அத்தியாயம் – 8
பாற்கடலைக் கடைதல்
பதம் 8.8.1
ஸ்ரீ-சுக உவாச
பீதே கரே வ்ருஷாங்கேண ப்ரீதாஸ் தே ‘மர-தானவா:
மமந்துஸ் தரஸா ஸிந்தும் ஹவிர்தானீ ததோ ‘பவத்
ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பீதே—குடிக்கப்பட்டதும்; கரே—விஷம்; வ்ருஷ-அங்கேண—ஓர் எருதின் மீது அமர்ந்திருப்பவரான சிவபெருமானால்; ப்ரீதா:—திருப்தியடைந்து; தே—அவர்களனைவரும்; அமர—தேவர்கள்; தானவா:—மற்றும் அசுரர்களும்; மமந்து:—மீண்டும் கடையத்துவங்கினர்; தரஸா—பெரும் வலிமையுடன்; ஸிந்தும்—பாற்கடலை; ஹவிர்தானீ—நெய்யின் பிறப்பிடமாகிய சுரபிப் பசு; தத:—அந்த கடையலிலிருந்து; அபவத்—உற்பத்தி செய்யப்பட்டது.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சிவபெருமான் விஷத்தைக் குடித்ததும், தேவர்களும், அசுரர்களும் மிகவும் திருப்தியடைந்து, புதுப்பிக்கப்பட்ட உற்சாகத்துடன் கடலைக் கடைய ஆரம்பித்தனர். இதன் பயனாய், சுரபி எனப்படும் பசு ஒன்று தோன்றியது.
பதம் 8.8.2
தாம் அக்னி-ஹோத்ரீம் ரிஷயோ ஜக்ருஹுர் ப்ரஹ்ம-வாதின:
யக்ஞஸ்ய தேவ-யானஸ்ய மேத்யாய ஹவிஷே ந்ருப
தாம்—அப்பசுவை; அக்னி-ஹோத்ரீம்—நெருப்பில் நிவேதனமாக ஊற்றுவதற்குத் தயிர், பால் மற்றும் நெய் ஆகியவற்றின் உற்பத்தி அவசியம் தேவையாகும்; ரிஷய:—இத்தகைய யாகங்களை இயற்றும் முனிவர்கள்; ஜக்ருஹு:—பொறுப்பேற்றனர்; ப்ரஹ்ம-வாதின:—ஏனெனில் அத்தகைய முனிவர்கள் வேதச் சடங்குகளை அறிந்திருந்தனர்; யக்ஞஸ்ய—யக்ஞத்தின்; வேத-யானஸ்ய—உயர் கிரக அமைப்புக்களுக்கும், பிரம்ம லோகத்திற்கும் ஏற்றம் பெறும் ஆசைகளை நிறைவேற்றும்; மேத்யாய—நிவேதனம் செய்யும் தகுதிபெற்ற; ஹவிஷே—தூய நெய்யைப் பெறுவதற்காக; ந்ருப—ராஜனே.
பரீட்சித்து மகாராஜனே, வேதச் சடங்குகளை முற்றும் அறிந்திருந்த பெரும் முனிவர்கள் அந்த சுரபிப் பசுவிற்குப் பொறுப்பேற்றனர். அப்பசு யாகத் தீயில் நிவேதம் செய்வதற்கு அவசியம் தேவையான தயிர், பால் மற்றும் நெய் ஆகியவற்றை உற்பத்தி செய்தது. தூய நெய்யைப் பெறுவதற்காகவே இவ்வாறு அவர்கள் செய்தனர். யாகத்தை நிறைவேற்றி, அதன் மூலமாக பிரம்ம லோகம் வரையுள்ள உயர்கிரக அமைப்புகளுக்குத் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக நெய்யை அவர்கள் நாடினர்.
பதம் 8.8.3
தத உச்சைஹ்ஸ்ரவா நாம ஹயோ ‘பூச் சந்ர-பாண்டுர:
தஸ்மின் பலி: ஸ்ப்ருஹாம் சக்ரே நேந்ர ஈஸ்வர-சிக்ஷயா
தத:—அதன்பிறகு; உச்சைஹ்ஸ்ரவா: நாம—உச்சைஹ்ஸ்ரவா எனும் பெயர் கொண்ட; ஹய:—ஒரு குதிரை; அபூத்—உற்பத்தி செய்யப்பட்டது; சந்ர-பாண்டுர:—நிலவைப் போல் வெள்ளையாக இருந்ததால்; தஸ்மின்—அதனிடம்; பலி:—பலி மகாராஜன்; ஸ்ப்ருஹாம் சக்ரே—அடைய ஆசைப்பட்டார்; ந—இல்லை; இந்ர:—தேவேந்திரன்; ஈஸ்வர-சிக்ஷயா—பகவானின் முந்திய அறிவுரையால்.
அதன்பிறகு, நிலவைப்போல் வெள்ளை நிறம் கொண்ட, உச்சைஹ்ஸ்ரவா எனும் பெயருடன் கூடிய ஒரு குதிரை உற்பத்தியானது. பலி மகாராஜன் இக்குதிரையை அடைய விரும்பினார். சுவர்க்க ராஜனான இந்திரன் இதை ஆட்சேபிக்கவில்லை. ஏனெனில், பரமபுருஷ பகவானால் அவர் ஏற்கனவே அவ்வாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
பதம் 8.8.4
தத ஐராவதோ நாம வாரணேந்ரோ வினிர்கத:
தந்தைஸ் சதுர்பி: ஸ்வேதாத்ரேர் ஹரன் பகவதோ மஹிம்
தத:—அதன்பிறகு; ஜராவத: நாம—ஐராவதம் எனும் பெயர் கொண்ட; வாரண-இந்ர:—யானைகளின் அரசன்; வினிர்கத:—உற்பத்தி செய்யப்பட்டது; தந்தை—அதன் தந்தங்களால்; சதுர்பி:—நான்கு; ஸ்வேத—வெள்ளை; அத்ரே:—மலையின்; ஹரன்—போட்டியாக நின்றது; பகவத:—சிவபெருமானின்; மஹிம்—மகிமைகளுக்கும்.
கடலைக் கடைந்ததன் அடுத்த பலனாக, ஐராவதம் எனும் பெயர் கொண்ட, யானைகளின் அரசன் உற்பத்தியானது. இந்த யானை வெள்ளை நிறம் கொண்டதாகும். அதன் நான்கு தந்தங்களால் அது கைலாய மலையின் மகிமைகளுக்கும் போட்டியாக நின்றது. அம்மலை சிவபெருமானின் மகிமைமிக்க வசிப்பிடமாகும்.
பதம் 8.8.5
ஜராவணாதயஸ் து அஷ்டௌ திக்கஜா அபவம்யஸ் தத:
அப்ரமு-ப்ரப்ருதயோ ‘ஸ்டௌ ச கரிண்யஸ் து அபவன் ந்ருப
ஐராவண-ஆதய:—ஐராவண எனும் யானையை தலைமையாகக் கொண்ட; து—ஆனால்; அஷ்டௌ—எட்டு; திக்-கஜா:—எந்த திசையிலும் செல்லக் கூடிய யானைகள்; அபவன்—உற்பத்தி செய்யப்பட்டன; தத:—அதன்பிறகு; அப்ரமு-ப்ரப்ருதய:—அப்ரமு எனும் பெண் யானையை தலைமையாகக் கொண்ட; அஷ்டௌ—எட்டு; ச—கூட; கரிண்ய:—பெண் யானைகள்; து—உண்மையில்; அபவன்—அலையும் உற்பத்தியாயின; ந்ருப—ராஜனே.
அதன்பிறகு, ராஜனே, எந்த திசையிலும் செல்லக்கூடிய எட்டு பெரும் யானைகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவை ஐராவணம் எனும் யானையை தலைமையாகக் கொண்டிருந்தன. அப்ரமு எனும் யானையை தலைமையாகக் கொண்ட எட்டு பெண் யானைகளும் கூட உற்பத்தியாயின.
பதம் 8.8.6
கௌஸ்துபாக்யம் அபூத் ரத்னம் பத்மராகோ மஹோததே:
தஸ்மின் மணெள ஸ்ப்ருஹாம் சக்ரே வக்ஷோ-‘லங்கரணே ஹரி:
ததோ ‘பவத் பாரிஜாத: ஸுர-லோக-விபூஷணம்
பூரயதி அர்திணோ யோ ‘ர்த்தை: சஸ்வத் புவி யதா பவான்
கௌஸ்துப-ஆக்யம்—கௌஸ்துபம் எனப்படும்; அபூத்— உற்பத்தி செய்யப்பட்டது; ரத்னம்—ஒரு விலையுயர்ந்த இரத்தினம்; பத்மராக:—பத்மராகம் எனப்படும் மற்றொரு இரத்தினம்; மஹா-உததே:—அச்சிறந்த பாற்கடலிலிருந்து; தஸ்மின்—அந்த; மணெ—மணி; ஸ்ப்ருஹாம் சக்ரே—அடைய விரும்பினார்; வக்ஷோ: அலங்கரணே—அவரது மார்பை அலங்கரிக்க; ஹரி:—முழுமுதற் கடவுளாகிய விஷ்ணு; தத:—அதன்பிறகு; அபவத்—உற்பத்தி செய்யப்பட்டது; பாரிஜாத:—பாரிஜாதம் எனப்படும் தேவலோக மலர்; ஸுர-லோக-விபூஷணம்—சுவர்க்க லோகங்களை அலங்கரிக்கும்; பூரயதி—நிறைவேற்றுகிறது; அர்தின:—பௌதிக செல்வத்தை விரும்புபவர்களுக்குக் கொடுத்து; ய—அது; அர்தை:—அடைய விரும்புவதன் மூலமாய்; சஸ்வத்—எப்பொழுதும்; புவி—இப்புவியின் மீது; யதா—அவ்வாறு; பவான்—நீர் (பரீட்சித்து மகாராஜன்).
