அத்தியாயம் – 5
தேவர்கள் பகவானிடம் பாதுகாப்பை வேண்டுதல்
பதம் 8.5.1
ஸ்ரீ-சுக உவாச
ராஜன் உதிதம் ஏதத் தே ஹரே: கர்மாக-நாசனம்
கஜேந்ர-மோக்ஷணம் புண்யம் ரைவதம் த்வந்தரம் ஸ்ருணு
ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ராஜன்—ராஜனே; உதிதம்—ஏற்கனவே விளக்கினேன்; ஏதத்—இந்த; தே—உமக்கு; ஹரே:—பகவானின்; கர்ம—செயல்; அக-நாசனம்—இதைக் கேட்பதால் எல்லா துரதிர்ஷ்டங்களில் இருந்தும் ஒருவரால் விடுபட முடியும்; கஜேந்ர-மோக்ஷணம்—யானைகளின் அரசனான கஜேந்திரனின் மோட்சத்தை; புண்யம்—கேட்கவும், விவரிக்கவும் மிகவும் புண்ணியமான; ரைவதம்—ரைவத மனுவைப் பற்றி; து—ஆனால்; அந்தரம்—இந்த யுகத்தில்; ஸ்ருணு—அன்புடன் என்னிடமிருந்து கேட்பீராக.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ராஜனே, மிகவும் புண்ணியம் வாய்ந்ததான கஜேந்திர மோட்சத்தின் திருவிளையாடல்களை உமக்கு நான் விவரித்தேன். பகவானின் இத்தகைய செயல்களைக் கேட்பதனால், எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் ஒருவரால் விடுபட முடியும். இப்பொழுது ரைவத மனுவைப் பற்றி நான் விவரிக்கப் போவதை தயவு செய்து கேட்பீராக.
பதம் 8.5.2
பஞ்சமோ ரைவதோ நாம மனுஸ் தாமஸ-ஸோதர:
பலி-விந்யாதயஸ் தஸ்ய ஸுதா ஹார்ஜுன-பூர்வகா:
பஞ்சம:—ஐந்தாவது; ரைவத:—ரைவதர்; நாம—எனும் பெயர் கொண்ட; மனு:—மனு; தாமஸ-ஸோதர:—தாமஸ மனுவின் சகோதரரான; பலி—பலி; விந்ய—விந்திய; ஆதய:—முதலான; தஸ்ய—அவரது; ஸுதா:—புதல்வர்கள்; ஹ—நிச்சயமாக; அர்ஜுன—அர்ஜுனர்; பூர்வகா:—எல்லாப் புதல்வர்களுக்கும் தலைமை வகிக்கும்.
தாமஸ மனுவின் சகோதரர், ரைவதர் எனும் பெயர்கொண்ட ஐந்தாவது மனுவாவார். அவரது புதல்வர்கள் அர்ஜுனர், பலி மற்றும் விந்தியர் முதலானவர்களாவர்.
பதம் 8.5.3
விபுர் இந்ர: ஸுர-கணா ராஜன் பூதரயாதய:
ஹிரண்யரோமா வேதசிரா ஊர்த்வபாஹு-ஆதயோ த்விஜா:
விபு:—விபு; இந்ர:—சுவர்க்க ராஜன்; ஸுர-கணா:—தேவர்கள்; ராஜன்—ராஜனே; பூதரய-ஆதய:—பூதரயர்களை தலைமையாகக் கொண்ட; ஹிரண்யரோமா—ஹிரண்யரோமா; வேதசிரா—வேதசிரா; ஊர்த்வபாஹு—ஊர்த்வபாஹு; ஆதய:—மற்றும் பிறர்; த்விஜா:—ஏழுலகங்களை ஆக்கிரமித்துள்ள பிராமணர்கள் அல்லது ரிஷிகள்.
அரசே, ரைவத மனுவின் யுகத்தில் சுவர்க்க ராஜன் விபு என்று அழைக்கப்பட்டார். தேவர்களுக்கிடையில் பூதரயர்களும், ஏழுலகங்களை ஆக்கிரமித்திருந்த ஏழு பிராமணர்களுக்கிடையில் ஹிரண்யரோமா, வேதசிரா மற்றும் ஊர்த்வபாஹு ஆகியோரும் அடங்குவர்.
பதம் 8.5.4
பத்னீ விகுண்டா சுப்ரஸ்ய வைகுண்டை: ஸுர-ஸத்தமை:
தயோ: ஸ்வ-கலயா ஜக்ஞே வைகுண்டோ பகவான் ஸ்வயம்
பத்னீ—மனைவி; விகுண்டா—விகுண்டா எனும் பெயர் கொண்ட; சுப்ரஸ்ய—ஸுப்ராவின்; வைகுண்டை:—வைகுண்டர்களுடன்; ஸுர-ஸத்-தமை:—தேவர்கள்; தயோ:—விகுண்டா மற்றும் சுப்ரர் ஆகியோரால்; ஸ்வ-கலயா—அம்சங்களுடன்; ஜக்ஞே—தோன்றினார்; வைகுண்ட:—பகவான்; பகவான்—பரமபுருஷ பகவான்; ஸ்வயம்—சுயமாக.
சுப்ரர் மற்றும் அவரது மனைவியான விகுண்டா ஆகியோரின் சேர்க்கையிலிருந்து, பரமபுருஷ பகவானாகிய, வைகுண்டரும், அவருடன் அவரது அம்சங்களாகிய தேவர்களும் தோன்றினார்.
பதம் 8.5.5
வைகுண்ட: கல்பிதோ யேன லோகோ லோக-நமஸ்க்ருத:
ரமயா ப்ரார்த்யமானேன தேவ்யா தத்-ப்ரிய-காம்பயா
வைகுண்ட:—ஒரு வைகுண்ட லோகம்; கல்பித:—நிர்மனிக்கப்பட்டது; யேன—எவரால்; லோக:—உலகம்; லோக-நமஸ்க்ருத:—எல்லா மக்களாலும் வழிபாடு செய்யப்படும்; ரமயா—ஸ்ரீ தேவியான ரமாவால்; ப்ரார்த்யமானேன—அவ்வாறு பிரார்த்திக்கப்பட்டதால்; தேவ்யா—தேவியால்; தத்—அவளது; ப்ரிய-காம்யயா—மகிழ்விப்பதற்காகவே.
பரமபுருஷ பகவானாகிய வைகுண்டர், ஸ்ரீதேவியை மகிழ்விப்பதற்காகவே, அவளுடைய பிரார்த்தனைக்கிணங்க, மற்றொரு வைகுண்ட லோகத்தைப் படைத்தார். அது எல்லோராலும் வழிபடப்படுகின்றது.
பதம் 8.5.6
தஸ்யானுபாவ: கதிதோ குணாஸ் ச பரமோதயா:
பௌமான் ரேணூன் ஸ விமமே யோ விஷ்ணோர் வர்ணயேத் குணான்
தஸ்ய—வைகுண்டராகத் தோன்றும் முழுமுதற் கடவுளின்; அனுபாவ:—போற்றத்தக்க செயல்கள்; கதித:—விளக்கப்பட்டன; குணா:—உன்னத குணங்கள்; ச—கூட; பரம-உதயா:—பெரும் புகழுக்குரிய; பெளமான்—பௌதிகமான; ரேணூன்—அணுக்களை; ஸ:—எவரேனும்; விமமே—கணக்கிட முடியும்; ய:—அத்தகைய ஒருவர்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; வர்ணயேத்—கணக்கிட முடியும்; குணான்—உன்னத குணங்களை.
முழுமுதற் கடவுளுடைய அநேக அவதாரங்களின் பெரும் புகழுக்குரிய செயல்களும், உன்னதமான குணங்களும் அற்புதமான முறையில் விவரிக்கப்பட்டிருப்பினும், சிலசமயங்களில் அவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆயினும் பகவான் விஷ்ணுவிற்கு அனைத்தும் சாத்தியமானதாகும். பிரபஞ்சத்திலுள்ள அணுக்களை ஒருவரால் கணக்கிட முடியுமானால், முழுமுதற் கடவுளின் குணங்களை அவரால் கணக்கிட முடியும். ஆனால் பிரபஞ்ச அணுக்களை ஒருவராலும் கணக்கிட முடியாது என்பதைப் போலவே பகவானின் உன்னதமான குணங்களை எவராலும் கணக்கிட முடியாது.
பதம் 8.5.7
ஷஷ்டஸ் ச சக்ஷுஷ: புத்ரஸ் சாக்ஷுஷோ நாம வை மனு:
பூரு-பூருஷ-ஸுத்யும்ன-ப்ரமுகாஸ் சாக்ஷுஷாத்மஜா:
ஷஷ்ட:—ஆறாவது; ச—மேலும்; சக்ஷுஷ:—சக்ஷுவின்; புத்ர:—புத்திரன்; சாக்ஷுஷ:—சாக்ஷுஷர்; நாம—எனும் பெயர் கொண்ட; வை—உண்மையில்; மனு:—மனு; பூரு—பூரு; பூருஷ—புருஷர்; ஸுத்யும்ன—ஸுத்யும்னர்; ப்ரமுகா:—முதலான; சாக்ஷுஷ-ஆத்ம-ஜா:—சாக்ஷுஷரின் புத்திரர்கள்.
சக்ஷுவின் புத்திரரான சாக்ஷுஷர் ஆறாவது மனுவாவார். அவருக்குப் பூரு, புருஷர் மற்றும் ஸுத்யும்னர் முதலான பல புத்திரர்கள் இருந்தனர்.
பதம் 8.5.8
இந்ரோ மந்த்ரத்ருமஸ் தத்ர தேவா ஆப்யாதயோ கணா:
முனயஸ் தத்ர வை ராஜன் ஹவிஷ்மத்-வீரகாதய:
இந்ர:—சுவர்க்க ராஜன்; மந்ரத்ரும:—மந்ரத்ருமர் எனப்படும்; தத்ர—அந்த ஆறாவது மன்வந்தரத்தில்; தேவா:—தேவர்கள்; ஆப்ய-ஆதய:—ஆப்யர்களும், பிறரும்; கணா:—அந்த சபை; முனய:—ஏழு ரிஷிகள்; தத்ர—அங்கு; வை—உண்மையில்; ராஜன்—ராஜனே; ஹவிஷ்மத்—ஹவிஷ்மான் எனும் பெயரின்; வீரக-ஆதய:—வீரகரும், மற்றவர்களும்.
சாக்ஷுஷ மனுவின் ஆட்சிக் காலத்தில், சுவர்க்க ராஜன் மந்த்ரத்ருமர் என்று அழைக்கப்பட்டார். தேவர்களுக்கிடையில் ஆப்யர்களும், பெரும் முனிவர்களுக்கிடையில் ஹவிஷ்மான் மற்றும் வீரகர் ஆகியோரும் அடங்குவர்.
