அத்தியாயம் – 13
திமி மகராஜனின் வம்சம்
பதம் 9.13.1
ஸ்ரீ-சுக உவாச
நிமிர் இக்ஷ்வாகு-தனயோ வஸிஷ்டம் அவ்ருதர்த்விஜம்
ஆரப்ய ஸத்ரம் ஸோ ‘பி ஆஹ சக்ரேண ப்ராக் வ்ருதோ ‘ஸ்மி போ:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; நிமி:—நிமி மகாராஜன்; இக்ஷ்வாகு-தன்ய:—இக்ஷ்வாகு மகாராஜனின் மகன்; வஸிஷ்டம்—மாமுனிவர் வசிஷ்டரை; அவ்ருத—நியமித்தார்; ரித்விஜம்—யாகத்தின் தலைமைப் புரோகிதராக; ஆரப்ய—ஆரம்பித்ததும்; ஸத்ரம்—யாகத்தை; ஸ:—அவர், வசிஷ்டர்; அபி—கூட; ஆஹ—கூறினார்; சக்ரேண—இந்திரனால்; ப்ராக்—முன்பே; வ்ருத: அஸ்மி—நான் நியமிக்கப்பட்டுவிட்டேன்; போ:—நிமி மகாராஜனே.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார். இக்ஷ்வாகு புத்திரரான நிமி மகாராஜன், யாகங்களை ஆரம்பித்த பின், மாமுனிவர் வசிஷ்டரை தலைமைப் புரோகிதரின் பதவியை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது வசிஷ்டர் கூறினார், “அன்புள்ள நிமி மகாராஜனே, இந்திரனால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு யாகத்தில் இதே பதவியை நான் முன்பே ஒப்புக் கொண்டு விட்டேன்.
பதம் 9.13.2
தம் நிர்வர்த்யாகமிஷ்யாமி தாவன் மாம் ப்ரதிபாலய
தூஷ்ணீம் ஆஸீத் க்ருஹ-பதி: ஸோ ‘பீந்ரஸ்யாகரோன் மகம்
தம்—அந்த யாகத்தை; நிர்வர்த்ய—முடித்த பின்; ஆகமிஷ்யாமி—நான் வருகிறேன்; தாவத்—அதுவரை; மாம்—எனக்காக (வசிஷ்டர்); ப்ரதிபாலய—காத்திரும்; தூஷ்ணீம்—மௌனமாக; ஆஸீத்—இருந்தார்; க்ருஹ-பதி—நிமி மகாராஜன்; ஸ:—அவர், வசிஷ்டர்; அபி—கூட; இந்ரஸ்ய—இந்திரனின்; அகரோத்—செய்தார்; மகம்—யாகத்தை.
“இந்திரனின் யாகத்தை முடித்தபின் நான் திரும்பி வருவேன். அதுவரை தயவுசெய்து எனக்காகக் காத்திரும்” என்று கூறினார். நிமி மகாராஜன் மௌனமானார். வசிஷ்டரும் இந்திரனுக்காக யாகம் செய்யத் துவங்கினார்.
பதம் 9.13.3
நிமிஸ் சலம் இதம் வித்வான் ஸத்ரம் ஆரபதாத்மவான்
ருத்விக்பிர் அபரைஸ் தாவன் நாகமத் யாவதா குரு:
நிமி:—நிமி மகாராஜன்; சலம்—நிலையற்றது, எந்த நொடியிலும் முடிந்துவிடக்கூடியது; இதம்—இது (வாழ்வு); வித்வான்—இவ்வுண்மையை நன்கு அறிந்திருந்ததால்; ஸத்ரம்—யாகத்தை; ஆரபத—ஆரம்பித்தார்; ஆத்மவான்—தன்னுணர்வு பெற்றவர்; ரித்விக்பி:—புரோகிதர்களைக் கொண்டு; அபரை:—வசிஷ்டரை விட்டு பிற; தாவத்—இப்போதைக்கு; ந—இல்லை; ஆகமத்—திரும்பினார்; யாவதா—நீண்ட காலம்; குரு:—அவரது ஆன்மீக குரு (வசிஷ்டர்).
நிமி மகாராஜன் தன்னுணர்வு பெற்ற ஓராத்மா என்பதால், இவ்வாழ்வு நிலையற்றதென கருதினார். எனவே, வசிஷ்டருக்காக நீண்ட காலம் காத்திருப்பதற்குப் பதிலாக, வேறு புரோகிதர்களைக் கொண்டு அவர் யாகத்தைத் துவங்கினார்.
