அத்தியாயம் – 15
பகவானின் அவதாரமான
மாவீரர் பரசுராமர்
பதம் 9.15.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, ஊர்வசியின் கர்ப்பத்திலிருந்து புரூரவஸ் ஆறு மகன்களை உற்பத்தி செய்தார். அவர்கள் ஆயு, சுருதாயு, சத்யாயு, ரயன், விஜயன் மற்றும் ஜயன் ஆகியோராவர்.
பதங்கள் 9.15.2 – 9.15.3 : சுருதாயுவின் மகன் வசுமான்; சத்யாயுவின் மகன் சுருதஞ்சயன்; ரயனின் மகன் ஏகன்; ஜயனின் மகன் அமிதன்; மற்றும் விஜயனின் மகன் பீமன்; பீமனின் மகன் காஞ்சனன்; காஞ்சனனின் மகன் ஹோத்ரகன்; ஹோத்ரகனின் மகன் ஜஹ்னு. அவர் கங்கை நீர் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டார்.
பதம் 9.15.4 : ஜஹ்னுவின் மகன் புரு, புருவின் மகன் பலாகன், பலாகனின் மகன் அஜகன், மற்றும் அஜகனின் மகன் குசன், குசனுக்கு, குசாம்பு, தனயன், வசு, குசநாபன் என்ற நான்கு மகன்கள். குசாம்புவின் மகன் காதி.
பதங்கள் 9.15.5 – 9.15.6 : காதி மகாராஜனுக்கு சத்தியவதி என்றொரு மகளிருந்தாள். அவளைத் தனக்கு மனைவியாக்கும்படி பிராமணரான ரிசிக முனிவர் அரசரைக் கேட்டார். ஆனால் ரிசிக முனிவர் தன் மகளுக்குக் கணவராகும் தகுதியற்றவர் என்றெண்ணிய அரசர், அந்த பிராமணரிடம் கூறினார், “முனிவரே, நான் குச வம்சத்தைச் சேர்ந்தவன். நாங்கள் செல்வச் சிறப்புடைய க்ஷத்திரியர்கள் என்பதால் என் மகளுக்கு நீங்கள் கொஞ்சம் ஸ்ரீதனம் கொடுக்க வேண்டும். எனவே, ஒருகாது கருப்பாகவும், உடல் நிலவொளியைப் போல் பிரகாசமாகவும் உள்ள ஆயிரம் குதிரைகளை நீங்கள் கொண்டுவர வேண்டும்.”
பதம் 9.15.7 : காதி மகாராஜனின் நிபந்தனையைக் கேட்ட ரிசிக முனிவர் அரசரின் மனதைப் புரிந்து கொண்டார். எனவே, அவர் வருணதேவனிடம் சென்று, காதி கேட்ட ஆயிரம் குதிரைகளை வாங்கி வந்தார் அக்குதிரைகளை காதியிடம் ஒப்படைத்தபின் அவருடைய அழகிய மகளை முனிவர் மணந்தார்.
பதம் 9.15.8 : அதன்பிறகு ஆளுக்கொரு குழந்தையைப் பெற விரும்பிய ரிசிக முனிவரின் மனைவியும், மாமியாரும், ஒரு யாக நிவேதனத்தைச் சமைக்கும்படி முனிவரை வேண்டினர். இவ்வாறாக ரிசிக முனிவர், பிராமண மந்திரத்தை உச்சரித்து தன் மனைவிக்குரிய ஒரு நிவேதனத்தையும், க்ஷத்திரிய மந்திரத்தை உச்சரித்து தன் மாமியாருக்குரிய ஒரு நிவேதனத்தையும் சமைத்தார். பிறகு குளிப்பதற்காக அவர் வெளியே சென்றார்.