பதம் 8.5.9
தத்ராபி தேவஸம்பூத்யாம் வைராஜஸ்யாபவத் ஸுத:
அஜிதோ நாம பகவான் அம்சேன ஜகத: பதி:
தத்ர அபி—மீண்டும் அந்த ஆறாவது மன்வந்தரத்தில்; தேவஸம்பூத்யாம்—தேவஸம்பூதியால்; வைராஜஸ்ய—வைராஜன் எனும் அவளது கணவனால்; அபவத்—தோன்றினார்; ஸுத:—ஒரு புத்திரன்; அஜித: நாம—அஜிதர் எனும் பெயருடைய; பகவான்—பரமபுருஷ பகவான்; அம்சேன—அம்சமாக; ஜகத: பதி:—பிரபஞ்சத்தின் எஜமானர்.
இந்த ஆறாவது மன்வந்தர யுகத்தில், பிரபஞ்சத்தின் எஜமானராகிய பகவான் விஷ்ணு, தமது விரிவங்கத்தின் அம்சமாகத் தோன்றினார். அவர் வைராஜரால் அவரது மனைவியான தேவஸம்பூதியின் கருவில் பெறப்பட்டார். மேலும் அஜிதர் என்பது அவரது பெயராகும்.
பதம் 8.5.10
பயோதிம் யேன நிர்மத்ய ஸுராணாம் ஸாதிதா ஸுதா
ப்ரமமாணோ ‘ம்பஸி த்ருத: கூர்ம-ரூபேண மந்தர:
பயோதிம்—பாற்கடல்; யேன—யாரால்; நிர்மத்ய—கடைந்ததால்; ஸுராணாம்—தேவர்களின்; ஸாதிதா—உண்டாக்கினார்; ஸுதா—அமிர்தத்தை; ப்ரமமாண:—இங்குமங்கும் அசைந்து; அம்பஸி—நீரினுள்; த்ருத:—தங்கியிருந்தார்; கூர்ம-ரூபேண—ஓர் ஆமை வடிவத்தில்; மந்தர:—மந்தர எனப்படும் மலை.
பாற்கடலைக் கடைந்ததன் வாயிலாக, தேவர்களுக்கு அஜிதர் அமிர்தத்தை பெற்றுத் தந்தார். ஓர் ஆமையின் உருவில், புகழ்பெற்ற மந்தர மலையைத் தமது முதுகின்மேல் சுமந்தவாறு அவர் இங்குமங்கும் அசைந்தார்.
பதங்கள் 8.5.11 – 8.5.12
ஸ்ரீ-ராஜோவாச
யதா பகவதா ப்ரஹ்மன் மதித: க்ஷீர-ஸாகர:
யத்-அர்த்தம் வா யதஸ் சாத்ரிம் ததரம்புசராத்மனா
யதாம்ருதம் ஸுரை: ப்ராப்தம் கிம் சான்யத் அபவத் தத:
ஏதத் பகவத: கர்ம வதஸ்வ பரமாத்புதம்
ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் விசாரித்தார்; யதா—அவ்வாறு; பகவதா—பரமபுருஷ பகவானால்; ப்ரஹ்மன்—கற்றறிந்த பிராமணரே; மதித:—கடைந்தார்; க்ஷீர-ஸாகர:—பாற்கடலை; யத்-அர்த்தம்—நோக்கமென்ன; வா—அல்லது; யத:—எங்கிருந்து, எதற்காக; ச—மேலும்; அத்ரிம்—அம்மலை (மந்தர); ததார—தங்கியிருந்தார்; அம்புசர-ஆத்மனா—ஓர் ஆமையின் வடிவில்; யதா—அவ்வாறு; அம்ருதம்—அமிர்தம்; ஸுரை:—தேவர்களால்; ப்ராப்தம்—அடையப்பட்டது; கிம்—என்ன; ச—மேலும்; அன்யத்—மற்ற; அபவத்—உண்டானது; தத:—அதன்பிறகு; ஏதத்—இவ்வெல்லா; பகவத:—பரமபுருஷ பகவானின்; கர்ம—திருவிளையாடல்களை, செயல்களை; வதஸ்வ—அன்புடன் விளக்குவீராக; பரம-அத்புதம்—அவை மிகவும் அற்புதமாக இருப்பதால்.
பரீட்சித்து மகாராஜன் விசாரித்தார்: மிகச்சிறந்த பிராமணராகிய சுகதேவ கோஸ்வாமியே, பகவான் விஷ்ணு எதற்காக, எப்படி பாற்கடலைக் கடைந்தார்? எக்காரணத்திற்காக அவர் ஓர் ஆமையாக நீரில் தங்கியிருந்து, மந்தர மலையைச் சுமந்தார்? தேவர்கள் எவ்வாறு அமிர்தத்தைப் பெற்றனர்? மேலும் பாற்கடலைக் கடைந்ததனால் வேறென்ன பொருட்கள் உற்பத்தியாயின? பகவானின் இவ்வெல்லா அற்புதச் செயல்களையும் அன்புடன் விளக்குவீராக.
பதம் 8.5.13
த்வயா ஸங்கத்யமானேன மஹிம்னா ஸாத்வதாம் பதே:
நாதித்ருப்யதி மே சித்தம் ஸுசிரம் தாப-தாபிதம்
த்வயா—உம்மால்; ஸங்கத்யமானேன—விவரிக்கப்படும்; மஹிம்னா—எல்லா மகிமைகளாலும்; ஸாத்வதாம் பதே:—பக்தர்களின் எஜமானராகிய, முழுமுதற் கடவுளின்; ந—இல்லை; அதி-த்ருப்யதி—போதுமான அளவிற்கு திருப்தியடைந்துள்ளது; மே—எனது; சித்தம்—இதயம்; ஸுசிரம்—அவ்வளவு நீண்ட காலமாக; தாப—துன்பங்களால்; தாபிதம்—வருத்தமூட்டப்பட்டு.
பெளதிக வாழ்வின் மூன்று துயரச் சூழ்நிலைகளால் அமைதி குலைக்கப்பட்டுள்ள என் இதயம், பக்தர்களின் எஜமானராகிய, முழுமுதற் கடவுளின் மகிமைமிக்க செயல்களை நீர் விவரிப்பதைக் கேட்டு இன்னும் பூரண திருப்தியடையவில்லை.
பதம் 8.5.14
ஸ்ரீ-ஸூத உவாச
ஸம்ப்ருஷ்டோ பகவான் ஏவம் த்வைபாயன-ஸுதோ த்விஜா:
அபினந்ய ஹரேர் வீர்யம் அப்யாசஷ்டும் ப்ரசக்ரமே
ஸ்ரீ—ஸூத: உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; ஸம்ப்ருஷ்ட:—கேள்வி கேட்கப்பட்டு; பகவான்—சுகதேவ கோஸ்வாமி; ஏவம்—இவ்வாறாக; த்வைபாயன-ஸுத:—வியாசதேவரின் புத்திரர்; த்வி-ஜா:—இங்கு கூடியுள்ள பிராமணர்களே; அபினந்ய—பரீட்சித்து மகாராஜனைப் பாராட்டி; ஹரே: வீர்யம்—பரமபுருஷ பகவானின் பெருமைகள்; அப்யாசஷ்டும்—விவரிக்க; ப்ரசக்ரமே—முயன்றார்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இங்கு நைமிஷாரண்யத்தில் கூடியுள்ள பிராமண சிரேஷ்டர்களே, இவ்வாறாக துவைப்பாயனரின் புத்திரரான சுகதேவ கோஸ்வாமியிடம் மன்னர் கேள்வி எழுப்பிய போது, அவர் மன்னரைப் பாராட்டினார். பிறகு பரமபுருஷ பகவானின் பெருமைகளை அவர் மேலும் விவரிக்க முயன்றார்.
பதங்கள் 8.5.15 – 8.5.16
ஸ்ரீ-சுக உவாச
யதா யுத்தே ‘ஸுரைர் தேவா பத்யமானா: சிதாயுதை:
கதாஸவோ நிபதிதா நோத்திஷ்டேரன் ஸ்ம பூரிச:
யதா துர்வாஸ: சாபேன ஸேந்ரா லோகாஸ் த்ரயோ ந்ருப
நிஹ்ஸ்ரீகாஸ் சாபவய: ம்ஸ் தத்ர நேசுர் இஜ்யாதய: க்ரியா:
ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; யதா—அப்போது; யுத்தே—யுத்தத்தில்; அஸுரை:—அசுரர்களால்; தேவா:—தேவர்கள்; பத்யமானா:—சூழப்பட்டனர்; சித-ஆயுதை:—ஸர்ப்ப ஆயுதங்களால்; கத-ஆஸவ:—கிட்டத்தட்ட இறந்துவிட்டனர்; நிபதிதா:—அவர்களில் சிலர் வீழ்ச்சியடைந்து; ந—இல்லை; உத்திஷ்டேரன்—மீண்டும் எழுந்தனர்; ஸ்ம—அந்த கதியடைந்தனர்; பூரிச:—அவர்களில் பெரும்பான்மையினர்; யதா—அப்போது; துர்வாஸ:—துர்வாச முனியின்; சாபேன—சாபத்தால்; ஸ-இந்ரா:—இந்திரனுடன்; லோகா: த்ரய:—மூவுலகங்களும்; ந்ருப—ராஜனே; நிஹ்ஸ்ரீகா:—எவ்வித பெளதிக செல்வமும் இல்லாமல்; ச—தவிரவும்; அபவன்—ஆயின; தத்ர—அச்சயம்; நேசு:—நிறைவேற்றப்பட முடியவில்லை; இஜ்ய-ஆதய:—யாகங்கள்; க்ரியா:—கிரியைகள் (சடங்குகள்).
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அசுரர்கள் தங்களது ஸர்ப்ப ஆயுதங்களால் தேவர்களைப் போரில் கடுமையாகத் தாக்கியபோது, தேவர்களில் பலர் வீழ்ச்சியடைந்து தங்களது உயிரை இழந்தனர். உண்மையில் அவர்களை உயிர்ப்பிக்க முடியவில்லை. ராஜனே, அந்த சமயத்தில், துர்வாச முனிவரால் தேவர்கள் சபிக்கப்பட்டிருந்தனர். மூவுலகங்களும் வறுமையால் பீடிக்கப்பட்டன. அதனால் வேதக்கிரியைகளை நிறைவேற்ற முடியவில்லை. இதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருந்தன.
பதங்கள் 8.5.17 – 8.5.18
நிசாம்யைதத் ஸுர-கணா மஹேந்ர-வருணாதய:
நாத்யகச்சன் ஸ்வயம் மந்த்ரைர் மந்த்ரயந்தோ வினிஸ்சிதம்
ததோ ப்ரஹ்ம-ஸபாம் ஜக்முர் மேரோர் மூர்தனி ஸர்வச:
ஸர்வம் விக்ஞாபயாம் சக்ரு: ப்ரணதா: பரமேஷ்டினே
நிசாம்ய—கேள்விப்பட்டு; ஏதத்—இச்சம்பவத்தை; ஸுர-கணா:—தேவர்கள் அனைவரும்; மஹா-இந்ர—இந்திர மகாராஜன்; வருண-ஆதய:—வருணனும், மற்ற தேவர்களும்; ந—இல்லை; ஆத்யகச்சன்—அடைந்தனர்; ஸ்வயம்—சுயமாக; மந்த்ரை:—கலந்தாலோசித்து; மந்த்ரயந்த:—விவாதித்து; வினிஸ்சிதம்—நிஜமான ஒரு முடிவு; தத:—அதன்பிறகு; ப்ரஹ்ம-ஸபாம்—பிரம்ம தேவரின் சபைக்கு; ஜக்மு:—அவர்கள் சென்றனர்; மேரோ:—சுமேரு மலையின்; மூர்தனி—உச்சிக்கு; ஸர்வச:—அவர்கள் அனைவரும்; ஸர்வம்—அனைத்தையும்; விக்ஞாபயாம் சக்ரு:—அவர்கள் அறிவித்தனர்; ப்ரணதா:—வணக்கம் செலுத்தினர்; பரமேஷ்டினே—பிரம்மதேவரிடம்.
