அத்தியாயம் – 7
சிவபெருமான் விஷம்பருகி
பிரபஞ்சத்தைக் காப்பாற்றுதல்
பதம் 8.7.1
ஸ்ரீ-சுக உவாச
தே நாக-ராஜம் அமந்த்ரிய ஃபல-பாகேன வாஸுகிம்
பரிவீய கிரௌ தஸ்மின் நேத்ரம் அப்திம் முதான்விதா:
ஆரேபிரே ஸுர யத்தா: அம்ருதார்தே குரூத்வஹ
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தே—அவர்களனைவரும் (தேவர்களும், அசுரர்களும்); நாக-ராஜம்—நாகங்களின் அரசனை; ஆமந்த்ரிய—வரவேற்று, அல்லது வேண்டிக் கொண்டு; ஃபல-பாகேன—அமிர்தத்தில் ஒரு பங்கைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் மூலமாக; வாஸுகிம்—வாசுகி எனும் பாம்பிற்கு; பரிவீய—வளைத்துச் சுற்றி; கிரெள—மந்தர மலையை; தஸ்மின்—அதனிடம்; நேத்ரம்—கடையும் கயிறு; அப்திம்—பாற்கடலை; முதா அன்விதா:—அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி; ஆரேபிரே—செயற்படத் துவங்கினர்; ஸுரா:—தேவர்கள்; யத்தா:—பெரும் முயற்சியுடன்; அம்ருத-அர்தே—அமிர்தத்தை அடைவதற்காக; குரு-உத்வஹ—குருக்களில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: குருக்களில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே, தேவர்களும், அசுரர்களும், அமிர்தத்தில் ஒரு பாகத்தைக் கொடுப்பதாக வாக்குறுதி செய்து பாம்பரசனான வாசுகியை வருமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் மந்தர மலையின் மேல் வாசுகியை கயிறாகச் சுற்றி, பேரின்பத்துடன் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை உற்பத்தி செய்ய முயன்றனர்.
பதம் 8.7.2
ஹரி: புரஸ்தாஜ் ஜக்ருஹே பூர்வம் தேவாஸ் ததோ ‘பவான்
ஹரி:—முழுமுதற் கடவுளாகிய அஜிதர்; புரஸ்தாத்—முன் புறத்திலிருந்து; ஜக்ருஹே—எடுத்தார்; பூர்வம்—முதலில்; தேவா:—தேவர்கள்; தத:—அதன்பிறகு; அபவன்—வாசுகியின் முன் பாகத்தைப் பற்றினர்.
முழுமுதற் கடவுளாகிய அஜிதர், பாம்பின் முன் பாகத்தைப் பற்றினார். அதன்பிறகு தேவர்களும் அவரைப் பின்பற்றினர்.
பதம் 8.7.3
தன் நைச்சன் தைத்ய-பதயோ மஹா-புருஷ-சேஷ்டிதம்
ந க்ருஹ்ணீமோ வயம் புச்சம் அஹேர் அங்கம் அமங்களம்
ஸ்வாத்யாய-ஸ்ருத-ஸம்பன்னா: ப்ரக்யாதா ஜன்ம-கர்மபி:
தத்—அந்த ஏற்பாட்டை; ந ஐச்சன்—விரும்பாத; தைத்ய-பதய:—அசுரத் தலைவர்கள்; மஹா-புருஷ—பரமபுருஷ பகவானின்; சேஷ்டிதம்—முயற்சி; ந—இல்லை; க்ருஹ்ணீம:—எடுத்துக் கொள்வோமாக; வயம்—நாங்கள் அனைவரும் (தைத்யர்கள்); புச்சம்—வால்; அஹே:—பாம்பின்; அங்கம்—பகுதியை; அமங்களம்—அமங்களமான, இழிவான; ஸ்வாத்யாய—வேதக் கல்வியுடன்; ஸ்ருத—மற்றும் வேத அறிவுடன்; ஸம்பன்னா:—தேவையானதை பூரணமாகக் கொண்டு; ப்ரக்யாதா:—முக்கியமான; ஜன்ம-கர்மபி:—பிறப்பாலும், செயல்களாலும்.
பாம்பின் அமங்களமான பகுதியாகிய அதன் வாலைப் பற்றுவது விவேகமல்ல என்று அசுரத் தலைவர்கள் எண்ணினர். பாம்பின் முன்பாகம் மங்களகரமானதும், பெருமைக்குரியதுமாக இருப்பதால், அது பரமபுருஷராலும், தேவர்களாலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. வாலுக்குப் பதிலாக பாம்பின் முன் பாகத்தை அசுரர்கள் பற்றிக் கொள்ள விரும்பினர். இவ்வாறாக அசுரர்கள், தாங்கள் வேதக் கல்வியில் மிகவும் முன்னேற்றமடைந்தவர்கள் என்றும், பிறவிக்கும், செயல்களுக்கும் தாங்கள் புகழ் பெற்றவர்கள் என்றும் வாதம் செய்து, பாம்பின் முன் பாகத்தைத்தான் தாங்கள் பிடித்துக் கொள்ளப் போவதாக எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பதம் 8.7.4
இதி தூஷ்ணீம் ஸ்திதான் தைத்யான் விலோக்ய புருஷோத்தம:
ஸ்மயமானோ விஸ்ருஜ்யாக்ரம் புச்சம் ஜக்ராஹ ஸாமர:
இதி—இவ்வாறாக; துஷ்ணீம்—மௌனமாக; ஸ்திதான்—இருந்ததை; தைத்யான்—அசுரர்கள்; விலோக்ய—கண்டு; புருஷ-உத்தம:—பரமபுருஷர்; ஸ்மயமான:—புன்னகை செய்து; விஷ்ருஜ்ய—கைவிட்டு; அக்ரம்—பாம்பின் முன்பாகத்தை; புச்சம்—பின் பாகத்தை; ஜக்ராஹ—பற்றினார்; ஸ-அமர:—தேவர்களுடன்.
இவ்வாறாக, தேவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அசுரர்கள் மௌனமாக இருந்ததைக் கண்டு, அவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்ட பரமபுருஷர் புன்னகை செய்தார். அவர்களுடன் வாதம் செய்யாமல், அவர்களுடைய திட்டத்தை உடனே ஏற்றுக் கொண்டு, அவர் பாம்பின் வாலைப் பற்றினார். தேவர்களும் அவரைப் பின்பற்றினர்.
பதம் 8.7.5
க்ருத-ஸ்தான-விபாகஸ் த ஏவம் கஸ்யப-நந்தனா:
மமந்து: பரமம் யத்தா அம்ருதார்தம் பயோ-நிதிம்
க்ருத—சரிப்படுத்தியதும்; ஸ்தான-விபாகா:—அவர்கள் பற்றிக் கொள்ள வேண்டிய இடங்களை; தே—அவர்கள்; ஏவம்—இவ்வாறாக; கஸ்யப-நந்தனா:—கஸ்யப்பரின் புத்திரர்கள் (தேவர்களும், அசுரர்களும்); மமந்து:—கடைந்தனர்; பரமம்—மிகப் பெரிய; யத்தா:—முயற்சியுடன்; அம்ருத-அர்தம்—அமிர்தத்தைப் பெறுவதற்காக; பய:-நிதிம்—பாற்கடலை.
இவ்வாறாக, பாம்பை எப்படி பற்றுவதென்பதைச் சரிப்படுத்தியபின், கஸ்யப்பரின் புத்திரர்களாகிய தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைவதன் மூலமாக அமிர்தத்தைப் பெறும் ஆவலுடன், அவர்களது செயல்களை ஆரம்பித்தனர்.
பதம் 8.7.6
மத்யமானே ‘ர்ணவே ஸோ ‘த்ரிர் அநாதாரோ ஹி அபோ ‘விசத்
த்ரியமாணோ ‘பி பலிபிர் கௌரவாத் பாண்டு-நந்தன
மத்யமானே—கடல் கடையப்படும் போது; அர்ணவே—பாற்கடலில்; ஸ:—அந்த; அத்ரி—மலை; அனாதார:—எதனாலும் தாங்கிக் கொள்ளப்படாமல்; ஹி—உண்மையில்; அப:—நீரில்; அவிசத்—மூழ்கியது; த்ரியமாண:—பிடிக்கப்பட்டு; அபி—இருந்தாலும்; பலிபி:—சக்தி வாய்ந்த தேவர்களாலும், அசுரர்களாலும்; கௌரவாத்—மிகவும் பாரமாக இருப்பதிலிருந்து; பாண்டு-நந்தன—பாண்டு புத்திரரே (பரீட்சித்து மகாராஜன்).
பாண்டு வம்சத்தின் புத்திரரே, இவ்வாறாக மந்தர மலை பாற்கடலில் ஒரு மத்தாக உபயோகிக்கப்படும்போது, அதற்குச் சுமைதாங்கி இல்லாதிருந்தது. ஆனால் தேவாசுரர்களின் பலம் வாய்ந்த கரங்களால் அது பற்றிக் கொள்ளப்பட்டு இருந்தாலும், அது கடலில் மூழ்கிவிட்டது.
பதம் 8.7.7
தே ஸுனிர்விண்ண-மனஸ: பரிம்லான-முக-ஸ்ரிய:
ஆஸன் ஸ்வ-பௌருஷே நஷ்டே தைவேனாதிபலீயஸா
தே—அவர்கள் அனைவரும் (தேவர்களும், அசுரர்களும்); ஸுனிர்விண்ண-மனஸ:—அவர்களின் மனங்கள் மிகவும் ஏமாற்றமடைந்து; பரிம்லான—உலர்ந்து விட்டது; முக-ஸ்ரிய:—அவர்களுடைய முகங்களின் பொலிவு; ஆஸன்—ஆனது; ஸ்வ-பெளருஷே—அவர்களது சுய திறமையுடன்; நஷ்டே—இழந்துவிட்டதால்; தைவேன—விதியின் ஏற்பாட்டினால்; அதி-பலீயஸா—மற்ற அனைத்தையும் விட எப்பொழுதும் வலிமைமிக்கதான.