பதம் 9.15.9 : அதற்கிடையில், ரிசிக முனிவர் தன் மனைவிக்காகச் சமைத்துள்ள நிவேதனம் சிறந்ததாக இருக்கும் என்றெண்ணிய சத்தியவதியின் தாய், அந்த நிவேதனத்தை தனக்குக் கொடுக்கும்படி தன் மகளிடம் கேட்டாள். எனவே சத்தியவதியும் தனக்கென சமைக்கப்பட்ட நிவேதனத்தை தன் தாயிடம் கொடுத்துவிட்டு, தாயின் நிவேதனத்தைத் தானே உண்டாள்.
பதம் 9.15.10 : குளித்துவிட்டு வீடு திரும்பிய ரிசிக முனிவர், தான் இல்லாத சமயத்தில் நடந்திருப்பதைப் புரிந்துகொண்டார். இதனால் தன் மனைவியிடம் அவர் கூறினார், “நீ பெருந்தவற்றைச் செய்துவிட்டாய். உன் மகன் எல்லோரையும் தண்டிக்கக்கூடிய கொடூரமான ஒரு க்ஷத்திரியனாக இருப்பான். உன் சகோதரனோ ஆன்மீக விஞ்ஞானத்தில் சிறந்த பண்டிதனாக விளங்குவான்”.
பதம் 9.15.11 : ஆயினும் அமைதியான வார்த்தைகளால் ரிசிக முனிவரை சமாதானப்படுத்திய சத்தியவதி, தன் மகன் கொடூரமான ஒரு க்ஷத்திரியனைப் போல் இருக்க வேண்டாம் என்று வேண்டினாள். ரிசிக முனிவர் பதிலளித்தார், “அப்படியானால் உன் பேரன் ஒரு கொடூரமான க்ஷத்திரியனாக இருப்பான்.” இவ்வாறாக சத்தியவதியின் மகனாக ஜமதக்னி பிறந்தார்.
பதங்கள் 9.15.12 – 9.15.13 : உலகை புனிதப்படுத்துவதற்காக சத்தியவதி பிறகு கௌசிகி எனும் புண்ணிய நதியாக மாறினாள். அவளது மகன் ஜமதக்னி ரேணுவின் பெண்ணாகிய ரேணுகாவை மணந்தார். ஜமதக்னியின் மூலமாக ரேணுகாவின் கர்ப்பத்திலிருந்து வசுமான் முதலான பல மகன்கள் பிறந்தனர். இவர்களுள் இளையவர்தான் ராமர், அல்லது பரசுராமர் என்று பிரசித்தி பெற்றார்.
பதம் 9.15.14 : கற்றறிந்த பண்டிதர்கள் இந்த பரசுராமரை வாசுதேவனின் புகழ் பெற்ற அவதாரமாக ஏற்றுக் கொள்கின்றனர். கார்த்தவீர்யார்ஜுனனின் வம்சத்தை அழித்த பரசுராமர், இருபத்தொரு தடவைகள் பூமியில் க்ஷத்திரியர்களே இல்லாதபடி அவர்களைக் கொன்றார்.
பதம் 9.15.15 : ரஜோ மற்றும் தமோ குணங்களினால் மிகவும் இறுமாப்புக் கொண்டதால், க்ஷத்திரிய வம்சத்தினர், பிராமணர்களால் வகுக்கப்பட்ட சட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் மதப்பற்றைத் துறந்தனர். இதனால் பரசுராமர் அவர்களைக் கொன்றார். அவர்களுடைய குற்றம் அவ்வளவு பெரியதல்ல என்றாலும், உலக பாரத்தைக் குறைப்பதற்காக அவர்களை அவர் கொன்றார்.
பதம் 9.15.16 : பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: பரமபுருஷரின் அவதாரமான பகவான் பரசுராமரின் முன், புலனடக்கம் இல்லாத க்ஷத்திரியர்களால் செய்யப்பட்ட எந்த குற்றத்திற்காக பகவான் மீண்டும் மீண்டும் க்ஷத்திரிய குலத்தை அழித்தார்?
