அத்தியாயம் – 6
தேவாசுரர்களின் இடைக்கால
சமாதான அறிவிப்பு
பதம் 8.6.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, இவ்வாறாக தேவர்களாலும், பிரம்ம தேவராலும் பிரார்த்தனைகளால் வழிபடப்பட்ட முழுமுதற் கடவுளாகிய, ஹரி, அவர்கள் முன் தோன்றினார். அவருடைய தேகத்தின் பிரகாசம் ஒரே சமயத்தில் உதிக்கும் ஆயிரக்கணக்கான சூரியன்களுக்கு ஒத்திருந்தது.
பதம் 8.6.2 : எல்லாத் தேவர்களின் பார்வையும் பகவானின் பிரகாசத்தால் தடைபட்டுவிட்டது. இவ்வாறாக அவர்களால் ஆகாயத்தையோ, திசைகளையோ, நிலத்தையோ, அல்லது தங்களையோ கூட காண முடியவில்லை. அவர்களின் முன்னால் இருந்த பகவானைக் காண்பதைப் என்னவென்று சொல்வது.
பதங்கள் 8.6.3 – 8.6.7 : மரகத மணியையொத்த கரு நிற மேனியுடனும், தாமரை மலரின் உட்புறத்தைப் போன்ற சிவந்த கண்களுடனும், உருக்கிய தங்கத்தைப் போன்ற மஞ்சள் நிற ஆடைகளுடனும், மற்றும் முழு உடலும் கவர்ச்சியாக அலங்கரிக்கப்பட்டும் விளங்கிய பரமபுருஷ பகவானின் பளிங்கு போல் தெளிந்த சுய அழகை பிரம்ம தேவரும், சிவ பெருமானும் கண்டனர். விலை உயர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தைத் தலையில் அணிந்தவாறு, தாமரையைப் போன்ற, புன்னகை பூத்த அவரது அழகிய முகத்தை அவர்கள் கண்டனர். பெருமானுக்கு கவர்ச்சியான புருவங்கள் இருந்தன. அவரது கன்னங்கள் குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பிரம்மதேவரும், சிவ பெருமானும் பகவானின் இடுப்பிலிருந்த வாரையும், அவரது கரங்களிலிருந்த காப்புகளையும், மார்பின் மீதிருந்த ஆரத்தையும் மற்றும் கால்களில் இருந்த கொலுசுகளையும் கண்டனர். பகவான் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் லக்ஷ்மி தேவியை உடன் வைத்திருந்தார். அத்துடன் அவர் சக்கரத்தையும், கதையையும் போன்ற அவருக்குச் சொந்தமான ஆயுதங்களையும் ஏந்தியவாறு இருந்தார். இவ்வாறாக பகவானின் ரூபத்தைக் கண்டதும் பிரம்ம தேவர், சிவபெருமான் மற்றும் பிற தேவர்கள் ஆகிய அனைவரும் உடனடியாக தரையில் விழுந்து அவர்களது வணக்கங்களைச் சமர்ப்பித்தனர்.
பதம் 8.6.8 : பிரம்ம தேவர் கூறினார்: நீர் பிறப்பற்றவராய் இருந்தும், அவதாரமாக வரும் உமது தோற்றமும், மறையும் ஓய்வதேயில்லை. நீர் எப்போதும் பெளதிக குணத்திலிருந்து விடுபட்டிருக்கிறீர். மேலும் கடலையொத்த உன்னதமான ஆனந்தத்தின் புகலிடமும் நீரே. உமது தெய்வீகமான உருவில் நீர் நித்திய வாசம் புரிகிறீர். மிகப்பெரிய சூட்சுமங்களுக்கெல்லாம் நீரே பரம சூட்சுமமாவீர், ஆகவே யாருடைய இருப்பைக் கற்பனையாலும் அறிய முடியாதோ, அந்த பரமனாகிய உமக்கு எங்களது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம்.