இந்திரன், வருணன் மற்றும் பிற தேவர்கள் ஆகியோர் தங்களுடைய வாழ்வின் இந்நிலையைக் கண்டு தங்களுக்கிடையில் கலந்தாலோசனை செய்தனர். ஆனால் அவர்களால் எந்த தீர்வையும் காண முடியவில்லை. பிறகு தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி சுமேரு மலையின் சிகரத்திற்குச் சென்றனர். அங்கு, பிரம்மதேவரின் சபையில், கீழே விழுந்து பிரம்ம தேவரை வணங்கினர். பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அவரிடம் அறிவித்தனர்.
பதங்கள் 8.5.19 – 8.5.20
ஸ விலோக்யேந்ர-வாயு-ஆதீன் நிஹ்ஸத்வான் விகத-ப்ரபான்
லோகான் அமங்கள-ப்ராயான் அஸுரான் அயதா விபு:
ஸமாஹிதேன மனஸா ஸம்ஸ்மரன் புருஷம் பரம்
உவாசோத்புல்ல-வதனோ தேவான் ஸ பகவான் பர:
ஸ:—பிரம்ம தேவர்; விலோக்ய—கண்டு; இந்ர-வாயு-ஆதீன்—இந்திரன், வாயு முதலான தேவர்கள் அனைவரும்; நிஹ்ஸத்வான்—ஆன்மீக சக்திகள் அனைத்தையும் இழந்து; விகத-ப்ரபான்—ஒளி இழந்து; லோகான்—மூவுலகங்கள் அனைத்தும்; அமங்கள-ப்ராயான்—அமங்களத்திற்கு ஆளாகி; அஸுரான்—அசுரர்கள் அனைவரும்; அயதா:—செழிப்படைந்திருப்பதை; விபு:—ஜட உலகினுள் பரமனாக இருக்கும் பிரம்ம தேவர்; ஸமாஹிதேன—முழுமையாக சரிப்படுத்துவதனால்; மனஸா—மனதை; ஸம்ஸ்மரன்—திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டு; புருஷம்—பரமபுருஷர்; பரம்—உன்னதமான; உவாச—கூறினார்; உத்புல்ல-வதன:—மலர்ந்த முகத்துடன்; தேவான்—தேவர்களிடம்; ஸ:—அவர்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த; பர:—தேவர்களின்.
தேவர்கள் எல்லா வலிமையையும், ஆதிக்கத்தையும் இழந்துவிட்டதையும், இதன் விளைவாக மூவுலகங்களும் அவற்றின் மங்களத்தை இழந்து காட்சியளிப்பதையும், தேவர்கள் நிராதரவான நிலையில் இருப்பதையும், ஆனால் அசுரர்கள் செழிப்படைந்துவிட்டதையும் கண்டு, தேவர்களுக்கெல்லாம் மேலானவரும், அனைவரையும் விட அதிக சக்தி படைத்தவருமான பிரம்மதேவர், தமது மனதை முழுமுதற் கடவுளின் மீது ஒருமுனைப்படுத்தினார். இவ்வாறாக உற்சாகம் அளிக்கப்பட்டு, அவர் மலர்ந்த முகத்துடன், பின்வருமாறு தேவர்களிடம் பேசினார்.
பதம் 8.5.21
அஹம் பவோ யூயம் அதோ ‘ஸுராதயோ
மனுஷ்ய-திர்யக்-த்ரும-கர்ம-ஜாதய:
யஸ்யாவதாராம்ச-கலா-விஸர்ஜிதா
வ்ரஜாம ஸர்வே சரணம் தம் அவ்யயம்
அஹம்—நான்; பவ:—சிவபெருமான்; யூயம்—தேவர்களாக நீங்கள்; அதோ—மேலும்; அஸுர-ஆதய:—அசுரர்களும், மற்றவர்களும்; மனுஷ்ய—மனிதர்கள்; திர்யக்—மிருகங்கள்; த்ரும—மரங்களும், தாவரங்களும்; கர்ம-ஜாதய:—மேலும் பூச்சிகளும், வியர்வையிலிருந்து பிறக்கும் கிருமிகளும்; யஸ்ய—யாருடைய (முழுமுதற் கடவுள்); அவதார—புருஷ அவதாரத்தின்; அம்ச—அவரது பின்னப்பகுதியும், குண அவதாரமுமான பிரம்மாவின்; கலா—பிரம்மாவினுடைய புதல்வர்களின்; விஸர்ஜிதா:—சந்ததியால் உற்பத்தி செய்யப்பட்ட; வ்ரஜாம—நாம் செல்வோமாக; ஸர்வே—நாமனைவரும்; சரணம்—புகலிடம் தேடி; தம்—பரமனிடம்; அவ்யயம்—முடிவற்றவரான.
பிரம்மதேவர் கூறினார்: நான், சிவபெருமான், தேவர்களான நீங்கள், அசுரர்கள், வியர்வையிலிருந்து பிறக்கும் ஜீவராசிகள், முட்டைகளிலிருந்து பிறக்கும் ஜீவராசிகள், பூமியிலிருந்து வளரும் மரங்கள் மற்றும் கருவிலிருந்து பிறக்கும் ஜீவராசிகள் ஆகிய அனைவரும் பரமபுருஷரிடமிருந்து, அதாவது அவரது ரஜோ குண அவதாரத்திலிருந்தும் (குண-அவதாரமான பிரம்ம தேவர்), என்னுடைய பாகமாகவுள்ள பெரும் முனிவர்களிடமிருந்தும் வருகின்றனர். ஆகவே நாம் பரமபுருஷரிடம் சென்று, அவரது தாமரைப் பாதங்களில் புகலிடம் கொள்வோமாக.
பதம் 8.5.22
ந யஸ்ய வத்யோ ந ச ரக்ஷணீயோ
நோபேக்ஷணீயாதரணீய-பக்ஷ:
ததாபி ஸர்க-ஸ்திதி-ஸம்யமார்த்தம்
தத்தே ரஜ:-ஸத்வ-தமாம்ஸி காலே
ந—இல்லை; யஸ்ய—எவரால் (பகவானால்); வத்ய:—கொல்லப்பட வேண்டியவரோ; ந—அல்லது; ச—கூட; ரக்ஷணீய:—பாதுகாக்கப்பட வேண்டியவரோ; ந—அல்லது; உபேக்ஷணீய—அலட்சியம் செய்யப்பட வேண்டியவரோ; ஆதரணீய—வழிபாடு செய்யப்பட வேண்டியவரோ; பக்ஷ:—பகுதி; ததாபி—எனினும்; ஸர்க—படைத்தல்; ஸ்திதி—காத்தல்; ஸம்யம—மற்றும் அழித்தல்; அர்த்தம்—ஆகியவற்றிற்காக; தத்தே—அவர் ஏற்றுக் கொள்கிறார்; ரஜ:—தீவிர குணம்; ஸத்வ—நற்குணம்; தமாம்ஸி—மற்றும் அறியாமைக் குணம்; காலே—காலப்போக்கில்.
பரமபுருஷ பகவானுக்கு கொல்லப்பட வேண்டியவரோ. பாதுகாக்கப்பட வேண்டியவரோ, அலட்சியம் செய்யப்பட வேண்டியவரோ அல்லது வழிபாடு செய்யப்பட வேண்டியவரோ ஒருவரும் இல்லை. ஆயினும், காலத்திற்கேற்ப படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என்பதற்காக, நற்குணத்திலோ, தீவிர குணத்திலோ அல்லது அறியாமை குணத்திலோ உள்ள வெவ்வேறு உருவங்களை அவர் அவதாரங்களாக ஏற்கிறார்.
பதம் 8.5.23
அயம் ச தஸ்ய ஸ்திதி-பாலன-க்ஷண:
ஸத்வம் ஜுஷாணஸ்ய பவாய தேஹினாம்
தஸ்மாத் வ்ரஜாம: சரணம் ஜகத்-குரும்
ஸ்வானாம் ஸ நோ தாஸ்யதி சம் ஸுர-ப்ரிய:
அயம்—இத்தருணம்; ச—கூட; தஸ்ய—முழுமுதற் கடவுளின்; ஸ்திதி-பாலன-க்ஷண:—பராமரிப்புக்குரிய காலம், அவரது ஆட்சியை நிலைப்படுத்துவதற்குரிய காலம்; ஸத்வம்—நற்குணம்; ஜுஷாணஸ்ய—(இப்பொழுது, காத்திராமல்) ஏற்றுக் கொள்ளும்; பவாய—அதிக மேம்பாட்டிற்கு; தேஹினாம்—ஜட உடல்களை ஏற்றுக் கொண்டுள்ள அனைத்து ஜீவராசிகளின்; தஸ்மாத்—ஆகவே; வ்ர-ஜாம:—நாம் கொள்வோமாக; சரணம்—புகலிடம்; ஜகத்-குரும்—ஜகத் குருவாகிய முழுமுதற் கடவுளின் தாமரைப் பாதங்களில்; ஸ்வானாம்—அவருக்குச் சொந்தமான நபர்கள்; ஸ:—அவர் (முழுமுதற் கடவுள்); ந:—நமக்கு; தாஸ்யதி—கொடுப்பார்; சம்—நமக்குத் தேவையாக நல்லதிர்ஷ்டத்தை; ஸுர-ப்ரிய:—இயல்பாகவே அவர் பக்தர்களிடம் மிகவும் பிரியமானவராக இருப்பதால்.
ஜட உடல்களை ஏற்றுக் கொண்டுள்ள ஜீவராசிகளின் நற்குணத்தை எழச்செய்வதற்கு இதுவே தக்க சமயமாகும். நற்குணம், படைப்பைப் பராமரிக்கும் பரமபுருஷரின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கென உள்ளதாகும். ஆகவே இதுவே பரமபுருஷ பகவானிடம் புகலிடம் கொள்வதற்குரிய தக்க தருணமாகும். அவர் இயல்பாகவே தேவர்களிடம் மிகவும் அன்பும், பிரியமும் கொண்டவராக இருப்பதால், நிச்சயமாக அவர் நமக்கு நல்லதிர்ஷ்டத்தை வழங்குவார்.