விதியின் வலிமையால் மலை மூழ்கிவிட்டதால், தேவர்களும், அசுரர்களும் ஏமாற்றம் அடைந்ததுடன், அவர்களது முகங்கள் உலர்ந்துவிடுவதைப் போல் காணப்பட்டன.
பதம் 8.7.8
விலோக்ய விக்னேச-விதிம் ததேஸ்வரோ
துரந்த-வீர்யோ ‘விததாபிஸந்தி:
க்ருத்வா வபு: கச்சபம் அத்புதம் மஹத்
ப்ரவிஸ்ய தோயம் கிரிம் உஜ்ஜஹார
விலோக்ய—கவனித்து; விக்ன—தடங்கலை (மலை முழுகிவிட்ட); ஈச-விதிம்—விதியின் ஏற்பாட்டினால்; ததா—பிறகு; ஈஸ்வர:—பரமபுருஷ பகவான்; துரந்த-வீர்ய:—நினைத்தற்கரிய சக்தி வாய்ந்த; அவிதத—தவறாத; அபிஸந்தி:—யாருடைய தீர்மானம்; க்ருத்வா—விரிவடைந்து; வபு:—உடலில்; கச்சபம்—ஆமையின்; அத்புதம்—அற்புதமான; மஹத்—மிகப்பெரிய; ப்ரவிஸ்ய—பிரவேசித்து; தோயம்—நீரில்; கிரிம்—மலையை (மந்தர); உஜ்ஜஹார—தூக்கினார்.
பரமனின் விருப்பத்தால் உருவாக்கப்பட்ட சூழ்நிலையைக் கண்டு, திட நோக்கம் கொண்டவரும், எல்லையற்ற சக்தி படைத்தவருமான பகவான், ஆமையின் ஓர் அற்புத வடிவத்தை ஏற்று, நீருக்குள் புகுந்து, பிரம்மாண்டமான மந்தர மலையைத் தூக்கினார்.
பதம் 8.7.9
தம் உத்திதம் வீக்ஷ்ய குலாசலம் புன:
ஸமுத்யதா நிர்மதிதும் ஸுராஸுரா:
ததார ப்ருஷ்டேன ஸ லக்ஷ-யோஜன-
ப்ரஸ்தாரிணா த்வீப இவாபரோ மஹான்
தம்—அந்த மலை; உத்திதம்—உயர்த்தப்பட்டதை; வீக்ஷ்ய—கண்டு; குலாசலம்—மந்தரம் எனப்படும்; புன:—மீண்டும்; ஸமுத்யதா:—உற்சாகம் அடைந்தனர்; நிர்மதிதும்—பாற்கடலைக் கடைவதற்காக; ஸுர-அஸுரா:—தேவர்களும், அசுரர்களும்; ததார—தூக்கினார்; ப்ருஷ்டேன—முதுகினால்; ஸ:—பரமபுருஷர்; லக்ஷ-யோஜன—லட்ச யோஜனைகள் (எட்டு லட்சம் மைல்கள்); ப்ரஸ்தாரிணா—பரந்திருக்கும்; த்வீப:—ஒரு பெரிய தீவு; இவ—போல்; அபர:—மற்றொரு; மஹான்—மிகப்பெரிய.
மந்தர மலை தூக்கப்பட்டதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் உற்சாகம் பெற்று, கடைவதை ஆர்வத்துடன் மீண்டும் ஆரம்பித்தனர். அந்த மலை பிரம்மாண்டமான ஆமையின் முதுகின்மேல் தாங்கிக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த மலை பெரியதொரு தீவைப் போல், எட்டு லட்சம் மைல்களுக்குப் பரந்திருந்தது.
பதம் 8.7.10
ஸுராஸுரேந்ரைர் புஜ-வீர்ய-வேபிதம்
பரிப்ரமந்தம் கிரிம் அங்க ப்ருஷ்டத:
பிப்ரத் தத்-ஆவர்தனம் ஆதி-கச்சபோ
மேனே ‘ங்க-கண்டூயனம் அப்ரமேய:
ஸுர-அஸுர-இந்ரை:—தேவாசுரர்களின் தலைவர்களால்; புஜ-வீர்ய—அவர்களது கரங்களின் வலிமையால்; வேபிதம்—அசையும்; பரிப்ரமந்தம்—சுழலும்; கிரிம்—மலை; அங்க—பரீட்சித்து மகாராஜனே; ப்ருஷ்டத:—அவரது முதுகின் மீது; பிப்ரத்—தங்கிக் கொண்டு; தத்—அதன்; ஆவர்தனம்—சுழற்சியை; ஆதிகச்சப—ஆதியான அற்புத ஆமையாக; மேனே—கருதியது; அங்க-கண்டூயனம்—உடலை இனிமையாக வருடுவது போல்; அப்ரமேய:—எல்லையற்ற.
ராஜனே, தேவர்களும், அசுரர்களும் தங்களுடைய கரங்களின் பலத்தினால், அந்த விசேஷமான ஆமையின் முதுகின் மேல் மந்தர மலையைச் சுழற்றியபோது, அந்த மலையின் சுழற்சியை தமது உடலை வருடும் ஒரு சாதனமாக ஆமை ஏற்றுக் கொண்டது. இவ்வாறாக ஓர் இன்ப உணர்ச்சியை அது அனுபவித்தது.
பதம் 8.7.11
ததாஸுரான் ஆவிசத் ஆஸுரேண
ரூபேண தேஷாம் பல-வீர்யம் ஈரயன்
உத்தீபயன் தேவ-கணாம்ஸ் ச விஷ்ணுர்
தைவேன நாகேந்ரம் அபோத-ரூப:
ததா—அதன்பிறகு; அஸுரான்—அசுரர்களுக்குள்; ஆவிசத்—புகுந்தார்; ஆஸுரேண—தீவிர குணத்தால்; ரூபேண—அத்தகைய ஒரு ரூபத்தில்; தேஷாம்—அவர்களின்; பல-வீர்யம்—பலமும், சக்தியும்; ஈரயன்—அதிகரித்து; உத்தீபயன்—உற்சாகப்படுத்தி; தேவ-கணான்—தேவர்களை; ச—மேலும்; விஷ்ணு:—பகவான் விஷ்ணு; தைவேன—நற்குணத்தின் அம்சத்தால்; நாக-இந்ரம்—பாம்புகளில் அரசனான வாசுகிக்குள்; அபோத-ரூப:—அறியாமைக் குணத்தினால்.
அதன்பிறகு, பகவான் விஷ்ணு, அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், அவர்களது பல்வேறு வகையான பலத்தையும், சக்தியையும் அதிகரிப்பதற்காகவும், நற்குணமாக தேவர்களுக்குள்ளும், தீவிர குணமாக அசுரர்களுக்குள்ளும், அறியாமைக் குணமாக வாசுகிக்குள்ளும் புகுந்தார்.
பதம் 8.7.12
உபரி அகேந்ரம் கிரி-ராட் இவான்ய
அக்ரம்ய ஹஸ்தேன ஸஹஸ்ர-பாஹு:
தஸ்தௌ திவி ப்ரஹ்ம-பவேந்ர-முக்யைர்
அபிஷ்டுவத்பி: ஸுமனேர்-‘பிவ்ருஷ்ட:
உபரி—உச்சியில்; அகேந்ரம்—பெரிய மலை; கிரி-ராட்—மலைகளின் அரசன்; இவ—போன்ற; அன்ய:—மற்றொரு; ஆக்ரம்ய—பற்றிக் கொண்டு; ஹஸ்தேன—ஒரு கரத்தால்; ஸஹஸ்ர-பாஹு:—ஆயிரக்கணக்கான கரங்களைக் காட்டி; தஸ்தெள—இருந்தார்; திவி—ஆகாயத்தில்; ப்ரஹ்ம—பிரம்மதேவர்; பவ—சிவபெருமான்; இந்ர—சுவர்க்கராஜன்; முக்யை:—முதலான; அபிஷ்டுவத்பி:—பகவானைத் துதித்தனர்; ஸுமன:—மலர்களால்; அபிவ்ருஷ்ட—தூவப்பட்டு.
ஆயிரக்கணக்கான கரங்களுடன் தம்மை தோற்றுவித்துக் கொண்ட பகவான், பிறகு மற்றொரு பெரிய மலையைப் போல், மந்தர மலையின் சிகரத்தில் தோன்றி அதை ஒரு கரத்தால் பற்றியிருந்தார். உயர் கிரக அமைப்புக்களில் பிரம்ம தேவரும், சிவபெருமானும் சுவர்க்க ராஜனான இந்திரனும், பிற தேவர்களும், பகவானைத் துதித்து, அவர் மீது மலர்களைத் தூவினர்.
பதம் 8.7.13
உபரி அதஸ் சாத்மனி கோத்ர-நேத்ரயோ:
பரேண தே ப்ராவிசதா ஸமேதிதா:
மமந்துர் அப்திம் தரஸா மதோத்கடா
மஹாத்ரிணா க்ஷோபித-நக்ர-சக்ரம்
உபரி—மேலேயும்; அத:-ச—மற்றும் கீழேயும்; ஆத்மனி—அசுரர்களுக்குள்ளும், தேவர்களுக்குள்ளும்; கோத்ர-நேத்ரயோ:—மலைக்குள்ளும், கயிறாக உபயோகிக்கப்பட்ட வாசுகிக்குள்ளும்; பரேண—பரமபுருஷ பகவான்; தே—அவர்கள்; ப்ராவிசதா—அவர்களுக்குள் புகுந்து; ஸமேதிதா:—போதுமான அளவிற்கு கிளர்ச்சியடையச் செய்தது; மமந்து—கடைந்தனர்; அப்திம்—பாற்கடலை; தரஸா—பெரும் பலத்துடன்; மத-உத்கடா:—மதம் பிடித்தவாறு; மஹா-அத்ரிணா—பிரம்மாண்டமான மந்தரமலையால்; க்ஷோபித—கிளர்ச்சியடைந்தன; நக்ர-சக்ரம்—நீரிலுள்ள முதலைகள் அனைத்தும்.