பதம் 8.6.9 : புருஷர்களில் சிறந்தவரே, பரம இயக்குனரே, பரமான நல்லதிர்ஷ்டத்தை உண்மையாகவே விரும்புபவர்கள், உம்முடைய இந்த ரூபத்தை வேத தந்திரங்களுக்குகேற்ப வழிபடுவர். எம்பெருமானே, உமக்குள் மூவுலகங்களையும் எங்களால் காண முடிகிறது.
பதம் 8.6.10 : எம்பெருமானே, நீர் எப்பொழுதும் பூரண சுதந்திரம் உள்ளவராவீர். இப்பிரபஞ்ச தோற்றம் முழுவதும் உம்மிடமிருந்தே எழுகின்றது, உம்மிடம் அடைக்கலம் கொண்டுள்ளது, உமக்குள்ளேயே முடிவடைகின்றது. ஒரு மண் பாத்திரத்திற்குக் காரணமாக இருப்பதுவும், பாத்திரத்தைத் தாங்குவதும், அது உடைந்துவிடும் போது, பாத்திரம் இறுதியாக திரும்பிச் செல்லும் இடமும் மண்ணே தான். இதைப்போலவே பகவானாகிய நீரே எல்லாவற்றிற்கும் ஆரம்பமும், ஆதாரமும், முடிவுமாக இருக்கிறீர்.
பதம் 8.6.11 : பரமபுருஷரே, நீர் பிறருடைய உதவியை ஏற்காதவரும், சுய சுதந்திரம் உள்ளவருமாவீர். உமது சுய ஆற்றலின் மூலமாக, இப்பிரபஞ்ச தோற்றத்தை நீர் படைத்து, அதனுள் பிரவேசிக்கிறீர்கள். பெளதிக குணங்களின் மாற்றங்களுக்குள் நீர் இருப்பினும், உமது இருப்பு இக்குணங்களால் தொடப்படுவதே இல்லை என்பதை, கிருஷ்ண உணர்வில் முன்னேறியவர்களும், அதிகாரப் பூர்வமான சாஸ்திர அறிவை முழுமையாகப் பெற்றவர்களும், மற்றும் பக்தி யோகப் பயிற்சியின் மூலமாக எல்லா ஜடக்களங்ககளிலிருந்து தூய்மை அடைந்தவர்களும் தெளிந்த மனங்களுடன் காண்கின்றனர்.
பதம் 8.6.12 : ஒருவன் விறகிலிருந்து நெருப்பையும், பசுவின் மடியிலிருந்து பாலையும், நிலத்திலிருந்து உணவுத் தானியம், நீர் ஆகியவற்றையும், தொழில் வியாபாரங்களிலிருந்து வாழ்க்கைத் தேவைகளையும் பெறுவதைப் போலவே, பக்தியோகப் பயிற்சியினால், அது இந்த ஜட உலகினுள் செய்யப்படுவதாயினும், அதனால் உமது அனுக்கிரகத்தை ஒருவரால் அடைய முடியும் அல்லது புத்திசாலித்தனமாக ஒருவரால் உம்மை அணுக முடியும். புண்ணிய புருஷர்கள் அனைவரும் இதை ஊர்ஜிதப்படுத்துகின்றனர்.
பதம் 8.6.13 : காட்டுத் தீயினால் பெருந்துன்பத்திற்கு ஆளான யானைகளுக்கு கங்கையிலிருந்து நீர் கிடைக்கும்போது அவை பெருமகிழ்ச்சி அடைகின்றன. அதைப்போலவே, யாருடைய நாபியிலிருந்து ஒரு தாமரைப் பூ மலர்கின்றதோ அந்த பகவானாகிய நீரே எங்கள் முன் இப்போது தோன்றியிருப்பதால், நாங்கள் தெய்விக ஆனந்தத்தைப் பெற்றவர்களாக இருக்கிறோம். மிகவும் நீண்ட காலமாக உம்மைக் காண வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த நாங்கள், பெருமானாகிய உம்மைக் காண்பதன் மூலமாக, வாழ்வின் முடிவான நோக்கத்தை அடைந்துவிட்டோம்.