பதங்கள் 9.15.17 – 9.15.19 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: க்ஷத்திரியர்களுள் சிறந்தவனும், ஹேஹயர்களின் அரசனுமான கார்த்தவீர்யார்ஜுனன், பகவான் ஸ்ரீ நாராயணரின் அம்சமான தத்தாதிரேயரை வழிபட்டு ஆயிரம் கரங்களைப் பெற்றான். மேலும் எதிரிகளால் வெல்ல முடியாதவனாக இருந்த அவன் தடைப்படாத உணர்வாற்றல், அழகு, செல்வாக்கு, பலம், புகழ் ஆகியவற்றையும், அணிமா, லகிமா முதலான சித்திகளை அடையக்கூடிய யோக சக்தியையும் பெற்றிருந்தான். இவ்வாறு முழு ஐசுவர்யத்துடன் விளங்கிய அவன், எதிர்ப்பின்றி காற்றைப்போல் பிரபஞ்சம் முழுவதிலும் சஞ்சரித்தான்.
பதம் 9.15.20 : ஒரு சமயம், திமிர் பிடித்தவனான கார்த்தவீர்யார்ஜுனன், வெற்றி மாலையணிந்து பெண்களால் சூழப்பட்டபடி நர்மதை நீரில் விளையாடிக் கொண்டிருக்கையில், தன் கைகளால் நீரோட்டத்தைத் தடுத்தான்.
பதம் 9.15.21 : கார்த்தவீர்யார்ஜுனன் ஆற்று நீரை எதிர்த்திசையில் ஓடச் செய்ததால், மாஹிஷ்மதி நகருக்கருகில், நர்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த இராவணனின் கூடாரம் வெள்ளத்தில் மூழ்கியது. தன்னை மகாவீரனென்று கர்வித்திருந்த பத்துத்தலை இராவணனால், கார்த்தவீர்யார்ஜுனனின் அந்த வீரியத்தைப் பொறுக்க முடியவில்லை.
பதம் 9.15.22 : இவ்வாறாக பெண்களின் முன்னிலையில் கார்த்தவீர்யார்ஜுனனை அவமதிக்க முயன்று குற்றம் புரிந்த இராவணனை அவன், விளையாட்டாக ஒரு குரங்கைப் பிடிப்பதுபோல் கைப்பற்றி, மாஹிஷ்மதி நகரில் காவலில் வைத்து, பின்னர் அவனை விடுவித்தான்.
பதம் 9.15.23 : ஒருசமயம் கார்த்தவீர்யார்ஜுனன் அடர்ந்ததொரு வனத்தில் வேட்டையாடித் திரிகையில், தற்செயலாக ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான்.
பதம் 9.15.24 : காட்டில் கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்த ஜமதக்னி முனிவர், அரசனையும், அவனது வீரர்களையும், மந்திரிகளையும், வாகனங்களையும் நன்கு வரவேற்று உபசரித்தார். விரும்பியதையெல்லாம் அளிக்கக் கூடிய ஒரு காமதேனு பசுவை அவர் வைத்திருந்ததால், இவ்விருந்தினர்களை உபசரிப்பதற்குத் தேவையானதை எல்லாம் அவர் கொடுத்தார்.
பதம் 9.15.25 : ஜமதக்னி, காமதேனுவின் உருவில் ஓர் இரத்தினத்தை வைத்திருந்ததால், அவர் தன்னைவிட சக்திவாய்ந்தவராகவும், செல்வந்தராகவும் இருந்ததாக கார்த்தவீர்யார்ஜுனன் நினைத்தான். எனவே அவனும், அவனது ஆட்களான ஹேஹயர்களும் ஜமதக்னியின் உபசரிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அக்னிஹோத்திர யாகம் செய்வதற்குப் பயன்பட்ட அக்காமதேனுவை அவர்கள் அடைய விரும்பினர்.
பதம் 9.15.26 : தன் பெளதிக சக்தியால் திமிர்பிடித்தவனாக இருந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஜமதக்னியின் காமதேனுவைக் கவர்ந்து செல்லும்படி தனது ஆட்களைத் தூண்டினான். அவர்களும் கதறும் அப்பசுவையும், அதன் கன்றையும் பலாத்காரமாக மாஹிஷ்மதிக்குக் கொண்டு சென்றனர்.