தேவர்களும், அசுரர்களும் பகவானால் உற்சாகம் ஊட்டப்பட்டவர்களாய், அமிர்தத்துக்காக ஏறக்குறைய மதம் பிடித்தவர்களைப் போல் உழைத்தனர். பகவான் மலையின் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் இருந்தார். மேலும் அவர் தேவர்களுக்குள்ளும், அசுரர்களுக்குள்ளும், வாசுகிக்குள்ளும் மற்றும் மலைக்குள்ளும் புகுந்தார். தேவாசுரர்களின் வலிமையின் காரணத்தால், நீரிலுள்ள முதலைகள் அனைத்தும் மிகவும் கிளர்ச்சியடையும் அளவிற்கு, பாற்கடல் மிகவும் சக்தி வாய்ந்த முறையில் கலக்கப்பட்டது. ஆயினும் கடலைக் கடையும் வேலை இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றது.
பதம் 8.7.14
அஹீந்ர-ஸாஹஸ்ர-கடோர-த்ருண்-முக
ஸ்வாஸாக்னி-தூமாஹத-வர்சஸோ ‘ஸுரா:
பௌலோம-காலேய-பலீல்வலாதயோ
தவாக்னி-தக்தா: ஸரளா இவாபவன்
அஹீந்ர—பாம்பு அரசனின்; ஸாஹஸ்ர—ஆயிரக்கணக்கில்; கடோர—மிக, மிக கடினமான; த்ருக்—எல்லாத் திசைகளிலும்; முக—வாயால்; ஸ்வாஸ்—சுவாசம்; அக்நி—வெளியேறும் நெருப்பு; தூம—புகை; ஆஹத—பாதிக்கப்பட்டு; வர்சஸ:—கதிர்களால்; அஸுரா:—அசுரர்கள்; பௌலோம—பௌலோமன்; காலேய—காலேயன்; பலி—பலி; இவ்வல—இவ்வலன்; ஆதய:—முதலான; தவ-அக்நி—ஒரு காட்டுத் தீயால்; தக்தா:—எரிக்கப்பட்ட; ஸரலா:—ஸரல மரங்கள்; இவ—போல்; அபவன்—அவர்கள் அனைவரும் ஆயினர்.
வாசுகிக்கு ஆயிரக்கணக்கான கண்களும் வாய்களும் இருந்தன. அது சுவாசிக்கும்போது அதன் வாய்களிலிருந்து புகையும், தீச்சுடர்களும் வெளிப்பட்டன. இது பௌலோமன், காலேயன், பலி மற்றும் இவ்வலன் முதலான அசுரர்களை பாதிப்படையச் செய்தது. இவ்வாறாக, ஒரு காட்டுத் தீயினால் எரிக்கப்பட்ட ஸரஸ மரங்களைப் போல் காணப்பட்ட அசுரர்கள், படிப்படியாக சக்தியற்றவர்கள் ஆயினர்.
பதம் 8.7.15
தேவாம்ஸ் ச தச்-சவாஸ்-சிகா ஹத ப்ரபான்
தூம்ராம்பர-ஸ்ரக்-வர-கஞ்சுகானனான்
ஸமப்யவர்ஷன் பகவத்-வசா-கனா
வவு: ஸமுத்ரோர்மி-உபகூட-வாய
தேவான்—தேவர்கள் அனைவரும்: ச—கூட; தத்—வாசுகியின்; ஸ்வாஸ—சுவாசத்திலிருந்து; சிகா—தீச்சுடர்களால்; ஹத—பாதிக்கப்பட்டு; ப்ரபான்—அவர்களின் தேக ஒளி; தூம்ர—புகை சூழ்ந்த; அம்பர—உடை; ஸ்ரக்-வர—தலைசிறந்த மாலைகள்; கஞ்சுக—ஆயுதங்கள்; ஆனனான்—மற்றும் முகங்கள்; ஸமப்யவர்ஷன்—போதுமான மழை பெய்தது; பகவத்-வசா:—முழுமுதற் கடவுளுடைய கட்டுப்பாட்டின் கீழ்; கனா:—மேகங்கள்; வவு:—வீசின; ஸமுத்ர—பாற்கடலின்; ஊர்மி—அலைகளிலிருந்து; உபகூட—சிறு நீர்த்துளிகளைக் கொண்ட; வாயவ:—இளங்காற்று.
வாசுகியின் நெருப்பைக் கக்கும் சுவாசத்தால் தேவர்களும் பாதிப்படைந்ததால், அவர்களின் தேக ஒளியும் குறைந்து போனது. மேலும் அவர்களது ஆடைகள், மாலைகள், ஆயுதங்கள் மற்றும் முகங்கள் ஆகியவை புகையால் கருத்தன. ஆயினும், பரமபுருஷ பகவானின் கருணையால் கடலின் மேல் மேகங்கள் தோன்றி, பெரும் மழை பொழிந்தது. தேவர்களின் வருத்தத்தை அகற்றுதற்காக, கடலலைகளிலிருந்து நீர்த்துளிகளை ஏந்திய படி இளங்காற்று வீசியது.
பதம் 8.7.16
மத்யமானாத் ததா ஸிந்தோர் தேவாஸுர-வரூத-பை:
யதா ஸுதா ந ஜாயேத நிர்மமந்தாஜித: ஸவயம்
மத்யமானாத்—போதுமான அளவிற்குக் கடைந்தும்; ததா—இவ்வாறாக; ஸிந்தோ:—பாற்கடலில் இருந்து; தேவ—தேவர்களின்; அஸுர—மற்றும் அசுரர்கள்; வரூத-பை:—சிறந்தவர்களால்; யதா—அப்போது; ஸுதா—அமிர்தம்; ந ஜாயேத—வெளிப்படவில்லை; நிர்மமந்த—கடைந்தார்; அஜித:—முழுமுதற் கடவுளான அஜிதர்; ஸ்வயம்—சுயமாக.
மிகச்சிறந்த தேவாசுரர்களால் இவ்வளவு முயற்சி மேற்கொள்ளப்பட்டும், பாற்கடலிலிருந்து அமிர்தம் வராததால், பரமபுருஷ பகவானாகிய, அஜிதர் தாமாகவே கடலைக் கடையத் துவங்கினார்.
பதம் 8.7.17
மேக-ஸ்யாம: கனக-பரிதி: கர்ண-வித்யோத-வித்யுன்
மூர்த்னி ப்ராஜத்-விலுலித-கச: ஸ்ரக்-தரோ ரக்த-நேத்ர:
ஜைத்ரைர் தோர்பிர் ஜகத்-அபய-தைர் தங்தசூகம் க்ருஹீத்வா
மத்னன் மத்னா ப்ரதிகிரிர் இவாசோபதாதோ த்ருதாத்ரி:
மேக-ஸ்யாம:—மேகவர்ணம் கொண்ட; கனக-பரிதி:—மஞ்சள் நிற ஆடை அணிந்து; கர்ண—காதுகளில்; வித்யோத-வித்யுத்—அவரது குண்டலங்கள் மின்னலைப் போல் ஒளி வீசின; மூர்த்னி—தலைமீது; ப்ராஜத்—பிரகாசிக்கும்; விலுலித—சீவப்படாத; கச:—யாருடைய கேசம்; ஸ்ரக்-தர:—ஒரு பூமாலையை அணிந்து; ரக்த-நேத்ர:—சிவந்த கண்களுடன்; ஜைத்ரை:—வெற்றியுடன் கூடிய; தோர்பி:—கடங்களுடன்; ஜகத்—பிரபஞ்சத்திற்கு; அபய-தை:—அபயமளிக்கும்; தந்தசூகம்—பாம்பு (வாசுகி); க்ருஹீத்வா—எடுத்துக் கொண்டபின்; மத்னன்—கடைந்து; மத்னா—மத்தால் (மந்தர மலையால்); ப்ரதிகிரி:—மற்றொரு மலை; இவ—போல்; அசோபத—அவர் தோன்றினார்; அதோ—பிறகு; த்ருத-அத்ரி:—மலையை எடுத்துக் கொண்டு.
பகவான் ஒரு கருமேகத்தைப் போல் தோன்றினார். அவர் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்திருந்தார். அவரது காதுகளிலிருந்த குண்டலங்கள் மின்னலைப் போல் பிரகாசித்தன. அவரது கேசம் அவரது தோள்களின் மீது பரவியிருந்தது. அவர் மலர் மாலை ஒன்றை அணிந்திருந்தார். அவரது கண்கள் சிவந்திருந்தன. அவரது வலிமை மிக்க புகழ்பெற்ற கரங்கள் பிரபஞ்சம் முழுவதிலும் அபயம் அளிப்பவையாகும். அக்கரங்களால் அவர் வாசுகியைப் பற்றி, மந்தர மலையை மத்தாகப் பாவித்து, கடலைக் கடையத் துவங்கினார். இந்த அலுவலில் ஈடுபட்டிருந்தபோது, பகவான், இந்ரநீலம் எனும் பெயர் கொண்ட ஓர் அழகிய மலையைப் போல் காணப்பட்டார்.
பதம் 8.7.18
நிர்மத்யமானாத் உததேர் அபூத் விஷம்
மஹோல்பணம் ஹாலஹலாஹ்வம் அக்ரத:
ஸம்ப்ரந்த- மீனோன்மகராஹி-கச்சபாத்
திமி-த்விப-க்ராஹ-திமிங்கிலாகுலாத்
நிர்மத்யமானாத்—கடலைக் கடையும் செயல்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது; உததே:—கடலிலிருந்து; அபூத்—அங்கிருந்தது; விஷம்—விஷம்; மஹா-உல்பணம்—மிகப் பயங்கரமான; ஹாலஹல ஆஹ்வம்—ஹாலஹல எனும் பெயர் கொண்ட; அக்ரத:—முதலில்; ஸ்ம்பராந்த—கிளர்ச்சியடைந்து இங்குமங்கும் சென்றவாறு; மீன—பல வகையான மீன்கள்; உன்மகர—சுறாமீன்கள்; அஹி—பல்வேறு வகையான பாம்புகள்; கச்சபாத்—மற்றும் பலவகையான ஆமைகள்; திமி—திமிங்கிலங்கள்; த்விப—நீர் யானைகள்; க்ராஹ—முதலைகள்; திமிங்கில—திமிங்கிலங்களை விழுங்கும் திமிங்கிலங்கள்; ஆகுலாத்—மிகவும் குழப்பப்பட்டு.
