அத்தியாயம் – 15
பகவானின் அவதாரமான
மாவீரர் பரசுராமர்
பதம் 9.15.1
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
ஐளஸ்ய சோர்வசீ-கர்பாத் ஷட் ஆஸன் ஆத்மஜா ந்ருப ஆயு:
ஸ்ருதாயூ: ஸத்யாயூ ரயோ ‘த விஜயோ ஜய:
ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஐளஸ்ய—புரூரவஸ்ஸின்; ச—கூட; உர்வசீ-கர்பாத்—ஊர்வசியின் கர்ப்பத்திலிருந்து; ஷட்—ஆறு; ஆஸன்—இருந்தனர்; ஆத்மஜ:—மகன்கள்; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே; ஆயு:—ஆயு; ஸ்ருதாயு:—சுருதாயு; ஸத்யாயு:—சத்யாயு; ரய:—ரயன்; அத—மற்றும்; விஜய:—விஜயன்; ஜய:—ஜயன்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, ஊர்வசியின் கர்ப்பத்திலிருந்து புரூரவஸ் ஆறு மகன்களை உற்பத்தி செய்தார். அவர்கள் ஆயு, சுருதாயு, சத்யாயு, ரயன், விஜயன் மற்றும் ஜயன் ஆகியோராவர்.
பதங்கள் 9.15.2 – 9.15.3
ஸ்ருதாயோர் வஸுமான் புத்ர: ஸத்யாயோஸ் ச ஸ்ருதஞ்சய:
ரயஸ்ய ஸுத ஏகஸ் ச ஜயஸ்ய தனயோ ‘மித:
பீமஸ் து விஜயஸ்யாத காஞ்சனோ ஹோத்ரகஸ் தத:
தஸ்ய ஜஹ்னு: ஸுதோ கங்காம் கண்டுஷீ-க்ருத்ய யோ ‘பிபத்
ஸ்ருதாயோ:—சுருதாயுவின்; வஸுமான்—வசுமான்; புத்ர:—ஒரு மகன்; ஸத்யாயோ:—சத்யாயுவின்; ச—மேலும்; ஸ்ருதஞ்சய:—சுருதஞ்சயன் என்ற ஒரு மதன்; ரயஸ்ய—ரயனின்; ஸுத:—ஒரு மகன்; ஏக:—ஏகன் என்ற; ச—மேலும்; ஜயஸ்ய—ஜயனின்; தனய:—மகன்; அமித:—அமிதன் என்ற; பீம:—பீமன் என்ற; து—உண்மையில்; விஜயஸ்ய—விஜயனின்; அத—அதன்பிறகு; காஞ்சன:—பீமனின் மகன் காஞ்சனன்; ஹோத்ரக:—காஞ்சனனின் மகன் ஹோத்ரகன்; தத:—பிறகு; தஸ்ய—ஹோத்ரகனின்; ஜஹ்னு:—ஜஹ்னு என்ற; ஸுத:— ஒரு மகன்; கங்காம்—கங்கை நீர் முழுவதையும்; கண்டுஷீ-க்ருத்ய—ஒரு உறிஞ்சில்; ய:—அவர் (ஜஹ்னு); அபிபத்—குடித்துவிட்டார்.
சுருதாயுவின் மகன் வசுமான்; சத்யாயுவின் மகன் சுருதஞ்சயன்; ரயனின் மகன் ஏகன்; ஜயனின் மகன் அமிதன்; மற்றும் விஜயனின் மகன் பீமன்; பீமனின் மகன் காஞ்சனன்; காஞ்சனனின் மகன் ஹோத்ரகன்; ஹோத்ரகனின் மகன் ஜஹ்னு. அவர் கங்கை நீர் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டார்.
பதம் 9.15.4
ஜஹ்னோஸ் து புருஸ் தஸ்யாத பலாகஸ் சாத்மஜோ ‘ஜக:
தத: சூச: குசஸ்யாபி குசாம்புஸ் தனயோ வஸு:
குசனாபஸ் ச சத்வாரோ காதிர் ஆஸீத் குசாம்புஜ:
ஜஹ்னோ:—ஜஹ்னுவின்; து—உண்மையில்; புரு:—புரு என்ற ஒரு மகன்; தஸ்ய—புருவின்; அத—அதன்பிறகு; பலாக:—பலாகன் என்ற ஒரு மகன்; ச—மேலும்; ஆத்மஜ:—பலாகனின் மகன்; அஜக:—அஜகன் என்ற; தத:—பிறகு; குச:—குசன்; குசஸ்ய—குசனின்; அபி—பிறகு; குசாம்பு:—குசாம்பு; தனய:—தனயன்; வஸு:—வசு; குசநாப:—குசநாபன்; ச—மேலும்; சத்வார:—நான்கு (மகன்கள்); காதி:—காதி; ஆஸீத்—வந்தார்; குசாம்புஜ:—குசாம்புவின் மகன்.
ஜஹ்னுவின் மகன் புரு, புருவின் மகன் பலாகன், பலாகனின் மகன் அஜகன், மற்றும் அஜகனின் மகன் குசன், குசனுக்கு, குசாம்பு, தனயன், வசு, குசநாபன் என்ற நான்கு மகன்கள். குசாம்புவின் மகன் காதி.
பதங்கள் 9.15.5 – 9.15.6
தஸ்ய ஸத்யவதீம் கன்யாம் ருசீகோ ‘யாசத த்விஜ:
வரம் விஸத்ருசம் மத்வா காதிர் பார்கவம் அப்ரவீத்
ஏகத: ஸ்யாம-கர்ணானாம் ஹயானாம் சந்ர-வர்சஸாம்
ஸஹஸ்ரம் தீயதாம் சுல்கம் கன்யாயா: குசிகா வயம்
தஸ்ய—காதியின்; ஸத்யவதீம்—சத்தியவதி; கன்யாம்—மகள்; ரிசீகே:—ரிசிக முனிவர்; அயாசத—கேட்டார்; த்விஜ:—பிராமணர்; வரம்—அவளது கணவராக; விஸத்ருசம்—சமமானவரல்ல அல்லது பொருத்தமானவரல்ல; மத்வா—என்றெண்ணி; காதி:—காதி மகாராஜன்; பார்கவம்—ரிசிகரிடம்; அப்ரவீத்—பதிலளித்தார்; ஏகத:—ஒன்றால்; ஸ்யாம-கர்ணானாம்—கருப்புநிற காதுடைய; ஹயானாம்—குதிரைகள்; சந்ர-வர்சஸாம்—நிலவொளியைப் போல் பிரகாசிக்கும்; ஸஹஸ்ரம்—ஆயிரம்; தீயதாம்—தயவுசெய்து கொடுங்கள்; கல்கம்—ஸ்ரீதனமாக; கன்யாயா:—என் மகளுக்கு; குசிகா:—குசனின் குடும்பத்தில்; வயம்—நாங்கள் (இருக்கிறோம்).
காதி மகாராஜனுக்கு சத்தியவதி என்றொரு மகளிருந்தாள். அவளைத் தனக்கு மனைவியாக்கும்படி பிராமணரான ரிசிக முனிவர் அரசரைக் கேட்டார். ஆனால் ரிசிக முனிவர் தன் மகளுக்குக் கணவராகும் தகுதியற்றவர் என்றெண்ணிய அரசர், அந்த பிராமணரிடம் கூறினார், “முனிவரே, நான் குச வம்சத்தைச் சேர்ந்தவன். நாங்கள் செல்வச் சிறப்புடைய க்ஷத்திரியர்கள் என்பதால் என் மகளுக்கு நீங்கள் கொஞ்சம் ஸ்ரீதனம் கொடுக்க வேண்டும். எனவே, ஒருகாது கருப்பாகவும், உடல் நிலவொளியைப் போல் பிரகாசமாகவும் உள்ள ஆயிரம் குதிரைகளை நீங்கள் கொண்டுவர வேண்டும்.”