அதன்பிறகு, புகழ்பெற்ற கௌஸ்துப இரத்தினமும், பத்மராக மணியும் அப்பெருங்கடலிலிருந்து உற்பத்தியாயின, பகவான் விஷ்ணு தமது மார்பை அலங்கரிப்பதற்காக அவற்றை அடைய விரும்பினார். அடுத்ததாக பாரிஜாத மலர் உற்பத்தி செய்யப்பட்டது. அது சுவர்க்க லோகங்களை அலங்கரிக்கிறது. ராஜனே, இவ்வுலகிலுள்ள அனைவரது விருப்பங்களையும் நீர் நிறைவேற்றுவதைப் போலவே பாரிஜாத மலரும் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்றுகிறது.
பதம் 8.8.7
ததஸ் சாப்ஸரஸோ ஜாதா நிஷ்க-கண்ட்ய: ஸுவாஸஸ:
ரமண்ய: ஸ்வர்கிணாம் வல்கு-கதி-லீலாவலோகநை:
தத:—அதன்பிறகு; ச—கூட; அப்ஸரஸ:—அப்ஸரலோக வாசிகள்; ஜாதா:—உற்பத்தி செய்யப்பட்டனர்; நிஷ்க-கண்ட்ய:—தங்க அட்டிகைகளால் அலங்கரிக்கப்பட்ட; ஸு-வாஸஸ:—சிறந்த ஆடைகளை அணிந்து; ரமண்ய:—மிக மிக அழகாகவும்; கவர்ச்சியுடனும்; ஸ்வர்கிணாம்—சுவர்க்க லோகவாசிகளின்; வல்கு-கதி-லீலா-அவ லோகநை:—மிகவும் மென்மையாக அசைந்து, அனைவரது இதயத்தையும் அவர்கள் கவர்ந்திழுக்கின்றனர்.
அடுத்து அப்ஸரஸ்கள் தோன்றினர். (இவர்கள் சுவர்க்க லோகங்களில் விலை மாதர்களாக உபயோகிக்கப்படுபவர்களால்). அவர்கள் தங்க ஆபரணங்களாலும், பதக்கங்களாலும் முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், கவர்ச்சியான சிறந்த ஆடைகளையும் அணிந்திருந்தனர். அப்ஸரஸ்கள் மிகவும் கவர்ச்சியான முறையில், மிகவும் மெதுவாக அசைந்து செல்வது சுவர்க்க லோகவாசிகளை மயங்கச் செய்கிறது.
பதம் 8.8.8
ததஸ் சாவிரபூத் ஸாக்ஷாச் ஸ்ரீ ரமா பகவத்-பரா
ரஞ்சயந்தீ திச: காந்த்யா வித்யுத் சௌதாமனீ யதா
தத:—அதன்பிறகு; ச—மேலும்; ஆவிரபூத்—தோன்றினாள்; ஸாக்ஷாத்—நேரடியாக; ஸ்ரீ—திருமகள்; ரமா—ரமா எனப்படும்; பகவத்-பரா—பரமபுருஷ பகவானின் உடைமை ஆகவேண்டும் என்ற பூரண ஆவல் கொண்ட; ரஞ்சயந்தீ—பிரகாசப்படுத்தும்; திச:—எல்லாத் திசைகளையும்; காந்த்யா—காந்தியால்; வித்யுத்—மின்னல்; சௌதாமனீ—சௌதாமனீ; யதா—போல்.
பிறகு திருமகளாகிய ரமா தேவி தோன்றினாள். தாம் பரமபுருஷ பகவானால் அனுபவிக்கப்பட வேண்டும் என்று தம்மை அவரிடம் பரிபூரணமாக அர்ப்பணித்துக் கொண்டாள். கலவைக் கல்லாலான ஒரு மலையையும் பிரகாசிக்கச் செய்யக்கூடிய, மின்னலையும் மிஞ்சிவிடும், மின்சாரத்தைப் போல் அவள் தோன்றினாள்.
பதம் 8.8.9
தஸ்யாம் சக்ரு: ஸ்ப்ருஹாம் ஸர்வே ஸஸுராஸுர- மானவா:
ரூபௌதார்ய-வயோ-வர்ண-மஹிமாக்ஷிப்த-சேதஸ:
தஸ்யாம்—அவளிடம்; சக்ரு: ஸ்ப்ருஹம்—ஆசைகொண்டனர்; ஸர்வே—அனைவரும்; ஸ-ஸுர-அஸுர-மானவா:—தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள்; ரூப-ஒளதார்ய—கண்ணைக்கவரும் அழகாலும், தேக அம்சங்களாலும்; வய:—இளமை; வர்ண—வர்ணம்; மஹிமா—மகிமைகள்; ஆக்ஷிப்த—சஞ்சலமடைந்தன; சேதஸ:—அவர்களது மனங்கள்.
அவளது கண்ணைக் கவரும் அழகு, தேக அம்சங்கள், இளமை, நிறம் மற்றும் மகிமைகள் ஆகியவற்றின் காரணத்தால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் உட்பட அனைவரும் அவளை அடைய விரும்பினர். அவள் எல்லாச் செல்வங்களுக்கும் பிறப்பிடமாக இருந்ததால், அனைவரும் அவளால் கவரப்பட்டனர்.
பதம் 8.8.10
தஸ்யா ஆஸனம் ஆனின்யே மஹேந்ரோ மஹத்-அத்புதம்
மூர்திமத்ய: ஸரிச்-ச்ரேஷ்டா ஹேம-கும்பைர் ஜலம் சுசி
தஸ்யா:—அவளுக்காக: ஆஸனம்—ஓர் ஆசனம்; ஆனின்யே—கொண்டு வந்தார்; மஹா-இந்ர:—சுவர்க்க ராஜனான இந்திரன்; மஹத்—மகத்தான; அத்புதம்—அற்புதமான; மூர்தி-மத்ய:—உருவங்களை ஏற்று; ஸரித்-ஸ்ரேஷ்டா:—சிறந்த புண்ணிய நதிகள்; ஹேம—தங்க; கும்பை:—நீர்க் குடங்களுடன்; ஜலம்—நீரை; சுசி—தூய.
சுவர்க்க ராஜனான இந்திரன், திருமகள் அமர்வதற்கு ஏற்றதோர் ஆசனத்தைக் கொண்டு வந்தார். கங்கை மற்றும் யமுனையைப் போன்ற புனித நதிகளனைத்தும் உருவங்களை ஏற்று, திருமகளாகிய லக்ஷ்மி தேவிக்கு தங்கக் குடங்களில் தூய நீரைக் கொண்டு வந்தனர்.
பதம் 8.8.11
ஆபிஷேசனிகா பூமிர் ஆஹரத் ஸகலெளஷதீ:
காவ: பஞ்ச பவித்ராணி வஸந்தோ மது-மாதவௌ
ஆபிஷேசனிதா:—மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்வதற்குத் தேவையான பொருட்களை; பூமி—பூமி தேவி; ஆஹரத்—சேகரித்து; ஸகல—எல்லா வகையான; ஒளஷதீ:—மருந்து சாமான்களையும், மூலிகைகளையும்; காவ:—பசுக்கள்; பஞ்ச—பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோஜலம் ஆகிய பசுவிலிருந்து கிடைக்கும் பஞ்ச கல்வியங்களை; பவித்ராணி—தூய; வஸந்த:—வஸந்த கால சொரூபம்; மது-மாதவௌ—வசந்த காலத்தில், அல்லது சைத்ர மற்றும் வைசாக மாதங்களில் உற்பத்தி செய்யப்படும் பூக்களையும், பழங்களையும்.
பூமி, பூமிதேவியாக மாறி, மூர்த்திப் பிரதிஷ்டைக்குத் தேவையான அனைத்து மருந்து சாமான்களையும், மூலிகைகளையும் சேகரித்தாள். பசுக்கள் பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோஜலம் ஆகிய பஞ்ச கவ்யங்களை அளித்தன. மற்றும் வசந்த சொரூபம், வசந்த காலத்தில், அல்லது சைத்ர மற்றும் வைசாக (ஏப்ரல் மே) மாதங்களில் உற்பத்தியாகும் அனைத்தையும் சேகரித்தது.
