அத்தியாயம் – 10
பகவான் ராமச்சந்திரரின்
திருவிளையாடல்கள்
பதம் 9.10.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கட்வாங்க மகாராஜனின் மகன் தீர்கபாஹு. அவரது மகன் புகழ்பெற்ற ரகு மகாராஜனாவார். ரகு மகாராஜனிலிருந்து அஜன் வந்தார். அஜனிலிருந்து மகா புருஷராகிய தசரத மகாராஜன் பிறந்தார்.
பதம் 9.10.2 : தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டதால், பரம சத்தியமான பரமபுருஷர் தமது அம்சத்துடனும், அம்சத்தின் அம்சங்களுடனும், ராமர், லக்ஷ்மணர், பரதன் மற்றும் சத்ருக்னர் எனும் திருநாமங்களுடன் நேரடியாகத் தோன்றினார். இவ்வாறாக புகழ்பெற்ற அவதாரங்களாகிய இவர்கள் நான்கு ரூபங்களில் தசரத புத்திரர்களாகத் தோன்றினர்
பதம் 9.10.3 : பரீட்சித்து மகாராஜனே, பகவான் ராமச்சந்திரரின் திவ்யமான செயல்கள் தத்துவமுணர்ந்த ரிஷிகளால் வர்ணிக்கப்பட்டுள்ளன. சீதையின் கணவரான பகவான் ராமச்சந்திரரைப் பற்றி நீர் அடிக்கடி கேட்டிருப்பதால், அவரது செயல்களைப் பற்றி நான் சுருக்கமாகக் கூறுகிறேன், கேளும்.
பதம் 9.10.4 : பகவான் ராமச்சந்திரர் தமது தந்தையின் வாக்கைக் காப்பாற்றுவதற்காக, உடனே அரச பதவியைக் கைவிட்டு, மனைவி சீதை கையால் வருடுவதையும் பொறுக்க முடியாத தமது மென்மையான தாமரைப் பாதங்களால் அவளுடன் ஒவ்வொரு வனமாக சஞ்சரித்தார். ஹனுமானும் (அல்லது மற்றொரு வானரமான சுக்ரீவனும்), பகவானுடைய தம்பி லக்ஷ்மணனும் அவரைப் பின்தொடர்ந்தனர். இவ்விருவரும் வனத்தில் சஞ்சரித்ததால் ஏற்பட்ட அவரது களைப்பைப் போக்கினர். சூர்ப்பணகையின் மூக்கு துண்டிக்கப்பட்டதால், பகவான் மனைவி சீதையை இழந்தார். இதனால் கோபங்கொண்டு நெறிந்த புருவத்துடன் சமுத்திரராஜனை பகவான் நடுங்கச் செய்தார். அவரும், கடலைக் கடக்கும் பொருட்டு பாலம் கட்டுவதற்கு பகவானை அனுமதித்தார். இதைத் தொடர்ந்து, காட்டையே விழுங்கி விடும் தீயைப்போல், இராவணனைக் கொல்ல அவனது இராஜ்யத்திற்குள் பகவான் புகுந்தார். அந்த பரமபுருஷராகிய பகவான் இராமச்சந்திரர் நம்மைக் காப்பாற்றட்டும்.
பதம் 9.10.5 : விஸ்வாமித்திரரின் யாக அரங்கில், இரவு நேரத்தில் அறிவில்லாமல் சஞ்சரித்த பல அசுரர்களையும், இராட்சஸர்களையும், காட்டுமிராண்டிகளையும் லக்ஷ்மணரின் முன்னிலையில் கொன்ற அயோத்தியின் அரசரான பகவான் ராமச்சந்திரர் நம்மைக் காப்பாற்றட்டும்.