பதம் 9.15.27 : காமதேனுவுடன் அரசன் சென்றபின், பரசுராமர் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தார். ஜமதக்னியின் இளைய புத்திரரான பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனின் தகாத செயலைப்பற்றி கேள்விப்பட்டதும் மிதிபட்ட பாம்புபோல் வெகுண்டார்.
பதம் 9.15.28 : பயங்கரமான தமது கோடரியையும், கேடயத்தையும், வில்லுடன் அம்பறாத் தூணியையும் கைக்கொண்ட பகவான் பரசுராமர், கடுங்கோபத்துடன், ஒரு சிங்கம் யானையை துரத்துவதுபோல் கார்த்தவீர்யார்ஜுனனை துரத்திச் சென்றார்.
பதம் 9.15.29 : தன் தலைநகரமான மாஹிஷ்மதிக்குள் நுழைந்த கார்த்தவீர்யார்ஜுனன், பிருகு வம்சத்தில் சிறந்தவரான பகவான் பரசுராமர் ஒரு கோடரியையும், கேடயத்தையும், வில்லுடன் அம்புகளையும் கைக்கொண்டு தன்னைப் பின்தொடர்ந்து வருவதைக் கண்டான். அவர் ஒரு கருப்பு மான்தோலை அணிந்திருந்தார். அவரது ஜடா முடி சூரியஒளி போல் பிரகாசித்தது.
பதம் 9.15.30 : பரசுராமரைக் கண்டு அஞ்சிய கார்த்தவீர்யார்ஜுனன், உடனே கதாயுதங்கள், வாள்கள், ரிஷ்டிகள், சதக்னிகள் மற்றும் சக்திகள் முதலான பல்வேறு ஆயுதங்களைக் கொண்ட பல யானைப்படைகளையும், தேர்ப்படைகளையும், குதிரைப்படைகளையும் மற்றும் காலாட் படைகளையும் அனுப்பி அவருடன் போரிடச் செய்தான். பரசுராமரைத் தடுப்பதற்காக கார்த்தவீர்யார்ஜுனன் மொத்தத்தில் பதினேழு முழு அக்ஷௌணிகளை அனுப்பினான். ஆனால் பகவான் பரசுராமர் தனியாக அவர்களனைவரையும் கொன்றார்.
பதம் 9.15.31 : பகவான் பரசுராமர் எதிரிகளின் படைபலத்தைக் கொல்வதில் கைதேர்ந்தவர் என்பதால், மனோவேகத்திலும், காற்று வேகத்திலும் செயற்பட்டு எதிரிகளைத் தமது கோடாரியால் (பரசு) வெட்டித் தள்ளினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் எதிரிகள் தங்களுடைய கால்களும், கைகளும், தோள்களும் துண்டிக்கப்பட்டு விழுந்தனர். அவர்களுடைய தேரோட்டிகள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய வாகனங்களான யானைகளும், குதிரைகளும் நாசம் செய்யப்பட்டன.
பதம் 9.15.32 : தமது கோடரியையும், அம்புகளையும் திறமையாகக் கையாண்ட பகவான் பரசுராமர் கேடயங்களையும், கொடிகளையும், விற்களையும் மற்றும் கார்த்தவீர்யார்ஜுனனுடைய வீரர்களின் உடல்களையும் கண்டதுண்டமாக வெட்டித் தள்ளினார். போர்க்களத்தில் விழுந்த அவர்களுடைய உடல்களிலிருந்து பெருக்கெடுத்த இரத்தம் பூமியைச் சகதியாக்கியது. நேர்மாறான அச்செயலைக் கண்டு கடுங்கோபங்கொண்ட கார்த்தவீர்யார்ஜுனன் போர்க்களத்தை நோக்கி விரைந்தான்.