பதம் 9.13.4
சிஷ்ய வ்யதிக்ரமம் வீக்ஷ்ய தம் நிர்வர்த்யாகதோ குரு:
அசபத் பததாத் தேஹோ நிமே: பண்டித-மானின:
சிஷ்ய-வ்யதிக்ரமம்—குருவின் கட்டளையை சிஷ்யன் மீறியதை; வீக்ஷ்ய—கண்டு; தம்—இந்திரனால் செய்யப்பட்ட யாகத்தை; நீர்வர்த்ய—முடித்த பின்; ஆகத:—அவர் திரும்பி வந்தபோது; குரு:—வசிஷ்டர்; அசபத்—அவர் நிமி மகாராஜனைச் சபித்தார்; பததாத்—அது விழட்டும்; தேஹ:—தேகம்; நிமே:—நிமி மகாராஜனின்; பண்டித-மானின:—(குருவின் கட்டளையை மீறும் அளவிற்கு) தன்னை பண்டிதனாகக் கருதும்.
இந்திரனுக்காக யாகத்தைச் செய்து முடித்தபின் திரும்பி வந்த குரு வசிஷ்டர், தன் சீடரான நிமி மகாராஜன் தன் உபதேசத்தை மீறிவிட்டதைக் கண்டார். இதனால் வசிஷ்டர் பின்வருமாறு அவரைச் சபித்தார்: “தன்னைப் பண்டிதனென்று கருதும் நிமியின் ஜட உடல் உடனே விழட்டும்.
பதம் 9.13.5
நிமி: ப்ரதிததௌ சாபம் குரவே ‘தர்ம-வர்தினே
தவாபி பததாத் தேஹோ லோபாத் தர்மம் அஜானத:
நிமி:—நிமி மகாராஜன்; ப்ரதிததெள-சாபம்—பதில் சாபமிட்டார்; குரவே—அவரது குருவான வசிஷ்டருக்கு; அதர்ம-வர்தினே—(குற்றமற்ற அவரது சீடரைச் சபித்து) அதர்மத்தால் தூண்டப்பட்டவர்; தவாபி—உம்முடையதும்; பததாத்—அது விழட்டும்; தேஹ:—உடல்; லோபாத்—பேராசையால்; தர்மம்—தர்மத்தை; அஜானத:—அறியாமல்.
நிமி மகாராஜன் குற்றம் செய்யாத போதிலும், தேவையின்றி அவரைச் சபித்ததற்காக, நிமியும் தன் குருவை பதிலுக்குச் சபித்தார். அவர் கூறினார், “சுவர்க்க ராஜனின் நன்கொடையைப் பெறுவதற்காக, உமது சமயோசித புத்தியை நீர் இழந்தீர். எனவே இச்சாபத்தை நான் விடுகிறேன்: உமது உடலும் விழட்டும்”
பதம் 9.13.6
இதி உத்ஸஸர்ஜ ஸ்வம் தேஹம் நிமிர் அத்யாத்ம-கோவித:
மித்ரா-வருணயோர் ஜக்ஞே உர்வஸ்யாம் ப்ரபிதாமஹ:
இதி—இவ்வாறாக; உத்ஸஸர்ஜ—கைவிட்டார்; ஸ்வம்—அவரது சொந்த; தேஹம்—உடலை; நிமி:—நிமி மகாராஜன்; அத்யாத்ம-கோவித:—ஆன்மீக ஞானத்தில் பூரண தேர்ச்சி பெற்ற; மித்ரா-வருணயோ:—(ஊர்வசியின் அழகைக் கண்டு பாய்ச்சப்பட்ட) மித்ரா, வருணரின் விந்திலிருந்து; ஜக்ஞே—பிறந்தார்; உர்வஸ்யாம்—சுவர்க்க லோக விலைமாதான ஊர்வசியின் மூலமாக; ப்ரபிதாமஹ:—முப்பாட்டனார் எனப்பட்ட வசிஷ்டர்.
இதைக் கூறியபின், ஆத்ம ஞானத்தில் கைதேர்ந்தவரான நிமி மகாராஜன், தம் உடலை விட்டார். முப்பாட்டனாரான வசிஷ்டரும் தன் உடலை விட்டார். ஆனால் ஊர்வசியைக் கண்டபோது மித்திரனும், வருணனும் பாய்ச்சிய விந்தின் மூலமாக அவர் மீண்டும் பிறந்தார்.
பதம் 9.13.7
கந்த-வஸ்துஷு தத்-தேஹம் நிதாய முனி-ஸத்தமா:
ஸமாப்தே ஸத்ர-யாகே ச தேவான் ஊசு: ஸமாகதான்
கந்த-வஸ்துஷு—வாசனைத் திரவியங்களில்; தத்-தேஹம்—நிமி மகாராஜனின் உடல்; நிதாய—பாதுகாக்கப்பட்டது; முனி-ஸத்தமா:—அங்கு கூடியிருந்த மாமுனிவர்கள் அனைவரும்; ஸமாப்தே ஸத்ர-யாகே—”ஸத்ரம்” என்ற யாகத்தின் முடிவில்; ச—மேலும்; தேவான்—எல்லாத் தேவர்களிடமும்; ஊசு:—வேண்டினர் அல்லது பேசினார்; ஸமாகதான்—அங்கு கூடியிருந்த.