பதங்கள் 9.10.6 – 9.10.7 : அரசே, பகவான் ராமச்சந்திரின் லீலைகள், ஒரு குட்டி யானையின் செயல்களைப்போல் அற்புதமானவையாக இருந்தன. சீதையின் சுயம்வரச் சடங்கில், இவ்வுலக வீரர்களின் மத்தியில், சிவதனுசை அவர் உடைத்தார். இந்த தனுசு மிகவும் பாரமானது என்பதால், இதை முன்னூறு பேர் தூக்க வேண்டியிருந்தது. ஆனால் குட்டி யானையொன்று ஒரு கம்பித்துண்டை எளிதில் உடைத்து விடுவது போல், பகவான் ராமச்சந்திரரும் வில்லை வளைத்து நாணேற்றி நடுவில் அதை உடைத்தும் விட்டார். இவ்வாறாக தமக்கு இணையான வடிவம், அழகு, நடத்தை, வயது மற்றும் சுபாவம் ஆகிய உன்னதமான குணங்களைப் பெற்றிருந்த சீதையின் கரத்தை பகவான் பற்றினார். உண்மையில் அவள், எப்பொழுதும் பகவானின் மார்பில் உறையும் ஸ்ரீதேவியாவாள் சுயம்வரச் சடங்கில் சீதையின் கரம் பற்றியபின், வீடு திரும்பும் வழியில் பகவான் ராமச்சந்திரர் பரசுராமரைச் சந்தித்தார். மூவேழு தடவைகள் க்ஷத்திரிய வம்சத்தைப் பூண்டோடு அழித்த பரசுராமர் மிகவும் கர்வம் கொண்டிருந்தார். ஆயினும் ஒரு க்ஷத்திரியரைப் போல் காணப்பட்ட பகவானால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
பதம் 9.10.8 : மனைவிக்கு கொடுத்த வாக்கிற்குக் கட்டுப்பட்டிருந்த தந்தையின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக, பகவான் ராமச்சந்திரர் தமது இராஜ்யம், செல்வம், நண்பர்கள், உறவினர்கள், வசிப்பிடம் முதலான அனைத்தையும் துறந்து, முக்திபெற்ற ஓராத்மா உயிர் துறப்பது போல், சீதையுடன் வனம் சென்றார்.
பதம் 9.10.9 : தமது வெல்ல முடியாத வில்லையும், அம்புகளையும் கையில் ஏந்தியவாறு, பகவான் ராமச்சந்திரர் கடினமான வனவாசத்தை ஏற்று, வனத்தில் சஞ்சரித்து வந்தார். அப்போது காம இச்சையால் புத்தி கெட்டவளாக நடந்து கொண்ட இராவணனுடைய தங்கையின் மூக்கை அறுத்து அவளை பகவான் அங்கவீனப்படுத்தினார். மேலும் கரன், திரிசிரன் மற்றும் தூஷணன் முதலான அவளது பதினாலாயிரம் இராட்சஸ நண்பர்களையும் கூட அவர் கொன்றார்.
பதம் 9.10.10 : பரீட்சித்து மகாராஜனே, சீதையின் அழகையும், கவர்ச்சியையும் பற்றி கேள்விப்பட்ட பத்துத்தலை இராவணன், காம இச்சைகளினால் தூண்டப்பட்டு அவளை அபகரித்துவரச் சென்றான். பகவான் ராமச்சந்திரரின் கவனத்தைத் திருப்பி அவரை ஆசிரமத்திலிருந்து தூர அனுப்புவதற்காக, இராவணன் மாரீசனை ஒரு தங்க மானின் உருவில் அனுப்பினான். அந்த அற்புத மானைக் கண்ட பகவான் ராமச்சந்திரர் ஆசிரமத்தை விட்டு அதைப் பின்தொடர்ந்தார். சிவபெருமான் தட்சனைக் கொன்றது போலவே, இறுதியாக ஒரு கூரிய அம்பால் அதை அவர் கொன்றார்.
பதம் 9.10.11 : ஆட்டிடையன் இல்லாததால் பாதுகாப்பின்றி இருக்கும் ஆட்டை ஒரு புலி இரையாக்கிக் கொள்வதைப் போல், பகவான் ராமச்சந்திரர் வனத்திற்குள் புகுந்தபோது, லக்ஷ்மணனும் அங்கு இல்லாததால், இராட்சஸர்களிலேயே மிகக் கொடியவனான இராவணன், விதேக ராஜகுமாரியான சீதாதேவியை கடத்திச் சென்றான். பிறகு தன் மனைவியின் பிரிவால் பெருந் துயருக்குள்ளானது போல், பகவான் ராமச்சந்திரர் தம் தம்பி லக்ஷ்மணருடன் வனத்தில் சஞ்சரித்து வந்தார். இவ்வாறாக தமது சொந்த உதாரணத்தின் மூலமாக பெண்களிடம் பற்றுக் கொண்டவர்களின் நிலையை அவர் காட்டினார்.
பதம் 9.10.12 : யாருடைய கமல பாதங்கள் பிரம்ம தேவராலும், சிவபெருமானாலும் வழிபடப்படுகின்றனவோ, அந்த பகவான் ராமச்சந்திரர் ஒரு மானிட உருவை ஏற்றுள்ளார். இவ்வாறாக அவர், இராவணனால் கொலையுண்ட ஜடாயுவின் ஈமக்கிரியைகளைச் செய்து முடித்தார். பிறகு கபந்தன் என்ற அசுரனைக் கொன்றபின், வானர தலைவர்களை நண்பர்களாக்கிக் கொண்ட பகவான், வாலியைக் கொன்றார். பிறகு சீதையை மீட்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தபின், அவர் சமுத்திரத்தின் கரைக்குச் சென்றார்.