பதம் 9.15.7
இதி உக்தஸ் தன்-மதம் ஞாத்வா கத: ஸ வருணாந்திகம்
ஆனீய தத்வா தான் அஸ்வான் உபயேமே வரானனாம்
இதி—இவ்வாறு; உக்த:—கேட்டுக் கொள்ளப்பட்டதால்; தத்-மதம்—அவரது மனதை; ஞாத்வா—(முனிவரால்) புரிந்து கொள்ள முடிந்தது; கத:—சென்றார்; ஸ:—அவர்; வருண-அந்திகம்—வருணனின் இடத்திற்கு; ஆனீய—கொண்டு வந்து; தத்வா—கொடுத்த பிறகு; தான்—அந்த; அஸ்வான்—குதிரைகளை; உபயேமே—மணந்தார்; வர-ஆனனாம்—காதி மகாராஜனின் அழகிய மகளை.
காதி மகாராஜனின் நிபந்தனையைக் கேட்ட ரிசிக முனிவர் அரசரின் மனதைப் புரிந்து கொண்டார். எனவே, அவர் வருணதேவனிடம் சென்று, காதி கேட்ட ஆயிரம் குதிரைகளை வாங்கி வந்தார் அக்குதிரைகளை காதியிடம் ஒப்படைத்தபின் அவருடைய அழகிய மகளை முனிவர் மணந்தார்.
பதம் 9.15.8
ஸ ரிஷி: ப்ரார்தித: பத்ன்யா ஸ்வஸ்ர்வா சாபத்ய-காம்யயா
ஸ்ரபயித்வோபயைர் மந்த்ரைஸ் சரும் ஸ்னாதும் கதோ முனி:
ஸ:—அவர் (ரிசிகர்); ரிஷி:—மாமுனிவரான; ப்ரார்தித:—வேண்டப்பட்டதால்; பத்ன்யா—அவரது மனைவியால்; ஸ்வஸ்ர்வா—அவரது மாமியாரால்; ச—கூட; அபத்ய-காம்யயா—ஒரு மகனைப் பெற விரும்பி; ஸ்ரபயித்வா—சமைத்தபின்; உபயை:—இருவரும்; மந்தரை:—குறிப்பிட்ட மந்திரங்களை ஓதுவதன் மூலம்; சரும்—ஒரு யாகத்தில் நிவேதனம் செய்வதற்குரிய உணவை; ஸ்னாதும்—குளிப்பதற்கு; கத:—வெளியே சென்றார்; முனி:—முனிவர்.
அதன்பிறகு ஆளுக்கொரு குழந்தையைப் பெற விரும்பிய ரிசிக முனிவரின் மனைவியும், மாமியாரும், ஒரு யாக நிவேதனத்தைச் சமைக்கும்படி முனிவரை வேண்டினர். இவ்வாறாக ரிசிக முனிவர், பிராமண மந்திரத்தை உச்சரித்து தன் மனைவிக்குரிய ஒரு நிவேதனத்தையும், க்ஷத்திரிய மந்திரத்தை உச்சரித்து தன் மாமியாருக்குரிய ஒரு நிவேதனத்தையும் சமைத்தார். பிறகு குளிப்பதற்காக அவர் வெளியே சென்றார்.
பதம் 9.15.9
தாவத் ஸத்யவதீ மாத்ரா ஸ்வ-சரும் யாசிதா ஸதீ
ஸ்ரேஷ்டம் மத்வா தயாயச்சன் மாத்ரே மாதுர் அதத் ஸ்வயம்
தாவத்—அதற்கிடையில்; ஸத்யவதீ—ரிசிகரின் மனைவி சத்தியவதி; மாத்ரா—அவளது தாயால்; ஸ்வ-சரும்—அவளுக்குரிய (சத்தியவதிக்குரிய) நிவேதனத்தை; யாசிதா—கொடுக்கும்படி கேட்டாள்; ஸதீ—இருக்கும்; ஸ்ரேஷ்டம்—சிறந்ததாக; மத்வா—என்றெண்ணி; தயா—அவளால்; அயச்சத்—கொடுத்தாள்; மாத்ரே—அவளுடைய தாயிடம்; மாது:—தாயின்; அதத்—உண்டாள்; ஸ்வயம்—தானே.
அதற்கிடையில், ரிசிக முனிவர் தன் மனைவிக்காகச் சமைத்துள்ள நிவேதனம் சிறந்ததாக இருக்கும் என்றெண்ணிய சத்தியவதியின் தாய், அந்த நிவேதனத்தை தனக்குக் கொடுக்கும்படி தன் மகளிடம் கேட்டாள். எனவே சத்தியவதியும் தனக்கென சமைக்கப்பட்ட நிவேதனத்தை தன் தாயிடம் கொடுத்துவிட்டு, தாயின் நிவேதனத்தைத் தானே உண்டாள்.
பதம் 9.15.10
தத் விதித்வா முனி: ப்ராஹ பத்னீம் கஷ்டம் அகாரஷீ:
கோரோ தண்ட-தர: புத்ரோ ப்ராதா தே ப்ரஹ்ம-வித்தம:
தத்—இவ்வுண்மையை; விதித்வா—அறிந்து; முனி:—மாமுனிவர்; ப்ராஹ—கூறினார்; பத்னீம்—தன் மனைவியிடம்; கஷ்டம்—மிகவும் வருந்தத்தக்கதை; அகாரஷீ:—நீ செய்து விட்டாய்; கோர:—கொடூரமான; தண்ட-தர:—பிறரை தண்டிக்கக் கூடிய தகுதியுடையவர்; புத்ர:—அத்தகைய ஒரு மகன்; ப்ராதா—சகோதரன்; தே—உன்னுடைய; ப்ரஹ்ம-வித்தம:—ஆன்மீக விஞ்ஞானத்தில் சிறந்த பண்டிதனாக விளங்குவான்.
குளித்துவிட்டு வீடு திரும்பிய ரிசிக முனிவர், தான் இல்லாத சமயத்தில் நடந்திருப்பதைப் புரிந்துகொண்டார். இதனால் தன் மனைவியிடம் அவர் கூறினார், “நீ பெருந்தவற்றைச் செய்துவிட்டாய். உன் மகன் எல்லோரையும் தண்டிக்கக்கூடிய கொடூரமான ஒரு க்ஷத்திரியனாக இருப்பான். உன் சகோதரனோ ஆன்மீக விஞ்ஞானத்தில் சிறந்த பண்டிதனாக விளங்குவான்”.
பதம் 9.15.11
ப்ரஸாதித: ஸத்யவத்யா மைவம் பூர் இதி பார்கவ:
அத தர்ஹி பவேத் பௌத்ரோ ஜமதக்னிஸ் ததோ ‘பவத்
ப்ரஸாதித:—சமாதானப்படுத்தப்பட்டார்; ஸத்யவத்யா—சத்தியவதியால்; மா—வேண்டாம்; ஏவம்—இவ்வாறாக; பூ:—என்றாகட்டும்; இதி—இவ்வாறு; பார்கவ:—மாமுனிவர்; அத—உன் மகன் இப்படி ஆகக் கூடாதென்றால்; தர்ஹி—பிறகு; பவேத்—அப்படி ஆகட்டும்; பௌத்ர:—பேரன்; ஜமதக்னி:—ஜமதக்னி; தத:—அதன் பிறகு; அபவத்—பிறந்தார்.