யாகம் செய்யப்படும் வேளையில், நிமி மகாராஜனால் கைவிடப்பட்ட அவரது உடல் வாசனைத் திரவியங்களால் பாதுகாக்கப்பட்டது. அந்த ஸத்ர-யாகத்தின் முடிவில், சிறந்த முனிவர்களும் பிராமணர்களும், அங்கு கூடியிருந்த தேவர்களிடம் பின்வருமாறு விண்ணப்பித்தனர்.
பதம் 9.13.8
ராஜ்ஞோ ஜீவது தேஹ ‘யம் ப்ரஸன்னா: ப்ரபவோ யதி
ததேதி உக்தே நிமி: ப்ராஹ மா பூன் மே தேஹ-பந்தனம்
ராஜ்ஞ:—அரசரின்; ஜீவது—மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்; தேஹ:-அயம்—(பாதுகாக்கப்பட்டுள்ள) இவ்வுடல்; ப்ரஸன்னா:—மிகவும் திருப்தியடைந்து; ப்ரபவ:—உங்களால் இதைச் செய்ய முடியும்; யதி—என்றால்; ததா—அப்படியே ஆகட்டும்; இதி—இவ்வாறாக; உக்தே—(தேவர்களால்) பதிலளிக்கப்பட்டதும்; நிமி:—நிமி மகாராஜன்; ப்ராஹ—கூறினார்; மாபூத்—அதைச் செய்ய வேண்டாம்; மே—எனது; தேஹ-பந்தனம்—மீண்டும் ஒரு ஜட உடலில் சிறைவாசத்தை.
“இந்த யாகத்தினால் நீங்கள் திருப்தி அடைந்திருப்பீர்களானால், மேலும் உண்மையாகவே உங்களால் முடியுமானால், நிமி மகாராஜனின் இவ்வுடலை உயிர்ப்பிக்க வேண்டுகிறோம்.” தேவர்கள் இவ்வேண்டுகோளுக்கு ஆமோதித்தனர். ஆனால் நிமி மகாராஜன், “தயவு செய்து மீண்டும் என்னை ஒரு ஜட உடலில் சிறைப்படுத்த வேண்டாம் என்று கூறினார்.”
பதம் 9.13.9
யஸ்ய யோகம் ந வாஞ்சந்தி வியோக-பய-காதரா:
பஜந்தி சரணாம் போஜம் முனயோ ஹரி-மேதஸ:
யஸ்ய—உடலுடன்; யோகம்—தொடர்புகொள்ள; ந— இல்லை; வாஞ்சந்தி—ஞானிகள் விரும்புவது; வியோக-பய-காதரா:—ஜட உடலை மீண்டும் விட்டுவிட வேண்டுமே என அஞ்சி; பஜந்தி—உன்னத அன்புத் தொண்டைச் செய்கின்றனர்; சரண-அம்போஜம்—பகவானின் தாமரைப் பாதங்களில்; முனய:—மிகச்சிறந்த புண்ணிய புருஷர்கள்; ஹரி-மேதஸ:—யாருடைய புத்தி, பரம புருஷராகிய ஹரியின் சிந்தனையில் எப்பொழுதும் ஆழ்ந்துள்ளதோ.
நிமி மகாராஜன் தொடர்ந்து கூறினார்: ஜட உடலை ஏற்றால், மீண்டும் அதைக் கைவிட வேண்டும் என்பதற்கு அஞ்சும் மாயாவாதிகள் பொதுவாக அதிலிருந்து விடுதலையடைய விரும்புகின்றனர். ஆனால் பகவத் தொண்டிலேயே எப்போதும் புத்தியைப் பதித்துள்ள பக்தர்கள் அதற்கு அஞ்சுவதில்லை. உண்மையில், பகவானுக்கு உன்னத அன்புத் தொண்டைச் செய்வதற்கு அவர்கள் உடலை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பதம் 9.13.10
தேஹம் நாவருருத்ஸே ‘ஹம் துஹ்க-சோக-பயாவஹம்
ஸர்வத்ராஸ்ய யதோ ம்ருத்யுர் மத்ஸ்யானாம் உதகே யதா
தேஹம்—ஒரு ஜட உடலை; ந—இல்லை; அவருருத்ஸே—ஏற்க விரும்புகிறேன்; அஹம்—நான்; துஹ்க-சோகபய-ஆவஹம்—எல்லா வகையான துன்பங்களுக்கும், விசனங்களுக்கும் மற்றும் பயத்திற்கும் காரணமான; ஸர்வத்ர—பிரபஞ்சத்தில் எங்கும், எப்பொழுதும்; அஸ்ய—பௌதிக உடல்களை ஏற்றுள்ள ஜீவராசிகளின்; யத:—என்ற காரணத்தால்; ம்ருத்யு:—மரணம்; மத்ஸ்யானாம்—மீனின்; உதகே—நீரில் வாழும்; யதா—போல்.