பதம் 8.8.12
ரிஷய: கல்பயாம் சக்ருர் ஆபிஷேகம் யதா-விதி
ஜகுர் பத்ராணி கந்தர்வா நட்யஸ் ச நன்ருதுர் ஜகு:
ரிஷய:—மாமுனிவர்கள்; கல்பயாம் சக்ரு:—நிறைவேற்றினர்; அபிஷேகம்—மூர்த்திப் பிரதிஷ்டையின் போது தேவையாக உள்ள அபிஷேக் சடங்கை; யதா-விதி—அதிகாரப்பூர்வமான சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவாறு; ஜகு:—வேத மந்தரங்களை ஓதினார்; பத்ராணி—எல்லா நல்லதிர்ஷ்டங்களும்; கந்தர்வா:—மற்றும் கந்தர்வலோக வாசிகளும்; நட்ய:—நாட்டிய சிரோமணிகளாகிய பெண்கள்; ச—கூட; நன்ருது:—நிகழ்ச்சியின் போது மிகவும் நன்றாக நடனமாடினர்; ஜகு:—மேலும் வேத அங்கீகாரம் பெற்ற பாடல்களைப் பாடினர்.
அதிகாரப்பூர்வமான சாஸ்திர விதிகளுக்கேற்ப, மாமுனிவர்கள் திருமகளுக்கு அபிஷேகச் சடங்கை நிறைவேற்றினர். சர்வ மங்களகரமான வேத மந்திரங்களை ஓதினர். நாட்டிய சிரோமணிகளாகிய பெண்கள் வேத விதிகளுக்குட்பட்ட பாடல்களைப் பாடியவாறு, மிகவும் நன்றாக நடனமாடினர்.
பதம் 8.8.13
மேகா ம்ருதங்க-பணவ-முரஜானக-கோமுகான்
வ்யனாதயன் சங்க-வேணு-வீணாஸ் துமுல-நிஹ்ஸ்வனான்
மேகா:—உருவம் பெற்ற மேகங்கள்; ம்ருதங்க—மிருதங்கங்கள்; பணவ—பேரிகைகள்; முரஜ—வேறொரு வகையான மத்தளம்; ஆனக—மற்றுமொரு வகையான மத்தளம்; கோமுகான்—ஒரு வகையான ஊது கொம்பு; வ்யனாதயன்—நாதம் எழுப்பினர்; சங்க—சங்குகள்; வேணு—புல்லாங்குழல்கள்; வீணா—வீணைகள்; துமுல—உரத்த சப்தம்; நிஹ்ஸ்வனான்—ஓசை.
உருவை ஏற்ற மேகங்கள், மிருதங்கம், பணவம், முரஜம் மற்றும் ஆனகம் எனப்படும் பல்வேறு வகையான மத்தளங்கள் ஆகியவற்றை வாசித்தன. அவை சங்குகளையும், கோமுகம் எனப்படும் ஊது கொம்புகளையும் ஊதியதுடன், புல்லாங்குழல்களையும், வீணைகளையும் கூட வாசித்தன. இவ்வாத்தியக் கருவிகள் இணைந்து பேரொலியை எழுப்பின.
பதம் 8.8.14
ததோ ‘பிஷிஷிசுர் தேவீம் ஸ்ரியம் பத்ம-கராம் ஸதீம்
திகிபா: பூர்ண-கலசை: ஸூக்த-வாக்யைர் த்விஜேரிதை:
தத:—அதன்பிறகு; அபிஷிஷிசு:—சர்வ மங்களகரமான நீரால் அபிஷேகம் செய்தன; தேவீம்—திருமகள்; ஸ்ரியம்—மிகவும் அழகிய; பத்ம-கராம்—கரத்தில் ஒரு தாமரையுடன்; ஸதீம்—பரமபுருஷ பகவானையன்றி வேறொருவரையும் அறிந்திராத, கற்புக்கரசியாகிய அவள்; திகிபா:—மிகப் பெரிய யானைகள்; பூர்ண-கலசை:—பூர்ண கலசங்களால்; ஸூக்த-வாக்யை:—வேத மந்திரங்களால்; த்வி-ஜ—பிராமணர்களால்; ஈரிதை:—ஓதப்பட்டது.
அதன்பிறகு, கற்றறிந்த பிராமணர்கள் வேத மந்திரங்களை ஓத, எல்லாத் திசைகளிலிருந்தும் வந்த மிகப்பெரிய யானைகள் கங்கை நீரால் நிரப்பப்பட்ட பெரிய கலசங்களால், திருமகளுக்கு அபிஷேகம் செய்தன. அவ்வாறு அபிஷேகம் செய்விக்கப்படும்போது, திருமகள், கரத்தில் ஒரு தாமரை மலருடன்கூடிய தமது சுய தோற்றத்துடன் மிகவும் அழகாக காணப்பட்டாள். பரமபுருஷ பகவானையன்றி வேறொருவரையும் அறிந்திராததால், திருமகள் கற்புக்கரசியாக விளங்கினாள்.
பதம் 8.8.15
ஸமுத்ர: பித-கெளசேய-வாஸஸீ ஸமுபாஹரத்
வருண: ஸ்ரஜம் வைஜயந்தீம் மதுனா மத்த-ஷட்பதாம்
ஸமுத்ர—சமுத்திரம்; பீத-கௌசேய—மஞ்சள் நிற பட்டு; வாஸஸீ—ஓர் ஆடையின் மேல் மற்றும் கீழ்ப்பகுதிகளை; ஸமுபாஹரத்—அளித்தது; வருண:—வருண (நீர்) தேவன்; ஸ்ரஜம்—மாலையை; வைஜயந்தீம்—மிகவும் அலங்கரிக்கப்பட்டதும், மிகப் பெரியதுமான; மதுனா—தேனுண்டு; மத்த—மயங்கிய; ஸத்-பதாம்—ஆறு கால்களைக் கொண்ட தேனீக்களால்.
எல்லா வகையான விலையுயர்ந்த ஆபரணங்களுக்கும் பிறப்பிடமாகிய சமுத்திரம், ஒரு மஞ்சள் நிற பட்டாலான மேல் மற்றும் கீழ் அங்க வஸ்திரங்களைப் பரிசாக அளித்தது. வருணதேவன், தேன் உண்டு மயங்கிய, ஆறு கால்களையுடைய தேனீக்களால் சூழப்பட்ட மலர் மாலைகளை வெகுமதியாக அளித்தார்.
பதம் 8.8.16
பூஷணானி விசித்ராணி விஸ்வகர்மா பிரஜாபதி:
ஹாரம் ஸரஸ்வதீ பத்மம் அஜோ நாகாஸ் ச குண்டலே
பூஷணானி—பலவகையான ஆபரணங்களை; விசித்ராணி—மிகவும் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தன; விஸ்வகர்மா ப்ரஜாபதி:—சந்ததியை உற்பத்தி செய்பவரான பிரம்ம தேவரின் புதல்வர்களில் (பிரஜாபதிகளில்) ஒருவராகிய விஸ்வகர்மா; ஹாரம்—மாலையை அல்லது ஆரத்தை; ஸரஸ்வதீ—கல்வித் தேவதை; பத்மம்—ஒரு தாமரைப் பூவை; அஜ:—பிரம்ம தேவர்; நாகா: ச—நாகலோக வாசிகள்; குண்டலே—இரு காதணிகளை.
பிரஜாபதிகளில் ஒருவராகிய விஸ்வகர்மா, பலவகையான அலங்கார ஆபரணங்களை அளித்தார். கல்வித் தேவதையாகிய சரஸ்வதி ஓர் ஆரத்தை வழங்கினாள். பிரம்ம தேவர் ஒரு தாமரைப் பூவையும், நாகலோக வாசிகள் காதணிகளையும் வழங்கினர்.
பதம் 8.8.17
தத: க்ருத-ஸ்வஸ்த்யயனோத்பல-ஸ்ரஜம்
நத்-த்விரேபாம் பரிக்ருஹ்ய பாணினா
சசால வக்த்ரம் ஸுகபோல-குண்டலம்
ஸவ்ரீட-ஹாஸம் தததீ ஸுசோபனம்
தத:—அதன்பிறகு; க்ருத-ஸ்வஸ்த்யயனா—சர்வ மங்களகரமான சடங்குகளால் ஒழுங்காக வழிபடப்பட்டதும்; உத்பல-ஸ்ரஜம்—தாமரைகளாலான ஒரு மாலையை; நகத்—ரீங்காரமிடும்; த்விரேபாம்—தேனீக்களால் சூழப்பட்ட; பரிக்ருஹ்ய—கைப்பற்றும்; பாணினா—கரத்தால்; சசால—தொடர்ந்து; வக்த்ரம்—முகம்; ஸு-கபோல-குண்டலம்—அவளது கன்னங்கள் காதணிகளால் அலங்கரிக்கப்பட்டு; ஸ-வ்ரீட-ஹாஸம்—வெட்கத்துடன் கூடிய புன்சிரிப்பு; தததீ—பெருகும்; ஸு-சோபனம்—அவளது இயற்கை அழகு.
அதன்பிறகு, திருமகளாகிய லக்ஷ்மி தேவி, மங்களகரமான ஒரு சடங்குடன் ஒழுங்காக பூஜிக்கப்பட்டதும், இங்குமங்குமாக நடக்கத் துவங்கினாள். அப்போது தாமரைப் பூக்களாலான ஒரு மாலையைக் கரத்தில் ஏந்தியிருந்தாள். அம்மாலை ரீங்காரம் செய்யும் தேனீக்களால் சூழப்பட்டிருந்தது. அவளது கன்னங்களைக் காதணிகள் அலங்கரிக்க, வெட்கத்துடன் கூடிய புன்சிரிப்பு முகத்தில் தவழ, அவள் மிகமிக அழகாகக் காணப்பட்டாள்.