பதம் 8.6.14 : பெருமானே, அநேக தேவர்களும், இப்பிரபஞ்சத்தின் நிர்வாகிகளுமாகிய நாங்கள் உமது திருவடிகளை நோக்கி வந்திருக்கிறோம். எங்களது, வரவின் நோக்கத்தை தயவுசெய்து, நிறைவேற்றுவீராக. நீரே அனைத்திற்கும் உள்ளும், புறமுமாக உள்ள சாட்சியாவீர். உமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆகவே எதைப்பற்றியும் உமக்கு மீண்டும் தெரிவிப்பதற்கு அவசியமில்லை.
பதம் 8.6.15 : நான் (பிரம்மதேவர்); சிவபெருமான் மற்றும் தட்சனைப் போன்ற ப்ரஜாபதிகளால் சூழப்பட்ட தேவர்கள் ஆகியோர், மூல நெருப்பாகிய உம்மால் ஒளியூட்டப்பட்ட பொறிகளேயன்றி வேறொன்றுமில்லை. நாங்கள் உமது பின்னப் பகுதிகள் என்பதால் எங்களது நலனைப் பற்றி எதைத்தான் எங்களால் புரிந்து கொள்ள முடியும்? பரமபுருஷரே, தயவுசெய்து பிராமணர்கள் மற்றும் தேவர்களின் முக்திக்குப் பொருத்தமான உபாயத்தை எங்களுக்கு வழங்குவீராக.
பதம் 8.6.16 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக பிரம்ம தேவரை தலைமையாகக் கொண்ட தேவர்கள் பெருமானுக்கு பிரார்த்தனைகளை சமர்ப்பித்தனர். அவர்கள் தம்மை அணுகியுள்ள நோக்கத்தை பகவான் புரிந்து கொண்டார். ஆகவே, மேகங்களின் ‘கட கட’ வென்ற ஓசையை ஒத்ததோர் ஆழமான குரலில், கூப்பிய கரங்களுடன் கவனத்துடன் நின்றிருந்த தேவர்களுக்கு பகவான் பின்வருமாறு பதில் கூறினார்.
பதம் 8.6.17 : தேவர்களின் இறைவனாகிய முழுமுதற் கடவுள், தேவர்களால் செய்யப்படும் காரியங்களைத் தாமே இயற்றும் வல்லமை படைத்தவராவார். ஆனாலும் கடலைக் கடைவதிலுள்ள லீலைகளை அனுபவிக்க அவர் விரும்பினார். ஆகவே அவர் பின்வருமாறு கூறினார்.
பதம் 8.6.18 : பரமபுருஷ பகவான் கூறினார்: பிரம்ம தேவரே, சிவபெருமானே மற்றும் பிற தேவர்களே, நான் கூறப்போவது உங்கள் அனைவருக்கும் நல்லதர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்பதால், தயவு செய்து மிகவும் கவனத்துடன் கேளுங்கள்.
பதம் 8.6.19 : நீங்கள் செழிப்புடன் இல்லாதிருக்கும்வரை, காலத்தின் அனுகூலத்தைப் பெற்றுள்ள துர்த்தேவதைகளுடனும், அசுரர்களுடனும் நீங்கள் ஓர் இடைக்கால சமாதானத்தைச் செய்துகொள்ள வேண்டும்.