பதம் 8.5.24
ஸ்ரீ-சுக உவாச
இதி அபாஷ்ய ஸுரான் வேதா: சஹ தேவைர் அரிந்தம
அஜிதஸ்ய பதம் ஸாக்ஷாஜ் ஜகாம தமஸ: பரம்
ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; ஆபாஷ்ய—பேசும்; ஸுரான்—தேவர்களிடம்; வேதா:—இப்பிரபஞ்சத்தின் தலைவரும், வேத ஞானத்தில் அனைவருக்கும் நல்லறிவு புகட்டுவருமான பிரம்மதேவர்; ஸஹ—உடன்; தேவை:—தேவர்கள்; அரிம்-தம—(புலன்களைப் போன்ற) எல்லா எதிரிகளையும் அடக்குபவரான பரீட்சித்து மகாராஜனே; அஜிதஸ்ய—முழுமுதற் கடவுளின்; பதம்—இடத்திற்கு; ஸாக்ஷாத்—நேரடியாக; ஜகாம—சென்றார்; தமஸ:—இருளடர்ந்த உலகிற்கு; பரம்—மேலான, அப்பாற்பட்ட.
எதிரிகள் அனைவரையும் அடக்குபவரான, பரீட்சித்து மகாராஜனே, பிரம்மதேவர் தேவர்களிடம் பேசிய பின், அவர்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு, இந்த ஜட உலகிற்கு அப்பாலுள்ள உன்னதமான முழுமுதற் கடவுளின் வசிப்பிடத்திற்கு அவர் சென்றார். பகவானின் வசிப்பிடம் ஸ்வேதத்வீபம் எனப்படும் ஒரு தீவின் மேல் இருக்கின்றது. இத்தீவு பாற்கடலில் அமைந்துள்ளது.
பதம் 8.5.25
தத்ராத்ருஷ்ட-ஸ்வரூபாய ஸ்ருத-பூர்வாய வை ப்ரபு:
ஸ்துதிம் அப்ரூத தைவீபிர் கீர்பிஸ் து அவஹிதேந்ரிய:
தத்ர—அங்கு (ஸ்வேதத்வீபம் எனப்படும் பகவானின் வசிப்பிடத்தில்); அத்ருஷ்ட-ஸ்வரூபாய—பிரம்ம தேவராலும் காணப்படாதவரான முழுமுதற் கடவுளுக்கு; ஸ்ருத-பூர்வாய—ஆனால் வேதங்களிலிருந்து அறியப்பட்டவர்; வை—உண்மையில்; ப்ரபு:—பிரம்மதேவர்; ஸ்துதிம்—வேத இலக்கியத்திலிருந்து பெறப்பட்ட பிரார்த்தனைகளை; அப்ரூத—செய்தார்; தைவீபி:—வேத இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள பிரார்த்தனைகளால் அல்லது வேதக்கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றுபவர்களால் செய்யப்பட்ட பிரார்த்தனைகளால்; கீர்பி:—அத்தகைய ஒலி அதிர்வுகளால் அல்லது பாடல்களால்; து—பிறகு; அவஹித-இந்ரிய:—நோக்கத்திலிருந்து விலகாமல் நிலையான மனதுடன்.
பரம்புருஷ பகவானை பிரம்மதேவர் இதுவரை கண்டதேயில்லை என்றாலும், அங்கு (ஸ்வேதத்வீபத்தில்), அவர் பரம புருஷரிடம் பிரார்த்தனைகள் செய்தார். பரமபுருஷ பகவானைப் பற்றி வேத இலக்கியத்திலிருந்து பிரம்மதேவர் கேள்விப்பட்டிருக்கிறார் என்பதால், நிலையான மனதுடன் வேத இலக்கியத்தால் எழுதப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனைகளை அவர் பகவானிடம் சமர்ப்பித்தார்.
பதம் 8.5.26
ஸ்ரீ-ப்ரஹ்மோவாச
அவிக்ரியம் ஸத்யம் அனந்தம் ஆத்யம்
குஹா-சயம் நிஷ்கலம் அப்ரதர்க்யம்
மனோ ‘க்ரயானம் வசஸானிருக்தம்
நமாமஹே தேவ-வரம் வரேண்யம்
ஸ்ரீ-ப்ரஹ்மா உவாச—பிரம்மதேவர் கூறினார்; அவிக்ரியம்—என்றும் மாறாதவரான முழுமுதற் கடவுளுக்கு (பௌதிக இருப்பைப் போல் அல்லாமல்); ஸத்யம்—நித்தியமான பரம சத்தியம்; அனந்தம்—எல்லையற்ற; ஆத்யம்—எல்லா காரணங்களுக்கும் மூல காரணம்; குஹா-சயம்—எல்லோருடைய இதயங்களிலும் இருக்கும்; நிஷ்கலம்—சக்தியில் எந்த குறைவும் இல்லாதவர்; அப்ரதர்க்யம்—கற்பனைக்கு எட்டாதவர், பௌதிக தர்க்கத்தின் எல்லைக்கு உட்படாதவர்; மன:-அக்ரயானம்—மனதைக் காட்டிலும் விரைவானவர், மனக்கற்பனைக்கு எட்டாதவர்; வசஸா—வார்த்தை ஜாலங்களால்; அனிக்ருதம்—விவரிக்க முடியாதவர்; நமாமஹே—தேவர்களாகிய நாங்கள் அனைவரும் எங்களது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறோம்; தேவ-வரம்—தமக்குச் சமமானவரோ அல்லது தம்மைவிட உயர்ந்தவரோ இல்லாத பரம புருஷருக்கு; வரேண்யம்—காயத்திரி மந்திரத்தால் வழிப்படப்படுபவரான, பரம வழிபாட்டுக்குரியவர்.
பிரம்மதேவர் கூறினார்: பரமபுருஷரே, மாற்றமில்லாத, எல்லையற்ற பரம சத்தியமே, நீரே அனைத்திற்கும் மூல காரணமாவீர். நீர் சர்வ வியாபகம் உடையவராதலால், அனைவரின் இதயத்திலும், அணுவிலும் கூட நீர் இருக்கிறீர். உம்மிடம் எவ்வித பெளதிக குணங்களும் இல்லை. உண்மையில், நீர் கற்பனைக்கு எட்டாதவராவீர். மனக் கற்பனையால் உம்மைக் கைப்பற்ற முடியாது. மேலும் வார்த்தைகளால் உம்மை விவரிக்க இயலவில்லை. நீரே அனைவருக்கும் பரம எஜமானராவீர். ஆகவே அனைவராலும் நீர் வழிபடத் தகுந்தவராவீர். எங்களுடைய பணிவான வணக்கங்களை நாங்கள் உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.
பதம் 8.5.27
விபஸ்சிதம் ப்ராண-மனோ தியாத்மனாம்
அர்த்தேந்ரியாபாஸம் அனித்ரம் அவ்ரணம்
சாயாதபௌ யத்ர ந க்ருத்ர-பக்ஷெள
தம் அக்ஷரம் கம் த்ரி-யுகம் வ்ரஜாமஹே
விபஸ்சிதம்—எல்லாம் அறிந்தவருக்கு; ப்ராண—எவ்வாறு ஜீவசக்தி செயற்படுகின்றது; மன—மனம் எவ்வாறு செயற்படுகிறது; திய—புத்தி எவ்வாறு; ஆத்மனாம்—அனைத்து ஜீவராசிகளின்; அர்த்த—புலன் பொருட்கள்; இந்ரிய—புலன்கள்; ஆபாஸம்—அறிவு; அனித்ரம்—எப்பொழுதும் அறியாமையில் இருந்து விடுபட்டு, விழிப்புடன் இருக்கும்; அவ்ரணம்—இன்ப துன்பங்களுக்கு உட்பட்டதொரு ஜட உடலைக் கொண்டிருக்காத; சாயா-ஆதபௌ—அறியாமையால் துன்புறுபவர்கள் அனைவருக்கும் புகலிடம் அளிப்பவர்; யத்ர—எங்கு; ந—இல்லை; க்ருத்ர-பக்ஷெள—எந்த ஜீவனிடத்திலும் பாராபட்சம்; தம்—அவருக்கு; அக்ஷரம்—தவறாக; கம்—ஆகாயத்தைப் போல் சர்வ வியாபகமுடைய; த்ரி-யுகம்—மூன்று யுகங்களில் (சத்திய, திரேதா மற்றும் துவாபர) ஆறு ஐசுவரியங்களுடன் தோன்றும்; வ்ரஜாமஹே—நான் புகலிடம் கொள்கிறேன்.
ஜீவ சக்தி, மனம் மற்றும் புத்தி ஆகியவை உட்பட அனைத்தும் எப்படி முழுமுதற் கடவுளுடைய கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகின்றன. என்பதை நேராகவும், மறைமுகமாகவும் அவர் அறிவார். அவரே அனைத்திற்கும் ஒளியூட்டுபவர். அவரிடம் அறியாமை இல்லை. முற்கருமங்களின் விளைவுகளுக்கு உட்பட்டுள்ள ஒரு ஜட உடல் அவருக்குக் கிடையாது. மேலும் அவர் பாரபட்சம் மற்றும் பெளதிக கல்வி ஆகியவற்றின் அறியாமையிலிருந்து விடுபட்டவராவார். ஆகவே நித்தியமானவரும், சர்வ வியாபகம் உடையவரும், ஆகாயத்தைப் போல் மிகப் பெரியவரும், மூன்று யுகங்களில் (சத்திய, திரேதா மற்றும் துவாபர ஆறு ஐசுவரியங்களுடன் தோன்றுபவருமான பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் நான் புகலிடம் கொள்கிறேன்.
பதம் 8.5.28
அஜஸ்ய சக்ரம் து அஜயேர்யமாணம்
மனோமயம் பஞ்சதசாரம் ஆசு
த்ரி-நாபி வித்யுச்-சலம் அஷ்ட-நேமி
யத்-அக்ஷம் ஆஹுஸ் தம் ருதம் பிரபத்யே
அஜஸ்ய—ஜீவராசியின்; சக்ரம்—சக்கரம் (இந்த ஜட உலகிலுள்ள பிறப்பு, இறப்பெனும் சக்கரம்); து—ஆனால்; அஜயா—பரமபுருஷரின் பகிரங்க சக்தியால்; ஈர்யமாணம்—பெரும் சக்தியுடன் சுழலும்; மன:-மயம்—அது முக்கியமாக மனதையே நம்பியுள்ள ஒரு மனோபடைப்பேயன்றி வேறில்லை; பஞ்சதச—பதினைந்து; அரம்—ஆரைக் கால்களைக் கொண்ட; ஆசு—மிக விரைவாக; த்ரி-நாபி—மூன்று (சக்கரத்தின்) குடங்களைக் கொண்ட (ஜட இயற்கையின் முக்குணங்கள்); வித்யுத்—மின்சாரத்தைப் போன்று; சலம்—அசையும்; அஷ்ட-நேமி—எட்டு விளிம்புகளால் ஆன (பகவானின் எட்டு பகிரங்க சக்திகள்-பூமிர் அபோ நலோ வாயு: முதலியவை); யத்—யார்; அக்ஷம்—சக்கரத்தின் குடம்; ஆஹு:—அவர்கள் கூறுகின்றனர்; தம்—அவருக்கு; ருதம்—உண்மை; ப்ரபத்யே—நமது பணிவான வணக்கங்களை சமர்ப்பிப்போமாக.