பதம் 9.10.13 : சமுத்திரத்தின் கரையை அடைந்ததும், பகவான் ராமச்சந்திரர் மூன்று நாட்கள் உபவாசமிருந்து, சமுத்திர ராஜனின் வரவுக்காகக் காத்திருந்தார். சமுத்திரராஜன் வராததைக் கண்ட பகவான் சமுத்திரத்தின் மீது தமது கோபப் பார்வையைச் செலுத்தினார். இதனால் முதலைகளும், சுறாமீன்களும் உட்பட எல்லாக் கடல்வாழ் ஜீவன்களும் பயத்தால் சலனமடைந்தன. பிறகு சமுத்திர ராஜன் வழிபாட்டுக்குரிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு பயத்துடன் பகவான் ராமச்சந்திரரை அணுகினார். பகவானின் தாமரைப் பாதங்களில் விழுந்த சமுத்திர ராஜன் பின்வருமாறு பேசலானார்.
பதம் 9.10.14 : எங்கும் பரவியுள்ள பரமபுருஷரே, தாங்கள் யாரென்பதை மந்த புத்தியுடைய நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் முழு பிரபஞ்சத்திற்கும் எஜமானரும், பரமபுருஷரும், மாற்றமில்லாமல் மூல முழுமுதற் கடவுளும் தாங்களே என்பதை இப்பொழுது நாங்கள் புரிந்து கொண்டோம். தேவர்கள் நற்குணத்தாலும், பிரஜாபதிகள் தீவிர குணத்தாலும் மற்றும் பேய்களின் நாதன் அறியாமைக் குணத்தாலும் மதி மயக்கம் அடைந்துள்ளனர். ஆனால் தாங்கள் இக்குணங்களுக்கெல்லாம் எஜமானராவீர்.
பதம் 9.10.15 : எம்பெருமானே, என் நீரை விருப்பம்போல் தாங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். உண்மையில், தாங்கள் அதைக் கடந்து, மூவுலகங்களின் தொல்லைக்கும், அழுகைக்கும் பெருங் காரணமான இராவணனின் நகருக்குச் செல்ல முடியும். அவன் விஸ்ரவரின் மகன் என்றாலும், மூத்திரத்தைப் போல் வெறுக்கத் தக்கவனாவான். எனவே அங்கு சென்று, அவனைக் கொன்று, தங்களது மனைவியான சீதாதேவியை மீட்டு வாருங்கள். மகா வீரரே உங்கள் புகழைப் பரப்புவதற்காக, அதன்மீது ஒரு பாலத்தை அமைக்க வேண்டுகிறேன். தங்களுடைய அசாதாரணமான அற்புதச் செயலைக் கண்டு, பிற்காலத்தில் வரும் சிறந்த வீரர்களும், அரசர்களும் உங்களை போற்றிப் புகழ்வார்கள்.
பதம் 9.10.16 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: சக்திவாய்ந்த வானரங்களால் பெயர்த்தெடுக்கப்பட்ட, மரம் செடி கொடிகளைக் கொண்ட மலைச் சிகரங்களை சமுத்திர நீரில் எறிந்ததன் மூலம் சமுத்திரத்தில் ஒரு பாலத்தைக் கட்டிய பின், பகவான் ராமச்சந்திரர், சீதாதேவியை இராவணனிடமிருந்து சிறை மீட்பதற்காக இலங்கைக்குச் சென்றார். இராவணனின் தம்பியான விபீஷணர் வழிகாட்ட, சுக்ரீவன், நீளன் மற்றும் ஹனுமான் ஆகியோரின் தலைமையிலான வானர வீரர்களுடன், ஹனுமானால் முன்பே எரிக்கப்பட்டிருந்த, இலங்கைக்குள் பகவான் பிரவேசித்தார்.