பதம் 8.8.18
ஸ்தன-த்வயம் சாதிக்ருசோதரீ ஸமம்
நிரந்தரம் சந்தன-குங்குமோக்ஷிதம்
ததஸ் ததோ நூபுர-வல்கு சிஞ்சிதைர்
விஸர்பதீ ஹேம-லதேவ ஸா பபெள
ஸ்தான-த்வயம்—அவளது இரு மார்பகங்கள்; ச—கூட; அதி-க்ருச-உதரீ—அவளது உடலின் நடுப்பாகம் மிகவும் மெல்லியதாக இருந்ததால்; ஸமம்—சமமாக; நிரந்தரம்—நிரந்தரமாக; சந்தன-குங்கும—சந்தன, குங்குமத்தால்; உக்ஷிதம்—பூசப்பட்டிருந்தன; தத: தத:—இங்கும் அங்குமாக; நூபுர—கொலுசுகளின்; வல்கு—மிகவும் அழகாக; சிஞ்சிதை:—ஒலியால் சூழப்பட்டு; விஸர்பதீ—நடக்கும்; ஹேம-லதா—பொற்கொடி; இவ—போல்; ஸா—திருமகள்; பபௌ—தோன்றினாள்.
அவளது இரு மார்பகங்களும் ஒரே சீராகவும், நன்றாகவும் அமைந்திருந்தன. அவற்றின் மீது சந்தனமும், குங்குமமும் பூசப்பட்டிருந்தது. அவளது இடை மிகவும் மெல்லியதாக இருந்தது. அவள் இங்குமங்குமாக நடந்தபோது, அவளது பாதக்கொலுசுகள் மென்மையாக ஜிலு ஜிலுக்க, அவளொரு பொற்கொடியைப்போல் காணப்பட்டாள்.
பதம் 8.8.19
விலோகயந்தீ நிரவத்யம் ஆத்மன:
பதம் த்ருவம் சாவ்யபிசாரி-ஸத்-குணம்
கந்தர்வ-சித்தாஸுர-யக்ஷ-சாரண-
த்ரைபிஷ்டபேயாதிஷு நான்வவிந்தத
விலோகயந்தீ—கவனித்தாள், சோதித்தாள்; நிரவத்யம்—எவ்வித குறையும் இல்லாமல்; ஆத்மன:—அவளுக்கென; பதம்—அந்தஸ்து; த்ருவம்—நித்தியமான; ச—கூட; அவ்யபிசாரி-ஸத்-குணம்—குணங்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல்; கந்தர்வ—கந்தர்வ லோகவாசிகளுக்கிடையில்; ஸித்த—சித்தலோகவாசிகள்; அஸுர—அசுரர்கள்; யக்ஷ—யக்ஷர்கள்; சாரண—சாரணலோக வாசிகள்; த்ரை பிஷ்டபேய-ஆதிஷு—மற்றும் தேவர்களுக்கிடையில்; ந—இல்லை; அன்வவிந்தத—அவர்களில் ஒருவரையும் ஏற்க முடிந்தது.
கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சித்தர்கள், சாரணர்கள் மற்றும் சுவர்க்கலோக வாசிகள் ஆகியோருக்கிடையில் நடந்து செல்லும்போது, திருமகளாகிய லக்ஷ்மிதேவி, அவர்களை ஆழ்ந்து பரிசோதனை செய்தாள். ஆனால் இயற்கையாகவே எல்லா நற்குணங்களையும் கொண்ட ஒருவரையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களில் ஒருவர்கூட குறைகள் இல்லாமல் இருக்கவில்லை.
பதம் 8.8.20
நூனம் தபோ யஸ்ய ந மன்யு-நிர்ஜயோ
ஞானம் க்வசித் தச் ச ந ஸங்க-வர்ஜிதம்
கஸ்சின் மஹாம்ஸ் தஸ்ய ந காம-நிர்ஜய:
ஸ ஈஸ்வர: கிம் பரதோ வ்யபாஸ்ரய:
நூனம்—நிச்சயமாக; தப:—தவம்; யஸ்ய—ஒருவரின்; ந—இல்லை; மன்யு—கோபம்; நிர்ஜய:—வெற்றிகொண்ட; ஞானம்—அறிவு; க்வசித்—ஏதோ ஒரு புண்ணிய புருஷரில்; தத்—அது; ச—கூட; ந—இல்லை; ஸங்க-வர்ஜிதம்—சகவாசக் களங்கம் இல்லாத; கஸ்சித்—யாரேனும் ஒருவர்; மஹான்—சிறந்த மகானொருவர்; தஸ்ய—அவரது; ந—இல்லை; காம—ஜட ஆசைகள்; நிர்ஜய:—வெற்றி கொண்டவர்; ஸ:—அத்தகைய ஒருவர்; ஈஸ்வர:—ஆளுனர்; கிம்—அவரால் எப்படி முடியும்; பரத:—பிறருடைய; வ்யபாஸ்ரய:—கட்டுப்பாட்டின் கீழ்.
கூடி இருந்தவர்களைப் பரிசோதனை செய்த திருமகள் பின்வருமாறு அபிப்பிராயம் கொண்டாள்: கடுந்தவங்களை மேற்கொண்ட ஒருவர் இன்னும் கோபத்தை வெற்றி கொள்ளவில்லை. ஒருவர் அறிவைப் பெற்றுள்ளார், ஆனால் பெளதிக ஆசைகளை அவர் வெற்றி கொள்ளவில்லை. ஒருவர் மிகச்சிறந்த புருஷராக இருக்கிறார், ஆனால் சிற்றின்ப ஆசைகளை அவரால் வெல்ல முடியவில்லை. மிகச்சிறந்த புருஷராக உள்ள ஒருவர் கூட வேறொன்றின் உதவியை நம்பியுள்ளார். அப்படியானால், அவர் எப்படி பரம ஆளுனராக இருக்க முடியும்?
பதம் 8.8.21
தர்ம: க்வசித் தத்ர ந பூத-சௌஹ்ருதம்
த்யாக க்வசித் தத்ர ந முக்தி-காரணம்
வீர்யம் ந பும்ஸோ ‘ஸ்தி அஜ-வேக-நிஷ்க்ருதம்
ந ஹி த்விதீயோ குண-ஸங்க-வர்ஜித:
தர்ம:—மதம்; க்வசித்—ஒருவருக்கு முழு அறிவு இருக்கக்கூடும்; தத்ர—அங்கு; ந—இல்லை; பூத-சௌஹ்ருதம்—பிற ஜீவராசிகளுடனான சிநேகம்; த்யாக:—துறவு; க்வசித்—ஒருவர் வைத்திருக்கக்கூடும்; தத்ர—அங்கு; ந—இல்லை; முக்தி-காரணம்—முக்திக்கான காரணம்; வீர்யம்—சக்தி; ந—இல்லை; பும்ஸ:—எந்த மனிதரின்; அஸ்தி—இருக்கக்கூடும்; அஜ-வேக-நிஷ்க்ருதம்—காலத்தின் சக்தியில் இருந்து விடுதலை இல்லை; ந—அல்லது; ஹி—உண்மையில்; த்விதீய:—இரண்டாவதான; குண-ஸங்க-வர்ஜித:—இயற்கைக் குணங்களின் களங்கத்திலிருந்து முழுமையாக விடுபட்ட.
ஒருவர் மதத்தைப் பற்றிய முழு அறிவைப் பெற்றிருந்தும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்புடையவராக இல்லாதிருக்கக்கூடும். மனிதராகவோ, தேவராகவோ உள்ள ஒருவரிடம் துறவு இருக்கக் கூடும். ஆனால் அதுவே முக்திக்குக் காரணமாவது இல்லை. ஒருவர் பெரும் சக்தியைப் பெற்றிருந்தும், அவர் நித்திய காலத்தின் சக்தியைத் தடுக்க இயலாதவராக இருக்கக் கூடும். வேறொருவர் ஜட உலக பற்றைத் துறந்தவராக இருக்கக்கூடும், இருப்பினும் அவரைப் பரம புருஷ பகவானோடு ஒப்பிட முடியாது. ஆகவே, ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்திலிருந்து ஒருவரும் முற்றிலும் விடுபட்டவரல்லர்.