மீன்கள், சுறா மீன்கள், ஆமைகள் மற்றும் பாம்புகள் ஆகியவை பெரும் கிளர்ச்சியும், குழப்பமும் அடைந்தன. கடல் முழுவதுமே கொந்தளிப்பு அடைந்தது. நீர் மிருகங்களாகிய, திமிங்கிலங்கள், நீர் யானைகள், முதலைகள், மற்றும் திமிங்கில மீன்கள் (சிறு திமிங்கிலங்களை விழுங்கிவிடக் கூடிய பெரிய திமிங்கிலங்கள்) ஆகியவையும் கூட நீரின் மேற்பாகத்திற்கு வந்தன. இவ்விதமாக கடல் கடையப்படும்போது, அது முதலில் ஹாலஹல என்றழைக்கப்படும், ஒருவித கொடுமையான பயங்கர விஷத்தை உற்பத்தி செய்தது.
பதம் 8.7.19
தத் உக்ர-வேகம் திசி திசி உபரி அதோ
விஸர்பத் உத்ஸர்பத் அஸஹ்யம் அப்ரதி
பீதா: ப்ரஜா துத்ருவுர் அங்க ஸேஸ்வரா
அரக்ஷ்யமாணா: சரணம் ஸதாசிவம்
தத்—அந்த; உக்ர-வேகம்—மிகவும் கொடுமையான, சக்தி வாய்ந்த விஷம்; திசி திசி—எல்லாத் திசைகளிலும்; உபரி—மேல் நோக்கியும்; அத:—கீழ்நோக்கியும்; விஸர்பத்—சுருண்டு; உத்ஸர்பத்—மேல் நோக்கிச் செல்லும்; அஸஹ்யம்—தாங்க முடியாத; அப்ரதி—கட்டுப்படுத்த முடியாத; பீதா:—மிகவும் அச்சம் கொண்டு; ப்ரஜா:—அகிலலோக வாசிகளும்; துத்ருவு:—இங்குமங்கும் நடமாடின; அங்க—பரீட்சித்து மகாராஜனே; ஸ-ஈஸ்வரா:—பரமபுருஷருடன்; அரஷ்யமாணா:—பாதுகாக்கப்படாத; சரணம்—புகலிடம்; ஸதாசிவம்—சிவ பெருமானின் மலர்ப் பாதங்களில்.
ராஜனே, கட்டுப்படுத்த முடியாத அந்த விஷம், மேலும் கீழுமாக பெரும் வலிமையுடன் எல்லாத் திசைகளிலும் பரவிக் கொண்டு இருக்கும்போது, பெருமானும், அனைத்து தேவர்களும் சிவபெருமானை (சதாசிவன்) அனுகினர். புகலிடம் இல்லை என்றுணர்ந்து, மிகவும் அச்சங் கொண்டவர்களாய், அவரது புகலிடத்தை அவர்கள் நாடிச் சென்றனர்.
பதம் 8.7.20
விலோக்ய தம் தேவ-வரம் த்ரி-லோக்யா
பவாய தேவ்யாபிமதம் முனீனாம்
ஆஸீனம் அத்ராவ் அபவர்க-ஹேதோஸ்
தபோ ஜுஷாணம் ஸ்துதிபி: ப்ரணேமு:
விலோக்ய—கண்டு; தம்—அவரை; தேவ-வரம்—தேவர்களில் சிறந்தவரான; த்ரி-லோக்யா—மூவுலகங்களின்; பவாய—செழிப்புக்காக; தேவ்யா—அவரது மனைவி பவானியுடன்; அபிமதம்—ஏற்றுக் கொள்ளப்பட்ட; முனீனாம்—சிறந்த முனிவர்களுடன்; ஆஸீனம்—ஒன்றாக அமர்ந்து; அத்ரௌ—கைலாய மலையின் உச்சியில் இருந்து; அபவர்க-ஹேதோ:—முக்தியை விரும்பி; தப:—தவத்தில்; ஜுஷாணம்—அவர்களால் சேவிக்கப்பட்டு; ஸ்துதிபி:—பிரார்த்தனைகளால்; ப்ரேணமு:—அவர்களது வணக்கங்களைச் சமர்ப்பித்தனர்.
மூவுலகங்களின் மங்களகரமான முன்னேற்றத்திற்காக, சிவபெருமான் கைலாய மலையின் சிகரத்தில் தமது மனைவியாகிய பவானியுடன் அமர்ந்திருப்பதை தேவர்கள் கண்டனர். முக்தியை விரும்பும் பெரும் முனிவர்கள் அவரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். தேவர்கள் பெரும் மரியாதையுடன் தங்கள் வணக்கங்களையும், பிரார்த்தனைகளையும் அவருக்குச் சமர்ப்பித்தனர்.
பதம் 8.7.21
ஸ்ரீ ப்ரஜாபதய ஊசு:
தேவ-தேவ மஹா-தேவ பூதாத்மன் பூத-பாவன
த்ராஹி ந: சரணாபன்னாம்ஸ் த்ரைலோக்ய-தஹனாத் விஷாட்
ஸ்ரீ ப்ரஜாபதய: ஊசு:—பிரஜாபதிகள் கூறினர்; தேவ-தேவ—மகாதேவரே, தேவர்களில் சிறந்தவரே; மஹா-தேவ—சிறந்த தேவரே; பூத-ஆத்மன்—இவ்வுலகிலுள்ள அனைவரின் உயிரும் ஆத்மாவுமாக இருப்பவரே; பூத-பாவன—அவர்கள் அனைவரது மகிழ்ச்சிக்கும், செழுமைக்கும் காரணமாக இருப்பவரே; த்ராஹி—காப்பாற்றுங்கள்; ந:—எங்களை; சரண-ஆபன்னான்—உமது தாமரைப் பாதத்தில் புகலிடம் கொண்ட; த்ரைலோக்ய—மூவுலகங்களையும்; தஹனாத்—தகிக்கும்; விஷாட்—இந்த விஷத்திலிருந்து.
பிரஜாபதிகள் கூறினர்: தேவர்களில் சிறந்தவரே, மகாதேவரே, எல்லா ஜீவராசிகளுக்கும் உயிரும், ஆத்மாவுமாக இருப்பதுடன், அவர்களது மகிழ்ச்சிக்கும், செழுமைக்கும் காரணமாக இருப்பவரே, உமது தாமரைப் பாதங்களில் புகலிடம் கொள்ள நாங்கள் வந்திருக்கிறோம். இப்போது மூவுலகங்களிலும் பரவிக் கொண்டிருக்கும் இக்கொடிய விஷத்திலிருந்து தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுவீராக.
பதம் 8.7.22
த்வம் ஏக: ஸர்வ-ஜகத ஈஸ்வரோ பந்த-மோக்ஷயோ:
தம் த்வாம் அர்சந்தி குசலா: ப்ரபன்னார்தி-ஹரம் குரும்
த்வம் ஏக:—உண்மையில் தாங்களே; ஸர்வ-ஜகத:—மூவுலகங்களின்; ஈஸ்வர:—ஆளுனர்; பந்த-மோக்ஷயோ:—பந்தம் மற்றும் முக்தி ஆகிய இரண்டிற்கும்; தம்—அந்த ஆளுனர்; த்வாம் அர்சந்தி—உம்மை வணங்குகிறோம்; குசலா:—நல்லதிர்ஷ்டத்தை வேண்டுபவர்கள்; ப்ரபன்னா-ஆர்தி-ஹரம்—புகலிடம் கொண்ட பக்தனின் துக்கங்கள் அனைத்தையும் குறைக்கக் கூடியவர்; குரும்—இழிந்த ஆத்மாக்கள் அனைவருக்கும் நல்லதொரு ஆலோசகராக செயற்படும் நீர்.
பெருமானே முழு பிரபஞ்சத்திற்கும் ஆளுனராக நீர் இருப்பதால், நீரே பந்தத்திற்கும், விடுதலைக்கும் காரணமாவீர். ஆன்மீக உணர்வில் முன்னேறியிருப்பவர்கள் உம்மிடம் சரணடைகின்றனர். ஆகவே அவர்களுடைய துன்பத்தைக் குறைப்பவரும், அவர்களது முக்திக்குக் காரணமாக இருப்பவரும் நீர்தான். எனவே பெருமானாகிய உம்மை நாங்கள் வழிபடுகிறோம்.
பதம் 8.7.23
குண-மய்யா ஸ்வ-சக்த்யாஸ்ய
ஸர்க-ஸ்திதி அப்யயான் விபோ
தாத்ஸே யதா ஸ்வ-த்ருக்-பூமன்
ப்ரஹ்ம-விஷ்ணு-சிவாபிதாம்
குண-மய்யா—முக்குணங்களில் செயற்படும்; ஸ்வ-சக்த்யா—உமது பகிரங்க சக்தியால்; அஸ்ய—இந்த ஜட உலகின்; ஸர்க-ஸ்திதி-அப்யயான்—படைத்தல், காத்தல், மற்றும் அழித்தல்; விபோ—பெருமானே; தத்ஸே—நீர் செய்கிறீர்; யதா—அப்போது; ஸ்வ-த்ருக்—உம்மை நீர் தோற்றுவித்துக் கொள்கிறீர்; பூமன்—மிகப் பெரியவரே; ப்ரஹ்ம-விஷ்ணு-சிவ-அபிதாம்—பிரம்மதேவர் பகவான் விஷ்ணு அல்லது சிவபெருமானாக.