பதம் 9.10.17 : இலங்கைக்குள் புகுந்ததும், சுக்ரீவன், நளன் மற்றும் ஹனுமான் ஆகியோரின் தலைமையிலான வானர வீரர்கள், உல்லாச விடுதிகள், பண்டகசாலைகள், கஜானாக்கள், அரண்மனை வாயில்கள், நகர வாயில்கள், பொதுக்கூடங்கள், அரண்மனை முற்றங்கள் உட்பட புறாக் கூடுகளையும் கூட ஆக்கிரமித்துக் கொண்டனர். நகரத்தின் தெருச்சந்திகள், படிக்கட்டுகள், கொடிகள் மற்றும் கோபுரங்களின் உச்சியிலுள்ள தங்கக் கலசங்கள் ஆகிய அனைத்தும் இடித்துத் தள்ளப்பட்டதால், இலங்கை நகரம், ஒரு யானைக் கூட்டத்தினால் கலக்கப்பட்ட ஒரு நதி போல் காணப்பட்டது.
பதம் 9.10.18 : இராட்சஸத் தலைவனான இராவணன், வானர வீரர்களால் ஏற்படுத்தப்பட்ட நாசத்தைக் கண்டு, நிகும்பன், கும்பன், தூம்ராட்சன், துர்முகன், சுராந்தகன், நராந்தகன் ஆகியோரையும், பிற இராட்சஸர்களையும், தன் மகனான இந்திரஜித்தையும் உடனே அழைத்தான். அதன்பிறகு, பிரஹஸ்தன், அதிகாயன், விகம்பனன் மற்றும் இறுதியாக கும்பகர்ணனையும் அவன் அழைத்தான். பிறகு தனது ஆட்களையெல்லாம் எதிரிகளை எதிர்த்து போரிடத் தூண்டினான் வீரர்களால்
பதம் 9.10.19 : லக்ஷ்மணராலும், சுக்ரீவன், ஹனுமான், கந்தமாதன், நீளன், அங்கதன், ஜாம்பவான் மற்றும் பனஸன் ஆகிய வானர வீரர்களாலும் சூழப்பட்டபடி, பகவான் ராமச்சந்திரர் இராட்சஸ வீரர்களைத் தாக்கினார். அந்த இராட்சஸர்கள், வாள்கள், ஈட்டிகள், விற்கள், பிராஸங்கள், ரிஷ்டிகள், சக்தி அம்புகள், கட்கங்கள் மற்றும் தோமரங்கள் போன்ற வெல்ல முடியாத ஆயுதங்களை வைத்திருந்தனர்.
பதம் 9.10.20 : ராமச்சந்திரரின் படையைச் சேர்ந்த அங்கதன் முதலான சேனாதிபதிகள் எதிரியின் காலாட்படையையும், யானைகளையும், குதிரைகளையும், மற்றும் தேர்களையும் எதிர்த்து, பெரிய மரங்களையும், மலைச் சிகரங்களையும், கதாயுதங்களையும் மற்றும் அம்புகளையும் வீசி எறிந்தனர். இவ்வாறாக சீதையின் கோபத்திற்கு இராவணன் இலக்கானதால் எல்லா நல்லதிர்ஷ்டங்களையும் இழந்த அவனது போர் வீரர்கள் பகவான் ராமச்சந்திரரின் போர் வீரர்களால் கொல்லப்பட்டனர்.
பதம் 9.10.21 : அதன்பிறகு, தன்னுடைய வீரர்கள் மடிந்ததைக் கண்ட இராட்சஸ ராஜனான இராவணன் கடுங்கோபங்கொண்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தன் விமானத்திலேறி பகவானை நோக்கி விரைந்தான். அங்கு இந்திரனின் தேரோட்டியான மாதலியால் கொண்டு வரப்பட்ட பிரகாசமான இரதத்தில் அமர்ந்திருந்த பகவான் ராமச்சந்திரரைக் கூரிய அம்புகளால் அவன் தாக்கினான்.
பதம் 9.10.22 : பகவான் ராமச்சந்திரர் இராவணனிடம் கூறினார்: இராட்சஸர்களிலேயே மிகவும் வெறுக்கத்தக்கவனான நீ உண்மையில் அவர்களுடைய மலமாக இருக்கிறாய். நான் இல்லாத சமயத்தில் என் மனைவி சீதையை நீ அபகரித்துச் சென்றாய். எனவே நீ ஒரு நாய்க்குச் சமமானவன். ஏனெனில், எஜமானர் இல்லாத சமயத்தில் நாய் சமையலறைக்குள் புகுந்து, உணவு வகைகளை திருடிச் செல்கிறது. எனவே, பாவிகளை யமராஜன் தண்டிப்பதைப் போல் நானும் உன்னை தண்டிக்கப் போகிறேன். நீ மிகவும் வெறுக்கத்தக்கவனும், பாவியும், வெட்கமற்றவனுமாவாய். எனவே, யாருடைய முயற்சி தோல்வியடைவதே இல்லையோ, அந்த நாளில் இன்று உன்னை தண்டிக்கப் போகிறேன்.