ஆயினும் அமைதியான வார்த்தைகளால் ரிசிக முனிவரை சமாதானப்படுத்திய சத்தியவதி, தன் மகன் கொடூரமான ஒரு க்ஷத்திரியனைப் போல் இருக்க வேண்டாம் என்று வேண்டினாள். ரிசிக முனிவர் பதிலளித்தார், “அப்படியானால் உன் பேரன் ஒரு கொடூரமான க்ஷத்திரியனாக இருப்பான்.” இவ்வாறாக சத்தியவதியின் மகனாக ஜமதக்னி பிறந்தார்.
பதங்கள் 9.15.12 – 9.15.13
ஸா சாபூத் ஸுமஹத்-புண்யா கௌசிகீ லோக-பாவனீ
ரேணோ: ஸுதாம் ரேணுகாம் வை ஜமதக்னிர் உவாஹ யாம்
தஸ்யாம் வை பார்கவ ரிஷே: ஸுதா வஸுமத்-ஆதய:
யவீயாஞ் ஜக்ஞ ஏதேஷாம் ராம இதி அபிவிஸ்ருத:
ஸா—அவள் (சத்தியவதி); ச—கூட; அபூத்—ஆனாள்; ஸுமஹத்-புண்யா—மிகச் சிறந்ததும், புண்ணியம் வாய்ந்ததுமான; கௌசிகீ—கௌசிகி என்ற நதியாக; லோக-பாவனீ—உலகையே புனிதப்படுத்தும்; ரேணோ:—ரேணுவின்; ஸுதாம்—மகள்; ரேணுகாம்—ரேணுகா என்ற; வை—உண்மையில்; ஜமதக்னி:—சத்தியவதியின் மகனான ஜமதக்னி; உவாஹ—மணந்தார்; யாம்—யாரை; தஸ்யாம்—ரேணுகாவின் கர்ப்பத்தில்; வை—உண்மையில்; பார்கவ-ரிஷே:—ஜமதக்னியின் விந்திலிருந்து; ஸுதா:—மகன்கள்; வஸுமத்-ஆதய:—வசுமான் முதலான பல; யவீயான்—இளையவராக; ஜக்ஞே—பிறந்தார்; ஏதேஷாம்—அவர்களுக்கிடையில்; ராம:—பரசுராமர்; இதி—இவ்வாறாக; அபிவிஸ்ருத:—எங்கும் பிரபலமானார்.
உலகை புனிதப்படுத்துவதற்காக சத்தியவதி பிறகு கௌசிகி எனும் புண்ணிய நதியாக மாறினாள். அவளது மகன் ஜமதக்னி ரேணுவின் பெண்ணாகிய ரேணுகாவை மணந்தார். ஜமதக்னியின் மூலமாக ரேணுகாவின் கர்ப்பத்திலிருந்து வசுமான் முதலான பல மகன்கள் பிறந்தனர். இவர்களுள் இளையவர்தான் ராமர், அல்லது பரசுராமர் என்று பிரசித்தி பெற்றார்.
பதம் 9.15.14
யம் அஹுர் வாஸுதேவாம்சம் ஹைஹயானாம் குலாந்தகம்
த்ரி:-ஸப்த-க்ருத்வோ ய இமாம் சக்ரே நிஹ்க்ஷத்ரியாம் மஹீம்
யம்—யாரை (பரசுராமரை); ஆஹு:—கற்றறிந்த பண்டிதர்கள் அனைவரும் கூறுகின்றனர்; வாஸுதேவ-அம்சம்—பரமபுருஷரான வாசுதேவனின் ஓர் அவதாரம் என்று; ஹைஹயானாம்—ஹேஹயர்களின்; குல-அந்தகம்—வம்சத்தை அழித்தவர்; த்ரி:-ஸப்த-க்ருத்வ:—இருபத்தொரு தடவைகள்; ய:—யார் (பரசுராமர்); இமாம்—இந்த; சக்ரே—செய்தார்; நிஹ்க்ஷத்ரியாம்—க்ஷத்திரியர்களே இல்லாமல்; மஹீம்—பூமியில்.
கற்றறிந்த பண்டிதர்கள் இந்த பரசுராமரை வாசுதேவனின் புகழ் பெற்ற அவதாரமாக ஏற்றுக் கொள்கின்றனர். கார்த்தவீர்யார்ஜுனனின் வம்சத்தை அழித்த பரசுராமர், இருபத்தொரு தடவைகள் பூமியில் க்ஷத்திரியர்களே இல்லாதபடி அவர்களைக் கொன்றார்.
பதம் 9.15.15
த்ருப்தம் க்ஷத்ரம் புவோ பாரம் அப்ரஹ்மண்யம் அனீனசத்
ரஜஸ்-தமோ-வ்ருதம் அஹன் ஃபல்குனி அபி க்ருதே ‘ம்ஹஸி
த்ருப்தம்—மிகவும் இறுமாப்பு கொண்ட; க்ஷத்ரம்—ஆளும் பிரிவினரான க்ஷத்திரியர்கள்; புவ:—பூமியின்; பாரம்—பாரத்தை; அப்ரஹ்மண்யம்—பிராமணர்களால் வகுக்கப்பட்ட சமயக் கொள்கைகளைப் பற்றி கவலைப்படாமல்; அனீனசத்—கொன்றார்; ரஜ:-தம:—ராஜஸ மற்றும் தாமஸ குணங்களால்; வ்ருதம்—மூடப்பட்டிருந்தவர்களை; அஹன்—அவர் கொன்றார்; ஃபல்குனி—அவ்வளவு பெரியதல்ல; அபி—என்றாலும்; க்ருதே—செய்யப்பட்ட; அம்ஹஸி—ஒரு குற்றம்.
ரஜோ மற்றும் தமோ குணங்களினால் மிகவும் இறுமாப்புக் கொண்டதால், க்ஷத்திரிய வம்சத்தினர், பிராமணர்களால் வகுக்கப்பட்ட சட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் மதப்பற்றைத் துறந்தனர். இதனால் பரசுராமர் அவர்களைக் கொன்றார். அவர்களுடைய குற்றம் அவ்வளவு பெரியதல்ல என்றாலும், உலக பாரத்தைக் குறைப்பதற்காக அவர்களை அவர் கொன்றார்.
பதம் 9.15.16
ஸ்ரீ-ராஜோவாச
கிம் தத் அம்ஹோ பகவதோ ராஜன்யைர் அஜிதாத்மபி:
க்ருதம் யேன குலம் நஷ்டம் க்ஷத்ரியாணாம் அபீக்ஷ்ணச:
ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் வினவினார்; கிம்—என்ன; தத் அம்ஹ:—அக்குற்றம்; பகவத:—பரமபுருஷரிடம்; ராஜன்யை:—அரச குடும்பத்தால்; அஜித-ஆத்மபி:—புலன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இழிவடைந்தவர்கள்; க்ருதம்—செய்யப்பட்டது; யேன—எதனால்; குலம்—வம்சம்; நஷ்டம்—அழிக்கப்பட்டது; க்ஷத்ரியாணாம்—அரச குடும்பத்தின்; அபீக்ஷ்ணச:—திரும்பத்திரும்ப.
பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: பரமபுருஷரின் அவதாரமான பகவான் பரசுராமரின் முன், புலனடக்கம் இல்லாத க்ஷத்திரியர்களால் செய்யப்பட்ட எந்த குற்றத்திற்காக பகவான் மீண்டும் மீண்டும் க்ஷத்திரிய குலத்தை அழித்தார்?