ஜடச் செயல்களெனும் சுழற்சியில் பௌதிக உடலானது ஒரு மனோரதத்தின் சக்கரத்தை ஒத்திருக்கிறது. பத்து புலன்களும் (ஐந்து செயற்படுவதற்கும், ஐந்து அறிவைத் திரட்டுவதற்கும்), உடலினுள் உள்ள ஐந்து உயிர்க்காற்றுகளும், இரதத்தினுடைய சக்கரத்தின் பதினைந்து ஆரைக்கால்களாக அமைகின்றன. இயற்கையின் முக்குணங்கள் (நற்குணம், தீவிர குணம், மற்றும் அறியாமைக் குணம்) அதனுடைய செயல்களின் மையமாகும். மேலும் இயற்கையின் எட்டு மூலப்பொருட்கள் (பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் பொய் அகங்காரம்) சக்கரத்தின் சுற்றளவை உள்ளடக்கியுள்ளன. பகிரங்கமான, ஜட சக்தி இச்சக்கரத்தை மின் சக்தியைப் போல் அசையச் செய்கின்றது. இவ்வாறாக, சக்கரமானது, அதன் குடம் அல்லது மையத்திலுள்ள தாங்கியாகிய முழுமுதற் கடவுளைச் சுற்றி வெகுவிரைவாக சுழல்கின்றது. இந்த முழுமுதற் கடவுளே பரமாத்மாவும், பரமசத்தியமும் ஆவார். அவருக்கு நமது பணிவான வணக்கங்களை நாம் சமர்ப்பிப்போமாக.
பதம் 8.5.29
ய ஏக-வர்ணம் தமஸ: பரம் தத்
அலோகம் அவ்யக்தம் அனந்த-பாரம்
ஆஸாம் சகாரோபஸுபர்ணம் ஏனம்
உபாஸதே யோக-ரதேன தீரா:
ய:—அந்த முழுமுதற் கடவுள்; ஏக-வர்ணம்—பரிபூரணமான, தூய நற்குணத்தில் அமைந்துள்ள; தமஸ:—ஜட உலக இருளுக்கு; பரம்—மேற்பட்டவர்; தத்—அந்த; அலோகம்—காணப்பட முடியாதவர்; அவ்யக்தம்—தோன்றாத; அனந்த-பாரம்—எல்லையற்ற, பெளதிகமான காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் அளவுக்கு அப்பாற்பட்ட; ஆஸாம் சகார—அமைந்துள்ள; உப-ஸுபர்ணம்—கருடனின் மீது; ஏனம்—அவரை; உபாஸதே—வழிபடப்படுகிறார்; யோக-ரதேன— அஷ்டாங்க யோகமெனும் வாகனத்தினால்; தீரா:—பௌதிக குழப்பங்களால் குழப்பமடையாமல் நிதானமாக இருப்பவர்கள்.
முழுமுதற் கடவுள் தூய நற்குணத்தில் (சுத்த-ஸத்வ) இருக்கின்றார். ஆகவே அவர் ஏக-வர்ணமெனும் ஓம்காரமாவார் (ப்ரணவம்). இருளெனக் கருதப்படும் பிரபஞ்ச தோற்றத்திற்கு பகவான் அப்பாற்பட்டவர் என்பதால், ஜடக் கண்களுக்கு அவர் புலப்படாதவராவார். ஆயினும் காலத்தாலோ அல்லது இடத்தாலோ அவர் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடவில்லை. ஆனால் எங்கும் பரவியவராக இருக்கின்றார். கருட வாகனத்தில் மீது அமர்ந்துள்ள அவர், அற்புத யோக சக்தியின் வாயிலாக, சலனத்திலிருந்து விடுதலை அடைந்தவர்களால் வழிபடப்படுகிறார். நாமனைவரும் அவருக்கு நமது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிப்போமாக.
பதம் 8.5.30
ந யஸ்ய கஸ்சாதிதிதர்தி மாயாம்
யயா ஜனோ முஹ்யதி வேத நார்த்தம்
தம் நிர்ஜிதாத்மாத்ம-குணம் பரேசம்
நமாம புதேஷு ஸமம் சரந்தம்
ந—இல்லை; யஸ்ய—யாரைப் பற்றி (முழுமுதற் கடவுள்); கஸ்ச—யாரேனும்; அதிதிதர்தி—வெற்றிகொள்ள முடிந்தது; மாயாம்—மாயச் சக்தி; யயா—எவரால் (மாயச் சக்தியால்); ஜன:—பொது மக்கள்; முஹ்யதி—குழப்பமடைந்து; வேத—புரிந்துகொள்ளும்; ந—இல்லை; அர்தம்—வாழ்வின் நோக்கம்; தம்—அவரிடம் (முழுமுதற் கடவுள்); நிர்ஜித—முற்றிலும் கட்டுப்படுத்தும்; ஆத்மா—ஜீவராசிகள்; ஆத்ம-குணம்—மற்றும் அவரது பகிரங்க சக்தி; பர-ஈசம்—தெய்வீக நிலையில் உள்ளவரான, இறைவன்; நமாம—எங்களது பணிவான வணக்கங்களை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்; பூதேஷு—அனைத்து ஜீவராசிகளிடமும்; ஸமம்—சம நிலையிலுள்ள; சரந்தம்—அவர்களைக் கட்டுப்படுத்தும் அல்லது ஆளும்.
முழுமுதற் கடவுளின் மாயா-சக்தியை ஒருவராலும் வெல்ல முடியாது. இது மிகவும் வலிமைமிக்கதாக இருப்பதால், இது ஒருவனை வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் அறிவை இழக்கச் செய்து, ஒவ்வொருவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆயினும், அதே மாயை, அனைவரையும் ஆள்பவரும், அனைத்து ஜீவராசிகளிடமும் சமமனப்பாங்கு கொண்டவருமான முழுமுதற் கடவுளால் அடக்கி ஆளப்படுகிறது. அவருக்கு நமது வணக்கங்களை சமர்ப்பிப்போமாக.
பதம் 8.5.31
இமே வயம் யத்-ப்ரியயைவ தன்வா
ஸத்வேன ஸ்ருஷ்டா பஹிர்-அந்தர்-ஆவி:
கதிம் ந ஸூக்ஷ்மாம் ரிஷயஸ் ச வித்மஹே
குதோ ‘ஸுராத்யா இதர-ப்ரதானா:
இமே—இந்த; வயம்—நாங்கள் (தேவர்கள்); யத்—யாரிடம்; ப்ரியயா—மிகவும் நெருக்கமாகவும், பிரியமாகவும் காணப்படும்; ஏவ—நிச்சயமாக; தன்வா—ஜட உடல்; ஸத்வேன—நற்குணத்தினால்; ஸ்ருஷ்டா:—படைக்கப்பட்ட; பஹி:-அந்த:-ஆவி:—உள்ளும், புறமும் முழுமையான விழிப்பு நிலையில் இருப்பினும்; கதிம்—இலக்கு; ந—இல்லை; ஸூக்ஷ்மாம்—மிகவும் சூட்சுமமான; ரிஷய:—பெரும் முனிவர்கள்; ச—தவிரவும்; வித்மஹே—புரிந்து கொள்ள; குத:—எப்படி; அஸுர-ஆத்யா:—அசுரர்களும், நாஸ்திகர்களும்; இதர—மிகவும் அற்பமானவர்களாக இருப்பவர்கள்; ப்ரதானா:—அவர்கள் தங்களின் சொந்த சமூகப் பிரிவுகளுக்குத் தலைவர்களாக இருப்பினும்.
எங்களது உடல்கள் நற்குணத்தினால் ஆனவை என்பதால் தேவர்களாகிய நாங்கள் ஸத்வ குணத்தில் இருக்கிறோம். சிறந்த முனிவர்களும் கூட அதே நிலையில்தான் இருக்கின்றனர். எனவே, எங்களாலேயே முழுமுதற் கடவுளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், தீவிர மற்றும் அறியாமைக் குணங்களால் இருப்பதால், தங்களது தேக அமைப்பில் மிகவும் அற்பமானவர்களாக இருப்பவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது? அவர்களால் பகவானை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? நமது பணிவான வணக்கங்களை அவருக்குச் சமர்ப்பிப்போமாக.
பதம் 8.5.32
பாதௌ மஹீயம் ஸ்வ-க்ருதைவ யஸ்ய
சதுர்-விதோ யத்ர ஹி பூத-ஸர்க:
ஸ வை மஹா-பூருஷ ஆத்ம-தந்த்ர:
ப்ரஸீததாம் ப்ரஹ்ம மஹா-விபூதி:
பாதௌ—அவரது தாமரைப் பாதங்கள்; மஹீ—பூமி; இயம்—இந்த; ஸ்வ-க்ருத—அவராலேயே படைக்கப்பட்ட; ஏவ—நிஜமாக; யஸ்ய—யாருடைய; சது:-வித:—நான்கு வகையான ஜீவராசிகளின்; யத்ர—எங்கு; ஹி—உண்மையில்; பூத-ஸர்க:—ஜட சிருஷ்டி; ஸ:—அவர்; வை—உண்மையில்; மஹா-பூருஷ:—பரம புருஷர்; ஆத்ம-தந்த்ர:—சுய பூர்த்தியடைய; ப்ரஸீததாம்—நம்மீது அவர் கருணை கொள்வாராக; ப்ரஹ்ம—மிகப் பெரியது; மஹா-விபூதி:—எல்லையற்ற ஆற்றலுடன்.
இப்பூமியில் நான்கு வகையான ஜீவராசிகள் உள்ளன. இவையனைத்தும் அவராலேயே படைக்கப்பட்டவை ஆகும். ஜட சிருஷ்டி அவரது தாமரைப் பாதங்களின் மீது அமைந்திருக்கிறது. அவரே பூரண செல்வமும், சக்தியும் படைத்த மிகச்சிறந்த பரம புருஷராவார். எங்கள் மீது அவர் திருப்தி கொள்வாராக.
பதம் 8.5.33
அம்பஸ் து யத்-ரேத உதார-வீர்யம்
ஸித்யந்தி ஜீவந்தி உத வர்தமானா:
லோகா யதோ ‘தாகில-லோக-பாலா:
ப்ரஸீததாம் ந: ஸ மஹா-விபூதி:
அம்ப:—இவ்வுலகிலோ அல்லது பிறவற்றிலோ காணப்படும் பெரும் பரப்பளவைக் கொண்ட நீர்; து—ஆனால்; யத்-ரேத:—அவரது விந்து; உதார-வீர்யம்—மிகவும் சக்திவாய்ந்த; ஸித்யந்தி—உற்பத்தி செய்யப்படுகின்றன; ஜீவந்தி—வாழ்கின்றன; உத—உண்மையில்; வர்தமானா:—செழிப்படைகின்றன; லோகா:—மூவுலகங்களும்; யத:—எதிலிருந்து; அத—கூட; அகில-லோக-பாலா:—பிரபஞ்சம் முழுவதிலுள்ள அனைத்து தேவர்களும்; ப்ரஸீததாம்—திருப்தியடைவாராக; ந:—எங்கள் மீது; ஸ:—அவர்; மஹா-விபூதி:—அளவற்ற ஆற்றல் கொண்டவர்.