பதம் 9.10.23 : இராவணனை இவ்வாறு திட்டிய பிறகு, தமது வில்லில் ஓரம்பைப் பொருத்திய பகவான் ராமச்சந்திரர், அதை இராவணனை நோக்கிவிட்டார். அது வஜ்ராயுதம் போல் இராவணனின் இதயத்தைத் துளைத்தது. இதைக் கண்ட இராவணனின் ஆட்கள், “ஐயோ! ஐயோ! என்ன நடந்து விட்டது? என்ன நடந்து விட்டது?” என்று கூச்சலிட்டனர். புண்ணியவான் ஒருவர் புண்ணியங்கள் தீர்ந்ததும் சொர்க்கத்திலிருந்து பூமியை நோக்கி விழுவதைப் போலவே, இராவணனும் தன் பத்து வாய்களாலும் இரத்தத்தைக் கக்கிக் கொண்டு விமானத்திலிருந்து கீழே விழுந்தான்.
பதம் 9.10.24 : அதன்பிறகு, யாருடைய கணவன்மார்கள் யுத்தத்தில் உயிரிழந்தனரோ, அப்பெண்கள் அனைவரும் இராவணனின் மனைவியான மண்டோதரியின் தலைமையில், இலங்கையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் இடைவிடாத அழுகுரலுடன் இராவணன் முதலான இராட்சஸர்களின் உயிரற்ற உடல்களை அணுகினர்.
பதம் 9.10.25 : தங்களுடைய கணவன்மார்கள் லக்ஷ்மணரின் அம்புகளால் கொல்லப்பட்டதால், துக்கத்தால் தங்களது மார்பகங்களை அடித்துக் கொண்ட அப்பெண்கள் அவரவர் கணவன்மார்களைத் தழுவிக் கொண்டு, அனைவரிடமும் முறையிடும் வகையில் பரிதாபமாக அழுதனர்.
பதம் 9.10.26 : நாதனே, தலைவா! பிறருக்கு நீங்கள் துன்பமிழைத்ததால், இராவணன் என்று அழைக்கப்பட்டீர். ஆனால் இப்பொழுது நீங்கள் வெல்லப்பட்டதால், நாங்களும் வெல்லப்பட்டோம். நீங்களில்லாத இந்த இலங்கை எதிரியால் வெற்றி கொள்ளப்பட்டதால், இப்பொழுது நாங்களும் தோற்றவர்களானோம். அது புகலிடம் தேடி யாரிடம் செல்லும்?
பதம் 9.10.27 : பெரும் அதிர்ஷ்டசாலியே, நீங்கள் காமவசப்பட்டிருந்ததால், சீதா தேவியின் செல்வாக்கை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளது சாபத்தினால், இப்பொழுது பகவான் ராமச்சந்திரரால் கொல்லப்பட்டு இந்நிலைக்கு நீங்கள் தாழ்த்தப்பட்டீர்.
பதம் 9.10.28 : இராட்சஸ வம்சத்திற்குப் பிரியமானவரே, உங்களால் லங்காபுரி மட்டுமல்லாமல், நாங்களும் விதவைகளானோம். உமது செயல்களால், உமது உடலை கழுகுகளுக்கு இரையாகவும், உமது ஆத்மாவை நரகத்திற்கு அனுப்பவும் தகுதியுடையவையாகச் செய்து கொண்டீர்.
பதம் 9.10.29 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இராவணனின் நல்ல தம்பியும், பகவான் ராமச்சந்திரரின் பக்தருமான விபீஷணர், கோசல அரசரான பகவான் ராமச்சந்திரரின் அனுமதியுடன், நரகத்திற்குச் செல்வதிலிருந்து தன் குடும்ப அங்கத்தினர்களைக் காப்பாற்றுவதற்குரிய நியமிக்கப்பட்ட ஈமக் கிரியைகளை பிறகு நிறைவேற்றினார்.
பதம் 9.10.30 : அதன்பிறகு, அசோக வனத்தில், சிம்சபா எனும் மரத்தடியில், ஒரு சிறிய குடிசைக்குள் சீதை அமர்ந்திருப்பதை பகவான் ராமச்சந்திரர் கண்டார். அவரது பிரிவினால் ஏற்பட்ட துயரத்தால் அவள் மிகவும் இளைத்துப் போயிருந்தாள்.