பதங்கள் 9.15.17 – 9.15.19
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
ஹைஹயானாம் அதிபதிர் அர்ஜுன: க்ஷத்ரியர்ஷப:
தத்தம் நாராயணாம்சாம்சம் ஆராத்ய பரிகர்மபி:
பாஹூன் தச-சதம் லேபே துர்தர்ஷத்வம் அராதிஷு
அவ்யாஹதேந்ரியெளஜ: ஸ்ரீ தேஜோ-வீர்ய-யசோ-பலம்
யோகேஸ்வரத்வம் ஐஸ்வர்யம் குணா யத்ராணிமாதய:
சசாராவ்யாஹத-கதிர் லோகேஷு பவனோ யதா
ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்; ஹைஹயானாம் அதிபதி:—ஹேஹயர்களின் அரசர்; அர்ஜுன:—கார்த்தவீர்யார்ஜுனன் என்ற; க்ஷத்ரிய-ரிஷப:—க்ஷத்திரியர்களிலேயே சிறந்தவரான; தத்தம்—தத்தாதிரேயரை; நாராயண-அம்ச-அம்சம்—நாராயணருடைய அம்சத்தின் அம்சமான; ஆராத்ய—வழிபட்ட பின்; பரிகர்மபி:—கட்டுப்பாட்டு விதிகளின்படி செய்யப்படும் வழிபாட்டினால்; பாஹூன்—கரங்கள்; தச-சதம்—ஆயிரம்; லேபே—அடைந்தான்; துர்தர்ஷத்வம்—வெல்லப்படுவதற்கு மிகவும் கடினமான குணத்தை; அராதிஷு—எதிரிகளுக்கு நடுவில்; அவ்யாஹத—வெல்ல முடியாத; இந்ரிய-ஓஜ—புலன்களின் பலம்; ஸ்ரீ—அழகு; தேஜ:—செல்வாக்கு; வீர்ய—வீரியம்; யச:—புகழ்; பலம்—தேக பலம்; யோக-ஈஸ்வரத்வம்—அஷ்டாஸ்க யோகப் பயிற்சியினால் அடையப்பட்ட ஆளும் சக்தி; ஐஸ்வர்யம்—ஐசுவரியம்; குணா:—குணங்கள்; யத்ர—இங்கு; அணிமா-ஆதய:—எட்டு வகையான யோக சித்திகள் (அணிமா, லகிமா முதலானவை); சசார—அவன் சென்றான்; அவ்யாஹத-கதி:—அவனது முன்னேற்றம் இடையறாததாகும்; லோகேஷு—உலகம் அல்லது பிரபஞ்சம் முழுவதிலும்; பவன:—காற்று; யதா—போல்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: க்ஷத்திரியர்களுள் சிறந்தவனும், ஹேஹயர்களின் அரசனுமான கார்த்தவீர்யார்ஜுனன், பகவான் ஸ்ரீ நாராயணரின் அம்சமான தத்தாதிரேயரை வழிபட்டு ஆயிரம் கரங்களைப் பெற்றான். மேலும் எதிரிகளால் வெல்ல முடியாதவனாக இருந்த அவன் தடைப்படாத உணர்வாற்றல், அழகு, செல்வாக்கு, பலம், புகழ் ஆகியவற்றையும், அணிமா, லகிமா முதலான சித்திகளை அடையக்கூடிய யோக சக்தியையும் பெற்றிருந்தான். இவ்வாறு முழு ஐசுவர்யத்துடன் விளங்கிய அவன், எதிர்ப்பின்றி காற்றைப்போல் பிரபஞ்சம் முழுவதிலும் சஞ்சரித்தான்.
பதம் 9.15.20
ஸ்த்ரீ-ரத்னைர் ஆவ்ருத: க்ரீடன் ரேவாம்பஸி மதோத்கட: வைஜயந்தீம் ஸ்ரஜம் பிப்ரத் ருரோத ஸரிதம் புஜை:
ஸ்த்ரீ-ரத்னை:—அழகிய பெண்களால்; ஆவ்ருத:—சூழப்பட்டவனாய்; க்ரீடன்—அனுபவிக்கும்; ரேவா-அம்பஸி—நர்மதை நீரில்; மத-உத்கட:—செல்வ மிகுதியால் திமிர்பிடித்தவனாக; வைஜயந்தீம் ஸ்ரஜம்—வெற்றிமாலையால்; பிப்ரத்—அலங்கரிக்கப்பட்டு; ருரோத—ஓட்டத்தைத் தடுத்தான்; ஸரிதம்—நதியின்; புஜை:—தன் கரங்களால்.
ஒரு சமயம், திமிர் பிடித்தவனான கார்த்தவீர்யார்ஜுனன், வெற்றி மாலையணிந்து பெண்களால் சூழப்பட்டபடி நர்மதை நீரில் விளையாடிக் கொண்டிருக்கையில், தன் கைகளால் நீரோட்டத்தைத் தடுத்தான்.
பதம் 9.15.21
விப்லாவிதம் ஸ்வ-சிபிரம் ப்ரதிஸ்ரோத:-ஸரிஜ்-ஜலை:
நாம்ருஷ்யத் தஸ்ய தத் வீர்யம் வீரமானீ தசானன:
விப்ளாவிதம்—வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டதால்; ஸ்வ-சிபிரம்—தனது சொந்த கூடாரம்; ப்ரதிஸ்ரோத:—எதிர்த்திசையில் ஓடிய; ஸரித்-ஜலை:—ஆற்று நீரால்; ந—இல்லை; அம்ருஷ்யத்—பொறுக்க முடிந்தது; தஸ்ய—கார்த்தவீர்யார்ஜுனனின்; தத் வீர்யம்—அந்த வீரியத்தை; வீரமானீ—தன்னை மகாவீரனென்று கருதிய; தச-ஆனன:—பத்துத் தலை இராவணன்.
கார்த்தவீர்யார்ஜுனன் ஆற்று நீரை எதிர்த்திசையில் ஓடச் செய்ததால், மாஹிஷ்மதி நகருக்கருகில், நர்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த இராவணனின் கூடாரம் வெள்ளத்தில் மூழ்கியது. தன்னை மகாவீரனென்று கர்வித்திருந்த பத்துத்தலை இராவணனால், கார்த்தவீர்யார்ஜுனனின் அந்த வீரியத்தைப் பொறுக்க முடியவில்லை.
பதம் 9.15.22
க்ருஹீதோ லீலயா ஸ்த்ரீணாம் ஸமக்ஷம் க்ருத-கில்பிஷ:
மாஹிஷ்மத்யாம் ஸன்னிருத்தோ முக்தோ யேன கபிர் யதா
க்ருஹீத:—சிறைப்படுத்தப்பட்டான்; லீலயா—மிகச்சுலபமாக; ஸ்த்ரீணாம்—பெண்களின்; ஸமக்ஷம்—முன்னிலையில்; க்ருத-கில்பிஷ:—இப்படியாக குற்றம் செய்ததால்; மாஹிஷ்மத்யாம்—மாஹிஷ்மதி என்ற நகரில்; ஸன்னிருத்த:—சிறைப்படுத்தப்பட்டான்; முக்த:—விடுவித்தார்; யேன—யாரால் (கார்த்தவீர்யார்ஜுனனால்); கபி: யதா—ஒரு குரங்கைப் போல்.
இவ்வாறாக பெண்களின் முன்னிலையில் கார்த்தவீர்யார்ஜுனனை அவமதிக்க முயன்று குற்றம் புரிந்த இராவணனை அவன், விளையாட்டாக ஒரு குரங்கைப் பிடிப்பதுபோல் கைப்பற்றி, மாஹிஷ்மதி நகரில் காவலில் வைத்து, பின்னர் அவனை விடுவித்தான்.