பதம் 8.6.20 : தேவர்களே, ஒருவன் தனது சொந்த நலன்களை நிறைவேற்றிக் கொள்வது மிகவும் முக்கியம் என்பதால், அவன் தனது எதிரியுடன் கூட தற்காலிகமாக சமாதானத்தைச் செய்து கொள்ளலாம். ஒருவர் தனது சொந்த நலனுக்காக, எலியுடன் அகப்பட்ட பாம்பின் நியாயத்திற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
பதம் 8.6.21 : இறக்கும் தறுவாயிலுள்ள ஒருவன் அருந்தி, சிரஞ்சீவி ஆகக்கூடிய அமிர்தத்ததை உற்பத்தி செய்வதில் உடனடியாக முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
பதங்கள் 8.6.22 – 8.6.23 : தேவர்களே, எல்லா வகையான காய்கறிகள், புற்கள், கொடிகள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைப் பாற்கடலில் எறிந்து விடுங்கள். அதன்பின் என் உதவியுடன், மந்தர மலையை மத்தாகவும், வாசுகியைக் கடையும் கயிறாகவும் கொண்டு, வழி பிறழாத கவனத்துடன் பாற்கடலைக் கடையுங்கள். இவ்வாறாக அசுரர்கள் உழைப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால், தேவர்களாகிய நீங்களே, கடலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் அமிர்தத்தின் உண்மையான பலனைப் பெறுவீர்கள்.
பதம் 8.6.24 : எனக்குப் பிரியமான தேவர்களே, பொறுமையுடனும், அமைதியுடனும் அனைத்தையும் செய்துவிட முடியும். ஆனால் கோபத்தால் ஒருவன் சலனமடைவானாயின், நோக்கம் நிறைவேறாது. ஆகவே, அசுரர்கள் எதைக் கேட்டாலும், அதற்கு நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்.
பதம் 8.6.25 : பாற்கடலிலிருந்து காலகூடம் எனப்படும் விஷம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் அதைக்கண்டு நீங்கள் அஞ்சக் கூடாது. மேலும் பல்வேறு பொருட்கள் கடலிலிருந்து கடைந்து எடுக்கப்படும் போது, அவற்றிற்காக நீங்கள் பேராசை கொள்ளவோ, அவற்றை அடைய முயற்சிக்கவோ அல்லது கோபப்படவோ கூடாது.
பதம் 8.6.26 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்தார்: பரீட்சித்து மகாராஜனே, இவ்விதமாக தேவர்களுக்கு அறிவுரை கூறியபின், அனைத்து ஜீவராசிகளிலும் மிகச் சிறந்தவரான, சுதந்திரம் வாய்ந்த பரமபுருஷ பகவான், அவர்களின் முன்னிலையிலிருந்து மறைந்தார்.
பதம் 8.6.27 : அதன்பிறகு பிரம்ம தேவரும், சிவ பெருமானும் பகவானிடம் தங்களது பணிவான வணக்கங்களைச் சமர்பித்தபின், தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பிச் சென்றனர். பிறகு தேவர்கள் அனைவரும் பலி மகாராஜனை அணுகினார்.
பதம் 8.6.28 : பெரும் புகழ் பெற்றவரும், அசுரர்களின் அரசருமான பலி மகாராஜன், எப்போது சமாதானம் கொள்வது, எப்போது சண்டை செய்வது என்பதை நன்கு அறிந்திருந்தார். எனவே அவரது சேனாதிபதிகளும், படைத்தலைவர்களும் சலனமடைந்து தேவர்களைக் கொல்ல முயன்றபோது, தேவர்கள் போர் தொடுக்கும் மனோபாவத்தில் வராததைக் கண்ட பலி மகாராஜன், அவர்களைக் கொல்ல வேண்டாமென தனது சேனாதிபதிகளைத் தடுத்துவிட்டார்.
பதம் 8.6.29 : தேவர்கள், விரோசனரின் புதல்வராகிய பலி மகாராஜனை அணுகி, அவருக்கருகே கீழே அமர்ந்தார். அசுர சேனாதிபதிகளால் பாதுகாக்கப்பட்டிருந்த பலி மகாராஜன், எல்லாப் பிரபஞ்சங்களையும் கைப்பற்றி பெரும் ஐசுவரியத்துடன் விளங்கினார்.
பதம் 8.6.30 : மிகவும் அடக்கமான வார்த்தைகளால் பலி மகாராஜனை திருப்திப்படுத்திய பின், தேவர்களின் அரசனும், பெரும் புத்திசாலியுமான இந்திரதேவன், முழுமுதற் கடவுளாகிய பகவான் விஷ்ணுவிடமிருந்து தாம் கற்ற திட்டங்கள் அனைத்தையும் மிகவும் பணிவுடன் சமர்ப்பித்தார்.