பதம் 9.10.31 : தன் மனைவியை அந்நிலையில் கண்ட பகவான் ராமச்சந்திரர் அவளிடம் மிகவும் இரக்கம் கொண்டார். பகவான் ராமச்சந்திரர் அவள் முன் வந்தபோது, தன் அன்பிற்குரியவரைக் கண்டு அவள் பெரு மகிழ்ச்யடைந்தாள். தாமரை போன்ற அவளது வாய் அவளது ஆனந்தத்தை வெளிப்படுத்தியது.
பதம் 9.10.32 : ஒரு கல்ப காலத்திற்கு இலங்கையின் இராட்சஸ ஜனங்களை ஆளும் அதிகாரத்தை விபீஷணருக்குக் கொடுத்த பின், பரமபுருஷராகிய பகவான் ராமச்சந்திரர் சீதாதேவியை புஷ்பக விமானத்தில் அமர்த்தி தானும் அதில் ஏறிக்கொண்டார். தமது வனவாசகாலம் முடிவுற்றதால், ஹனுமான், சுக்ரீவன் மற்றும் தம்பி லக்ஷ்மணன் ஆகியோரால் சூழப்பட்டவராய் பகவான் அயோத்திக்குத் திரும்பினார்.
பதம் 9.10.33 : பகவான் ராமச்சந்திரர் தமது தலைநகரான அயோத்திக்குத் திரும்பினார். அப்போது நறுமணமுள்ள அழகிய மலர்களைப் பொழிந்த அரச பரம்பரையினர் சாலையில் அவரை வரவேற்று உபசரித்தனர். பிரம்ம தேவரைப் போன்ற மகா புருஷர்களும், மற்ற தேவர்களும் பகவானின் செயல்களை பெரு மகிழ்ச்சியுடன் போற்றிப் புகழ்ந்தனர்.
பதம் 9.10.34 : அயோத்தியை அடைந்ததும், தாம் இல்லாத சமயத்தில் தம்பி பரதன் பசு மூத்திரத்தில் வேகவைத்த வால் கோதுமையை சாப்பிட்டு வந்தார் என்பதையும், மரவுரி தரித்து, மயிர்ச்சடையுடன், நாணல் புல்லின் மீது படுத்துறங்கினார் என்பதையும் கேள்விப்பட்ட, பரம கருணாமூர்த்தியான பகவான் ராமச்சந்திரர் மிகவும் வருந்தினார்.
பதங்கள் 9.10.35 – 9.10.38 : பகவான் ராமச்சந்திரர் அயோத்தியை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த பகவான் பரதன், உடனே பகவான் ராமச்சந்திரரின் பாதுகைகளை தம் தலைமீது சுமந்து கொண்டு நந்தி கிராமத்திலுள்ள தமது முகாமிலிருந்து வெளியேறினார். பகவான் பரதன் மந்திரிகளாலும், புரோகிதர்களாலும், மரியாதைக்குரிய மற்ற பிரஜைகளாலும், இனிய வாத்தியங்களை இசைக்கும் இசைவாணர்களாலும், வேத மந்திரங்களை உரக்க ஒதும் கற்றறிந்த பிராமணர்களாலும் சூழப்பட்டவராகச் சென்றார். அந்த ஊர்வலத்தில் தங்கக் கயிறுகளாலான சேனங்களைக் கொண்ட அழகிய குதிரைகளால் இழுக்கப்பட்ட இரதங்களும் பின் தொடர்ந்தன. இந்த இரதங்கள் தங்க ஜரிகைகளுடன் கூடிய கொடிகளுடனும், வெவ்வேறு அளவுகளையும் வடிவங்களையும் கொண்ட மற்ற கொடிகளுடனும் அலங்கரிக்கப்ட்டிருந்தன. தங்கக் கவசமணிந்த வீரர்களும், வெற்றிலைப் பாக்கை ஏந்திச் செல்லும் பணியாட்களும், மற்றும் பல பிரபலமான அழகிய விலைமாதர்களும் கூட ஊர்வலத்தில் இருந்தனர். குடை, சாமரங்கள், பல தரப்பட்ட இரத்தினங்கள், மற்றும் ராஜ வரவேற்புக்குரிய மற்ற பொருட்கள் ஆகியவற்றைக் கொண்ட பல பணியாட்கள் கால்நடையாகச் சென்றனர். இவ்வாறு பின் தொடரப்பட்ட பகவான் பரதர், பரவசத்தினால் மென்மையடைந்த இதயத்துடனும், கண்களில் கண்ணீருடனும் பகவான் ராமச்சந்திரரை அணுகி, ஆனந்தப் பரவசத்துடன் அவரது தாமரைப் பாதங்களில் விழுந்தார்.