பதம் 8.8.22
கவசிச் சிராயுர் ந ஹி சீல-மங்களம்
க்வசித் தத் அபி அஸ்தி ந வேத்யம் ஆயுஷ:
யத்ரோபயம் குத்ர ச ஸோ ‘பி அமங்கள:
ஸுமங்கள: கஸ்ச ந காங்க்ஷதே ஹி மாம்
க்வசித்—யாரேனும் ஒருவர்; சிர-ஆயு:—நீண்ட ஆயுளைப் பெற்றிருந்தாலும்; ந—இல்லை; ஹி—உண்மையில்; சீல-மங்களம்—நன்நடத்தை அல்லது மங்களத்தன்மை; க்வசித்—ஒருவர்; தத்-அபி—நன்நடத்தை கொண்டவராயினும்; அஸ்தி—இருக்கிறது; ந—இல்லை; வேத்யம் ஆயுஷ:—ஆயுளை அறிந்தவராக; யத்ர உபயம்—இரண்டுமே (நடத்தை மற்றும் மங்களம்) இருந்தால்; குத்ர—எங்காவது; ச—கூட; ஸ:—அவர்; அபி—இருந்தாலும்; அமங்கள:—மற்ற விஷயங்களில் சிறிது அமங்களமாக; ஸு-மங்கள:—எல்லா விஷயத்திலும் மங்களமாக; கஸ்ச—யாரேனும் ஒருவர்; ந—இல்லை; காங்க்ஷதே—விருப்பங்கள்; ஹி—உண்மையில்; மாம்—நான்.
ஒருவருக்கு நீண்ட ஆயுள் இருக்கக்கூடும். ஆனால் மங்களத் தன்மையோ அல்லது நன்நடத்தையோ இருக்காது. ஒருவருக்கு மங்களத் தன்மை, நன்நடத்தை ஆகிய இரண்டுமே இருக்கக்கூடும், ஆனால் ஆயுள் நிலையற்றதாக இருக்கும். சிவபெருமானைப் போன்ற தேவர்களுக்கு நித்திய வாழ்வு இருந்தாலும், அவர்களிடம் சுடுகாட்டில் வாழ்வதைப் போன்ற தீய பழக்கங்கள் உள்ளன. மேலும் மற்றவர்கள் எல்லா விதத்திலும் நல்ல தகுதிகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் பரமபுருஷ பகவானின் பக்தர்களாக இருப்பதில்லை.
பதம் 8.8.23
ஏவம் விம்ருஸ்யாவ்யபிசாரி-ஸத் குணைர்
வரம் நிஜைகாஸ்ரயதயாகுணாஸ்ரயம்
வவ்ரே வரம் ஸர்வ-குனைர் அபேக்ஷிதம்
ரமா முகுந்தம் நிரபேக்ஷம் ஈப்ஸிதம்
ஏவம்—இவ்வாறாக; விம்ருஸ்ய—ஆழ்ந்த யோசனைக்குப் பின்; அவ்யபிசாரி-ஸத்குணை:—அசாதாரணமான தெய்வீக குணங்களால்; வரம்—உயர்ந்த; நிஜ-ஏக-ஆஸ்ரயதயா—பிறரை நம்பியிருக்காமல் எல்லா நற்குணங்களையும் பெற்றிருப்பதால்; அகுண-ஆஸ்ரயம்—அனைத்து தெய்வீக குணங்களுக்கும் பிறப்பிடமான; வவ்ரே—ஏற்றுக் கொண்டாள்; வரம்—ஒரு மணமகனாக; ஸர்வ-குணை:—எல்லா தெய்வீக குணங்களுடனும்; அபேக்ஷிதம்—தகுதி வாய்ந்த; ரமா—திருமகள்; முகுந்தம்—முகுந்தனிடம்; நிரபேக்ஷம்—அவளுக்காக அவர் காத்திருக்கவில்லை என்றாலும்; ஈப்ஸிதம்—மிகவும் விரும்பத்தக்கவர்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக, முகுந்தன் சுதந்திரமானவராகவும், திருமகளின் தேவை இல்லாதவராகவும் இருப்பினும், அனைத்து தெய்வீக குணங்களையும், யோக சித்திகளையும் உடையவராக இருந்ததால், மிகவும் விரும்பத்தக்கவராகவும் இருந்தார். இக்காரணத்தினால், ஆழ்ந்த யோசனைக்குப்பின் திருமகள் முகுந்தனைத் தமது கணவராக ஏற்றுக் கொண்டாள்.
பதம் 8.8.24
தஸ்யாம்ஸ-தேச உசதீம் நவ-கஞ்ச-மாலாம்
மாத்யன்-மதுவ்ரத-வரூத-கிரோபகுஷ்டாம்
தஸ்தௌ நிதாய நிகடே தத்-உர: ஸ்வ-தாம
ஸவ்ரீட-ஹாஸ-விகஸன்-நயனேன யாதா
தஸ்ய—அவருடைய (முழுமுதற் கடவுள்); அம்ஸ-தேசே—தோள்களின் மீது; உசதீம்—மிகவும் அழகான; நவ—புதிய; கஞ்ச-மாலாம்—தாமரைப் பூ மாலை; மாத்ய—வெறிப்பிடித்த; மதுவ்ரத-வரூத—தேனீக்களின்; கிரா—ஓசையுடன்; உபகுஷ்டாம்—அவற்றின் ரீங்காரத்தினால் சூழப்பட்டு; தஸ்தௌ—இருந்தாள்; நிதாய—மாலையைச் சூட்டிய பின்; நிகடே—அருகில்; தத்-உர:—பகவானின் மார்பு; ஸ்வ-தாம—அவளது உண்மையான அடைக்கலம்; ஸ-வ்ரீட-ஹாஸ—வெட்கப் புன்னகை செய்து; விகஸத்—ஜொலிக்கும்; நயனேன—கண்களுடன்; யாதா—அவ்வாறு அமையப் பெற்ற.
பரமபுருஷ பகவானை அணுகிய திருமகள், புதிதாக மலர்ந்த தாமரைப் பூ மாலையை அவருக்குச் சூட்டினாள். அம்மாலை, ரீங்காரம் செய்து கொண்டு தேனைத் தேடியலையும் தேனீக்களால் சூழப்பட்டிருந்தது. பிறகு, பெருமானின் மார்பின் மீது ஓரிடம் கிடைக்குமென எதிர்பார்த்து, அவளது முகத்தில் வெட்கப் புன்சிரிப்பு தவழ, அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்தாள்.
பதம் 8.8.25
தஸ்யா: ஸ்ரியஸ் த்ரி-ஜகதோ ஜனகோ ஜனன்யா
வக்ஷோ நிவாஸம் அகரோத் பரமம் விபூதே:
ஸ்ரீ: ஸ்வா: ப்ரஜா: ஸகருணேன நிரீக்ஷணேன
யத்ர ஸ்திதைதயத ஸாதிபதீம்ஸ் த்ரி-லோகான்
தஸ்யா:—அவளது; ஸ்ரிய:—திருமகள்; த்ரி-ஜகத:—மூவுலகங்களின்; ஜனக:—தந்தை; ஜனன்யா:—தாயின்; வக்ஷ:—மார்பு; நிவாஸம்—வசிப்பிடம்; அகரோத்—செய்தார்; பரமம்—பரம; விபூதே:—ஐசுவரியங்களின்; ஸ்ரீ:—திருமகள்; ஸ்வா:—சொந்த; ப்ரஜா:—பிரஜைகளின்; ஸ-கருணேன—அனுகூலமான கருணையுடன்; நிரீக்ஷணேன—மீது பார்வையைச் செலுத்துவதால்; யத்ர—எங்கு; ஸ்திதா—தங்கும்; ஐதயத—அதிகரித்து; ஸ-அதிபதீன்—பெரும் நிர்வாகிகளுடனும், தலைவர்களுடனும்; த்ரி-லோகான்—மூவுலகங்களின்.
பரமபுருஷ பகவானே மூவுலகங்களுக்கும் தந்தையாவார். அவரது மார்பு, அனைத்துச் செல்வங்களுக்கும் உரிமையாளரும், திருமகளுமாகிய, லக்ஷ்மிதேவியின் வசிப்பிடமாகும். திருமகள், தமது அனுகூலமும், கருணையும் கொண்ட பார்வையால், மூவுலகங்களின் ஐசுவரியங்களையும், மூவுலக வாசிகள் மற்றும் அவர்களின் நிர்வாகிகளாகிய தேவர்கள் ஆகியோருடைய ஐசுவரியங்களையும் அதிகரிக்கக் கூடியவளாவாள்.
பதம் 8.8.26
சங்க-தூர்ய-ம்ருதங்கானாம் வாதித்ரானாம் ப்ருது: ஸ்வன:
தேவானுகானாம் ஸஸ்த்ரீனாம் ந்ருத்யதாம் காயதாம் அபூத்
சங்க—சங்குகள்; தூர்ய—ஊதுகொம்புகள்; ம்ருதங்கானாம்—மற்றும் வெவ்வேறு வகையான மிருதங்கங்களின்; வாதித்ராணாம்—வாத்தியக் கருவிகளின்; ப்ருது:—மிகச் சிறந்த; ஸ்வன:—ஓசை; தேவ-அனுகானாம்—தேவர்களைப் பின்பற்றுபவர்களான, கந்தர்வர்கள் மற்றும் சாரணர்களைப் போன்ற மேலுலகவாசிகள்; ஸ-ஸ்த்ரீணாம்—அவர்களுடைய சொந்த மனைவிகளுடன் ஒன்றாக; ந்ருத்யதாம்—நடனமாடுவதில் ஈடுபட்டனர்; காயதாம்—பாடிக்கொண்டு; அபூத்—ஆனது.