பதம் 9.15.23
ஸ ஏகதா து ம்ருகயாம் விசரன் விஜனே வனே
யத்ருச்சயாஸ்ரம-பதம் ஜமதக்னேர் உபாவிசத்
ஸ:—அவர், கார்த்தவீர்யார்ஜுனன்; ஏகதா—ஒரு சமயம்; து—ஆனால்; ம்ருகயாம்—வேட்டையாடும் பொழுது; விசரன்—சஞ்சரித்தது; விஜனே—தனிமையான; வனே—ஒரு காட்டில்; யத்ருச்சயா—தற்செயலாக; ஆஸ்ரம-பதம்—ஆசிரமம்; ஜமதக்னே:—ஜமதக்னி முனிவரின்; உபாவசித்—அவன் புகுந்தான்.
ஒருசமயம் கார்த்தவீர்யார்ஜுனன் அடர்ந்ததொரு வனத்தில் வேட்டையாடித் திரிகையில், தற்செயலாக ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான்.
பதம் 9.15.24
தஸ்மை ஸ நரதேவாய முனிர் அர்ஹணம் ஆஹரத்
ஸஸைன்யாமாத்ய-வாஹாய ஹவிஷ்மத்யா தபோ-தன:
தஸ்மை—அவனுக்கு; ஸ:—அவர் (ஜமதக்னி); நரதேவாய—கார்த்தவீர்யார்ஜுன மகாராஜனுக்கு; முனி:—மாமுனிவர்; அர்ஹணம்—உபசாரப் பொருட்களை; ஆஹரத்—அளித்தார்; ஸ-ஸைன்ய—அவனது வீரர்களுடன்; அமாத்ய—அவனது மந்திரிகள்; வாஹாய—மற்றும் வாகனங்கள்; ஹவிஷ்மத்யா—கேட்டதையெல்லாம் அளிக்கும் காமதேனுவை (பசுவை) வைத்திருந்ததால்; தப:-தன:—தவத்தில் ஈடுபட்டிருந்த, அல்லது தவத்தை மட்டுமே தமது சக்தியாகக் கொண்டிருந்த மகாமுனிவர்.
காட்டில் கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்த ஜமதக்னி முனிவர், அரசனையும், அவனது வீரர்களையும், மந்திரிகளையும், வாகனங்களையும் நன்கு வரவேற்று உபசரித்தார். விரும்பியதையெல்லாம் அளிக்கக் கூடிய ஒரு காமதேனு பசுவை அவர் வைத்திருந்ததால், இவ்விருந்தினர்களை உபசரிப்பதற்குத் தேவையானதை எல்லாம் அவர் கொடுத்தார்.
பதம் 9.15.25
ஸ வை ரத்னம் து தத் த்ருஷ்ட்வா ஆத்மைஸ்வர்யாதிசாயனம்
தன் நாத்ரியதாக்னிஹோத்ரியாம் ஸாபிலாஷ: ஸஹைஹய:
ஸ:—அவன், (கார்த்தவீர்யார்ஜுனன்); வை—உண்மையில்; ரத்னம்—பெரும் செல்வத்திற்குப் பிறப்பிடமான; து—உண்மையில்; தத்—ஜமதக்னியிடமிருந்த காமதேனுவை; த்ருஷ்ட்வா—கண்டு; ஆத்ம-ஐஸ்வர்ய—தனது சொந்த செல்வத்தையும்; அதி-சாயனம்—மிஞ்சுவதாக இருந்த; தத்—அந்த; ந—இல்லை; ஆத்ரியத—மதிப்பை நன்கு புரிந்து கொண்டனர்; அக்னிஹோத்ரியாம்—அக்னிஹோத்திர யாகம் செய்வதற்குப் பயன்பட்ட அப்பசுவிடம்; ஸ-அபிலாஷ:—விருப்பம் கொண்டனர்; ஸ-ஹைஹய:—அவனது சொந்த ஆட்களான ஹேஹயர்களுடன்.
ஜமதக்னி, காமதேனுவின் உருவில் ஓர் இரத்தினத்தை வைத்திருந்ததால், அவர் தன்னைவிட சக்திவாய்ந்தவராகவும், செல்வந்தராகவும் இருந்ததாக கார்த்தவீர்யார்ஜுனன் நினைத்தான். எனவே அவனும், அவனது ஆட்களான ஹேஹயர்களும் ஜமதக்னியின் உபசரிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அக்னிஹோத்திர யாகம் செய்வதற்குப் பயன்பட்ட அக்காமதேனுவை அவர்கள் அடைய விரும்பினர்.
பதம் 9.15.26
ஹவிர்தானீம் ரிஷேர் தர்பான் நரான் ஹர்தும் அசோதயத்
தே ச மாஹிஷ்மதீம் நின்யு: ஸ-வத்ஸாம் க்ரந்ததீம் பலாத்
ஹவி:-தானீம்—காமதேனு; ரிஷே:—ஜமதக்னியின்; தர்பாத்—பெளதிக சக்தியால் திமிர்பிடித்தவனாக இருந்ததால்; நரான்—அவனது ஆட்களை (வீரர்களை); ஹர்தும்—திருடிச் செல்ல அல்லது எடுத்துச் செல்ல; அசோதயத்—தூண்டினான்; தே—கார்த்தவீர்யார்ஜுனனின் ஆட்கள்; ச—கூட; மாஹிஷ்மதீம்—அவனது தலைநகருக்கு; நின்யு:—எடுத்துச் சென்றனர்; ஸ-வத்ஸாம்—கன்றுடன்; க்ரந்ததீம்—கதறிக் கொண்டிருந்த; பலாத்—பலாத்காரமாக தூக்கிச் செல்லப்பட்டதால்.
தன் பெளதிக சக்தியால் திமிர்பிடித்தவனாக இருந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஜமதக்னியின் காமதேனுவைக் கவர்ந்து செல்லும்படி தனது ஆட்களைத் தூண்டினான். அவர்களும் கதறும் அப்பசுவையும், அதன் கன்றையும் பலாத்காரமாக மாஹிஷ்மதிக்குக் கொண்டு சென்றனர்.
பதம் 9.15.27
அத ராஜனி நிர்யாதே ராம ஆஸ்ரம ஆகத:
ஸ்ருத்வா தத் தஸ்ய தௌராத்ம்யம் சுக்ரோதாஹிர் இவாஹத:
அத—அதன்பிறகு; ராஜனி—அரசன்; நிர்யாதே—சென்றதும்; ராம:—ஜமதக்னியின் இளைய புத்திரரான பரசுராமர்; ஆஸ்ரமே—ஆசிரமத்தில்; ஆகத:—திரும்பி வந்தார்; ஸ்ருத்வா—கேள்விப்பட்டதும்; தத்—அந்த; தஸ்ய—கார்த்தவீர்யார்ஜுனனின்; தௌராத்ம்யம்—தகாத செயலை; சுக்ரோத—மிகவும் கோபமடைந்தார்; அஹி:—ஒரு பாம்பு; இவ—போல்; ஆஹத:—மிதிபட்ட.
காமதேனுவுடன் அரசன் சென்றபின், பரசுராமர் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தார். ஜமதக்னியின் இளைய புத்திரரான பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனின் தகாத செயலைப்பற்றி கேள்விப்பட்டதும் மிதிபட்ட பாம்புபோல் வெகுண்டார்.