பதங்கள் 9.10.39 – 9.10.40 : பாதுகைகளை பகவான் ராமச்சந்திரர் முன் வைத்த பிறகு, கண்களில் கண்ணீர் மல்க, பகவான் பரதர் கூப்பிய கரங்களுடன் நின்றிருந்தார். பரதரைத் தமது இரு கரங்களால் நீண்ட நேரம் தழுவிக் கொண்ட பகவான் ராமச்சந்திரர் தமது கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினார். பிறகு சீதைப்பிராட்டியாலும், லக்ஷ்மணராலும் பின்தொடரப்பட்ட பகவான் ராமச்சந்திரர் கற்றறிந்த பிராமணர்களுக்கும், குடும்பத்திலுள்ள முதியவர்களுக்கும் தமது மரியாதைக்குரிய வணக்கங்களைச் செய்தார். மேலும் அயோத்தியின் பிரஜைகள் அனைவரும் பகவானுக்குத் தங்களது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பித்தனர்.
பதம் 9.10.41 : நீண்ட நாட்களுக்குப் பின் தங்களது அரசர் திரும்பி வந்ததைக் கண்ட அயோத்தியின் பிரஜைகள் அவருக்கு மாலைகள் அணிவித்து, ஆனந்த நடனமாடினர்.
பதங்கள் 9.10.42 – 9.10.43 : அரசே, பரதர், பகவான் ராமச்சந்திரரின் பாதுகைகளை ஏந்திச் சென்றார், சுக்ரீவனும், விபீஷணரும் முறையே ஒரு வெண்சாமரத்தையும், அற்புதமான விசிறியையும் ஏந்திச் சென்றனர். ஹனுமான் ஒரு வெண்குடையையும், சத்ருக்னன் ஒரு வில்லையும் இரு அம்பறாத் தூணிகளையும், மற்றும் சீதாதேவி ஒரு தீர்த்த கமண்டலத்தையும் ஏந்திச் சென்றனர். அங்கதன் ஒரு வாளை ஏந்திச் சென்றார். ரிக்ஷ ராஜனான ஜாம்பவான் ஒரு தங்கக் கேடயத்தை ஏந்திச் சென்றார்.
பதம் 9.10.44 : பரீட்சித்து மகாராஜனே, பெண்கள் அவரிடம் பிரார்த்தனைகள் செய்ய, ஓதுவார்கள் அவரது சிறப்பியல்புகளைப் பற்றி வர்ணிக்க, தமது புஷ்பக விமானத்தில் அமர்ந்திருந்த பகவான், நட்சத்திரங்களுடனும், கிரகங்களுடனும் கூடிய சந்திரனைப் போல் காட்சியளித்தார்.
பதங்கள் 9.10.45 – 9.10.46 : அதன்பிறகு, தம்பி பரதனால் வரவேற்கப்பட்ட பகவான் ராமச்சந்திரர் விழாக்கோலம் பூண்டிருந்த அயோத்தியினுள் பிரவேசித்தார். மாளிகைக்குள் பிரவேசித்த அவர் கைகேயி மற்றும் தசரத மகாராஜனின் பிற மனைவிகள் உட்பட, எல்லாத் தாய்மார்களையும் வணங்கினார். முக்கியமாக தமது சொந்த தாயான கௌசல்யா தேவியை வணங்கினார். வசிஷ்டர் போன்ற ஆன்மீக குருமார்களையும் அவர் வணங்கினார். அவருக்குச் சம வயதுடைய நண்பர்களும், இளைய நண்பர்களும் அவரை வணங்கினார். அவரும் பதிலுக்கு அவர்களை வணங்கினார். லக்ஷ்மணரும், சீதாதேவியும் கூட அவ்வாறே செய்தனர். இவ்வாறாக அவர்கள் எல்லோருமே மாளிகைக்குள் நுழைந்தனர்.
பதம் 9.10.47 : ராமர், லக்ஷ்மணர், பரதர் மற்றும் சத்ருக்னர் ஆகியோரைக் கண்ட அவர்களது தாய்மார்கள், உணர்விழந்த உடல்கள் உணர்வு வரப்பெற்றதைப் போல் உடனே எழுந்தனர். இவ்வாறாக தங்களது புத்திரர்களை தங்கள் மடிகளில் அமரச் செய்து, அவர்களைக் கண்ணீரால் குளிப்பாட்டி, நீண்ட பிரிவினால் ஏற்பட்ட துயரத்தைப் போக்கிக் கொண்டனர்.