பிறகு கந்தர்வலோக மற்றும் சாரணலோக வாசிகள் தக்க சமயத்தை பயன்படுத்திக் கொண்டு, சங்குகள், ஊதுகொம்புகள் மற்றும் மத்தளங்களைப் போன்ற அவர்களது வாத்தியக் கருவிகளை வாசித்தனர். அவர்கள் தங்களின் மனைவிகளுடன் பாடிக் கொண்டு ஆடத்துவங்கினர்.
பதம் 8.8.27
ப்ரஹ்ம-ருத்ராங்கிரோ-முக்யா: ஸர்வே விஸ்வ-ஸ்ருஜோ விபும்
ஈடிரே ‘விததைர் மந்த்ரைஸ் தல்-லிங்கை: புஷ்ப-வர்ஷிண:
ப்ரஹ்ம—பிரம்ம தேவர்; ருத்ர—சிவபெருமான்; அங்கிர:—பெரும் முனிவராகிய அங்கிரர்; முக்யா:—முதலான; ஸர்வே—அவர்கள் அனைவரும்; விஸ்வ-ஸ்ருஜ:—பிரபஞ்ச நிர்வாகத்தின் இயக்குனர்களான; விபும்—மிகச் சிறந்த புருஷரை; ஈடிரே—வழிபட்டனர்; அவித்தை:—நிஜமான; மந்த்ரை:—ஓதுவதன் மூலமாக; தத்-லிங்கை:—பகவானை வழிபட்டு; புஷ்ப-வர்ஷிண:—பெருமழையைப் போல் மலர்களைத் தூவி.
பிரம்மதேவர், சிவபெருமான், மாமுனிவரான அங்கிரர் முதலிய பிரபஞ்ச நிர்வாகத்தின் இயக்குனர்கள் ஆகியோர், பரமபுருஷ பகவானின் பெருமைகளைக் குறிப்பிடும் வகையில் மந்திரங்களை ஓதி, பெருமழையைப் போல் மலர்களைத் தூவினர்.
பதம் 8.8.28
ஸ்ரியாவலோகிதா தேவா: ஸப்ரஜாபதய: பிரஜா:
சீலாதி-குண-ஸம்பன்னா லேபிரே நிர்வ்ருதிம் பராம்
ஸ்ரியா—திருமகளாகிய லக்ஷ்மியால்; அவலோகிதா:—ஆதரவு காட்டும் வகையில் கருணையுடன் நோக்கப்பட்ட; தேவா:—எல்லா தேவர்களும்; ஸ-ப்ரஜாபதய:—எல்லா பிரஜாபதிகளுடன்; ப்ரஜா:—மற்றும் அவர்களது சந்ததியினருடனும்; சீல-ஆதி-குண-ஸம்பன்னா:—அனைவரும் நன்நடத்தை மற்றும் சிறப்பியல்புகளுடன் ஆசிர்வதிக்கப்பட்டனர்; லேபிரே—அடையப்பெற்றனர்; நிர்வ்ருதிம்—திருப்தி; பராம்—பரம.
எல்லா தேவர்களும், அவர்களுடன் பிரஜாபதிகளும் அவர்களது சந்ததியினரும் லக்ஷ்மியின் பார்வையால் ஆசீர்வதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் நன்நடத்தையுடனும், தெய்வீக குணங்களுடனும் உடனடியாக வளர்க்கப்பட்டு மிகுந்த திருப்தியடைந்தனர்.
பதம் 8.8.29
நிஹ்ஸத்வ லோலுபா ராஜன் நிருத்யோகா கத-த்ரபா:
யதா சோபேக்ஷிதா லக்ஷ்ம்யா பபூவுர் தைத்ய-தானவா:
நிஹ்ஸத்வா:—பலம் இல்லாமல்; லோலுபா:—பேராசை; ராஜன்—ராஜனே; நிருத்யோகா:—ஏமாற்றம் அடைந்தனர்; கத-த்ரபா—அவமானம்; யதா—அப்போது; ச—கூட; உபேக்ஷிதா:—அலட்சியம் செய்யப்பட்டனர்; லக்ஷ்ம்யா—திருமகளால்; பபூவு:—அவர்கள் ஆயினர்; தைத்ய-தானவா:—அசுரர்களும், இராட்சஸர்களும்.
ராஜனே, திருமகளால் அலட்சியம் செய்யப்பட்டதால், அசுரர்களும் இராட்சஸர்களும் தாழ்த்தப்பட்டதுடன், குழப்பமும், ஏமாற்றமும் அடைந்து அவமானத்திற்கு ஆளாயினர்.
பதம் 8.8.30
அதாஸீத் வாருணீ தேவீ கன்யா கமல-லோசனா
அஸுரா ஜக்ருஹுஸ் தாம் வை ஹரேர் அனுமதேன தே
அத—அதன்பிறகு (திருமகளின் தோற்றத்திற்குப் பின்); ஆஸீத்—இருந்தாள்; வாருணீ—வாருணீ; தேவீ—குடிப்பழக்கம் உள்ளவர்களை ஆளும் தேவதை; கன்யா—ஓர் இளம் பெண்; கமல-லோசனா—தாமரைக் கண்களையுடைய; அஸுரா:—அசுரர்கள்; ஜக்ருஹு:—ஏற்றுக் கொண்டனர்; தாம்—அவளை; வை—உண்மையில்; ஹரே:—பரமபுருஷரின்; அனுமதேன—உத்தரவினால்; தே—அவர்கள் (அசுரர்கள்).
அடுத்து, குடிப்பழக்கம் உள்ளவர்களை ஆள்பவளும், தாமரைக் கண்களையுடைய தேவதையுமான வாருணீ தோன்றினாள். முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் அனுமதியுடன், பலி மகாராஜனை தலைமையாகக் கொண்ட அசுரர்கள் அந்த இளம் பெண்ணை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர்.
பதம் 8.8.31
அதோததேர் மத்யமானாத் கஸ்யபைர் அம்ருதார்திபி:
உததிஷ்டன் மஹாராஜ புருஷ: பரமாத்புத:
அத:—அதன்பிறகு; உததே:—பாற்கடலிலிருந்து; மத்யமானாத்—கடையப்பட்டபோது; காஸ்யபை:—தேவர்களும், அசுரர்களுமாகிய கஸ்யபரின் புத்திரர்களால்; அம்ருத-அர்திபி:—கடைவதிலிருந்து அமிர்தத்தைப் பெறும் ஆவலுடன்; உததிஷ்டத்—அங்கு தோன்றினார்; மஹாராஜ—மகாராஜனே; புருஷ:—ஒரு புருஷர்; பரம—உயர்வான; அத்புத:—அற்புதமான.
ராஜனே, அதன்பிறகு, கஸ்யபரின் புத்திரர்களாகிய அசுரர்களும், தேவர்களும், பாற்கடலைக் கடைவதில் ஈடுபட்டிருந்தபோது, அதியற்புதமான புருஷர் ஒருவர் தோன்றினார்.
பதம் 8.8.32
தீர்க-பீவர-தோர்-தண்ட: கம்பு-க்ரீவோ ‘ருணேக்ஷண:
ஸ்யாமலஸ் தருண: ஸ்ரக்வீ ஸர்வாபரண-பூஷித:
தீர்க—நீண்ட; பீவர—பருந்து, பலம்வாய்ந்த; தோ:-தண்ட:— கரங்கள்; கம்பு—ஒரு சங்கைப் போன்ற; க்ரீவ:—கழுத்து; அருண-ஈக்ஷண:—சிவந்த கண்கள்; ஸ்யாமல:—கருமை நிறம்; தருண:—மிகவும் இளமையாக; ஸ்ரக்வீ—ஒரு மலர் மாலையைச் சூடியிருந்தார்; ஸர்வ—எல்லா; ஆபரண—ஆபரணங்களாலும்; பூஷித:—அலங்கரிக்கப்பட்டு.
அவர் பலம் பொருந்திய தேகம் கொண்டிருந்தார்; அவரது கரங்கள் நீண்டும், பருத்தும், பலம் வாய்ந்தவையாகவும் இருந்தன; மூன்று கோடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது கழுத்து, ஒரு சங்கை ஒத்திருந்தது; அவரது கண்கள் சிவந்திருந்தன; மேலும் அவரது வர்ணம் கருநிறமாக இருந்தது. அவர் மிகவும் இளமையானவராகவும், மலர் மாலை சூட்டப்பட்டவராகவும் இருந்தார். அவரது உடல் முழுவதும் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பதம் 8.8.33
பீத-வாஸா மஹோரஸ்க: ஸும்ருஷ்ட-மணி-குண்டல:
ஸ்நிக்த-குஞ்சித-கேசாந்த-ஸுபக: ஸிம்ஹ-விக்ரம:
அம்ருதாபூர்ண-கலஸம் பிப்ரத் வலய-பூஷித:
பீத-வாஸா:—மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தார்; மஹா-உரஸ்க:—அவரது மார்பு மிகவும் அகலமாக இருந்தது; ஸு-ம்ருஷ்ட-மணி-குண்டல:—அவரது குண்டலங்கள் முத்துக்களால் ஆனவையாகவும், பளபளப்பு செய்யப்பட்டும் இருந்தன; ஸ்நிக்த—பளபளப்பு செய்யப்பட்டு; குஞ்சித-கேச—சுருண்ட கேசம்; அந்த—முடிவில்; ஸு-பக:—பிரிக்கப்பட்டும், அழகாகவும்; ஸிம்ஹ-விக்ரம:—சிங்கத்தைப் போன்ற பலத்துடன்; அம்ருத—அமிர்த்ததுடன்; ஆபூர்ண—உச்சிவரை நிரப்பப்பட்டு; கலஸம்—ஒரு கலசம்; பிப்ரத்—அசையும்; வளய—கைவளைகளுடன்; பூஷித:—அலங்கரிக்கப்பட்டு.