ஒரு ஜட உடலை ஏற்றுள்ள மீன் ஒன்று மரண பயத்தினால் எப்பொழுதும் மன விசாரத்துடன் வாழ்கிறது. எனவே, அத்தகைய ஒரு ஜட உடல் பிரபஞ்சத்தில் எல்லா வகையான துன்பங்களுக்கும், விசனங்களுக்கும், பயத்திற்கும் காரணமாக இருப்பதால், அதை ஏற்க நான் விரும்பவில்லை.
பதம் 9.13.11
தேவா ஊசு:
விதேஹ உஷ்யதாம் காமம் லோசனேஷு சரீரிணாம்
உன்மேஷண-நிமேஷாப்யாம் லக்ஷிதோ ‘த்யாத்ம-ஸம்ஸ்தித:
தேவா:-ஊசு:—தேவர்கள் கூறினர்; விதேஹ:—பௌதிக உடலில்லாமல்; உஷ்யதாம்—நீர் வாழலாம்; காமம்—உமது விருப்பம்போல்; லோசனேஷு—காட்சிக்கு உட்பட்டு; சரீரிணாம்—ஜட உடல்களைப் பெற்றவர்களின்; உன்மேஷண-நிமிஷேப்யாம்—உமது விருப்பம்போல் தோன்றி மறையலாம்; லக்ஷித:—காணப்பட்டு; அத்யாத்ம-ஸம்ஸ்தித:—ஓர் ஆன்மீக உடலில் இருப்பதாக.
தேவர்கள் கூறினர்: நிமி மகாராஜன் ஒரு ஜட உடலைப் பெறாமலேயே வாழட்டும். பரமபுருஷரின் ஓர் அந்தரங்க சகாவாக இருந்து கொண்டு, தம் விருப்பம் போல், உடல்பெற்ற சாதாரண பெளதிக மனிதனின் கண்களுக்குப் புலப்படுவதும், புலப்படாததுமாகிய ஓர் ஆன்மீக உடலில் அவர் வாழட்டும்.
பதம் 9.13.12
அராஜக-பயம் ந்ரூணாம் மன்யமானா மஹர்ஷய:
தேஹம் மமந்து: ஸ்ம நிமே: குமார: ஸமஜாயத
அராஜக-பயம்—ஓழுங்கற்ற அரசாங்கத்தினால் விளையும் ஆபத்தின் காரணத்தால்; ந்ரூணாம்—பொது மக்களுக்கு; மன்யமானா—இந்நிலையை கருத்திற்கொண்டு; மஹா-ரிஷய:—மாமுனிவர்கள்; தேஹம்—உடலை; மமந்து:—கடைந்தனர்; ஸ்ம—கடந்த காலத்தில்; நிமே:—நிமி மகாராஜனின்; குமார:—ஒரு மகன்; ஸமஜாயத—பிறந்தான்.
அதன்பிறகு, ஒழுங்கற்ற அரசாங்கத்தால் விளையக்கூடிய ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக, முனிவர்கள் நிமி மகாராஜனின் ஜட உடலைக் கடைந்தனர். இதன் பயனாக அவ்வுடலிலிருந்து ஒரு மகன் பிறந்தான்.
பதம் 9.13.13
ஜன்மனா ஜனக: ஸோ ‘பூத் வைதேஹஸ் து விதேஹஜ:
மிதிலோ மதனாஜ் ஜாதோ மிதிலா யேன நிர்மிதா
ஐன்மனா—பிறப்பால்; ஜனக:—வழக்கத்திற்கு மாறாக அசாதாரணமான முறையில் பிறந்தவர்; ஸ:—அவர்; ஆபூத்—ஆனார்; வைதேஹ:—வைதேகர் என்றும் அழைக்கப்பட்டார்; து—ஆனால்; வைதேஹ-ஐ:—காலமடைந்த நிமி மகாராஜனின் ஜட உடலிலிருந்து பிறந்தவர் என்பதால்; மிதில:—அவர் மிதிலர் என்றும் அழைக்கப்பட்டார்; மதனாத்—அவரது தந்தையின் உடலைக் கடைந்ததிலிருந்து பிறந்தவர் என்பதால்; ஜாத:—பிறந்தார்; மிதிலா—மிதிலை என்றழைப்பட்ட இராஜ்யம்; யேன—யாரால் (ஜனகரால்); நிர்மிதா—நிர்மானிக்கப்பட்டது.
