அத்தியாயம் – 7
சிவபெருமான் விஷம்பருகி
பிரபஞ்சத்தைக் காப்பாற்றுதல்
பதம் 8.7.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: குருக்களில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே, தேவர்களும், அசுரர்களும், அமிர்தத்தில் ஒரு பாகத்தைக் கொடுப்பதாக வாக்குறுதி செய்து பாம்பரசனான வாசுகியை வருமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் மந்தர மலையின் மேல் வாசுகியை கயிறாகச் சுற்றி, பேரின்பத்துடன் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை உற்பத்தி செய்ய முயன்றனர்.
பதம் 8.7.2 : முழுமுதற் கடவுளாகிய அஜிதர், பாம்பின் முன் பாகத்தைப் பற்றினார். அதன்பிறகு தேவர்களும் அவரைப் பின்பற்றினர்.
பதம் 8.7.3 : பாம்பின் அமங்களமான பகுதியாகிய அதன் வாலைப் பற்றுவது விவேகமல்ல என்று அசுரத் தலைவர்கள் எண்ணினர். பாம்பின் முன்பாகம் மங்களகரமானதும், பெருமைக்குரியதுமாக இருப்பதால், அது பரமபுருஷராலும், தேவர்களாலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. வாலுக்குப் பதிலாக பாம்பின் முன் பாகத்தை அசுரர்கள் பற்றிக் கொள்ள விரும்பினர். இவ்வாறாக அசுரர்கள், தாங்கள் வேதக் கல்வியில் மிகவும் முன்னேற்றமடைந்தவர்கள் என்றும், பிறவிக்கும், செயல்களுக்கும் தாங்கள் புகழ் பெற்றவர்கள் என்றும் வாதம் செய்து, பாம்பின் முன் பாகத்தைத்தான் தாங்கள் பிடித்துக் கொள்ளப் போவதாக எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பதம் 8.7.4 : இவ்வாறாக, தேவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அசுரர்கள் மௌனமாக இருந்ததைக் கண்டு, அவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்ட பரமபுருஷர் புன்னகை செய்தார். அவர்களுடன் வாதம் செய்யாமல், அவர்களுடைய திட்டத்தை உடனே ஏற்றுக் கொண்டு, அவர் பாம்பின் வாலைப் பற்றினார். தேவர்களும் அவரைப் பின்பற்றினர்.
பதம் 8.7.5 : இவ்வாறாக, பாம்பை எப்படி பற்றுவதென்பதைச் சரிப்படுத்தியபின், கஸ்யப்பரின் புத்திரர்களாகிய தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைவதன் மூலமாக அமிர்தத்தைப் பெறும் ஆவலுடன், அவர்களது செயல்களை ஆரம்பித்தனர்.
பதம் 8.7.6 : பாண்டு வம்சத்தின் புத்திரரே, இவ்வாறாக மந்தர மலை பாற்கடலில் ஒரு மத்தாக உபயோகிக்கப்படும்போது, அதற்குச் சுமைதாங்கி இல்லாதிருந்தது. ஆனால் தேவாசுரர்களின் பலம் வாய்ந்த கரங்களால் அது பற்றிக் கொள்ளப்பட்டு இருந்தாலும், அது கடலில் மூழ்கிவிட்டது.
பதம் 8.7.7 : விதியின் வலிமையால் மலை மூழ்கிவிட்டதால், தேவர்களும், அசுரர்களும் ஏமாற்றம் அடைந்ததுடன், அவர்களது முகங்கள் உலர்ந்துவிடுவதைப் போல் காணப்பட்டன.
பதம் 8.7.8 : பரமனின் விருப்பத்தால் உருவாக்கப்பட்ட சூழ்நிலையைக் கண்டு, திட நோக்கம் கொண்டவரும், எல்லையற்ற சக்தி படைத்தவருமான பகவான், ஆமையின் ஓர் அற்புத வடிவத்தை ஏற்று, நீருக்குள் புகுந்து, பிரம்மாண்டமான மந்தர மலையைத் தூக்கினார்.