பிரபஞ்ச தோற்றம் முழுவதுமே நீரிலிருந்து வெளிவந்ததாகும். நீரால் தான் அனைத்து ஜீவராசிகளும் நீடித்திருக்கின்றன, வாழ்கின்றன மற்றும் விருத்தியடைகின்றன. இந்நீர் முழுமுதற் கடவுளின் விந்துவைத் தவிர வேறொன்றுமில்லை. ஆகவே அத்தகைய பெரும் ஆற்றலைக் கொண்ட முழுமுதற் கடவுள் எங்களிடம் திருப்தி அடைவாராக.
பதம் 8.5.34
யோமம் மனோ யஸ்ய ஸமாமனந்தி
திவௌகஸாம் யோ பலம் அந்த ஆயு:
ஈசோ நகானாம் ப்ரஜன: ப்ரஜானாம்
ப்ரஸீததாம் ந: ஸ மஹா-விபூதி:
ஸோமம்—சந்திரன்; மன—மனம்; யஸ்ய—எவரின் (முழுமுதற் கடவுளின்); ஸமாமனந்தி—அவர்கள் கூறுகின்றனர்; திவெளகஸாம்—உயர் கிரகவாசிகளின்; ய:—யார்; பலம்—பலம்; அந்த:—உணவுத் தானியங்கள்; ஆயு:—வாழ்நாள்; ஈச—பரமபுருஷர்; நகானாம்—மரங்களின்; ப்ரஜன:—உற்பத்தி ஸதானம்; ப்ரஜானாம்—அனைத்து ஜீவராசிகளின்; ப்ரஸீததாம்—அவர் திருப்தியடைவாராக; ந:—எங்கள் மீது; ஸ:—அந்த முழுமுதற் கடவுள்; மஹா-விபூதி:—அனைத்து ஐசுவரியங்களுக்கும் பிறப்பிடமான.
ஸோமன் எனப்படும் சந்திரனே அனைத்து தேவர்களுக்கும் உரிய உணவுத் தானியங்கள், பலம் மற்றும் ஆயுள் ஆகியவற்றின் பிறப்பிடமாவார். அவரே எல்லாத் தாவர வகைகளுக்கும் எஜமானரும், அனைத்து ஜீவராசிகளின் உற்பத்தி ஸ்தானமும் ஆவார். வேத பண்டிதர்களால் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், சந்திரன் முழுமுதற் கடவுளின் மனமாவார். எல்லா ஐசுவரியங்களுக்கும் மூலமாக அந்த பரமபுருஷர் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.35
அக்னிர் முகம் யஸ்ய து ஜாத-வேதா
ஜாத: க்ரியா-காண்ட-நிமித்த-ஜன்மா
அந்த:—ஸமுத்ரே ‘நுபசன் ஸ்வ-தாதூன்
ப்ரஸீததாம் ந: ஸ மஹ-விபூதி:
அக்னி:—நெருப்பு; முகம்—எதன் மூலமாக முழுமுதற் கடவுள் உண்கிறாரோ அந்த வாய்; யஸ்ய—யாருடைய; து—ஆனால்; ஜாத-வேதா:—செல்வத்தை அல்லது வாழ்வின் எல்லாத் தேவைகளையும் உண்டாக்குபவர்; ஜாத:—உண்டாக்கப்படும்; க்ரியா-காண்ட—சடங்குகள்; நிமித்த—என்பதற்காக; ஜன்மா—இக்காரணத்திற்காக ஏற்படுத்தப்பட்டது; அந்த:-ஸமுத்ரே—கடலுக்கடியில்; அனுபசன்—எப்பொழுதும் ஜீரணிக்கும்; ஸ்வ-தாதூன்—எல்லா மூலப்பொருட்களும்; ப்ரஸீததாம்—திருப்தி அடைவாராக; ந:—எங்கள் மீது; ஸ:—அவர்; மஹா-விபூதி:—மகா சக்தி படைத்த.
யாகச் சடங்குகளில் நிவேதனங்களை ஏற்றுக் கொள்வதற்காகப் பிறந்த நெருப்பு, முழுமுதற் கடவுளின் வாயாகும். செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக கடலுக்கடியில் நெருப்பு இருக்கிறது. உணவை ஜீரணிக்கச் செய்யவும், உடலின் பராமரிப்பிற்குரிய அநேக அமிலங்களை உற்பத்தி செய்யவும், வயிற்றிலும் நெருப்பு இருக்கிறது. பரம சக்தி வாய்ந்தவரான அப்பரம புருஷர் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.36
யச்-சக்ஷுர் ஆஸீத் தரணிர் தேவ-யானம்
த்ரயீமயோ ப்ரஹ்மண ஏஷ திஷ்ண்யம்
த்வாரம் ச முக்தேர் அம்ருதம் ச ம்ருத்யு:
ப்ரஸீததாம் ந: ஸ மஹா-விபூதி:
யத்—எது; சக்ஷு:—கண்; ஆஸீத்—ஆகியது; தரணி:—சூரிய தேவன்; தேவ-யானம்—தேவர்களின் விடுதலைப் பாதைக்குரிய அதிதேவதை; த்ரயீ-மய:—வேத அறிவின் கர்ம-காண்டப்பகுதியில் வழிகாட்டுவதற்காக; ப்ரஹ்மண:—பரம சத்தியத்தின்; ஏஷ:—இந்த; திஷ்ண்யம்—தன்னுணர்வுக்குரிய இடம்; த்வாரம் ச—அத்துடன் வாயிலாகவும்; முக்தே:—முக்திக்கான; அம்ருதம்—நித்திய வாழ்வுக்குரிய வழி; ச—அத்துடன்; ம்ருத்யு:—மரணத்திற்கான காரணம்; ப்ரஸீததாம்—அவர் திருப்தியடைவாராக; ந:—எங்கள் மீது; ஸ:—அந்த முழுமுதற் கடவுள்; மஹா-விபூதி:—சர்வ சக்தி படைத்தவரான.
அர்சிராதி-வர்த்ம என்றழைக்கப்படும் முக்தி மார்க்கத்தை சூரிய தேவனே கவனிக்கிறார். அவரே வேதங்களை அறிவதற்குரிய முக்கியமான மூலமாவார். பரம சத்தியத்தை வழிபடுவதற்குரிய இடமாக இருப்பவரும் அவரே. அவரே முக்திக்குரிய வாயிலாக இருக்கிறார். மேலும் அவரே நித்திய வாழ்வுக்குரிய மூலமாகவும், மரணத்திற்குரிய காரணமாகவும் இருக்கிறார். சூரிய தேவன் பகவானின் கண்ணாவார். பரம ஐசுவரியங்களைக் கொண்டவரான அந்த பரமபுருஷர் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.37
ப்ராணாத் ஆபூத் யஸ்ய சராசராணாம்
ப்ராண: ஸஹோ பலம் ஒஜஸ் ச வாயு:
அன்வாஸ்ம ஸம்ராஜம் இவானுகா வயம்
ப்ரஸீததாம் ந: ஸ மஹா-விபூதி:
ப்ராணாத்—ஜீவாதார சக்தியிலிருந்து; அபூத்—உற்பத்தி செய்யப்பட்ட; யஸ்ய—யாருடைய; சர-அசராணாம்—அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளின்; ப்ராண:—உயிர்ச்சக்தி; சஹ:—வாழ்வின் அடிப்படைக் கொள்கை; பலம்—பலம்: ஓஜ:—ஜீவாதாரா சக்தி; ச—மேலும்; வாயு:—காற்று; அன்வாஸ்ம—பின்தொடர்கிறோம்; ஸம்ராஜம்—சக்கரவர்த்தி ஒருவர்; இவ—போன்று; அனுகா:—பின்பற்றுபவர்கள்; வயம்—நாமனைவரும்; ப்ரஸீததாம்—திருப்தி அடைவாராக; ந:—எங்கள் மீது; ஸ:—அவர்; மஹா-விபூதி—மிகவும் சக்தி வாய்ந்த.
அசையும், அசையாத ஜீவராசிகள் அனைத்தும் தங்களின் ஜீவாதார சக்தி, தேக பலம் மற்றும் வாழ்வு ஆகியவற்றைக் காற்றிலிருந்து தான் பெறுகின்றன. ஒரு சக்கரவர்த்தியை சேவகர்கள் பின் தொடர்வதைப் போலவே, நாமெல்லோரும் நமது ஜீவாதார சக்திக்காக காற்றைப் பின்தொடர்கிறோம். முழுமுதற் கடவுளின் ஆதியான ஜீவாதார சக்தியிலிருந்துதான் காற்றின் ஜீவதார சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய பரமபுருஷர் நம்மிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.38
ஸ்தோத்ராத் திசோ யஸ்ய ஹ்ருதஸ் ச கானி
ப்ரஜக்ணிரே கம் புருஷஸ்ய நாப்யா:
ப்ராணேந்ரியாத்மாஸு-சரீர-கேத:
ப்ரஸீததாம் ந: ஸ மஹா-விபூதி:
ஸ்ரோத்ராத்—செவிகளில் இருந்து; திச:—வெவ்வேறு திசைகள்; யஸ்ய—எவரது; ஹ்ருத:—இதயத்திலிருந்து; ச—கூட; கானி—உடலின் துவாரங்கள்; ப்ரஜக்ஞிரே—உற்பத்தி செய்யப்படுகின்றன; கம்—ஆகாயம்: புருஷஸ்ய—பரமபுருஷரின்; நாப்யா:—நாபியில் இருந்து; பிராண—உயிர்ச்சக்தியின்; இந்ரிய—புலன்கள்; ஆத்மா—மனம்; ஆஸு—ஜீவாதார சக்தி; சரீர—உடலும்; கேத:—புகலிடம்; ப்ரஸீததாம்—திருப்தியடைவாராக; ந:—நம்மீது; ஸ:—அவர்; மஹா-விபூதி:—பரம சக்தி படைத்தவரான.
சர்வசக்தி படைத்தவரான முழுமுதற் கடவுள் நம்மீது திருப்தியடைவாராக. அவரது செவிகளிலிருந்து வெவ்வேறு திசைகள் உற்பத்தியாகின்றன. உடல் துவாரங்கள் அவரது இதயத்திலிருந்து வருகின்றன. மேலும் ஜீவாதார சக்தி, புலன்கள், மனம், உடலினுள் உள்ள காற்று மற்றும் உடலின் புகலிடமாகிய ஆகாயம் ஆகியவை அவரது நாபியிலிருந்து வருகின்றன.