பெருமானே, நீர் சுயப்பிரகாசம் கொண்டவரும், பரமனுமாவீர். இந்த ஜட உலகை நீர் உமது சுய சக்தியால் படைக்கிறீர். மேலும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் எனும் விவகாரங்களில் நீர் செயலாற்றும் போது, பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் எனும் நாமங்களை நீர் மேற்கொள்கிறீர்.
பதம் 8.7.24
த்வம் ப்ரஹ்ம பரமம் குஹ்யம் ஸத்-அஸத்-பாவ-பாவனம்
நானா-சக்திபிர் ஆபாதஸ் த்வம் ஆத்மா ஜகத்-ஈஸ்வர:
த்வம்—நீர்; ப்ரஹ்ம—அருவ பிரம்மம்; பரமம்—பரமமானவர்; குஹ்யம்—இரகசியமான; ஸத்-அஸத்-பாவ-பாவனம்—பலதரப்பட்ட படைப்பு, அதன் காரண விளைவு ஆகியவற்றின் காரணமான; நானா-சக்திபி:—பலவிதமான சக்திகளுடன்; ஆபாத:—தோன்றுகிறீர்; த்வம்—நீரே; ஆத்மா—பரமாத்மா; ஜகத்-ஈஸ்வர:—பரமபுருஷ பகவான்.
நீரே எல்லாக் காரணங்களுக்கும் காரணமாகவும், சுயப்பிரகாசம் கொண்டவரும், நினைத்தற்கரியவரும் ஆவீர். ஆதியில் பரப்பிரம்மமாகிய அருவ பிரம்மமும் நீரே. இப்பிரபஞ்சத் தோற்றத்தில் பல்வேறு சக்திகளை நீர் தோன்றச் செய்கிறீர்.
பதம் 8.7.25
த்வம் சப்த-யோனிர் ஜகத்-ஆதிர் ஆத்மா
ப்ராணேந்ரிய-த்ரவ்ய-குண: ஸ்வபாவ:
கால: க்ரது: ஸத்யம் ருதம் ச தர்மஸ்
த்வய் அக்ஷரம் யத் த்ரி-வ்ருத்-ஆமனந்தி
த்வம்—நீர்; சப்த யோனி—வேத இலக்கியத்தின் ஆதியும், மூலமும் ஆவீர்; ஜகத்-ஆதி:—ஜட சிருஷ்டியின் அதிகாரமாவீர்; ஆத்மா—ஆத்மா; ப்ராண—உயர்ச்சக்தி; இந்ரிய—புலன்கள்; த்ரவ்ய—பெளதிக மூலப் பொருட்கள்; குண:—முக்குணங்கள்; ஸ்வ-பாவ:—ஜட இயற்கை; கால:—நித்திய காலம்; க்ரது:—யக்ஞம்; ஸத்யம்—சத்தியம்; ருதம்—உண்மை; ச—மேலும்; தர்ம:—இரு வேறு வகையான மதங்கள்; த்வயி—உம்மிடம்; அக்ஷரம்—ஓம்காரம் எனப்படும் மூலாக்ஷரம்; யத்—அது; த்ரி-வ்ருத—’அ’, ‘உ’ மற்றும் ‘ம்’ எனும் எழுத்துக்களைக் கொண்ட; ஆமனந்தி—அவர்கள் கூறுகின்றனர்.
பெருமானே, நீரே வேத இலக்கியத்தின் ஆதிமூலமாவீர். ஜட சிருஷ்டி, உயிர்ச் சக்தி, புலன்கள், பஞ்ச பூதங்கள், முக்குணங்கள் மற்றும் மஹத்-தத்வம் ஆகியவற்றிற்கு நீரே மூலகாரணமாவீர். நித்திய காலமாகவும், திட நோக்கமாகவும் இருப்பவரும் சத்தியம் (ஸத்ய), மற்றும் உண்மை (ருத) என்றழைக்கப்படும் இரு சமய முறையாக இருப்பவரும் நீரே. “அ—ற—உ—ம்” எனும் மூன்று அட்சரங்களைக் கொண்ட ஓம் எனும் சொல்லுக்குப் புகலிடமும் நீரே.
பதம் 8.7.26
அக்நிர் முகம் தே ‘கில-தேவதாத்மா
க்ஷிதிம் விதுர் லோக-பவாங்ரி-பங்கஜம்
காலம் கதிம் தே ‘கில-தேவதாத்மனோ
திசஸ் ச கர்ணெள ரஸனம் ஜலேசம்
அக்நி:—நெருப்பு; முகம்—வாய்; தே—உமது; அகில-தேவதா-ஆத்மா—அனைத்து தேவர்களுக்கும் ஆதியானவர்; க்ஷிதிம்—பூமியின் மேற்பாகம்; விது:—அவர்கள் அறிவர்; லோக-பவ—அனைத்து கிரகங்களின் மூலம்; அங்ரி-பங்க-ஜம்—உமது தாமரைப் பாதங்கள்; காலம்—நித்திய காலம்; கதிம்—முன்னேற்றம்; தே—உமது; அகில-தேவதா-ஆத்மன:—அனைத்து தேவர்களின் மொத்தம்; திச:—எல்லா திசைகளும்; ச—கூட; கர்ணௌ—உமது செவிகள்; ரஸனம்—சுவை; ஜல-ஈசம்—நீருக்கு அதிபதியான வருண தேவன்.
அகில லோகங்களுக்கும் தந்தையே, நெருப்பு உமது வாய் என்றும், பூமியின் மேற்பாகம் உமது தாமரைப் பாதங்கள் என்றும், நித்திய காலம் உமது அசைவு என்றும், எல்லாத் திசைகளும் உமது செவிகள் என்றும், நீருக்கு அதிபதியாகிய வருணன் உமது நாக்கு என்றும் கற்றறிந்த பண்டிதர்கள் அறிவர்.
பதம் 8.7.27
நாபிர் நபஸ் தே ஸ்வஸனம் நபஸ்வான்
ஸூர்யஸ் ச சக்ஷும்ஷி ஜலம் ஸ்ம ரேத:
பராவராத்மாஸ்ரயணம் தவாத்மா
ஸோமோ மனோ த்யௌர் பகவன் சிரஸ் தே
நாபி:—நாபி; நப:—ஆகாயம்; தே—உமது; ஸ்வஸனம்—சுவாசம்; நபஸ்வான்—காற்று; ஸூர்ய: ச—மற்றும் சூரிய கிரகம்; சக்ஷும்ஷி—உமது கண்கள்; ஜலம்—நீர்; ஸ்ம—உண்மையில்; ரேத:—விந்து; பர-அவர-ஆத்ம-ஆஸ்ரயணம்—உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலையிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் புகலிடம்; தவ—உமது; ஆத்மா—ஆத்மா; ஸோம:—சந்திரன்; மன:—மனம்; த்யௌ:—உயர் கிரக அமைப்புக்கள்; பகவன்—பெருமானே; சிர:—சிரம்; தே—உமது.
பெருமானே, ஆகாயம் உமது நாபி, காற்று உமது சுவாசம், சூரியன் உமது கண்கள், மற்றும் நீர் உமது விந்து. உயர்ந்த மற்றும் தாழ்ந்த ஜீவராசிகளுக்கெல்லாம் நீரே புகலிடமாவீர். சந்திர தேவன் உமது மனமாகும். உயர் கிரக அமைப்பு உமது சிரமாகும்.
பதம் 8.7.28
குக்ஷி: ஸமுத்ரா கிரயோ ‘ஸ்தி-ஸங்கா
ரோமாணி ஸர்வெளஷதி-வீருதஸ் தே
சந்தாம்ஸி ஸாக்ஷாத் தவ ஸப்த தாதவஸ்
த்ரயீ-மயாத்மன் ஹ்ருதயம் ஸர்வ-தர்ம:
குக்ஷி:—வயிற்றுப் பாகம்; ஸமுத்ரா:—சமுத்திரங்கள்; கிரய:—மலைகள்; அஸ்தி—எலும்புகள்; ஸங்கா:—சேர்க்கை; ரோமாணி—உடலின் உரோமங்கள்; ஸர்வ—எல்லா; ஒளஷதி—மூலிகைகளும்; வீருத:—செடிகளும்; கொடிகளும்; தே—உமது; சந்தாம்ஸி—வேத மந்திரங்கள்; ஸாக்ஷாத்—நேரடியாக; தவ—உமது; ஸப்த—ஏழு; தாதவ:—உடலின் அடுக்குகள்; த்ரயீ-மய-ஆத்மன்—மூன்று வேத சொரூமே; ஹ்ருதயம்—இதயத்தின் மையம்; ஸர்வ-தர்ம:—எல்லா வகையான மதங்களும்.
எம்பெருமானே, நீர் மூவேத வடிவமாவீர். ஏழு கடல்கள் உமது வயிறும், மலைகள் உமது எலும்புகளுமாகும். மூலிகைகள், கொடிகள் மற்றும் காய்கறிகள் ஆகிய அனைத்தும் உமது உடலின் மேலுள்ள உரோமங்களாகும். காயத்ரி போன்ற வேத மந்திரங்கள் உமது உடலின் ஏழு அடுக்குகளாகும். வேதத்தைத் தழுவிய சமய முறை உமது இதயத்தின் மையமாகும்.
பதம் 8.7.29
முகானி பஞ்சோபநிஷதஸ் தவேச
யைஸ் த்ரிம்சத்-அஷ்டோத்ர-மந்த்ர-வர்க:
யத் தச் சிவாக்யம் பரமாத்ம-தத்வம்
தேவ ஸ்வயம்-ஜ்யோதிர் அவஸ்திதிஸ் தே
முகானி—முகங்கள்; பஞ்ச—ஐந்து; உபநிஷத:—வேத இலக்கியங்கள்; தவ—உமது; ஈச—பெருமானே; யை:—எதனால்; த்ரிம்சத்-அஷ்ட-உத்தர -மந்த்ர-வர்க:—முப்பத்தெட்டு முக்கியமான வேத மந்திரங்களின் பிரிவில்; யத்—அந்த; தத்—உள்ளது உள்ளபடி; சிவ ஆக்யம்—சிவ எனும் பெயரால் புகழ்பெற்ற; பரம-ஆத்ம-தத்வம்—பரமாத்மாவைப் பற்றிய உண்மையை ஆராய்ந்து அறியும்; தேவ—பெருமானே; ஸ்வயம்-ஜ்யோதி:—சுயப் பிரகாசம் கொண்ட; அவஸ்திதி:—சூழ்நிலை; தே—உமது.