பதம் 8.7.9 : மந்தர மலை தூக்கப்பட்டதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் உற்சாகம் பெற்று, கடைவதை ஆர்வத்துடன் மீண்டும் ஆரம்பித்தனர். அந்த மலை பிரம்மாண்டமான ஆமையின் முதுகின்மேல் தாங்கிக் கொள்ளப்பட்டிருந்தது. அந்த மலை பெரியதொரு தீவைப் போல், எட்டு லட்சம் மைல்களுக்குப் பரந்திருந்தது.
பதம் 8.7.10 : ராஜனே, தேவர்களும், அசுரர்களும் தங்களுடைய கரங்களின் பலத்தினால், அந்த விசேஷமான ஆமையின் முதுகின் மேல் மந்தர மலையைச் சுழற்றியபோது, அந்த மலையின் சுழற்சியை தமது உடலை வருடும் ஒரு சாதனமாக ஆமை ஏற்றுக் கொண்டது. இவ்வாறாக ஓர் இன்ப உணர்ச்சியை அது அனுபவித்தது.
பதம் 8.7.11 : அதன்பிறகு, பகவான் விஷ்ணு, அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், அவர்களது பல்வேறு வகையான பலத்தையும், சக்தியையும் அதிகரிப்பதற்காகவும், நற்குணமாக தேவர்களுக்குள்ளும், தீவிர குணமாக அசுரர்களுக்குள்ளும், அறியாமைக் குணமாக வாசுகிக்குள்ளும் புகுந்தார்.
பதம் 8.7.12 : ஆயிரக்கணக்கான கரங்களுடன் தம்மை தோற்றுவித்துக் கொண்ட பகவான், பிறகு மற்றொரு பெரிய மலையைப் போல், மந்தர மலையின் சிகரத்தில் தோன்றி அதை ஒரு கரத்தால் பற்றியிருந்தார். உயர் கிரக அமைப்புக்களில் பிரம்ம தேவரும், சிவபெருமானும் சுவர்க்க ராஜனான இந்திரனும், பிற தேவர்களும், பகவானைத் துதித்து, அவர் மீது மலர்களைத் தூவினர்.
பதம் 8.7.13 : தேவர்களும், அசுரர்களும் பகவானால் உற்சாகம் ஊட்டப்பட்டவர்களாய், அமிர்தத்துக்காக ஏறக்குறைய மதம் பிடித்தவர்களைப் போல் உழைத்தனர். பகவான் மலையின் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் இருந்தார். மேலும் அவர் தேவர்களுக்குள்ளும், அசுரர்களுக்குள்ளும், வாசுகிக்குள்ளும் மற்றும் மலைக்குள்ளும் புகுந்தார். தேவாசுரர்களின் வலிமையின் காரணத்தால், நீரிலுள்ள முதலைகள் அனைத்தும் மிகவும் கிளர்ச்சியடையும் அளவிற்கு, பாற்கடல் மிகவும் சக்தி வாய்ந்த முறையில் கலக்கப்பட்டது. ஆயினும் கடலைக் கடையும் வேலை இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றது.
பதம் 8.7.14 : வாசுகிக்கு ஆயிரக்கணக்கான கண்களும் வாய்களும் இருந்தன. அது சுவாசிக்கும்போது அதன் வாய்களிலிருந்து புகையும், தீச்சுடர்களும் வெளிப்பட்டன. இது பௌலோமன், காலேயன், பலி மற்றும் இவ்வலன் முதலான அசுரர்களை பாதிப்படையச் செய்தது. இவ்வாறாக, ஒரு காட்டுத் தீயினால் எரிக்கப்பட்ட ஸரஸ மரங்களைப் போல் காணப்பட்ட அசுரர்கள், படிப்படியாக சக்தியற்றவர்கள் ஆயினர்.