பதம் 8.5.39
பலான் மஹேந்ரஸ் த்ரி-தசா: ப்ரஸாதான்
மன்யோர் கிரீசோ திஷணாத் விரிஞ்ச:
கேப்யஸ் து சந்தாம்ஸி ரிஷயோ மேட்ரத: க:
ப்ரஸீததாம் ந: ஸ மஹா-விபூதி:
பலாத்—அவரது சக்தியால்; மஹா-இந்ர:—இந்திர தேவன் உற்பத்தியானார்; த்ரி-தசா:—அத்துடன் தேவர்களும்; ப்ரஸாதாத்—திருப்தியால்; மன்யோ:—கோபத்தால்; கிரி-ஈச:—சிவபெருமான்; திஷணாத்—நிதான புத்தியிலிருந்து: விரிஞ்ச:—பிரம்மதேவர்; கேப்ய:—உடல் துவாரங்களிலிருந்து; து—மேலும்; சந்தாம்ஸி—வேத மந்திரங்கள்; ரிஷய:—சிறந்த புண்ணிய புருஷர்கள்; மேட்ரத:—புறப்பாலுறுப்புக்களில் இருந்து; க:—பிரஜாபதிகள்; ப்ரஸீததாம்—திருப்தியடைவாராக; ந:—எங்கள் மீது; ஸ:—அவர்; மஹா-விபூதி:—அசாதாரணமான சக்தி படைத்த முழுமுதற் கடவுள்.
சுவர்க்க ராஜனான மகேந்திரன் பகவானின் வீரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டார். தேவர்கள் பகவானின் கருணையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டனர். சிவபெருமான் பகவானின் கோபத்திலிருந்தும், பிரம்மதேவர் அவரது நிதான புத்தியிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்டனர். வேத மந்திரங்கள் பகவானுடைய உடல் துவாரங்களிலிருந்தும், மிகச்சிறந்த முனிவர்களும், பிரஜாபதிகளும் அவரது புறபாலுறுப்புகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்டனர். பரமசக்தி படைத்தவரான அந்த பகவான் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.40
ஸ்ரீர் வக்ஷஸ: பிதரஸ் சாயயாஸன்
தர்ம: ஸ்தனாத் இதர: ப்ருஷ்டதோ ‘பூத்
த்யௌர் யஸ்ய சீர்ஷ்ணோ ‘பஸ்ரஸோ விஹாராத்
ப்ரஸீததாம் ந: ஸ மஹா-விபூதி:
ஸ்ரீ:—லக்ஷ்மி தேவி; வக்ஷஸ:—அவரது மார்பிலிருந்து; பிதர:—பித்ருலோக வாசிகள்; சாயயா—அவரது நிழலிலிருந்து; ஆஸன்—சாத்தியமானது; தர்ம:—சமயக் கொள்கை; ஸ்தனாத்—அவரது நெஞ்சிலிருந்து; இதர:—அதர்மம்; ப்ருஷ்டத:—பின்புறத்திலிருந்து; அபூத்—சாத்தியமானது; த்யௌ:—சுவர்க்க லோகங்கள்; யஸ்ய—எவருடைய; சீர்ஷ்ண:—உச்சந்தலையிலிருந்து; அப்ஸரஸ:—அப்ஸார லோகவாசிகள்; விஹாராத்—புலன் நுகர்வால்; ப்ரஸீததாம்—அன்புடன் திருப்தி அடைவீராக; ந:—எங்களிடம்; ஸ:—அவர் (முழுமுதற் கடவுள்); மஹா-விபூதி:—அனைத்து வீர பராக்கிரமங்களிலும் மிகச் சிறந்தவரான.
அவரது மார்பிலிருந்து லக்ஷ்மி தேவி உற்பத்தி செய்யப்பட்டாள். அவரது நிழலிலிருந்து பித்ருலோக வாசிகளும், நெஞ்சிலிருந்து சமயமும், பின்புறத்திலிருந்து (சமயத்தின் எதிர்ப்புறம்) மத துவேஷமும் உற்பத்தி செய்யப்பட்டன. அவரது உச்சத்தலையிலிருந்து சுவர்க்க லோகங்களும், அவரது புலன் இன்பத்திலிருந்து அப்ஸராஸ்களும் உற்பத்தி செய்யப்பட்டனர். பரமசக்தி படைத்தவரான அந்த முழுமுதற் கடவுள் நம்மிடம் திருப்தியடைவராக.
பதம் 8.5.41
விப்ரோ முகாத் ப்ரஹ்ம ச யஸ்ய குஹ்யம்
ராஜன்ய ஆஸீத் புஜயோர் பலம் ச
ஊர்வோர் விட் ஓஜோ ‘ங்க்ரீர் அவேத சூத்ரௌ
ப்ரஸீததாம் ந: ஸ மஹா-விபூதி:
விப்ர:—பிராமணர்கள்: முகாத்—அவரது வாயிலிருந்து; ப்ரஹ்ம—தேவ இலக்கியங்கள்; ச—மேலும்; யஸ்ய—அவரது: குஷ்யம்—அவரது அந்தரங்க அறிவிலிருந்து; ராஜன்ய:—க்ஷத்திரியர்கள்; ஆஸீத்—சாத்தியமாயினர்; புஜயோ:—அவரது கைகளிலிருந்து; பலம் ச—மேலும் உடல் பலம்; ஊர்வோ:—தொடைகளில் இருந்து; விட்—வைசியர்கள்; ஓஜ:—மற்றும் அவர்களின் திறமையான உற்பத்தி செய்யும் அறிவும்; அங்ரி:—அவரது பாதங்களிலிருந்து; அவேத—வேத அறிவின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களான; சூத்ரௌ—தொழிலாளர் வகுப்பினர்; ப்ரஸீததாம்—திருப்தியடைவராக; ந:—எங்கள் மீது; ஸ:—அவர்; மஹா-விபூதி:—பரம சக்தி படைத்தவரான முழுமுதற் கடவுள்.
வேத அறிவும், பிராமணர்களும் முழுமுதற் கடவுளின் வாயிலிருந்து வருகின்றனர். க்ஷத்திரியர்களும், தேக பலமும் அவரது கைகளிலிருந்து வருகின்றன. வைசியர்களும், உற்பத்தி, செல்வம் ஆகியவற்றிலுள்ள அவர்களது திறமைவாய்ந்த அறிவும் அவரது தொடைகளிலிருந்து வருகின்றன. மேலும் வேத அறிவிற்கு வெளியிலுள்ள சூத்திரர்கள் அவரது பாதங்களிலிருந்து வருகின்றனர். பூரண சக்தி படைத்தவரான அந்த முழுமுதற் கடவுள் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.42
லோபோ ‘தராத் ப்ரீதிர் உபரி அபூத் த்யுதிர்
நஸ்த: பசவ்ய: ஸ்பர்சேன காம:
ப்ருவோர் யம: பக்ஷ்ம-பவஸ் து கால:
ப்ரஸீததாம் ந: ஸ மஹா-விபூதி:
லோப:—பேராசை; அதராத்—கீழ் உதட்டிலிருந்து; ப்ரீத:—அன்பு; உபரி—மேல் உதட்டிலிருந்து; அபூத்—சாத்தியமானது; த்யுதி—தேகத்தின் ஒளி; நஸ்த:—மூக்கிலிருந்து; பசவ்ய:—மிருகத்தனமான; ஸ்பர்சேன—ஸ்பரிசத்தால்; காம:—காம ஆசைகள்; ப்ருவோ:—புருவங்களிலிருந்து; யம—யமராஜன் தோன்றினார்; பக்ஷ்ம-பவ:—கண் இமையின் மயிர்களிலிருந்து; து—ஆனால்; கால:—மரணத்தை உண்டாக்கும் நித்திய காலம்; ப்ரஸீததாம்—திருப்தியடைவாராக; ந:—எங்கள் மீது; ஸ:—அவர்; மஹா-விபூதி:—மகா சக்தி படைத்த முழுமுதற் கடவுள்.
பேராசை அவரது கீழுதட்டில் இருந்தும், அன்பு அவரது மேலுதட்டில் இருந்தும், தேகத்தின் ஒளி அவரது மூக்கிலிருந்தும், மிருகத்தனமான காம ஆசைகள் அவரது ஸ்பரிச உணர்விலிருந்தும், யமராஜர் அவரது புருவங்களிலிருந்தும், மற்றும் நித்திய காலம் அவரது கண் இமைகளின் மயிரிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்டன. அந்த பரமபுருஷர் எங்களிடம் திருப்தியடைவாராக.
பதம் 8.5.43
த்ரவ்யம் வய: கர்ம குணான் விசேஷம்
யத்-யோகமாயா-விஹிதான் வதந்தி
யத் துர்விபாவ்யம் ப்ரபுதாபபாதம்
ப்ரஸீததாம் ந: ஸ மஹா-விபூதி:
த்ரவ்யம்—ஜட உலகின் பஞ்ச பூதங்கள்; வய:—காலம்; கர்ம—பலன் நோக்குக் கருமங்கள்; குணான்—ஜட இயற்கையின் முக்குணங்கள்; விசேஷம்—இருபத்துமூன்று மூலப் பொருட்களின் கலப்பினால் விளைந்த பலவகைப் பொருட்களின் தொகுதி; யத்—எது; யோக-மாயா—பகவானின் படைப்புச்சக்தியால்; விஹிதான்—அனைத்தும் செய்யப்படுகின்றன; வதந்தி—கற்றவர்கள் கூறுகின்றனர்; யத் துர்விபாவ்யம்—அறிந்து கொள்வதற்கு உண்மையில் மிகமிக கடினமானதான; ப்ரபுத-அபபாதம்—நன்கு அறிந்துள்ள சான்றோரால் நீக்கப்பட்டுள்ளது; ப்ரஸீததாம்—திருப்தி அடைவாராக; ந:—எங்கள் மீது; ஸ:—அவர்; மஹா-விபூதி:—அனைத்தையும் ஆள்பவரான.
பஞ்ச பூதங்கள், நித்திய காலம், பலன் நோக்குக் கருமம். ஜட இயற்கையின் முக்குணங்கள், மற்றும் இக்குணங்களால் செய்யப்பட்ட பலவகைப்பட்ட பொருட்களின் தொகுதி ஆகிய அனைத்தும் யோக மாயையினால் உற்பத்தி செய்யப்பட்டவை என்று கற்றோர் கூறுகின்றனர். ஆகவே இந்த ஜட உலகைப் புரிந்து கொள்வது மிகமிகக் கடினமாகும். ஆனால் நன்கு கற்றறிந்தவர்கள் இந்த ஜடஉலகை ஏற்க மறுத்துள்ளனர். எனவே அனைத்தையும் ஆள்பவரான பரமபுருஷ பகவான் எங்களிடம் திருப்தி அடைவாராக.
