும் வழிபடத்தகுந்த அரசராக; விசாம்—பிரஜைகளின் அல்லது உலக மக்களின்; அபிஷிச்ய—சக்கரவர்த்தியின் அரியாசனத்தில் அமர்த்தினார்; அக்ரஜான்—யது முதலான எல்லா தமைன்களையும்; தஸ்ய—பூருவின்; வசே—கட்டுப்பாட்டின் கீழ்; ஸ்தாப்ய—நியமித்து; வனம்—வனம்; யயௌ—சென்றார்.
யயாதி தன் இளைய மகனான பூருவை மண்ணுலகம் முழுவதற்கும் சக்கரவர்த்தியாகவும், அதன் செல்வங்களுக்கு அதிபதியாகவும் ஆக்கி, பூருவின் தமையன்களை அவனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துவிட்டு, வனம் சென்றார்.
பதம் 9.19.24
ஆசேவிதம் வர்ஷ-பூகான் ஷட்-வர்கம் விஷயேஷு ஸ:
க்ஷணேன முமுசே நீடம் ஜாத-பக்ஷ இவ த்விஜ:
ஆசேவிதம்—எப்பொழுதும் ஈடுபட்டு; வர்ஷ-பூகான்—பல ஆண்டுகள்; ஹட்-வர்கம்—மனம் உட்பட்ட ஆறு புலன்களின்; விஷயேஷு—விஷய சுகத்தில்; ஸ:—மன்னர் யயாதி; க்ஷணேன்—ஒரு நொடியில்; முமுசே—விட்டு விட்டு; நீடம்—கூட்டை; ஜாத-பக்ஷ:—சிறகு முளைத்த; இவ—போல்; த்விஜ:—ஒரு பறவை.
பரீட்சித்து மகாராஜனே, ஆறுவகை விஷய சுகங்களைப் பல ஆண்டுகள் அனுபவித்துப் பழக்கப்பட்டிருந்த யயாதி, சிறகு முளைத்ததும் பறவை கூட்டை விட்டுப் பறந்து செல்வது போல், ஒரு நொடியில் அதை விட்டுச் சென்றார்.
பதம் 9.19.25
ஸ தத்ர நிர்முக்த-ஸமஸ்த-ஸங்க
ஆத்மானுபூத்யா விதுத-த்ரிலிங்க:
பரே ‘மலே ப்ரஹ்மணி வாஸுதேவே
லேபே கதிம் பாகவதீம் ப்ரதீத:
ஸ:—யயாதி மகாராஜன்; தத்ர—இதைச் செய்ததும்; நிர்முக்த—உடனே முக்தியடைந்தார்; ஸமஸ்த-ஸங்க:—எல்லா களங்கத்திலிருந்து; ஆத்ம-அனுபூத்யா—அவரது ஆதார நிலையைப் புரிந்து கொண்டதாலேயே; விதுத—தூய்மையடைந்தார்; த்ரி-லிங்க:—ஜட இயற்கையின் முக்குணங்களால் விளைவிக்கப்பட்ட களங்கம்; பரே—உன்னதத்திடம்; அமலே—பெளதிகத் தொடர்பின்றி; ப்ரஹ்மணி—பரம புருஷரான; வாஸுதேவே—வாசுதேவ கிருஷ்ணரை, பரப்பிரம்மனான பகவானை; லேபே—அடைந்தார்; கதிம்—கதியை; பாகவதீம்—பரம புருஷரின் ஒரு சகாவாக; ப்ரதீத:—புகழுக்குரிய.
யயாதி மகாராஜன் பரமபுருஷரான வாசுதேவரிடம் முழுமையாக சரணடைந்ததால், அவர் ஜட இயற்கைக் குணங்களின் களங்கத்திலிருந்து விடுபட்டார். அவர் பெற்ற தன்னுணர்வின் காரணத்தால், அவரால் உன்னதத்தின் (பரப்பிரம்மன், வாசுதேவர்) மீது தன் மனதைப் பதிக்க முடிந்தது. இவ்வாறாக இறுதியில் அவர் பகவானுடைய ஒரு சகாவின் நிலையை அடைந்தார்.
பதம் 9.19.26
ஸ்ருத்வா காதாம் தேவயானி மேனே ப்ரஸ்தோபம் ஆத்மன:
ஸ்த்ரீ-பும்ஸோ: ஸ்னேஹ-வைக்லவ்யாத் பரிஹாஸம் இவேரிதம்
ஸ்ருத்வா—கேட்டு; காதாம்—கதையை; தேவயானீ—யயாதி மகாராஜனின் மனைவியான ராணி தேவயானி; மேனே—புரிந்து கொண்டாள்; ப்ரஸ்தோபம் ஆத்மன:—அவளது தன்னுணர்வுக்காக உபதேசிக்கப்பட்ட பொழுது; ஸ்த்ரீ-பும்ஸோ:—கணவன் மனைவிக்கிடையில்; ஸ்னேஹ-வைக்லவ்யாத்—ஓர் அன்புப் பரிமாற்றத்திலிருந்து; பரிஹாஸம்—வேடிக்கையான ஒரு கதை அல்லது தமாஷ்; இவ—போல்; ஈரிதம்—(யயாதி மகாராஜனால்) பேசப்பட்ட.