பதம் 8.7.15 : வாசுகியின் நெருப்பைக் கக்கும் சுவாசத்தால் தேவர்களும் பாதிப்படைந்ததால், அவர்களின் தேக ஒளியும் குறைந்து போனது. மேலும் அவர்களது ஆடைகள், மாலைகள், ஆயுதங்கள் மற்றும் முகங்கள் ஆகியவை புகையால் கருத்தன. ஆயினும், பரமபுருஷ பகவானின் கருணையால் கடலின் மேல் மேகங்கள் தோன்றி, பெரும் மழை பொழிந்தது. தேவர்களின் வருத்தத்தை அகற்றுதற்காக, கடலலைகளிலிருந்து நீர்த்துளிகளை ஏந்திய படி இளங்காற்று வீசியது.
பதம் 8.7.16 : மிகச்சிறந்த தேவாசுரர்களால் இவ்வளவு முயற்சி மேற்கொள்ளப்பட்டும், பாற்கடலிலிருந்து அமிர்தம் வராததால், பரமபுருஷ பகவானாகிய, அஜிதர் தாமாகவே கடலைக் கடையத் துவங்கினார்.
பதம் 8.7.17 : பகவான் ஒரு கருமேகத்தைப் போல் தோன்றினார். அவர் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்திருந்தார். அவரது காதுகளிலிருந்த குண்டலங்கள் மின்னலைப் போல் பிரகாசித்தன. அவரது கேசம் அவரது தோள்களின் மீது பரவியிருந்தது. அவர் மலர் மாலை ஒன்றை அணிந்திருந்தார். அவரது கண்கள் சிவந்திருந்தன. அவரது வலிமை மிக்க புகழ்பெற்ற கரங்கள் பிரபஞ்சம் முழுவதிலும் அபயம் அளிப்பவையாகும். அக்கரங்களால் அவர் வாசுகியைப் பற்றி, மந்தர மலையை மத்தாகப் பாவித்து, கடலைக் கடையத் துவங்கினார். இந்த அலுவலில் ஈடுபட்டிருந்தபோது, பகவான், இந்ரநீலம் எனும் பெயர் கொண்ட ஓர் அழகிய மலையைப் போல் காணப்பட்டார்.
பதம் 8.7.18 : மீன்கள், சுறா மீன்கள், ஆமைகள் மற்றும் பாம்புகள் ஆகியவை பெரும் கிளர்ச்சியும், குழப்பமும் அடைந்தன. கடல் முழுவதுமே கொந்தளிப்பு அடைந்தது. நீர் மிருகங்களாகிய, திமிங்கிலங்கள், நீர் யானைகள், முதலைகள், மற்றும் திமிங்கில மீன்கள் (சிறு திமிங்கிலங்களை விழுங்கிவிடக் கூடிய பெரிய திமிங்கிலங்கள்) ஆகியவையும் கூட நீரின் மேற்பாகத்திற்கு வந்தன. இவ்விதமாக கடல் கடையப்படும்போது, அது முதலில் ஹாலஹல என்றழைக்கப்படும், ஒருவித கொடுமையான பயங்கர விஷத்தை உற்பத்தி செய்தது.
பதம் 8.7.19 : ராஜனே, கட்டுப்படுத்த முடியாத அந்த விஷம், மேலும் கீழுமாக பெரும் வலிமையுடன் எல்லாத் திசைகளிலும் பரவிக் கொண்டு இருக்கும்போது, பெருமானும், அனைத்து தேவர்களும் சிவபெருமானை (சதாசிவன்) அனுகினர். புகலிடம் இல்லை என்றுணர்ந்து, மிகவும் அச்சங் கொண்டவர்களாய், அவரது புகலிடத்தை அவர்கள் நாடிச் சென்றனர்.