பதம் 9.15.28
கோரம் ஆதாய பரசும் ஸதூணம் வர்ம கார்முகம்
அன்வதாவத துர்மர்ஷோ ம்ருகேந்ர இவ யூதபம்
கோரம்—மிகவும் பயங்கரமான; ஆதாய—கையிலெடுத்து; பரசும்—ஒரு கோடரியை; ஸ-தூணம்—ஓர் அம்பறாத்தூணியுடன்; வர்ம—ஒரு கேடயம்; கார்முகம்—ஒரு வில்; அன்வதாவத—பின்தொடர்ந்தார்; துர்மர்ஷ:—கடுங்கோபமடைந்த பகவான் பரசுராமர்; ம்ருகேந்ர:—ஒரு சிங்கம்; இவ—போல்; யூதபம்—ஒரு யானையை (தாக்கச் செல்வது)
பயங்கரமான தமது கோடரியையும், கேடயத்தையும், வில்லுடன் அம்பறாத் தூணியையும் கைக்கொண்ட பகவான் பரசுராமர், கடுங்கோபத்துடன், ஒரு சிங்கம் யானையை துரத்துவதுபோல் கார்த்தவீர்யார்ஜுனனை துரத்திச் சென்றார்.
பதம் 9.15.29
தம் ஆபதந்தம் ப்ருகு-வர்யம் ஓஜஸா
தனுர்-தரம் பாண-பரஸ்வதாயுதம்
ஐணேய-சர்மாம்பரம் அர்க-தாமபிர்
யுதம் ஜடாபிர் தத்ருசே புரீம் விசன்
தம்—அந்த பகவான் பரசுராமர்; ஆபதந்தம்—தன்னைப் பின் தொடர்ந்து வருவதை; ப்ருகு-வர்யம்—பிருகு வம்சத்தில் சிறந்தவரான பகவான் பரசுராமர்; ஓஜஸா—மிகவும் பயங்கரமாக; தனு:-தரம்—ஒரு வில்லை எடுத்துக்கொண்டு; பாண—அம்புகள்; பரஸ்வத—கோடரி; ஆயுதம்—இவ்வாயுதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு; ஐணேய-சர்ம—கருப்பு மான்தோல்; அம்பரம்—அவரது உடலை மறைத்திருந்த; அர்க-தாமபி:—சூரிய ஒளியைப் போல் தோன்றிய; யுதம்ஜடாபி:—ஜடாமுடியுடன்; தத்ருசே—அவன் கண்டான்; புரீம்—தலைநகருக்குள்; விசன்—நுழைவதை.
தன் தலைநகரமான மாஹிஷ்மதிக்குள் நுழைந்த கார்த்தவீர்யார்ஜுனன், பிருகு வம்சத்தில் சிறந்தவரான பகவான் பரசுராமர் ஒரு கோடரியையும், கேடயத்தையும், வில்லுடன் அம்புகளையும் கைக்கொண்டு தன்னைப் பின்தொடர்ந்து வருவதைக் கண்டான். அவர் ஒரு கருப்பு மான்தோலை அணிந்திருந்தார். அவரது ஜடா முடி சூரியஒளி போல் பிரகாசித்தது.
பதம் 9.15.30
அசோதயத் தஸ்தி-ரதாஸ்வ-பத்திபிர்
கதாஸி-பாணர்ஷ்டி-சதக்னி-சக்திபி:
அக்ஷௌஹிணி: ஸப்த-தசாதிபீஷணாஸ்
தா ராம ஏகோ பகவான் அஸூதயத்
அசோதயத்—போரிட அனுப்பினான்; ஹஸ்தி—யானைகளுடன்; ரத—தேர்களுடன்; அஸ்வ—குதிரைகளுடன்; பத்திபி:—மற்றும் காலாட்படைகளுடன்; கதா—கதாயுதங்களுடன்; அஸி—வாள்களுடன்; பாண—அம்புகளுடன்; ரிஷ்டி—ரிஷ்டி என்ற ஆயுதங்களுடன்; சதக்னி—சதக்னி என்ற ஆயுதங்களுடன்; சக்திபி:—சக்தி என்ற ஆயுதங்களுடன்; அக்ஷெளஹிணீ:—எல்லா படைப்பிரிவுகளையும்; ஸப்த-தச—பதினேழு; அதி-பீஷணா:—மிகவும் பயங்கரமான; தா:—அவர்களனைவரையும்; ராம:—பகவான் பரசுராமர்; ஏக:—தனியாக; பகவான்—பரமபுருஷரான; அஸுதயத்—கொன்றார்.
பரசுராமரைக் கண்டு அஞ்சிய கார்த்தவீர்யார்ஜுனன், உடனே கதாயுதங்கள், வாள்கள், ரிஷ்டிகள், சதக்னிகள் மற்றும் சக்திகள் முதலான பல்வேறு ஆயுதங்களைக் கொண்ட பல யானைப்படைகளையும், தேர்ப்படைகளையும், குதிரைப்படைகளையும் மற்றும் காலாட் படைகளையும் அனுப்பி அவருடன் போரிடச் செய்தான். பரசுராமரைத் தடுப்பதற்காக கார்த்தவீர்யார்ஜுனன் மொத்தத்தில் பதினேழு முழு அக்ஷௌணிகளை அனுப்பினான். ஆனால் பகவான் பரசுராமர் தனியாக அவர்களனைவரையும் கொன்றார்.
பதம் 9.15.31
யதோ யதோ ‘ஸென ப்ரஹரத்-பரஸ்வதோ
மனோ-‘நிலௌஜா: பர-சக்ர-ஸூதன:
ததஸ் ததஸ் சின்ன-புஜோரு-கந்தரா
நிபேதுர் உர்வ்யாம் ஹத-ஸூத-வாஹணா:
யத:—எங்கெல்லாம்; யத:—எங்கெல்லாம்; அஸௌ—பகவான் பரசுராமர்; ப்ரஹரத்—வெட்டி; பரஸ்வத:—கோடரியை (பரசு) உபயோகிப்பதில் கைதேர்ந்தவர் என்பதால்; மன:— மனம்போல்; அனில—காற்றுபோல்; ஓஜா:—வல்லமையுடையவர் என்பதால்; பர-சக்ர—எதிரியின் படைபலம்; ஸூதன:—கொன்றவர்; தத:—அங்கு; தத:—அங்கு; சின்ன—சின்னாபின்னப்படுத்தினார்; புஜ—கரங்களை; ஊரு—கால் கைகளை; கந்தரா:—தோள்கள்; நிபேது:—விழுந்தனர்; உர்வ்யாம்—தரையில்; ஹத—கொலையுண்டு; ஸூத—தேரோட்டிகள்; வாஹணா:—வாகனங்களாகிய குதிரைகளும், யானைகளும்.
பகவான் பரசுராமர் எதிரிகளின் படைபலத்தைக் கொல்வதில் கைதேர்ந்தவர் என்பதால், மனோவேகத்திலும், காற்று வேகத்திலும் செயற்பட்டு எதிரிகளைத் தமது கோடாரியால் (பரசு) வெட்டித் தள்ளினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் எதிரிகள் தங்களுடைய கால்களும், கைகளும், தோள்களும் துண்டிக்கப்பட்டு விழுந்தனர். அவர்களுடைய தேரோட்டிகள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய வாகனங்களான யானைகளும், குதிரைகளும் நாசம் செய்யப்பட்டன.