பதம் 9.10.48 : குலகுருவான வசிஷ்டர் பகவான் ராமச்சந்திரரின் தலையிலிருந்து மயிர்ச்சடையை மழிக்கச் செய்து, அச்சுமையைப் போக்கினார். பிறகு, தேவேந்திரனுக்குச் செய்யப்பட்டது போல், நான்கு சமுத்திரங்களின் நீராலும், பிற பொருட்களாலும், வயது முதிர்ந்த குடும்ப அங்கத்தினர்களின் ஒத்துழைப்புடன் பகவான் ராமச்சந்திரரின் அபிஷேகச் சடங்கை நிறைவேற்றினார்.
பதம் 9.10.49 : தலை நன்கு மழிக்கப்பட்டு, பூரண அபிஷேகம் செய்யப்பட்டிருந்த பகவான் ராமச்சந்திரர், நன்கு உடையணிந்து, மலர் மாலையாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இவ்வாறாக அவரைப் போலவே உடைகளையும், ஆபரணங்களையும் அணிந்திருந்த அவரது சகோதரர்களாலும், மனைவியாலும் சூழப்பட்டிருந்த பகவான் ராமச்சந்திரர் பிரகாசமாக ஜொலித்தார்.
பதம் 9.10.50 : பகவான் பரதரின் பணிவாலும், பூரண சரணாகதியாலும் திருப்தியடைந்த பகவான் ராமச்சந்திரர் பிறகு இராஜ்யத்தின் அரியாசனத்தை ஏற்றார். ஒரு தந்தையைப் போலிருந்து பிரஜைகளின் நலனை அவர் கவனித்துக் கொண்டார். தங்களுடைய வர்ணாஸ்ரம கடமைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்த பிரஜைகளும் அவரைத் தங்களது தந்தையாக ஏற்றுக் கொண்டனர்.
பதம் 9.10.51 : பகவான் ராமச்சந்திரர் அரசரானது திரேதா யுகத்தில். ஆனால் அவரது நல்ல அரசாட்சியினால் அது சத்தியயுகம் போலிருந்தது. அனைவரும் சமய சிந்தனை உடையவர்களாகவும், பூரண மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.
பதம் 9.10.52 : பரத வம்சத்தில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே, பகவான் ராமச்சந்திரரின் ஆட்சிக் காலத்தில், வனங்கள், நதிகள், குன்றுகள் மற்றும் மலைகள், நாடுகள், ஏழு தீவுகள் மற்றும் ஏழு கடல்கள் ஆகிய அனைத்தும், அனைத்து ஜீவராசிகளின் வாழ்வுக்குத் தேவையான பொருட்களை அளிப்பதில் அனுகூலமாக இருந்தன.
பதம் 9.10.53 : பரமபுருஷராகிய பகவான் ராமச்சந்திரர் இவ்வுலகின் அரசராக இருந்தபோது உடலாலும், மனதாலும் ஏற்படும் துன்பம், நோய், முதுமை, இழப்பு, சோகம், துன்பம், பயம் மற்றும் களைப்பு ஆகியவை சிறிதும் இல்லாதிருந்தின. மரணத்தை விரும்பாதவர்களுக்கும் மரணம் கூட சம்பவிக்கவில்லை.
பதம் 9.10.54 : ஏக பத்தினி விரதத்தை ஏற்ற பகவான் ராமச்சந்திரர் ஒரு ராஜ ரிஷியாக விளங்கினார். அவரது குணத்திலுள்ள அனைத்துமே நல்லதாகவும். கோபம் போன்றவைகளால் கலங்கப்படாமலும் இருந்தன. இவ்வாறாக அவர் தமது சொந்த நடவடிக்கைகளின் மூலமாக, வர்ணாஸ்ரம முறைப்படியாக நல்லொழுக்கத்தை பொது மக்களுக்கு, குறிப்பாக குடும்பஸ்தர்களுக்கு போதித்தார்.
பதம் 9.10.55 : சீதாதேவி மிகவும் அடக்கமாகவும், விசுவாசத்துடனும், வெட்கமுள்ளவளாகவும் மற்றும் கற்புடையவளாகவும் நடந்து கொண்டதுடன் எப்பொழுதும் தன் கணவரின் மனதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொண்டாள். இவ்வாறாக தன் குணத்தாலும், அன்பாலும், தொண்டாலும் பகவானின் மனதை அவள் பூரணமாகக் கவர்ந்தாள்.