பதம் 8.7.20 : மூவுலகங்களின் மங்களகரமான முன்னேற்றத்திற்காக, சிவபெருமான் கைலாய மலையின் சிகரத்தில் தமது மனைவியாகிய பவானியுடன் அமர்ந்திருப்பதை தேவர்கள் கண்டனர். முக்தியை விரும்பும் பெரும் முனிவர்கள் அவரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். தேவர்கள் பெரும் மரியாதையுடன் தங்கள் வணக்கங்களையும், பிரார்த்தனைகளையும் அவருக்குச் சமர்ப்பித்தனர்.
பதம் 8.7.21 : பிரஜாபதிகள் கூறினர்: தேவர்களில் சிறந்தவரே, மகாதேவரே, எல்லா ஜீவராசிகளுக்கும் உயிரும், ஆத்மாவுமாக இருப்பதுடன், அவர்களது மகிழ்ச்சிக்கும், செழுமைக்கும் காரணமாக இருப்பவரே, உமது தாமரைப் பாதங்களில் புகலிடம் கொள்ள நாங்கள் வந்திருக்கிறோம். இப்போது மூவுலகங்களிலும் பரவிக் கொண்டிருக்கும் இக்கொடிய விஷத்திலிருந்து தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுவீராக.
பதம் 8.7.22 : பெருமானே முழு பிரபஞ்சத்திற்கும் ஆளுனராக நீர் இருப்பதால், நீரே பந்தத்திற்கும், விடுதலைக்கும் காரணமாவீர். ஆன்மீக உணர்வில் முன்னேறியிருப்பவர்கள் உம்மிடம் சரணடைகின்றனர். ஆகவே அவர்களுடைய துன்பத்தைக் குறைப்பவரும், அவர்களது முக்திக்குக் காரணமாக இருப்பவரும் நீர்தான். எனவே பெருமானாகிய உம்மை நாங்கள் வழிபடுகிறோம்.
பதம் 8.7.23 : பெருமானே, நீர் சுயப்பிரகாசம் கொண்டவரும், பரமனுமாவீர். இந்த ஜட உலகை நீர் உமது சுய சக்தியால் படைக்கிறீர். மேலும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் எனும் விவகாரங்களில் நீர் செயலாற்றும் போது, பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் எனும் நாமங்களை நீர் மேற்கொள்கிறீர்.
பதம் 8.7.24 : நீரே எல்லாக் காரணங்களுக்கும் காரணமாகவும், சுயப்பிரகாசம் கொண்டவரும், நினைத்தற்கரியவரும் ஆவீர். ஆதியில் பரப்பிரம்மமாகிய அருவ பிரம்மமும் நீரே. இப்பிரபஞ்சத் தோற்றத்தில் பல்வேறு சக்திகளை நீர் தோன்றச் செய்கிறீர்.
பதம் 8.7.25 : பெருமானே, நீரே வேத இலக்கியத்தின் ஆதிமூலமாவீர். ஜட சிருஷ்டி, உயிர்ச் சக்தி, புலன்கள், பஞ்ச பூதங்கள், முக்குணங்கள் மற்றும் மஹத்-தத்வம் ஆகியவற்றிற்கு நீரே மூலகாரணமாவீர். நித்திய காலமாகவும், திட நோக்கமாகவும் இருப்பவரும் சத்தியம் (ஸத்ய), மற்றும் உண்மை (ருத) என்றழைக்கப்படும் இரு சமய முறையாக இருப்பவரும் நீரே. “அ—ற—உ—ம்” எனும் மூன்று அட்சரங்களைக் கொண்ட ஓம் எனும் சொல்லுக்குப் புகலிடமும் நீரே.
பதம் 8.7.26 : அகில லோகங்களுக்கும் தந்தையே, நெருப்பு உமது வாய் என்றும், பூமியின் மேற்பாகம் உமது தாமரைப் பாதங்கள் என்றும், நித்திய காலம் உமது அசைவு என்றும், எல்லாத் திசைகளும் உமது செவிகள் என்றும், நீருக்கு அதிபதியாகிய வருணன் உமது நாக்கு என்றும் கற்றறிந்த பண்டிதர்கள் அறிவர்.