பதம் 9.15.32
த்ருஷ்ட்வா ஸ்வ-ஸைன்யம் ருதிரௌ-கர்தமே
ரணாஜிரே ராம-குடார-ஸாயகை:
விவ்ருக்ன-வர்ம-த்வஜ-சாப-விக்ரஹம்
நிபாதிதம் ஹைஹய ஆபதாத் ருஷா
த்ருஷ்ட்வா—கண்டு; ஸ்வ-ஸைன்யம்—தன் சொந்த வீரர்கள்; ருதிர-ஓக-கர்தமே—இரத்த ஓட்டத்தினால் சகதியாகிக் கிடந்த; ரண-அஜிரே—போர்க்களத்தில்; ராம-குடார—பகவான் பரசுராமரின் கோடரியாலும்; ஸாயகை:—அம்புகளாலும்; விவ்ருக்ண—சிதறடித்தார்; வர்ம—கேடயங்களையும்; த்வஜ—கொடிகளையும்; சாப—அம்புகளையும்; விக்ரஹம்—உடல்களையும்; நிபாதிதம்—விழுந்த; ஹைஹய:—கார்த்தவீரியார்ஜுனன்; ஆபதத்—ஆவேசத்துடன் அங்கு சென்றான்; ருஷா—கடுங்கோபங்கொண்டு.
தமது கோடரியையும், அம்புகளையும் திறமையாகக் கையாண்ட பகவான் பரசுராமர் கேடயங்களையும், கொடிகளையும், விற்களையும் மற்றும் கார்த்தவீர்யார்ஜுனனுடைய வீரர்களின் உடல்களையும் கண்டதுண்டமாக வெட்டித் தள்ளினார். போர்க்களத்தில் விழுந்த அவர்களுடைய உடல்களிலிருந்து பெருக்கெடுத்த இரத்தம் பூமியைச் சகதியாக்கியது. நேர்மாறான அச்செயலைக் கண்டு கடுங்கோபங்கொண்ட கார்த்தவீர்யார்ஜுனன் போர்க்களத்தை நோக்கி விரைந்தான்.
பதம் 9.15.33
அதார்ஜுன: பஞ்ச-சதேஷு பாஹுபிர்
தனுஹ்ஸு பாணான் யுகபத் ஸ ஸந்ததே
ராமாய ராமோ ‘ஸ்த்ர-ப்ருதாம் ஸமக்ரணீஸ்
தானி ஏக-தன்வேஷுபிர் ஆச்சினத் ஸமம்
அத—அதன்பிறகு; அர்ஜுன:—கார்த்தவீர்யார்ஜுனன்; பஞ்ச-சதேஷு—ஐநூறு; பாஹுபி:—அவனது கரங்களுடன்; தனுஹ்ஷு—விற்களில்; பாணான்—அம்புகளை; யுகபத்—ஒரே சமயத்தில்; ஸ:—அவன்; ஸந்ததே—பொருந்தினான்; ராமாய— பகவான் பரசுராமரைக் கொல்வதற்காக; ராம:—பகவான் பரசுராமர்; அஸ்த்ர-ப்ருதாம்—ஆயுதங்களைப் பிரயோகிக்கக்கூடிய எல்லா வீரர்களிலும்; ஸமக்ரணீ:—மிகச் சிறந்தவரான; தானி—கார்த்தவீர்யார்ஜுனனின் எல்லா விற்களையும்; ஏக-தன்வா—ஒரு வில்லைக் கொண்டே; இஷுபி—அம்புகள்; ஆச்சினத்—கண்டந்துண்டமாக வெட்டினார்; ஸமம்—உடன்.
பிறகு கார்த்தவீர்யார்ஜுனன், தன்னுடைய ஆயிரம் கரங்களைக் கொண்டு, பகவான் பரசுராமரை கொல்வதற்காக, ஒரே சமயத்தில் ஐநூறு விற்களில் அம்புகளைப் பொருத்தினான், ஆனால் வீரசிரோன்மணியான பகவான் பரசுராமர் ஒரே வில்லில் போதுமான அம்புகளை விட்டு, கார்த்தவீர்யார்ஜுனனின் கைகளிலிருந்த அம்புகளையும், விற்களையும் கண்டந்துண்டமாக வெட்டித் தள்ளினார்.
பதம் 9.15.34
புன: ஸ்வ-ஹஸ்தைர் அசலான் ம்ருதே ‘ங்ரிபான்
உத்க்ஷிப்ய வேகாத் அபிதாவதோ யுதி
புஜான் குடாரேண கடோர-நேமினா
சித்சேத ராம: ப்ரஸபம் து அஹேர் இவ
புன:—மீண்டும்; ஸ்வ-ஹஸ்தை:—அவன் தன் கைகளால்; அசலான்—குன்றுகளையும்; ம்ருதே—போர்க்களத்தில்; அங்ரிபான்—மரங்களையும்; உத்க்ஷிப்ய—பிடிங்கி எடுத்தபின்; வேகாத்—வேகமாக; அபிதாவத:—ஆவேசத்துடன் ஓடியவனின்; யுதி—போர்க்களத்தில்; புஜான்—எல்லாக் கைகளையும்; குடாரேண—அவருடைய கோடரியால்; கடோர-நேமினா—மிகவும் கூரிய; சிச்சேத—கண்டந்துண்டமாக வெட்டினார்; ராம:—பகவான் பரசுராமர்; ப்ரஸபம்—பெரும் வலிமையுடன்; து—ஆனால்; அஹ:-இவ—ஒரு பாம்பின் படங்களைப் போலவே.
தன் அம்புகள் கண்டந்துண்டமாக வெட்டி எறியப்பட்டதும், கார்த்தவீர்யார்ஜுனன் பல மரங்களையும், குன்றுகளையும் தன் கரங்களால் பிடிங்கியெடுத்துக் கொண்டு, பகவான் பரசுராமரைக் கொல்ல மீண்டும் அவரை நோக்கி ஓடினான். ஆனால் பரசுராமர் பிறகு, பாம்பின் படங்களை ஒருவன் வெட்டி வீழ்த்துவது போல், கார்த்தவீர்யார்ஜுனனின் கரங்களை வெட்டி வீழ்த்தினார்.
பதங்கள் 9.15.35 – 9.15.36
க்ருத்த-பாஹோ: சிரஸ் தஸ்ய கிரே: ஸ்ருங்கம் இவாஹரத்
ஹதே பிதரி தத்-புத்ரா அயுதம் துத்ருவர் பயாத்
அக்னிஹோத்ரீம் உபாவர்த்ய ஸவத்ஸாம் பர-வீர-ஹா
ஸமுபேதயாஸ்ரமம் பித்ரே பரிக்லிஷ்டாம் ஸமர்ப்பயத்
க்ருத்த-பாஹோ:—கரங்கள் துண்டிக்கப்பட்ட கார்த்தவீர்யார்ஜுனனின்; சிர:—தலையை; தஸ்ய—அவனுடைய (கார்த்தவீர்யார்ஜூனன்); கிரே:—ஒரு மலையின்; ஸ்ருங்கம்—சிகரம்; இவ—போல்; ஆஹரத்—(பரசுராமர்) அவனது உடலிலிருந்து அறுத்துத் தள்ளினார்; ஹதே பிதரி—அவர்களுடைய தந்தை கொல்லப்பட்ட போது; தத்-புத்ரா:—அவனுடைய மகன்கள்; அயுதம்—பத்தாயிரம்; துத்ருவு:—ஓட்டம் பிடித்தனர்; பயாத்—பயத்தால்; அக்னிஹோத்ரீம்—காமதேனுவை; உபாவர்த்ய—அருகில் கொண்டுவந்து; ஸ-வத்ஸாம்—அதன் கன்றுடன்; பர-வீர-ஹா—எதிரிகளின் வீரர்களை கொல்லக்கூடியவரான பரசுராமர்; ஸமுபேத்ய—திரும்பிச் சென்றபின்; ஆஸ்ரமம்—அவரது தந்தையின் ஆசிரமத்திற்கு; பித்ரே—அவரது தந்தையிடம்; பரிக்லிஷ்டாம்—பெருந்துன்பத்திற்கு உள்ளான; ஸமர்பயத்—ஒப்படைத்தார்.