பெருமானே, ஐந்து முக்கிய வேத மந்திரங்கள் உமது ஐந்து முகங்களால் பிரதிநிதிக்கப்படுகின்றன. இம் மந்திரங்களிலிருந்து பெரும் புகழ்பெற்ற முப்பத்தெட்டு மந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சிவபெருமான் என்று போற்றப்படும் நீர் சுயப் பிரகாசம் கொண்டவராவீர். நீர் நேரடியாக பரமாத்மா எனப்படும் பரம சத்தியமாக இருக்கிறீர்.
பதம் 8.7.30
சாயா து அதர்மோர்மிஷு யைர் விஸர்கோ
நேத்ர-த்ரயம் ஸத்வ-ரஜஸ்-தமாம்ஸி
ஸாங்க்யாத்மன: சாஸ்த்ர-க்ருதஸ் தவேக்ஷா
சந்தோமயோ தேவ ரிஷி: புராண:
சாயா—நிழல்; து—ஆனால்; அதர்ம-ஊர்மிஷு—காமம், குரோதம், லோபம் மற்றும் மோஹம் போன்றவைகளின் அலைகளில்; யை:—ஏதனால்; விஸர்க:—பல்வேறு வகையான படைப்பு; நேத்ர த்ரயம்—மூன்று கண்கள்; ஸத்வ—நற்குணம்; ரஜ:—தீவிர குணம்; தமாம்ஸி—மற்றும் அறியாமை; ஸாங்க்ய-ஆத்மன:—எல்லா வேத இலக்கியங்களுக்கும் மூலம்; சாஸ்த்ர—சாஸ்த்திரங்கள்; க்ருத:—செய்யப்பட்டன; தவ—உம்மால்; ஈக்ஷா:—பார்வையாலேயே; சந்த:-மய:—வேத சுலோகங்கள் நிறைந்த; தேவ—பெருமானே; ரிஷி:—எல்லா வேத இலக்கியங்களும்; புராண:—மற்றும் வேதங்களின் பிற்சேர்க்கையான புராணங்களும்.
பெருமானே உமது நிழல் அதர்மத்தில் காணப்படுகிறது. அது பல வகையான நாஸ்திகப்படைப்புகளை விளைவிக்கின்றது. இயற்கையின் முக்குணங்களாகிய நற்குணம், தீவிர குணம் மற்றும் அறியாமைக் குணம் ஆகியவை உமது மூன்று கண்களாகும். சுலோகங்களால் நிரம்பப்பெற்ற வேத இலக்கியங்கள் அனைத்தும் உம்மிடமிருந்து தோன்றியவை ஆகும். ஏனெனில் அவற்றைத் தொகுத்தவர்கள் உமது பார்வையை தரிசித்த பிறகுதான் அநேக சாஸ்திரங்களை எழுதியுள்ளனர்.
பதம் 8.7.31
ந தே கிரி-த்ராகில-லோக-பால
விரிஞ்ச-வைகுண்ட-ஸுரேந்ர-சும்யம்
ஜ்யோதி: பரம் யத்ர ரஜஸ் தமஸ் ச
ஸத்வம் ந யத் ப்ரஹ்ம நிரஸ்த-பேதம்
ந—இல்லை; தே—உமது; கிரி-த்ர—மலைகளின் அரசரே; அகில-லோக-பால—ஜடச் செயல்களுடைய இலாக்காக்களின் நிர்வாகஸ்தர்கள் அனைவரும்; விரிஞ்ச—பிரம்மதேவர்; வைகுண்ட—பகவான் விஷ்ணு; ஸுர-இந்ர—சுவர்க்க ராஜன்; கம்யம்—அவர்களால் புரிந்து கொள்ள முடியும்; ஜ்யோதி:—பிரகாசத்தை; பரம்—உன்னதமான; யத்ர—எங்கு; ரஜ:—தீவிர குணம்; தம: ச—அறியாமைக்குணம்; ஸத்வம்—நற்குணம்; ந—இல்லை; யத் ப்ரஹ்ம—அருவ பிரம்மமான; நிரஸ்த-பேதம்—தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாமல்.
கிரீச பெருமானே, அருவ பிரம்மப் பிரகாசமானது, பெளதிக குணங்களாகிய நற்குணம், தீவிர குணம் மற்றும் அறியாமைக் குணம் ஆகியவற்றிற்கு மேற்பட்டது என்பதால், இப்பிரபஞ்ச நிர்வாகிகளால் நிச்சயமாக அதன் மதிப்பைச் சரியாக உணர்ந்து கொள்ளவோ அல்லது அதன் இருப்பிடத்தை அறியவோ முடியாது. பிரம்மதேவர், பகவான் விஷ்ணு அல்லது சுவர்க்க ராஜனான மகேந்திரன் ஆகியோருக்கும் அது புரியாததாகும்.
பதம் 8.7.32
காமாத்வர-த்ரிபுர-காலகராதி-அனேக-
பூத-த்ருஹ: க்ஷபயத: ஸ்துதயே ந தத் தே
யஸ் து அந்த-கால இதம் ஆத்ம-க்ருதம் ஸ்வ-நேத்ர
வஹ்னி-ஸ்புலிங்க-சிகயா பஸிதம் ந வேத
காம-அத்வர—புலன் நுகர்வுக்கான யக்ஞங்கள் (தக்ஷ-யக்ஞம், தட்சனால் இயற்றப்பட்ட யக்ஞங்களைப் போன்றவை; த்ரிபுர—திரிபுராசுரன் எனும் பெயர் கொண்ட அசுரன்; காலகர—காலகரன்; ஆதி—மற்றும் பிறரும்; அநேக—பல; பூத-த்ருஹ:—ஜீவராசிகளுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே இருப்பவர்கள்: க்ஷபயத:—அவர்கள் அழிவில் ஈடுபட்டு; ஸ்துதயே—உமது பிரார்த்தனை; ந—இல்லை; தத்—அந்த; தே—உம்மிடம் பேசும்; ய: து—ஏனெனில்; அந்த-காலே—அழிவுக் காலத்தில்; இதம்—இந்த ஜட உலகில்; ஆத்ம-க்ருதம்—உம்மால் செய்யப்பட்ட; ஸ்வ-நேத்ர—உமது கண்களால்; வஹ்னி-ஸ்புலிங்க-சிகயா—நெருப்புப் பொறிகளால்; பஸிதம்—எரிந்து சாம்பாலாகி விடுகிறது; ந வேத—இதெப்படி நிகழ்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.
உமது கண்களிலிருந்து வெளிப்படும் தீச்சுடர்களாலும், தீப்பொறிகளாலும் அழிவு விளைவிக்கப்படும்போது, படைப்பு முழுவதுமே எரிந்து சாம்பலாக்கப்படுகிறது. ஆயினும் இது எப்படி நிகழ்கிறது என்பதை நீர் அறியமாட்டீர். பின் தக்ஷ-யக்ஞம், திரிபுராசுரன் மற்றும் காலகூட விஷம் ஆகியவற்றை நீர் அழிப்பதைப் பற்றி என்னென்று கூறுவது? அத்தகைய செயல்கள் தங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் பிரார்த்தனைகளுக்குரிய ஏற்ற விஷயங்களாக இருக்க முடியாது.
பதம் 8.7.33
யே து ஆத்ம-ராம-குருபிர் ஹ்ருதி சிந்திதாங்ரி
த்வந்வம் சரன்தம் உமயா தபஸாபிதப்தம்
கத்தந்த உக்ர-புருஷம் நிரதம் ஸ்மசானே
தே நூனம் ஊதிம் அவிதம்ஸ் தவ ஹாத-லஜ்ஜா:
யே—போன்ற நபர்கள்; து—உண்மையில்; ஆத்ம-ராம-குருபி:—சுயதிருப்தி கொண்டவர்களாலும், உலகின் ஆன்மீக குரு என்று கருதப்படுபவர்களாலும்; ஹ்ருதி—இதயத்தினுள்; சின்சித-அங்ரி-தீவந்வம்—உமது இரு தாமரைப் பாதங்களைப் பற்றிச் சிந்திக்கும்; சரந்தம்—அசையும்; உமயா—உமது மனைவியாகிய உமாவுடன்; தபஸா அபிதப்தம்—தவ விரதங்களைப் பயின்றதன் மூலமாக உயர்வான முன்னேற்றம் அடைந்த; கத்தந்தே—உமது செயல்களைக் கண்டனம் செய்கின்றனர்; உக்ர-புருஷம்—மரியாதைக்கு உரியவரல்ல; நிரதம்—எப்பொழுதும்; ஸம்சானே—சுடுகாட்டில்; தே—அத்தகைய மனிதர்கள்; நூனம்—உண்மையில்; ஊதிம்—அத்தகைய செயல்கள்; அவிதன்—அறியாமல்; தவ—உமது செயல்களை; ஹாத-லஜ்ஜா:—வெட்கமற்றவர்கள்.
உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்பவர்களாகிய, மேன்மைக்குரிய சுய திருப்தி கொண்டவர்கள், தங்களது இதயங்களில் இடைவிடாமல் உமது தாமரைப் பாதங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆயினும், உமது தவத்தை அறியாதவர்கள், நீர் உமாவுடன் உலாவுவதைக் கண்டு, நீர் காம ஆசை கொண்டவரென்று தப்பாகப் புரிந்து கொள்கின்றனர். அல்லது சுடுகாட்டில் நீர் உலாவிக் கொண்டிருப்பதைக் கண்டு, உம்மைக் குரூரமானவரென்றும், பொறாமை உள்ளவரென்றும் தப்பாக எண்ணுகின்றனர். அவர்கள் சந்தேகமின்றி வெட்கங்கெட்டவர்களாவர். அவர்களால் உமது செயல்களைப் புரிந்துகொள்ள முடியாது.