பதம் 8.7.27 : பெருமானே, ஆகாயம் உமது நாபி, காற்று உமது சுவாசம், சூரியன் உமது கண்கள், மற்றும் நீர் உமது விந்து. உயர்ந்த மற்றும் தாழ்ந்த ஜீவராசிகளுக்கெல்லாம் நீரே புகலிடமாவீர். சந்திர தேவன் உமது மனமாகும். உயர் கிரக அமைப்பு உமது சிரமாகும்.
பதம் 8.7.28 : எம்பெருமானே, நீர் மூவேத வடிவமாவீர். ஏழு கடல்கள் உமது வயிறும், மலைகள் உமது எலும்புகளுமாகும். மூலிகைகள், கொடிகள் மற்றும் காய்கறிகள் ஆகிய அனைத்தும் உமது உடலின் மேலுள்ள உரோமங்களாகும். காயத்ரி போன்ற வேத மந்திரங்கள் உமது உடலின் ஏழு அடுக்குகளாகும். வேதத்தைத் தழுவிய சமய முறை உமது இதயத்தின் மையமாகும்.
பதம் 8.7.29 : பெருமானே, ஐந்து முக்கிய வேத மந்திரங்கள் உமது ஐந்து முகங்களால் பிரதிநிதிக்கப்படுகின்றன. இம் மந்திரங்களிலிருந்து பெரும் புகழ்பெற்ற முப்பத்தெட்டு மந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சிவபெருமான் என்று போற்றப்படும் நீர் சுயப் பிரகாசம் கொண்டவராவீர். நீர் நேரடியாக பரமாத்மா எனப்படும் பரம சத்தியமாக இருக்கிறீர்.
பதம் 8.7.30 : பெருமானே உமது நிழல் அதர்மத்தில் காணப்படுகிறது. அது பல வகையான நாஸ்திகப்படைப்புகளை விளைவிக்கின்றது. இயற்கையின் முக்குணங்களாகிய நற்குணம், தீவிர குணம் மற்றும் அறியாமைக் குணம் ஆகியவை உமது மூன்று கண்களாகும். சுலோகங்களால் நிரம்பப்பெற்ற வேத இலக்கியங்கள் அனைத்தும் உம்மிடமிருந்து தோன்றியவை ஆகும். ஏனெனில் அவற்றைத் தொகுத்தவர்கள் உமது பார்வையை தரிசித்த பிறகுதான் அநேக சாஸ்திரங்களை எழுதியுள்ளனர்.
பதம் 8.7.31 : கிரீச பெருமானே, அருவ பிரம்மப் பிரகாசமானது, பெளதிக குணங்களாகிய நற்குணம், தீவிர குணம் மற்றும் அறியாமைக் குணம் ஆகியவற்றிற்கு மேற்பட்டது என்பதால், இப்பிரபஞ்ச நிர்வாகிகளால் நிச்சயமாக அதன் மதிப்பைச் சரியாக உணர்ந்து கொள்ளவோ அல்லது அதன் இருப்பிடத்தை அறியவோ முடியாது. பிரம்மதேவர், பகவான் விஷ்ணு அல்லது சுவர்க்க ராஜனான மகேந்திரன் ஆகியோருக்கும் அது புரியாததாகும்.
பதம் 8.7.32 : உமது கண்களிலிருந்து வெளிப்படும் தீச்சுடர்களாலும், தீப்பொறிகளாலும் அழிவு விளைவிக்கப்படும்போது, படைப்பு முழுவதுமே எரிந்து சாம்பலாக்கப்படுகிறது. ஆயினும் இது எப்படி நிகழ்கிறது என்பதை நீர் அறியமாட்டீர். பின் தக்ஷ-யக்ஞம், திரிபுராசுரன் மற்றும் காலகூட விஷம் ஆகியவற்றை நீர் அழிப்பதைப் பற்றி என்னென்று கூறுவது? அத்தகைய செயல்கள் தங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் பிரார்த்தனைகளுக்குரிய ஏற்ற விஷயங்களாக இருக்க முடியாது.