பதம் 9.15.33 : பிறகு கார்த்தவீர்யார்ஜுனன், தன்னுடைய ஆயிரம் கரங்களைக் கொண்டு, பகவான் பரசுராமரை கொல்வதற்காக, ஒரே சமயத்தில் ஐநூறு விற்களில் அம்புகளைப் பொருத்தினான், ஆனால் வீரசிரோன்மணியான பகவான் பரசுராமர் ஒரே வில்லில் போதுமான அம்புகளை விட்டு, கார்த்தவீர்யார்ஜுனனின் கைகளிலிருந்த அம்புகளையும், விற்களையும் கண்டந்துண்டமாக வெட்டித் தள்ளினார்.
பதம் 9.15.34 : தன் அம்புகள் கண்டந்துண்டமாக வெட்டி எறியப்பட்டதும், கார்த்தவீர்யார்ஜுனன் பல மரங்களையும், குன்றுகளையும் தன் கரங்களால் பிடிங்கியெடுத்துக் கொண்டு, பகவான் பரசுராமரைக் கொல்ல மீண்டும் அவரை நோக்கி ஓடினான். ஆனால் பரசுராமர் பிறகு, பாம்பின் படங்களை ஒருவன் வெட்டி வீழ்த்துவது போல், கார்த்தவீர்யார்ஜுனனின் கரங்களை வெட்டி வீழ்த்தினார்.
பதங்கள் 9.15.35 – 9.15.36 : அதன்பிறகு, தன் கரங்களை இழந்த கார்த்தவீர்யார்ஜுனனின் தலையை பரசுராமர், ஒரு மலைச் சிகரத்தை துண்டிப்பது போல் வெட்டி வீழ்த்தினார். தங்களுடைய தந்தை கொல்லப்பட்டதைக் கண்ட கார்த்தவீர்யார்ஜுனனின் பத்தாயிரம் மகன்களும் பயத்தால் ஓட்டம் பிடித்தனர். எதிரிகளைக் கொன்றபின், பெரும்துன்பத்திற்கு ஆளாகியிருந்த காமதேனுவை விடுவித்த பரசுராமர், கன்றுடன் அதைத் தமது ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து, தம் தந்தையான ஜமதக்னியிடம் அதை ஒப்படைத்தார்.
பதம் 9.15.37 : கார்த்தவீர்யார்ஜுனனை தாம் கொன்றதைப் பற்றி பரசுராமர் தம் தந்தையிடமும், சகோதரர்களிடமும் விவரித்தார். அதைக் கேட்ட ஜமதக்னி தம் புத்திரரிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 9.15.38 : மகாவீரனே, அருமைப் புதல்வனே பரசுராமா, சர்வதேவ வடிவினனான அரசனைக் கொன்றதால் நீ பாவம் செய்துவிட்டாய்.
பதம் 9.15.39 : அருமைப் புதல்வனே, நாம் பிராமணர்கள். நம்முடைய மன்னிக்கும் குணத்தால்தான் பொதுமக்களுக்கிடையில் நாம் வழிபாட்டுக்குரியவர்களாக இருக்கிறோம். இக்குணத்தினால்தான் பிரபஞ்சத்தின் பரம குருவாகிய பிரம்மதேவரும் தமது பதவியை அடைந்துள்ளார்.
பதம் 9.15.40 : மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்வதே ஒரு பிராமணரின் கடமையாகும். இக்குணம் சூரியனைப் போல் பிரகாசிக்கிறது. பரம புருஷராகிய ஹரி மன்னிப்பவர்களிடம் மகிழ்ச்சியடைகிறார்.
பதம் 9.15.41 : அருமைப் புதல்வனே, சக்கரவர்த்தியான ஓரரசனைக் கொல்வது, ஒரு பிராமணரைக் கொல்வதைவிட கொடிய பாவமாகும். ஆனால் இப்பொழுது நீ கிருஷ்ண உணர்வுடையவனாகி, புண்ணிய ஸ்தலங்களை வழிபடுவாயானால், இம்மகாபாவத்திற்கு உன்னால் பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்.