பதம் 8.7.34
தத் தஸ்ய தே ஸத்-அஸதோ: பரத: பரஸ்ய
நாஞ்ச: ஸ்வரூப-கமனே ப்ரபவந்தி பூம்ன:
ப்ரஹ்மாதய: கிம் உத ஸம்ஸ்தவனே வயம் து
தத்-ஸர்க-ஸர்க-விஷயா அபி சக்தி-மாத்ரம்
தத்—எனவே; தஸ்ய—அதன்; தே—உமது; ஸத்-அஸதோ:—அசையும், அசையாத ஜீவராசிகளின்; பரத:—தெய்வீக நிலையில் இருக்கும்; பரஸ்ய—புரிந்து கொள்வது மிகவும் கடினமாகும்; ந—அல்லது; அஞ்ச:—உள்ளவாறு; ஸ்வரூப-கமனே—உமது உண்மையான நிலையை அணுகுவதென்பது; ப்ரபவந்தி—சாத்தியமானதாகும்; பூம்ன:—பெருமைக்குரியவரே; ப்ரஹ்ம-ஆதய:—பிரம்ம தேவரைப் போன்றவர்களால் கூட; கிம் உத—மற்றவர்களைப் பற்றி என்னவென்று கூறுவது; ஸம்ஸ்தவனே—பிரார்த்தனைகளைச் செய்வதில்; வயம் து—எங்களைப் பொறுத்த அளவில்; தத்—உமது; ஸர்க-ஸர்க-விஷயா:—படைப்பின் சிருஷ்டிகள்; அபி—இருப்பினும்; சக்திமாத்ரம்—எங்களது திறமைக்கேற்ப.
தாங்கள், அசையும், அசையாத படைப்பிற்கும் அப்பாற்பட்டவராக இருப்பதால், பிரம்ம தேவரையும், மற்ற தேவர்களையும் போன்ற நபர்களாலும் உமது நிலையைப் புரிந்துகொள்ள முடியாது. உம்மை ஒருவராலும் உண்மையாக அறியமுடியாது என்பதால், எப்படி ஒருவரால் உம்மிடம் பிரார்த்தனை செய்யவியலும்? இது சாத்தியமற்றதாகும். எங்களைப் பொறுத்த அளவில், நாங்கள் பிரம்ம தேவருடைய படைப்பின் சிருஷ்டிப் பொருட்களாவோம். ஆகவே, இத்தகைய சூழ்நிலையின் கீழ் எங்களால் உங்களிடம் போதுமான அளவு பிரார்த்தனைகளைச் செய்ய முடியவில்லை. ஆனால் எங்களது திறமைக்கேற்ப, எங்களது உணர்வுகளை நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம்.
பதம் 8.7.35
ஏதத் பரம் ப்ரபஸ்யாமோ ந பரம் தே மஹேஸ்வர
ம்ருடனாய ஹி லோகஸ்ய வ்யக்திஸ் தே ‘வ்யக்த-கர்மண:
ஏதத்—இவையனைத்தும்; பரம்—உன்னதமான; ப்ரபஸ்யாம:—எங்களால் காணமுடிகிறது; ந—இல்லை; பரம்—உண்மையான தெய்வீக நிலையை; தே—உமது; மஹா-ஈஸ்வர—மிகச்சிறந்த ஆளுனரே; ம்ருடனாய—மகிழ்ச்சிக்காக; ஹி—உண்மையில்; லோகஸ்ய—அனைத்து லோகங்களிலும்; வ்யக்தி:—தோற்றுவிக்கப்பட்டுள்ள; தே—உமது; அவ்யக்த-கர்மண:—ஒருவரும் அறிந்திராத உமது செயல்கள்.
ஆளுனர்களில் மிகச் சிறந்தவரே, உமது நிஜ ரூபத்தை அறிவது எங்களுக்குச் சாத்தியமல்ல. எங்களைப் பொறுத்தவரை, உமது இருப்பு அனைவருக்கும் செழிப்பான மகிழ்ச்சியை அளிப்பதாகும். இதற்குமேல் உமது செயல்களின் மதிப்பை ஒருவராலும் சரியாக உணர்ந்துகொள்ள முடியாது. எங்களால் காண முடிந்தது இவ்வளவு தான்.
பதம் 8.7.36
ஸ்ரீ-சுக உவாச
தத் வீக்ஷ்ய வ்யஸனம் தாஸாம் க்ருபயா ப்ரு-பீடித:
ஸர்வ-பூத-ஸுஹ்ருத் தேவ இதம் ஆஹ ஸதீம் ப்ரியாம்
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தத்—இச்சூழ்நிலையை; வீக்ஷ்ய—கண்டு; வ்யஸனம்—அபாயமான; தாஸாம்—அனைத்து தேவர்களின்; க்ருபயா—கிருபையினால்; ப்ருச-பீடித:—பெரிதும் பீடிக்கப்பட்ட; ஸர்வ-பூத-ஸுஹ்ருத்—அனைத்து ஜீவராசிகளுக்கும் நண்பரான; தேவ:—மகாதேவன்; இதம்—இதை; ஆஹ—கூறினார்; ஸதீம்—சதீதேவியிடம்; ப்ரியாம்—மிகவும் பிரியமான அவரது மனைவியான.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சிவபெருமான் எப்பொழுதும் அனைத்து ஜீவராசிகளிடமும் உதாரகுணம் கொண்டவராவார். எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருந்த விஷத்தால் ஜீவராசிகள் பெருந்துன்பத்திற்கு ஆளாகியிருப்பதைக் கண்டு அவர் மிகவும் இரக்கங் கொண்டார். இவ்வாறாக தமது நிரந்தர மனைவியாகிய சதீயிடம், அவர் பின்வருமாறு கூறினார்.
பதம் 8.7.37
ஸ்ரீ-சிவ உவாச
அஹோ பத பவானி ஏதத் ப்ரஜானாம் பஸ்ய வைசஸம்
க்ஷீரோத-மதனோத்பூதாத் காலகூடாத் உபஸ்திதம்
ஸ்ரீ-சிவ: உவாச—ஸ்ரீ சிவன் கூறினார்; அஹோ பத—எவ்வளவு பரிதாபமான நிலை; பவானி—எனதன்பு மனைவியே, பவானி; ஏதத்—இச்சூழ்நிலை; ப்ரஜானாம்—அனைத்து ஜீவராசிகளின்; பஸ்ய—பார்; வைசஸம்—மிகவும் அபாயமான; க்ஷுர-உத—பாற்கடலை; மதன-உத்பூதாத்—கடைந்ததால் உண்டான; காலகூடாத்—விஷம் உற்பத்தியானதால்; உபஸ்திதம்—தற்போதைய சூழ்நிலை.
சிவபெருமான் கூறினார்: எனதன்புள்ள பவானி, பாற்கடலைக் கடைந்ததனால் உண்டான விஷத்தின் காரணத்தால், இந்த ஜீவராசிகள் அனைவரும் எப்படி ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பார்.
பதம் 8.7.38
ஆஸாம் ப்ராண-பரீப்ஸூனாம் விதேயம் அபயம் ஹி மே
ஏதாவான் ஹி ப்ரபோர் அர்த்தோ யத் தீன-பரிபாலனம்
ஆஸாம்—இந்த ஜீவராசிகள் அனைத்தும்; ப்ராண-பரீப்ஸூனாம்—அவைகளின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உறுதியான விருப்பங்கொண்டு; விதேயம்—எதையேனும் செய்தாக வேண்டும்; அபயம்—பாதுகாப்பு; ஹி—நிச்சயம்; மே—என்னால்; ஏதாவான்—இந்த அளவு; ஹி—நிச்சயமாக; ப்ரபோ:—எஜமானரின்; அர்த:—கடமையாகும்; யத்—எது; தீன-பரிபாலனம்—துன்புறும் மானிடவர்கத்திற்குப் பாதுகாப்பு அளிக்க.
வாழ்வுக்காக போராடிக் கொண்டிருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் ஆதரவையும், பாதுகாப்பையும் அளிப்பது எனது கடமையாகும். தனது ஆதரவின் கீழ் இருப்பவன் துன்புற்ற நிலையில் இருக்கும்போது அவனைக் காப்பாற்றுவது சந்தேகமின்றி எஜமானரின் கடமையாகும்.
பதம் 8.7.39
ப்ராணை: ஸ்வை: ப்ராணின: பாந்தி ஸாதவ: க்ஷண- பங்குரை:
பத்த-வைரேஷு பூதேஷு மோஹிதேஷ்வ் ஆத்ம-மாயயா
ப்ராநை:—வாழ்க்கையை; ஸ்வை:—அவர்களுடைய சொந்த; ப்ராணின:—மற்ற ஜீவராசிகளை; பாந்தி—காப்பாற்ற; ஸாதவ:—பக்தர்கள்; க்ஷண-பங்குரை:—தற்காலிகமான; பத்த-வைரேஷு—தேவையின்றி விரோதம் கொண்டுள்ள; பூதேஷு—ஜீவராசிகளிடம்; மோஹிதேஷு—குழப்பம் அடைந்துள்ள; ஆத்ம-மாயயா—பகவானின் பகிரங்க சக்தியால்.
பொதுவாக மக்கள், பரமபுருஷ பகவானின் மாயா சக்தியால் குழப்பம் அடைந்திருப்பதால், அவர்கள் தங்களுக்கிடையில் ஒருவரோடொருவர் எப்பொழுதும் விரோதம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் பக்தர்கள், நிலையற்ற தங்களது சொந்த வாழ்வையே பணயம் வைத்து, அவர்களைக் காப்பாற்ற முயல்கின்றனர்.