அவர் மஞ்சள் நிற ஆடை அணிந்து, முத்துக்களாலான பளபளப்பு செய்யப்பட்ட குண்டலங்கள் அணிந்திருந்தார். அவரது கேசத்தின் முனைகளுக்கு எண்ணெய் பூசப்பட்டிருந்தது. அவரது மார்பு மிகவும் அகலமாக இருந்தது. அவரது உடலுக்கு எல்லா நல்ல அம்சங்களும் இருந்தன. அவர் ஒரு சிங்கத்தைப்போல் பருத்து பலம் வாய்ந்தவராக இருந்தார். மேலும் அவர் கைவளைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அவர் தமது கரத்தில் உச்சிவரை நிரப்பப்பட்டிருந்த ஓர் அமிர்த கலசத்தை ஏந்தியிருந்தார்.
பதம் 8.8.34
ஸ வை பகவத: ஸாக்ஷாத் விஷ்ணோர் அம்சாம்ச ஸம்பவ:
தன்வந்தரிர் இதி க்யாத ஆயுர்-வேத-த்ருக் இஜ்ய-பாக்
ஸ:—அவர்; வை—உண்மையில்; பகவத:—பகவானின்; ஸாக்ஷாத்—நேரடியாக; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; அம்ச-அம்ச-ஸம்பவ:—ஓர் அம்சத்தினுடைய அம்சத்தின் அவதாரமான; தன்வந்தரி:—தன்வந்தரி; இதி—இவ்வாறாக; க்யாத:—புகழ்பெற்ற; ஆயு: வேத-த்ருக்—மருத்துவ விஞ்ஞானத்தில் ஆழ்ந்து அனுபவமுள்ளவர்; இஜ்ய-பாக்—யாகம் பலன்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தகுதிபெற்ற தேவர்களுள் ஒருவர்.
அவர் பகவான் விஷ்ணுவின் ஓர் அம்சத்தின் அம்சமாகிய, தன்வந்தரி ஆவார். அவர் மருத்துவ விஞ்ஞானத்தில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவராக இருந்தார். மேலும் தேவர்களில் ஒருவர் என்ற முறையில், யாகங்களில் ஒரு பங்கை எடுத்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பதம் 8.8.35
தம் ஆலோக்யாஸுரா: ஸர்வே கலஸம் சாம்ருதாப்ருதம்
லிப்ஸந்த: ஸர்வ-வஸ்தூணி கலஸம் தரஸாஹரன்
தம்—அவரை; ஆலோக்ய—கண்டு; அஸுரா:—அசுரர்கள்; ஸர்வே—அவர்கள் அனைவரும்; கலஸம்—அமிர்த கலசத்தை; ச—கூட; அம்ருத-ஆப்ருதம்—அமிர்தத்தால் நிரப்பப்பட்ட; லிப்ஸந்த:—திடமான ஆசை கொண்டு; ஸர்வ-வஸ்தூணி—எல்லா பொருட்களிலும்; கலஸம்—கலசத்தை; தரஸா—உடனடியாக; அஹரன்—பறித்துக் கொண்டனர்.
தன்வந்தரி அமிர்த கலசத்தை ஏந்தியிருப்பதைக் கண்டதும், கலசத்தையும், அதிலுள்ள பொருளையும் அடைய விரும்பிய அசுரர்கள், உடனடியாக அதை பலவந்தமாக பிடுங்கிக் கொண்டனர்.
பதம் 8.8.36
நீயமானே ‘ஸுரைஸ் தஸ்மின் கலலே ‘ம்ருத-பாஜனே
விஷண்ண-மனஸோ தேவா ஹரிம் சரணம் ஆயயு:
நீயமானே—தூக்கிச் செல்லப்பட்டு; அஸுரை:—அசுரர்களால்; தஸ்மின்—அந்த; கலலே—கலசம்; அம்ருத-பாஜனே—அமிர்தத்தைக் கொண்டுள்ள; விஷண்ண-மனஸ:—மனவருத்தம் கொண்டு; தேவா:—தேவர்கள் அனைவரும்; ஹரிம்—பரம புருஷரிடம்; சரணம்—புகலிடம் கொள்ள; ஆயயு:—சென்றனர்.
அமிர்த கலசம் அசுரர்களால் அபகரித்துச் செல்லப்படுவதைக் கண்ட தேவர்கள் வருத்தமடைந்தனர். இவ்வாறாக அவர்கள் பரமபுருஷ பகவானாகிய ஹரியின் தாமரைப் பாதங்களில் அடைக்கலம் புகுந்தனர்.
பதம் 8.8.37
இதி தத்-தைன்யம் ஆலோக்ய பகவான் ப்ருத்ய-காம-க்ருத்
மா கித்யத மிதோ ‘ர்தம் வ: ஸாதயிஷ்யே ஸ்வ-மாயயா
இதி—இவ்விதமாக; தத்—தேவர்களின்; தைன்யம்—மனவருத்தத்தை; ஆலோக்ய—கண்டு; பகவான்—பரமபுருஷர்; பிருத்ய-காம-க்ருத்—தமது தொண்டர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் தயாராக இருப்பவரான; மா கித்யத—வருத்தப்பட வேண்டாம்; மித:—ஒரு பூசலால்; அர்தம்—அமிர்தத்தை அடைய; வ:—உங்கள் அனைவருக்காகவும்; ஸாதயிஷ்யே—நான் நிறைவேற்றுவேன்; ஸ்வ-மாயயா—எனது சுய சக்தியால்.
தமது பக்தர்களின் நோக்கங்களை எப்பொழுதும் நிறைவேற்ற விரும்புபவரான பரமபுருஷர், தேவர்களின் மனவருத்தத்தைக் கண்டு, அவர்களிடம் கூறினார், “வருத்தம் வேண்டாம்”, எனது சுயசக்தியால், அசுரர்களுக்கிடையில் ஒரு சண்டையை விளையவைத்து, அவர்களை நான் குழப்பிவிடுகிறேன். இவ்விதமாக அமிர்தத்தை அடையும் உங்களுடைய ஆசையை நான் நிறைவேற்றுவேன்.
பதம் 8.8.38
மித: கலிர் அபூத் தேஷாம் தத்-அர்தே தர்ஷ-சேதஸாம்
அஹம் பூர்வம் அஹம் பூர்வம் ந த்வம் ந த்வம் இதி ப்ரபோ
மித:—அவர்களுக்கிடையில்; கலி:—கருத்து வேறுபாடும், சண்டை சச்சரவும்; அபூத்—ஏற்பட்டது; தேஷாம்—அவர்கள் அனைவரிலும்; தத்-அர்தே—அமிர்தத்தின் பொருட்டு; தர்ஷ-சேதஸாம்—விஷ்ணுவின் மாயா சக்தியால் முற்றிலும் குழப்பமடைந்து; அஹம்—நான்; பூர்வம்—முதலில்; அஹம்—நான்; பூர்வம்—முதலில்; ந—இல்லை; த்வம்—நீ; ந—இல்லை; த்வம்—நீ; இதி—இவ்வாறு; ப்ரபோ—ராஜனே.
ராஜனே, பிறகு யார் முதலில் அமிர்தத்தைப் பெறுவது என்பதைப் பற்றிய ஒரு சச்சரவு அசுரர்களுக்கிடையில் எழுந்தது. அவர்களில் ஒவ்வொருவரும், “நீ அதை முதலில் பருகக் கூடாது. நான்தான் முதலில் அதைப் பருக வேண்டும். நான் முதலில், நீயல்ல” என்று கூறிக்கொண்டனர்.
பதங்கள் 8.8.39 – 8.8.40
தேவா: ஸ்வம் பாகம் அர்ஹந்தி யே துஸ்யாயாஸ-ஹேதவ:
ஸத்ர-யாக இவைதஸ்மின் ஏஷ தர்ம: ஸனாதன:
இதி ஸ்வான் ப்ரத்யஷேதன் வை தைதேயா ஜாத-மத்ஸரா:
துர்பலா: ப்ரபலான் ராஜன் க்ருஹீத-கலஸான் முஹு:
தேவா:—தேவர்கள்; ஸ்வம் பாகம்—அவர்களுக்குச் சொந்தமான பாகத்தை; அர்ஹந்தி—எடுத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர்; யே—ஆகிய அவர்களனைவரும்; துல்ய-ஆயாஸ-ஹேதவ:—சமமான முயற்சியை மேற்கொண்டவர்களான; ஸத்ர-யாகே—யாகத்தை நிறைவேற்றுவதில்; இவ—அதைப்போலவே; ஏதஸ்மின்—இவ்விஷயத்தில்; ஏஷ:—இந்த; தர்ம:—தர்மம்; ஸனாதன:—சனாதன (நித்தியமான); இதி—இவ்வாறாக; ஸ்வான்—அவர்களுக்கிடையில்; ப்ரத்யஷேதன்—ஒருவரையொருவர் தடுக்க; வை—உண்மையில்; தைதேயா:—திதியின் புத்திரர்கள்; ஜாத-மத்ஸரா:—பொறாமை கொண்ட; துர்பலா:—பலவீனமான; ப்ரபலான்—பலாத்காரமாக; ராஜன்—ராஜனே; க்ருஹீத:—அடைவதில்; கலஸான்—அமிர்தத்தைக் கொண்டுள்ள கலசத்தை; முஹு—எப்பொழுதும்.