அவர் வழக்கத்திற்கு மாறாகப் பிறந்ததால் ஜனகர் என்று அழைக்கப்பட்டார். தன் தந்தையின் உயிரற்ற உடலிலிருந்து பிறந்ததால் அவர் வைதேஹர் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தையின் பெளகித உடல் கடையப்பட்டதிலிருந்து பிறந்தவர் என்பதால் அவர் மிதிலர் என்று அழைக்கப்பட்டார். மிதிலை மகாராஜனாக அவர் ஒரு நகரத்தை நிர்மாணித்தார், அந்நகரம் மிதிலை என்று அழைக்கப்பட்டது.
பதம் 9.13.14
தஸ்மாத் உதாவஸுஸ் தஸ்ய புத்ரோ ‘பூன் நந்திவர்தன:
தத: ஸுகேதுஸ் தஸ்யாபி தேவராதோ மஹீபதே
தஸ்மாத்—மிதிலையிலிருந்து; உதாவஸு:—உதாவசு என்றொரு மகன்; தஸ்ய—அவரது (உதாவசுவின்); புத்ர:— மகன்; அபூத்—பிறந்தார்; நந்திவர்தன:—நந்திவர்தனன்; தத:—அவரிலிருந்து (நந்திவர்தனனிலிருந்து); ஸுகேது:—சுகேது என்றொரு மகன்; தஸ்ய—அவரது (சுகேதுவின்); அபி—தவிரவும்; தேவராத:—தேவராதன் என்றொரு மகன்; மஹீபதே—பரீட்சித்து மகாராஜனே.
பரீட்சித்து மகாராஜனே, மிதிலரிலிருந்து உதாவசு என்ற மகன் வந்தார்; உதாவசுவிலிருந்து நந்தவர்தனனும், அவரிலிருந்து சுகேதுவும், சுகேதுவிலிருந்து தேவராதனும் வந்தனர்.
பதம் 9.13.15
தஸ்மாத் ப்ருஹத்ரதஸ் தஸ்ய மஹாவிர்ய: ஸுத்ருத்-பிதா
ஸுத்ருதேர் த்ருஷ்டகேதுர் வை ஹர்யஸ்வோ ‘த மருஸ் தத:
தஸ்மாத்—தேவராதனிலிருந்து; ப்ருஹத்ரத:—பிருஹத்ரதன் என்ற மகன்; தஸ்ய—அவருடைய (பிருஹத்ரதனின்); மஹாவீர்ய:—மகாவீர்யன் என்ற மகன்; ஸுத்ருத்-பிதா—அவர் சுத்ருதி மகாராஜனின் தந்தையானார்; ஸுத்ருதே:—சுத்ருதியிலிருந்து; த்ருஷ்டகேது:—திருஷ்டகேது என்ற மகன்; வை—உண்மையில்; ஹர்யஸ்வ:—ஹர்யஸ்வன் அவரது மகனாவார்; அத—அதன்பிறகு; மரு:—மரு; தத:—அதன்பிறகு.
தேவராதனிலிருந்து பிருஹத்ரதன் என்ற மகன் வந்தார். பிருஹத்ரதனிலிருந்து மஹாவீர்யன் என்ற மகன் வந்தார். இவர் சுத்ருதியின் தந்தையானார். சுத்ருதியின் மகன் திருஷ்டகேது என்பவராவார். திருஷ்டகேதுவிலிருந்து ஹர்யஸ்வன் வந்தார். ஹர்யஸ்வனிலிருந்து மரு என்ற மகன் வந்தார்.
பதம் 9.13.16
மரோ: ப்ரதீபகஸ் தஸ்மாஜ் ஜாத: க்ருதரதோ யத:
தேவமீடஸ் தஸ்ய புத்ரோ விஸ்ருதோ ‘த மஹாத்ருதி:
மரோ:—மருவின்; ப்ரதீபக:—பிதரீபகன் என்ற மகன்; தஸ்மாத்—பிரதீபகனிலிருந்து; ஜாத:—பிறந்தார்; க்ருதரத:—கிருதரதன் என்ற மகன்; யத:—மற்றும் கிருதரதனிலிருந்து; தேவமீட:—தேவமீடன்; தஸ்ய—தேவமீடனின்; புத்ர:—ஒரு மகன்; விஸ்ருத:—விஸ்ருதன்; அத—அவரிலிருந்து; மஹாத்ருதி:—மஹாத்ருதி என்ற மகன்.