பதம் 8.6.31 : தேவேந்திரனால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை பலி மகாராஜனும், சம்பரம் மற்றும் அரிஷ்டனேமி அவரது உதவியாளர்களும், முதலான மற்றெல்லா திரிபுர வாசிகளும் உடனடியாக ஏற்றுக் கொண்டனர்.
பதம் 8.6.32 : எதிரிகளை தண்டிப்பவராகிய பரீட்சித்து மகாராஜனே, பிறகு தேவர்களும், அசுரர்களும் தங்களுக்கிடையில் ஒரு தற்காலிக சமாதானத்தைச் செய்து கொண்டனர். பிறகு தேவேந்திரனால் திட்டமிடப்பட்டவாறு, மிகப்பெரும் சாகச முயற்சியுடன், அமிர்தத்தை உற்பத்தி செய்ய அவர்கள் ஏற்பாடுகளைச் செய்தனர்.
பதம் 8.6.33 : அதன்பிறகு, பெரும் சக்தி படைத்தவர்களும், நீண்ட பலம் வாய்ந்த கரங்களை உடையவர்களுமான தேவர்களும், அசுரர்களும் பெரும் பலத்துடன் மந்தர மலையைப் பிடுங்கினர். பெருங்கோஷத்துடன் அதை அவர்கள் பாற்படலை நோக்கிக் கொண்டு சென்றனர்.
பதம் 8.6.34 : மிகப்பெரிய அந்த மலையை நீண்ட தூரத்திற்கு தூக்கிச் சென்றதால், இந்திரனும், பலி மகாராஜனும் மற்றும் பிற தேவர்களும், அசுரர்களும் களைப்படைந்தனர். மலையைத் தூக்க முடியாததால், அதை அவர்கள் வழியிலேயே விட்டுவிட்டனர்.
பதம் 8.6.35 : தங்கத்தால் ஆனதாக இருந்ததால், மிகவும் அதிகமான பாரம் கொண்டதான மந்தர மலை விழுந்து பல தேவர்களையும், அசுரர்களையும் நசுக்கி விட்டது.
பதம் 8.6.36 : தேவர்களும், அசுரர்களும், ஏமாற்றமும், அதைரியமும் அடைந்தனர். அவர்களது கைகளும், தொடைகளும் மற்றும் தோள்களும் உடைந்துபோயிருந்தன. ஆகவே அனைத்தையும் அறிபவரான பரமபுருஷ பகவான், தமது கருட வாகனத்தின் மீது அமர்ந்தவராய் அங்கு தோன்றினார்.
பதம் 8.6.37 : மலை விழுந்ததனால் பெரும்பான்மையான அசுரர்களும், தேவர்களும் நசுக்கப்பட்டதைக் கண்ட பகவான், அவர்கள் மீது பார்வையைச் செலுத்தி, அவர்களை உயிர்ப்பித்தார். இவ்வாறாக அவர்கள் வருத்தத்திலிருந்து விடுபட்டதுடன், நசுக்குக் காயங்களும் கூட அவர்களது உடல்களில் காணப்படவில்லை.
பதம் 8.6.38 : பகவான் ஒரு கையால் மிகச் சுலபமாக மலையைத் தூக்கி அதை கருடனின் மீது வைத்தார். பிறகு, அவரும் கருடனின் மீதேறி, தேவர்களும், அசுரர்களும் புடைசூழ பாற்கடலுக்குச் சென்றார்.
பதம் 8.6.39 : அதன்பிறகு, பறவைகளுக்கெல்லாம் முதன்மை வகிக்கும் கருடன், மந்தர மலையை அதன் தோளிலிருந்து இறக்கி அதை நீருக்கருகில் கொண்டுவந்தது. பிறகு அங்கிருந்து சென்றுவிடுமாறு பகவான் கூறியதும், அது அவ்விடத்திலிருந்து வெளியேறியது.