அதன்பிறகு, தன் கரங்களை இழந்த கார்த்தவீர்யார்ஜுனனின் தலையை பரசுராமர், ஒரு மலைச் சிகரத்தை துண்டிப்பது போல் வெட்டி வீழ்த்தினார். தங்களுடைய தந்தை கொல்லப்பட்டதைக் கண்ட கார்த்தவீர்யார்ஜுனனின் பத்தாயிரம் மகன்களும் பயத்தால் ஓட்டம் பிடித்தனர். எதிரிகளைக் கொன்றபின், பெரும்துன்பத்திற்கு ஆளாகியிருந்த காமதேனுவை விடுவித்த பரசுராமர், கன்றுடன் அதைத் தமது ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து, தம் தந்தையான ஜமதக்னியிடம் அதை ஒப்படைத்தார்.
பதம் 9.15.37
ஸ்வ-கர்ம தத் க்ருதம் ராம: பித்ரே ப்ராத்ருப்ய ஏவ ச
வர்ணயாம் ஆஸ தச் ச்ருத்வா ஜமதக்னிர் அபாஷத
ஸ்வ-கர்ம—தமது சொந்த செயல்கள்; தத்—அச்செயல்களை எல்லாம்; க்ருதம்—செய்யப்பட்ட; ராம:—பரசுராமர்; பித்ரே—தம் தந்தையிடம்; ப்ராத்ருப்ய:—தம் சகோதரர்களிடம்; ஏவச—மேலும்; வர்ணயாம் ஆஸ—விவரித்தார்; தத்—அதை; ஸ்ருத்வா—கேட்டபின்; ஜமதக்னி:—பரசுராமரின் தந்தை; அபாஷத—பின்வருமாறு கூறினார்.
கார்த்தவீர்யார்ஜுனனை தாம் கொன்றதைப் பற்றி பரசுராமர் தம் தந்தையிடமும், சகோதரர்களிடமும் விவரித்தார். அதைக் கேட்ட ஜமதக்னி தம் புத்திரரிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 9.15.38
ராம ராம மஹாபாஹோ பவான் பாபம் அகாரஷீத்
அவதீன் நரதேவம் யத் ஸர்வ-தேவமயம் வ்ருதா
ராம ராம—அன்பு மகனே பரசுராமா; மஹோபாஹோ—மகாவீரனே; பவான்—நீ; பாபம்—பாவம்; அகாரஷீத்—செய்துவிட்டாய்; அவதீத்—கொன்று விட்டாய்; நரதேவம்—அரசனை; யத்—யார்; ஸர்வ-தேவ-மயம்—சர்வதேவ வடிவினனான; வ்ருதா—வீணாக.
மகாவீரனே, அருமைப் புதல்வனே பரசுராமா, சர்வதேவ வடிவினனான அரசனைக் கொன்றதால் நீ பாவம் செய்துவிட்டாய்.
பதம் 9.15.39
வயம் ஹி ப்ராஹ்மணாஸ் தாத க்ஷமயார்ஹணதாம் கதா:
யயா லோக-குருர் தேவ: பாரமேஷ்ட்யம் அகாத் பதம்
வயம்—நாம்; ஹி—உண்மையில்; ப்ராஹ்மணா:—தகுதியுடைய பிராமணர்களாகிய; தாத—அருமைப் புதல்வனே; க்ஷமயா—மன்னிக்கும் குணத்துடன்; அர்ஹணதாம்—வழிபடத்தக்க பதவியை; கதா:—நாம் அடைந்துள்ளோம்; யயா—இத்தகுதியால்; லோக-குரு:—பிரபஞ்சத்தின் ஆன்மீக குரு; தேவ:—பிரம்மதேவர்; பாரமேஷ்ட்யம்—பிரபஞ்சத்திலேயே உயர்ந்தவரான; அகாத்—அடைந்துள்ளார்; பதம்—பதவியை.
அருமைப் புதல்வனே, நாம் பிராமணர்கள். நம்முடைய மன்னிக்கும் குணத்தால்தான் பொதுமக்களுக்கிடையில் நாம் வழிபாட்டுக்குரியவர்களாக இருக்கிறோம். இக்குணத்தினால்தான் பிரபஞ்சத்தின் பரம குருவாகிய பிரம்மதேவரும் தமது பதவியை அடைந்துள்ளார்.
பதம் 9.15.40
க்ஷமயா ரோசதே லக்ஷ்மீர் ப்ராஹ்மீ ஸௌரீ யதா ப்ரபா
க்ஷமிணாம் ஆசு பகவாம்ஸ் துஷ்யதே ஹரிர் ஈஸ்வர:
க்ஷமயா—மன்னிப்பதாலேயே; ரோசதே—இன்பமூட்டுகிறது; லக்ஷ்மீ:—லக்ஷ்மிதேவி; ப்ராஹ்மீ—பிராமண தகுதிகளுடனான தொடர்பில்; ஸௌரீ—சூரியதேவன்; யதா—போல்; ப்ரபா—சூரிய ஒளி; க்ஷமிணாம்—மன்னிக்கும் குணமுள்ள பிராமணர்களிடம்; ஆசு—மிகவிரைவில்; பகவான்—பரமபுருஷ பகவான்; துஷ்யதே—திருப்தியடைகிறார்; ஹரி:—பகவான்; ஈஸ்வர:—பரமேசுவரரான.
மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்வதே ஒரு பிராமணரின் கடமையாகும். இக்குணம் சூரியனைப் போல் பிரகாசிக்கிறது. பரம புருஷராகிய ஹரி மன்னிப்பவர்களிடம் மகிழ்ச்சியடைகிறார்.
பதம் 9.15.41
ராஜ்ஞோ மூர்தாபிஷிக்தஸ்ய வதோ ப்ரஹ்ம-வதாத் குரு:
தீர்த்த-ஸம்ஸேவயா சாம்ஹோ ஜஹி அங்காச்யுத-சேதன:
ராஜ்ஞ:—அரசரின்; மூர்த-அபிஷிக்தஸ்ய—சக்கரவர்த்தியென்று பிரபலமானவரை; வத:—கொல்வது; ப்ரஹ்ம-வதாத்—ஒரு பிராமணரைக் கொல்வதை விட; குரு:—கொடியதாகும்; தீர்த்த-ஸம்ஸேவயா—புண்ணிய ஸ்தலங்களை வழிபடுவதால்; ச—மேலும்; அம்ஹ:—பாவத்தை; ஜஹி—கழுவிக்கொள்; அங்க—அருமைப் புதல்வனே; அச்யுத-சேதன:—பூரண கிருஷ்ண உணர்வு உள்ளவனாகி.
அருமைப் புதல்வனே, சக்கரவர்த்தியான ஓரரசனைக் கொல்வது, ஒரு பிராமணரைக் கொல்வதைவிட கொடிய பாவமாகும். ஆனால் இப்பொழுது நீ கிருஷ்ண உணர்வுடையவனாகி, புண்ணிய ஸ்தலங்களை வழிபடுவாயானால், இம்மகாபாவத்திற்கு உன்னால் பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “பகவானின் அவதாரமான மாவீரர் பரசுராமர்” எனும் தலைப்பை கொண்ட பதினைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.