மருவின் மகன் பிரதீபகன். பிரதீபகனின் மகன் கிருதரதன். கிருதரதனிலிருந்து தேவமீடன் வந்தார்; தேவமீடனிலிருந்து விஸ்ருதனும்; மற்றும் விஸ்ருதனிலிருந்து மஹாத்ருதியும் வந்தனர்.
பதம் 9.13.17
க்ருதிராதஸ் ததஸ் தஸ்மான் மஹாரோமா ச தத்-ஸுத:
ஸ்வர்ணரோமா ஸுதஸ் தஸ்ய ஹ்ரஸ்வரோமா வ்யஜாயத
க்ருதிராத:—கிருதிராதன்; தத:—மஹாதிருதியிலிருந்து; தஸ்மாத்—கிருதிராதனிலிருந்து; மஹாரோமா—மஹாரோமன் என்ற மகன்; ச—தவிரவும்; தத்-ஸுத:—அவரது மகன்; ஸ்வர்ணரோமா—சுவர்ணரோமன்; ஸுத:-தஸ்ய—அவரது மகன்; ஹ்ரஸ்வரோமா—ஹிரஸ்வரோமன்; வ்யஜாயத—ஆகிய அனைவரும் பிறந்தனர்.
மஹாத்ருதியிலிருந்து கிருதிராதன் என்ற மகன் பிறந்தார். கிருதிராதனிலிருந்து மஹாரோமன் வந்தார். மஹாரோமனிலிருந்து சுவர்ணரோமன் என்ற மகன் வந்தார். அவரிலிருந்து ஹிரஸ்வரோமன் வந்தார்.
பதம் 9.13.18
தத: சீரத்வஜோ ஜக்ஞே யக்ஞார்தம் கர்ஷதோ மஹீம்
ஸீதா சீராக்ரதோ ஜாதா தஸ்மாத் சீரத்வஜ: ஸ்ம்ருத:
தத:—ஹிரஸ்வரோமனிலிருந்து: சீரத்வஜ:—சீரதுவஜன் என்ற மகன்; ஜக்ஞே—பிறந்தார்; யக்ஞ-அர்தம்—யாகங்கள் செய்வதற்கு; கர்ஷத:—நிலத்தை உழும்பொழுது; மஹீம்—பூமி; ஸீதா—பகவான் ராமச்சந்திரரின் மனைவி சீதாதேவி; சீர-அக்ரத:—கலப்பையின் முற்பகுதியிலிருந்து; ஜாதா—பிறந்தாள்; தஸ்மாத்—எனவே; சீரத்வஜ:—சீரதுவஜன் எனப்பட்டார்; ஸ்ம்ருத:—புகழ்பெற்ற.
ஹிரஸ்வரோமனிலிருந்து (ஜனகர் என்றும் அழைக்கப்படும்) சீரதுவஜன் என்ற மகன் வந்தார். சீரதுவஜன் நிலத்தை உழும் பொழுது, கலப்பையின் (சீரம்) முன்னிருந்து சீதாதேவி என்ற மகள் தோன்றினாள். இவள் பிறகு பகவான் ராமச்சந்திரரின் மனைவியானாள். இதனால் ஜனகர் சீரதுவஜன் எனப்பட்டார்.
பதம் 9.13.19
குசத்வஜஸ் தஸ்ய புத்ரஸ் ததோ தர்மத்வஜோ ந்ருப:
தர்மத்வஜஸ்ய த்வௌ புத்ரௌ க்ருதத்வஜ-மிதத்வஜௌ
குசத்வஜ:—குசதுவஜன்; தஸ்ய—சீரதுவஜனின்; புத்ர:—மகன்; தத:—அவரிலிருந்து; தர்மத்வஜ:—தர்மதுவஜன்; ந்ருப:—அரசர்; தர்மத்-வஜஸ்ய—இந்த தர்மதுவஜனில் இருந்து; த்வௌ—இரு; புத்ரௌ—மகன்கள்; க்ருதத்வஜ-மிதத்வஜௌ—கிருததுவஜன் மற்றும் மித்துவஜன்.
சீரதுவஜனின் மகன் குசதுவஜன். குசதுவஜனின் மகன் தர்மதுவஜ மகாராஜன். இவருக்கு கிருததுவஜன், மிததுவஜன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.