பதம் 8.7.40
பும்ஸ: க்ருபயதோ பத்ரே ஸர்வாத்மா ப்ரீயதே ஹரி:
ப்ரீதே ஹரெள பகவதி ப்ரீயே ‘ஹம் ஸசராசர:
தஸ்மாத் இதம் கரம் புஞ்சே ப்ரஜானாம் ஸ்வஸ்திர் அஸ்துமே
பும்ஸ:—ஒரு நபருடன்; க்ருபயத:—உதார குணமுள்ள செயல்களில் ஈடுபட்டு; பத்ரே—மிகவும் அன்பு கொண்ட பவானியே; ஸர்வ-ஆத்மா—பரமாத்மா; ப்ரீயதே—திருப்தி அடைந்தால்; ஹரி—பரமபுருஷ பகவான்; ப்ரீதே—அவருடைய திருப்தியினால்; ஹரைள—பரமபுருஷரான ஹரி; பகவதி—முழுமுதற் கடவுள்; ப்ரீயே அஹம்—நானும் திருப்தி அடைகிறேன்; ஸ-சர-அசர:—அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்துடன்; தஸ்மாத்—ஆகவே; இதம்—இந்த; கரம்—விஷத்தை; புஞ்சே—நான் குடித்து விடுவேனாக; ப்ரஜானாம்—ஜீவராசிகளின்; ஸ்வஸ்தி:—நன்மைக்காக; அஸ்து—உண்டாகட்டும்; மே—என்னால்.
எனது அன்பிற்குரிய நற்குணம் வாய்ந்த பவானியே, பிறர் நன்மைக்காக தருமமான செயல்களை ஒருவர் இயற்றும் போது, பரம்புருஷ பகவானாகிய ஹரி மிகவும் திருப்தியடைகிறார். பெருமான் திருப்தியடையும் போது நானும் திருப்தியடைகிறேன். என்னுடன் மற்றெல்லா ஜீவராசிகளும் திருப்தியடைகின்றன. ஆகவே, என்னால் அனைத்து ஜீவராசிகளும் திருப்தியடையப் போகின்றன என்பதால் இந்த விஷத்தை நான் குடித்துவிடப் போகிறேன்.
பதம் 8.7.41
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் ஆமந்த்ரிய பகவான் பவானீம் விஸ்வ-பாவன:
தத் விஷம் ஜக்தும் ஆரேபே ப்ரபாவ-ஞான்வமோதத
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறாக; ஆமந்த்ரிய—அறிவித்து; பகவான்—சிவபெருமான்; பவானீம்—பவானியிடம்; விஸ்வ-பவான:—அகில லோகங்களின் நலனை விரும்புபவரான; தத் விஷம்—அந்த விஷத்தை; ஜக்தும்—குடிப்பதற்கு; ஆரேபே—துவங்கினார்; ப்ரபாவ-க்ஞா—சிவபெருமானின் திறமையை நன்கு அறிந்துள்ள தாய் பவானி; அன்வமோதத—அவளது அனுமதியை வழங்கினாள்.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பவானியிடம் இவ்வாறு அறிவித்த பின், சிவபெருமான் விஷத்தைக் குடிக்க ஆரம்பித்தார். சிவபெருமானின் தகுதிகளை நன்கு அறிந்தவளான பவானியும் விஷத்தைக் குடிக்க அவருக்கு அனுமதி வழங்கினாள்.
பதம் 8.7.42
தத: காதலீ-க்ருத்ய வ்யாபி ஹாலாஹலம் விஷம்
அபக்ஷயன் மஹா-தேவ: க்ருபயா பூத-பாவன:
தத:—அதன்பிறகு; காதலீ-க்ருத்ய—அவரது கையில் எடுத்து; வ்யாபி—விஸ்தாரமாகப் பரவியிருந்த; ஹாலாஹலம்—’ஹாலஹலம்’ என்று அழைக்கப்பட்ட; விஷம்—விஷத்தை; அபக்ஷயத்—குடித்தார்; மஹா-தேவ:—சிவபெருமான்; க்ருபயா—கருணையினால்; பூத-பாவன:—அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக.
அதன்பிறகு, மனித குலத்திற்காக, மங்களகரமான, தரும சிந்தை கொண்ட செயலுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட சிவபெருமான், கருணையுடன் அந்த விஷம் முழுவதையும் தமது உள்ளங்கையில் ஏந்தி குடித்துவிட்டார்.
பதம் 8.7.43
தஸ்யாபி தர்சயாம் ஆஸ ஸ்வ-வீர்யம் ஜல-கல்மஷ:
யச் சகார கலே நீலம் தச் ச ஸாதோர் விபூஷணம்
தஸ்ய—சிவபெருமானின்; அபி—கூட; தர்சயாம் ஆஸ—வெளிப்படுத்தியது; ஸ்வ-வீர்யம்—அதன் சுய ஆற்றலை; ஜல-கல்மஷ:—நீரிலிருந்து பிறந்த அவ்விஷம்; யத்—எது; சகார—செய்தது; கலே—கழுத்தின் மேல்; நீலம்—நீலநிறக்கோட்டை; தத்—அது; ச—கூட; ஸாதோ:—புண்ணிய புருஷரின்; விபூஷணம்—ஆபரணம்.
அவதூறு செய்வதைப் போல், பாற்கடலிலிருந்து பிறந்த விஷம் அதன் ஆற்றலை வெளிப்படுத்தி, சிவபெருமானின் கழுத்தில் நீலநிறக் கோடு ஒன்றை ஏற்படுத்தியது. ஆயினும், அக்கோடு இப்பொழுது பெருமானின் ஓர் ஆபரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
பதம் 8.7.44
தப்யந்தே லோக-தாபேன ஸாதவ: ப்ராயசோ ஜனா:
பரமாராதனம் தத் தி புருஷஸ்யாகிலாத்மன:
தப்யந்தே—தன்னிச்சையாக துன்பத்தை ஏற்றல்; லோக-தாபேன—பொது மக்களுடைய துன்பத்தின் காரணத்தால்; ஸாதவ:—புண்ணியபுருஷர்கள்; ப்ராயச:—கிட்டத்தட்ட எப்பொழுதும்; ஜனா:—அத்தகைய நபர்கள்; பரம-ஆராதனம்—மிகவுயர்ந்த வழிபாட்டுமுறை; தத்—அந்த செயல்; ஹி—உண்மையில்; புருஷஸ்ய—பரமபுருஷரின்; ஆகில-ஆத்மன:—அனைவரிலும் பரமாத்மாவாக இருப்பவரான.
சிறந்த புண்ணிய புருஷர்கள், பொது மக்களுடைய துன்பத்தின் காரணத்தால், கிட்டத்தட்ட எப்பொழுதுமே தன்னிச்சையான துன்பத்தை ஏற்றுக் கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. இது, எல்லோருடைய இதயத்திலும் இருப்பவரான முழுமுதற் கடவுளின் மிகவுயர்ந்த வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது.
பதம் 8.7.45
நிசம்ய கர்ம தச் சம்போர் தேவ-தேவஸ்ய மீடுஷ:
ப்ரஜா தாக்ஷாயணீ ப்ரஹ்மா வைகுண்டஸ் ச சசம்ஸிரே
நிசம்ய—செவியுற்ற பின்; கர்ம—செயலை; தத்—அந்த; சம்போ:—சிவபெருமானின்; தேவ-தேவஸ்ய—தேவர்களாலும் வழிபடத்தக்கவரான; மீடுஷ:—பொது மக்களுக்குப் பெரும் வரங்களை அளிப்பவர்; ப்ரஜா:—பொது மக்கள்; தாக்ஷயாணீ—தட்சனின் மகளான பவானி; ப்ரஹ்மா—பிரம்ம தேவர்; வைகுண்ட: ச—பகவான் விஷ்ணுவும் கூட; சசம்ஸிரே—மிகவும் போற்றினர்.
இச்செயலைப் பற்றி கேள்விப்பட்டதும், பவானி (தட்சனின் மகள்), பிரம்மதேவர், பகவான் விஷ்ணு, பொதுமக்கள் ஆகியோர் உட்பட அனைவரும், தேவர்களால் பூஜிக்கப்படுபவரும், மக்களுக்கு வரங்களை அளிப்பவருமான சிவபெருமானின் இச்செயலை மிகவும் உயர்வாகப் போற்றினர்.
பதம் 8.7.46
ப்ரஸ்கன்னம் பிபத: பாணேர் யத் கின்சிஜ் ஜக்ருஹு: ஸ்ம தத்
வ்ருஸ்சிகாஹி-விஷௌஷத்யோ தந்தசூகாஸ் ச யே ‘பரே
ப்ரஸ்கன்னம்—இங்குமங்குமாக சிதறிக் கிடந்த; பிபத:—சிவபெருமான் குடிக்கும் போது; பாணே:—உள்ளங்கையிலிருந்து; யத்—எது; கிஞ்சித்—மிகக்குறைவான; ஜக்ருஹு:—குடிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன; ஸ்ம—உண்மையில்; தத்—அதை; வ்ருஸ்சிக—தேள்கள்; அஹி—நாகப் பாம்புகள்; விஷ-ஓளஷத்ய—விஷமுள்ள மூலிகைகள்; தந்தசூகா: ச—மேலும் விஷப்பற்களைக் கொண்ட மிருகங்களும்; யே—எது; அபரே—பிற ஜீவராசிகளும்.
சிவபெருமான் குடிக்கும் போது அவரது உள்ளங்கையிலிருந்து கீழே விழுந்து சிதறிய சில துளி விஷத்தை தேள்கள், நாகப்பாம்புகள், விஷ மூலிகைகள் மற்றும் விஷப் பற்களைக் கொண்ட மற்ற மிருகங்கள் ஆகியவை தக்க சமயத்தை பயன்படுத்திக் கொண்டு அதைக் குடித்து விட்டன.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “சிவபெருமான் விஷம்பருகி பிரபஞ்சத்தைக் காப்பாற்றுதல்” எனும் தலைப்பை கொண்ட ஏழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.