பதம் 8.7.33 : உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்பவர்களாகிய, மேன்மைக்குரிய சுய திருப்தி கொண்டவர்கள், தங்களது இதயங்களில் இடைவிடாமல் உமது தாமரைப் பாதங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆயினும், உமது தவத்தை அறியாதவர்கள், நீர் உமாவுடன் உலாவுவதைக் கண்டு, நீர் காம ஆசை கொண்டவரென்று தப்பாகப் புரிந்து கொள்கின்றனர். அல்லது சுடுகாட்டில் நீர் உலாவிக் கொண்டிருப்பதைக் கண்டு, உம்மைக் குரூரமானவரென்றும், பொறாமை உள்ளவரென்றும் தப்பாக எண்ணுகின்றனர். அவர்கள் சந்தேகமின்றி வெட்கங்கெட்டவர்களாவர். அவர்களால் உமது செயல்களைப் புரிந்துகொள்ள முடியாது.
பதம் 8.7.34 : தாங்கள், அசையும், அசையாத படைப்பிற்கும் அப்பாற்பட்டவராக இருப்பதால், பிரம்ம தேவரையும், மற்ற தேவர்களையும் போன்ற நபர்களாலும் உமது நிலையைப் புரிந்துகொள்ள முடியாது. உம்மை ஒருவராலும் உண்மையாக அறியமுடியாது என்பதால், எப்படி ஒருவரால் உம்மிடம் பிரார்த்தனை செய்யவியலும்? இது சாத்தியமற்றதாகும். எங்களைப் பொறுத்த அளவில், நாங்கள் பிரம்ம தேவருடைய படைப்பின் சிருஷ்டிப் பொருட்களாவோம். ஆகவே, இத்தகைய சூழ்நிலையின் கீழ் எங்களால் உங்களிடம் போதுமான அளவு பிரார்த்தனைகளைச் செய்ய முடியவில்லை. ஆனால் எங்களது திறமைக்கேற்ப, எங்களது உணர்வுகளை நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம்.
பதம் 8.7.35 : ஆளுனர்களில் மிகச் சிறந்தவரே, உமது நிஜ ரூபத்தை அறிவது எங்களுக்குச் சாத்தியமல்ல. எங்களைப் பொறுத்தவரை, உமது இருப்பு அனைவருக்கும் செழிப்பான மகிழ்ச்சியை அளிப்பதாகும். இதற்குமேல் உமது செயல்களின் மதிப்பை ஒருவராலும் சரியாக உணர்ந்துகொள்ள முடியாது. எங்களால் காண முடிந்தது இவ்வளவு தான்.
பதம் 8.7.36 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சிவபெருமான் எப்பொழுதும் அனைத்து ஜீவராசிகளிடமும் உதாரகுணம் கொண்டவராவார். எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருந்த விஷத்தால் ஜீவராசிகள் பெருந்துன்பத்திற்கு ஆளாகியிருப்பதைக் கண்டு அவர் மிகவும் இரக்கங் கொண்டார். இவ்வாறாக தமது நிரந்தர மனைவியாகிய சதீயிடம், அவர் பின்வருமாறு கூறினார்.
பதம் 8.7.37 : சிவபெருமான் கூறினார்: எனதன்புள்ள பவானி, பாற்கடலைக் கடைந்ததனால் உண்டான விஷத்தின் காரணத்தால், இந்த ஜீவராசிகள் அனைவரும் எப்படி ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பார்.
பதம் 8.7.38 : வாழ்வுக்காக போராடிக் கொண்டிருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் ஆதரவையும், பாதுகாப்பையும் அளிப்பது எனது கடமையாகும். தனது ஆதரவின் கீழ் இருப்பவன் துன்புற்ற நிலையில் இருக்கும்போது அவனைக் காப்பாற்றுவது சந்தேகமின்றி எஜமானரின் கடமையாகும்.