பதங்கள் 9.13.20 – 9.13.21
க்ருத்வஜாத் கேசித்வஜ: காண்டிக்யஸ் து மிதத்வஜாத்
க்ருதத்வஜ-ஸுதோ ராஜன் ஆத்ம-வித்யா-விசாரத:
காண்டிக்ய: கர்ம-தத்வ-க்ஞோ பீத: கேசித்வஜாத் த்ருத:
பானுமாம்ஸ் தஸ்ய புத்ரோ ‘பூச் சதத்யும்னஸ் து தத்-ஸுத:
க்ருதத்வஜாத்—கிருததுவஜனிலிருந்து; கேசித்வஜ:—கேசிதுவஜன் என்ற மகன்; காண்டிக்ய: து—மேலும் காண்டிக்யன் என்ற ஒரு மகனும்; மிதத்வஜாத்—மிததுவஜனில் இருந்து; க்ருதத்வஜ-ஸுத:—கிருததுவஜனின் மகன்; ராஜன்—அரசே; ஆத்ம-வித்யா-விசாரத:—ஆத்ம ஞானத்தில் கைதேர்ந்தவர்; காண்டிக்ய:—காண்டிக்ய மகாராஜன்; கர்ம-தத்வ-க்ஞ:—வேதக் கிரியைகளில் கைதேர்ந்தவர்; பீத:—அஞ்சி; கேசித்வஜாத்—கேசிதுவஜனின் காரணத்தால்; த்ருத:—அவர் ஓட்டம் பிடித்தார்; பானுமான்—பானுமான்; தஸ்ய—கேசிதுவஜனின்; புத்ர:—மகன்; அபூத்—வந்தார்; சதத்யும்ன—சதத்யும்னன்; து—ஆனால்; தத்-ஸுத:—பானுமானின் மகன்.
பரீட்சித்து மகாராஜனே, கிருததுவஜனின் மகன் கேசிதுவஜன், மேலும் மிததுவஜனின் மகன் காண்டிக்யன். கிருததுவஜனின் மகன் ஆத்ம ஞானத்தில் கைதேர்ந்தவராவார். மிததுவஜனின் மகன் வேதக்கிரியைகளில் கைதேர்ந்தவராவார். காண்டிக்யன் கேசிதுவஜனுக்கு அஞ்சி ஓட்டம் பிடித்தார். கேசிதுவஜனின் மகன் பானுமான். பானுமானின் மகன் சதத்யும்னன்.
பதம் 9.13.22
சுசிஸ் து தனயஸ் தஸ்மாத் ஸனத்வாஜ: ஸுதோ ‘பவக்
ஊர்ஜகேது: ஸனத்வாஜாத் அஜோ ‘த புருஜித் ஸுத:
சுசி:—சுசி; து—ஆனால்; தனய:—ஒரு மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து; ஸனத்வாஜ:—சனதுவாஜன்; ஸுத:—ஒரு மகன்; அபவத்—பிறந்தார்; ஊர்ஜகேது—ஊர்ஜகேது; ஸனத்வாஜாத்—சனதுவாஜனிலிருந்து; அஜ:—அஜன்; அத—அதன்பிறகு; புருஜித்—புருஜித்; ஸுத:—ஒரு மகன்.
சதத்யும்னனின் மகன் சுசி. சுசியிலிருந்து சனதுவஜன் பிறந்தார். சனதுவஜனிலிருந்து ஊர்ஜகேது என்ற மகன் வந்தார். ஊர்ஜகேதுவின் மகன் அஜன். அஜனின் மகன் புருஜித்.
பதம் 9.13.23
அரிஷ்டனேமிஸ் தஸ்யாபி ஸ்ருதாயுஸ் தத் ஸுபார்ஸ்வக:
ததஸ் சித்ரரதோ யஸ்ய க்ஷேமாதிர் மிதிலாதிப:
அரிஷ்டனேமி:—அரிஷ்டனேமி; தஸ்ய-அபி—புருஜிவித்தின்; ஸ்ருதாயு:—சுருதாயு என்ற மகன்; தத்—மேலும் அவரிலிருந்து; ஸுபார்ஸ்வக:—சுபார்ஸ்வகன்; தத:—சுபார்ஸ்வகனிலிருந்து, சித்ரரத:—சித்ரரதன்; யஸ்ய—யாரின் (சித்ரரதனின்); க்ஷேமாதி:—க்ஷேமாதி; மிதிலா-அதிப:—மிதிலையின் அரசரானார்.
புருஜித்தின் மகன் அரிஷ்டனேமி. அவரது மகன் சுருதாயு. சுருதாயு சுபார்ஸ்வகன் என்ற மகனைப் பெற்றார். சுபார்ஸ்வகன் சித்ரரதனைப் பெற்றார். சித்ரரதனின் மகன் க்ஷேமாதி. இவர் மிதிலையின் அரசரானார்.
பதம் 9.13.24
தஸ்மாத் ஸமரதஸ் தஸ்ய ஸுத: ஸத்யரதஸ் தத:
ஆஸீத் உபகுருஸ் தஸ்மாத் உபகுப்தோ ‘அக்னி ஸம்பவ:
தஸ்மாத்—க்ஷேமாதியிலிருந்து; ஸமரத:—சமரதன் என்ற மகன்; தஸ்ய—சமரதனிலிருந்து; ஸுத:—மகன்; ஸத்யரத:—சத்தியரதன்; தத:—அவரிலிருந்து (சத்தியரதனிலிருந்து); அஸீத்—பிறந்தார்; உபகுரு:—உபகுரு; தஸ்மாத்—அவரிலிருந்து; உபகுப்த:—உபகுப்தர்; அக்னி-ஸம்பவ:—அக்னிதேவனின் ஒரு பகுதி அவதாரம்.