பதம் 8.5.44
நமோ ‘ஸ்து தஸ்மா உபசாந்த-சக்தயே
ஸ்வாராஜ்ய-லாப-ப்ரதிபூரிதாத்மனே
குணேஷு மாயா-ரசிதேஷு வ்ருத்திபிர்
ந ஸஜ்ஜமானாய நபஸ்வத்-ஊதயே
நம:—நமது பணிவான வணக்கங்கள்; அஸ்து—உரியதாகட்டும்; தஸ்மை—அவருக்கு; உபசாந்த-சக்தயே—வேறெதையும் அடைய முயலாதவர், அமைதியற்ற நிலையிலிருந்து விடுபட்டிருப்பவர்; ஸ்வராஜ்ய—முற்றிலும் சுதந்திரமானவர்; லாப—அனைத்து இலாபங்களையும்; ப்ரதிபூரித-பூரணமாக அடைந்துள்ளவர்; ஆத்மனே—பரமபுருஷ பகவானுக்கு; குணேஷு—இயற்கையின் முக்குணங்களின் காரணத்தால் அசையும் ஜட உலகின்; மாயா-ரசிதேஷு—பகிரங்க சக்தியால் படைக்கப்பட்ட பொருட்கள்; வ்ருத்திபி—புலன்களின் இத்தகைய செயல்களால்; ந ஸஜ்ஜமானாய—பந்தப்பட்டுவிடாதவர். அல்லது பெளதிக இன்ப துன்பங்களுக்கு மேற்பட்டவர்; நபஸ்வத்—காற்று; ஊதயே—தமது திருவிளையாடலாக இவ்வுலகைப் படைத்துள்ள பகவானுக்கு.
முழுமுதற்க் கடவுள் முற்றிலும் அமைதியானவரும், தீவிர முயற்சியற்றவரும், தமது சுய சாதனைகளில் பூரண திருப்தி கொண்டவருமாவார். தமது புலன்களின் வாயிலாக ஜட உலகச் செயல்களில் அவர் பற்றுக் கொண்டவர் அல்லர். உண்மையில், இந்த ஜட உலகில் பற்றில்லாத காற்றைப் போல் இருந்து கொண்டு அவர் தமது திருவிளையாடல்களை நிகழ்த்துகிறார். அவருக்கு நமது பணிவான வணக்கங்களை நாம் சமர்ப்பிப்போமாக.
பதம் 8.5.45
ஸ த்வம் நோ தர்சயாத்மானம் அஸ்மத்-கரண-கோசரம்
ப்ரபன்னானாம் தித்ருக்ஷூணாம் ஸஸ்மிதம் தே முகாம்புஜம்
ஸ:—அவர் (பரமபுருஷ பகவான்); த்வம்—நீரே எங்களது பகவான்; ந:—எங்களுக்கு; தர்சய—காட்சியளிப்பீராக; ஆத்மானம்—உமது சுய உருவில்; அஸ்மத்-கரண-கோசரம்—எங்களது நேரடியான புலன்களால், குறிப்பாக எங்களுடைய கண்களால் மெச்சத்தக்கவாறு; ப்ரபன்னானாம்—நாங்கள் அனைவரும் உம்மிடம் சரணடைந்துள்ளோம்; தித்ருக்ஷூணாம்—இருப்பினும் உம்மைக்காண நாங்கள் விரும்புகிறோம்; ஸஸ்மிதம்—புன்னகை பூத்த; தே—உமது; முக-அம்புஜம்—தாமரை போன்ற முகத்தை.
பரமபுருஷ பகவானே, நாங்கள் உம்மிடம் சரணாகதி அடைந்துள்ளோம். இருப்பினும் உம்மைக் காண நாங்கள் ஆசைப்படுகிறோம். தயவுசெய்து உமது சுய உருவையும், புன்னகை பூத்த தாமரை முகத்தையும் எங்களுடைய கண்களுக்குக் காட்டியருளி, அவற்றை எங்களது பிற புலன்களால் அறிந்து கொள்ளச் செய்ய வேண்டுகிறோம்.
பதம் 8.5.46
தைஸ் தை: ஸ்வேச்சா-பூதை ரூபை: காலே காலே ஸ்வயம் விபோ
கர்ம துர்விஷஹம் யன் நோ பகவாம்ஸ் தத் கரோதி ஹி
தை:—அத்தகைய தோற்றங்களால்; தை:—அத்தகைய அவதாரங்களால்; ஸ்வ-இச்சா-பூதை:—உமது சுய விருப்பத்தினால் தோன்றும்; ரூபை:—நிஜ ரூபங்களால்; காலே காலே—வெவ்வேறு யுகங்களில்; ஸ்வயம்—சுயமாக; விபோ—பரமனே; கர்ம—செயல்கள்; துர்விஷஹம்—அசாதாரணமான (வேறு எவராலும் செய்து காட்ட முடியாத); யத்—எது; ந:—எங்களுக்கு; பகவான்—பரமபுருஷ பகவான்; தத்—அந்த; கரேதி—நிறைவேற்றுகிறார்; ஹி—உண்மையில்
எம்பெருமானே, முழுமுதற் கடவுளே, நீர் தன்னிச்சையாக பல்வேறு அவதாரங்களில் யுகந்தோறும் தோன்றுகிறீர். மேலும், எங்களுக்குச் சாத்தியமில்லாத அசாதாரணமான செயல்களை இயற்றி, அற்புதமாக செயற்படுகின்றீர்.
பதம் 8.5.47
க்லேச-பூரி-அல்ப-ஸாராணி கர்மாணி விபலானி வா
தேஹினாம் விஷயார்த்தானாம் ந ததைவார்பிதம் த்வயி
க்லேச—கஷ்டம்; பூரி—மிகவும் அதிகமான; அல்ப—மிகக் குறைந்த; ஸாராணி—நல்ல பலன்; கர்மாணி—செயல்கள்; விபலானி—ஏமாற்றம்; வா—இரண்டிலொன்று; தேஹினாம்—நபர்களின்; விஷய-அர்தானாம்—ஜட உலகை அனுபவிக்க ஆவல் கொண்டவர்கள்; ந—இல்லை; ததா—அவ்வாறு; ஏவ—உண்மையில்; அர்பிதம்—அர்ப்பணம் செய்துள்ளனர்; த்வயி—தங்களுக்கு.
கருமிகள் தங்கள் புலன் நுகர்வுக்குரிய செல்வத்தைத் திரட்டுவதிலேயே எப்பொழும் கவலை கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் அவர்கள் கடுமையாக உழைத்தாலும் பலன்கள் திருப்தி அளிப்பவையாக இல்லை. உண்மையில், சிலசமயங்களில் அவர்களுடைய வேலை ஏமாற்றத்தை மட்டுமே அளிக்கிறது. ஆனால் பகவானின் தொண்டிற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பக்தர்கள் கடினமாக உழைக்காமலேயே கணிசமான பலன்களை அடைகின்றனர். இப்பலன்கள் பக்தர்களின் எதிர்பார்ப்பையும் மிஞ்சிவிடுகின்றன.
பதம் 8.5.48
நாவம: கர்ம-கல்போ ‘பி விபலாயேஸ்வரார்ப்பித:
கல்பதே புருஷஸ்யைவ ஸ ஹி ஆத்மா தயிதோ ஹித:
ந—இல்லை; அவம:—மிகவும் குறைவான, அல்லது அற்பமான; கர்ம—செயல்கள்; கல்ப:—சரியாக நிறைவேற்றப்பட்டது; அபி—என்றாலும்; விபலாய—வீணாகிறது; ஈஸ்வர-அர்ப்பித:—முழுமுதற் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுவதால்; கல்பதே—அது அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது; புருஷஸ்ய—எல்லா நபர்களிலும்; ஏவ—உண்மையில்; ஸ:—முழுமுதற் கடவுள்; ஹி—நிச்சயமாக; ஆத்மா—பரமபிதாவாகிய பரமாத்மா; தயித:—மிகவும் பிரியமான; ஹித:—நன்மை பயக்கக்கூடிய.
முழுமுதற் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செயல்களைச் சிறிய அளவில் செய்திருந்தாலும், அவை ஒருபோதும் வீணாவதே இல்லை. முழுமுதற் கடவுள் பரம பிதாவாக இருப்பதால், அவர் இயல்பாகவே மிகவும் பிரியமானவராகவும், ஜீவராசிகளின் நன்மைக்காக எப்பொழுதும் செயற்படத் தயாராகவும் இருக்கிறார்.
பதம் 8.5.49
யதா ஹி ஸ்கந்த-சாகானாம் தரோர் மூலாவஸேசனம்
ஏவம் ஆராதனம் விஷ்ணோ: ஸர்வேஷாம் ஆத்மனஸ் சஹி
யதா—அவ்வாறு; ஹி—உண்மையில்; ஸ்கந்த—அடிமரத்தின்; சகானாம்—மற்றும் கிளைகளின்; தரோ:—ஒரு மரத்தின்; மூல—வேர்; அவஸேசனம்—நீரூற்றுவதால்; ஏவம்—இவ்விதமாக; ஆராதனம்—வழிபாடு; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; ஸர்வேஷாம்—அனைவரின்; ஆத்மன:—பரமாத்மாவின்; ச—கூட; ஹி—உண்மையில்.
ஒரு மரத்தின் வேருக்கு ஒருவர் நீரூற்றும்போது, அம்மரத்தின் அடிமரமும் இலைகளும் தானாகவே திருப்தியடைகின்றன. அதைப் போலவே, பகவான் அனைவரிலும் பரமாத்மாவாக இருப்பதால், ஒருவர் பகவான் விஷ்ணுவின் பக்தராகும்போது, அனைவரும் சேவிக்கப்படுகின்றனர்.
பதம் 8.5.50
நமஸ் துப்யம் அனந்தாய துர்விதர்க்யாத்ம-கர்மணே
நிர்குணாய குணேசாய ஸத்வ-ஸ்தாய ச ஸாம்ப்ரதம்
நம:—எல்லா வணக்கங்களும்; துப்யம்—எம்பெருமானே தங்களுக்கு; அனந்தாய—காலத்தின் முக்கட்டங்களைக் (இறந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்கள்) கடந்து நிலையாக இருக்கும்; துர்விதர்க்ய ஆத்ம-கர்மணே—கற்பனைக்கு எட்டாத செயல்களைச் செய்பவரான உமக்கு; நிர்குணாய—பெளதிக குணங்களின் களங்கத்திலிருந்து விடுபட்டு, தெய்வீக நிலையில் இருக்கும்; குண-ஈசாய—ஜட இயற்கையின் முக்குணங்களை ஆள்பவரான உங்களுக்கு; ஸத்வ-ஸ்தாய—நற்குணம் எனப்படும் பெளதிக குணத்திற்கு ஆதரவாக இருக்கும்; ச—தவிரவும்; ஸாம்ப்ரதம்—தற்போது.
எம்பெருமானே, நீர் நித்தியமானவரும், கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவருமாவீர். உமக்கு எல்லா வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறோம். உமது செயல்களில் நீர் கற்பனைக்கு எட்டாதவராவீர். இயற்கையின் முக்குணங்களுக்கும் நீரே எஜமானராவீர். மேலும் எல்லா பௌதிக குணங்களுக்கும் மேற்பட்டவராக இருப்பதால் நீர் ஜடக்களங்கத்திலிருந்து விடுபட்டவராவீர், இயற்கையின் முக்குணங்களை ஆள்பவரும் நீரே. ஆனால் தற்போது நீர் நற்குணத்திற்கு (ஸத்வ) ஆதரவாக இருக்கின்றீர். எங்களது பணிவான வணக்கங்களை உமக்கு சமர்ப்பிப்போமாக.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “தேவர்கள் பகவானிடம் பாதுகாப்பை வேண்டுதல்” எனும் தலைப்பை கொண்ட ஐந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.