ஆண், பெண் ஆடுகளைப் பற்றிய யயாதி மகாராஜனின் கதையைக் கேட்ட தேவயானி, கணவன் மனைவிக்கிடையிலான சந்தோஷத்திற்காக ஒரு வேடிக்கையான தமாஷ் போல் கூறப்பட்ட இக்கதை, உண்மையில், தனது உண்மையான ஆதார நிலைக்குத் தன்னை விழிப்புறச் செய்துகொள்வதற்காகக் கூறப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டாள்.
பதங்கள் 9.19.27 – 9.19.28
ஸ ஸன்னிவாஸம் ஸுஹ்ருதாம் ப்ரபாயாம் இவ கச்சதாம்
விக்ஞாயேஸ்வர தந்த்ராணாம் மாயா-விரசிதம் ப்ரபோ:
ஸர்வத்ர ஸங்கம் உத்ஸ்ருஜ்ய ஸ்வப்னௌபம்யேன பார்கவீ
க்ருஷ்ணே மன: ஸமாவேஸ்ய வ்யதுனோல் லிங்கம் ஆத்மன:
ஸா—தேவயானி; ஸன்னிவாஸம்—சகவாசத்தில் வாழும்; ஸுஹ்ருதாம்—நண்பர்கள் மற்றும் உறவினர்களின்; ப்ரபாயாம்—தண்ணீர் கொடுக்கப்படும் ஓரிடத்தில்; இவ—போல்; கச்சதாம்—சுற்றுப் பயணிகளின்; விக்ஞாய—புரிந்துகொண்டு; ஈஸ்வர-தந்த் ராணாம்—கடுமையான இயற்கைச் சட்டங்களின் ஆதிக்கத்தின்கீழ்; மாயா-விரசிதம்—மாயா சக்தியால் அமுலாக்கப்பட்ட சட்டங்கள்; ப்ரபோ:—பரமபுருஷரின்; ஸர்வத்ர—இந்த ஜட உலகின் எல்லா இடங்களிலும்; ஸங்கம்—சக வாசத்தை; உத்ஸ்ருஜ்ய—கைவிட்டு; ஸ்வப்ன-ஒளபம் யேன—ஒரு கனவெனும் உவமையால்; பார்கவீ—சுக்ராசரியரின் மகளான தேவயானி; க்ருஷ்ணே—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்; மன:—முழு கவனத்தையும்; ஸமாவேஸ்ய—பதித்து; வ்யதுனோத்—கை விட்டாள்; லிங்கம்—ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களை; ஆத்மன:—ஆத்மாவின்.
அதன்பிறகு, சுக்ராசாரியின் மகளான தேவயானி, கணவன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான தனது பெளதிக சகவாசம், ஒரு விடுதி நிறையவுள்ள சுற்றுப்பயணிகளுடனான சகவாசத்தைப் போன்றது என்பதைப் புரிந்து கொண்டாள். ஒரு கனவில் நிகழ்வது போலவே, சமூகம், நட்பு மற்றும் அன்பு ஆகியவை தொடர்பான உறவு முறைகள் பரமபுருஷரின் மாயையால் உண்டாக்கப்படுகின்றன. கிருஷ்ணரின் கருணையால், தேவயானி ஜட உலகிலுள்ள தனது கற்பனையான நிலையைக் கைவிட்டாள். கிருஷ்ணரிடம் தன் மனதை முழுமையாகப் பதித்து, ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களிலிருந்து அவள் விடுபட்டாள்.
பதம் 9.19.29
நமஸ் துப்யம் பகவதே வாஸுதேவயா வேதஸே
ஸர்வ-பூதாதிவாஸாய சாந்தாய ப்ருஹதே நம:
நம:—நான் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்; துப்யம்—தங்களுக்கு; பகவதே—பரமபுருஷரான; வாஸுதேவாய—பகவான் வாசுதேவரான; வேதஸே—அனைத்தையும் படைத்தவர்; ஸர்வ-பூத-அதிவாஸாய—(ஒவ்வொரு ஜீவனின் இதயத்திலும், அணுக்களிலும் கூட) எங்கும் நிறைந்துள்ள; சாந்தாய—முற்றிலும் இயக்கமற்றவர் போல், சாந்தமாக; ப்ருஹத்—அனைவரிலும் மிகச் சிறந்தவர்; நம:—எனது பணிவான வணக்கங்கள்.
பரமபுருஷராகிய பகவான் வாசுதேவரே! முழு பிரபஞ்ச தோற்றத்தையும் படைத்தவர் தாங்களேயாவீர். தாங்கள் எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக வாழ்கிறீர்கள். தாங்கள் சிறியதிலும் சிறிதாக இருப்பினும், பெரிதிலும் பெரிதாகவும், சர்வ வியாபகமுடையவராகவும் இருக்கிறீர்கள். தங்களால் செய்யப்பட வேண்டியது எதுவுமில்லை என்பதால் தாங்கள் முற்றிலும் மௌனமாகக் காணப்படுகிறீர்கள். ஆனால் இதற்குத் தங்களுடைய சர்வ வியாபகமுடைய தன்மையும், சகல ஐசுவரிய முழுமையுமே காரணம். எனவே தங்களுக்கு தனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “யயாதி மகாராஜன் முக்தியடைதல்” எனும் தலைப்பை கொண்ட பத்தொன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.