க்ஷேமாதியின் மகன் சமரதன். அவரது மகன் சத்தியரதன், சத்தியரதனின் மகன் உபகுரு. உபகுருவின் மகன் உபகுப்தன். இவர் அக்னி தேவனின் ஒரு பகுதி அவதாரமாவார்.
பதம் 9.13.25
வஸ்வனந்தோ ‘த தத்-புத்ரோ யுயுதோ யத் ஸுபாஷண:
ஸ்ருதஸ் ததோ ஜயஸ் தஸ்மாத் விஜயோ ‘ஸ்மாத் ருத: ஸுத:
வஸ்வனந்த:—வஸ்வனந்தன்; அத—அதன்பிறகு (உபகுப்தனின் மகன்); தத்-புத்ர:—அவரது மகன்; யுயுத:—யுயுதன் என்ற: யத்—யுயுதனிலிருந்து; ஸுபாஷண:—சுபாஷணன் என்ற மகன்; ஸ்ருத:-தத:—மேலும் சுபாஷணனின் மகன் சுருதன்; ஜய:-தஸ்மாத்—சுருதனின் மகன் ஜயன்; விஜய:—விஜயன் என்ற மகன்; அஸ்மாத்—ஜயனிலிருந்து; ருத:—ருதன்; ஸுத:—ஒரு மகன்.
உபகுப்தனின் மகன் வஸ்வனந்தன். வஸ்வனந்தனின் மகன் யுயுதன். யுயுதனின் மகன் சுபாஷணன். சுபாஷணனின் மகன் சுருதன். சுருதனின் மகன் ஜயன். அவரிலிருந்து விஜயன் வந்தார். விஜயனின் மகன் ருதன்.
பதம் 9.13.26
சுனகஸ் தத்-ஸுதோ ஜக்ஞே வீதஹவ்யோ த்ருதிஸ் தத:
பஹுலாஸ்வோ த்ருதேஸ் தஸ்ய க்ருதிர் அஸ்ய மஹாவசீ
சுனக:—சுனகன்; தத்-ஸுத:—ருதனின் மகன்; ஜக்ஞே—பிறந்தார்; வீதஹவ்ய:—வீதஹவ்யன்; த்ருதி:—திருதி; தத:—வீதஹவ்யனின் மகன்; பஹுலாஸ்வ:—பஹுலாஸ்வன்; த்ருதே:—திருதியிலிருந்து; தஸ்ய—அவரது மகன்; க்ருதி:—கிருதி; அஸ்ய—கிருதியின்; மஹாவஸீ—மஹாவசி என்ற மகன் வந்தார்.
ருதனின் மகன் சுனகன். சுனகனின் மகன் வீதஹவ்யன், வீதஹவ்யனின் மகன் திருதி. திருதியின் மகன் பஹுலாஸ்வன். பஹுலாஸ்வனின் மகன் கிருதி. அவரது மகன் மஹாவசி.
பதம் 9.13.27
ஏதே வை மைதிலா ராஜன் ஆத்ம-வித்யா-விசாரதா:
யோகேஸ்வர-ப்ரஸாதேன த்வந்வைர் முக்தா க்ருஹேஷு அபி
ஏதே—அவர்களனைவரும்; வை—உண்மையில்; மைதிலா:—மிதிலரின் வம்சத்தினர்; ராஜன்—அரசே; ஆத்ம-வித்யா-விசாரதா:—ஆத்ம ஞானத்தில் கைதேர்ந்த; யோகேஸ்வர-ப்ரஸாதேன—யோகேஸ்வரரான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கருணையால்; த்வந்வை: முக்தா:—அவர்களனைவரும் ஜட உலக இருமைகளிலிருந்து விடுபட்டிருந்தனர்; க்ருஹேஷுஅபி—வீட்டில் இருந்த போதிலும்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அன்பிற்குரிய பரீட்சித்து மகாராஜனே, மிதில வம்சத்து அரசர்கள் அனைவரும் தங்கள் ஆத்ம சொரூபத்தை நன்கு அறிந்தவர்களாவர். எனவே, வீட்டிலிருந்த போதிலும், அவர்கள் ஜட வாழ்வின் இருமையிலிருந்து விடுபட்டவர்களாக இருந்தனர்.
ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “நிமி மகாராஜனின் வம்சம்” எனும் தலைப்பை கொண்ட பதிமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.