அசுரர்களில் சிலர் கூறினர். “பாற்கடலைக் கடைவதில் எல்லா தேவர்களும் பங்கேற்றுள்ளனர். இப்போது, எந்த பொது யாகத்திலும் பங்கு எடுத்துக் கொள்ளும் சம உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆகவே அழிவற்ற சமயக் கொள்கைக்கேற்ப, தேவர்களும், அமிர்தத்தில் அவர்களுடைய பாகத்தை இப்போது எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். ‘ராஜனே, இவ்விதமாக சக்திவாய்ந்த அசுரர்கள், அமிர்தத்தை எடுத்துக் கொள்வதிலிருந்து பலம் குறைந்த அசுரர்களைத் தடுத்து
விட்டனர்.
பதங்கள் 8.8.41 – 8.8.46
ஏதஸ்மின்ன் அந்தரே விஷ்ணு: ஸர்வோபாய-வித் ஈஸ்வர:
யோஷித்-ரூபம் அனிர்தேஸ்யம் ததார பரமாத்புதம்
ப்ரேக்ஷணீயோத்பல-ஸ்யாமம் ஸர்வாவயவ-ஸுந்தரம்
ஸமான-கர்ணாபரணம் ஸுகபோலோன்னஸானனம்
நவ-யௌவன-நிர்வ்ருத்த-ஸ்தன-பார-க்ருசோதரம்
முகாமோதானுரக்தாலி-ஜங்காரோத்விக்ன-லோசனம்
பிப்ரத் ஸுகேச-பாரேண மாலாம் உத்ஃபுல்ல-மல்லிகாம்
ஸுக்ரீவ-கண்டாபரணம் ஸு-புஜாங்கத-பூஷிதம்
விரஜாம்பர-ஸம்வீத-நிதம்ப-த்வீப-சோபயா
காஞ்ச்யா ப்ரவிலஸத்-வல்கு-சலச்-சரண-நூபுரம்
ஸவ்ரீட-ஸ்மித-விக்ஷிப்த:-ப்ரூ-விலாஸாவலோகனை:
தைத்ய-யூத-ப-சேதஹ்ஸு காமம் உத்தீபயன் முஹு:
ஏதஸ்மின் அந்தரே—இச்சம்பவத்திற்குப் பிறகு; விஷ்ணு:—பகவான் விஷ்ணு; ஸர்வ-உபாய-வித்—வேறுபட்ட சூழ்நிலைகளை சமாளிக்கும் கலையை அறிந்த; ஈஸ்வர—பரம ஆளுனரான; யோஷித்-ரூபம்—ஓர் அழகிய பெண்ணின் உருவத்தை; அனிர்தேஸ்யம்—அவள் யாரென்பதை ஒருவராலும் ஆராய்ந்தறிய முடியவில்லை; ததார—ஏற்றார்; பரம—மிகச்சிறந்த; அத்புதம்—அற்புதமான; ப்ரேக்ஷணீய—காண இன்பமூட்டும்; உத்பல-ஸ்யாமம்—புதிதாக மலர்ந்ததொரு தாமரையைப் போல் கருநிறமாக; ஸர்வ—எல்லா; அவயவ—உடலுறுப்புக்களும்; ஸுந்தரம்—மிகவும் அழகாக; ஸமான—சமமாக அமைக்கப்பட்ட; கர்ண-ஆபரணம்—செவிகளின் மீதுள்ள ஆபரணங்கள்; ஸு-கபோல—மிகவும் அழகிய கன்னங்கள்; உன்னஸ-ஆனனம்—அவளது முகத்தின் மீதுள்ள கவர்ச்சியான மூக்கு; நவ-யௌவன—புத்திளமை; நிர்வ்ருத்த-ஸ்தன—அசைவற்ற மார்பகங்கள்; பார—பாரம்; க்ருச—மிகவும் மெலிந்த, ஒல்லியான; உதரம்—இடை; முக—முகம்; ஆமோத—இன்பத்தை உண்டு பண்ணும்; அனுரக்த—ஈர்க்கப்பட்டன; அலி—தேனீக்கள்; ஜங்கார—ரீங்காரம் செய்யும்; உத்விக்ன—கவலையிலிருந்து; லோசனம்—அவளது கண்கள்; பிப்ரத்—அசையும்; ஸு-கேச-பாரேண—அழகிய கூந்தலின் பாரத்தினால்; மாலாம்—ஒரு பூமாலையால்; உத்ஃபுல்ல-மல்லிகாம்—முழுமையாக மலர்ந்த மல்லிகைப் பூக்களாலான; ஸு-க்ரீவ—அழகியதொரு கழுத்து; கண்ட-ஆபரணம்—அழகிய நகைகளால் அலங்கரிக்கப்பட்ட; ஸு-புஜ—மிகவும் அழகிய கரங்கள்; அங்கத-பூஷிதம்—வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட; விரஜ-அம்பர—மிகவும் சுத்தமான துணி; ஸம்வீத—பரவியுள்ள; நிதம்ப—மார்பகம்; த்வீப—ஒரு தீவை போல் காணப்படும்; சோபயா—அத்தகைய அழகால்; காஞ்ச்யா—இடுப்பின் மீதுள்ளவர்; ப்ரவிலஸத்—பரந்துள்ள; வல்கு—மிகவும் அழகிய; சலத்-சரண-நூபுரம்—அசையும் கொலுசுகள்; ஸ-வ்ரீட-ஸ்மித—வெட்கப் புன்முறுவலுடன்; விக்ஷிப்த—பார்வையைச் செலுத்தி; ப்ரூ-விலாஸ—புருவங்களின் செயல்கள்; அவலோகனை:—மீது பார்வையைச் செலுத்தி; தைத்ய-யூத-ப—அசுரர்களின் தலைவர்கள்; சேதஹ்ஸு—இதயத்தின் மத்தியில்; காமம்—காம ஆசை; உத்தீபயத்—எழுந்தது; முஹு:—அடிக்கடி.
எத்தகைய எதிரிடையான சூழ்நிலையையும் தடுத்துவிடக் கூடியவரான பரமபுருஷ பகவான் விஷ்ணு, பிறகு மிக மிக அழகானதொரு பெண்ணின் உருவத்தை மேற்கொண்டார். பெண்ணாகத் தோன்றிய இந்த அவதாரம், மோஹினி மூர்த்தியாவாள். இவள் மனதுக்கு மிகவும் இன்பம் தருபவளாக இருந்தாள். அவளது நிறம், புதிதாக மலர்ந்ததொரு கருமைநிற தாமரையின் நிறத்தை ஒத்திருந்தது. அவளது உடலின் ஒவ்வொரு பாகமும் அழகாக அமைந்திருந்தது. அவ்வாறே அவளது செவிகளும் தோடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவளது கன்னங்கள் மிகவும் அழகாக இருந்தன. அவளது மூக்கு கவர்ச்சியாக இருந்தது. அவளது முகம் இளமை வேகம் கொண்ட ஒளி நிறைந்ததாக இருந்தது. அவளது பெரிய மார்பகம் அவளது இடையை மிகவும் மெல்லியதாக தோன்றச் செய்தன. அவளது முகம் மற்றும் உடல் ஆகியவற்றின் நறுமணத்தினால் கவரப்பட்ட தேனீக்கள் அவளைச் சுற்றி ரீங்கார மிட்டன. இதனால் அவளது கண்கள் அமைதியற்று இருந்தன. மிகவும் அழகாக இருந்த அவளது கூந்தல், மல்லிகைப் பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கவர்ச்சியாக அமைக்கப்பட்டிருந்த அவளது கழுத்து ஓர் அட்டிகையாலும், மற்ற ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவளது கரங்கள் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவளது உடல் சுத்தமான ஒரு புடவையால் மறைக்கப்பட்டிருந்தது. மேலும் அவளது மார்பகங்கள், அழகெனும் கடலிலுள்ள இரு தீவுகளைபோல் காணப்பட்டன. அவளது கால்கள் கொலுசுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவள் வெட்கத்துடன் புன்னகை செய்து, அசுரர்களின் மீது பார்வையைச் செலுத்திய போது ஏற்பட்ட அவளது புருவங்களின் அசைவினால், அசுரர்கள் அனைவரும் காம ஆசைகளில் மூழ்கி, அவர்களில் ஒவ்வொருவரும் அவளை அடைய விரும்பினர்.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பாற்கடலைக் கடைதல்” எனும் தலைப்பை கொண்ட எட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.