பதம் 8.7.39 : பொதுவாக மக்கள், பரமபுருஷ பகவானின் மாயா சக்தியால் குழப்பம் அடைந்திருப்பதால், அவர்கள் தங்களுக்கிடையில் ஒருவரோடொருவர் எப்பொழுதும் விரோதம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் பக்தர்கள், நிலையற்ற தங்களது சொந்த வாழ்வையே பணயம் வைத்து, அவர்களைக் காப்பாற்ற முயல்கின்றனர்.
பதம் 8.7.40 : எனது அன்பிற்குரிய நற்குணம் வாய்ந்த பவானியே, பிறர் நன்மைக்காக தருமமான செயல்களை ஒருவர் இயற்றும் போது, பரம்புருஷ பகவானாகிய ஹரி மிகவும் திருப்தியடைகிறார். பெருமான் திருப்தியடையும் போது நானும் திருப்தியடைகிறேன். என்னுடன் மற்றெல்லா ஜீவராசிகளும் திருப்தியடைகின்றன. ஆகவே, என்னால் அனைத்து ஜீவராசிகளும் திருப்தியடையப் போகின்றன என்பதால் இந்த விஷத்தை நான் குடித்துவிடப் போகிறேன்.
பதம் 8.7.41 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பவானியிடம் இவ்வாறு அறிவித்த பின், சிவபெருமான் விஷத்தைக் குடிக்க ஆரம்பித்தார். சிவபெருமானின் தகுதிகளை நன்கு அறிந்தவளான பவானியும் விஷத்தைக் குடிக்க அவருக்கு அனுமதி வழங்கினாள்.
பதம் 8.7.42 : அதன்பிறகு, மனித குலத்திற்காக, மங்களகரமான, தரும சிந்தை கொண்ட செயலுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட சிவபெருமான், கருணையுடன் அந்த விஷம் முழுவதையும் தமது உள்ளங்கையில் ஏந்தி குடித்துவிட்டார்.
பதம் 8.7.43 : அவதூறு செய்வதைப் போல், பாற்கடலிலிருந்து பிறந்த விஷம் அதன் ஆற்றலை வெளிப்படுத்தி, சிவபெருமானின் கழுத்தில் நீலநிறக் கோடு ஒன்றை ஏற்படுத்தியது. ஆயினும், அக்கோடு இப்பொழுது பெருமானின் ஓர் ஆபரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
பதம் 8.7.44 : சிறந்த புண்ணிய புருஷர்கள், பொது மக்களுடைய துன்பத்தின் காரணத்தால், கிட்டத்தட்ட எப்பொழுதுமே தன்னிச்சையான துன்பத்தை ஏற்றுக் கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. இது, எல்லோருடைய இதயத்திலும் இருப்பவரான முழுமுதற் கடவுளின் மிகவுயர்ந்த வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது.
பதம் 8.7.45 : இச்செயலைப் பற்றி கேள்விப்பட்டதும், பவானி (தட்சனின் மகள்), பிரம்மதேவர், பகவான் விஷ்ணு, பொதுமக்கள் ஆகியோர் உட்பட அனைவரும், தேவர்களால் பூஜிக்கப்படுபவரும், மக்களுக்கு வரங்களை அளிப்பவருமான சிவபெருமானின் இச்செயலை மிகவும் உயர்வாகப் போற்றினர்.
பதம் 8.7.46 : சிவபெருமான் குடிக்கும் போது அவரது உள்ளங்கையிலிருந்து கீழே விழுந்து சிதறிய சில துளி விஷத்தை தேள்கள், நாகப்பாம்புகள், விஷ மூலிகைகள் மற்றும் விஷப் பற்களைக் கொண்ட மற்ற மிருகங்கள் ஆகியவை தக்க சமயத்தை பயன்படுத்திக் கொண்டு அதைக் குடித்து விட்டன.